ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

மரணத்திற்கு பின் எழுப்பபடுதல்

இஸ்லாத்தின் கோட்பாட்டின் படி.இறைவன் நமக்கு அளித்து இருக்கும்,இந்த பிரவியானது..ஒருமுறை மட்டுமே.மரணத்திற்கு பின் மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவான்.
இஸ்லாத்தின் அடிப்படை.
இறைவன் ஒருவனே..அவனே அல்லாஹ்...
அவனுக்கு யாதொரு இணையும் இல்லை.என நம்புவது....
முஹம்மது நபி அவர்கள் அவனது அடியாராகவும் இறுதி தூதராகவும் உள்ளார் என நம்புவது.
முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களை நம்புவது.
வேதங்களை நம்புவது.(புனித குர் ஆன்,தௌராத்,இன்ஜீல்,மற்றும் சில)
மலக்குமார்களை (வானவர்கள்)நம்புவது.
மரணத்திற்கு பின் எழுப்பபடுவோம் என் நம்புவது.
மரணத்திற்கு பின் உள்ள வாழ்வு,நம்முடைய உலக வாழ்கையின் நன்மை தீமையை பொருத்து,சொர்க்கம்,நரகம் என இறைவனால் தீர்மானிக்க படும் என நம்புவது.
மேல் குறிப்பிட்டவற்றை ஒருவன் நம்பிக்கை கொள்வதின் மூலம்,ஒருவன் முஸ்லிம் என்ற அடிப்படை தகுதியை பெறுகிறான்..
இவற்றில் இறுதியாக உள்ள இரண்டு குறிப்புகள்,பற்றியே தங்களின் கேள்வி அமைத்துள்ளது.
குறிப்பாக ஒரு முஸ்லிமின் வாழ்வு,அவனுடைய செயல்பாடுகள் (நன்மை,தீமை),மேல் குறிப்பிட்ட ஆறு அடிப்படைகளை அடுத்து, மறுமை வாழ்வின் அடிப்படையிலேயே அமைகிறது..
உலக வாழ்வு ஏன்?
உலக வாழ்கை பற்றி சற்று நாம் சிந்திக்க கடமை பட்டு இருக்கிறோம்,இந்த உலகத்தில் மனிதன்,விலங்குகள்,இயற்கை இவற்றின் பங்கு என்ன,என்பதை ஆராய்வோம்.
மனிதன்; நம்மை பற்றி சிந்திக்கும் போது,மனிதனான நாம் இந்த உலகிற்க்கோ,அல்லது இந்த உலகில் உள்ள மற்ற விலங்குகளுக்கோ ஒரு சதவிகிதம் கூட பயன் இல்லாதவர்கள்.
ஆனால்,அதே மனிதன்,விலங்குகளையும் மற்ற உலக பொருள்களையும்,தடைஇல்லாது,முழுமையாக பயன்படுத்துகிறான்.
சொல்ல போனால் இந்த உலகும்,இயற்கையும்,வளங்களும், இன்ன பிற படைப்பினங்களும், மனிதனுக்காகவே அன்றி படைக்கப்பட வில்லை.
அப்படி அனைத்தையும் அனுபவிக்க மனிதனுக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவன்,அதை வசப்படுத்த தேவையான அறிவையும் ஆற்றலையும் அளித்துள்ளான் அல்லவா?
அதுமட்டுல்மல்லாது,இத்தனை வளங்களையும் எப்படி பயன்படுத்தவேண்டும்,இவற்றில் எது அனுமதிக்க பட்டது,எது விலக்க பட்டது,என்பன அல்லாது முழு வாழ்க்கைக்கும் தேவையான வழிகாட்டியை,தூதர்கள் மூலமும்,வேதங்கள் மூலமும்,நமக்கு அறிவித்து விட்டான்.
இத்தனையும் நமக்கு தடையின்றி வழங்கிய இறைவன்,அதை அவன் பயன்படுத்தும் பொது நிகழும் நன்மை தீமையை,கொண்டு,அம்மனிதனுக்கு,நியாயதீர்ப்பு வழங்குவதை தனக்கு கடமையாக்கிகொண்டான்.
இவ்வளவும் வழங்கப்பட்ட மனிதனுக்கு,அவன் அனுபவித்தது பற்றிய கேள்வி கணக்கு கேட்கவும்,அதனடிப்படையில் தீர்ப்பு வழங்கவும்,செய்யாமல் அவனை படைத்த ஏக இறைவன் அப்படியே விட்டுவிடுவதாக இருந்தால் ,மனிதன் ஏன்,அனைத்திலும் சிறந்த படைப்பாக படைக்க பட வேண்டும்,உலகில் எந்த படைப்புக்கும் அளித்திராத அறிவு மனிதனுக்கு ஏன் வழங்கப்பட வேண்டும்,நிலம்,நீர் காற்று ஆகாயம் என அனைத்தையும் வசப்படுத்தும் திறன் ஏன் வழங்கப்பட வேண்டும்..அவனும்,இன்ன பிற படைப்பினங்கள் போல இயற்கையாகவே பிறந்து,வாழ்ந்து மரணிக்கலாமே..
மனிதனை தவிர, பிற படைப்புகளான, நீர் நில வாழ் விலங்குகள்,பறவைகள்,இன்ன பிற ஊர்வன,பறப்பன,என எந்த உயிர்க்கும்,இவ்வுலகிற்கு பிறகு, எழுப்ப படுதலும் இல்லை,கேள்வி கணக்கும் இல்லை,மறு உலக,வாழ்வும் இல்லை,
அவை சுயமாக சிந்திப்பதில்லை..இறைவன் வகுத்த அறிவை அப்படியே பயன்படுத்தி,அது படைக்கப்பட்ட நோக்கத்தை (மனிதனுக்கு பயன் அளிக்க) நிறைவு செய்கின்றன...
அப்படி ஒரு படைப்பாக மனிதன் படைக்கப்பட்டு இருந்தால்,அவனும்,மரணத்திற்கு பிறகு,விலங்குகளின் நிலையை அடைந்து இருப்பான்..
ஆனால்....
இது போன்ற ஒரு படைப்பாக மனிதன் படைக்க பட வில்லை......
மறுமை வாழ்வு ஏன்?
மறுமை என்ற ஒன்று ஒரு முஸ்லிமின் சாதாரண நம்பிக்கையே அன்றி வேறில்லை.மறுமை வாழ்வு என்பது சாத்தியம் இல்லை என்றே பலரும் வாதிடுகிறார்கள்.
ஆனால் மறுமை வாழ்வு என்பது இஸ்லாம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமல்ல,அதை அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும்,அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே....
இவ்வுலகில் சகலவிதமான மனிதர்களும் வாழ காண்கிறோம்.அவர்கள் அனைவரும்,நாடு,மொழி இனம் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டே காணப்படுகிறோம்..
ஏன் ஒரு வயிற்றில் பிறந்த சகோதரர்களுக்குள்ளேயே அத்தனை வேறுபாடு..
மனிதனின் வாழ்வு,நன்மை,தீமை இரண்டற கலந்த ஒன்று..
இவற்றில் எதார்த்தமான பிரிவு,நல்லவன்,கேட்டவன் என்பதே.
இங்கு நன்மை செய்து வாழும் அனைவரும்,சுகபோக நல்வாழ்வு வாழ்வது இல்லை..தீமை செய்யும் அனைவரும்,தண்டனை பெறுவதும் இல்லை.நமகென நாமே வகுத்து கொண்ட சில சட்ட விதிகள் இருந்தாலும்,அவற்றால் உண்மையான,குற்றவாளியையும்,நிரபராதியையும்,எல்லா காலகட்டத்திலும் இனம் காண முடியாது.இது அனைவரும் அறிந்ததே.
நிதர்சனமாக, ஒரு மனிதன் நல்லது செய்தால்,அவனுக்கு நல்லதே நடக்க வேண்டும்,அனால் அவன் வஞ்சிக்கப்படுகிறான்.தீமை செய்யும் மனிதன், நம் கண் முன்னே தண்டனையில் இருந்து தப்பிப்பதும்,சுக போக வாழ்வு வாழ்வதும்,நாம் அன்றாடம் காணக்கூடிய ஒன்றே.ஒரு கட்டத்தில் இருவருமே இறந்து விடுகின்றனர்.நிச்சயமாக இருவரும் உயிர் வாழும் பொது,நியாயம் வழங்கப்பட வில்லை.இறந்த பிறகு மறு உலக வாழ்வும்,தீர்ப்பும் இல்லையானால்,நன்மை செய்து வாழ்பவனும்,தீமை செய்து வாழ்பவனும்,ஒன்றாக அல்லவா ஆகிவிடுவர்..
அப்படி இருந்தால் நாம் ஏன் நல்லவனாக வாழவேண்டும்,நாம் தவறு செய்தால் நம்மை யார் கேட்பது ..என்று அனைவர் மனதிலும் கேள்வி எழும் அல்லவா?
பின்பு மனிதனின் ஆறாவது அறிவுக்கு வேலையே இல்லாமல் போய் விடும் ..
எனவே..
ஒருவருடைய நன்னடத்தைக்கு எந்த ஒரு மதிப்பும்,கேட்டவனுக்கு எந்த ஒரு தண்டனையும் ,இல்லாமல் போவதை நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் விரும்பவில்லை.அவன் அனைவருக்கும் மத்தியில் நீதி செலுத்தவே நாடுகிறான்...
அதை எந்த ஒரு விசாரணையும்,விளக்கமும் இன்றி வழங்கிவிடுவதில்லை.
யாவரையும் மிகைத்தொனாகிய வல்ல இறைவன்,நாம் வாழ்ந்த வாழ்வை,நம் கண்முன் கொண்டுவந்து,இது தான் நீ உலகில் சம்பாதித்தவை,இதற்காகவே,நீ இன்றைய தினம் வெகுமதி(சுவர்க்கம்/நரகம்) வழங்கப்படுகிறாய் என்று தீர்ப்பளிகிறான்.
அனைவர் மத்தியிலும் நீதம் வழங்க படுவதையே நாமும் விரும்புவோம் அல்லவா?
இஸ்லாத்தின் அடிப்படையில்,மனிதனின் இறப்பும்,அதன் பின் உள்ள வாழ்வும்,சுருக்கமாக...
இறந்ததற்கு பின் முதலில் கேட்கப்படும் கேள்விகள்.
உன்னுடைய ரப்பு (இறைவன்)யார்?
உன்னுடைய மார்க்கம் எது?
பின்பு தொழுகையை பற்றிய கேள்வி இருக்கும்.
இந்த கேள்விகளுக்கு அமையும் பதில்களின் அடிப்படையில் தான்,அவன் எழுப்பப்படும் வரையிலான மண்ணறை வாழ்வு அமையும்.
மறுமை வாழ்வும் ,அது பற்றி,புனித குர் ஆனில்,ஏகஇறைவனின் வசனங்களும்...
நிச்சயமாக மரணத்திற்கு பின் மனிதர்கள் அனைவரும் எழுப்பபடுவர்.இறைவன் முன்னிலையில்,அவனுடைய வாழ்வின்,சகலவிதமான செயல்களுக்கும்,அங்கு கேள்வி கணக்கு கேட்கப்படும். அல் குர்ஆன்
மேலும் வானங்கள் மற்றும் பூமியினுடைய மறைவானது அல்லாஹ்வுக்கே உரியதாகும்.ஆகவே,மறுமையின் காரியம் இமை கொட்டி விளிப்பதை போல் அல்லது அதை விட மிகச் சமீபமாகவே தவிர இல்லை.நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றல் உடையவன். அல் குர்ஆன்
நபியே அது உணமைதான? என்று தெரிவிக்குமாறு அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர்.அதற்கு நீர் கூறுவீராக,-ஆம் என் இரட்சகன் மீது சத்தியமாக,நிச்சயமாக அது உண்மை தான்,மண்ணோடு மண்ணாக ஆகிய பின் மீண்டும் உங்களை திருப்பிக் கொண்டுவருவதை அல்லாஹ்வை நீங்கள் இயலாதவனாக ஆக்கிவிடக்கூடியவர்களுமள்ளர்.
அல் குர்ஆன்
உங்களில் செயலால் அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக அவன் படைத்தான்.மேலும் இறந்தபின் நிச்சயமாக (உயிர் கொடுத்து )நீங்கள் எழுப்பபடுபவர்கள் "என்று அவர்களிடம் நீர் கூறினால் அதற்கு "இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை "என்று நிச்சயமாக நிராகரித்து கொண்டிருப்போர் கூறுகின்றனர் . அல் குர்ஆன்
இவ்வுலக வாழ்வு வீணுக்கும் விளையாடுக்குமே அன்றி வேறில்லை,சிந்தித்துணரும் மனிதர்களுக்கு மறுமையின் வாழ்வே மேலானது. அல் குர்ஆன்
கியாமத் (மறுமை) ஆகிய அந்நாளில் சூர் எனும் குழல் ஊதப்படும் அலைப்பாளரையே பின்பற்றி செல்வார்கள்:அதில் எந்த கோணலும் மறுப்பும் இருக்காது.:சபதங்கள் அனைத்தும் அர்ரக்மானுக்கு பணிந்து அடங்கிவிடும்.ஆகவே மெதுவான காலடி சப்தத்தை தவிர வேறெதனையும் நீர் கேட்கமாடீர்.
அந்நாளில் நன்மை செய்தவர்களின்,முகங்கள் ஒளி பொருந்தி காணப்படும்,தீமை செய்தவர்களின் முகங்கள் கருத்து காணப்படும்,
இறைவன் முன்னிலையில் அனைவரும் நிறுத்தபடுவார்கள்.
அந்நாளில் அவனுடைய செயல்கள் யாவும் அவனுக்கு முன் எடுத்து காட்டப்படும்,
அந்நேரம் தாய் மகனுக்கு உதவமுடியாது,பிள்ளை தகப்பனுக்கு உதவ முடியாது..இறைவன் அனுமதி இன்றி,யாருடைய சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..
அவனுடைய வணக்க வழிப்பாடு எவ்விதம் இருந்தது.
அவனுடைய ,இளமை காலம்,எவ்வாறு செலவிடப்பட்டது,
அவனுக்கு வழங்கப் பட்ட செல்வம் எவ்வாறு செலவிடப்பட்டது,
அவனுடைய தாய் தந்தையருக்கு அவன் எவ்விதம் பணிவிடை செய்தான்.
அவனுடைய ரத்தபந்தங்களை துண்டிக்காமல் வாழ்ந்தான?
அண்டைவீட்டாருடன் எவ்விதம் நடந்து கொண்டான்,
அனாதைகளிடம் எவ்விதம் நடந்து கொண்டான்,
அவனுடைய வியாபாரம் ஹலாலான(இறைவன் அனுமதித்த) முறையில் இருந்ததா?
வரியவரிடம் எவ்விதம் நடந்துகொண்டான்,,
அந்நிய பெண்கள் விஷயத்தில்,இறைவன் விதித்த வரைமுறையை பின்பற்றினானா?
வட்டி வாங்கினானா?
அநியாயமாக கொலை செய்தானா?
விபச்சாரம் செய்தானா?
என மொத்தத்தில்,அவனுடைய, முழு வாழ்கையும் அவன் கண் முன் கொண்டுவரப்பட்டு,கேள்வி கணக்கின் முடிவில்,இறைவன் ஆணைப்படி,சொர்க்கம்,அல்லது நரகம் என தீர்ப்பு வழங்கப்படும்..
அந்த தீர்ப்பானது,நிரந்தர சொர்க்கம் ,அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்.
அந்நாளில்,எவருடைய நன்மையின் எடை கனத்து விட்டதோ,அவர் மிக்க பாக்கியம் பெற்றவர்,எவருடைய தீமையின் எடை கனத்துவிட்டதோ அவர் நஷ்டம் அடைந்தோரில் ஆகிவிட்டார்.இன்னும் யாரும் ஓர் அணு அளவும் அநீதம் இழைக்க பட மாட்டார்கள்..
அல் குர்ஆன்.
மறுமை பற்றி அல்லாஹ் தன் புனித திரு குர் ஆனில் பல இடங்களில் இவ்வாறு சொல்கிறான் ...
அவனே உயிர் கொடுக்கிறான்,இன்னும்,அவனே மரிக்க செய்கிறான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்ப கொண்டுசெல்லப் படுவீர்கள். அல் குர்ஆன்
மேலும் இவ்வுலக வாழ்கை விளையாடும் வீணுமேயன்றி (வேறு) இல்லை.இன்னும் பயபக்தி உடையோர்க்கு நிச்சயமாக மறுமையின் வீடாகிறது மேலானதாகும்.நீங்கள் இதனை அறிந்து கொள்ளமாடீர்களா? அல் குர்ஆன்
நிச்சியமாக மறுமை நாளின் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க)அத்தாட்சி இருக்கிறது.அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும். அல் குர்ஆன்
இவ்வுலகில் அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி கொண்டிருந்தார்களோ,அதை அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காக அல்லாஹ் மறுமையில் உயிர்பிப்பான். அல் குர்ஆன்
நபியே' இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற வேதத்தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்.இன்னும்,ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். அல் குர்ஆன்
எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க,அல்லாஹ்வின் அனுமதியின்றி ,மரணிப்பதில்லை.எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால்,நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்.இன்னும் எவர்,மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்.நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம். அல் குர்ஆன்
மேலும் எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! என்று அவர்கள் கூறியது வேறேதும் இல்லை.
ஆகவே,அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகில் நன்மையையும்,மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்,இன்னும் அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரை நேசிக்கிறான்.
அல் குர்ஆன்
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்கு கொடுத்திருக்கும் பொருள்களில் யார் உலோபித்தனம் செய்கிறார்களோ,அது தமக்கு நல்லது என்று நிச்சயமாக எண்ணவேண்டாம் - அது அவர்களுக்கு தீங்குதான்.அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்,வானங்கள்,பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியத்தை அல்லாஹ்வுக்கே உரியதாகும்.அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
அல் குர்ஆன்
இது தவிர இன்னும் பல்வேறு இடங்களில் மறுமை பற்றிய இறை அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது...
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வு அனைத்து நிலைகளிலும் மறுமையை அடிபடையாக கொண்டே அமைந்து இருந்தது,இதை அவர்களின் வாழ்கை வரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,அவர்களின் இறுதிப்பேருரையில்,மறுமையை பற்றி எடுத்து கூறியவை.
இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்;மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)
பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்"என்றார்கள்
முடிவுரை
இப்படிப்பட்ட மறுமையின் அடிப்படை, நிச்சியமாக உலகில், ஒருவனை நல்லவனாக,பிறருக்கு அநீதம் இழைக்காதவனாக,இறைவனுக்கு கீழ் படிந்தவனாகவே வாழ வழி செய்யும்.
அப்படிப்பட்ட வாழ்வின் நன்மை மற்றும் தீமை,இவற்றை பிரித்து அறிவிக்க, இறைவனால் இறக்கியருளப்பெற்ற வேதமும்,அதன் படி வாழ்ந்து காட்டிய நபியின் வழியும்,இன்று உலக முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது..அப்படி வாழாத எவரும் மறுமையின் வேதனையில் இருந்தும்,இறைவனது பிடியில் இருந்தும் தப்ப முடியாது.
இது பற்றிய தங்களின்,மேலான கருத்துகளையும்,விமர்சனங்களையும்,கேள்விகளையும், நிச்சயமாக நாம் வரவேற்கிறோம்..

3 கருத்துகள் :

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்