சூப்பர் பஸ்...என்னதது சூப்பர் பஸ்...டீலக்ஸ் பஸ்,அல்ட்ரா டீலக்ஸ் பஸ்,ஏர் பஸ்,இப்டி பல பஸ் பாத்திருக்கோம்,அதென்ன சூப்பர் பஸ்??? சரி பஸ்ஸுன்னு சொல்லீட்டு என்ன கார் படத்த போட்டுருக்கானேன்னு நினைக்கிறீங்களா?...
ஆமாங்க...இது உண்மையிலேயே சூப்பர் பஸ்தான்...மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது சூப்பர்தானே..
எங்க ஓடப்போவுது..அட நம்ம துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையிலதாங்க... சராசரியாக காரில் 1 மணி நேரத்தை தாண்டும் துபாய் அபுதாபி பயணம் இப்போது வெறும் அரைமணி நேரத்தில் சாத்தியப்படப்போகிறது இந்த சூப்பர் பஸ்ஸினால்.
மஸ்தார் சிட்டியில் ஒத்திகை ஓட்டம் பார்க்கப்பட்டு விரைவில் துபாய் டூ அபுதாபிக்கு இயங்க தயாராக இருக்கிறது இந்த சூப்பர் பஸ்.மொத்தமாக ஓட்டுனரின் இருக்கையையும் சேர்த்து 23 இருக்கைகளே உள்ளன.வாகன வடிவமைப்பும்,அதன் உள்கட்டமைப்பும்,ஃபார்முலா ஒன்,மற்றும் ஏரோடைனாமிக் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிவேகத்தில் சிறப்பான ஓட்டமும்,தரமான கட்டுப்பாடும் சாத்தியமாகிறது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க மாசுபடுத்தாத ஸீரோ எமிஷன் வகைக் கார், இல்ல இல்ல பஸ் என்பது இதன் தனித்துவம்.கிட்டத்தட்ட 1000 முதல் 1200 கிலோ எடை கொண்ட மின்கலம் இதற்காக பிரத்தியேக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.அது முழுவதும் சார்ஜ் ஆக முழுமையாக ஓர் இரவை எடுத்துக்கொள்கிறது.
15 மீட்டர் நீளமும்,2.5 மீட்டர் அகலமும்,1.7 மீட்டர் உயரமும், 6 சக்கரங்களையும், 12 கதவுகளையும்,கொண்ட இதை கார் வடிவில் இருந்தாலும் பஸ்ஸுன்னு தான் சொல்லமுடியுமில்லையா???
துபாயில் நடந்த எக்ஸ்பிஷனில் காட்சிக்கு வைக்கபட்ட பஸ்.. |
இது நான் இல்லை... |
இத்தா பெரிய டிக்கி இருக்கே இதுல எவ்ளோ ஜாமான் வைக்கலாம்..அப்டீன்னு யோசிக்காதீங்க...அதுதான் இஞ்சின் கம்பாட்மெண்ட்...
இதில் கடைசியாக இருக்கும் கதவு,விஐபி,அல்லது ஃபேமிலிக்காக உள்ளது இருக்கைக்கள் எதிர் எதிராக வைக்கப்பட்டுள்ளன...
சரி...இவ்ளோ நேரமும்,ஓடாத படத்துல ஓடாம நின்ன பஸ்ஸ பாத்துருப்பீங்க.. இப்போ ஓடுர படத்துல இந்த பஸ் எப்டி ஓடுதுன்னு பாருங்க....
பதிவுலகில் நானும் எழுத ஆரம்பித்து,இத்தோடு எனது 50வது பதிவையும் எழுதிவிட்டேன்..தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுத வல்லோனை இறைஞ்சுகிறேன்...
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குசகோ.ரஜின்,
பஸ் மாதிரி உள்ள இந்த கார்...
ஸாரி... கார் மாதிரி உள்ள இந்த பஸ்...
இல்லை... இல்லை...
பஸ் மாதிரி உள்ள இந்த கார்--->இதுதான் சரி..
ஏன்னா... உள்ளே பயணிகள் & எல்லாம் ஃபிரீயாக வாக் போக முடியாதே...
அப்புறம் நடத்துனர் நடக்க முடியாதே...! ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி கதவு இருக்கே..?
//மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது சூப்பர்தானே..//--என்று எழுதி விட்டு, 40.MPH ரோட்டில் போற மாதிரி ஃபோட்டோ போட்டு...! செம குசும்புதான்..?
//எங்க ஓடப்போவுது..அட நம்ம துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையிலதாங்க...//---என்ஜாய்... சகோ..!
அடுத்த பதிவு... "சூப்பர் பயண அனுபவம்..?"
இந்த பஸ்ஸா? நானும் Buzzனு நினைச்சேன்... இது சும்மா பெருமைக்கு ஓட்டிக்கிடவேண்டியதுதான், 250கிமீ ஸ்பீட்லயெல்லாம் துபாய்-அபுதாபி ரோட்ல ஓட்டவே முடியாது. அதோட, டிக்கட் விலையும் எக்கச்சக்கமா இருக்கும்னு நினைக்க்றேன். நமக்கெல்லாம் கட்டுப்படியாகாதுப்பா!!
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்!
பதிலளிநீக்குகாரின் அளவு பெரிதானால் அதனால் மற்ற வாகனங்களுக்கு சிரமம் இருக்கும். இது தொடர்ந்து சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பஸ் அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்.
பதிலளிநீக்கு//பஸ் மாதிரி உள்ள இந்த கார்...
ஸாரி... கார் மாதிரி உள்ள இந்த பஸ்...
இல்லை... இல்லை... //
பரவாயில்லை,நீங்களும் என்னை மாதிரியே எளிமையா விளக்குரீங்க...
//என்று எழுதி விட்டு, 40.MPH ரோட்டில் போற மாதிரி ஃபோட்டோ போட்டு...! செம குசும்புதான்..?//
அதுவா...பஸ் அவ்ளோ வேகமா ஓடீட்டா போட்டோ வீடியோ எப்டி எடுக்குரது,அதா ஸ்லோவா ஓடவிட்டு எடுத்திருக்கிறானுக...
//அடுத்த பதிவு... "சூப்பர் பயண அனுபவம்..?"//
ஐயயோ சகோ..அதெல்லா நம்ம பட்ஜெட் குள்ள வருமான்னு தெரியாது...சகோ ஹுஸைனம்மா சொன்னமாதிரி நமக்கெல்லாம் கட்டுபடியாகாது..ம்ம்
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..
அன்புடன்
ரஜின்
ஸலாம் சகோ ஹுஸைனம்மா,
பதிலளிநீக்கு//இது சும்மா பெருமைக்கு ஓட்டிக்கிடவேண்டியதுதான், 250கிமீ ஸ்பீட்லயெல்லாம் துபாய்-அபுதாபி ரோட்ல ஓட்டவே முடியாது. அதோட, டிக்கட் விலையும் எக்கச்சக்கமா இருக்கும்னு நினைக்க்றேன். நமக்கெல்லாம் கட்டுப்படியாகாதுப்பா!!//
ம்ம்.உண்மைதான்..பெருமைக்கு ஓட்டிக்க வேண்டியதுதான்..ஒருவேலை விபத்து ஏற்பட்டாலும்,இத்தனை வேகத்தில் சேதம் பலமாக இருக்கும்..
டிக்கெட் விலை கேட்கவே வேண்டாம்.. அதிகமாகத்தான் இருக்கும்...
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி சகோ..
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம் சகோ சுவனப்பிரியன்,
பதிலளிநீக்குஇது ஏதோ தனி ட்ராக்கில் ஓடப்போவதாக சொல்கிறார்கள்..இருந்தாலும் நடைமுறை சிக்கல்கள் இதற்கு அதிகமாகவே இருக்கும்..
பார்க்கலாம்,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ
அன்புடன்
ரஜின்
வாங்க மதுரை சரவணன்,,
பதிலளிநீக்குநம்ம ஊர்காரரா நீங்க..
தங்களின் முதல் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பதிலளிநீக்கு//பதிவுலகில் நானும் எழுத ஆரம்பித்து,இத்தோடு எனது 50வது பதிவையும் எழுதிவிட்டேன்..தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுத வல்லோனை இறைஞ்சுகிறேன்...//
இறைவா தொடர்ந்து எங்களை நேர்வழியில் நிலைத்திருக்க செய்வாயாக
வாழ்த்துக்கள் சகோ
350 வது பதிவை வெளியிட்ட மகிழ்ச்சியான வேளையில் தங்களுக்கு 50 பதிவுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குசூப்பர் பஸ் மாதிரி கார். ஆமா இது எந்த எக்ஸிபிஷன்ல காமிச்சாங்க. பாக்க முடியாமா போச்சே. அது சரி இந்த மாதிரி பஸ்ல சுற்றுலா வற்றவுங்க வேணா போலாம். மத்தபடி safety issues, traffic issues னு பல பிரச்சனைகள் இருக்கு.
பதிலளிநீக்குவிளக்கங்களுடன் படம் அருமை.
தோழமையுடன்
அபு நிஹான்
CLICK AND READ
பதிலளிநீக்கு>>>> இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்
.
இப்ப தான் பாக்குறேன்....
பதிலளிநீக்குஇதெல்லாம் நம்மூர்க்கு வந்துட்டா.... ஒரு நாளைக்கு 4 தடவையாவது சென்னைக்கு போய்ட்டு வந்துடுவேன் :-)
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்