இஸ்லாம் - உலக வரலாற்றை பொருத்தவரை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, உலகம் முழுவதிலும் வியாபித்து,இன்று அனைத்து மக்களாலும்,கவனிக்கப்படும் மார்க்கம் என்றால் அது இஸ்லாமே.இன்னும் உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் அதிகம் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் மார்க்கமும் இஸ்லாம் தான்.
கடந்த நூற்றாண்டு வரை இஸ்லாம் குறித்த உள்விவகார விமர்சனங்கள் பிறரிடம் இருந்தும்,அது தன்னை பாதிக்காது இருந்த காரணத்தால், பெரிய அபிப்ராயம் இல்லாதிருந்த உலகு இன்று,இஸ்லாத்தின் மீது தனது பார்வையை திருப்ப மிக முக்கிய காரணமாவது, இஸ்லாத்தை முன்னிறுத்தி,செய்யப்படும் தீவிரவாதங்கள் என்றால் மிகையாகாது.
தீவிரவாதங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது,இஸ்லாத்தின் பெயரால் நியாயப் படுத்தப்படுவதால்,இன்று பிறமத சகோதரர்களின் உள்ளத்தில்,இஸ்லாம் பிறமதத்தினரை எப்படி அணுகுகிறது,அது பிற மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும்,துவேஷத்தையும் முஸ்லீம்களிடம் வளர்க்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்தக் கேள்வி நியாயமானது,மற்றும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் நிறைந்த ஒன்றாகும்.
இதற்கு வெறுமனே "இல்லை" என மறுப்பது,அவ்வளவு ஆரோக்கியமான பதிலாக இருக்காது.எனவே இஸ்லாம்,பிற மதத்தினர் பற்றி என்னவிதமான கருத்தை கொண்டுள்ளது என பார்ப்போம்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பரவலாக அறியப்பட்ட வாசகமான "ISLAM MEANS PEACE" எனபது மிகச்சரியான சொல்லேயாகும். இஸ்லாம் அமைதி மார்க்கமே.ஆனால் அது ஒவ்வொரு காலகட்டத்திலும், பிற மதத்தினர் முன்னிலையில் தவறாக பிம்பப்படுத்தப்பட்டு,அவர்களின் மனதில் இஸ்லாம் குறித்த வெறுப்புணர்ச்சி வளர்க்கப்பட்டது.
இத்தகைய இஸ்லாமிய வெறுப்பு,பிற மக்களிடம் உண்டாக முக்கிய காரணங்கள்,ஒன்று-இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதும்.இரண்டு-குர்ஆன் வசனங்கள் மாற்று மதத்தவரை வெறுக்க கற்றுத்தருகிறது என்ற கருத்துக்களும்,பிற மக்களிடம் இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலாக தரப்பட்டதே.
எனவே தான் குர்ஆனை எங்ஙனம் அணுகவேண்டும் என்ற அடிப்படையை நாம் முந்தைய பதிவில் தெளிவு படுத்தி இருப்போம்.மேலும் இப்படிப்பட்ட தவறான வழிகாட்டுதலை தவிர்க்கவே,இஸ்லாத்தை பிற மக்களிடம் அறிமுகப்படுத்தவும்,அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் முஸ்லீம்களையே இஸ்லாம் பணிக்கிறது.
இஸ்லாம்,அடிப்படையாக ஒவ்வொரு முஸ்லீமுக்கும்,தனது மார்க்கத்தை பிறரிடம் எத்திவைப்பதை கடமையாக்கியுள்ளது.அதை எப்படி செய்யவேண்டும் என்பதையும்,அதன் வரம்புகளையும் அழகாக கற்றுத்தருகிறது.
(நபியே! அவர்களிடம்)"வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்கும் இடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்.(அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேரெவரையும் வணங்க மாட்டோம்.அவனுக்கும் எவரையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்" எனக்கூறும்.(முஃமீன்களே இதற்கு பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்,"நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என கூறிவிடுங்கள்" - 3:64 அல் குர்ஆன்
இந்த வரம்பே இஸ்லாத்தை,கண்ணியமான முறையில் பிற மதத்தவருக்கு, அறிமுகப்படுத்த ,எத்திவைக்க கொடுக்கப்பட்டுள்ள எல்லை.இது இரண்டு பயன்களை கொண்டது.ஒன்று அவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு முஸ்லீமாகலாம்.அல்லது அவர் இஸ்லாத்தின் சரியான முகவரியை அறிந்துகொண்டு தனது மதத்திலேயே தொடரலாம்.
இவ்விரண்டும் அல்லாது அதை அவர் புறக்கணித்தால்,முஸ்லீம்களுக்கு அவர்கள் சாட்சியாக இருக்க,அவர்களை அவர்கள் வழியில் விட்டு விடுங்கள் என அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்,
இதில் இருந்து இஸ்லாம்,கட்டாய மதமாற்றத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.உள்ளங்களை பார்க்கும் இறைவனுக்கு,வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பி,என்ன பயன்???
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன். - 3:119 அல் குர்ஆன்
வாள் முனையில் இஸ்லாம் பரப்பப்பட்டிருந்தால்,அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் மீதான வெறுப்பையே,இந்த வாள் முனை மதமாற்றம் அதிகப்படுத்தி இருக்கும்.இதை இஸ்லாமும் அனுமதிக்கவில்லை.
இத்தகைய போதனையானது,இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை பொய்யாக்குகிறது.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்பந்தமும் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. - 2:256 அல் குர்ஆன்
மேலும் இவ்வசனம் இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கட்டாயமும் இல்லை என்பதை உண்மைப்படுத்துகிறது.இதன் மூலம்,இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் என்பது இல்லை.அப்படி கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பானவர்கள்.என்பது விளங்கும்.
அவர்கள் அழைக்கும்,அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதீர்கள். - 6.108 அல் குர்ஆன்
மேற்காணும் வசனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சகோதரர்கள் கேட்கும், "வெறுப்புணர்ச்சியானது இஸ்லாத்தில் உண்டா,இல்லையா" என்பதற்கு இவ்வசனமானது தன்னிலை விளக்கி நிற்கிறது.பிற தெய்வங்களை முஸ்லீம்கள் திட்டக் கூடாது என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.பிற மத தெய்வங்களை திட்டுவதற்கே அனுமதி இல்லாத போது,அதை கடந்த வரம்பு மீறுதல்களுக்கு,முற்றிலும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது தெளிவு.இது இஸ்லாத்தின், பிற மத தெய்வங்கள் குறித்த நிலைப்பாட்டை விளக்குகிறது,
இதுவல்லாது இஸ்லாம்,முஸ்லீம்களுக்கு,மட்டுமல்ல,மற்றெல்லா மதத்தினருக்கும், மதநல்லிணக்கத்தை கற்றுத்தரும் முகமாக,கீழ்காணும் வசனத்தை முன் மொழிகிறது,
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்ல.உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்,எனக்கு என்னுடைய மார்க்கம். - 109: 4-6 அல் குர்ஆன்
இதைவிட மத நல்லிணக்கத்தை உணர்த்த வேரொரு வார்த்தை தேவை இல்லை.
மேற்காணும் சில வசன ஆதாரங்களை கொண்டு இஸ்லாம் எத்தகைய நல்லிணக்கத்தையும்,பிற மதங்கள் மீதான தனது நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இதிலிருந்து,இஸ்லாம் பிறமதங்கள் மீது வெறுப்பையும் துவேஷத்தையும் போதிக்கவில்லை என்பதையும்.மாறாக அன்பையும்,இணக்கத்தையும் பரைசாற்றுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்படியானால் குர்ஆனில்,ஜிஹாத் பற்றியும், கூறப்பட்டுள்ள கருத்துக்கள் வெறுப்பை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறதே என்ற கேள்விகளை அடுத்து வரும் பதிவுகளில் விவாதிப்போம்....
நன்றி
அன்புடன்
ரஜின்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் தான் ஆனால் அதன் வலிப்போக்களாரின் கைகளில் சிக்கியதாலும், மேன்போக்களார் சிந்தனை வாதிகள் அமைதிக் காப்பதும் அதன் மீதான தவறான பார்வையை அதிகப்படுத்தி விட்டது, தனி மனித சுதந்திரங்களை மதிக்காத இஸ்லாமிய நாடுகளும் இதற்கு ஒரு காரணம் தான்.
பதிலளிநீக்குசகோ அங்கிதா,
பதிலளிநீக்குவருகைக்கும்,வாசிப்புக்கும் நன்றி,
நீங்க சொல்றது ஒரு வகைக்கு உண்மைதான்.இஸ்லாம் கடும் போக்காளர்களின் கைகளில் இருந்து வெளிப்படும் போது,அது 70mm ஸ்க்ரீன்'ல மக்களுக்கு கொண்டு சேர்க்கப் படுகிறது.எங்களை போன்றவர்கள் எடுத்துச் சொல்லும் இஸ்லாமானது,எளிதாக வெகுஜன மக்களை சென்றடைவதில்லை.
நன்றி
ரஜின், காஃபிர்களை பூண்டோடு அழியுங்கள் என்றும் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறதாமே! பல வருஷங்களுக்கு முன் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தான். உங்கள் விளக்கம் அடுத்த பகுதியில் வருமா?
பதிலளிநீக்குசகோ RV அவர்களே.
பதிலளிநீக்குவருகைக்கும் வாசிப்புக்கும் ந்ன்றி.
குர் ஆனில்,முரன்பாடுகளுக்கு வேலை இல்லை.ஒரு புறம் இணக்கத்தையும்,அமைதியையும் வலியுறுத்திவிட்டு,மறுபுறம் அழிப்பையும்,கொலைகளையும்,ஊக்கப்படுத்துவதாக இருந்தால்,இன்று இஸ்லாம் இத்துனை வளர்ந்து இருக்காது.இன்ஷாஅல்லாஹ் தங்களின் கேள்விக்கு அடுத்து வரும் பதிவுகள் பதிலாக அமையும்.
நன்றி.