M.F.Hussain:
ஃபோர்ப்ஸ் இதழின் படி இவர் இந்தியாவின் பிக்காஸோ என போற்றப் பட்டவர்.
M.F.Hussain முஸ்லிம் என சொல்ல தகுதியுடையவரா?
எனது பார்வையில் இந்த ஓவியர் பெயரளவிலே முஸ்லிமாகிறார்.இஸ்லாம் உருவங்கள் படைப்பதையும் அதை வரைவதையும் வன்மையாக தடை செய்கிறது.அது இணைவைப்பு எனும் பெரும் பாவத்திற்கு ஒப்பாகிறது.
அப்படி இருக்க ஒரு முஸ்லிமான இவர் ஒரு சாதாரண மனிதனையோ,அல்லது விலங்குகளையோ கூட வரைவதை தவிர்த்து இருக்க வேண்டும்..ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தாண்டி,இதை தனது ஆத்ம திருப்தி தரும் செயலாக கொண்டார்...
அதுவல்லாது,இஸ்லாம் ஆபாசமான,மானக்கேடான காரியங்களை செய்வதில் இருந்து மனிதனை வன்மையாக தடுக்கிறது.அப்படி இருக்க ஒருவன் பெண்களை வக்கிரமாக நிர்வாணமாக வரைவதை,என்னவென்று சொல்ல.
நமது நாட்டில் நிர்வாணம் கலையாக பார்க்கப் படுகிறது(வெகு சிலரால்).இன்ன பிற நாடுகளும்.பெரும்பாலும் ஓவியர்கள்,நிர்வாணத்தை கலையெனவே வாதிடுகிறார்கள்.
இது எனக்கு கொஞ்சமும் புலப்படாத விடையமாகவே உள்ளது.ஒரு பெண்ணை நிர்வாணமாக எப்படி கலைக் கண்ணோடு நோக்குவது.தெரியவில்லை.அது முற்றிலும் முடியாத காரியமாகவே எனக்கு தெரிகிறது.ஆயிரம் தான் நான் கலை கண்ணோடு நோக்குவேன் என்றாலும்...நான் பருவ வயதை அடைந்த இளைஞன் ஆயிறே..என்னுள் உள்ள ஹார்மோன்கள் அதன் இயக்கத்தை துவங்கி பொருப்புடன் அதன் வேலையை செய்ய ஆரம்பித்து பல வருடம் ஆகிறதே...
என்னை பொருத்தவரை,உறவினர் அல்லாத மற்ற பெண்களின் உடல் அங்கங்களோ, அல்லது நிர்வாணமோ,என்னை கவரவே செய்யும்..மாற்றுகருத்து இல்லை.இந்த தொழில் நுட்பத்துடனே ஒரு ஆண் படைக்கப் பட்டுள்ளான்.
அதென்ன உறவினர் அல்லாத,அப்டின்னு கேப்பீங்க....ம்ம்,அததா சொல்ல வர்ரே..
இப்படி ஒரு வாதத்தை வைக்கும் போது..நேர்மையின் சின்னமாக தன்னை வெளிப்படுத்தும்,சில முகமூடிகள்,இப்படி ஒரு வக்கிரமான கேள்வியை முன்வைப்பார்கள்..
அது பெற்ற தாய்,சகொதரியுடன் தொடர்பு படுத்தியதாக அது இருக்கும்..
அப்படிப்பட்ட ஒரு நிர்வாணம்,வக்கிரமாகவும்,கேவலமாகவும்,ஆபாசமாகவும் தெரியுமே தவிர...ஒரு காலும் அது கண்ணியமானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்காது...அதை உடனே மறைக்கவே தோன்றுமே தவிர,அதை மரியாதை நிமிர்த்தமாக,பக்தியுடன் காண சகிக்காது...இதுவே எனது நிலைப்பாடு..நடுநிலை எண்ணம் கொண்ட அனைவரின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்...இது முதல் விஷயம்..
ஓவியத்தில் நிர்வாணம் என்பது,அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி.ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.அது ஒருவரின் அந்தரங்கம்..அதை வெளிப்படுத்துவது. வக்கிரம்,ஆபாசம்.இதுவே எனது நிலைப்பாடு.
எனவே ஹுஸைன் வரைந்த ஓவியம் அது ஹிந்துக்களின் பெண் கடவுளின் உருவம் அல்ல,அது எந்த பெண்ணாக இருப்பினும்,நிர்வாணமாக இருப்பின்,அதை வன்மையாக கண்டித்து,எனது எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.
சர்ச்சை:
சரி அடுத்தது...ஹுஸைன்,ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை (ஒரு காலத்தில்)நிர்வாணமாக வரைந்து, அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டு...
நான் அந்த ஓவியத்தை நோக்கும் போது..நிர்வாணத்தை தாண்டி ஒருவித வக்கிரமே தெரிகிறது.எனவே,இது ஹிந்து மக்களின் (மலிவான அரசியல் பிழைப்புவாத பொருக்கிகள் அல்ல) மனதை புண்படுத்தவே செய்யும்..நான் ஓவியத்தை கலை கண்ணோடு அல்ல,வெறும் கண் கொண்டு நோக்கியதில் எனக்கு தெரிந்தது..அவ்வளவெ...
ஆனால்.அதை வக்கிரமாக என்பதை தாண்டி,அவர் நிர்வாணப் படுத்திவிட்டார்,என்பதே குற்றசாட்டு.ஒருவேலை வக்கிரம் அல்லாத அழகு பதுமையாக வரைந்து இருந்தாலும் இதே எதிர்ப்பு கிளம்பி இருக்கும்.ஆக நிர்வாணமே,இங்கு பிரதான பொருளாகிறது.எனவே அது அழகா வக்கிரமா என்பதல்ல இங்கு மைய கரு.அப்படியாயின்...
நிர்வாணப்படுத்தாத ஒன்றை நிர்வாணப் படுத்திவிட்டார் என்றால்...அதை விட ஒரு பெருங்குற்றம் இருக்க முடியாது..மானம் உயிரை விட முக்கியமானது..
ஆனால் ஹிந்துக்களின் கடவுள்களோ,காலம்காலமாக நிர்வாணமாகவே காட்சி தந்து வருகின்றன.அதற்கு உதாரணமாக இன்றும் பல கோவில்கள்,அதற்கு வாழும் சாட்சியாக நிலைத்து நிற்கின்றன..அதையே காலம் காலமாக ஹிந்துக்களும் வழிபட்டு வருகின்றனர்..
இன்று ஹுஸைன் வரைந்தது குற்றமாக பார்க்கப் படுகிறதென்றால்,அப்போ அன்றைய சிலைகள் எப்படி கலையாக பார்க்கப் பட்டது.இப்போதும் பார்க்கப் படுகிறது.ஒரு வேலை அதை வடித்தது,அக்கால அரசர்கள் என்பதாலா? இல்லை உள்ளத்தில் உள்ள குமுறல்களை அப்போது வெளிப்படுத்தினால் தலை போய் விடுமென்றா?
அப்படியானால்.இப்போது அதற்கு எத்தடையும் இல்லையே..வெறிகொண்டு அந்த வயோதிகனை(இந்த கரிசனம் அவர் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி என்பதால் அல்ல, மனிதாபிமானத்தால்) கொல்ல அலையும் கூட்டம்.முதலில்,இருக்கும் நிர்வாண சிலைகளை அகற்றிவிட்டு, பிற்கல்லவா,ஹுஸைன் மீதும்,அவரது படங்கள் மீது கை வைத்து இருக்க வேண்டும்..ஆனால் அவ்வாறு செய்யவில்லை...ஏன் இந்த இரட்டை நிலை...??
ஒருவேலை எங்களது தெய்வங்களை நாங்கள் தான் நிர்வாணப்படுத்த த்குதியுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்ற எண்ணமா?
வலைஞர் கிரி அவர்கள்,ஒரு நல்ல கருத்தை தனது வளைபூவில், ஹுஸைனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது சொல்லி இருப்பார்.நிர்வாணம் என்ற விஷயத்தில் எனது கருத்தோடு,முற்றும் ஒன்றி நிற்கிறார்...
அவர் சொன்னது:
//எல்லோருக்கும் நல்லவனாக என்னால் இருக்க முடியாதுங்க! என்னோட எதிர்ப்பை இதன் மூலம் நான் பதிவு செய்கிறேன். ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது காமாலைக் கண்ணோடும் பார்க்க முடியாது. சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும். நான் சாதாரணமானவன் என்னுடைய எதிர்ப்புகள் இந்த அளவிலே தான் இருக்கும். இதை எல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இவர்களைப் போல எனக்கு பரந்த மனசு எனக்கில்லை.//
இது ஒரு சராசரி மனிதனின் கருத்து.முழுமையாக ஏற்க கூடியது..ஆனால் அவர் ஏனோ அதை தனது
கோவில்களில் உள்ள நிர்வாண சிலைகளை வடித்தவர்களை நோக்கி எழுப்பவில்லை.
இங்கே அவர் குறிப்பிடும் "அதை" என்பது நிர்வாணத்தை எனில் சரி..இல்லை இல்லை.ஹுஸைன் வரைந்த நிர்வாணம் மட்டும் என சொல்வாரானால்.அது உள்நோக்கம் உள்ள ஒரு சார்பு சாடலே...
இதுவல்லாது,இன்னொரு குழந்தைதனமான கேள்வியும்,பரவலாக பதிவுலக ஹிந்து நண்பர்களிடையே இருக்கிறது...
அது என்னவென்றால்...அன்னை தெரசா,முஹம்மது (ஸல்) நபியவர்களின் மகளார்,அன்னை ஃபாத்திமா (ரலி),ஹுஸைன் அவர்களின் மகள்,உள்பட பல பேரின் உருவங்களை ஹுஸைன் நல்ல ஆடையுடன் வரைந்துள்ளாரே,ஏன் அவர்களை மட்டும் ஆடைகளைந்து வரையவில்லை,என ஒரு குறையறிவு கேள்வியை கேட்கிறார்கள்....
எனதறிவுக்கு எட்டிய எளிமையான பதில்...
அவர் ஆடையுடன் கண்டவர்களை ஆடையுடன் வரைந்துள்ளார்,ஆடையின்றி கண்டவர்களை ஆடையின்றி வரைந்துள்ளார்,அவ்வளவே...
Dr.ருத்ரன் அவரது பதிவில் இவ்வாறு சொல்கிறார்..
//கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).//
ஆது போல..தற்கால சிற்பிகளின் கைகளே,அவர்களின் மார்புகளுக்கு மாராப்பு இடுகிறதே தவிர..இன்னும் இருக்கும் அக்கால சிலைகள் அப்படியே இருகிறது...ஒருவேலை இனி வரும் வளரும் ஓவியர்கள்,இக்கால சிலைகளை பார்த்து,ஹிந்து கடவுள்களுக்கு ஆடையிடலாம்...
நண்பர் கிரி சொல்வது போல்,என்னாலும் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடியவில்லை.என் உள்ளத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக எழுந்த கேள்விகளையும் அனைத்தையும் தாண்டி எனது மனஓட்டத்தை பதிவி செய்கிறேன்,அவ்வளவே...இதில் எந்த உள்நோக்க கருத்தும் இல்லை
மற்றபடி,ஹிந்து வெகுஜன மக்களின் (கழிசடை அரசியல் பிழைப்புவாதிகளை குறிப்பிட வில்லை) மனம் புண்படும்படி இந்த ஓவியம் இருப்பின் (இருக்கிறது) கலை தாண்டி..இது எரிக்கப் படவேண்டியதே....
இங்கு,அவர் வரைந்த ஓவியம் முதல்,பல ஹிந்து தெய்வங்களின் சிற்ப புகைபடங்களை,சேர்த்து மேற்கோள் காட்டவேண்டும் என எண்ணினேன்.ஆனால்..நிர்வாணத்தை கொண்டு எனது வளைபூவை அலங்கரிக்க விரும்பவில்லை....
பார்க்க விரும்புவோர்,தொடுப்புகளை சொடுக்கலாம்...
சில ஹிந்து கடவுள்களின் சிலைகள்.
ஹுஸைனின் சில ஓவியங்கள்.
நன்றி
நட்புடன்
ரஜின்