கடவுள்!....சரி,அதென்ன அடுத்து "ஹிந்துக்களின் புரிதல்"?...தலைப்பை பார்க்கும் போதே...ஆஹா ஆரம்பிச்சுட்டான்னுங்கடா...ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் இனி திட்டி தீக்க போரானுகன்னுதா பொதுவா எல்லாத்துக்கும் தோனும்...ஏன்னா?ஹிந்துமதத்தப் பத்தி முஸ்லீமும், இஸ்லாத்தை பத்தி ஹிந்துவும் எழுதுனா,அது எதிர்மறை கருத்துப் பதிவாகத்தான் இருக்கும் என்பது பொதுவான புரிதல்,அது ஒருவகையில் உண்மையும் கூட...எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவை விரச விமர்சனங்களாக இல்லாமல், நாகரீகமாக, இருப்பது அவசியம்.
இங்கு கடவுள் குறித்த ஹிந்துக்களில் புரிதல்! என குறிப்பாக ஹிந்துக்களை மட்டும் வம்புக்கு இழுப்பது ஏன்?அப்படியானால், இஸ்லாமிய,கிருஸ்தவ புரிதல் எல்லாம் என்ன ஆச்சுன்னும் கேக்கலாம்..
பொதுவாக கடவுள் குறித்த புரிதலை எளிமையாக இரண்டாகப் பிரிக்கலாம். அது ஒரு கடவுள் கொள்கை/பல கடவுள் கொள்கை.ஆகா!! இதுல என்ன பிரமாதம்.... எல்லா மதமும்,இஸ்லாம்,ஹிந்து,கிருஸ்தவம் உள்பட ஓரிறைக் கொள்கையை தான சொல்லுது அப்டீன்னா..அப்போ பலகடவுள் கொள்கைங்கிறதென்ன? அதை யார் பின்பற்றுகிறார்கள் என்றால், முஸ்லீம்கள் தவிர ஹிந்து,கிருஸ்தவ மக்கள்தாம்..அல்லவா? ஆக ஒரு கடவுள் கொளகைத் தத்துவத்தின் படி இஸ்லாம் தனித்துவிடப்படுவதால்,பல கடவுள் கொள்கையை பிரதானமாகக் கொண்ட ஹிந்து மதம்,இக்கொள்கை குறித்து எப்படிப்பட்ட புரிதலைக் கொண்டுள்ளது என்பதை அலசவே இப்பதிவு. ஹிந்துக்களின் புரிதலை அலசும் இப்பதிவு கிருஸ்தவர்களின் பலதெய்வ கொள்கைக்கும் பதிலளிக்கும் என நம்புகிறேன்.
என்னப்பா இது ஒருகடவுள் கொள்கைன்னாலும்,பலகடவுள் கொள்கைன்னாலும் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள் வர்ராங்களே....அப்ப,ஒரு கடவுள் கொள்கையும்,பல கடவுள் கொள்கையும் ஒன்றா?........ இரண்டும் இருதுருவக் கொள்கைகள் ஆச்சே...அதெப்படி ஒன்றாக முடியும்???....
இந்த சிக்கலில்தான் பல கேள்விகள் எழுகிறது.அதற்கு பதிலும் தரப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் நடந்த பின்னூட்ட உரையாடலில் பிரதாப் என்ற சகோதரர் இதற்கான் பதிலை தர்க்க ரீதியாக கொடுத்திருந்தார்.இதை ஹிந்து மகான் ஒருவர் கூறியதாக முன்னமே நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.பல கடவுளா? ஒரு கடவுளா? என்ற கேள்விக்கு,ஹிந்துக்களிடம் இருந்து வரும் பதில்கள் அனைத்துமே இந்த ஃபார்முலாவுடன் தான் முன்வைக்கப்படுகிறது.அது என்னான்னா....அத அவரே சொல்ரார் பாருங்க.....
இந்துக்கள் ஒரே கடவுளை தான் வழிபடுகிறார்கள். அந்த கடவுள் எல்லா உருவங்களிலும் உள்ளார். உருவம் இல்லாதவரும் அவரே.உருவங்களுக்கு பல பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
சுவாமிநாதன் என்பவர் ஒரு மனிதர். அவர் குழந்தை அவரை அப்பா என்று அழைக்கிறது. அவர் தாய் அவரை மகனே என்று அழைக்கிறார். அவர் மனைவி அவரை அன்புக்கணவரே என்று அழைக்கிறார்.
அவர் நீதி மன்றத்திற்கு சென்று, தனது ஆசனத்தில் அமர்ந்தவுடன் , அவர் முன்பாக ஆஜராகும் அனைவரும் அவரை, கனம் நீதி அரசர் அவர்களே என்று அழைக்கிறார்கள்.
ஆக ஒரு சாதாரண மனிதருக்கே ஒரு பெயர் போதவில்லை. எனவே இறைவனுக்கு உள்ள பெயர்களோ எண்ணிறைந்தவை. எல்லா பெயர்களும் இறைவனின் பெயர்களே.
இறைவனுக்கு ஒரு பெயர் தான் உண்டு என்று சொல்வது ஒரு மோசடி. இறைவனுக்கு எத்தனையோ பெயர்களும், எத்தனையோ உருவங்களும் உண்டு. உருவமில்லாதவரும் அவரே. - பிரதாப்
பிரதாப் அவர்களின் கருத்து - தமிழ்ஹிந்துவில் இருந்து |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் தான் பல கடவுள் டூ ஒரு கடவுள் கொள்கைக்கான பதில்..இதை மேம்போக்காக பார்க்கும் போது,அட சரிதானேனு தோனும்.ஆனால் இங்குதான் நாம் முரண்பாடுகளை காண்கிறோம்...ஒன்றை எளிமைப்படுத்தி விளக்க உதாரணப்பொருள்களை துணைகொள்வது சகஜமான ஒன்று.ஆனால் கொடுக்கக்கூடிய உதாரணம் ஆனது அதற்கு சாலப்பொருத்தமானதாக இருப்பது அவசியம்..ஏனெனில் விளங்குபவர் அந்த உதாரணத்தை பிராதனமாகக் கொண்டுதான் அதன் சாயலில் கருப்பொருளை விளங்குவார்.அப்படி இருக்க உதாரணம் பிழையாக இருப்பின் கருவின் மீதான புரிதலும் பிழைபடும் என்பதில் ஐயம் இல்லை....
சரி....விஷயத்துக்கு வருவோம்...கடவுளுக்கு பல பெயர்களும் உருவங்களும் இருக்கும்,அது மனித வசதிக்காக கொடுக்கப்பட்டவை என சொல்கிறார்.ஒரு கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது...சரி...அந்தக் கடவுளை நான் எந்தப்பெயரில் அழைத்தாலும் அது அவர்தான்....அதை யார்வேண்டுமானாலும் எந்தப்பெயர் வேண்டுமானலும் கூறி அழைக்கலாம்....அழைக்கனும்...அதுதான் சரி...
உதாரணமாக இஸ்லாத்திலும் அல்லாஹ்வின் பெயர்களாக, அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)/அர்ரஹீம்(நிகரற்ற அன்புடையவன்)/அல்ஹாலிக் (படைப்பவன்)/அல்கரீம்(சங்கைமிக்கவன்)/அல்குத்தூஸ் (தூய்மையாளன்)/அல்அஜீஸ்(மிகைத்தவன்)/என 99 பெயர்கள் உள்ளன.. இத்தகைய பெயர்களைக் கூறி,யார் வேண்டுமானாலும் இறைவனை அழைக்கமுடியும்....
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள சுவாமிநாதன்,ஒருவருக்கு மகனாக, ஒருவருக்கு தகப்பனாக,ஒருவருக்கு சகோதரனாக,ஒருவருக்கு கணவனாக இருக்கிறார்....ஆனால் அவர் யார் யாருக்கு என்னவாக இருக்கிறாறொ,அவர் அவரை அந்தப்பேரில் மட்டும்தான் அழைக்கமுடியும்...
இப்போ,அவருக்குள்ள பெயர்கள் என்ன? மகனே,கணவனே, தகப்பனே, சகோதரனே..என்பன..இதில் தாயானவள்,சுவாமிநாதனை என் மகனே என மட்டுதானே அழைக்க முடியும்,அவரை என் சகோதரனே என்றோ,என் கணவனே என்றோ அழைத்திட முடியுமா???..
மனிதன் ஒருவனாக இருந்தாலும்,மகன் வேறு,கணவன் வேறு,சகோதரன் வேறு.இது எல்லாமே சுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது.அதுபோல சுவாமிநாதனும்,தாயிடம் மகனாக மட்டும்,மனைவியிடம் கணவனாக மட்டும்,பிள்ளைக்கு தகப்பனாக மட்டும் தங்கைக்கு அண்ணனாக மட்டும் இருக்கமுடியும்...அதில் மாற்றம் வந்தால், அதை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது..இதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்....
ஆனால் கடவுள் அப்படி இல்லையே..அவன் எல்லாருக்கும், எல்லாக் காலங்களிலும், எல்லாமுமாய் இருக்கக்கூடியவன் ஆயிற்றே..அவன் ஒருவனுக்கு ஒருமாதிரியும்,மற்றவனுக்கு வேறுமாதிரியும் இருப்பதில்லையே..
அவர் சொன்ன அதே உதாரணத்தை ஹிந்து கடவுள்களுக்கு பொருத்திப் பார்த்தோமானாலும்,அவையும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது...சிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன், என எண்ணில் அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு... முதலில்,இத்துனை பெயர்களில் வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம் ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!... அப்டீன்னோ, சிவனை, காளி’ன்னோ, ராமனை...மாரி’ன்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானே...அவர் கூற்று மெய்யாகும்...அப்படி முடிந்தால்தானே....அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும்...
ஆனால் அது சாத்தியமா?...இல்லையே...எல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னு சொல்பவரே... இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்! என்ன சொல்வார்...அட பைத்தியக்காரா!!!...எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடா... நல்லாப்பாரு....இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???.....
”இறைவனுக்கு இது தான் பெயர், இது தான் உருவம், அல்லது அவருக்கு உருவம் கிடையாது என்று எல்லைகள் வகுப்பது காட்டுமிராண்டி தனம்.” - பிரதாப்
சரிதான்...அந்த செயலை யார் செய்கிறார்கள் என்று சிந்திக்காமலேயே..கருத்து தெரிவிக்கிறார் பிரதாப்...கொஞ்சம் அவர் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்...இன்ன கடவுளுக்கு,இன்ன உருவம் என்றும்,இன்ன பெயர் என்றும், பிரித்து வகுத்து,கடவுளின் எல்லைகளை சுருக்கிவிட்டு...அவரை அதுவல்லாத வேறு பெயர்களோ வேறு தன்மைகளோ பொருந்தாத பலகீனனாக்கி தான் சொன்ன அதே *****தனத்தை செய்து,பின் அதுவல்ல இதுவென்று விளக்கம் தருவது ”தான்” தானென்று ...
உங்களை போன்றவர்கள் தெளிவு பெற வேண்டுமானால், காலஞ்சென்ற நீதியரசர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் எழுதிய “அல்லாவின் அழகிய ஆயிரம் திருநாமங்கள்” போன்ற நூல்களை படித்து தெளிவு பெறுதல் நல்லது.” - பிரதாப்
உண்மைதான்...அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனையே குறிக்கிறது..எப்பெயரில் யார் அவனை அழைத்தாலும்,அது அவன் ஒருவனையே சாரும்...எப்பெயரில் அவனை நினைத்தாலும்,அவன் ஒருவனே உள்ளத்தில்....ஆனால் பிரதாப்! உங்கள் கூற்றுப்படி?????..............
முன்னோர்கள் வழங்கிய பாதையை சிந்தித்து அறிவோம்..(பின்)தொடர்வோம்...
(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்.நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை. - அல்குர்ஆன் - 43: 23
சிந்திப்போம்.....சகோதரர்களே...
அன்புடன்
ரஜின்
//சுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது//
பதிலளிநீக்குநல்ல தெளிவான விளக்கம் ரஜின். நானும் தெரிந்துகொண்டேன்.
//எப்பெயரில் அவனை நினைத்தாலும்,அவன் ஒருவனே//
இறைவன் அறிந்தவன்.
ஸலாம் சகோ ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...தாங்கள் அறிந்ததோடல்லாமல் அனைவருக்கும் அறியத்தாருங்கள்...
அன்புடன்
ரஜின்
thanks brother for your permissions
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ் , ரொம்ப அருமையான விளக்கம் ரஜின்.
பதிலளிநீக்குஉங்கள் பகிர்வு மூலம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குயோவ் உனக்கு ஒரு ஆள் கடவுள் என்றால், எனக்கு வேறு ஆள் கடவுள். இதுதான் கடவுள் என்று யாரும் நிரூபிக்க முடியாது.
பதிலளிநீக்குஅல்லா சொன்னாரு...ஆட்டுக்குட்டி சொன்னது, குர்ரான் சொன்னது..குப்பாண்டி சொன்னது என்று ஆயிரம் காரணம் இருக்கலாம்.
எனக்கு நான் மட்டுமே கடவுள், வேறு எந்த மயிரும் எனக்குக் கடவுளாக முடியாது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... "ஒரு கடவுள் கொள்கை/பல கடவுள் கொள்கை"யை எளிமையான முறையில் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் சகோ. மாஷா அல்லாஹ்!
பதிலளிநீக்குஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html
இந்துக்களுடைய புரிதல் இருக்கட்டும்....
பதிலளிநீக்குஒசாமாவின் இஸ்லாமியப் புரிதலும், மற்றவர்களின் இஸ்லாமியப் புரிதலும் ஒன்றா?
@பகுத்தறிவாளன்:
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
//இந்துக்களுடைய புரிதல் இருக்கட்டும்....//
பதிவு பேசக்கூடிய ஹிந்துக்களின் புரிதலை இருக்கட்டும் என ஓரங்கட்டிவிட்டு,ஒசாமா குறித்து பேசுவது ஏன்?
//ஒசாமாவின் இஸ்லாமியப் புரிதலும், மற்றவர்களின் இஸ்லாமியப் புரிதலும் ஒன்றா?//
இல்லை..
அன்புடன்
ரஜின்
லக்ஷ்மிம்மா,
பதிலளிநீக்குஎனது பதிவையும் வலை சரத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி..
அன்புடன்
ரஜின்
அன்புக்குரிய திரு. ரசீன் அவர்களே,
பதிலளிநீக்குஅஸ்ஸலாம் அலைக்கும்!
கடவுள்!…. ஹிந்துக்களின் புரிதல்….கட்டுரையில் நீங்கள் எழுப்பியுள்ள வினாக்கள் தொடர்பான எமது புரிதலை ஒரு கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
கடவுள் பற்றி இந்துக்களின் புரிதல் சரியா?
http://thiruchchikkaaran.wordpress.com/2011/06/19/god-hindus-perception/
இந்துக்களை பொறுத்தவரையில் அவர்களின் கடவுள் கொள்கை எளிமையானது. கருமாரி அம்மனையோ, ஐயப்பனையோ, முருகனையோ, இராமரையோ….. அவர்கள் குடும்பத்தில் முக்கியமாக வழிபடும் கடவுளை கும்பிடுகின்றனர். “நாம கும்பிடர சாமி நம்மைக் காப்பாத்தும்” என்று நம்பும் அவர்களின் கோட்பாடு எளிமையானது.
இதிலே ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்பது போன்றவற்றையோ சொன்னதாக இல்லை. இது விடயமாக சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ வைப்பேன் என்று இந்துக் கடவுளாவது சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.
எனவே முருகனை வணங்குபவர் வாய்ப்பு கிடைக்கும் போது வெங்கடாசலபதியையோ, லக்ஷ்மியையோ…. வணங்கவும் செய்கின்றனர்.
இன்னும் சொல்லப் போனால் இந்துக்கள் மேரி மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கின்றனர். மசூதிக்கு சென்று சுகம் இல்லாத பிள்ளைகளுக்கு மந்திரிக்கினறனர்.
இந்து மத்திலே எளிமையான மக்களின் இந்த அமைதியான கடவுள் கோட்பாடு இவ்வாறு இருக்க, இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் இன்னும் பல ஆழமான சிந்தனைகளை முன் வைக்கினனர். மனிதனின் உயிர் (soul), கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும், அடைய முடியும் என்பதை இந்து மதத்தின் முக்கிய கோட்பாடாக பல பண்டிதர்கள் சொல்லுகின்றனர். இதிலே சில சிந்தனையாளர்கள் ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும் அதே கடவுள் பல அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் சொல்லுகின்றனர்.
இந்தக் கோட்பாட்டை ஆராயும் போது இதிலே சில சந்தேகங்கள் வருவதாகவும், சில முரண்பாடுகள் தோன்றுவதாகவும் நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்.
(CONTINUED)
//இல்லையே…எல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னு சொல்பவரே… இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்! என்ன சொல்வார்…அட பைத்தியக்காரா!!!…எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடா… நல்லாப்பாரு….இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???…..//
பதிலளிநீக்குநீங்கள் கேட்டது போல, முருகன் சந்நிதானத்தில் சென்று “இராமா” என்று கூப்பிட்டு யாரும் வணங்குவது இல்லை. அப்ப முருகன் வேறு, இராமன் வேறு தானே, இராமனும் முருகனும் , பிள்ளையாரும், காளியும் … எல்லாம் எப்படி ஒன்றே என கருதப் பட முடியும் என்கிற கேள்வியை கேட்கிறார்.
இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளனர்.
இராமரின் தத்துவமானது மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் தியாகத்தின் தத்துவமாக , பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போனறது, கொள்கை என்பது இடுப்பில் அணியக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை வாழ்ந்து காட்டியவராக, தன மனைவியை தவிர பிற பெண்களை எண்ணாத விரும்பாத வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டியவராக உள்ளார்.
அனுமனின் கோட்பாடோ, நல்ல கோட்பாடுகளை உடைய ஒரு நல்லவர் , அவர் வாழ்க்கையில் இவ்வளவு தியாகம் செய்தும், அவருக்கு இத்தனை துன்பங்களா என்று இனி, எந்த ஒரு பிரதிபலனும் கருதாமல் நியாயத்துக்காக போராடிய மாவீரனின் கோட்பாடாக உள்ளது. பதவியையோ, செல்வத்தையோ எதிர்பார்க்கவில்லை அனுமன்.
துர்க்கை, காளி ஆகியோர் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளை எதிர்த்து சீறி, அநியாய அக்கிரமக்காரர்களை கருவறுக்கும் பெண்மையின் வீரத்தை கோட்பாட்டை விளக்கும் வகையில் உள்ளது.
நாட்டை விட்டுக் கொடுத்து காட்டுக்கு சென்ற, ஏக பத்தினி விரதனாக அவதரித்த அதே கடவுள், அக்கிரம கொடுங்கோலனை பொறுக்காமல் பெண்ணே சிலிர்த்து சீறி போராடும் கோட்பாட்டை சொல்லும் போது காளியாக பெண்ணாகத்தான் தானே வடிவெடுக்க முடியும்?
எனவே ஒருவன் காளியை வழிபடும் போது, “பொம்பளைங்க கைல ராங் காட்டாத நைனா, அவங்களுக்கு கோவம் வந்தா சீறி உன் தலையை சீவிடுவாங்க, கடவுளே அதைக் காட்ட காளியா வந்துக்குரா” என்கிற சிந்தனையை பெறுகிறான்.
அவனே இராமர் சந்நிதிக்கு வரும்போது, சீதையை பார்க்கும் போது, ஆண்களின் காமத்தால் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது, இராமனைப் போல மனைவியைத் தவிர பிற பெண்களை இச்சை கொள்ளாமல் வாழ்ந்தால் சமூகத்துக்கு நல்லது என்கிற சிந்தனை நிச்சயம் வரும்.
எனவே ஒரு கடவுள், அவ்வப் போது சூழ்நிலைக்கு ஏற்ப ஆணாகவும், நேரத்தில் பெண்ணாகவும் வடிவெடுத்து வரக் கூடும் என்பதே இதன் கோட்பாடு என்பதை புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் எழுப்பிய பிற சந்தேகங்களுக்கான விளக்கத்தை நாம் தொடர்ந்து வழங்குவோம்.
அன்புடன்,
திருச்சிக்காரன்
நல்லப் பதிவு நண்பரே
பதிலளிநீக்குஆயினும் ஏன் இது மாதிரியான
ஒப்பீடுகள்
உங்களின் நம்பிக்கை
சரியான பாதையில்
இருக்கும் போது
ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை
பற்றிய கவலை
எனக்கு தெரிந்தது ஒன்றுதான்
என் நம்பிக்கைகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை
உண்மைகள் அனைத்தையும் நான் நம்பவேண்டிய தேவை இல்லை
மற்றபடி உங்களின் சொல் ஆளுமையில்
சொக்கிபோனேன்
நன்றி
நண்பர் திரு ராஜகோபாலன் அவர்களே,
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
//ஆயினும் ஏன் இது மாதிரியான ஒப்பீடுகள்//
ஒப்பீடுகள்!சகோ இந்தப்பதிவு,நிச்சயமாக இஸ்லாமிய கண்ணோட்ட அடிப்படையில் எழுதப்பட்டதல்ல...
அப்படி எழுதப்பட்டிருந்தால்,அதன் தோரணை இப்படி இருந்திருக்காது...
இது concept அடிப்படையில் எழுதப்பட்டது...இது ஹிந்து,கிருஸ்தவம்,இஸ்லாம்,என எதிலும் இருக்கலாம்...
நான் பிரதாப் அவர்களுடன் உரையாடும்போது,ஹிந்து மதகொள்கைக்கு விளக்கமாக ஒரு concept ஐ முன்வைத்தார்...
எனது முழுபதிவும்,அந்த concept ஐ சுற்றியே இருக்கும்...அதன் சாயலில் விளங்க இருக்கும் பல தெய்வக்கொள்கையை இந்த concept மெய்பிக்கவில்லை என்பதே நான் சொல்லவந்த கருத்து...
மற்றபடி,பலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவன் தான் நான்..அதற்காக அதை பழிக்ககூடிய முட்டாள் அல்ல...
ஹிந்துக்கள் எதையும் வணங்கி விட்டு போகலாம்..என்னிடம் ஒரு கடவுள் கொள்கை இருக்கிறது...அது இன்னின்னது,இத்தகையது என சொல்வதோடு எனது எல்லை முடிகிறது.
யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது,பழிக்கவும் முடியாது,அவரவர் கொள்கை அவரவருக்கு...ஹிந்துக்களின் கொள்கைகளை நான் அறிய தலைப்படும்போது,சொல்லப்படும் விளக்கங்களில் உள்ள ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறேன்..
காழ்ப்புணர்வு கொண்டு,வரம்பு மீறி விமர்சிக்க நாம் பழகவில்லை.இங்கே வலையில் நமக்கு எந்த எல்லையும் விதிக்கப்படவில்லை..இங்கு இருக்கும் ஒருவர் மற்றவரை அறியமாட்டார்..விமர்சனங்களை வைத்துவிட இதைவிட ஒரு பொதுவான தளம் இருக்காது...இப்படிப்பட்ட சூழலில்தான் ஒருவரின் சுயம் வெளிப்படும்.வெளிப்ப்டுகிறது...
எனது வலைப்பூ எனது சுயத்தை காட்டுகிறது...
அன்புடன்
ரஜின்
Ha..ha.. do you know that the mecca itself, a shivan temple? the kaaba stone itself a shivalingam and why married couple are walking around? Only difference is they are walking in anticlockwise direction...poor people still could not digest that islam and chrstianity all are the branches of the age old hinduism with some changes of worship styles according to climate of the country and people... do more deep research on hinduism my friend
பதிலளிநீக்குInshallah Peace be upon him
God bless you