புதன், ஆகஸ்ட் 24, 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப(மதமாற்றம்) செய்யுங்கள்!!!முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//
தாய்மதமாம்!..இவர்கள் அவ்வப்போது ஊண்டி நிற்கும் பரிணாம கொள்கையில் மனிதனுக்கு தாய் குரங்குதான்(இவர்கள் கூற்றுப்படி),அப்போ எல்லாம் குரங்காகத்தான் மாறவேண்டும்..மதத்தில் ஏது தாய்மதம்,தந்தை மதம் எல்லாம்??.
தாய்மதமாம்!..உலகத்துலையே இஸ்லாம்தான்,அல்லது கிருஸ்தவம்தான் தாய்மதம்ன்னு நிருபிச்சுட்டா,இவங்க எல்லா அப்டியே தாய் மதத்துக்கு ஓடி வந்துடுர மாதிரித்தான்..
இவர்களது இரு அணியினரும்,இயக்கமாக செயல்பட்டு,பிற மக்கள் மத்தியில் ”ஏற்படுத்தும் மிரட்சி” என்ன என்பதை கொஞ்சம் கீழே உள்ள செய்தியை பார்த்தால் விளங்கிவிடும்..
JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஜாபர் என்பவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.
புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து,திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி,திருமணம் செய்துகொண்ட பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், இதை போலீஸில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=27598:muslim-woman-accuses-bajrang-dal-of-forced-conversion-urges-igp-to-take-action-&catid=57:news-stories&Itemid=68சிந்திக்கவும்: முஸ்லிம் பெண்களே எச்சரிக்கை!!! ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு அஜண்டாவே (SMART FRIENDS) இருக்கிறது முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றுவது, அல்லது கைவிடுவது. ஹிந்துவா இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வித வெறியை தங்கள் இயக்கத்தினரிடம் வளர்த்து வருகின்றனர். எதாவது ஒரு விசயத்தில் முஸ்லிம்களை நஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை பலகீனப்படுத்துவது.அதில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு,அவர்களின் சொத்துக்களை நாசம் செய்வது,சூரையாடுவது,தீவிரவாத பேனரின் கீழ் அனைவரையும் கொண்டுவந்து அவர்களை மனதளவில் முடமாக்குவது,பின் இது போல பெண்களை குறிவைத்து,சீரழித்து அதில் இன்பம் காண்பது. இப்படிப்பட்ட இவர்களை ஹிந்த்துதுவா வெறி பிடித்த சைகோகள் என்று சொல்லலாம்..

சமீபத்தில் இந்து முன்னனி தலைவன் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் சீரழித்து,கைவிடுவது என்ற பயிற்சியும் ஹிந்து(துவா) இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணை போகின்றது.

மதம் மாறுவதும்,ஓடிப்போவதும் மட்டுமே நம் கண்களுக்கு தெரியும்,ஆனால் அதன் பின்னர் அவர்கள் படும் கஷ்ட,நஷ்டங்கள்,அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.தன் சுய முடிவில் அனைவரையும் உதரிவிட்டு,பெற்றோரையும் உற்றாரையும் கேவலப்படுத்திவிட்டு ஓடிப் போனவர்கள்,தங்களை இழந்து,பின் அதில் இருந்து மீளமுடியாமலும்,மேலே சகோதரி புஸ்ரா போல் மீண்டாலும்,குடும்பத்தினரிடம் சேரமுடியாமலும்,வாழ வழியில்லாதவர்களாக வக்கற்றவர்களாக தெருவில் நிற்கிறார்கள்..இதற்கிடையில் இவர்கள் தவறாது கையில் பிள்ளைகளை திணித்துவிடப் பட்டுவிடுவார்கள்,பிள்ளைகளை காப்பாற்ற தவறான வழிக்கு செல்வதும்,வேறு வழியில்லாது விபச்சாரத்தில் வீழ்ந்துபோவது,இதன் உச்சகட்ட கொடுமை...

உண்மையில் இந்த ஹிந்துத்துவ வெறியர்கள் நாடுவது இதைத்தான்..அது அவர்களின் முதல் திட்டமான காதல் என்ற வலை சரியாக விரிக்கப்பட்டவுடனே,இத்திட்டத்தின் வெற்றி உறுதியாகிவிடுகிறது.

சமீபத்தில் எனக்கு தெரிந்த வட்டாரத்திலே, குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக மிஸ்ட்கால் வருவதும் ராங் நம்பர் போன்கள் வருவதும் தொடர் கதையாகியுள்ளது.ஆண்கள் எவரேனும் எடுத்தால் தொடர்பு துண்டிக்கப்படுவதும், பெண்கள் எடுத்தால் பேச்சு கொடுப்பதுமான வலைவிரிப்புகள் நடந்து வருவது நிதர்சனம்,இதில் குறிப்பாக திருமணம் ஆகி கணவன் வெளிநாடுகளில் இருக்க,ஊரில் இருக்கும் பெண்கள் மீது அதிக முயற்சிகள் நடக்கிறது.இதில் இவர்களது பேச்சுக்கு பெண்கள் பதில் தருவதே,இவர்களின் வெற்றிக்கும்,பெண்களின் தோல்விக்கும் வழிவகுக்கிறது.இராமநாதபுர மாவட்டத்தில் இப்படி ஒரு பெண்,கணவன் வெளிநாட்டில் இருக்க,இங்கு இதுபோல ஏற்பட்ட தொடர்பால்,கணவன் வந்தவுடன்,அவனது பணத்தையும் தன் நகைகளையும் தூக்கிக்கொண்டு ஓடிப்போன சம்பவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.விஷயம் தெரிந்து போய் அழைத்ததற்கு அவர் வரமறுத்து,பின்னாலில் அவர் கைவிடப்பட்டு,யாருடைய ஆதரவும் இல்லாது நிர்கதியாகி,பின் விபச்சாரத்தில் வீழ்ந்தது,எத்தனை பேருக்கு தெரியும்??

இவையெல்லாவற்றையும் அப்பட்டமாக மூடி மறைக்க,முஸ்லிம்/கிருஸ்தவ ஆண்கள் ஹிந்து பெண்களை கவர்ந்து செல்வதாகவும்,அது லவ்ஜிஹாத், லவ்குருஸேட் என மதத்திற்கு தகுந்தாற் போல்  பட்டம் கட்டி,நாடு முழுவதிலும் விஷப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இந்த தீவிரவாதிகள்..இது எப்படி என்றால்,திருடியவனே,முந்திக்கொண்டு திருடன் திருடன் என கத்திவிட்டால்,மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு மற்றவனை தேட ஆரம்பித்து விடுவார்களல்லவா?அதைத்தான் இந்த கயவர்கள் நயமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் முதல்தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காணாமல் போன முஸ்லிம் பெண்கள் குறித்த விபரம்,நண்பர் ஒருவர் எனக்கு மெயில் மூலம் அனுப்பியது.எங்கே போனார்கள் இவர்கள்?? நாளை இவர்களின் கதி என்ன?? புஸ்ராவின் கதிதானா?? இதில் எத்துனை பேரின் விஷயம் வெளியில் தெரியும்?இன்னும் பதிவு செய்யப்படாத வழக்குகள் எத்துனை??ஓடிப்போன விஷயம் தெரிந்து வழக்கு பதியாது கூனிகுறுகி மறைந்து வாழும் குடும்பங்கள் எத்தனை??

 
இது நம்ம தமிழகத்தில் நாகையில் நடந்த கதை!இந்தப் பெண் ஹிந்துவாக மாற்றபட்டு திருமணம் செய்யப்பட்டு இருக்கிறார்.இது இன்னொன்று.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றிமதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.அதில் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் மதமாற்றம்,அதுவும் இளவயதுடைய கல்லூரிப் பெண்களின் பெயர்கள் அதிகமாக இருக்கிறது.அதில் அவர்களது கணவர் பெயர் ஹிந்துவாக இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் காதல்வலையில் சிக்க வைக்கப்பட்டவர்கள் என்று.

முஸ்லிம் பெண்களே! எச்சரிக்கையாக இருங்கள். முழுமையாக இஸ்லாத்தை கடைப்பிடிப்பதின் மூலம் அல்லாஹ்வின் கயிற்றை வழுவாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்,வழிதவறமாட்டீர்கள்..இதை நான் சொல்லவில்லை,அல்லாஹ் சொல்கிறான்.

பெண்களே நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் அன்னியருடன் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்..ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் ஆசை கொள்வான் - அல்குர்ஆன் 33:32

முஃமீனான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளட்டும் தங்கள் வெட்க தலங்களை பேணிக்காத்துக் கொள்ளட்டும். அல்குர் ஆன் 24:31
அல்குர் ஆன் 24:30 - ஆண்களுக்கு!!!

பெண்களே விழிப்புடன் இருங்கள்!! -உங்களை பலிகொடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது...எச்சரிக்கை!!! 

இவ்வளவும் படிச்சுட்டு என்னடா நீங்க மட்டும் ஒழுங்கா?? நீங்களும் மதமாற்றம் செய்தானே செய்றீங்கன்னு கேக்குறவங்க,தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கத் தவற வேண்டாம்..

அன்புடன்
ரஜின்

37 கருத்துகள் :

 1. பெயரில்லா24/8/11 10:21 முற்பகல்

  ஐயா உங்க தாடி சுன்னி தாடியா ஷியா தாடியா?

  பதிலளிநீக்கு
 2. @பெயரில்லா
  என் தாடி என்னவாக வேண்டுமாக இருக்கட்டும்..பெயரை சேலைக்குள் மறைத்துக்கொண்டு வந்து ஒரு வரி எழுதிவிட்டு ஓடிவிட்டீர்களே!..உங்கள் குடுமி எந்த ரகம்??

  பதிலளிநீக்கு
 3. இதே குற்றச்சாட்டை இந்துக்களும் சொல்லுறாங்களே நிஜமா

  பதிலளிநீக்கு
 4. உங்களூக்கு அபார கற்பனை வளம்

  பதிலளிநீக்கு
 5. @ jaisankar jaganathan

  யார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம்.ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுலல்லவா?
  நான் இங்கு பதிந்தவை அனைத்தும் நடந்து முடிந்த சம்வங்கள்.யாரும் மறுக்க முடியாது,ஆனால் முஸ்லிம்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் ஹிந்துக்கள் அல்ல ஹிந்துதுவாக்களால் வைக்கப்படுகிறது..அதனை ஹிந்துக்களுடையது என புரிந்து கொள்வது தவறு...ஒருவேளை..அவ்வாறு புரியவைக்கும் முயற்சிதான் இந்த கேள்வி என்றும் உணர முடிகிறது..

  எல்லாவற்றிற்கும் மேலாக..ஒரு கேள்விக்கு இன்னொரு கேவி பதிலாகாது..அது பசப்பலாகத்
  தான் இருக்கும்..பதிவுக்கு பதில் சொல்ல வார்த்தை இல்லாவிட்டாலும்,கேள்வி கேட்டு சமாளிக்க கற்றுவைத்து இருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 6. கண்ணா உன் பதில் தப்பு. கத்தி முனையில் மத மாற்றம் இஸ்லாமில் மட்டுமே நடந்தது

  பதிலளிநீக்கு
 7. மதம் பிடித்து விட்டாலே சிக்கல் தான். மதத்தை தாண்டி மனித நேயத்தை பரப்புவதே மானிடம் செழிக்க ஒரே வழி.

  பதிலளிநீக்கு
 8. @jaisankar jaganathan
  //கண்ணா உன் பதில் தப்பு. கத்தி முனையில் மத மாற்றம் இஸ்லாமில் மட்டுமே நடந்தது//

  இஸ்லாத்தில் மதமாற்றம் குறித்த விரிவான கட்டுரையின் சுட்டியை நான் பதிவின் இறுதியில் விட்டுவந்தது..இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவே!

  //உங்களூக்கு அபார கற்பனை வளம்//
  கர்நாடக சம்பவம்,பேப்பர் கட்டிங்ஸ்,படங்கள் எல்லாம் என் கற்பனையெ சொல்வது,உங்களது உச்சகட்ட யூகம்.

  உங்களது யூகங்களுக்கு பதில் சொல்லனும்னு நினைத்தால் நான் பொருப்பல்ல..பதிவு ஆதரங்களுடன் தன்னிலை விளக்கி நிற்கிறது..உங்களால் கிட்ட நெருங்க முடியாவிட்டாலும் எட்ட நின்று கூச்சல் போட நல்லாவே பழக்கப்பட்டு இருக்கிறீர்கள்..

  உங்களவர்களது இஸ்லாம் குறித்த அவதூறு ”கற்பனை”பதிவுகளுக்கு என்னால் வரிக்கு வரி முரண்பட முடியும்.ஆதாரத்துடன்..குற்றச்சாட்டை மறுக்கும் நீங்கள்,அதற்கு ”முறையாக”பதில் சொல்லவும் தார்மீக பொருப்புடையவராகிரீர்,,

  அதை செய்யலாமே,முடிந்தால்!

  இல்லை,கற்பனை என முடிவு செய்துவிட்டால்,இப்படி பின்னூட்டம் போட்டு உங்களது பொன்னான நேரத்தை விரயம் செய்யாமலாவது இருக்கலாமல்லவா???

  உங்களைப் போல்(மொக்கையாக) நான் எங்கும் இப்படி விவாதித்ததில்லை..உருப்படியான விவாதத்திற்கு பதில் தருவதே எனக்கும் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாக படுகிறது..அதுவல்லாது குப்பை போல பின்னூட்டங்களை பதிவில் குவிக்க எனக்கு விருப்பம் இல்லை...புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்..

  பதிலளிநீக்கு
 9. @R.Puratchimani

  //மதம் பிடித்து விட்டாலே சிக்கல் தான். மதத்தை தாண்டி மனித நேயத்தை பரப்புவதே மானிடம் செழிக்க ஒரே வழி.//

  சகோ புரட்சிமணி,தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
  உண்மையான வார்த்தைகள்..மனிதநேயம் பரப்ப உங்களுடன் நானும் கைகோர்க்கிறேன் சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. மறைமுகமா என்னை பின்னூட்டம் போட வேண்டாம்னு சொல்லிட்டீங்க.(ஆனா இனி நான் அடிக்கடி பின்னூட்டம் போடுவேன்)

  மதனோட வந்தார்கள் வென்றார்கள் படிச்சு பாருங்க. முஸ்லீம் அராஜகம் புரியும்

  பதிலளிநீக்கு
 11. @jaisankar jaganathan
  //கத்தி முனையில் மத மாற்றம் இஸ்லாமில் மட்டுமே நடந்தது //

  Click and read.

  >>> இஸ்லாம் வாள் முனையாலும் வன்முறையாலும் பரப்பபபட்டு வளர்ந்ததா? <<<
  ***********
  அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,

  வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.

  – டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
  ************
  அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா

  சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

  இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.

  பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

  இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

  இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.

  “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.

  தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன
  ***********

  காந்திஜி கண்ட இஸ்லாம்

  இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது.

  இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.
  ************

  சுஜாதாவின் பார்வையில்

  திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.

  பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.

  திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”

  - சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)

  நன்றி: திரு.ரவிபிரகாஷ்

  பதிலளிநீக்கு
 12. //மறைமுகமா என்னை பின்னூட்டம் போட வேண்டாம்னு சொல்லிட்டீங்க.//
  அப்படியும் இருக்கலாம்..

  //(ஆனா இனி நான் அடிக்கடி பின்னூட்டம் போடுவேன்)//
  பிரச்சனை இல்லை அர்த்தமுள்ளதாக எழுதுங்கள்...

  //மதனோட வந்தார்கள் வென்றார்கள் படிச்சு பாருங்க. முஸ்லீம் அராஜகம் புரியும்//

  நான் அத படிச்சதில்லை.முஸ்லிம் மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு இஸ்லாம் காரணம் என சொல்கிறீர்களா?

  இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்..நாங்கள் முஸ்லிம் மன்னர்களை பின்பற்றி முஸ்லிமானவர்கள் அல்ல..இஸ்லாம் என்ன சொல்கிறதோ அதை பார்த்துதான்..போர போக்க பாத்தா நாளைக்கு நான் ஏதாவது தவறு செய்தாலும் அதற்கும் இஸ்லாம் குற்றம் பிடிக்கப்படும் போல...
  அப்போ பாபர் மசூதி இடிப்புக்கும்,குஜராத் இன அழிப்புக்கும்,ராமரும்,கிருஷ்னரும் அவர்களது போதனைகளும் ஹிந்து வேதங்களின் கற்பிப்பும்தான் காரணம் என சொல்வீர்களா??

  உங்கள் கேள்விக்கு வாஞ்சூர் அப்பா அவர்கள் பதிந்துள்ள பின்னூட்டம் போதுமான பதிலாக இருக்கும் என நம்புகிறேன்..

  பதிவில் முரண்பட்டு பின்னூட்டம் போடுங்கள்..வரவேற்கிறேன்..இனி இது போன்ற அர்த்தமில்லாத பின்னூட்டங்கள் பதிலளிக்கப்பட மாட்டாது..சும்மா ஹிட்ஸ்க்காக இந்த தளம் இயங்கவில்லை...

  பதிலளிநீக்கு
 13. மதிப்பிற்குரிய வாஞ்சூர் அப்பா அவர்களே!
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும்,விளக்கங்களுக்கும் நன்றி..

  அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய போதுமானவன்

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 14. @periyar:
  உங்களது அனாவசியமான,அநாகரீகமான,பதிவுக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத,மொக்கைத்தனமான பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

  எதற்கு பெரியார் போர்வையெல்லாம்..உங்களை யாரென தெரிந்துகொள்ள முடிகிறது,கிளம்புங்கள்..காற்று வரட்டும்..

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா25/8/11 9:47 முற்பகல்

  திரு மலர்மன்னன் அவர்களுக்குத் தமிழ்ஹிந்து.காமிலேயே பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

  அவர்கள் இன்னொன்றும் அக்கட்டுரையில் சொல்கிறார்கள். முகமதியரையும் கிருத்துவரையும் மதமாற்றம் பண்ணுவதற்கு அவர்களின் சமூகப்பிரச்சினைகளப்பற்றி பேசி அவர்களின் நம்பிக்கையைப்பெறவேண்டும். இப்படி அவர்கள் மதிமயங்கும்போது லபக்கெனப்பிடித்து ஒரு இந்து மடத்திற்கு கொண்டுபோய் ஒரு சில சுலோகங்களைச் சொல்லச்செய்து இந்துவாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் திரு மலர்மன்னன் அவர்களின் ஐடியா. இந்துசமயக்கருத்துக்கள் மீது திரு மலர்மன்னன் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே அவற்றை மற்றவர்களுக்குச்சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களிடம் சமூகப்பிரச்சினைகளப்பற்றிப்பேசினால் கேட்டுக்கொள்வார்கள் என்கிறார். தன் மதத்திலும் தன் மதக்கொள்கைகளையும் நம்பிக்கையே இல்லாமல் பிறமதங்களை இகழ்ந்தால் அம்மக்கள் இவர்கள் மதத்திற்கு ஓடி வந்து விடுவார்கள் என்று நம்புகிறார் திரு மலர்மன்னன் அவர்கள்.

  நீங்கள் எழுதிய வண்ணம், கிருத்துவமிசுனோர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் இந்து மதமாற்றிகளும் செய்யவேண்டும் என்கிறார்.

  அதே வேளையில் தமிழ்ஹிந்து.காம், கிருத்துவ மிசுனோரிகளின் மதமாற்ற வழிகளை பகடி செய்து நாளுக்கு நாள் கட்டுரைகளப்போட்டு வருகிறது. அங்கு எழுதுபவர்களெல்லாம் சமசுகிருதத்தில் புரளுகிறார்கள். சாதாரண உரையாடலில்கூட அம்மொழிச் சொற்கள் பிரவாகம்தான் அத்தளத்தில். 'பதில்' என்று சொல்லமாட்டார்கள். 'உத்திரமாம்!, ஆனால் தளத்தின் பெயரோ தமிழ்ஹிந்து.

  பிறமதங்களின் மீது அம்மதங்களின் தலைவர்களின் மீதும் நாக்கூசும் சொற்களில் வெறுப்பை உமிழ்ந்தால் தம் மதம் செழித்துவிடும் என்று கனவு காண்கிறார்கள் இவர்கள்.

  பதிலளிநீக்கு
 16. இந்த புகைபடங்கள் அடங்கிய மெயில் எனக்கு வந்தது... படிக்கவே கஷ்ட்டமாயிருந்துச்சு :-(

  //பெண்களே விழிப்புடன் இருங்கள்!! -உங்களை பலிகொடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது...எச்சரிக்கை!!! //

  பதிலளிநீக்கு
 17. @அனானி சகோ.
  தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

  தங்களின் ஒவ்வொரு வரியிலும் உடன்படுகிறேன்..தமிழ்ஹிந்து தளத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள்..

  தொடர்ந்து வாருங்கள், பெயருடன் வரலாமே!

  //பிறமதங்களின் மீது அம்மதங்களின் தலைவர்களின் மீதும் நாக்கூசும் சொற்களில் வெறுப்பை உமிழ்ந்தால் தம் மதம் செழித்துவிடும் என்று கனவு காண்கிறார்கள் இவர்கள்.//

  தமது வாய்களாலே அல்லாஹ்வின் ஒளியை இவர்கள் ஊதி அனைத்துவிட எண்ணுகிறார்கள்..அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டவில்லையா??

  இதெல்லாம் நடக்கிற காரியமா??

  நாம் யாரையும் திட்டவில்லை...திட்டுவதற்கு அனுமதியும் இல்லை..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 18. ஸலாம் சகோ ஆமினா,

  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி...

  தங்களை சார்ந்தவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இந்த அபாயத்தை எத்திவைக்க மறக்காதீர்கள்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 19. பெயரில்லா27/8/11 1:47 முற்பகல்

  //அங்கு எழுதுபவர்களெல்லாம் சமசுகிருதத்தில் புரளுகிறார்கள். சாதாரண உரையாடலில்கூட அம்மொழிச் சொற்கள் பிரவாகம்தான் அத்தளத்தில். 'பதில்' என்று சொல்லமாட்டார்கள். 'உத்திரமாம்! ஆனால் தளத்தின் பெயரோ தமிழ்ஹிந்து.//

  @பெயரில்லா, நீங்கள் மட்டும் என்னவாம்? உங்கள் சொந்த பெயரையே அரபு பாசையில் வைத்துள்ளீர்கள்! வணக்கம் சொல்வதோ அரபில் மட்டும்.
  தமிழ்ஹிந்து வணக்கம் சொல்வதோ தனது தமிழ் மொழி. தமிழ் பெயரையே பலர் தங்களுக்கு வைத்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லாவின்
  //நீங்கள் மட்டும் என்னவாம்? உங்கள் சொந்த பெயரையே அரபு பாசையில் வைத்துள்ளீர்கள்! வணக்கம் சொல்வதோ அரபில் மட்டும்.
  தமிழ்ஹிந்து வணக்கம் சொல்வதோ தனது தமிழ் மொழி. தமிழ் பெயரையே பலர் தங்களுக்கு வைத்துள்ளனர்.\\ இந்த கருத்துக்கு என்ன பதில். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அரபி மொழிய கொண்ட்டாடுறீங்களே. அதுக்கு என்ன அர்த்தம்

  பதிலளிநீக்கு
 21. @பெயரில்லா:
  உங்களை போல ஒரு அனானி வந்து ஒரு தளத்தை விமர்சித்ததர்க்கு,நீங்கள் முஸ்லிம்களை விமர்சிக்கிறீர்கள்..கட்டுரை குறித்து கேள்வி எழுப்புங்கள் என்னிடம் பதில் உண்டு..உங்கள் கேள்விக்கு அதே அனானி பதில் சொன்னால் பெற்றுக்கொள்ளுங்கள்...

  @jaga:
  சொந்த புத்தி இல்லாம,அவன் சொன்னது,இவன் சொன்னதைல்லா வச்சு வெட்டி மொக்க போடாதீர்.
  ateast சொல்புத்தியாவது உங்களுக்கு இருக்கும் என தவறாக நினைத்துவிட்டேன்...

  எங்காவது குடிமி சண்டை நடக்கும் மடத்தில் இடம் தேடவும்..இது உங்களுக்கான தளம் அல்ல..

  பதிலளிநீக்கு
 22. நன்பரே ,
  இந்துவாக மாறுங்கள். இனிய வாழ்க்கை உங்களுடையதாக அமையும்

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா27/8/11 8:04 பிற்பகல்

  பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் தான் கவனித்து வளர்க்க வேண்டும். சில ஓனாஈகள் நமது பெண்களை சீரளிக்க காத்திருக்கின்றனர். இந்த ஓனாஈகளின் சூல்சியினை நாம் தான் முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.

  செய்யது

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா28/8/11 3:14 முற்பகல்

  //உங்கள் கேள்விக்கு அதே அனானி பதில் சொன்னால் பெற்றுக்கொள்ளுங்கள்.//
  திரு ராஜின் அப்துல் ரஹ்மான்,
  நான் உங்களிடம் பதில் கேட்கவில்லையே!
  இந்துவை தாக்கி எழுதியதிற்காக ஒரு அனானி தங்களுக்கு அனானி சகோதரன் ஆகிவிட்டார். நான் இஸ்லாம் மதத்தை சேராதவன் என்றபடியால் பெயரில்லா ஆகிவிட்டேன்.
  நீங்களும் தமிழர் நானும் தமிழர். இருவரிடையே உள்ள வித்தியாசம் மதம் காரணமாக ஆயிரகணக்கான மயில்களுக்கப்பால் உள்ள நாட்டின் மொழியில் நீங்கள் பெயர் வைத்துள்ளீர்கள். நான் எனது தாய் மொழியில் பெயர் வைத்துள்ளேன்.
  சகோ.ஜெய்சங்கர் ஜெகநாதன் மீதும் ஆத்திரபட்டுள்ளீர்கள்.அன்பு மார்க்கமான இஸ்லாம் மதத்தை பற்றிய மேலதிக புரிதலுக்கு உதவியதிற்க்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. @jega
  //இந்துவாக மாறுங்கள்//
  உங்கள் அழைப்புக்கு நன்றி.

  @செய்யது.
  //சில ஓனாஈகள் நமது பெண்களை சீரளிக்க காத்திருக்கின்றனர். இந்த ஓனாஈகளின் சூல்சியினை நாம் தான் முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.//

  சகோ செய்யது,
  உண்மைதான்..பெற்றோர்களின் பொறுப்பு இதில் மிக மிக அதிகம்.உங்களை சார்ந்தவர்களுக்கு,பெண்களுக்கு இந்த ஆபத்தை விளக்கி சொல்லுங்கள்..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 26. @அனானி,
  //இந்துவை தாக்கி எழுதியதிற்காக ஒரு அனானி தங்களுக்கு அனானி சகோதரன் ஆகிவிட்டார்//
  முற்றிலும் தவறான புரிதல்..சகோ.பதிவு குறித்து விவாதிக்காமல் சம்பந்தமில்லாத கருத்துக்களை இடுவதால் வந்த எரிச்சல்தான் இதர்க்க காரணம்..எனது முந்தைய பதில்களில் வேறு பதிவுகளில் பார்க்கலாம்.மாற்றுமதத்தவரை சகோதரராகவே அழைப்பது எனது வழக்கம்.
  //நீங்களும் தமிழர் நானும் தமிழர்.//
  மாற்று கருத்து இல்லை..
  //இருவரிடையே உள்ள வித்தியாசம் மதம் காரணமாக ஆயிரகணக்கான மயில்களுக்கப்பால் உள்ள நாட்டின் மொழியில் நீங்கள் பெயர் வைத்துள்ளீர்கள். நான் எனது தாய் மொழியில் பெயர் வைத்துள்ளேன்.//

  அப்படி இல்லை சகோ,நான் வணங்கும் இறைவனுக்கு நான் அடிமை.எனது பெயரின் பொருளோ,மாண்புமிகு அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்..இதை அப்படியே தமிழில் வைக்க முடியாதல்லவா?

  அதுமட்டுமல்லாது முகம்மத்,அஹமட்,அபுபக்கர்,போன்றவை எம்மை இஸ்லாத்தில் வழி நடத்தியோரின் பிரியத்தின் பால் வைத்துக்கொள்ளும் பெயர்கள்..இதில் மொழி என்பது எங்கும் பிரதான படுவதில்லை..

  ஹிந்துக்கள் அனைவரும் தாய்மொழியில் பெயர் வைப்பதில்லை சகோ..மேலும் பெயர் என்பது கையெழுத்து போல அடையாளம்..அது எம்மொழியானால் என்ன??

  //சகோ.ஜெய்சங்கர் ஜெகநாதன் மீதும் ஆத்திரபட்டுள்ளீர்கள்.//

  அவருக்கும் எனக்குமென்ன வாய்கால் தகறாரா?,அவர் குதர்க்கமாக,திசைதிருப்பும் வண்ணம் வேதன்டாவாத குப்பைகளை கொட்டுகிறார்..பதிவு குறித்து பேச அறிவுறுத்தியும் ஏறவில்லை..நான் என்ன செய்ய???

  //அன்பு மார்க்கமான இஸ்லாம் மதத்தை பற்றிய மேலதிக புரிதலுக்கு உதவியதிற்க்கு நன்றி//

  தனிமனித செயல்பாடுகளை அளவுகோலாக்கி இஸ்லாத்தை அளவிட்டு புரிந்து கொள்ளும் உங்கள் புரிதல் வியக்க வைக்கிறது..நன்றி..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 27. //jaisankar jaganathan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்...":

  நன்பரே புத்தகத்தில் எல்லா நல்ல கருத்தும் இருக்கலாம். ஆனா அதை கடைபிடிக்கிறவரோட நேர்மை தான் அளவுகோல்.

  வெளியிடு
  நீக்கு
  ஸ்பேம் என குறி//
  ---------------------------------------------
  அப்படியா??? சரி...உங்களுடைய அளவுகோலை கொண்டு உங்களை அளக்கிறேன்,
  ஹிந்து மத வேதங்கள் புலால் உண்ணக்கூடாதுன்னு சொல்லுதாம்.ஆனா காசில,மனித கறியை விரும்பி உண்ணும் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்..இன்னும் கஞ்சா வேறு இழுக்கிறார்கள்..
  அப்போ இங்க ஜகனாதனும் ஹிந்து அப்டீங்கிரதால வேதாத்த தூக்கி மூலைல வச்சுட்டு, ஜெகநாதன் முதல்கொண்டு ஹிந்துக்கள்(மற்றவர்கள் தவறாக நினைக்க வேண்டாம்) அனைவரும் மனிதக்கறி பிரியமாக உண்பவர்கள்,கஞ்சா அடிப்பவர்கள் என முடிவேடுத்துவிடலாமா??...(இவங்களுக்கு மனிதக்கறி எங்க கிடைக்கும்ன்னுளா கேக்ககூடாது.குஜராத்'ல இருந்து மோடி அனுப்புவார்.)
  உங்களுடைய முட்டாள்தனமான அளவுகோல் கொடுக்கும் கோணலான அளவீடு எப்படி இருக்கிறது என்பதை விளங்க முடிகிறதா?

  எப்பா...முடியல ஜகா...உங்க சிந்தனை வறட்சி ..கண்ணா கட்டுது...
  இதுக்கு மேலையும் நா உங்க கமேண்ட அனுமதிச்சு..அதுக்கு பதில் சொல்லி..என்னையும் என் தளத்தையும் கேவலப்படுத்திக்க விரும்பல...

  பதிலளிநீக்கு
 28. பெயரில்லா28/8/11 1:38 பிற்பகல்

  tamil peyar entru sollum neengal sollum peyar tamila jayasankar jehanathan tamil peyara?

  பதிலளிநீக்கு
 29. பெயரில்லா28/8/11 1:43 பிற்பகல்

  islam vaalaal parappa pattathu entral intru mulimaka matham marupavarkal epdi maarukirarkal

  பதிலளிநீக்கு
 30. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  இப்பதான் பிளாக் பக்கம் வந்தேன் சகோ.அருமையான பதிவு .
  மௌலவி சம்சுதீன் காசிமி அவர்களும், பயானில் இதைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார்கள்.அவர்களுக்கு அல்லாஹ்
  நற்கூலியை வழங்கட்டும் ! ஆமீன்..

  முஸ்லிம் பெண்ணை குறிவைத்து சதி செய்கிறார்கள். வசதியான
  குடும்பத்தை சேர்ந்த பெண்,இந்த கயவர்களின் காதல் வலையில் விழுந்து,
  ஏமாற்ற பட்டு , பாம்பேயில் விற்கப்பட்டால்.... ஒரே பெண்ணை பெற்ற பாவத்திற்காக பெற்றவர்கள் தற்கொலை பண்ணிகொன்றார்கள்.

  //"ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு"//

  இந்த கொடும்பாவிக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக !

  //பெண்களே நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் அன்னியருடன் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்..ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் ஆசை கொள்வான் - அல்குர்ஆன் 33:32

  முஃமீனான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளட்டும் தங்கள் வெட்க தலங்களை பேணிக்காத்துக் கொள்ளட்டும். அல்குர் ஆன் 24:31

  அல்குர் ஆன் 24:30 - ஆண்களுக்கு!!!
  பெண்களே விழிப்புடன் இருங்கள்!! -உங்களை பலிகொடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது...எச்சரிக்கை!!!//

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக !ஆமீன்.

  பதிலளிநீக்கு
 31. பெயரில்லா சகோதரர்கள் அனைவரும் பெயரோடு வரலாமெ...

  வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி...
  -----------------------------------------
  வ அலைக்கும் ஸலாம் சகோ..
  இயன்ற வரை தங்கள் சுற்ற நட்புக்கு,,இந்த ஆபத்தை எத்திவைத்து அவர்களை எச்சரிக்கையுடன் இருக்க செய்யுங்கள்...

  உங்கள் துஆவில் அல்லாஹ் அபிவிருத்தி செய்ய போதுமானவன்..ஆமீன்

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 32. மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு வருவது இங்கு தான் இப்படி பரபரப்பாக பேசப்படுகிறது. வெளிநாடுகளில் முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இஸ்லாத்திற்கு சர்வசாதாரணமாக மாறுகிறார்கள்,.UAE யில் மட்டும் கடந்த மாதம் ரமலானை முன்னிட்டு 1000 த்திற்கும் மேலானோர் இஸ்லாத்திற்கு இணைந்த செய்தியைப் படித்தேன்.

  புஷ்ரா மற்றும் காணாமல் போன முஸ்லிம் பெண்கள் பற்றிய மெயிலை நானும் பார்த்தேன். நாட்டில் என்ன தான் நடக்கிறதோ தெரியவில்லை. இறைவனுக்குத்தான் வெளிச்சம். பைரோஸ்களின் எதிர்காலம் எப்படியோ...??? :-(

  அனானிகளுக்கு உங்கள் பதில் நல்ல விளக்கத்துடன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் தர்க்கம் புரிகிறவர்களான இவர்கள் முன் திரை உள்ளதால் நீங்கள் என்ன சொன்னாலும் புரியாது. வருத்தத்திற்குரியது.

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 33. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ,

  //மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு வருவது இங்கு தான் இப்படி பரபரப்பாக பேசப்படுகிறது.//
  இது மத அரசியல் நடக்கும் நாடல்லவா அதான் இப்படி...

  //வெளிநாடுகளில் முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இஸ்லாத்திற்கு சர்வசாதாரணமாக மாறுகிறார்கள்,.UAE யில் மட்டும் கடந்த மாதம் ரமலானை முன்னிட்டு 1000 த்திற்கும் மேலானோர் இஸ்லாத்திற்கு இணைந்த செய்தியைப் படித்தேன். //

  உண்மைதான் சகோ..குறிப்பாக அமேரிக்கா,இங்கிலாந்து,நாட்டில் அதிக பேர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்..அது அரசியலாகப்படுவதில்லை..மேலும் அங்கும் இதற்கு எதிர்ப்பு உண்டு..ஆனால் இங்குள்ள கேவலம் அங்கு இல்லை...

  //புஷ்ரா மற்றும் காணாமல் போன முஸ்லிம் பெண்கள் பற்றிய மெயிலை நானும் பார்த்தேன். நாட்டில் என்ன தான் நடக்கிறதோ தெரியவில்லை. இறைவனுக்குத்தான் வெளிச்சம். பைரோஸ்களின் எதிர்காலம் எப்படியோ...??? :-( //

  அவர்களின் நேர்வழிக்கு துஆ செய்வோம்..அல்லாஹ் போதுமானவன்.
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 34. theeviravaatha islam olinthaal ulagam uruppadum. Nanri.

  பதிலளிநீக்கு
 35. Eventhough I am Hindu, I dont like RSS and many Hindutva organizations.I like Islam much.

  பதிலளிநீக்கு
 36. அருமையான பதிவு அன்பரே!

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்