காலைல எழுந்ததே லேட்.. வேகவேகமா குளிச்சு ரெடியாகி ஆஃபிஸ் போனாலும் கொரஞ்சது ஒன் ஹவர் லேட்டாகாம ரீச் பண்ண முடியாது. கம்பெனி பஸ்ஸவிட்டா அப்ரம் மெட்ரோ தான்.கெளம்பினா 15 நிமிஷம் வாக்குக்கு பெறகு மெட்ரோ ஸ்டேஷன். போர வழியிலயே காலை,மதிய உணவுகளை திரட்டிக்கொண்டு,ஸ்டேஷனை அடைய 20 நிமிஷம் ஆகிவிட்டது. கார்ட் ஸவைப் பண்ணி உள்ள போனா.. செம கூட்டம்.. என்னப் போலத்தா போல எல்லாரும்ன்னு நெனச்சுட்டு இருக்கும் போதே அறிவிப்பு..
(அர்ரஜா அல்இத்திபாஹ் அல் கிதாமுல் முத்தஜத் இலா மதீனத்துல் லுபையித் துஃகிய்யா ஸயெசித் இலா ரசீதுல் ஹூர் : The train to Dubai health care city will arrive at Creek Platform) இந்த அறிவிப்பை கேட்டதுமே இயல்பாய் மக்கள் கூட்டம் வாசலை நெருங்கியது. அறிவித்து முடிக்க, சரியாக ட்ரெயினும் வந்தடைந்தது.
மக்கள் கூட்டம் ட்ரெயினிலும் ததும்பி வழிந்தது! வேரவழி இல்ல போயித்தான் ஆகனும்.. ஒரு வழியா எனக்கு 1x1ft அளவுக்கு நிக்கிறதுக்கு மட்டும் இடம் கெடச்சது. ஸ்ஸபா.... இதாவது கெடச்சதேன்னு நிம்மதி...
(அல் அபுவாபுத் துஃஹ்லாத் : doors closing) – ஆட்டோமேடிக் வாய்ஸ் கெய்ட் சொல்ல, அத்தோடு கதவும் அடைக்கப்பட்டு வண்டி கிளம்பியது.அடுத்த ஸ்டேஷன் அண்டர் க்ரவுண்டில் இருப்பதால், ரயிலானது மண்புழு போல லாவகமாய் பூமிக்குள் நுழைய, வெளிப்புற வேடிக்கைகள் மறைந்து,சன்னல் கண்ணாடிகள் என்னையே பிரதிபலிக்க..., ரயிலின் உட்புறம் பார்வை விரிந்தது.
(அல் மஹத்தல் காதிமா ஹியா – அல் இத்திஹாத் : The Next station is – Union) என்ற முரட்டுக்குரல் இம்முறை செவிப்பறையை தாண்டியதாக உணரவில்லை.சுற்றிலும் மெதுவாக பார்வை சுழன்று கொண்டே இருந்தது.கண்கள்! எட்டும் தூரம் மட்டும் அனைத்தையும் படம்பிடித்து விட ஆளாய் பறந்தது.
பார்க்கப்பார்க்க அத்துனை விதங்களான முகங்கள் அவற்றில் ஆயிரம் பாவனைகள், வகைப்படுத்தவியலான நிறங்கள் என எண்ணிலடங்கா வேற்றுமைகளை கொண்ட அனைவரும் மனிதர்கள்!.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.விதவிதமான ஆடைகள், சிகைஅலங்காரம் காலணிகள்,கைபேசிகள்,கைப்பைகள் என வேற்றுமையில் ஒற்றுமை காணும் அனைவரும் மனிதர்கள்!.. சுற்றி இருக்கும் மனிதர்கள் யாரும் யாரையும் கவனிப்பதாக இல்லை.தனக்கென தன்னாட்டு ஏஆர் ரஹ்மான்கள் அவர்களின் காதுகளில் ஹெவிபாஸ் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, எனக்கோ சுற்றிலும் இருக்கும் பலரது காதுகளில் இருந்து சிதறிய துணுக்குகள் மெல்லிய சப்தங்களாக கீச்சுக்குரலில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இதில் ஒரு சவுகரியத்தை நான் உணர்ந்ததுண்டு.இது மாதிரியான கூட்ட நெரிசல்களில் இருக்கும்போது, இது போன்ற காதோர ஒலிப்பெருக்கியில் நுழைந்து கொண்டால்,வெளிப்புறம் சற்று விசாலமாக தெரியும்.இது பிரம்மையாகக் கூட இருக்கலாம்.சரி விஷயத்துக்கு.....
என்னவோ இன்றுதான் பூமிக்கு வந்த டெர்மினேட்டர் போல அனைவரையும் புதிதாய் பார்த்துக்கொண்டே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தேன்.அது இயல்பான பார்வையல்ல. அத்தனையும் ஒருவித ரசனையுடன் பார்வையை அகலவிட்டிருந்தென். இதற்கிடையில் இருவேறு ஸ்டேஷன்களில் மேற்படி வசனங்களை அச்சுப்பிசகாமல் கூறி கதவை திறந்து அடைத்து ஓடிக்கொண்டிருந்தது தானியங்கி ரயில்.ஆம்! அதற்கு ஓட்டுனர் என்ற ஒருவர் இல்லை. இவை எதுவுமே உணராமல் அந்த இடத்தில் மெண்ட்டலி ஆப்செண்ட் ஆகி இருந்தேன். இப்படி லயிக்கும் சிந்தனை எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் இருந்ததுதான் அதிலேயே நீடிக்க காரணமாகவும் இருக்கலாம்.
இப்படியான எண்ணங்கள்,சில சூழல்களில் எதார்த்தமாக இணையும்போது தோன்றுவதுண்டு. அதை இயன்றவரை கலைக்காமல் அப்படியே தொடர மனம் விரும்பும். அதுபோலவே இன்றும்...பார்வைகளைக் கடந்து சுற்றி நடப்பதை கவனிக்க மறுத்து அதேரீதியில் சிந்தனை ஓட்டத்தை செழுத்த, அதுவும் விரும்பிய கோணத்தில் ஓடத் துவங்கியது...
எப்படி!!!? அனைவரும் மனிதர்கள்...அனைவரின் உறுப்புக்களும்,அதன் செயல்பாடுகளும் ஒன்று. ஆனால் அனைவருமே வித்யாசமானவர்கள்!.. Ooooooffff…. என்ன மாதிரியான டிஸைன் இது!!! இதன் அடிப்படை கோட்பாடாக மனிதன் வரையறுக்கும் பரிணாமம் இத்தனையையும் நிகழ்த்திவிட்டதா? இல்லை.. இல்லவே இல்லை.... வெளிப்புறத்தில் இருந்து ஓர் விலங்குப் பார்வை மூலம் மனிதனைப் பார்த்து,மனிதன் எழுதிய கற்பனைக் கோட்பாடுதானே இந்தப் பரிணாமம். தனக்கு ஓர் ஆதியைத் தேடி அலைந்த மனிதன் கடைசியில் குரங்கின் மடியிலா தஞ்சம் புகவேண்டும்? குரங்குகளை தன் மூதாதையராக சொல்லிக்கொள்ள மனிதன் அவ்வளவு மோசமான முட்டாளா?.. இல்லை, அவன் கற்ற அறிவியலோ, பார்த்தறிய மட்டுமே கற்றுக்கொடுத்துவிட்டது. அதைத்தாண்டிய சிந்தனைகளை அது பொய்ப்பித்துவிட்டது. ஆக தன் குறுகிய எல்லைக்குள்ளாகவெ ஒரு விடையை காணவேண்டிய தேவையும், தன் எல்லையில் தான் தேடும் பொருள் இல்லை என தெரிந்தும் அவன் தன்மீது விதியாக்கிக்கொண்ட வரையறைகளும், அதைத்தாண்டிய கொள்கைகளை நம்ப மறுக்கும் பிடிவாதமும், அவனை குரங்கிடம் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.
மிக மிகச் சாதாரணமாக, மனிதன் அத்தனை பெர்ஃபெக்ட்டாக இயற்கைத் தேர்வின் மூலம் உதித்துவிட்டான் எனச் சொல்வது, எத்தனை பெரிய முட்டாள்த்தனம். இதை அதெ விலங்குப்பார்வை மூலம் அவன் உருவாக்கிய ஒரு சொகுசுக்கார் குறித்து சிந்தித்தாலே போதுமே. அதைத் தயாரிக்க ஆதி முதல் அந்தம் வரை எத்தனை தேர்வும், ஆய்வும், பெர்ஃபெக்ஷனும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு படைப்பாளியும் அவசியம் தேவையென உணரும் மனிதன்...அதில் ஒன்று பிசகினாலும் முழுமை என்பது சாத்தியமே அல்ல என தெளிவாக இருக்கும் மனிதன்... தன்போன்ற ஒரு யுனீக்’’கான படைப்பிற்கு, எவ்வளவு மெனக்கெடுதல் வேண்டும் என உணர மறுக்கிறான். அதை இயற்கை என்கிறான்.
அது ஒரு வகைக்கு என்றால்,பரிணாமக்கோட்பாட்டின் படி,ஒற்றை உருவில் இருந்த குரங்கு ஏன் உருவ ஒற்றுமையே இல்லாத மனிதனாக பரிணமிக்க வேண்டும்? அவைகளுக்கு அப்போது அடையாளம் காணுவதில் சிரமம் இருந்திருக்கக்கூடும் என கருத்துச் சொல்லலாம். ஆனால் அவைகளுக்கு அப்படி இருந்திருக்காது.இன்னும் இப்படி அத்தியவசியமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் அவற்றிற்கு இல்லை. ஒரு பருவத்தில் தனது குட்டிகளை துரத்திவிடும் பழக்கமும்,அவை வளர்ந்து தாய்க்குரங்கை மறந்து தன் போக்கை அமைத்துக்கொள்ளும் பண்பும் கொண்டவை.எது எதனுடன் இணைகிறது என்ற வேறுபாடே அறியாதவை.எந்தக்குரங்கு தன்னை பெற்றதோ,அதனுடனே இணையும் விலங்குகளே அவை. அப்படி வாழ்ந்த வாழும் விலங்குகளுக்கு இப்படி பிரித்தறிந்து கொள்ளத் தேவையான நிற உருவ அமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள என்ன தேவை வந்தது? இதெல்லாம் தவறு, அடையாளம் தேவை என உணர்ந்ததோ குரங்கு??
இல்லை... மனிதன் பிரத்தியேகமாக,படைக்கப்படும் போது மட்டும்தான் இவ்வாறு ஓவ்வொரு தன்மைகளிலும் தனித்துவம் பெறமுடியும். குரங்கின் உள்ளத்தில் உதித்து ஜீன்களில் விளைந்ததா? ஹ்ம்ம். இல்லை.. இயற்கையாக சிதறிய துண்டில் இருந்து இவை அனைத்தும் உருவானவை என்றால்... வேண்டுமானால்,அணுகுண்டு போடப்பட்ட இடத்தில் விளையும் பயிரும், ஜனிக்கும் உயிரும் எப்படி உருக்குலைந்து வருமோ, ஒருவேளை அப்படிவர வாய்ப்பு உண்டு. அப்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதனும்,இதயம் வெளியே, கண்கள் பிதுங்கி, வளர்ச்சி குன்றி, இவ்வாறாகப் பிறந்து,.. தப்பித்தவறி ஒன்றிருவர் நல்லபடி பிறந்து, அவர்கள் இதை இயற்கை என்றால்? ஆம் இயற்கைத்தேர்வு இவ்ளோதான் என ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் எதைத் தொட்டாலும் பெர்ஃபெக்ஷன் பெர்ஃபெக்ஷன்.
இன்னும் இவர்கள் கூறும் இயற்கையே ஒரு படைப்புதான். பூமி,சிதறிய துண்டாக உருவாகிற்று. ஓக்கே.அடுத்து அதில் நீர்,காற்று இவை சரிவிகிதத்தில் எப்படி ஏன் வந்தது? அதும் இயற்கை என்றால்.. பூமி சுழன்று விதவிதமான காலச்சூழலையும்,நீர் சுழற்சியையும், தாவரங்களையும், கனிகளையும், விதைகளையும்,அதனால் எக்காலமும் கிடைக்கும் உணவுக்கான மூலத்தையும் கொடுத்திருக்கவேண்டிய அவசியம் என்ன? அடுக்கடுக்கான வளிமண்டலங்களை அமைத்து பூமியை பாதுகாக்கும் ரகசியம் தான் என்ன? சூரியனிடம் இருந்து வரும் அகச்சிவப்பு புறஊதாக்கதிர்களை வடிகட்ட, இக்கதிர்களைத் தவிர அனைத்தையும் ஊடுருவச்செய்யும் வண்ணம் பிரத்தியேகமான ஃபில்ட்டரை உருவாக்கியிருக்க வேண்டிய தேவை பூமிக்கு ஏன் வந்தது? இயற்கை தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் அறிவுடையதா? ஹ்ம்ம்... இல்லை.
இவை அனைத்தையும் சிந்திக்கும் போது! வரும் ஒரே சிந்தனை. பிரம்மாண்டம்.அதை செதுக்கி வடித்த மாபெரும் படைப்பாளியின் மீதான பிரம்மிப்பு! ஆம் அவனே சொல்கிறான்.
மனிதன் சிந்தித்து உணரவேண்டமா? அவனுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன : அல் குர்ஆன்
ஆம்...ஆம்...நான் கண்டவை அனைத்தும் அத்தாட்சிகள் தானே? மறுக்கமுடியுமா? இத்தகைய அத்தாட்சிகள், அதைக் கண்ணுரும் மனிதனுக்கு எதை உணர்த்துகின்றன?
இவை அனைத்தும் சர்வ வல்லமை பொருந்திய ஒருவனது கைவண்ணம் என்பதைத்தானே!. அப்படி படைத்தவன், அவை அனைத்தையும் பிரத்தியேகமாக மனிதனுக்கு வசப்படுத்தி கொடுத்ததன் தாத்பரியம் என்ன?
அவ்வாறு இவ்வுலகு முழுவதும் மனிதனுக்கு வசப்படுகிறதென்றால், முழு உலகும் மனிதனுக்காக படைக்கப்பட்டது எனும் இறைவாக்கு மெய்யிலும் மெய்யல்லவா?
அவன் எத்தகையவன் என்றால் உலகத்தில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான் : அல் குர்ஆன் 2:29
தாவரங்களும்,அவை ஆயிரம் விதங்களில் வெளிப்படுத்தும் மலர்களும், காய்,கனி, போன்ற உணவுகளும்,ஏன் விளைகின்றன.தானே விளைந்து அழிந்து, என்ன காரியத்தை இவை சாதிக்கிறது? மிகப்பொருத்தமாக, மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிட்டு, மனிதன் வெளியிடும் கரியமில வாயுவை எடுத்துக்கொள்ள தாவரங்களுக்கு என்ன தேவை? மனிதனைப்போலவே தாவரங்களும் ஆக்ஸிஜனை கிரகித்தால்? நிலை என்ன? இன்னேரம் அனைத்தையும் அழித்து மனிதனும் அழிந்திருப்பான்... அல்லது அதை அறியும் முன்னமே அழிந்து இருப்பான். அப்படியாகாமல், எத்தனை பொருத்தமான டிஸைன்!!!? காடுகளை பாதுகாத்தால்,மனிதனின் உடல் உணவும், உயிர் உணவும் கிடைக்கும் வண்ணம்!!!. இரண்டிற்கும் வாழ்வு. Mutual Benefits.. இது இயற்கையின் செயலா???
இயற்கை எழில்களையும் மலர்களையும் ரசிப்பவன் முழு உலகிலும் மனிதனாக மட்டுமே இருக்க. அந்த அழகால் தனக்கு எவ்வித பலாபலனும் இல்லாத நிலையில்,அவை மனிதனுக்காக உருவானது தானே?
பசுவின் மடியில் கன்றின் தேவை தாண்டி, லிட்டர் கணக்கில் பால் சுறப்பது எதற்காக?.. மனிதனைத்தவிர எந்த விலங்காவது பயன்படுத்துமா?. இல்லை, மனிதன் குடிப்பதால் அதிகம் சுறக்க பழகிக்கொண்டதா?
குதிரைகள் வேட்டை பிராணிகள் அல்ல.அதிகம் வேட்டையாடப்படுவதும் அல்ல.தாவர உண்ணிகளே! மற்ற விலங்குகள் போல இயல்பான ஓட்டம் போதுமானது.அவற்றின் தொடர் அதிவேக ஓட்டம் என்ன பயனளிக்க பரிணாமத்தால் மெருகேற்றி இருக்கமுடியும்? பந்தையம் வைத்து பரிசு வழங்குகிறதா குதிரை? இல்லை.அதனால் வேறெந்தப் பயனும் உலகில் உண்டா? மனிதப் பயன் தவிர??
மாடுகள் ஒட்டகங்கள்,இவை அனைத்தும் தன்னைவிட பலமடங்கு எடையை சுமந்து இழுத்து பலமயில் தூரம் நடக்கும் வண்ணம் தகவமைப்பை பெற்றுள்ளதே! தனக்கு பயனில்லாத இந்த பலம் எதற்கு? எதைக்கட்டி இழுக்க இவை இப்படி பரிணமித்தன?.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
ஹ்ம்ம்.....எல்லாவற்றிற்கும் மேலாக,இத்தனை தனித்திறன் கொண்ட விலங்குகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு வயப்படுகிறதே! மனிதனும் இவைகளை கட்டுக்குள் கொண்டுவரும் திறன் வேண்டும் என அதை பரிணாமத்தின் மூலம் வளர்த்தானா? அப்படியானால் காலாகாலமாக கால்வலிக்க ஓடி ஓடி வேட்டையாடும் விலங்குகள் இன்றைய பொழுது வரையிலும் எவ்விதத்திலும் பரிணமிக்கவில்லையே பாவம்? அவைகளல்லவா நம்மைக்காட்டிலும் அதிக பரிணாம வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். புலி,சிங்கம் எல்லாம் இன்னேரத்துக்கு மான்களை வலை, அல்லது trap வைத்தல்லவா உட்கார்ந்த இடத்தில் இருந்து வேட்டையாட வேண்டும்?
ஒன்றும் நடக்கவில்லை.ஆனால் மனிதன் மட்டும் பரிணமித்தான்.கேட்டால் டார்வின்... ஹ்ம்ம்! மற்ற விலங்குகள் எப்படி எப்படி இருக்கின்றனவோ, மனிதனும் அப்படியே!.. மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பகுத்தறிவு அவனை மற்ற விலங்குகளில் இருந்து பிரித்து மனிதனாக்குகிறது. ஹ்ம்ம் அப்படி ஒரு முடிவுக்கு வந்தால்! அறிவியலைத் தாண்டிய ஒரு சூப்பர் பவர் இருப்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். அதை ஒப்புக்கொள்ள மனங்கொடாத முரட்டுப் பிடிவாதம் அவர்களை அங்கேயே நிறுத்துகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் அறிவியலும் இறைவனை நம்பத்தான் போகிறது... இப்போவே கிட்டத்தட்ட வந்தாயிற்று... ஆனால் அறிவியல் நம்பும் காலம் வரைக்கும் நாம் இருப்போமா? இல்லை... நாம் இந்த வாழ்க்கையை கடந்து விட்டால் அவ்வளவுதான்... அதனால் காலத்தோடு சிந்திப்போம்..படைத்தவனை அறிவோம்...
அன்புடன்
ரஜின்
Assalamu alikum bro!
பதிலளிநீக்குMasha allah
allah'vin padaipil ovvonrum athisiyam than!!!
Assalamu alikum bro!
பதிலளிநீக்குMasha allah
allah'vin padaipil ovvonrum athisiyam than!!!
உங்கள் பயண அனுபவத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள் சகோ..//தனக்கென தன்னாட்டு ஏஆர் ரஹ்மான்கள் அவர்களின் காதுகளில் ஹெவிபாஸ் பாடல்களை பாடிக்கொண்டிருக்க,//ரசனையான வரிகள்..இது ஒரு பயண அனுபவ கட்டுரையோ என்று படிக்க ஆரம்பித்த எனக்கு,அந்த கட்டுரையின் வாயிலாக இஸ்லாமிய பிரசாரத்தை செய்ததது ஆச்சரியத்தை கொடுத்தது........உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்........
பதிலளிநீக்குஎங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......அல்லாஹ்வின் சாபம்-தப்புமா தினமலர்?,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
iநீங்க தினம் மெட்ரோவில் தான் ஆபிஸுக்கு போறீங்க்லா நல்ல் இருக்குமே.
பதிலளிநீக்குசகோ ரஜின்
பதிலளிநீக்குசில இடங்களில் வலிப்பு காரணமாக, தன்னிடம் ஜிப்ரீல் பேசியதாக நபிகள் நாயகம் நினைத்துகொண்டார் என்று எழுதிவருகிறார்கள்.
அதனை அறிவியற்பூர்வமாக மறுத்து எழுத வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
எங்கே...எங்கே...போயிட்டீங்க...என்னாச்சு...
பதிலளிநீக்கு