திங்கள், பிப்ரவரி 28, 2011

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக விழா - படங்கள்...


பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் விழா,கட்டுரை போட்டி பரிசளிப்பு,குறுந்தகடு வெளியீடு,மற்றும் சகோ கவிஞர் மலிக்கா அவர்களின் உணர்வுகளின் ஓசை எனும் கவிதைத்தொகுப்பு வெளியீடு,என பல்சுவை நிகழ்ச்சியாக அமைந்தது,

விழா துவக்கம் ஆனது க்ராஅத்,மற்றும் அதை தொடர்ந்து பைத்..என சிறப்பாக ஆரம்பம் ஆனது,

கலையன்பன் ரஃபீக் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.கட்டுரை போட்டிக்கான முதல் பரிசை வென்ற அத்தவுல்லாஹ் அவர்கள் கவிதை வாசித்தார்கள்..சற்றே நீநீநீநீளமாக....


கவிஞர் மு.மேத்தா அவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது.


அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சகோ.கவிஞர் மலிக்கா அவர்களின் உணர்வுகளின் ஓசை எனும் கவிதைத்தொகுப்பு வெளியீடு...

      

       

நாமறிந்த ஒருவரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதும்,நேரில் காண்பதும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.அவரது கவிதைத் தொகுப்பும் கிடைக்கப் பெற்றது.தலைசிறந்தவர்களின் அணிந்துரையுடன் கவிதைத்தொகுப்பு சிறப்பாக இருந்தது.


ETA ASCON STAR குழுமத்தின் MD,செய்யது M.சலாஹுத்தீன் அவர்களின் வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.


அவருக்கு விமர்சையான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மிகவும் தலைசிறந்த தொழில் அதிபர்,மாபெரும் செல்வந்தர்,என அறியப்பட்ட அவர்,மிகச்சிறந்த மார்க்கப்பற்று,மற்றும் கலை இலக்கிய பற்றும் கொண்ட சிறந்த மனிதர் என்பதை அன்று தெரிந்து கொள்ள முடிந்தது.அவரது உரை,குர் ஆன் வசன மேற்கோள்களோடு,அத்துனை சிறப்பாக இருந்தது..

குறிப்பாக ஆணவம் இல்லாத வாழ்வு குறித்து அல்லாஹ் கூறுவதை மேற்கோள்காட்டி அவர் பேசியது சிறப்பு.இத்துனை பெரிய மனிதர் எளிமையாக,இயல்பாக,அனைவருடனும் கலகலப்பாக இருந்தது பிரம்மிப்பை அளித்தது.ஒரு பெரிய மனிதன் இப்படித்தான் இருக்கனும்னு சொல்லும் அளவுக்கு கண்ணியமான மனிதர் அவர்.அல்லாஹ் அவருக்கு ஆயுளை விசாலமாக்கி,மறை கூறும் நல்வாழ்வு வாழ்ந்து சிறக்க அருள் செய்வானாக....


எல்லாத்துக்கும் மேலாக அவர் எங்களது நிறுவனத்தின் MD என்பதால் எனக்கு பிறரை விட அதிக சந்தோஷம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


சலாஹுத்தீன் அவர்களின் சகோதரரும் தொழிலதிபருமான திரு.கீழை சீனா தானா அவர்கள் “நான் விரும்பும் திருக்குர் ஆன்” விளக்கமும்- நீதியும் சீடி வெளியிட்டு பேசினார்கள்..

இவர்,சகோ மலிக்கா அவர்களின் மகனார் மஃரூப்..இவர் விழாவில் படு பிஸியாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.அவரை கூப்பிட்டு ரெண்டு போட்டு எடுத்துவிட்டு,கொஞ்சம் பேசினேன்.அத்துனை அமைதியான ஸாலிகான பிள்ளை.அல்லாஹ் இவருக்கு நீடித்த பயனுள்ள ஆயுளை வழங்க போதுமானவன்.


ம்ம்..கடைசியாக இது நான்..பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திய கட்டுரை போட்டிக்கு,கட்டுரை அனுப்பி,எனது கட்டுரையும் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பான நேரம் அது.எழுத்துலகில் மிக மிக சமீபமாக கால்வைத்து,வலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்த நான்,முதல் முயற்சியாக கட்டுரை போட்டியில் பங்கு பெற்றதும்,அது அங்கீகரிக்கப்பட்டதும்,எனக்கு பெரும் ஊக்கமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

அல்லாஹ் மாபெரும் கருணையாளன்,புகழுக்குரியவன்

அன்புடன்
ரஜின்

25 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,
  சகோ.ரஜின்,
  ///பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திய கட்டுரை போட்டிக்கு,கட்டுரை அனுப்பி,எனது கட்டுரையும் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பான நேரம் அது///---மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  விழா நிகச்சிகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அருமையாக தொகுத்து இருக்கீங்க சகோ.எல்லாப்படமும் அருமை,உங்க கட்டுரைக்கு பாராட்டுக்கள்.சகோ உங்க படமும் போட்டு இந்த பதிவை மிகவும் கௌரவப்படுத்திட்டீங்க.ரொம்ப சின்ன தம்பியாக இருக்கீங்க:)

  பதிலளிநீக்கு
 3. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 4. ஸலாம்,ஆசியாக்கா,
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி,

  /உங்க படமும் போட்டு இந்த பதிவை மிகவும் கௌரவப்படுத்திட்டீங்க./
  ஐயயோ,பெரிய வார்த்தைலா சொல்றீங்க..தங்களை போன்ற பெரியவர்களின் வருகையால் இந்த தளம் கௌரவம் பெருகிறது...

  /ரொம்ப சின்ன தம்பியாக இருக்கீங்க:)/

  ஆஹா..இதுல ஏதும் உள் குத்து இல்லையே??? /:)/இத பாக்கும் போது மைல்டா ஒரு டவுட்..அதா கேட்டேன்..

  அங்க சட்டைக்கு ஒரு சட்ட போட்டு,ஒரு குட்டி பையன் நிக்கிறானே,அவன்னு என்ன நெனச்சுட்டிங்க போங்க..கடைசியா ஒருத்தருக்கு பரிசு குடுக்குறாங்களே அவ”ரு”தான் நான்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 5. /ETA ASCON STARகுழுமத்தின் MD,செய்யது M.சலாஹுத்தீன் அவர்களுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் மேலும் சிறப்புக்களைத் தருவானாக.

  ETA ASCON STARகுழுமத்தின் MD,கலையன்பன் ரஃபீக்,அத்தவுல்லாஹ்,கவிஞர் மு.மேத்தா, சகோ.கவிஞர் மலிக்கா, கீழை சீனா தானா, ரஜின் போன்ற பெரும்புள்ளிகளைப் பற்றி எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி.

  /கட்டுரை போட்டியில் பங்கு பெற்றதும்,அது அங்கீகரிக்கப்பட்டதும்,எனக்கு பெரும் ஊக்கமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது../ வாழ்த்துக்கள்.அந்த கட்டுரையையும் பதிவிடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும்

  ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் , தம்பி ரஹின், அழகான முறையில் தொகுத்து இருக்கீங்க வாழ்த்த்துக்கள்
  ஜலீலா

  பதிலளிநீக்கு
 7. ஸலாம் சகோ பானு,

  /ரஜின் போன்ற பெரும்புள்ளிகளைப் பற்றி/
  வார்த்தை பிழைகள் அதிகமாக இருக்கிறது சகோ...

  தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி..அந்த கட்டுரையின் நீளம் அதிகமாதலால் பதிவிடவில்லை.
  தலைப்பு:தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லீம்களின் பங்கு

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 8. வ அலைக்கும் ஸலாம் ஜலீலாக்கா,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 9. அடடே, பரிசு வாங்கிருக்கீங்களா, சந்தோஷம். வாழ்த்துகள். இந்தக் கட்டுரை போட்டி பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், இந்தத் தலைப்பில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நீங்க எழுதினதை இங்க பதிவுல எழுதுங்களேன். விபரங்கள் தெரிஞ்சுகிடலாமே? நீளமா இருந்தாலும் சுருக்கி பதிவிடுங்களேன்.

  //பெரிய மனிதர் எளிமையாக,இயல்பாக,அனைவருடனும் கலகலப்பாக இருந்தது பிரம்மிப்பை அளித்தது... கண்ணியமான மனிதர்//

  அவர் குறித்து நீங்கள் எழுதியதில் மறுகருத்தில்லை. நானறிந்த ஒருவர் முன்னமேயே அவரைப் பலமுறை வீட்டில் சென்று சந்தித்தேன் என்று கூறுவார். ஒரு சாதாரண ஏஸி மெக்கானிக்கான அவர் அவ்வாறு சொல்வது எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். அமீரகம் வந்த புதிதில் அவருக்கு கிடைத்த அறிமுகம் என்றாலும், ஒரு பெரிய மனிதரைச் சந்திப்பது அவ்வளவு எளிதா என்று வியப்பாக இருக்கும். நீங்கள் எழுதியிருப்பதும் அதை நிரூபிக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. நல்லமுறையில் தொகுத்து வழங்கியிருக்கீங்க ரஜின்
  தங்கள் M D. திரு சேக் சலாவுதீன் அவர்களால் பலபல குடும்பங்களுக்கு வாழ்வழிக்ககூடிய நற்பாக்கியத்தை அவர்களுக்கு இறைவன் அருளியுள்ளான். இன்னும் பல குடும்பங்கள் ஒளிர அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வழங்கப்போதுமானவன்.

  ரொம்ப சந்தோஷம் ரஜின் நீங்களும் பரிசுபெற்றது. நேரில் வந்தும் வாழ்த்த் முடியா சூழல்.இப்போதுதான் தங்களையும் பார்க்கிறேன் இதுதான் நீங்களா!

  பதிலளிநீக்கு
 11. ஆகா நம்மவீட்டு செல்லம் நிக்குதே. வந்து சொன்னார் மம்மி என்னை போட்டோ எடுத்தாங்க யாருன்னு கேட்டேன் எனக்கு புரியலை மம்மின்னார் அது நீங்கள்தானா.. மிக்க மகிழ்ச்சி ரஜின்.

  மஃரூஃப் போட்டோகள் எடுப்பதில் கில்லாடி. நல்லமுறையில் அனைத்தையும் கவர் செய்வார். அவர் எடுத்ததுதான் நான் போட்டுள்ள போட்டோகளில் நிறைய.

  கட்டுரைப்போட்டிக்கான பரிசு வாங்கியதற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  மிக்க நன்றி ரஜின் எங்களைபற்றியும் குறிப்பிட்டு பதிவில் எழுதியமைக்கு..மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. Dubaaiyai neril paarkka aasai Insha Allha paarppom.

  nalladhoru pakirvu சகோ வாழ்த்துக்கள்.tamil convertet settai pannudhu piraku santhippom.

  பதிலளிநீக்கு
 13. ஸலாம் சகோ ஹுஸைனம்மா,
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
  இன்ஷா அல்லாஹ் அந்த கட்டுரையையும் பதிவிடுகிறேன்.

  MD குறித்து தாங்கள் சொன்னதும் அவர் குறித்த மதிப்பை உயர்த்துகிறது.
  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 14. ஸலாம் சகோ மலிக்கா,
  தங்களின் வருகைக்கும், வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
  /இதுதான் நீங்களா!/
  ஆமா சகோ அது,இல்ல இல்ல,அவன் நான் தான்,

  மஃரூப்-சூப்பராவே போட்டோ எடுத்துட்டு இருந்தார்.செம பிஸி..அவர கூப்டு ரெண்டு வார்த்த பேசக்கூட மூடியல..மாஷா அல்லாஹ்..

  //மிக்க நன்றி ரஜின் எங்களைபற்றியும் குறிப்பிட்டு பதிவில் எழுதியமைக்கு..மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி..//

  இதுல்ல என்ன சகோ இருக்கு..பிரபலமானவங்கள பத்தி எல்லாரும் எழுதுரது சகஜம் தானே..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 15. ஸலாம் சகோ அந்நியன்,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்..
  வாங்க...இன்ஷா அல்லாஹ் நீங்க துபாய் வரும்போது கண்டிப்பா சந்திக்கலாம்..

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரஜின்...

  தோழி மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

  // ம்ம்..கடைசியாக இது நான்.//

  நீங்கள் எது சகோ. தொப்பியா? தொப்பி இல்லாமலா ?

  எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 17. ஸலாம் சகோ ஆயிஷா..
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி...

  /நீங்கள் எது சகோ. தொப்பியா? தொப்பி இல்லாமலா ?/

  தொப்பியுண்டனிருப்பவர்,நிகழ்ச்சி தொகுப்பாளர்.கலையன்பன் ரஃபீக்..

  தொப்பியில்லாது இருப்பவர்தான் சகோ ரஜின்...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 18. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  கையில் எதோ வைத்து கொண்டு டான்ஸ்

  ஆடுவது நீங்கள் தானா சகோ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆயிஷா,,

  டான்ஸா???..எதையோ வைத்துக்கொண்டா???

  சகோ..ரொம்ப வருஷத்துக்கப்பரம் மேடை ஏறி..பரிசு பெற்ற சந்தோஷத்தில்..இறங்கும் போது நண்பர் எடுத்த போட்டோ அது...அதும் மேலே பதிவுல.இருக்கிற பையன் ம்ஃரூபோட பேசிட்டு இருக்கும் போது சடனா கூப்டாங்களா??அதா..ஒரு பரபரப்போட போய்ட்டு..பரபரப்பா வந்தது அப்டி தெரிஞ்சுருக்கு..உங்களுக்க்...

  இருந்தாலும் இப்டில்லா சொல்லக்கூடாது...ம்ம்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 20. இப்பொழுதுதான் எண் கண்களில் இந்த இடுகை பட்டது.அழகிய முறையில் தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துககள்.மேலும் பற்பல பரிசுகளும்,விருதுகளும் பெற்று சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. ஸலாம் சாதிக்காக்கா,தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 22. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  //இருந்தாலும் இப்டில்லா சொல்லக்கூடாது...ம்ம்..//

  சும்மா தமாசுக்கு தான் சொன்னேன்.
  சகோ அபிராமம் நத்தம் உங்க பிளாக்கா?

  பதிலளிநீக்கு
 23. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆயிஷா..
  ம்ம்..நானும் சும்மாதா சொன்னேன் சகோ..

  அபிராமம்,நத்தம் எங்க ஊர்..அந்த ப்ளாக்ல நானும் ஒரு ஆசிரியர்(author)..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 24. சாரி வெரி லேட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ரிப்ளை

  வாழ்த்துக்கள்..

  என்னே ரசிகர் கூட்டம்.

  நீங்கள்லாம் நல்லா வருவீங்க தம்பி...... :-)

  பதிலளிநீக்கு
 25. சாரி வெரி லேட்ட்ட்ட்ட் ரிப்ளை

  வாழ்த்துக்கள்.

  என்னா ரசிகர் கூட்டம், நீங்க ஏன் தேர்தல் ல நிக்க கூடாது :-)

  நீங்கள்லாம் நல்லா வருவீங்க தம்பி. ;-)

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்