வியாழன், அக்டோபர் 08, 2009

ரஹ்மத்துல்லா - பதில் 02

இங்கு அவர் என்னை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதில் தர வேண்டியுள்ளதால்,அவரது பதிவை சிவப்பு வண்ணத்திலும்,எனதை கருப்பிலும் பதிந்துள்ளேன்..


ரஹ்மத்துல்லா எழுதியது....
7 October 2009 at 6:31 am

அல்லாஹ்வின் வழியை முஸ்லீம்களுக்கே தெளிவுபடுத்த வேண்டிய தேவையை சகோதரர் ரஜினின் மறுமொழி சுட்டிக்காட்டுகிறது.
தீவிரவாதம் செய்பவன் முஸ்லீம் அல்லதான். ஆனால், முஸ்லீம்கள் செய்வது தீவிரவாதம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
பரிதாபத்துக்குரிய ரஜினின் பதிலை பார்த்து பரிதாபப்படாமல் என்ன செய்வது? அது எக்காலமும் முஸ்லீம்களுக்கு தைரியமூட்ட கொடுக்கப்பட்டது. பத்ரு போருக்கு மட்டுமான வசனம் என்றால் அது ஏன் நிரந்தரமான அல்குரானில் இடம் பெற்றுள்ளது? வெற்றி என்றும் முஸ்லீம்களின் பக்கமே என்று அல்லாஹ் இங்கே தெளிவாக்குகிறான். முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வே முஸ்லீம்களின் அருகே நின்று போர் புரிய மலக்குகளை அனுப்புகிறான்.
உண்மைதான் ரஹ்மத்துல்லாஹ்,இது பத்ரு போரின்போது அந்த வசனம் இறக்கப் பட்டாலும்,இது முஸ்லிம்கள் "போர் புரியும்"(வன்முறை அல்ல) எல்லா காலத்துக்கும் பொருந்தும்...சரிதான்.ஆனால் இந்த வசனத்தை கையாள நீங்கள் போர் அல்லவா புரியவேண்டும்...
ஈராக்கில்,அமேரிக்காவுக்கு,எதிராகவும்,பாலஸ்தீனில்,இஸ்ரேலுக்கு எதிராகவும்,நீங்கள் நிற்கும் போது இந்த வசனத்தை கையில் எடுத்துகொள்ளுங்கள்.....
மாராக,இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும்,பொது மக்கள் மத்தியிலான குண்டு வெடிப்பு,மும்பையில்,சமீபத்தில் தாஜ் ஹோட்டல்,நரிமன் ஹவுஸ்,ரயில் நிலையம் பொன்றவற்றில் நடந்த கொலைவெறித்தாக்குதல்களுக்கு,நீங்க ஜிஹாதுன்னு பேரு வச்சுகிட்டு,யாரோட போர் பொரியுரீங்க சார்....ஏதும் அறியாத அப்பாவி மக்களோடயா?...
//அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல…//
//முஸ்லீம்களின் எதிரிகள் நாட்டை கைப்பற்றவோ அல்லது செல்வதுக்காகவோ போர் புரியவில்லை. அவர்கள் சாத்தானின் பக்கத்திலிருந்து போர் புரிகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஜிஹாதுக்காக போர் புரிகிறார்கள்.//
ஆமா சார்.. அப்பொ முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,இல்ல,அததான்,நா சொன்னேனெ...
அது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான போர்தான்..அதனால் தான் அல்லாஹ்,எதிரிகளை குறித்து சொல்லும் போது நிராகரிப்போர் என்று குறிப்பிடுகிறான்...
//”வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.” 9:29
எதுவரையிலும் ஜிஹாத் என்பதற்கு மேற்கண்ட இறைவசனத்தை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் சகோதரர் ரஜின் அவர்களே?//
ம்ம்ம்...அந்த வசனத்த...நீங்களே கண்ண நல்லா தொரந்து ஒரு தடவ,இல்ல... ரெண்டு தடவ படிச்சு பாருங்க... 
வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ"(அப்படீன்னா...ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.("கப்பம் கட்டும் வரை"அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29
இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்..  
அல்லாஹ்வுடய வார்த்தையயை ஒங்களுக்கு ஏத்தமாதிரி வளைக்காதீங்க சார்....
உமர் (ரலி)அறிவித்தார்.
(எனக்கு பின் வருகிற புதிய) கலிஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்.அல்லாஹ்வின் பொருப்பிலும்,அவனுடய தூதர் (ஸல்) அவர்களின் பொருப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.அதன்படி அவர்களை பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்.அவர்களின் சக்திக்கேற்பவே தவிர(ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) அவர்கள் மீது சுமத்த கூடாது.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3052
இது என்ன சொல்லுதுன்னு பாத்தீங்களா?...முஸ்லிம்கள் பொருப்பில் உள்ள மாற்றுமதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போரிடனும்னு சொல்லுது...
ரஹ்மத்துல்லா,உங்களது புரிதல் படி:"ஒங்க பொருப்புல இருக்குரவங்கள மொதல்ல கொல்லுங்கன்னுல மார்க்கம் சொல்லனும்"...அவங்களும் நிராகரிப்பாளர்கள் தானே....
மாறா அவங்கள பாதுகாக்க சொல்லுது....இது தான் இஸ்லாம்...புரியுதா?
//இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன….
அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது//
யார் இலலை என்று சொன்னது சகோதரர் ரஜின் அவர்களே? இன்றும் அதே நிலைதானே நீடிக்கிறது? இன்று உலகத்தில் ஒரு புது கட்டமைப்பை உருவாக்க அல்லாஹ்வின் வழியில் நிற்கும் முஸ்லீம்கள் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகின்றனர். அது உருவாகிவிட்டதா? உலகெங்கும் இஸ்லாமின் ஆட்சியில் வரும் வரைக்கும் என்ன செய்யவேண்டும் எனப்தைத்தான் 9.29 கூறுகிறது.
அப்படியா?....அப்போ ஒரு போர் பிரகடணம் செய்யுங்க....போருக்கு வர்ரவங்கள கொல்லுங்க...யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்..
ஏதும் அறியாத மக்கள் என்ன செஞ்சாங்கன்னு அவங்க மீது ஒங்க கோவம்...அவங்களாலதான்,ஒங்கள திரும்ப தாக்க முடியாதுன்னா?
//இல்லை சகோதரர் ரஜின் அவர்களே..
அவர்களும் காபிர்களைச் சார்ந்தவர்களே என்று நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.
இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களேஎன்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)
ம்ம்ம் இந்த வசனத்துல,அவங்கள தாக்கலாம்னோ,அல்லது கூடாதுன்னோ சொல்லல...சரிங்களா.....நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க.....
இத பாருங்க...
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். 
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3945
இது தான் போருக்கான முறையான ஹதீஸ்..சும்மா,எதயாவது எடுத்துவச்சு,ஒலராதீங்க....
//கஜ்வா என்னும் திடீர் தாக்குதலில் பெண்களும் சிறுவர்களும் இறப்பது தவிர்க்கமுடியாதது. இருபுறமும் அறிவித்து செய்யும் போரில்தான் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்//.
இது என்ன ஒங்களோட சொந்த ஃபத்வா வா?...இப்படித்தான் ஊருக்குள்ள பலபேர் இஷ்டத்துக்கு,ஏதோ மிட்டாய் கொடுக்குர மாதிரி,ஃப்த்வா கொடுத்துகிட்டு திரியுராங்க....
//,இது போன்ற ஒரு புதிய சமூகத்தை நீங்கள் அமைக்க முனைந்தால்,வரும் பிரச்சனைகளை தீர்க்க (திணிக்கப்பட்ட) சில போர்கள் நீங்கள் செய்வது அவசியம் என உணர்வீரகள்//
அதனைத்தான் நானும் சொல்கிறேன்.
//இது எல்லாவற்றிகும் மேலாகஇறைவன் கூருகிறான்..
எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று
கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று….//
இல்லை சகோதரர் ரஜின் அவர்களே. அந்த வரி அல்லாஹ்வால் யூதர்களுக்கு அருளப்பட்டது. அது யூதர்களுக்கு அருளப்பட்டது என்றுதான் அல்குரானிலும் இடம் பெற்றுள்ளது. அது முஸ்லீம்களுக்கு அருளப்படவில்லை.
அடப்பாவிங்களா...குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?...நல்ல கதையா இருக்கு..
சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே...அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே....
தாங்கள் எப்படி?????
ரஹ்மத்துல்லாஹ்,
மற்ற மதத்தினரையும்,மதங்களையும் சாடுவது,வெறுப்பதையும் வேலையாக கொண்டு திரியாதீங்க..முதல்ல நீங்க சார்ந்து இருக்கும் மார்க்கத்த முழுமையா தெரிஞ்சுகொங்க.....
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு"  இந்த ஒரு வசனம் போதாதா,நீங்க புரிஞ்சுக்க????????????
இது எனது வளைபூவிலும் பதியப்பட்டுள்ளது.ரஹமத்துல்லாஹ்,அங்கேயும் பதில் தரலாம்...
நன்றி
ரஜின்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்