இஸ்லாம்!...தாங்க அந்த இது!...ஹ்ம்ம் திரும்பவும் ஆரம்புச்சுட்டானுங்கடா,இவன்களோட சுயபுராணத்தை,அப்டீன்னு நெனைக்கிறீங்க...தெரியுது...இது ஏதோ இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் மற்றவற்றை காலில் போடுவது அல்ல.
நான் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் இன்னன்ன நல்ல விஷயங்கள் இருக்கு,அதுபோலவோ, அல்லது அதைவிட சிறந்த கொள்கைகளோ இருந்தால் சொல்லுங்கள், என்பதுதானே ஒழிய வேறொன்னும் இல்லை...
இஸ்லாம் ஆதிமனிதன் தொட்டு, புழங்கிவரும் மார்க்கமாக இருந்தாலும்,காலச்சுழற்சியில் மனிதனின் கைவினைகளால் கருமாறி,இறுதியாக சற்றே முந்திய ஈரேழு நூற்றாண்டுகளின் துவக்கத்தில்,ஒரு இருபத்துமூன்றே ஆண்டுகளில் அதன் முழு கட்டமைப்பு படிப்படியாக வார்க்கப்பட்டு,இன்று நம் கைகளில் மின்னுகிறதென்றால் மிகையல்ல..
இஸ்லாம் அதன் கொள்கைகளை ஓரிறை என ஆரம்பித்து, ஆன்மீகம்,வாழ்வியல்,ஒழுக்கம், பண்பாடு, சமூகம், கல்வி, வியாபாரம், குடும்பம், ஆட்சி, கலை, வீரம்,என மனிதவாழ்வின் வகைப்படுத்தக்கூடிய அனைத்து கூறுகளையும் வியாபித்து ஒரு சாரமான வாழ்வியலைத் தருகிறது.அதன் வெளிப்பாடாக வாழ்வியலும்,ஆன்மீகமும் இரண்டரக்கலந்த ஓர் அழகிய கொள்கையினை இஸ்லாம் முழுமனித சமுதாயத்திற்கும் வழங்குகிறது...
இஸ்லாம் வகுத்த நெறியில் தோய்ந்த வாழ்வை ஒருவன் வாழும்போது,அவனது வாழ்க்கை புத்தகத்தின் ஆன்மீக பக்கங்களும் நிரப்பப்பட்டுவிடுகிறது.ஆன்மீகத்திற்கென அவன் மெனக்கெட்டு வாழ்நாளை ஒதுக்கிட தேவையற்று,இறைவன் வழங்கிய அழகிய வாழ்வை எளிமையாய் எழிலாய் வாழ்ந்து,அதன் மூலம் தன் வாழ்விலும் வனப்பை பெற்றதோடல்லாமல், இறைவனின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறான் ’எளிமையாக”..
ஆக,இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு மனிதனின் குடும்பவாழ்வு,வியாபாரம்,வெளியுலக தொடர்பு,என அனைத்துக்கூறுகளையும்,இஸ்லாம் வகுத்த விதியின்படி செயல்படுத்தினால், அதுவே ஆன்மீகமாகிவிடுகிறது.இப்படியாக ஆன்மீகம் வாழ்வியலில் பின்னிப்பிணைந்து இருப்பதால்,ஆன்மீகத்தை கடைப்பிடிக்க,அல்லது இஸ்லாமியனாக வாழ,அவனது வாழ்வியலில் சில வரைமுறைகளை பேணவேண்டிய கடமை முஸ்லிமை வந்தடைகிறது.
அது எப்படிப்பட்டது? கடுமையான விரதமும்,வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குறியாக்கும் பிரம்மச்சரியமும்,தனிமையும்,… குடும்பத்தையும், உறவுகளையும், சமூகத்தையும், துறப்பதும், என்பன போன்ற வகைறாக்களா?? என்றால், இல்லை,இல்லவே இல்லை.. இவைகளெல்லாம், இஸ்லாமிய வாழ்வியலில் செய்யக்கூடாதவை என தடைசெய்யப் பட்டவை. தவிர வரைமுறையும் கட்டுப்பாடுகளும் இல்லாத வாழ்வு,மனிதவாழ்வாக இருக்கமுடியாது.அது மிருகங்களுக்கு ஒப்பான வாழ்வு.இதை யாரும் மறுக்க முடியாது. இஸ்லாம்தனை பின்பற்றி ஒழுக எத்தனிக்கும் மனிதனுக்கு,இஸ்லாம் சில வரைமுறைகளை முன்வைக்கிறது. சிலவற்றை நல்லவை,ஆகுமானவை என்றும் சிலவற்றை தீயவை,தடுக்கப்பட்டவை என்றும் மேற்கோளிடுகிறது.
நல்லவற்றை செய்ய,நற்க்கூலியும்....தீயவற்றை செய்தால்,கடுமையான தண்டனைகளையும் எச்சரிக்கிறது.இங்கு இஸ்லாம்+கட்டுப்பாடுகள் என சொல்லும்போது மனதில் ஒருவித நெருடல் தோன்றிமறையலாம்(மாற்றுமத சகோதரர்களுக்கு).போங்கடா,உங்க மதம் இப்படித்தேனேன்னு.. ஆனால் அவற்றைச் சிந்தித்துப்பார்க்கும்போது,அது சாலைவிதிகளைப் போல!, எளிமையான,அதேசமயம் அவசியத்திலும் அவசியமான ஒன்றாக இருக்கும். எனக்குத்தான் கண்ணு தெரியுதே நான் பாத்து போகமாட்டேனா?? அப்ரம் எதற்கு இந்த விதிகள் அப்டீன்னு சொல்வது எத்தனை அறிவீனம்??அதற்கு ஒப்பான செயல்தான் இஸ்லாமிய கொள்கைகள் மீதான இப்படிப்பட்ட பார்வை.
பொதுவாக நாம் இதெல்லாம் ஒரு மேட்டரா?அப்டீன்னு நினைகிற காரியங்களையெல்லாம் இஸ்லாம் தடை செய்யப்பட்டவற்றின் கீழ் கொண்டுவந்திருக்கும்...உதாரணமா வட்டி, விபச்சாரம்,மது,ஆண்பெண் வரம்பு, என இன்றைய வாழ்வில் (அன்றும்கூட) மிகச்சாதாரணமாக பார்க்கப்படுகின்ற, வாழ்வின் தவிர்க்கமுடியாத(சில) அங்கங்களாகிப் போனவற்றின் மீது தடையுத்தரவை மறக்காமல் பிறப்பிக்கிறது.மேலும் குற்றவியல் தண்டனைகளில் மற்றெல்லாவற்றையும் விட கடுமையை காட்டுகிறது.இவ்வாறு ஒன்றை தடைசெய்யும்போது,அட ஏன் இதுக்கெல்லாம் இவ்ளோ சிரத்தை எடுத்து தடுத்துவிட்டது இஸ்லாம்?இது ஒரு பொருட்டே இல்லையே..என சொல்வோர்,அதன் பின்புலத்தை, பின்விளைவை சற்றே சிந்தித்து உணர்ந்தோமானால் அது சரியெனப்புரியும்.
தடைகளும்,தண்டனைகளும், நம்மைப்போன்றவர்களையும், நல்லவர்களையும்(அட ரெண்டும் ஒன்னுதானே)பார்த்து உருவாக்கப்பட்டதல்ல.அவை குற்றவாளிகளையும், மனிதத்தன்மையற்று அலையும் மிருகங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.எனவே முதலில் தடைகளையும்,தண்டனைகளையும் பார்த்தும் நாம் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.தவறுக்களுக்கான தடை,மற்றும் தண்டனைகளில் கடுமையானது, குற்றவாளிகளையே,வெறுப்படைய/அச்சம் கொள்ளச் செய்கிறது.அதை தவிர்க்க முடியாது,
வட்டி, விபச்சாரம்,மது,ஆண்பெண் வரம்பு,என இந்த விஷயங்களில் சிலதை சிலர் சகஜமாக அன்றாடவாழ்வில் அங்கமாக்கிக் கொண்டிருக்கலாம்.அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமலும் இருக்கலாம்....ஆனால் இஸ்லாம் தடைசெய்யும் வரையரைக்குள் வரக்கூடிய இது போன்ற யாவுமே,ஒரு குறிப்பிட்ட எல்லைவரை யாருக்கும் பாதிப்பை தராத,அல்லது குறிப்பிடும் படியான பாதிப்பாக இல்லாது இருக்கும் செயல்களாகவும்,அதுவே ஒரு எல்லையை தாண்டும்போது கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை தந்து சமுதாயச்சீர்கேட்டை விளைவிக்கும் காரியங்களாக இருக்கும்..
இவ்வாறான காரியங்களை சகலரும் செய்ய தங்களுக்குல் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு,இதுல என்ன இருக்குன்னு நியாயம் கற்பிக்கும்போது,அதனால் விளையும் தீங்கிற்கும், தீங்கல்லாத நிலைக்குமான எல்லையை சரியாக யார்தான் வரையறுப்பது?? இந்த எல்லை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்,ஒவ்வொரு எல்லையும் ஒவ்வொருவருக்கு ஒரு நியாயத்தை உணர்த்தும்.அது எப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் எனப் பார்ப்போம்..
மேலே உதாரணமாக சொல்லப்பட்ட சிலவற்றை விரிவாக விவாதிக்க இந்த கட்டுரை ஒரு முன்னுரையாகவும்,பதிவின் நீள எல்லையை பொருட்படுத்த போதுமானதாகவும் இருக்கும் என அவதானிக்கிறேன்.
அடுத்த பதிவில் – வட்டி!..இன்ஷா அல்லாஹ்...
அன்புடன்
ரஜின்
CLICK THE LINK AND READ.
பதிலளிநீக்கு>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. <<<<
>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன். <<<<
>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! கம்யூனிஸ்ட் செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடியின் அறைகூவல். மதமாற்றமல்ல! இது மனமாற்றம். <<<<