ஞாயிறு, மார்ச் 14, 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவினார்...

நான் மதிக்கும் நன்மக்களில் பேராசிரியர் பெரியார்தாசன் (அப்துல்லாஹ்)அவர்களும் ஒருவர்.
அவரை நேரில் கண்டதில்லை.அவரது பேச்சை,அதிகம் கேட்டதில்லை..அவரது எழுத்தை படித்ததும் இல்லை..அவர் ஒரு கடவுள் நம்பிக்கை அற்ற மனிதர்,அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்தவர்,அனைத்து மதங்களையும் விமர்சித்தவர்.ஆனால் அவரது விமர்சனம் நாகரீகமாகவும்,நடுநிலையோடும் இருக்கும்...அது தவிர சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்.அவ்வளவே அவர் பற்றி நானறிந்தவை.அவரது பேச்சின் கண்ணியமும்,ஆழமும்,சிறந்த சிந்தனையுமே,அவரிடம் என்னை கவரச்செய்ததா என்றால்,இருக்கலாம்.
பொதுவாக மத ரீதியான விமர்சனம் என வரும் போது,பெரும்பாலோர்,தன்னிலையில் இருந்து சற்றே இறங்கி,பிறர் மதத்தை விமர்சிப்பர்...அப்படிப் பட்டவர்கள் மத்தியில்,அவர்களின் வார்த்தையில் ஒரு கண்ணியம் கொண்டு,பிறர் மனம் நோகாமல் பேசும் போது பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.
அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த போது,இஸ்லாத்தையும் அவர் விமர்சிக்காது விட்டதில்லை..இஸ்லாம் விமர்சன்ங்களுக்கு அப்பார்பட்டதும் இல்லை...
ஆனால் அவர் வெறும் விமர்சனத்திற்காக மதத்தை படிக்க வில்லை.அதன் கருத்தை அறிய,அதன் நெறியை உணர என்பதே,அவரது மாற்றம் நமக்கு சொல்லும் விடயம்....
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.
இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.
இது அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியின் சாரம் :
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்.
Source:

http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுகாரும் அவரை பின்பற்றிய,அவரது கருத்துகளால் ஈர்க்கப் பட்ட,மாற்றுமத ச்கோதரர்கள்,சிந்திக்க வேண்டும்..தன் வாழ்வில் பெரும் பகுதியை கடந்து விட்ட ஒருவருக்கு,இப்போது என்ன தேவை இருக்க முடியும்.அவர் இஸ்லாத்தை தழுவ? எது அவரை இறை நிராகரிப்பில் இருந்து,இறை நம்பிக்கையாளராக மாற்றியது.

பணமா?அவரிடம் இல்லாத பணம் இல்லை.அவர் பணம் தேடும் மனிதராகவும் அறியப்படவில்லை.

புகழா?அவர் ஏற்கனவே..தமிழகம் முதல் இந்தியா கடந்து,மேற்குலகு வரை,மிகவும் அறியப்பட்ட மனிதர்...அதுவல்லாது,வாய்கிழிய நாத்தீகம் பேசிவிட்டு,ஒரு மதத்தில் நுழைபவருக்கு,அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிற புகழும் மங்கவே வாய்ப்புள்ளது..அப்படி இருக்க அதுவும் இருக்க முடியாது..

மிரட்டப் பட்டு இருக்கலாமா?...இது குற்றறிவாளர்களின் சிந்தனை,என்னுடையதல்ல...பொதுவாக கடவுள் நம்பிக்கையற்றவர்கள்.எளிமையாக,நடுநிலையாக,எதுபற்றியும் கவலை கொள்ளாதவர்களாக,கடவுளுக்கே அஞ்சாதவர்களாகவே இருப்பர்.இவரையும் அப்படியே கண்டுள்ளோம்.அப்படி இருக்க..இது தேவை இல்லாத கற்பனையே....

சரி.எது அவரை இந்த அளவு பாதித்து...அவர் பிறந்த மதமான ஹிந்து மதத்தில் இருந்து,(அரேபிய தயாரிப்பான:இஸ்லாமிய எதிரிகளின் வசை இது) தூய்மை மார்க்கமான இஸ்லாதை தழுவச்செய்த்து...அதை அவரே,அவரது பேட்டியில் சொல்லி இருக்கிறார்....

வல்ல அல்லாஹ் அவரது முந்தைய பாவங்களை மன்னித்து,அவருக்கு ஹிதாயத் அருளியது போல்,அவரது குடும்பத்தினருக்கும்,அவரை சார்ந்த மக்களுக்கும்,ஹிதாயத் வழங்கி,ஈருலகிலும் சிறப்பிக்க துஆ செய்வோம்..

அவரது இந்த மாற்றம் குறித்து விரிவாக அவர் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்...அது,இஸ்லாம் பற்றிய அவரது கோணத்தையும்..அவரது சிந்தனையையும்,அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக அமையும்....

அன்புடன்

ரஜின்

5 கருத்துகள் :

 1. பெயரில்லா14/3/10 4:47 பிற்பகல்

  //வல்ல அல்லாஹ் அவரது முந்தைய பாவங்களை மன்னித்து,அவருக்கு ஹிதாயத் அருளியது போல்,அவரது குடும்பத்தினருக்கும்,அவரை சார்ந்த மக்களுக்கும்,ஹிதாயத் வழங்கி,ஈருலகிலும் சிறப்பிக்க துஆ செய்வோம்..//

  ஆமா உங்க அல்லாஹ் அனைத்து உயிரையும் படைத்துவிட்டு அவரைத் தொழுபவர்க்கு மட்டும் நன்மை செய்வாரா? அவர் என்ன ஜாதிச் சங்கத் தலைவரா?
  ஆமா..சாத்தானதப் படைத்தது உங்க அல்லாஹ்வா இல்லை சாத்தான் அல்லாஹ்வைவிட சக்தியுள்ளவரா?

  பதிலளிநீக்கு
 2. வாங்க அனானி அவர்களே.
  //ஆமா உங்க அல்லாஹ் அனைத்து உயிரையும் படைத்துவிட்டு அவரைத் தொழுபவர்க்கு மட்டும் நன்மை செய்வாரா? அவர் என்ன ஜாதிச் சங்கத் தலைவரா?//

  நல்ல கேள்வி கேட்டீங்க போங்க..எல்லாதையும் படச்சுட்டு,அப்டி யாரையும் பாகுபாட நடத்தலையே..இன்னகி அல்லஹ்வை வணங்காத நீங்க நல்லா இல்லயா?இல்ல அல்லாஹ்வ வணங்ர முஸ்லிம் ஏழ்மைல இல்லயா?
  அல்லாஹ் தன்னை பற்றி தெளிவாக தனது வேதத்தின் மூலமும்,தனது தூதர்களின் மூலமும்,சொல்லிவிட்டு,அதை சிந்தித்து உணருங்கள் என்றே குர் ஆனின் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிடுகிறான்...அதை தாங்கள் கண்டு இருக்க வாய்ப்பிருந்தும்,செய்திருக்க மாட்டீர்கள்..

  அதுவல்லாது..அதை உணர்ந்து,,உண்மையை கண்டு இறைவனை அடைய ஒரு குறிப்பிட்ட கால அவகாசமும் அளிக்கிறான்..அது உங்களின் வாழ்நாள்.அது கழிந்து இறப்பெய்திய பின்னரே,அவனது பிடி மிகக் கடுமையாக இருக்கும்..அதில் இருந்து தப்பிவிட..ம்ம் அதை சிந்திக்கவே இயலாது...
  உண்மையை உணர முற்படுங்கள்...


  நன்றி...

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா16/3/10 12:44 பிற்பகல்

  ஆமா உங்க அல்லாஹ் அனைத்து உயிரையும் படைத்துவிட்டு அவரைத் தொழுபவர்க்கு மட்டும் நன்மை செய்வாரா? அவர் என்ன ஜாதிச் சங்கத் தலைவரா?
  ஆமா..சாத்தானதப் படைத்தது உங்க அல்லாஹ்வா இல்லை சாத்தான் அல்லாஹ்வைவிட சக்தியுள்ளவரா? - பெயரில்லா

  அல்லா எங்கங்க சொல்லியிருக்காரு - தொழுபவனுக்கு மட்டும்தான் நன்மை செய்வேன்னு..

  முகவரியில்லா

  பதிலளிநீக்கு
 4. சகோதரரின் வருகைக்கு,நன்றி.தாங்கள் பெயர் குறிப்பிடலாமே..சரி விஷ்யத்துக்கு வருவோம்..பல்வேறு மதங்கள்,கடவுள்களையும் அந்தந்த கடவுளுக்கான சில வரைமுறைகளையும்(i mean attributes)கொண்டுள்ளன..இஸ்லாமும்,அல்லாஹுவுக்கு,சில அடிப்படை முகவரி கொடுக்கிறது.அவை.அல்லாஹ்.அவன் தனித்தவன்,அவனுக்கு யாதொரு இணையும் இல்லை,அவனுக்கு எந்த தேவையும் இல்லை.அவனுக்கு உருவம் இல்லை.இவ்வுலகத்தின் அதிபதியவன்.அவனுக்கு,பசி,உரக்கம்,ஓய்வு,என எதுவும் இல்லை.அவன் ம்க்க அன்பும் பரிவும் உடையவன்,மிகுந்த கருணை உள்ளவன்.மன்னிக்கும் குணம் கொண்டவன்..ஆனால் மிகுந்த ரோஷம் உடையவன்.தண்டிப்பதில் கடுமையானவன்.தான் எண்ணியதை தன் எண்ணத்தால் செய்து முடிக்கும் வல்லமை பெற்றவன்.அவன் யாரையும் பெறவும் இல்லை,யாராலும் பெறப்படவும் இல்லை.இது போன்ற தகுதிகளை உள்ளடக்கியவனே,இறைவனாக தகுதி பெற்றவன் அல்லவ?
  அதுவல்லாது பசி,உரக்கம்,பெண்,காமம்,என மனித தேவை அனைத்தும் உள்ளவன் மனிதனே.அவன் ஒருகாலும் கடவுளாகவோ,அவனுக்கு ஒப்பாகவோ முடியாது.அப்படிபட்ட கடவுளர்களையே பிற மதங்கள் கொண்டுள்ளது.
  //சாத்தானதப் படைத்தது உங்க அல்லாஹ்வா இல்லை சாத்தான் அல்லாஹ்வைவிட சக்தியுள்ளவரா?//
  அல்லாஹ்வையன்றி,எப்பொருளும் படைக்கப்படுவதில்லை.அவனே,சாத்தானை படைத்தான்.அலலாஹ் சொல்கிறான்.சாத்தானை தான் நெருப்பை கொண்டு படைத்ததாக.ஏன் என கேள்வி எழுப்ப நான் சக்தி பெறவில்லை,ஐயா.
  அவன்,இறைவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் பெற்றே பூமியில்,மனிதர்களிடையே..இருக்கிறான்.அவன் எவ்வுருவமும் இல்லாதவன்.அவன் மனிதனின் எண்ண ஓட்டங்களிலும்,ரத்த நாலங்களிலும்,ஓடும் சக்தி பெற்றவன்.ஆனால் அவனால் நேர்வழி பெற்றவர்களையும் பெறுபவர்களையும் ஒன்றும் செய்ய இயலாது...அவனும் நரகத்தில் புக காத்திருப்பவனே..

  //அல்லா எங்கங்க சொல்லியிருக்காரு - தொழுபவனுக்கு மட்டும்தான் நன்மை செய்வேன்னு..//

  ஒரு முஸ்லிமின் நன்மை தீமை அனைத்தும் அவனது மறுமை வாழ்வையே,அடிப்படையாக கொண்டது..இவ்வுலக வாழ்வு,மிக குறுகியது...அது சோதனையே அன்றி வேரல்ல.இறைவன் நமக்கு,சுய சிந்தனையை கொடுத்துள்ளான்.அதில் தன்னை அஞ்சி,தனக்கு அடிபணிந்து,தான் இட்ட கட்டளையை,முறையாக நிறைவேற்றுகிறானா,என ஒர் குறிப்பிட்ட கால அவகாசம் கொண்டு சோதிக்கிறான்.பிறகு அதன் அடிப்படையில்,சொர்க்கம்,நரகம் என நீண்ட வாழ்க்கையை பரிசளிக்கிறான்...

  இதில் பல விஷயங்கள் நம்பிக்கை அடிப்படையாக கொண்டது..ஆனால் அனைத்தும்,சரியாக அறிவுக்கு பொருத்தமானதாக ஏற்ற்க் கொள்ளக்கூடியதாக இருக்கும்..
  http://sunmarkam.blogspot.com/2009/08/blog-post.html
  எனது இந்த பதிவை படித்து பாருங்கள்..சில விஷயம் தங்களுக்கு புலப்படலாம்..

  ஒன்று தெரிந்து கொள்ளூங்கள்,எந்த நிலையிலும்,படைத்தவனை கேள்வி எழுப்ப முடியாது..அப்படி கேட்பவர்கள்,அவனை இன்னமும் விளங்கி கொள்ள வேண்டும் என்பதே தெளிவு...

  நன்றி.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்