செவ்வாய், பிப்ரவரி 01, 2011

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை



ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,


கண்கள் உறங்கும் நேரம் விழிக்கிறது,
கண்விழிக்கும் போது மறைகிறது...

எதைச் சொல்ல இரவில் காய்ந்து,
பின் சொல்லாமலேயே பகலில் ஓய்கிறது???

குளுமையை மட்டுமே தன்மையாகக் கொண்டது.
பார்க்கும் விழிகளுக்கும்,விழிவழி மனதிற்கும்
குளுமையை தாராளமாய் தருவது.

ஈரேழு நாட்களிலே தேய்தலும்,..வளர்தலுமாய்
வாழ்க்கை தத்துவத்தை வடிவாய் உரைப்பது.

தத்துவமா??
ஆம்.வாழ்வெனில் அதில் மகிழ்வு,உயர்வென்ற வளர்ச்சிகளும்,
தோல்வி,துன்பமென்ற தேய்வுகளும் இருக்குமென....

மழலைகள் சோறுங்க
பல கதைகள் உனைத்தொட்டு,

மழலைமாறி நான் வளர,
இருளில் துணையாக வீடுவரை என்னுடன்,
முற்றத்திலும் நீ...கொல்லையிலும் நீ
திண்ணையிலும் நீ,ஓட்டின் இடுக்கிலும் நீயென,
என்னுடன் ஓடி,ஒழிந்து விளையாடி...

பதின்மத்தை நான் எட்டும் போது,
பலகனவுகள் கண்முன்னே
கனவுகளை கதைப்பதும் உன்முன்னே..

விழுதாய் நான் விழ வேராய்த் தாங்கிய,
என முன்னோர் கண்டதும் அதே நிலவு.
அன்னார் முகங்களை தன் ஒளியால் பதிந்ததும் அதே நிலவு,
இன்று என் முகத்தையும் பதிவாக்கிக் கொள்கிறது.
நாளை, நான் முன்னோராகிப்போக..
என், வழியின் முகமும் பதிவாகும்.

நிலவு - பழமையை உணர ஒப்பற்ற ஊடகமாய் நம் முன்.
காலம் மாற காட்சிகளும் மாறிடும்....
ஆனால்,அனைவரும் கண்ட காட்சி...மாறாக் காட்சியது நிலவு மட்டுமே..
காலச்சுவடாக ஏட்டில் கண்ட மனிதன் யாவரும் நிலவுக்கு பரிச்சியம்.
அவன் கண்ட,அவன் களித்த அதே நிலவு இன்று நம்முன்...

பல்வேறு காலங்கள்,பல்வேறு ரசனைகள்
பன்னாட்டு மக்கள்,பலகோடி சிந்தனைகள்
பலவித பருவம்,பன்நூறு எண்ணங்கள்,
என அத்துனைக்கும் பன்பரிமாணமாய்
நீ காட்டும் ஒற்றை முகம்...

தனக்குள் எத்துனை செய்திகளை கட்டிவைத்தும்!!!...
பார்வைக்கோ எளிய கோ(ல)ளமாய்....(Pause)

விழி விரியும் பிரம்மிப்பு அடங்கவே இல்லை...
நிலவைப் பார்த்து அல்ல....
நிலவைப் படைத்தவனைப் பார்த்து...

ஆம்...
பிரம்மாண்டங்களை ஆக்கிவிட்ட
ஏகனின் பிரம்மாண்டமான எளிய படைப்பு...

மனிதன் எத்தனை முயன்றாலும் இயலாததைப் படைத்து,
அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்து
அவனிருப்பை சாட்சி சொல்லும் அத்தாட்சியாக,,,

நிதமும் சுற்றுகிறது நிலவு....



நிலா ரசிகன்
ரஜின்

13 கருத்துகள் :

  1. அருமை ரஜின்,நிலவு போலவே அழகு.

    பதிலளிநீக்கு
  2. ஸலாம் ஆசியாக்கா,
    தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்கும் நன்றி..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்


    நீங்க கவிதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

    பதிவுலகம் தாங்குமா? அருமை சகோ.வாழ்த்துக்கள.

    பதிலளிநீக்கு
  4. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆயிஷா,
    தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி


    /நீங்க கவிதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்./
    நான் ரொம்ப நாளாவே எழுதீட்டு இருக்கேன் சகோ..

    /பதிவுலகம் தாங்குமா?/
    பின்ன,தாங்கித்தான ஆகனும்...எஸ்கேப் ஆக முடியுமா என்ன???

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (warah)

    அருமையான கவிதைகளை தொகுத்த நீங்கள்,உண்மையில் பாராட்டக் கூடியவர்.

    அந்நியன் மூலம் பாராட்டை பெறுவதை விட,நல்ல மனிதர்களிடம் பாராட்டைப் பெறுவதற்கு "துஆ" செய்கிறேன் சகோ !

    எல்லாமே நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. வ அலைக்கும் ஸலாம் சகோ அன்னியன்.
    தங்கள் வருகைக்கும்,வாசிப்புக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றிகள்...
    /நல்ல மனிதர்களிடம் பாராட்டைப் பெறுவதற்கு "துஆ" செய்கிறேன்/

    ஆமீன்..

    அல்லாஹ் நம் அனைவரின் அறிவையும் விசாலமாக்க போதுமானவன்

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. நிலவு பற்றி எத்தனை ஆயிரம் கவிதைகள் படித்தாலும் ஏனோ சலிப்பதில்லை... அது தான் நிலவின் அழகு போலும்... நானும் நிலவின் ரசிகை தான்... நல்லா இருக்குங்க கவிதை

    பதிலளிநீக்கு
  8. சகோ புவனா,
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
    நீங்கள் நான் அல்ல,மனிதர் அனைவருமே நிலா ரசிகர்கள்தான்..

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
    http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும்.நிலவைப்பற்றி இவ்வளவா...?அருமை சகோ

    பதிலளிநீக்கு
  11. ஸலாம் ஆசியாக்கா..
    விருது வழங்கியதற்கு நன்றிகள்..
    பெற்றுக்கொண்டேன்..
    -------------------------------------------------
    வ அலைக்கும் ஸலாம் சகோ ஸாதிகா
    தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்.
    நிலவை பற்றி எவ்வளவோ இருக்கு சகோ.என் அறிவுக்கு எட்டியது இவ்ளோதான்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொரு வரியும் 'அட..ஆமா' போட வைக்கிறது... நல்ல படைப்பு...உங்க கவிதை.... அதிஅற்புதமான படைப்பு இறைவனின் நிலா... நிலவை வர்ணிப்பது போல் கூறி பின் அத்தனை புகழையும் ஒரே வரியில் இறைவனுக்குச் சேர்த்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஸலாம் சகோ பானு,
    தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும்,நன்றி.
    அனைத்தையும் படைத்த வல்லோனின் மேலான படைப்புகளில் ஒன்று நிலவு.
    அவனது அத்தாட்சிகளை சிந்திக்கும் அனைவருக்கும்,அவன் நேர்வழி காட்ட போதுமானவன்

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்