புதன், அக்டோபர் 07, 2009

செங்கொடியில் வந்த பதிவிற்கு எனது மறுமொழி.



அவர் இட்ட தலைப்பு...


அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

பதிவை பார்வையிட...

http://senkodi.wordpress.com/2009/10/02/அல்லாவின்-ஆற்றலிலுள்ள-இட/#comment-196



  1. செங்கொடியார் அவர்களே,
    ஒரு மனிதனை கடவுள் படைக்கும்போதே அவன் சொர்க்கவாசியா நரகவாசியா என தன் ஏட்டில் எழுதி வைத்துருந்தாலும், மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறானென்றாலும், அந்த அறிவையும் இறைவனை மீறி சிந்திக்கமுடியாதென்றாலும், சுயமாக சிந்தித்தாலும் இறைவன் நாடியதே நடக்குமென்றாலும், அந்த அறிவைக்கொண்டு சுவர்க்கவாசியாக எழுதபட்டவன் நல்லதையே சிந்தித்து நல்லதே செய்வானென்றாலும், நரகவாசியாக எழுதபட்டவன் தீமையையே சிந்தித்து பாவத்தைமட்டுமே செய்வானென்றாலும், அவனுக்கு நல்லுபதேசம் கூறப்பட்டாலும் இறைவனின் நாட்டப்படியே முகத்தை திருப்பிக் கொள்வானென்றாலும், அதன்படியே சொர்க்கத்திற்குச் செல்பவன் சொர்க்கத்திற்குத்தான் செல்வானென்றாலும், நரகத்திற்குச் செல்பவன் நரகத்திற்குத்தான் செல்வானென்றாலும், பூமியில் குழப்பம் விளைவிக்கவே மனிதன் படைக்கப்பட்டவன் என்றாலும், இறைவன் மட்டுமே அறிந்த இதனை தான் சொல்லிக்கொடுத்ததை தவிர வேறெதையும் அறியாத மலக்குகள் எப்படி அறிந்துகொண்டார்கள் என்ற வியப்பிருந்தாலும், பூமியில் குழப்பங்கள் அதிகமாவது இறுதிநாளுக்கான அறிகுறியாக இறைவன் நாடியிருக்கின்றானென்றாலும், அப்படியாயின் குழப்பம் விளைவிக்கும் மனிதன் அதிகரிப்பது இறைவன் நாட்டமென்றாலும், தன் நாட்டப்படியே மனிதன் பாவம் செய்கிறானென்றாலும் ஷைத்தான் வழிகெடுப்பதாலேயே மனிதன் வழிகெட்டு பாவம் செய்கிறான் என ஒரு நாடகம் நடத்தி பழியை ஷைத்தான் மீது சுமத்தினான் என்றாலும், எல்லாவற்றையும் இறைவனே நாடுகிறான் என்றாலும், தண்டனயை மனிதனுக்கு மட்டுமே கொடுப்பது அநியாயமான தீர்ப்பு என்றாலும், நம்புங்கள்! நம்புங்கள்! நம்புங்கள்! செங்கொடியாரே, பூமியில் இருந்து பார்ப்பதற்கு சூரியன் பெரியதாக தெரிவதாலேயே அது சுருட்டப்படும் என்ற‌ இறைவனின் அறிவின் மீது சத்தியமாக, பூமியில் இருந்து பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் சிறியதாக தெரிவதாலேயே அவை உதிர்ந்துவிடும் என்ற இறைவனின் அறிவின் மீது சத்தியமாக, இவ்வுலகின் ஒரே சத்தியமார்க்கம் இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் ஒன்றேதான்.


    எனது பதில்


நல்லது அஸ்கர்.நல்லாவே,எழுதி இருக்கீங்க.. இது எல்லாமே,நான் முன்னர் பதிந்த லாஜிக்ல ஒன்னுமில்லாம போகிடும்...ஆமா.நீங்க ஏன் அத பத்தி ஒரு வார்த்த கூட பேசல.... சரி,நீங்க சொன்ன விஷயம் எல்லாம் தெரிந்தவன் தானே கடவுளா இருக்க முடியும்...அது தெரியாதவன்...என்னை,உங்களை பொல சாமான்ய மனிதனாகத்தானே இருக்க முடியும்... நீங்க சொல்ர மாதிரி...சுய சிந்தனை உடைய மனிதன்,சிந்தித்து செயல்பட்டு,அதன்படி தான் சொர்க்கம், நரகம்,அடையவேண்டும்...அவன் அதை அடையும் போது தான் அல்லாஹ்வுக்கே தெரியவேண்டும்.அப்படி இருந்தால் தான் அது நியாயம்.இது ஒங்க லாஜிக்.... ஒங்க லாஜிக் படி வந்தா...கடவுள் கொள்கையில எங்கயோ இடிக்கல?... எங்கயும் இல்ல....இங்க தான்...

தான் படைத்த படைப்பின் பிற்காலம் அறியாத கடவுள், பலகீனமானவர்.ஆனா எந்தவித பலகீனமும் இல்லாதவன் தானே,கடவுளாக இருக்க தகுதியுடயவன்?.... அப்படிப்பட்ட கடவுள் தான் வல்ல அல்லாஹ்...

இத சொன்னா/எல்லாமெ..கடவுள் தெரிஞ்சுதானே செய்ரான்,அப்போ அதுக்கு நான் பொருப்பா?...அப்டீன்னு நீங்க கேக்கனும்னா, அதுக்கு நீங்க சுயசிந்தனையற்ற ஆடு மாடாதான் இருக்கனும்.


ஆடு மாடா நீங்க இருந்தா,அப்படிப்பட்ட படைப்பிற்கு,அறிவு இல்ல,சிந்தனை இல்ல,நன்மை இல்ல,தீமை இல்ல,கடமை இல்ல,கண்ணியம் இல்ல,கட்டுப்பாடு இல்ல,நீதி இல்ல,நேர்மை இல்ல,நியாயம் இல்ல,மறுமை இல்ல,கேள்விகணக்கு இல்ல,சொர்க்கம் இல்ல,நரகமும் இல்ல.... 


இத அந்த ஆடு மாடும் கேக்காது,என்னா அதுக்கு அத சிந்திக்கிர அறிவும் இல்ல...


நீங்க அப்படியா? பிறக்கும் போது,நீங்களும் நானும் ஒன்னுதானே.... என்னுடைய அறிவு,இஸ்லாம் சரி,அதன் படி நடன்னு சொல்லுது... இன்னக்கி ஒங்களுக்கு,ஒங்க அறிவு சொல்லிதானே,இஸ்லாத்தை விட்டு விலகி போறீங்க....  


அஸ்கர்/செங்கொடி... நாம வாழும் போதே,நாம பாரக்காத பல விஷயங்கள, அடுத்தவன் சொல்லிதான்,நம்பி வாழ்ந்துட்டு இருக்கோம்..அப்பா உள்பட... 


சரி அஸ்கர்,நீங்க ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி. நெரய விஷயம் எழுதுரீங்க... நீங்க கடவுள் இருக்கான்னுரீங்களா?அல்லது இல்ல்னுரீங்களா? 
இல்ல கடவுள்னா எப்படி இருக்கனும் ஒங்க கருத்துபடி? கொஞ்சம் சொன்னீங்கன்னா..நாங்களும் தெரிஞ்சுப்போம்ல....


அன்புடன்
ரஜின்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்