வியாழன், மார்ச் 31, 2011

இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களும் வலையுலகமும்,நானும்....


வலையுலகில் கால் பதித்திருக்கும் முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் வரலாறு ஒன்றாகத்தான் இருக்கும்.முதலில் இன்டர் நெட் அறிமுகமும்,பின் செய்திகள் ஈ மெயில் படிப்பது,அனுப்புவது,படங்கள்,பாடல்கள்,யூட்யூப் வீடியோக்கள்,முகப்புத்தகம், சாட்டிங்,வேலைவாய்ப்பு,குறைவாகவே படிப்பு குறித்த தேடல்,எனவாறாக வலையுலக அறிமுகம் பெரும் மக்கள்,இவற்றில் குறிப்பிட்ட காலம் பிஸியாக இருந்துவிட்டு,சற்றே அவர்களின் எல்லை விரிவாகும் போது வலைப்பூக்களின் அறிமுகமும் கிடைக்கிறது.அங்கங்கு கிடைக்கும் சுட்டிகள்,ஒன்றில் இருந்து மற்றொன்று எனவாறாக வலைப்பூ அவர்களை தம்பக்கம் இழுக்க....ஆங்காங்கு இஸ்லாம் எனும் வார்த்தை குறுக்கிடுவதையும் கண்ணுற நேரும்..


அதை தொடர்ந்து பின் சென்றால்,இஸ்லாத்தின் மீதான அவதூறுகள்,கொச்சை மொழிகள்,எல்லை கடந்த விமர்சனங்கள் என தொடர்ந்து கொண்டே இருக்கும்.மேற்சொன்ன ஏதோ ஒன்றின் மூலம் வலையுலகுக்கு வந்த நானும் குறுகிய கால இடவெளிக்கு பின்னர் சந்தித்த இஸ்லாம் தொடர்பான விமர்சனங்கள் என்னை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை மறுக்கவே முடியாது.

வலையில் வாசகனாகவே இருக்கும் என்னை போன்ற சக முஸ்லீம்களும் இந்த அதிர்ச்சியை கடந்தே வந்திருப்பர்.இஸ்லாமும் அதன் கொள்கைகளும்,அது தரும் வாழ்வியலும் ஒன்றாக இருக்க,.இங்கே அப்பட்டமாக வேறொன்று இஸ்லாமாக மக்கள் மத்தியில் கடைவிரிக்கப் படுகிறதே! என மனம் குமுற எனக்கு அந்த நாளே மன அழுத்தமிக்க நாளாகிவிடும்.

சாமான்யனான எனக்கு இஸ்லாம் குறித்து விவாதிக்கும் அறிவோ திறமையோ,இல்லாதிருக்க, குறைந்த பட்ச மறுதலிப்பையாவது வெளிப்படுத்த பின்னூட்டம் இட்டு,இல்லை நீங்கள் சொல்வது தவறு என்பதோடு நிறுத்திக்கொள்வேன்.ஆனால் அதற்கு நம் வாயடைக்கு கடுமையுடன் ஒன்றிற்கு பத்தாக விமர்சனங்களும்,பதில்களும் வந்து நம்மையே திகைப்பில் ஆழ்த்திவிடும்.ஏன்....நாம் சொல்வது சரியாக இருக்க நம்மால் ஏன் அதை உறுதிபட ஆணித்தரமாக சொல்ல முடியவில்லை? நம் பக்கம் உண்மை இருந்தும்,நமக்கு அதை உறுதிபட சொல்ல ஏன் துணிவில்லை? என சிந்திக்கும் போதுதான் விளங்கியது.ம்ம் இத்துனை நாளும் இஸ்லாம் நமக்கு வெறும் செவிவழி அறிமுகமாகவே இருந்திருக்கிறது.நாமாக முயன்று இது வரையில் எதையும் தேடவும் இல்லை.எதையும் உறுதிப்படுத்திக்கொண்டதும் இல்லை.

மாற்றுமதத்தவர் குர்ஆனின் அத்தியாயங்களை மேற்கோள் காட்டி பேசுவது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது,.என்னடா இது நாமளே இதெல்லா பாக்குறதில்லையே இவங்க இந்த அளவுக்கா இஸ்லாத்தை உற்று நோக்குறாங்கன்னு...அன்று வரை அவ்வப்போது வெறுமனே குர்ஆனை ஓதுவதற்காக திறந்த நான் முதல் முறையாக அவர்கள் கொடுத்த மேற்கோளுடன் அவர்களுக்கு பதில் தருவதற்காகவே குர்ஆனை திறந்தேன்.அவர்கள் கொடுத்த அதே மேற்கோளை ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் விளங்கியது...ஹ்ம்....இவர்கள் இதற்கு முன் குர் ஆனை கண்டதும் இல்லை விரித்ததும் இல்லை என்று.எவனோ எங்கோ கொட்டும் குப்பைகளை வாரிவந்து நம் தலையில் கொட்டிவிட்டு,ம்ம் இந்தா இது உன் குப்பைதான் என நம்மையும் திட்டிச்செல்லும் மூடர்களின் கூட்டமா இது...சே இவ்ளோதானா....இதுக்கு போய் இவ்ளோ நாளா நாம வாய்மூடிட்டு சும்மாவே இருந்துட்டோமேன்னு புது தெம்பு வந்தது....அன்று தொட்டு பின்னூட்டங்களில் பதில்களும் விவாதங்களும்,கேள்விகளுமாக புதிய பாதை ஒன்று உருவானது.

குறிப்பாக தமிழ்ஹிந்து தளமே எனக்கான விவாதக்களமாக இருந்தது.அது ஹிந்துத்துவாக்களின் கொட்டாரம்.அதில் பங்காற்றுபவர்களோ பகுதி மற்றும் முழுநேர ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் என பிற்பாடு தெரியவந்தது.முஸ்லீம்களையும்,இஸ்லாத்தையும் கட்டம்கட்டி தரக்குறைவாக விமர்சிப்பார்கள்.அறிவற்ற,குறுட்டுத்தனமான,தரம் தாழ்ந்த,கேவலமான,ஆதாரமற்ற விமர்சனங்களே அங்கு பிரதானம்.அதற்கு சில விபரம் அறியாத ஹிந்துக்களும்,பிற்போக்கு சிந்தனை கொண்ட பல ஹிந்துத்துவாக்களும், ஆகா ! உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்! ஜஸ்ட் நௌ என்னோட அறிவுக்கண்ண படார்ன்னு தொரந்துட்டீங்கன்னு பின்னூட்டுவாங்க...சிலர் அவர்களின் விமர்சனங்களை தங்களின் விமர்சன தரத்தால் விஞ்ச முயல்வார்கள்.அத்தகைய தளத்தில் முஸ்லீம் பெயர் ஒன்று எதிர்வாதத்தோடு வந்துவிட்டால் அவ்ளோதான்....

பூனையை கண்ட நாய் போல,நம் மீது பாய்ந்து குதற பார்ப்பார்கள்,எழுத்துக்களே எல்லையாவதால், அதில் அவர்களின் தரத்தின் எல்லையை காட்டிவிட்டு போவார்கள். தொடர்ச்சியான நம்முடைய பதில்கள் அவர்களின் குறுட்டு பிரச்சாரத்திற்கு தடை போட, பின்னூட்டங்களை மட்டுறுத்துவார்கள்..வெளியிடமறுப்பார்கள்,பலநேரம் எனது பின்னூட்டத்தை திருத்தி எனக்கு எதிராகவே பதிந்துவிடுவார்கள்...

அப்போதுதான் புரிந்தது,இவர்கள் கருத்துக்களை களவாடும் கயவர்கள்,துணிச்சலான நேரடி வாதம் புரியும் திராணியறற குள்ளநரி கோழைகள் என...

இப்படிப்பட்ட காலகட்டத்தில் வலைப்பூவின் நெருக்கம்,ஏன் நாமும் நமது கருத்துக்களை தெளிவாக தொய்வில்லாமல் சுதந்திரமாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு வலைப்பூவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அன்றே உருவானதுதான் “சன்மார்க்கம்”

அன்றில் இருந்து வேலைகளுக்கிடையிலும் பிற தளங்களில் படித்த பதிவுகளுக்கு பதில்களை எழுத ஆரம்பித்தேன்.பின் சில குறிப்பிட்ட விஷயங்களில் கருத்துவேறுபாடு கொண்டவைகளை தெளிவு படுத்த இஸ்லாம் குறித்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்....இப்படித்தான் முஸ்லீம்கள் பலரும் வலைப்பூக்களை தனதாக்கிக்கொண்டிருப்பர்.

காலப்போக்கில் வலைஞர்களுக்கே தொற்றும் ஒரு வியாதியும் என்னை தொற்ற ஆரம்பித்தது.”ஹிட்ஸ்”..... அது தரும் போதைதான் இன்று பெரும்பாலான வலைஞர்களை வலையுலகில் தக்கவைத்துள்ளது என்றால் மிகையல்ல...வெறும் ஹிட்களையும்,அதிகமான பின்னூட்டங்களையும்,வாசகர்களையும் பெருவதற்காகவே பதிவு எழுதுவோர் வலையுலகில் பலர்.....அதன் தாக்கம் சற்றே என்னை பாதிக்க....சில தேவையற்ற பதிவுகளும் உள்ளே வந்தன...எனது வலையுலக சகாக்களும் எனது போக்கை அவதானிக்காமல் இல்லை.ஆனால் குறுகிய காலத்தில் அதில் இருந்து தெளிவு கிடைக்க முடிந்தது.நமது வலையின் நோக்கமும், எல்லையும் இதுவல்ல என விளங்க....திரும்பவும் எனது வலை இயக்கத்தை சீர் செய்து கொள்கிறேன்....

ஆக இதன் மூலம் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்லவருவது என்னவென்றால்,இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களை கண்டு திகைக்காதீர்கள்.அவர்களின் செயலால் இன்று வரை ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை.இனி எதும் நிகழப்போவதும் இல்லை.ஆனால் ஒன்று,அவர்களால்,நாம் தெளிவாக இஸ்லாத்தை ஆய்ந்து அறிந்து கொள்ள முடிகிறது.அத்துடன்,மாற்றுமதத்தவருக்கும் எத்திவைக்க முடிகிறது.இது நல்ல பலனைத் தருகிறது.ஆகவே இது போன்ற எதிர் விமர்சனங்கள் இஸ்லாத்தை பொருத்தவரை ஆரோக்கியமான ஒன்றே....

வலை ஆரம்பிக்கும் சகோதரர்கள்,வலையில் அடிமைப்படுத்தும் பின்னூட்டங்கள்,ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் குறித்து,அதிக அபிப்ராயம் கொள்ளாதீர்கள்.தங்களின் பதிவு தரமானதாக இருந்தால்,அனைத்துமே கிட்டும்.அதுவல்லாது இதுபோன்றவற்றை கவர விளம்பர யுக்தியுடன் பதிவுகளை எழுதாதீர்கள்,அது அல்லாஹ்விடத்தில் எந்த பலனையும் தராது...

நமது பதிவுகள் இஸ்லாம் குறித்த அவதூறுகளுக்கு பதிலாக மட்டுமல்லாது, ஒரு தெளிவாகவும்,முஸ்லீம்களுக்கும்,குறிப்பாக முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கும் போய்ச்சேரவேண்டும்.

எனது நோக்கமும் அதுவே.அதுவல்லாது காரணம் இன்றி அத்துமீறி பிற மதங்களை விமர்சிப்பதை நானும் விரும்பவில்லை,எனது மார்க்கமும் கற்றுத்தரவில்லை.

நீங்கள் வரம்புமீறி பிற தெய்வங்களை திட்டாதீர்கள் - அல் குர்ஆன்

மேலும் இஸ்லாம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும்,கண்ணியமாக முன்வைக்கப்படும் கேள்விகளையும்,கனிவாக ஏற்று அதற்கு விடை சொல்லவே இந்த வலை உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுமத சகோதரர்கள்,இஸ்லாம் குறித்து ஆரோக்கியமான முறையில் எப்படிப்பட்ட கேள்விகளானாலும், எதைப்பற்றியானாலும் கேட்க,விவாதிக்க இந்தத் தளம் முழு அனுமதியும் சுதந்திரமும் அளிக்கிறது.

”அஹ்லன் வ ஸஹ்லன்”

அது தவிர தனிமனித தாக்குதல்,விரசமான,ஆபாசமான,தரம் தாழ்ந்த,கண்ணியமில்லாத கேள்விகளும் விமர்சனங்களும்,மறுஆய்வின்றி மட்டுறுத்தப்படும்,...

தரமான பதிவுகள் மூலம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது,அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடியவனாக.....

அன்புடன்
ரஜின்

20 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!

  //வலையில் வாசகனாகவே இருக்கும் என்னை போன்ற சக முஸ்லீம்களும் இந்த அதிர்ச்சியை கடந்தே வந்திருப்பர்// நிச்சயமா!

  //இஸ்லாமும் அதன் கொள்கைகளும்,அது தரும் வாழ்வியலும் ஒன்றாக இருக்க,.இங்கே அப்பட்டமாக வேறொன்று இஸ்லாமாக மக்கள் மத்தியில் கடைவிரிக்கப் படுகிறதே! என மனம் குமுற எனக்கு அந்த நாளே மன அழுத்தமிக்க நாளாகிவிடும்//

  உண்மைதான். ஆனால் அதிலும் ஒரு நன்மை உள்ளது. அந்த மன அழுத்தமே ஒரு உத்வேகமாக மாறி இஸ்லாத்தைப்பற்றி அதிகமதிகமாக சிந்திக்க தூண்டுவதும், அதை மற்றவர்களுக்கு தெளிவாக்க துடிப்பதும் நமக்கு இறைவன் செய்யும் பேருதவி சகோ! அல்ஹம்துலில்லாஹ்.

  //ஏன் நாமும் நமது கருத்துக்களை தெளிவாக தொய்வில்லாமல் சுதந்திரமாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு வலைப்பூவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அன்றே உருவானதுதான் “சன்மார்க்கம்”//

  "சன்மார்க்கம்" தொய்வில்லாமலும் திசை மாறாமலும் தொடர என்றும் என் துஆக்கள். இதே பிண்ணனி "பயணிக்கும் பாதை"க்கும் உண்டு. நீங்களும் துஆ செய்யுங்க சகோ. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் உணர்ச்சிகளை கொட்டி தீர்த்து இருக்கிறீர்கள்.விவாதித்தால் வில்லங்கம் தான் அதிகமாகும் சகோ.நம்ம கடமையை இயன்ற வரை ஒழுங்காக செய்து,யாரையும் பாதிக்காத வகையில் நல்லவைகளை பின்பற்றி வாழ்வதே வெற்றிக்கு அடிப்படை..ப்கிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ரஜின், அப்படித்தான் இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களைக் கண்டு திகைத்ததுண்டு. ஆனால், அவை எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பி, தேடலில் ஈடுபடவைத்து, மேலும் தெளிவடைய வைத்தன. அந்த வகையில் அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.

  மேலும், இதுபோன்ற வாதங்களினால் இஸ்லாம் அழியப்போவதில்லை. இதுபோன்ற எதிர்ப்புகள் புதிதா இஸ்லாமுக்கு?

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ரஜின்,
  என்ன திடீர் ஃபிளாஷ் பேக்..?

  தங்களை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிந்தவைதான் என்றாலும் புதியவர்களுக்கான அவசியமான பகிர்வு.

  ம்ம்ம்... உங்களுக்கு தமிழ்ஹிந்து என்றால்... எனக்கு, '...' தளம்..!

  (4 நாட்களுக்கு முன்னர் கூட)இன்னும் 'அந்த தளத்துக்கு' என் மீதுள்ள காண்டு குறையவில்லை என்பதை வலையுகத்தில் வந்த அத்தளத்தின் பின்னூட்டம் மூலம் அறிந்தபோது வருத்தமாக இருக்கிறது.

  சரியாக சொன்னீர்கள், சகோ.ரஜின்.=>//தரமான பதிவுகள் மூலம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது,அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடியவனாக.....//--இதேதான்... இதேதான்....

  தொடருவோம்... இன்ஷாஅல்லாஹ்.

  பதிலளிநீக்கு
 5. சகோதரர் ரஜின்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஆஹா. சும்மா சொல்லக்கூடாது. அப்படியே என்னுடைய கதையை உரிச்சி வச்சிருக்கீங்க. யாராவது இப்படி ஒரு பதிவு போடா மாட்டாங்களா, அங்கே போய் நம்முடைய கதையையும் பகிர்ந்து கொள்ள மாட்டோமா என்ற ஏக்கத்திற்கு இன்று உங்கள் மூலமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

  இன்ஷா அல்லாஹ், தற்போது வேலை பளு அதிகமிருப்பதால் இன்னும் சில நாட்களில் வந்து பகிர்ந்து கொள்கின்றேன்.

  நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  பதிலளிநீக்கு
 6. வ அலைக்கும் ஸலாம் சகோ அஸ்மா.
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  /அந்த மன அழுத்தமே ஒரு உத்வேகமாக மாறி இஸ்லாத்தைப்பற்றி அதிகமதிகமாக சிந்திக்க தூண்டுவதும், அதை மற்றவர்களுக்கு தெளிவாக்க துடிப்பதும் நமக்கு இறைவன் செய்யும் பேருதவி சகோ! அல்ஹம்துலில்லாஹ். /

  உண்மைதான் சகோ,அந்த உத்வேகமே இங்கு நமை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

  //"சன்மார்க்கம்" தொய்வில்லாமலும் திசை மாறாமலும் தொடர என்றும் என் துஆக்கள். இதே பிண்ணனி "பயணிக்கும் பாதை"க்கும் உண்டு. நீங்களும் துஆ செய்யுங்க சகோ. எல்லாப் புகழும் இறைவனுக்கே!//

  தங்களின் அன்பான துஆக்களுக்கு நன்றி சகோ,நம் அனைவருக்கும் அல்லாஹ் போதுமானவன்...
  ------------------------------------------------
  ஸலாம் ஆசியாக்கா.
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
  //விவாதித்தால் வில்லங்கம் தான் அதிகமாகும் சகோ.நம்ம கடமையை இயன்ற வரை ஒழுங்காக செய்து,யாரையும் பாதிக்காத வகையில் நல்லவைகளை பின்பற்றி வாழ்வதே வெற்றிக்கு அடிப்படை//
  சகோ அறிவுப்பூர்வமான,ஆரோகியமான விவாதங்கள் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடியவை.அவற்றை நாம் சரியாக செய்யவேண்டும்.அறிவற்ற விவாதங்களை நாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும்,மற்றபடி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
  ------------------------------------------------
  ஸலாம் சகோ ஹுஸைனம்மா,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
  //இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களைக் கண்டு திகைத்ததுண்டு. ஆனால், அவை எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பி, தேடலில் ஈடுபடவைத்து, மேலும் தெளிவடைய வைத்தன. அந்த வகையில் அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.//

  இந்த ஒரு காரணத்துக்காக அவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.வருகைக்கு நன்றிகள் சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 7. வ அலைக்கும் ஸலாம் சகோ முஹம்மது ஆஷிக்,

  ம்ம்...ஃப்ளாஷ் பேக்தான்,.நான் ஆரம்பத்தில் சந்தித்த தினரல்களையும்,செய்த தவறுகளையும்,புதியவர்கள் சந்திக்கக்கூடாது என்பது ஒரு காரணமும் கூட சகோ.

  தொடருவோம்..
  ------------------------------------------------
  வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக் அஹமது,
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
  ம்ம்..என் போன்ற அனுபவங்களை பலரும் அனுபவித்திருப்பார்கள் என்னால் அவதானிக்க முடிந்தது.அதனால் தான் இப்பதிவு..தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

  வருக...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 8. அஸ் ஸலாமு அலைக்கும் ரஜின் பாய்,

  அல்ஹம்துலில்லாஹ், உங்களின் இந்தப்பதிவைப்பற்றி சகோ. அஸ்மாவிடம் பேசும்போது தெரிந்து கொன்டேன். இதுவே என்னுடிய முதல் விசிட் உங்கள் தளத்திற்கு. அருமையான பதிவு, இத்தளத்திற்கான கொள்கையும் பலே!!! மாஷா அல்லாஹ், அல்லாஹ் இத உங்களின் நற் செயல்களில் ஒன்றாய் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

  மனஅழுத்தம் வரக்கூடாத அதேவேளையில், சிலர் அறியாமையினாலும், பலர் பகிரங்க எதிர்ப்பாலும் எழுதும் பதிவுகளுக்கும் / பின்னூட்டங்களுக்கும் தரமிழந்தும் நாம் பதிலளித்திடக்கூடாது. அதுவும் முக்கியமில்லையா...!! ஒரு பாயிண்ட்டாக சொன்னேன், தவறாய் எண்ண வேண்டாம்...!! இன்ஷா அல்லாஹ் அடிக்கடி வந்து படிக்கிறேன். :))

  வஸ்ஸலாம்,

  பதிலளிநீக்கு
 9. வ அலைக்கும் ஸலாம் சகோ அன்னு அவர்களே,
  தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

  //ரஜின் பாய்// - சகோ இந்த பாய் எல்லா வேண்டாமே..சகோ’ன்னு சொல்லுங்க,

  //அல்லாஹ் இத உங்களின் நற் செயல்களில் ஒன்றாய் பொருந்திக்கொள்வானாக. ஆமீன். //

  தங்களின் துஆவுக்கு நன்றி..ஆமீன்.

  //ஒரு பாயிண்ட்டாக சொன்னேன், தவறாய் எண்ண வேண்டாம்//

  சகோ எனது எண்ணமும் அதுவே,தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்கு,நமது அமைதியே சரியான பதிலடி.
  சகோ..பொதுவாகவே,நான் பிறர் கருத்தை முழுமையாக ஏற்பவன்,அது எனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் சரி..அப்படி இருக்க தங்களின் பயனுள்ள குறிப்பை நான் எப்படி தவறாக எண்ணுவேன்.வரவேற்கிறேன்.எனது வலை,மற்றும் பதிவுகள் குறித்த நேர்/எதிர்மறையான கருத்துக்கள் எதுவாயினும் சொல்லுங்கள் ஆய்ந்து திருத்திக்கொள்ளலாம்..

  //இன்ஷா அல்லாஹ் அடிக்கடி வந்து படிக்கிறேன். :))//

  இன்ஷாஅல்லாஹ் -- வாருங்கள்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. அருமையான பகிர்வை தந்துள்ளிர்கள் நான் காலம் கடந்து வந்துள்ளதால் நீளமான கருத்தை இடுவதர்க்கு மனம் வரவில்லை.

  இருந்த போதும் உங்களின் மனக் குமுறள்கள் மனதை கஷ்ட்டப் படுத்துகின்றன விவாதம் இருந்தால்தான் நல்ல கருத்துக்கள் வெளி வரும் யாரும் யாரையும் தூற்றுவதினால் யாருக்கும் எதுவும் நடக்கப் போவது இல்லை இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கம் ஆதை யாரும் அழிக்கவும் முடியாது அசைக்கவும் முடியாது.

  பதிலளிநீக்கு
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோதரர் ரஜின்., காலம் தாழ்த்தி நான் படித்தாலும் இது காலத்திற்கேற்ற பதிவு. இஸ்லாத்தை காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவோர் நிலையே அப்பட்டமான பதிவு செய்து இருக்கிறீர்கள். இங்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தாங்கள் கூறுவதுப்போல், இஸ்லாத்தை சத்தியமார்க்கமாக ஏற்றிருக்கும் நமக்கும் குர்-ஆனுக்கும் உள்ள தொடர்பை விட இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக அசத்தியத்தில் ஒன்றுகூடியிருக்கும் அவர்கள் குர்-ஆனோடு வைத்திருக்கும் தொடர்பு அதிகம், மேலும் இங்கு இஸ்லாமிய வலைதளங்களை நடத்துவோர் சிலர் ஏதோ... பெயரளவில் மட்டும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு அதற்கு தொடர்பே இல்லாத பின்னூட்டங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பது வேதனையளிக்கிறது. அஃதில்லாமல் சத்தியத்தை எடுத்து சொல்வதற்காகவே பலர் இங்கு உலவுவதும் மனதிற்கு மகிழ்வளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்! எனவே நாம் அறிந்த -உணர்ந்த அந்த சத்திய கொள்கையை ஏனைய மக்களுக்கு எடுத்தியம்புவது இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று. சில மக்களுக்கு நன்மாராயம் கூறியும்,அஃதில்லாதோருக்கு அச்சமூட்டி எச்சரித்தும் மார்க்கத்தையும் அது கூறும் மறுமையும் தெளிவுப்படுத்துவது இங்கு அவசியமாகிறது., இங்கு இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் விவாதிக்கும் நபர்களோடு மூன்றாம் நிலையில் தான் மார்க்கத்தை எடுத்து சொல்ல வேண்டும் அதை தன் திருமறையில் அல்லாஹ்
  (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (16:125).
  அத்தோடு ஒரு அழகான மீடியாவை நாம் வைத்துக்கொண்டு அதில் தேவையற்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனி மனிதருக்கும், சமுகத்திற்கும் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதே என்னைப்போன்ற சிறியோர்களின் ஆவல்
  எனவே அத்தகைய அசத்திய கூட்டத்திற்கு எதிராக சத்தியத்தை எடுத்துக்கூறும் பாக்கியத்தை அல்லாஹ் நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக!
  இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  -ஓர் இறை அடிமை

  பதிலளிநீக்கு
 12. ஸலாம் சகோ அந்நியன்/குலாம்..

  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்...

  சகோ குலாம் அவர்களே தங்களின் மேலான கருத்துக்களை ஏற்கிறேன்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா11/5/11 1:09 முற்பகல்

  சாதாரனமாக தினமணி, தினமலர், போன்ற இணைய பத்திரிக்கைகளை படித்து கொண்டிருந்தவன், தினமணியில் வலைப்பூ என்ற பகுதியின் வாயிலாக உஜிலாதேவி பக்கத்திற்கு சென்றேன், இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளை கண்டு அதிர்ச்சியுற்று இரண்டொரு பின்னூட்டங்களையும் இட்டுளேன்,
  "முஸ்லிம்களால் சிதைந்த இந்திய மருத்துவம்" என்ற (ஆதாரமில்லா) பதிவில், உங்களது சன்மார்க்கம் என்ற வலைப்பூ முகவரியைப் பார்த்து உள்ளே வந்த எனக்கு இந்த பதிவு தென்பட்டது, வலையில் வாசகனாகவே இருக்கும் என்னை போன்றவர்களுக்கு உத்வேகம் கொடுக்கக் கூடிய மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு உதவி செவானாக.
  அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா11/5/11 1:20 முற்பகல்

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ரஜின்
  அவர்களே,
  செய்வானக என்ற வாக்கியத்தில் " ய் " விடு பட்டுள்ளது சரி செய்து வெளியிடவும்.

  அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  பதிலளிநீக்கு
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
  //
  வலையில் வாசகனாகவே இருக்கும் என்னை போன்ற சக முஸ்லீம்களும் இந்த அதிர்ச்சியை கடந்தே வந்திருப்பர்.இஸ்லாமும் அதன் கொள்கைகளும்,அது தரும் வாழ்வியலும் ஒன்றாக இருக்க,.இங்கே அப்பட்டமாக வேறொன்று இஸ்லாமாக மக்கள் மத்தியில் கடைவிரிக்கப் படுகிறதே! என மனம் குமுற எனக்கு அந்த நாளே மன அழுத்தமிக்க நாளாகிவிடும்.

  சாமான்யனான எனக்கு இஸ்லாம் குறித்து விவாதிக்கும் அறிவோ திறமையோ,இல்லாதிருக்க, குறைந்த பட்ச மறுதலிப்பையாவது வெளிப்படுத்த பின்னூட்டம் இட்டு,இல்லை நீங்கள் சொல்வது தவறு என்பதோடு நிறுத்திக்கொள்வேன்.ஆனால் அதற்கு நம் வாயடைக்கு கடுமையுடன் ஒன்றிற்கு பத்தாக விமர்சனங்களும்,பதில்களும் வந்து நம்மையே திகைப்பில் ஆழ்த்திவிடும்.ஏன்....நாம் சொல்வது சரியாக இருக்க நம்மால் ஏன் அதை உறுதிபட ஆணித்தரமாக சொல்ல முடியவில்லை? நம் பக்கம் உண்மை இருந்தும்,நமக்கு அதை உறுதிபட சொல்ல ஏன் துணிவில்லை? என சிந்திக்கும் போதுதான் விளங்கியது.ம்ம் இத்துனை நாளும் இஸ்லாம் நமக்கு வெறும் செவிவழி அறிமுகமாகவே இருந்திருக்கிறது.நாமாக முயன்று இது வரையில் எதையும் தேடவும் இல்லை.எதையும் உறுதிப்படுத்திக்கொண்டதும் இல்லை.
  மாற்றுமதத்தவர் குர்ஆனின் அத்தியாயங்களை மேற்கோள் காட்டி பேசுவது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது,.என்னடா இது நாமளே இதெல்லா பாக்குறதில்லையே இவங்க இந்த அளவுக்கா இஸ்லாத்தை உற்று நோக்குறாங்கன்னு...அன்று வரை அவ்வப்போது வெறுமனே குர்ஆனை ஓதுவதற்காக திறந்த நான் முதல் முறையாக அவர்கள் கொடுத்த மேற்கோளுடன் அவர்களுக்கு பதில் தருவதற்காகவே குர்ஆனை திறந்தேன்.அவர்கள் கொடுத்த அதே மேற்கோளை ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் விளங்கியது..
  ///

  அல்ஹம்துலில்லாஹ்... இதுதான் எனக்கும் நடந்தது. இதுவரை குரானை தமிழில் படித்திராத என்னை, அதன் கருத்துக்களை, அதன் வீச்சை முழுமையாக உணர்ந்திராத என்னை, தமிழ் குரானை படிக்க தூண்டியதற்காக, உண்மையில் நான் "அந்த" மாற்று மத சகோதரர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

  அவர்கள் கொடுத்த அதே மேற்கோளை ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் விளங்கியது, குரான் இறைவன் நமக்கு தந்த மாபெரும் அறிவு பொக்கிஷம். அறிவியல் குறித்த குரானின் தொலைநோக்கு, மனிதனின் அன்றாட நடைமுறை குறித்த அதன் அணுகுமுறை, தெளிவான சட்ட திட்டங்கள் என்னை வியக்க வைக்கிறது.

  இஸ்லாம் குறித்த "அவர்களின்" விதண்டா வாதம், நம்மை நாமே சீர்தூக்கி செதுக்கிக்கொள்ள உதவுகிறது. குழப்பம் நமக்கில்லை, "அவர்களுக்கு" தான்.

  இவ்வளவு தெளிவான கருத்துக்களையே புரிந்துகொள்ள / ஏற்றுக்கொள்ள முடியாத "அவர்" போன்றவர்களுக்கு அல்லாஹ் நல்லறிவை தருவானாக (ஆமீன்).

  பதிலளிநீக்கு
 16. வ அலைக்கும் ஸலாம் சகோ ஸஹா.
  தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

  தாங்கள் சொல்லிய அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 17. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சிறந்த பகிர்வு சகோ.

  பதிலளிநீக்கு
 18. Assalamu alaikkum

  this is my first visit. alhamthulillah.already i read ur excellent comments-reply for barbarians and innocent hindus through ujiladevi blog. very good job, keep it up.the benovelont almighty allah will given reward to u.please be dua for all our muslims. Vassalam.

  பதிலளிநீக்கு
 19. வ அலைக்கும் ஸலாம் சகோ சுவனப்பிரியன்
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
  --------------------------------------------------
  வ அலைக்கும் ஸலாம் சகோ கலீல் இப்னு ஷர்புதீன்
  தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

  இன்ஷா அல்லாஹ்,எனது துஆவில் அனைத்து முஸ்லிம் உம்மத்களையும் சேர்த்துக்கொள்கிறேன்...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்