அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே....
ஸஹீஹ் முஸ்லிம் - மின்நூல் முழுமையான பாகம் தமிழில்..
இஸ்லாமிய அடிப்படைகளான குர் ஆன் ஹதீஸ் கிரந்தங்களில், இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நம் கையை எட்டிவிட்ட சூழலில்,மிக முக்கிய அடிப்படையான ஸஹீஹ் முஸ்லிமானது முழுமையாக கிடைக்கவில்லை...
அதிகபட்சம் 500 ஹதீஸ்கள் pdf தொகுப்பாக வெளிவந்து வலையில் கிடைக்க காணலாம்...ஆனால் அவ்வளவு தானா???
மொத்தமாக 5700 க்கும் மேற்பட்ட ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை உள்ளடக்கியதல்லவா ஸஹீஹ் முஸ்லிம்....
இன்னும் இவை சில தளங்களில் ஆன்லைன் எடிஷனாக இருக்கிறது. இருப்பினும் எவ்வித தங்குதடையின்றி நினைத்த நொடியில் திறந்து பயன்படுத்த, pdf தொகுப்பே உகந்த ஒன்று.
இதை அனுபவ ரீதியில் நான் உணர்ந்ததும்,வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையுமே இந்த தொகுப்பு உருவாக காரணமாக அமைந்தது...இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற தொகுப்புகளை மின்னூல் கோப்புகளாக மாற்றி அனைவரின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ் தொடர்ந்து வழங்க பிரார்த்தித்தவனாக இம்மாபெரும் ஹதீஸ் களஞ்சியத்தை மின்நூல் கோப்பாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக்கி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நான்கு பாகங்களாக வெளியிட்டது.இம்மின்நூலானது ஆன்லைன் பிஜெ தளத்தில் உள்ள,ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பை மூல ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த களஞ்சியத்தை மூலத்துடன் சரிபார்த்தும்,மேலதிக ஆலோசனை வழங்கியும்,முழுமையான ஆதரவளித்து உதவிய உம்மத் வலை குழும சகோதர சகோதரிகளை இந்நேரத்தில் நினைவுகூறி நன்றி நவிழ கடமைப்பட்டுள்ளேன்..
பதிவிறக்க சுட்டி :
2Shared.com Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to Download
Google Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to view and Download
பதிவிறக்கிக்கொள்ள இயலாதவர்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
askabt.islam@gmail.com
இவ்வாக்கத்தை பயன்படுத்த துவங்கும் முன்,கவனிக்க வேண்டிய சில
முகப்பை அடுத்த,முன்னுரையை முழுமையாக படித்துவிட்டு தொடருங்கள்..
அத்தியாய அட்டவணை,தலைப்பை க்ளிக் செய்தால்,அந்தந்த அத்தியாயத்தை அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது...
மேலும் அட்டவணை தலைப்பின் அருகில் உள்ள இந்த ஆரோவை க்ளிக் செய்து,அந்தந்த அத்தியாயத்தில் உள்ள துணைத் தலைப்புகளையும், அதன் பக்க எண்களையும் எளிதில் அறிந்து,குறிப்பிட்ட ஹதீஸ்களை எளிதாக அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
இன்ஷா அல்லாஹ் பயன்படுத்தி பயனடையுங்கள்,அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
அன்புடன்
ரஜின்
2Shared.com Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to Download
Google Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to view and Download
பதிவிறக்கிக்கொள்ள இயலாதவர்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
askabt.islam@gmail.com
இவ்வாக்கத்தை பயன்படுத்த துவங்கும் முன்,கவனிக்க வேண்டிய சில
முகப்பை அடுத்த,முன்னுரையை முழுமையாக படித்துவிட்டு தொடருங்கள்..
அத்தியாய அட்டவணை,தலைப்பை க்ளிக் செய்தால்,அந்தந்த அத்தியாயத்தை அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது...

இன்ஷா அல்லாஹ் பயன்படுத்தி பயனடையுங்கள்,அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),,,
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
***************
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1. தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்
2. ****
அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****
3. **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****
4. **** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைகளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?. ****
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குசகோ.ரஜின் அப்துல் ரஹ்மான்,
மாஷாஅல்லாஹ்..!
சஹீஹ் முஸ்லிம் -
அனைத்து பாகங்களும் -
முழுமையாக எல்லா 5771 ஹதீஸ்களையும் கொண்டு-
pdf formate-இல்,
தமிழ் இணைய உலகில் முதன் முறையாக-
மக்களுக்கு ஆக்கித்தந்த தங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கிருபையும் ஈருலகிலும் கிட்ட அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
இதை உருவாக்க ஆணிவேராக இருந்து காரியமாற்றிய தங்களுக்கும் மற்றும் நம் உம்மத் குழுவினரின் பிழை-சரிபார்க்கும் உறுதுணையான முயற்சிக்கும் உழைப்பிற்கும் என் நன்றிகள். ஜசாக்கலாஹ் க்ஹைர்.
நம் எண்ணத்தை முழுமையாக்கித்தந்த இறைவனுக்கு மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.
ஆன்லைன் பிஜேவில் வெளியிடப்பட்டிருக்கும் சஹீஹ் முஸ்லிம் தமிழ் மொழிபெயர்ப்பு, ரஹ்மத் ட்ரஸ்டின் உழைப்பு களவாடப்பட்டதாகும். அதனைத் தன்னுடைய மொழிபெயர்ப்பு போன்று, அப்படியே திருடி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரஹ்மத் ட்ரஸ்டிற்கு ஒரு நன்றிகூட அத்தளத்தில் வெளியிடப்படவில்லை. அதை அடிப்படையாக வைத்து நீங்களும் இங்கே ப்பி டி எஃப் வடிவில் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குநீங்களாவது ரஹ்மத் ட்ரஸ்டிடம் அனுமதி வாங்கினீர்களா?
இல்லையேல், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பை மற்றொருவர் இதே போன்று திருடி தம் உழைப்பு போன்று வெளியிட்டால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? குறைந்தபட்சம் அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்கள்?
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அன்சார்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி,,,,
சகோ..ஸஹீஹ் முஸ்லிம்.இந்த தொகுப்பிற்கான மூலத்தை நான் ஆன்லைன் பிஜெ தளத்தில் இருந்து எடுத்து அதை அதன் முன் பக்கத்தில் மூல ஆதாரம் இவர்களுடையது என முன்னிருத்தியே வெளியிட்டிருப்பேன்....
என்னுடையது,அதை எளிதாக்கி,திருத்தி,அலைன் செய்து,வடிவமைத்து அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்திருக்கிறேன் ..இதில் எனது பங்கு அவ்வளவே.....
இது யாருக்கும் உரிமையானதல்ல....
even எனக்கும்...கூட உரிமையானதல்ல...
இது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் ;பொருத்தத்தை நாடி தமிழ் இஸ்லாமிய சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது..
அவ்வளவே...அல்லாஹ் உள்ளங்களை பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்...
அவர்கள் யாரிடம் இருந்து பெற்றார்கள் என்பது எனக்கு தெரியாது..
நான் அவர்களிடம் இருந்து பெற்றேன்..அதை முகப்பில் தெரிவித்து முன்னுரையிலும் தெரிவித்துவிட்டேன்...
இதை நான் காப்பிரைட் செய்தாலோ,அல்லது விற்பனை செய்தாலோ,அல்லது இதன் மூலம் வேரெந்த ஆதாயம் அடைந்தாலோ,அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டியது அவசியம் என உணர்கிறேன்....
அவர்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்ட ஒரு தொகுப்பை மேலும் எளிமைப்படுத்தினேன்,..அவ்வளவே..
//உங்கள் உழைப்பை மற்றொருவர் இதே போன்று திருடி தம் உழைப்பு போன்று வெளியிட்டால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? குறைந்தபட்சம் அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்கள்?//
இதை நான் ஒருபோதும் என்னுடையது என சொல்லவில்லை..இதை பிடிஎஃப் ஆக்கியது நான் அவ்வளவே...அதன் மூல ஆதாரம் ஆன்லைன் பிஜெ உடையது...
அல்லாஹ் நன்கறிந்தவன்..
அன்புடன்
ரஜின்
இது மிகப்பெரிய ஒரு விடயம்.
பதிலளிநீக்குஉங்கள் பணியை அல்லாஹ் மென்மேலும் இலகுவாக்கட்டும்.ஜெஸாக்கல்லாஹு கைர்.
சகோதரர் அன்சார்,
பதிலளிநீக்குவ அலைக்கும் சலாம்...
எனக்கும் தாங்கள் இப்போது சொல்லித்தான் இந்த விசயம் தெரியும். இன்ஷா அல்லாஹ், ஆன்லைன்பிஜே தளத்தினரிடம் இது குறித்து விளக்கம் கேட்கின்றேன்.
மேலும், சகோதரர் ரஜினை பொருத்தவரை, இதன் மூலம் ஆன்லைன்பிஜே என்ற எண்ணத்திலேயே இதுவரை இருந்திருக்கின்றார். ஆகையால், இதில் இறைவன் ரஜினை குற்றம் காண போவதில்லை. மேலும் அவரது பணி லாப நோக்கில்லாதது. புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குதோழா .ரஜின் அப்துல் ரஹ்மான், அவர்களே
மாஷாஅல்லாஹ்..!
PDF FILE ஆக பதிவிறக்கம் செய்துக்கொண்டேன்
அருமையாக இருக்கிறது
உங்கள் பனி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல
வல்லோன்னிடம் துவா செய்கிறேன் ....
மிகவும் பயனுள்ள பதிவு. ரொம்ப அருமையா செய்திருக்கீங்க ரஜின் ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குசகோதரர் ரஜின்
மாஷா அல்லாஹ் இந்த முயற்ச்சிக்கு வல்ல இறைவன் உரிய கூலியை வழங்குவானாக
ஒரு தகவல் சகோதரர் அன்சார் சொல்லியது சம்மந்தமாக ஆன்லைன்பிஜே தளத்தில் முன்பு புகாரி மொழிப் பெயர்ப்பு வந்த போதே பிஜே இது சம்மந்தமாக சொல்லி இருப்பார். அதை பார்க்க
http://onlinepj.com/buhari_thamizakam/athiyayam1
இங்கே சென்று பார்க்கவும்
முஸ்லீமுக்கும் தனியாக சொல்லி இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது
உங்கள் பனி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல
வல்லோன்னிடம் துவா செய்கிறேன் ....
tamilmanatula unga pativu varute :(
பதிலளிநீக்குAssalamu alikum bro! ALLAH UNGALUKU IMMAIYELUM MARUMAIYELUM VETRI THANTHARULVANAGA! Aameen
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குசகோதரர் ரஜின்,
உங்கள் பதிலுக்கு நன்றி!
நீங்கள் அறியாமல் இந்த வேலையினைச் செய்திருந்தால் அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்.
ரஹ்மத் ட்ரஸ்ட் இதற்காகவே ஆலிம்களைப் பணிக்கு அமர்த்தி பல வருடங்கள் மிகுந்த பொருட்செலவில் செய்த மொழிபெயர்ப்பு இது. அதனை எவ்வித அறிவிப்புமின்றி தன்னுடைய மொழிபெயர்ப்பு போன்று பிஜே வெளியிட்டுள்ளார். அதனை அவருடையது என நம்பி நீங்களும் வெளியிட்டுள்ளீர்கள். உங்களைப் போன்று எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை.
சகோதரர் ஆஷிக்,
சகோதரர் ரஜினின் எண்ணத்தை நான் அறியேன். அவர் தெரியாமல் இதைச் செய்திருந்தால் அல்லாஹ் அவரை மன்னிக்கப்போதுமானவன். அவரின் நற்செயலை அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.
சகோதரர் ஜாகிர்,
ரஹ்மத் ட்ரஸ்ட் தன்னுடைய மொழிபெயர்ப்பான புஹாரியினைத் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை அவர்களின் அனுமதியுடன் காப்பி செய்து யார் வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்.
ஆனால், முஸ்லிம் மொழிபெயர்ப்பை ரஹ்மத் தன் இணைய தளத்தில் வெளியிடும் முன்னரே பிஜே தன்னுடைய இணையதளத்தில் அப்படியே வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் கூறுவதுபோன்று புஹாரிக்குக் கொடுக்கப்பட்டது போன்ற எந்தக் குறிப்பும் இல்லை. எனவே தான் சகோதரர் ரஜின்கூட, இது பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு என எண்ணி நன்றியினை ஆன்லைன் பிஜேவுக்குப் போட்டு வெளியிட்டுள்ளார்.
இதே மோசடியினை வேறு யாராவது செய்திருந்தால்....?!
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் வாஞ்ஜூர்,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
நல்ல முறையில் பயன்படுத்தி அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதை உருவாக்கி கொடுத்த வல்ல அல்லாஹ் என்றும நன்றிக்குரியவன்...
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்,துஆவுக்கும் நன்றி...
அல்லாஹ் உங்களது துஆவை அங்கிகரிக்க போதுமானவன்...ஆமீன்..தங்களை போன்ற சகோதர சகோதரிகளின் ஆர்வமிக்க பங்களிப்பு,இந்த காரியத்தை இலேசாக்கியது என்றால் அது மிகையல்ல...
அல்லாஹ் நம் அனைவரின் செயலகளையும் பொருந்திக்கொள்ள போதுமானவன்...
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அஷ்ஃபா,
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி,,
உங்களது துஆவை அல்லாஹ் ஹபுள் செய்ய போதுமானவன்...ஆமீன்..
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக் அஹமது,சகோ ஜாகிர்...
பதிலளிநீக்குசகோ அன்சார் அவர்களுக்கு தாங்கள் வழங்கிய மேலான வழக்கத்திற்கு நன்றி...
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம்
பதிலளிநீக்குசகோ நாசர்
சகோ ஸ்டார்ஜன்
சகோ சுவனப்பிரியன்
சகோ ஜாபர்
தங்கள் அனைவரின் வருகைக்கும் மேலான துஆக்களுக்கும் நன்றி,...
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்...
அருமையா இருக்கு சகோ. அல்லாஹ் உங்களின் அமலுகளை அங்கிகரிப்பானாக
உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
வ அலைக்கும் ஸலாம் அருமை சகோதரி....
பதிலளிநீக்குஉங்களது துஆவிற்கு ஆமீன் சொல்லிக்கொள்கிறேன்....
உங்களை போன்றோரின் ஒத்துழைப்பு இதில் இருக்க,அல்லாஹ் இதை லேசாக்கி கொடுத்தான்...சகோ
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி சகோ
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்., நேர்த்தியான வடிவமைப்பு
மேற்கொண்ட இப்பணிக்காக அல்லாஹ் இம்மை-மறுமை கூலியை நிரப்பமாக வழங்குவானாக!
இந்த முழுமையான தொகுப்பிற்கு எவ்வளவு நேரங்களை செலவழித்து இருப்பீர்கள் என்பதை தொகுப்பை பார்க்கும்போது உணர முடிகிறது.,
இன்னும் ஏராளமாக இந்த உம்மத் பயன்பெறும் வகையில் இதைப்போல் ஆக்கங்கள் பல உருவாக்கிட அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குஅன்பின் ரஜின் அப்துல் ரஹ்மான்,
மாஷாஅல்லாஹ்..!
பதிவுலகில் ஒளிவீசும் அறிவு நட்சத்திரங்களில் ஒன்றாகி சத்தியமார்க்கத்தின் வழியில் இருப்போர்களுக்கும்,
சத்திய மார்க்கத்தை தேடுவோருக்கும் வழி நடத்தி செல்லும் ஊன்றுகோல்களில் ஒன்றாக என்றென்றும் இது இருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
வ அலைக்கும் ஸலாம் சகோ குலாம்..
பதிலளிநீக்குஇந்த ஆக்கத்தில் பங்காற்றிய தங்களுக்கும் தங்களது நண்பருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...சகோதரர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும்,அல்லாஹ்வின் மாபெரும் கிருபையும்,இவ்வாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது..அவ்வளவே சகோ...அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அவனது மேலான அருளை வழங்க போதுமானவன்...
தங்களது துஆவை அல்லாஹ் ஹபுள் செய்வானாக ஆமீன்...
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம் வாஞ்ஜூர் அப்பா அவர்களே..
பதிலளிநீக்கு//பதிவுலகில் ஒளிவீசும் அறிவு நட்சத்திரங்களில் ஒன்றாகி சத்தியமார்க்கத்தின் வழியில் இருப்போர்களுக்கும்,
சத்திய மார்க்கத்தை தேடுவோருக்கும் வழி நடத்தி செல்லும் ஊன்றுகோல்களில் ஒன்றாக என்றென்றும் இது இருக்கும். //
இன்ஷா அல்லாஹ்...
அல்லாஹ் பெரியவன்...
அன்புடன்
ரஜின்
alhamthulillah
பதிலளிநீக்குribnas mohamed
ஸலாம்
பதிலளிநீக்குநானும் copy and paste செய்து வைத்திருந்தேன் நீங்கள் நன்மையில் முந்திகொண்டீர்கள் .... நான் pdf file வுருவாகலாம் என்று நினைத்திருந்தேன் ...
என்ன சொல்வது ???
ஜசாகல்லாஹ்...
மாஷா அல்லா அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குஉங்க்ள் பணி மேன் மேலும்தொடர வாழ்த்துக்கள்.
அன்பின் ராஜின் நீங்கள் வடிவமைத்த பி. டி. எஃப் கோப்பு என்னிடமுள்ளது அதில் ஹதீஸ்கள் ஒவ்வொறு பாக்கமாகவே பார்க்கவே படிக்கவே முடிகிறது வார்த்தைகளை கொடுத்து தேடினால் கிடைக்க வில்லை. நான் பைலை திறந்து வைத்துக் கொண்டு கண்ட்ரோல் எஃப் அழுத்தி அதில் வரும் சர்ச் விண்டோவில் அல்லாஹ் என்று கொடுக்கிறேன் வரவில்லை. பி. டி.எஃப் இல் இருந்து அல்லாஹ் என்பதை காப்பி செய்து கொடுத்தால் அது பற்றி ஹதீஸ்கள் ஓபன் ஆகிறது நான் nhm ரைட்டர் பயண்படுத்துகிறேன் email kaleelsms@gmail.com நான் வார்த்தைகளை கொடுத்து தேடுவது எப்படி
பதிலளிநீக்குAlhamdhulillah arumayana padhippu
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ் அருமையான தொகுப்பு
பதிலளிநீக்கு