திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதர சகோதரிகளே!

சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! என்பதான பொருள் கொண்ட மேற்சொன்ன இந்த முகமன் இஸ்லாமியர்கள்,இன்று நேற்றல்ல இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே பயன்படுத்தி வருவது பாமரரும் அறிந்த ஒன்று.தமிழ்மண திரட்டியின் நிர்வாகிகளுல் ஒருவரான ரமணிதரன்,இந்த முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய முகமனை தனது சுதந்திர பேச்சுரிமையால்,மிக மிக அற்பமாக,கேவலமாக விமர்சித்து இருக்கிறார்.

டெரர்கும்மி எனும் தளத்தில் வெளியிடப்பட்ட தமிழ்மணத்தின் சுயரூப டேட்டாவை மறுதலிக்க வந்த இந்த பெயரிலி நிர்வாகி,போகிர போக்கில் புளியமரத்தில் கல்லெறிந்த கதையாக இஸ்லாமியர்கள் மீது ஒரு கல்வீசி விட்டு போய் இருக்கிறார்..எவ்வித முகாந்திரமும் இல்லாமல்,..இவ்வாராக...

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

ரமணிதரனின் இந்தக்கருத்து இஸ்லாமிய முகமனை கேலிசெய்வதாக மட்டும் இல்லாமல் அது வக்கிரமான விமர்சனமாகவும் இருக்கிறது. பொதுவாகவே பெயரிலியாக வரும் இவரது போக்கு எல்லாரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒரு அசூசையான இவரது சாடல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல பொதுவாக எல்லோர் மனதிலும் ஒருவித விகல்ப்ப உணர்வை தமிழ்மணத்தின் மீது கொடுத்திருக்கிறது.

சீ...பெரியமனுஷனாயா  நீயெல்லா,..இது பதிவு தோஷமா இல்ல பழக்க தோஷமா??? முதலில் இது எனது மார்க்கம் சார்ந்த சொல்லை பழித்தாய் என பார்த்தால், அதன் ஊடாக சாந்தி என்றால் அமைதி என பொருள்படும் வார்த்தையை பெண்ணாக கற்பனை செய்து..அதற்கு வக்கிர முலாம் பூசி..இதை விட கேவலமாக ஒருவனால் பேசிவிட முடியாது.. சீ
 
இது ஒருபுறமென்றால்.அதற்கு உரியமுறையில் விளக்கம் கேட்க..அது தனது பேச்சு சுதந்திரம் எனவும்.இன்னும்

//சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு தவிர;  //

என அனைவரும் அவரவர் பயன்பாட்டு சொற்களுக்கு உரிமம் வைத்துதான் கண்டனம் தெரிவிப்பது போலவும் உளறி இருப்பது திமிரில் விளைந்த தடித்த வார்த்தையே அன்றி வேரல்ல...இது இவர்களது பேச்சு சுதந்திரமோ.!!!!.. ஒருவனது சுதந்திரம் அடுத்தவனது மூக்கின் நுனிவரை என்பதை இவர்கள் அறியவில்லை போலும்..இப்படிப்பட்ட இவர்களது பேச்சு சுதந்திரம்சாமி சரணத்தில் வந்து பார்க்கட்டுமே...! அதுகூட யாருடைய தனியுரிமை வார்த்தையல்ல.. அப்போது எழும் நியாயமான கேள்விகள்,அதற்கு தெனவெடுத்த இதுமாதிரியான பதில்கள்.. இவர்களின் பருப்பை வேகவைக்குமா என பார்ப்போம்?

வலைஞர்கள் மத்தியில் மிகபிரபல்யமான ஒன்றாக கருதப்படும் தமிழ்மணம் திரட்டி, தடம்மாறுவது உணரப்படுகிறது. சமீபகால செயல்பாடுகள் ஒரு சார்புடையதாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.மதரீதியான தளங்களை தணிக்கை செய்வதாக எண்ணிக் கொண்டு அதை கட்டணபதிவுகளின் கீழ் கொண்டுவந்து, பொதுவான பதிவுகளுக்கு மத்தியில் மதரீதியான பதிவுகளை கொடுப்பவர்களையும் அந்த வரிசையின் கீழ் கொண்டுவது அவர்களின் பதிவுகளை திரட்ட மறுக்கிறது.அதே நேரம் மதங்களை திட்டி தீர்ப்பதையே முழுநேர ஊழியமாக செய்யும் தளங்களையும் அவர்களது பதிவுகளையும் தாராளமாக வரவேற்பது முழுமையான முரண்பாடாக இருக்கிறது.இதில் குறிப்பாக இஸ்லாமிய பதிவுகள் திரட்டப்படாமல் புறக்கணிக்கப் பட்டதில் இருந்து இது குறிப்பிட்ட மதத்தினரையும்,அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கும் செய்யப்பட்ட சூத்திரமாகப் படுகிறது.
தமிழ்மணம் மட்டுமே திரட்டி போலவும்,அது இல்லாவிட்டால் பதிவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதான குருட்டுக்கனவின் வெளிப்பாடே இத்தகைய செயல்பாடுகள்.

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி என பஞ்ச் டயலாக் விடுபவர்கள், முதலில் பிறரை புரிந்துணர்ந்து ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா???

இறுதியாக,இஸ்லாமிய முகமனை கேலிக்கூத்தாக்கி வக்கிரமாக விமர்சித்த தமிழ்மண நிர்வாகி ரமணிதரன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

இன்னும் இவரது பேச்சு முஸ்லிம்களை இப்போது தீண்டி இருக்கிறது.. ஆனால் சமீபமாகவே பல மாற்றுமத சகோதரர்களை தீண்டி அவர்கள் கண்டித்து.அதற்கு இவர் வசைபாடிவருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது..எனது அருமை சகோதரர்களின் சார்பாகவும் இவருக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தமிழ்மணம்பார்க்க
தமிழ்மணம்ன்னா என்ன? என்று கேட்பவர்கள் - பார்க்க
டெரர்கும்மி தளம் - பார்க்க
இவ்வளவையும் பார்க்கும்போது தமிழ்மணம் மணக்கவில்லை..நெடியாகி குமட்டத்தான் செய்கிறது...


அன்புடன்
ரஜின்

19 கருத்துகள் :

 1. தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

  பதிலளிநீக்கு
 2. சகோ விளக்கமான பதிவு

  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 3. தமிழ்மணமே மன்னிப்புகேள்
  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

  பதிலளிநீக்கு
 4. Click the link below and read.

  1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


  2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


  3.
  தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!  4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.
  தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!  6.
  தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?  7.
  தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


  9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


  11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


  12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


  13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


  14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


  15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


  16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


  17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


  .

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணத்தை விடுங்க
  இண்ட்லி

  தேன்கூடு

  உலவு

  திரட்டி

  தமிழ்வெளி

  -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  பதிலளிநீக்கு
 7. தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்

  பதிலளிநீக்கு
 8. சாட்டையடி!ஆனாலும் "அவர்"களுக்கு எங்கே உறைக்கப் போகிறது?அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்களாயிற்றே?

  பதிலளிநீக்கு
 9. சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

  இன்றோடு அதை தூக்கி எறிவோம்

  பதிலளிநீக்கு
 10. 1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


  2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


  3.
  தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


  4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.
  தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


  6.
  தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


  7.
  தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


  9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


  11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


  12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


  13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


  14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


  15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


  16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


  17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


  அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
  இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!

  பதிலளிநீக்கு
 11. வருகை புரிந்து வாசித்து,பதில் சொன்ன நல்லுள்ள சகோதர சகோதரிகளுக்கு நன்றி...

  தம்பி வைரை சதிஷ்..
  தமிழ்மணத்தை புறக்கணிப்போம்,....கை கோர்த்து..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா17/10/11 9:13 பிற்பகல்

  உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

  சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

  ஜெய் மாகாளி!

  பதிலளிநீக்கு
 13. என் கண்டனங்கள் பெயரிலுக்கும் அவரை காப்பாற்ற துடிக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும்

  பதிவர்கள் ஒன்றும் பிச்சை எடுப்பவர்கள் அல்ல என்பதை புரிய வைக்க வேண்டிய தருணம் இது

  பதிலளிநீக்கு
 14. //புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி என பஞ்ச் டயலாக் விடுபவர்கள், முதலில் பிறரை புரிந்துணர்ந்து ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா???//

  :))))) அதன் அவசியம் புரிந்திருக்குமானால் ஏன் சகோ இப்படி இருக்குறாங்க‌..?

  தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  பதிலளிநீக்கு
 15. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
  பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

  பதிலளிநீக்கு
 16. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

  1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

  SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

  2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

  ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

  ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

  Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

  3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
  மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

  உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

  இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

  SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

  பதிலளிநீக்கு
 17. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

  என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

  தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

  மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்