செவ்வாய், ஜனவரி 25, 2011

இஸ்லாம் - கட்டாய மதமாற்றம்


மதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.

இதன் மூலம் மதம் என்பது மனம் சார்ந்த ஒன்று என்பது தெளிவு.இந்த பதிவானது மதம் என்ற தலைப்பில் மனங்களை அலசுவதால்,இது மதம் சார்ந்த பதிவென்பதை விட,மனம் சார்ந்த பதிவாகக் கொள்ளலாம்.


மதம்:மனித வாழ்கையில் மதம் என்பது பிரிக்கவியலாத காரணியாகும்.அது மனித வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை வகுத்து,நன்மை தீமையை பகுத்து ,அவனது வாழ்வை சீர் செய்துகொள்ள பயன்படுகிறது.

மதம் என்ற ஒன்றை பயன்படுத்தாது,தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் உலகில் இல்லாமல் இல்லை.அவர்கள் நாத்தீகர்கள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்போர்.அவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் வெகு சொற்பமேயாகையாலும்,நாத்தீகம் இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல என்பதாலும்,உலகின் பெரும்பான்மை மக்களின் மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மதம் மற்றும்,மதமாற்றம் சார்ந்த விடயங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.


இன்று உலகின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதங்களை பார்க்கின்,குறிப்பாக ஹிந்துமதம் பலதெய்வ வழிபாடும்,கிருஸ்தவ மதம் மூன்று தெய்வ வழிபாடும்,இஸ்லாம் ஒரு தெய்வ வழிபாடும் கொண்டது.

மதம் என்பது கடவுள் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப் படுகிறது.அந்தந்த மதம் சார்ந்த மக்கள்,தாங்கள் வழிபடும் கடவு(ள்க)ளின் மீது நம்பிக்கை கொண்டு,அந்த கோட்பாடுகளின் படி தங்களது வாழ்க்கையை செழுத்த முயல்கின்றனர்.


மதமாற்றம்: மதம் என்பது நாம் முன்னரே சொன்னது போல் மனம் சார்ந்த ஒன்றாவதால்,மதமாற்றம் என்ற வார்த்தை,பொருத்தமான ஒன்றாக இல்லை.மாறாக மனமாற்றம் என்ற பதமே பொருத்தமானது.மேலும் உண்மையான மதமாற்றம் என்பது மனமாற்றமே.


 இஸ்லாம் - முந்தைய காலங்களில் அதன் கொள்கைகளால் கவரப்பட,உலகில் வியாபித்தது ஒரு புறம் இருந்தாலும்,தற்காலங்களில் இஸ்லாம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களாலும்,சர்ச்சைக்குரிய கேள்விகளாலும்,இஸ்லாம் புதிய பரிமாணத்தில் வளர்கிறது என்றால் மிகையல்ல.

அதெப்படி,எதிர்மறையான விமர்சனங்கள் வளர்ச்சிக்கு உதவிடமுடியும்?..என்றால்,-முடியும்.எதிர்மறையான கேள்விகளுக்கு, முறையான பதில்களாலும்,தெளிவான விளக்கங்களாலும்,அதன் உண்மைநிலையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட, இந்த வளர்ச்சி சாத்தியப்படுகிறது.

சரி தலைப்புக்கு வருவோம்.இஸ்லாம்,என்ற உடனேயே மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் "வாளால் பரப்பப்பட்ட மதம்".என்ற ஒரு கருத்து வேரூன்றி இருப்பது உண்மை.இது சாத்தியமா?வன்முறை கொண்டு உலகில் கட்டமைக்கப்பட்ட எந்த ராஜ்ஜியமும் வீழ்ச்சியை சந்திக்காமல் இருந்ததில்லை என்பதை வரலாற்றின் பக்கங்கள் பதியாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாது மதம் என்பது மனிதன் மனங்கொண்டால் மட்டுமே முதலில் அவனைக் கடக்க ,பின் வளர,பரவ சாத்தியப்படும்.இது குறித்து அனைவரும் கருத்து தெரிவித்திருக்க,பேசுபொருளான இஸ்லாம் இது குறித்து என்ன சொல்கிறது,என்பதை பார்ப்போம்.....

கட்டாய மதமாற்றம் என்ற சொல்லாடல்,மிக நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது.கட்டாய மதமாற்றம் என்பது எப்படி இருக்க முடியும்?

அனைத்திற்கும் மேலாக இப்படி ஒரு மதமாற்றம்,யாருக்கு எப்பயனை அளிக்கிறது.மதம் மாற்றுபவருக்கும் சரி.மதம் மாற்றப்படுபவருக்கும் சரி,எள்ளின் முனையளவும் இதில் பயன் இல்லை.ஒருவேலை பணத்திற்காக மதம் மாற்றும்,அல்லது மதம் மாறும் மா'க்களுக்கு,அந்த பணம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இங்கு மதம் மனம் சார்ந்த ஒன்றாவதால்,மதத்தை பணம் சார்ந்த ஒன்றாக பாவிப்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியமற்றது.ஏனெனில் அவர்களுக்கு வாய்த்த மதமும்,அவர்கள் வந்த மதமும் பொருளற்ற,மற்றும் பொருள் சார்ந்த ஒன்றே.

முஸ்லீம்கள் இஸ்லாத்தை,உலகமக்களுக்கு அறிமுகப்படுத்த,அவர்களை இஸ்லாத்தின்பால் அழைக்க பணிக்கிறது.ஆனால் ஒரு முஸ்லிம் எந்த எல்லை வரை இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைக்கமுடியும் என்பதற்கான வரைமுறைகள் உண்டு.

கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.அதனால் எப்பயனும் இல்லை என்பது கண்கூடு.இஸ்லாத்தை பொருத்தவரை ஒருவர் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஏற்காதவரை அவர் பிறவி முஸ்லீமாக இருந்தாலுமே,அவர் முஸ்லிம் அல்ல.பெயரளவிலான முஸ்லிமை,முனாஃபிக் (நயவஞ்சகன்) என இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.அதாவது உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல்,உதட்டளவில் முஸ்லிமாக இருப்பவனை இஸ்லாம் இங்ஙனம் சாடுகிறது.அதுமட்டுமல்லாது,இறைவனாலும் இவர்கள் வெறுக்கப்பட்டவர்கள்.

கட்டாய மதமாற்றம் மூலம் வருபவர்கள் இப்படிப்பட்டவர்களே.இவர்களை இழுத்துவருவதால், கொண்டுவந்தவனுக்கு,இவ்வுலகிலும் பயனில்லை,மறுமையிலும் பயனில்லை.மேலும் இவர்களால் இஸ்லாத்திற்கு ஆபத்தே தவிர நன்மை இல்லை.இவர்கள் குறித்த நேரத்தில்,காலை வாரி,மதம் மாற்றியவனை குழியில் தள்ளிவிடுவார்கள்.அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை.தன்னை கட்டுக்குள் வைக்க முயலும் ஒருவனை யாரும் சமயம் பார்த்து அழிக்கவே முயல்வர்.


மனிதர்கள் யாவரும் முஃமீன்களாக (நம்பிக்கை கொண்டோராக)ஆகிவிடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்த முடியுமா? அல்குர்ஆன் - 10 : 99. என அல்லாஹ் நபியை பார்த்து கேட்கிறான்.மேலும் நபியே நீர் கூறுவீராக!நான் (உங்களை கட்டாயப்படுத்தி)உங்களின் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன். அல்குர்ஆன் - 10 : 108 
எனவாரான மேற்கண்ட வசனங்கள் மூலம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாமிய அணுகுமுறையே அல்ல என்பதை உணரமுடியும்.

இஸ்லாம் அழைப்புப்பணி செய்ய சில அழகிய வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு அளிக்கிறது.அவ்வழிமுறையை பின்பற்றி ,ஒவ்வொரு முஸ்லிமும் மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்திவைக்கும் கடமையை கொண்டுள்ளார்.

அதன் எல்லை எதுவரை எனில்,இஸ்லாம் குறித்து விளக்கி,அதில் ஏற்படும்,சந்தேகங்களை கலைந்து அவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு கடமையாகிறது.அத்துடன் அவரது பணி முற்றுப்பெறுகிறது.


(நபியே அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான)ஒரு பொதுவான விஷயத்தின் பக்கம் வாருங்கள் (அதாவது)நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்.அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்.அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்"எனக் கூறும்.(முஃமீன்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் "நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!"என்று நீங்கள் கூறிவிடுங்கள் அல்குர்ஆன் - 3:64, மற்றும் 16:125 ஆகிய குர்ஆன் வசனங்கள் மூலம் மக்களை எங்ஙனம் அழைப்பது,அவர்களுடன் எப்படி அழகிய முறையில் உரையாடுவது,என இறைவேதம் எடுத்தியம்புகிறது.

இதன் பின் அவர் இஸ்லாத்தை ஏற்பது,மறுப்பது குறித்த கவலை அவருக்குறியதல்ல.அவருடைய உள்ளத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் வராததும்,வல்ல இறைவனின் நாட்டம்.

அல்லாஹ் அனுப்பிய இறுதித்தூதர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் அறிவுறுத்துகிறான்.


நபியே ! நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர். அல்குர்ஆன் 6-107

மேலும் உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு (அல்குர்ஆன் 109-6) என அழகிய முன்மாதிரியாக சமூக நல்லிணக்கத்தை கற்றுத்தருகிறது இஸ்லாம்.

வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பி,மக்கள் முஸ்லிம்(முனாஃபிக்)களாவதை இறைவன் விரும்பவில்லை.வாட்களை வீசி முனாஃபிக்களை இஸ்லாத்தின் அங்கத்தினராக்கி இருந்தால்,இன்று இஸ்லாம் என்ற ஒன்று இல்லாமல் போய் இருக்கும்.(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்)

( அல்லாஹ் உள்ளத்தை பார்க்கக் கூடியவனாக இருக்கிறான்)

அப்படி வாள் முனையில் மதம் மாறியவர்கள்,சமயம் கிடைக்கும் போது தனது பழைய மதத்துக்கு போக வெகு நேரம் ஆகாது.எத்துனை தலைமுறையானாலும்,தனது வாரிசுகளுக்கு சொல்லிவிட்டு போக முடியும்.இது நம் மதம் அல்ல,நாம் கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள்.இவர்களை வீழ்த்தி,"தாய்மதம் திரும்புக”என அவர்களை எச்சரித்திட முடியும்.ஒரு தலைமுறை கழிந்தாலும்,மறு தலைமுறை,மதத்தில் இருந்து வெளியேரும்.


மேலும் உலகில் ஏகாதிபத்தியம்,இன,நிற அடக்குமுறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரங்கேறி,பின் அவை வழுவான போராட்டம் மற்றும் புரட்சியின் கரம் கொண்டு,காலாவதியாக்கப்பட்டதை நாம் அறியாமல் இல்லை.இஸ்லாம் இத்தகைய வாள்முனை பரலாக இருந்திருப்பின் உலகில் எங்கேனும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும்,புரட்சிகளும் வெடித்து,அது அந்த அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவந்திருக்குமல்லவா?அவ்வாறான செய்திகளை நமக்கு வரலாறுகள் காணத்தராததில் இருந்தே,வாள் முனை மதமாற்றம் என்பது மத அரசியலின் அற்பமான பிரச்சார யுக்தி என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அப்படி ஒரு நிலை இருந்திருப்பின்,குப்பன்,சுப்பனாக இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்ற எனது முன்னோர்கள்,அவர்களின் அடக்குமுறை உடைந்தபின் மாறி இருப்பார்கள்.இல்லை,இன்று என் கழுத்தில் யாருடைய கத்தி இருக்கிறது,நான் இஸ்லாத்தில் நிலைத்திருக்க.வெளிப்படையாக அகங்காரமாக ஆணவமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேற எனக்கென்ன தடை இருக்கிறது(அது எனக்கு கைசேதமே).இன்றையதினம் இஸ்லாத்தை பொய்ப்பித்து ஒருவன் வெளியேறுவதை விட தலைப்புச்செய்தியாக உலகை கலக்க வேரொன்று தேவை இல்லை.

அப்படி இருக்க நாளுக்கு நாள்,எது என்னை இஸ்லாத்தின் பால் ஈர்த்தவண்ணம் இருக்கிறது.எது என்னை இஸ்லாத்தில் நிலைபெற்றிருக்கச் செய்கிறது??உண்மையான இறைக்கொள்கையும்,தெளிவான வழிகாட்டலும்,நன்மை தீமை பிரித்தறிவித்தலும்,வாழ்வின் அத்துனை சூழலுக்குமான தீர்வுகளும்,இஸ்லாத்தை விட,உலகின் எந்த மதமும் தீர்க்கமாக தருவதற்கில்லை,இனி தரப்போவது இல்லை.இது மட்டுமே நான் இஸ்லாத்தில் நீடிக்கவும்,இன்னும் பலர் இஸ்லாத்தை தழுவிக்கொள்ளவும் ஆதாரமாக நிற்கிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது,வாள் ஏந்திய மன்னர்களால் அல்ல.அவர்களின் நோக்கம் நாடு பிடிப்பதேயொழிய இஸ்லாத்தை பரப்புவதல்ல.இந்தியாவில் இஸ்லாம் பரவியது சூஃபிக்கள் எனப்படும் இஸ்லாமிய ஞானிகளாலும்,வியாபாரிகளாலும் தான்.அவர்களின் இறைக்கொள்கை,மற்றும் அவர்கள் வியாபாரத்தில் காட்டிய நேர்மை,அவர்களது பழக்கங்களால் கவரப்பட்டு,இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களே இந்திய முஸ்லீம்கள்.


அப்படி இஸ்லாத்தை ஏற்றதாலே,இன்றும் அது இந்திய முஸ்லீம்களின் மனங்களையும்,வாழ்வையும் வழிநடத்தும் காரணியாக இருக்கிறது.இன்னும் உலகமக்களின் மனங்களை கவர்ந்து கொண்டே வெற்றிகரமாக வளர்கிறது.


அன்புடன்
ரஜின்29 கருத்துகள் :

 1. சகோ.ரஜின்,
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஒவ்வொரு வார்த்தையையும் பொருக்கி எடுத்து நறுக்கென வரிகளை தேர்ந்து எடுத்து சிறந்த பதிவை கொடுத்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  அந்தக்கால, சில மொக்கை தமிழ் திரைப்படங்களில், கிராமிய நாட்டாமை ஆலமரத்தடி பஞ்சாயத்து, "பெண்ணை கெடுத்தவனுக்கே தாலி கட்ட அதிக உரிமை(?)" என்று தீர்ப்பு கூறி... பெண் கதற கதற கற்பழிப்பு குற்றவாளியையையே தாலி கட்ட சொல்லுமே..!? அதுதான் நியாபகம் வரும்.

  திருமணம் என்பது அகமாற்றத்துக்கு மதிப்பளிக்காமல் புறமாற்றத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இப்படிப்பட்ட மாங்கா மடையர்களின் லூசுத்தனமான பரப்புரைதான் "இஸ்லாம் வாளால் பரப்பட்டது" என்பதும்.

  பதிவு அவர்களுக்கான அறிவுரை. மண்டையில் ஏறினால்... புரிந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 2. ஸலாம் சகோ ஆஷிக்,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  உண்மைதான்,இந்தப்பதிவு,முஸ்லீம்களுக்கானது அல்ல.இது வீண்பரப்புரை செய்பவர்களுக்கும்,அதை நம்பி ஏற்றுக்கொள்ளும்,சாமானியர்களுக்குமானது..

  புரிந்தால் சரிதான்..
  -----------------------------------------------
  சகோ வாஞ்சூரார் அவர்களுக்கு,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,சுட்டிகளுக்கும் நன்றி.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. மாற்று மத சகோதரர்களுக்கு நிச்சயம் இந்த பதிவு ஒரு தெளிவை உண்டாக்கி இருக்கும்....நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. //அப்படி இஸ்லாத்தை ஏற்றதாலே,இன்றும் அது இந்திய முஸ்லீம்களின் மனங்களையும்,வாழ்வையும் வழிநடத்தும் காரணியாக இருக்கிறது.இன்னும் உலகமக்களின் மனங்களை கவர்ந்து கொண்டே வெற்றிகரமாக வளர்கிறது.//

  உண்மை....
  //புறமாற்றத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இப்படிப்பட்ட மாங்கா மடையர்களின் லூசுத்தனமான பரப்புரைதான் "இஸ்லாம் வாளால் பரப்பட்டது" என்பதும்.
  //

  பதிலளிநீக்கு
 5. ஸலாம் சகோ ஹாஜா
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..மாற்றுமத சகோதரர்களுக்காகவே இந்தப்பதிவு..அவர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டியது நம் கடமையல்லவா?
  -----------------------------------------------
  ஸலாம் சகோ ஆமினா
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 6. தோழமைக்கு வணக்கம், மிகவும் நல்லதொரு பதிவு. ... இஸ்லாம் கட்டாய மதமாற்றத்தை தன்னிலே கொண்டிருக்கவிலலை என்பது உண்மை. தென்னாட்டில் இஸ்லாம் கட்டாய மதமாற்றத்தால் பரப்பபடவிலலை என்பது உண்மை. தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் கொள்கை ஈர்ப்பால், அரபு நாட்டு வணிகா தொடர்பால், திருமண உறவால், சாதிக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, சிலர் மாற்றத்தை விரும்பி, சிலர் வசதியாக வாழ்வதற்கு இப்படியாக இஸ்லாம் பரவியது. ஆனால், இஸ்லாம் வடநாட்டில் படையெடுத்து வந்திருந்த முகாலயர் துருக்கியர்களால் கட்டாயமாக மாற்றப்பட்டது உண்மை. இதை தாங்கள் எக்காரணத்துக்காக மறைத்தீர்கள் எனத் தெரியாது. நடு நிலைமையாக இருந்து நோக்கினால் இஸ்லாம் எல்லாக் காலங்களிலும் கட்டாயமாக பரப்பபடவில்லை இருப்பினும் அரசியல் மற்றும் ஆட்சியாளர்களின் கொள்கைகளால் கட்டாயப்படுத்தி மாற்றப்பட்ட வரலாறு முற்றிலும் உண்மை. இந்நிலை இன்றும் பாகிஸ்தானில் அந்நாட்டு ஆட்சியாளர்களால் தொடரப்படுகிறது. இதற்கு நீங்கள் என்னை கடுமையாக விமர்சிக்க கூடும், இஸ்லாத்தின் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சி எனக்கில்லை. ஆயினும் சில உண்மைகளை வரலாற்று ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்..................

  பதிலளிநீக்கு
 7. சகோ அங்கிதா வர்மா,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,விரிவான கருத்துக்களுக்கும் நன்றி.

  கருத்துரையின் முற்பாதி இஸ்லாம் குறித்த தங்களின் அறிவையும்,பார்வையையும் அறியத்தருகிறது..

  //இஸ்லாம் வடநாட்டில் படையெடுத்து வந்திருந்த முகாலயர் துருக்கியர்களால் கட்டாயமாக மாற்றப்பட்டது உண்மை. இதை தாங்கள் எக்காரணத்துக்காக மறைத்தீர்கள் எனத் தெரியாது. //

  சகோ இந்தியாவின் வடக்கு பிரதேசம் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆளுகையில் இருந்தது உணமை,வரலாறு,நீங்களோ,நானோ,அதை மறுக்க,மறைக்க முடியாது.
  இந்தியாவை ஆண்ட அக்பர்,பாபர்,ஔரங்கசீப்,ஷாஜகான்,படையெடுத்த கஜினி,நிஜாம்,என இன்னும் எத்துனையோ இஸ்லாமியர்கள் ஆர்சி புரிந்துள்ளனர்.ஆனால் அவர்களின் போர் நிலம் சார்ந்தது எனபது வரலாறு..அவர்களின் ஆட்சி,இங்குள்ளவர்களை சொற்பமாக மனமாற்றம் கொள்ள செய்திருக்கலாம்.ஆனால் அதை நோக்கமாக கொண்ட ஆட்சியல்ல அது.மேலும் அவர்களின் பல மன்னர்கள் மதநல்லிணக்கத்தை போற்றி இருந்தமையும் சான்றுகளின் கிடைக்கப்பெற,இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது என்பதை ஏற்க முடியவில்லை சகோ..

  /இன்றும் பாகிஸ்தானில் அந்நாட்டு ஆட்சியாளர்களால் தொடரப்படுகிறது./
  இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் பிற மதத்தவர்களுக்கு,இஸ்லாம் மதசுதந்திரம் அளிக்கிறது.இதை ஹதீஸ்கள் மெய்ப்பிக்கின்றன..

  இன்றைய தாலிபான்களும்,பாகிஸ்தானிகளும்,பிற மதத்தவரை நடத்தும் முறை வெட்ககேடானது.அவர்களின் ஆட்சியும் இஸ்லாமிய ஆட்சியல்ல..

  /இதற்கு நீங்கள் என்னை கடுமையாக விமர்சிக்க கூடும்/

  நிச்சயமாக இல்லை சகோதரி..விமர்சனங்கள் என்னை சுடுவதாக இருப்பினும்,அது நாகரீகமாக கண்ணியமாக முன்வைக்கும் வரை,அதற்கு மதிப்பளிக்க நான் தவறுவதில்லை..

  வரம்பு மீறி விமர்சிக்க நான் பழகவில்லை.இஸ்லாம் என்னை அப்படி பழக்கவும் இல்லை..

  தங்களின் கருத்துக்களை தடையின்றி பதியலாம்.ஆரோக்கியமாக விவாதிக்கலாம்..வருக..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

  //உலகமக்களின் மனங்களை கவர்ந்து கொண்டே வெற்றிகரமாக வளர்கிறது.//


  //இந்தப்பதிவு,முஸ்லீம்களுக்கானது அல்ல.இது வீண்பரப்புரை செய்பவர்களுக்கும்,அதை நம்பி ஏற்றுக்கொள்ளும்,சாமானியர்களுக்குமானது.//

  பதிவு அருமை.

  நல்ல பின்னூட்டங்கள்.

  வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 9. வ அலைக்கும் சலாம்,சகோ ஆயிஷா,

  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா26/1/11 4:19 பிற்பகல்

  சகோதரருக்கு வாழ்த்துக்கள், சில விடயங்களை புதிதாக அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. கூறுவதற்க்கு சிறிது தயக்கமாக இருந்தாலும் கூறுகிறேன் சகோதரரே மன்னிக்க வேண்டும், சில சில இடங்களில் எழுத்துப்பிழைகள் தெரிகின்றன (ல, ள மற்றும் ற, ர வித்தியாசங்கள்) அதை கவனத்தில் கொண்டால் உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் கருத்துகளை தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள் அதில் எந்த மற்று கருத்தும் இல்லை.

  பதிலளிநீக்கு
 11. அனானி சகோதரரின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..பெயரோடு வரலாமே எத்தடையும் இல்லையே சகோ..எழுத்துப்பிழை உள்ள வார்த்தை அல்லது வாக்கியத்தை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்..சுட்டிக்காட்ட தயங்கத் தேவை இல்லை..தயங்காமல் திருத்திக் கொள்ள நான் தயாராக இருக்கும்போது எதற்கு சகோ தயக்கம் அதை தாண்டி மன்னிப்பு இவை எல்லாம்????

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 12. சகோ அங்கிதா வர்மா அவர்கள் கவனத்திற்க்கு,

  மக்கள் வரிப்பணத்தை எடுத்து காதல் மனைவிக்கு தாஜ்மாஹால் கட்டினார் ஷாஜகான். இவர் ஒரு உண்மையான முஸ்லிம் மன்னராக இருந்திருந்தால் அநியாயமாக மக்கள் வரிப்பணத்தை வீண்விரயம் செய்திருக்கமாட்டார்.

  தீன்-இலாஹி என்ற புதிய மதத்தை தோற்றுவித்து எல்லா வல்ல இறைவனுக்கு இணை வைத்தவர் தான் அக்பர். இவர் ஒரு உண்மையான முஸ்லிம் மன்னராக இருந்திருப்பாரானால் இது போன்று இணை வைத்து இருக்கமாட்டார்.

  இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் மன்னர்களாக இல்லை , மேலும் இஸ்லாத்தை விட்டு வெளியே சென்று தான் ஆட்சி செய்தார்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஸலாம் சகோ சுல்ஃபி.
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 14. சகோ ஆசியா அவர்களே,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 15. சகோதரர் ரஜின்,

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

  அல்ஹம்துலில்லாஹ்..சரியாக சொன்னீர்கள். இஸ்லாம் வாளால் பரப்பபட்டது என்ற கருத்து சிலரால் நீண்ட காலமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் இன்றரளவில் இந்த கருத்தை பலரும் ஏற்பதில்லை. இதற்கு காரணம், பலரும் வரலாற்று உண்மைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர் என்பதுதான். இதற்கு பின்னால் உங்களைப் போன்ற லட்சோப லட்ச சகோதரர்களின் உழைப்பு இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

  இவையெல்லாம் தாண்டி மாற்று மத மக்களின் உள்ளங்களை இஸ்லாம் கொள்ளை கொள்வதற்கு காரணம் இறை வேதமும், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையுமே ஆகும். இஸ்லாம் குறித்த தவறான பார்வைகளை பார்க்கும் சிலர் அந்த செய்திகளை அப்படியே உண்மையென எண்ணாமல் இஸ்லாம் குறித்து ஆராய முற்படும் போது (அல்லது இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் இது குறித்து கேட்கும் போது), திறந்த புத்தகமாய் இருக்ககூடிய இறைவேதமும். இறுதி தூதரின் (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் அவர்களை கவர்ந்து இஸ்லாத்திற்குள் தங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர்.

  இறைவேதமும், இறுதி தூதரின் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வரை இஸ்லாம் எந்தவொரு தடை வந்தாலும் உடைத்தெறிந்து நடை போடும். இதனை உணராதவர்களின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியையே தழுவும் (இன்ஷா அல்லாஹ்)..

  நன்றி,

  ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

  சகோதரர் ரஜின்,

  ---------
  கிருஸ்தவ மதம் மூன்று தெய்வ வழிபாடும்,
  ---------

  இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. கிருத்துவர்களின் வழிபடும் முறைகள் இது போன்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கலாம். ஆனால் கிருத்துவம் "ஓர் இறை" கொள்கையை உடைய மதமே. TRINITY என்னும் கான்செப்ட் மூன்று வெவ்வேறு உருவங்களை வணங்குவதாக இருந்தாலும் அந்த மூன்று உருவங்களும் ஒருவருடையதே. உதாரணத்துக்கு, ஒரு பாதிரியார் போல trinity யை விளக்குவதாக இருந்தால்... மஞ்சள் கரு, வெள்ளை கரு மற்றும் முட்டை ஓடு என இவை மூன்றும் வெவ்வேறானவை என்றாலும் மூன்றும் ஒன்றாக சேர்ந்து ஒரே முட்டையாக இருப்பது போல தான் trinity யும்.

  புரிந்து கொள்வதற்கு மிக மிகக்கடினமான ஒன்றாகத் தான் trinity உள்ளது. கிருத்துவர்களில் பலர் நம்பிக்கை இழப்பதற்கும் இதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே காரணம்.

  ஆக, உங்களுடைய இந்த சொற்கள் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்த கிருத்துவர்கள் சிலருக்கு சங்கடத்தை தரலாம். அதற்காக அதனை நீங்கள் மாற்ற தேவையில்லை. ஏனென்றால் பெரும்பாலான கிருத்துவர்களுக்கே இது குறித்து குழப்பம் இருக்கத்தான் செய்கின்றது.

  அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  பதிலளிநீக்கு
 17. வ அலைக்கும் சலாம் சகோ ஆஷிக்,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,

  தங்களின் விரிவான கருத்துக்களுக்கும் நன்றி.அல்லாஹ் நம்முடைய அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.

  டிரினிட்டி குறித்து தாங்கள் சொன்ன அந்த குழப்பமான நிலையின் வெளிப்பாடே இந்த வார்த்தை.அது குறித்து கிருஸ்தவர்களே ஒரு முடிவுக்கு வராத நிலையில் நாம் என்ன செய்யமுடியும்.மேலும் இது அவர்கள் மீதான தவறான விமர்சனமும் அல்ல..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 18. Please visit hre : http://www.faithfreedom.org/Gallery/6.htm

  பதிலளிநீக்கு
 19. சகோதரி அங்கிதா வர்மா அவர்களுக்கு...
  உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  போகிற போக்கில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டினை வித்து விட்டு போகிறீர்கள். என்னுடைய முதல் பின்னூட்டம் படித்தீர்களா? நாட்டமை தீர்ப்பின்படி கட்டாய திருமணம் செய்து வைத்தவுடன் படம் முடிந்துவிடும். ஆனால், அதற்கு அப்புறம் காட்ட மாட்டார்கள். அதாவது அந்த பெண் தாலி கட்டிய கயவனை பிடிக்காமல் எங்காவது ஓடி விடும்... அல்லது நீதிமன்றம் சென்று விவாகரத்து கோரி இருக்கும்... அல்லது அந்த குற்றவாளி தூங்கும்போது அம்மிக்கல்லை அவன் மண்டையில் போட்டு கொன்றுவிடும்... அல்லது உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு... அடுத்த நாள்,"நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்... பாவி மனுஷன் இப்படி பொட்டுன்னு போய்ட்டாரே" என்று ஒப்பாரி வைக்கும்... (சில காலம் கழித்து மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கும்)

  இதே கதைதான் கட்டாய 'மன'மாற்றம் செய்யும் எல்லா விசயத்திலும்...! இந்திய விடுதலை போராட்டம், ஈழப்போர், காஷ்மீர் போராட்டம், ரஷ்யா சிதறுண்டது, சூடான் பிரிவினை, பிடிக்காத பிரின்சிபாலை எதிர்த்து கல்லூரி மாணவர் ஸ்ட்ரைக், பிடிக்காத கருத்து திணிப்புக்கு எதிராய் தமிழ்மணத்தில் நெகடிவ் ஓட்டு என எல்லாமே...!

  இருநூறு ஆண்டுகளுக்குள்ளாகவே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நம் மக்கள் எண்ணூறு ஆண்டுகளாய் மொகலாயர்களுக்கு எதிராய் ஏன் முனுமுனுக்கக்கூட இல்லை?

  சரி, திப்புசுல்தானின் வாள் எத்தனை பேரை முஸ்லிம்களாக்கியது? சொல்லுங்கள் சகோதரி?

  பதிலளிநீக்கு
 20. அக்பரின் வாள் எத்தனை முஸ்லிம்களை தீன் இலாஹி மதத்துக்கு மாற்றியது? அவரே உருவாக்கிய மதமாயிற்றே அது?

  மதமாற்றத்துக்கு மன்னரின் வாள் சுழலுமானால்... அப்படி சொல்வது உண்மையானால்... அதை உண்மையென நம்பினால்... 'தீன் இலாஹி'க்காக அல்லவா அக்பரின் வாள் சுழன்று இருந்திருக்க வேண்டும்? தன் மகனைக்கூட கட்டாய மனமாற்றம் செய்ய முடியவில்லையே அந்த வாளால்? தனக்கு பிடித்த பீர்பாலைக்கூட அந்த வாளால் தீன் இலாஹிக்கு கொண்டு வர முடிய வில்லையே?
  எங்கே அந்த --மொகலாய சக்கரவர்த்திகளின் தலை சிறந்தமன்னர்-- அக்பர் தி கிரேட்-- சர்வ வல்லமை பெற்ற மகா அக்பர் அவர்களின் மதத்தில் இருந்த மக்கள் இந்தியாவில்? ஒருத்தரையாவது காண்பிக்க முடியுமா சகோ.அங்கிதாவர்மா? தன் மதத்தையே ஒரு மிகப்பெரிய அரசரால் பரப்ப முடியாவிட்டால் வேறு எந்த மதத்தை ஒருவரால் வாளின் முனையில் பரப்ப முடியும்?

  நான் உங்கள் கழுத்தில் கத்தியை வைத்து கலிமா சொல்லு என்றால் சொல்லி விடுவீர்கள். நான் போனபின்னர், 'போடா அக்கிரமக்காரனே...' என்று மீண்டும் உங்கள் நம்பிக்கைக்கு திரும்பி விடுவீர்கள். இதுதானே எதார்த்தம்? இதை புரிந்தும் புரியாதது போல பொய் பேசுபவர் கும்பலில் சேர்ந்து குலவுவது ஏன் சகோதரி?

  நீங்கள் இடும் பின்னூட்டங்கள் கூட நாளைய வரலாறுதான் சகோதரி. "மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை" என்ற ராஜபக்சேவின் கூற்று கூட நாளைய வரலாறுதான். பிற்காலத்தில் அச்செய்தியை படிக்கும் சிங்களர் நம்புவார்கள். நாம்?

  ஒரு வரலாறு படித்து அதில், எது உண்மை என்று அறிய முற்படுவதை விட, "எது உண்மையாக இருக்கவே முடியாது, எது பொய்யாகத்தான் இருக்க முடியும்" என்று தீர ஆலோசித்து முடிவு எடுப்பதே வரலாறு படித்துவிட்டு கற்றதை பிறருக்கு வரலாறாய் சொல்வோரின் மீது கடமை சகோதரி.

  பதிலளிநீக்கு
 21. அங்கிதா வர்மாவின் பின்னூட்டம் படித்தபின் எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது... ஒருவர் ரயிலில் பயணம் செய்யும்போது தொழுகிறார்... அவர் தொழுகையினூடே சொல்லும் 'அல்லாஹூ அக்பர்' எனும் வார்த்தைகள் மட்டும் அவரருகில் இருந்து கவனிக்கும் ஒரு மாற்று மத்ததவருக்கு கேட்கிறது. அவர் தொழுது முடித்ததும் நீங்கள் ஏன் அக்பரை மட்டும் தொழுகிறீர்கள்.. ஏன் பாபர்,ஷாஜகான் போன்றவர்களைக் குறிப்பிடுவதில்லை என்று கேட்டாராம்... இந்த அளவிற்கு தான் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது. உங்களின் மற்றும் ஆஷிக்கின் விளக்கம் அவர்களை சிறிதாவது மனமாற்றம் கொள்ளச் செய்ய வேண்டும்... மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று மனமுவந்து ஆராய்ந்தாலே அவர்களுடைய மதமும் மனமும் இஸ்லாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள தவறான கருத்தும் மாறிவிடும்... ஆனால் என்ன செய்வது அவர்கள் மனதில் இறைவன் திரையைப் போட்டுவிட்டானே... சொல்லப்போனால் அங்கிதா சொன்னதுபோல் இஸ்லாமியர் சிலர் செய்யும் தவறினால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் தவறான பார்வை ஏற்படுகிறது... நம்மை மட்டுமல்லாது காபிர்களையும் நேர்வழியில் செலுத்தி நரக நெருப்பிலிருந்து இறைவன் பாதுகாப்பானாக!

  இஸ்லாத்திற்காக நீங்கள் கொடுத்துள்ள பதிவும் பங்கும் மிகவும் பாராட்டிற்குரியது...மாஷா அல்லாஹ்.

  பதிலளிநீக்கு
 22. ஸலாம் சகோ ஆஷிக்..
  தங்களின் மேலதிக விரிவான விளக்கங்களுக்கு நன்றி..
  --------------------------------------------------
  ஸலாம் சகோ பானு,
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் விரிவான கருத்துக்களுக்கும் நன்றி.உண்மைதான்,தாங்கள் குறிப்பிட்ட அந்த ரயில் பயணியின் கருத்தாக்கமே இஸ்லாம் குறித்து பிற மதத்தவரின் எண்ணமாக இருக்கிறது..அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை பார்க்ககூடியவனாக இருக்கிறான்.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா2/2/11 10:16 பிற்பகல்

  சகோ.சிறி
  இனையத்தில் இனைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரஜின் எழுதியுள்ளார் இஸ்லாம் மதம் ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டது என்று சகோதரன் அறியவேண்டிய விடையம் என்னவென்றால் இஸ்லாமுடைய அத்திபாரம் பரிசுத்தவேதாமக்த்தின் பழைய ஏற்பாட்டின் சத்தியங்கள் இப்படியிருக்க இவர்கள் சொல்வதை எப்படி நம்பமுடியும்

  பதிலளிநீக்கு
 24. எப்பா அனானி..ஒன்னும் புரியலையப்பா நி சொல்ரது..சொல்ல வந்தத தெளிவ தைரியா பேரோட வந்து சொல்லு...விவாதிப்போம்..ம்ம்.

  பதிலளிநீக்கு
 25. பெயரில்லா6/2/11 11:53 முற்பகல்

  oru yelavum puriyala..

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லா21/2/11 3:28 பிற்பகல்

  Dear Mr.Blogger,

  History can't be hidden so easily ! Please read popular Arabian traveller IBN Battuta's writings about the ruler in Madurai torturing people to convert :

  http://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate

  Ibn Batuta describes Ghiyasuddin Dhamgani's actions as:

  the Hindu prisoners were divided into four sections and taken to each of the four gates of the great catcar. There, on the stakes they had carried, the prisoners were impaled. Afterwards their wives were killed and tied by their hair to these pales. Little children were massacred on the bosoms of their mothers and their corpses left there. Then, the camp was raised, and they started cutting down the trees of another forest. In the same manner did they treat their later Hindu prisoners. This is shameful conduct such as I have not known any other sovereign guilty of. It is for this that God hastened the death of Ghiyath-eddin.
  One day whilst the Kadhi (Kazi) and I were having our food with (Ghiyazu-d-din), the Kazi to his right and I to his left, an infidel was brought before him accompanied by his wife and son aged seven years. The Sultan made a sign with his hand to the executioners to cut off the head of this man ; then he said to them in Arabic : ' and the son and the wife. ' They cut off their heads and I turned my eyes away. When I looked again, I saw their heads lying on the ground.

  I was another time with the Sultan Ghiyath-eddin when a Hindu was brought into his presence. He uttered words I did not understand, and immediately several of his followers drew their daggers. I rose hurriedly, and he said to me ; ' Where are you going ' ? I replied : ' I am going to say my afternoon (4 o'clock) prayers. ' He understood my reason, smiled, and ordered the hands and feet of the idolater to be cut off. On my return I found the unfortunate swimming in his blood.[

  பதிலளிநீக்கு
 27. பெயரில்லா2/3/11 7:27 முற்பகல்

  Muslims exploded (20 million) in INDIA, same time in Pakistan Hindus are killed and mascaraed (Reduced from 20% to 3 %)

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்