வியாழன், மார்ச் 18, 2010

ஓவியர் M.F.Hussain - ஒரு முஸ்லிமின் பார்வை...

M.F.Hussain:
மஃபூல் ஃபிதா ஹுஸைன்.இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள பந்தர்பூரில் 1915களில் பிறந்து,M.F.Hussain என ப்ரபலமாக அறியப்பட்ட ஓவியர்..
ஃபோர்ப்ஸ் இதழின் படி இவர் இந்தியாவின் பிக்காஸோ என போற்றப் பட்டவர்.
M.F.Hussain முஸ்லிம் என சொல்ல தகுதியுடையவரா?
எனது பார்வையில் இந்த ஓவியர் பெயரளவிலே முஸ்லிமாகிறார்.இஸ்லாம் உருவங்கள் படைப்பதையும் அதை வரைவதையும் வன்மையாக தடை செய்கிறது.அது இணைவைப்பு எனும் பெரும் பாவத்திற்கு ஒப்பாகிறது.
அப்படி இருக்க ஒரு முஸ்லிமான இவர் ஒரு சாதாரண மனிதனையோ,அல்லது விலங்குகளையோ கூட வரைவதை தவிர்த்து இருக்க வேண்டும்..ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தாண்டி,இதை தனது ஆத்ம திருப்தி தரும் செயலாக கொண்டார்...
அதுவல்லாது,இஸ்லாம் ஆபாசமான,மானக்கேடான காரியங்களை செய்வதில் இருந்து மனிதனை வன்மையாக தடுக்கிறது.அப்படி இருக்க ஒருவன் பெண்களை வக்கிரமாக நிர்வாணமாக வரைவதை,என்னவென்று சொல்ல.
நமது நாட்டில் நிர்வாணம் கலையாக பார்க்கப் படுகிறது(வெகு சிலரால்).இன்ன பிற நாடுகளும்.பெரும்பாலும் ஓவியர்கள்,நிர்வாணத்தை கலையெனவே வாதிடுகிறார்கள்.
இது எனக்கு கொஞ்சமும் புலப்படாத விடையமாகவே உள்ளது.ஒரு பெண்ணை நிர்வாணமாக எப்படி கலைக் கண்ணோடு நோக்குவது.தெரியவில்லை.அது முற்றிலும் முடியாத காரியமாகவே எனக்கு தெரிகிறது.ஆயிரம் தான் நான் கலை கண்ணோடு நோக்குவேன் என்றாலும்...நான் பருவ வயதை அடைந்த இளைஞன் ஆயிறே..என்னுள் உள்ள ஹார்மோன்கள் அதன் இயக்கத்தை துவங்கி பொருப்புடன் அதன் வேலையை செய்ய ஆரம்பித்து பல வருடம் ஆகிறதே...
என்னை பொருத்தவரை,உறவினர் அல்லாத மற்ற பெண்களின் உடல் அங்கங்களோ, அல்லது நிர்வாணமோ,என்னை கவரவே செய்யும்..மாற்றுகருத்து இல்லை.இந்த தொழில் நுட்பத்துடனே ஒரு ஆண் படைக்கப் பட்டுள்ளான்.
அதென்ன உறவினர் அல்லாத,அப்டின்னு கேப்பீங்க....ம்ம்,அததா சொல்ல வர்ரே..
இப்படி ஒரு வாதத்தை வைக்கும் போது..நேர்மையின் சின்னமாக தன்னை வெளிப்படுத்தும்,சில முகமூடிகள்,இப்படி ஒரு வக்கிரமான கேள்வியை முன்வைப்பார்கள்..
அது பெற்ற தாய்,சகொதரியுடன் தொடர்பு படுத்தியதாக அது இருக்கும்..
அப்படிப்பட்ட ஒரு நிர்வாணம்,வக்கிரமாகவும்,கேவலமாகவும்,ஆபாசமாகவும் தெரியுமே தவிர...ஒரு காலும் அது கண்ணியமானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்காது...அதை உடனே மறைக்கவே தோன்றுமே தவிர,அதை மரியாதை நிமிர்த்தமாக,பக்தியுடன் காண சகிக்காது...இதுவே எனது நிலைப்பாடு..நடுநிலை எண்ணம் கொண்ட அனைவரின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்...இது முதல் விஷயம்..
ஓவியத்தில் நிர்வாணம் என்பது,அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி.ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.அது ஒருவரின் அந்தரங்கம்..அதை வெளிப்படுத்துவது. வக்கிரம்,ஆபாசம்.இதுவே எனது நிலைப்பாடு.
எனவே ஹுஸைன் வரைந்த ஓவியம் அது ஹிந்துக்களின் பெண் கடவுளின் உருவம் அல்ல,அது எந்த பெண்ணாக இருப்பினும்,நிர்வாணமாக இருப்பின்,அதை வன்மையாக கண்டித்து,எனது எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.
சர்ச்சை:
சரி அடுத்தது...ஹுஸைன்,ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை (ஒரு காலத்தில்)நிர்வாணமாக வரைந்து, அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டு...
நான் அந்த ஓவியத்தை நோக்கும் போது..நிர்வாணத்தை தாண்டி ஒருவித வக்கிரமே தெரிகிறது.எனவே,இது ஹிந்து மக்களின் (மலிவான அரசியல் பிழைப்புவாத பொருக்கிகள் அல்ல) மனதை புண்படுத்தவே செய்யும்..நான் ஓவியத்தை கலை கண்ணோடு அல்ல,வெறும் கண் கொண்டு நோக்கியதில் எனக்கு தெரிந்தது..அவ்வளவெ...
ஆனால்.அதை வக்கிரமாக என்பதை தாண்டி,அவர் நிர்வாணப் படுத்திவிட்டார்,என்பதே குற்றசாட்டு.ஒருவேலை வக்கிரம் அல்லாத அழகு பதுமையாக வரைந்து இருந்தாலும் இதே எதிர்ப்பு கிளம்பி இருக்கும்.ஆக நிர்வாணமே,இங்கு பிரதான பொருளாகிறது.எனவே அது அழகா வக்கிரமா என்பதல்ல இங்கு மைய கரு.அப்படியாயின்...
நிர்வாணப்படுத்தாத ஒன்றை நிர்வாணப் படுத்திவிட்டார் என்றால்...அதை விட ஒரு பெருங்குற்றம் இருக்க முடியாது..மானம் உயிரை விட முக்கியமானது..
ஆனால் ஹிந்துக்களின் கடவுள்களோ,காலம்காலமாக நிர்வாணமாகவே காட்சி தந்து வருகின்றன.அதற்கு உதாரணமாக இன்றும் பல கோவில்கள்,அதற்கு வாழும் சாட்சியாக நிலைத்து நிற்கின்றன..அதையே காலம் காலமாக ஹிந்துக்களும் வழிபட்டு வருகின்றனர்..
இன்று ஹுஸைன் வரைந்தது குற்றமாக பார்க்கப் படுகிறதென்றால்,அப்போ அன்றைய சிலைகள் எப்படி கலையாக பார்க்கப் பட்டது.இப்போதும் பார்க்கப் படுகிறது.ஒரு வேலை அதை வடித்தது,அக்கால அரசர்கள் என்பதாலா? இல்லை உள்ளத்தில் உள்ள குமுறல்களை அப்போது வெளிப்படுத்தினால் தலை போய் விடுமென்றா?
அப்படியானால்.இப்போது அதற்கு எத்தடையும் இல்லையே..வெறிகொண்டு அந்த வயோதிகனை(இந்த கரிசனம் அவர் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி என்பதால் அல்ல, மனிதாபிமானத்தால்) கொல்ல அலையும் கூட்டம்.முதலில்,இருக்கும் நிர்வாண சிலைகளை அகற்றிவிட்டு, பிற்கல்லவா,ஹுஸைன் மீதும்,அவரது படங்கள் மீது கை வைத்து இருக்க வேண்டும்..ஆனால் அவ்வாறு செய்யவில்லை...ஏன் இந்த இரட்டை நிலை...??
ஒருவேலை எங்களது தெய்வங்களை நாங்கள் தான் நிர்வாணப்படுத்த த்குதியுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்ற எண்ணமா?
வலைஞர் கிரி அவர்கள்,ஒரு நல்ல கருத்தை தனது வளைபூவில், ஹுஸைனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது சொல்லி இருப்பார்.நிர்வாணம் என்ற விஷயத்தில் எனது கருத்தோடு,முற்றும் ஒன்றி நிற்கிறார்...
அவர் சொன்னது:
//எல்லோருக்கும் நல்லவனாக என்னால் இருக்க முடியாதுங்க! என்னோட எதிர்ப்பை இதன் மூலம் நான் பதிவு செய்கிறேன். ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது காமாலைக் கண்ணோடும் பார்க்க முடியாது. சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும். நான் சாதாரணமானவன் என்னுடைய எதிர்ப்புகள் இந்த அளவிலே தான் இருக்கும். இதை எல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இவர்களைப் போல எனக்கு பரந்த மனசு எனக்கில்லை.//
இது ஒரு சராசரி மனிதனின் கருத்து.முழுமையாக ஏற்க கூடியது..ஆனால் அவர் ஏனோ அதை தனது
கோவில்களில் உள்ள நிர்வாண சிலைகளை வடித்தவர்களை நோக்கி எழுப்பவில்லை.
இங்கே அவர் குறிப்பிடும் "அதை" என்பது நிர்வாணத்தை எனில் சரி..இல்லை இல்லை.ஹுஸைன் வரைந்த நிர்வாணம் மட்டும் என சொல்வாரானால்.அது உள்நோக்கம் உள்ள ஒரு சார்பு சாடலே...
இதுவல்லாது,இன்னொரு குழந்தைதனமான கேள்வியும்,பரவலாக பதிவுலக ஹிந்து நண்பர்களிடையே இருக்கிறது...
அது என்னவென்றால்...அன்னை தெரசா,முஹம்மது (ஸல்) நபியவர்களின் மகளார்,அன்னை ஃபாத்திமா (ரலி),ஹுஸைன் அவர்களின் மகள்,உள்பட பல பேரின் உருவங்களை ஹுஸைன் நல்ல ஆடையுடன் வரைந்துள்ளாரே,ஏன் அவர்களை மட்டும் ஆடைகளைந்து வரையவில்லை,என ஒரு குறையறிவு கேள்வியை கேட்கிறார்கள்....
எனதறிவுக்கு எட்டிய எளிமையான பதில்...
அவர் ஆடையுடன் கண்டவர்களை ஆடையுடன் வரைந்துள்ளார்,ஆடையின்றி கண்டவர்களை ஆடையின்றி வரைந்துள்ளார்,அவ்வளவே...
Dr.ருத்ரன் அவரது பதிவில் இவ்வாறு சொல்கிறார்..
//கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).//
ஆது போல..தற்கால சிற்பிகளின் கைகளே,அவர்களின் மார்புகளுக்கு மாராப்பு இடுகிறதே தவிர..இன்னும் இருக்கும் அக்கால சிலைகள் அப்படியே இருகிறது...ஒருவேலை இனி வரும் வளரும் ஓவியர்கள்,இக்கால சிலைகளை பார்த்து,ஹிந்து கடவுள்களுக்கு ஆடையிடலாம்...
நண்பர் கிரி சொல்வது போல்,என்னாலும் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடியவில்லை.என் உள்ளத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக எழுந்த கேள்விகளையும் அனைத்தையும் தாண்டி எனது மனஓட்டத்தை பதிவி செய்கிறேன்,அவ்வளவே...இதில் எந்த உள்நோக்க கருத்தும் இல்லை
மற்றபடி,ஹிந்து வெகுஜன மக்களின் (கழிசடை அரசியல் பிழைப்புவாதிகளை குறிப்பிட வில்லை) மனம் புண்படும்படி இந்த ஓவியம் இருப்பின் (இருக்கிறது) கலை தாண்டி..இது எரிக்கப் படவேண்டியதே....
இங்கு,அவர் வரைந்த ஓவியம் முதல்,பல ஹிந்து தெய்வங்களின் சிற்ப புகைபடங்களை,சேர்த்து மேற்கோள் காட்டவேண்டும் என எண்ணினேன்.ஆனால்..நிர்வாணத்தை கொண்டு எனது வளைபூவை அலங்கரிக்க விரும்பவில்லை....
பார்க்க விரும்புவோர்,தொடுப்புகளை சொடுக்கலாம்...
சில ஹிந்து கடவுள்களின் சிலைகள்.
ஹுஸைனின் சில ஓவியங்கள்.
நன்றி
நட்புடன்
ரஜின்

14 கருத்துகள் :

  1. மனித ஒருமை பாட்டிற்கு சாட்சியமான பதிவு .... நல்ல சிந்தனை உள்ள மனிதர்களும் வலைப்பூவில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை தரும் பதிவு .. நிச்சயமாக இங்கு மதம் இல்லை ...மனிதம் இருந்தது.நன்றியும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கு நன்றி,திரு பத்மநாபன் அவர்களே.இந்த பிரச்சனையை என் கையில் எடுக்க நான் மிகவும் யோசித்தேன்.ஏனெனில் எளிதில் இதற்கு மதச்சாயம் பூசிவிடுவார்கள்.எனது மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும்,தயங்காமல் விமர்சிக்கும் இயல்புடையவன் நான்.இங்கும் அவர் முஸ்லிம் என்பதால் நான் அவரது செயலை கண்டிக்க மிகத் தகுதியுடையவனாகிறேன்.மேலும் வகுப்புவாத சக்திகள் அதற்கு இஸ்லாமிய சாயம் பூச முயல்வதை கண்டிக்க எண்ணியே என் மனதில் எழும்பிய சில கேள்விகளை முன்வைத்துள்ளேன்.அது நடுநிலைவாதிகளை ஒருபோதும் பாதிக்காது..மற்றபடி,மதநல்லிணக்கத்தை விரும்பும் ஒரு சராசரி இந்தியனின் பதிவே இது...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு தெளிவான பதிவு யாராவது இடமாட்டார்களா என்று ஏங்கி இருந்தேன் அது இன்று நிறைவேறி விட்டது.வாழ்த்துகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  4. சகோதரரின் வருகைக்கு நன்றி..வாழ்த்துகளுக்கும் நன்றி.படிப்பதுடன்,எனது பதிவில் ஏதேனும் தவறு கண்டால் சுட்டிக்காட்ட மறவாதீர்கள்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  5. உங்களது இந்த பதிவில் நீங்கள் ஹுசைன் மேல் விமர்சனம் வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக என்று அல்லாமல் ஒரு நடு நிலைமையோடு நோக்கும் முயற்சியாவது இருந்தது என்பதற்காக ஏற்கிறேன்.
    ஆனால் எல்லோரும் செய்தது போல் நீ ங்களும் கோவில் சிலைகளையே உதாரணத்துக்கு எடுத்து இருக்கிறீர்கள்.

    ஹுசைனின் ஓவியங்கள் தெய்வங்களின் ஓவியங்கள் என்பதை விட சில கோடுகள் வரைந்து அதற்கு ஆண் பெண் என்ற வித்தாயசம் தெரிய சில வளைவுகள் இட்டு வீணை அல்லது சூலம் அல்லது தாமரை என்ற சில அடையாளங்கள் மூலம் பார்வையாளனின் ஊகங்களுக்கு விட்ட ஓவியக் கோடுகள் சிற்பங்களோடு ஒப்பிடத் தக்கது அல்ல.
    சிலைகளின் காலங்கள் பல நாகரீகங்கள் தாண்டி இன்றும் நிற்கின்றன. இந்திய வரலாறு (கட்டடக் கலை, சிற்பக் கலை, நம் நாட்டை ஆண்ட மன்னர்கள், அன்றைய மக்களின் வாழ்வு )குறித்த பல ஆராய்சிகளுக்கு அவை உதவுகின்றன.

    வெளிநாட்டு சந்தையில் சில கோடுகளிட்டு ஒரு மத அடையாளத்தை அது பற்றிய சரியான புரிதல் இல்லாத கூட்டத்திடம் விற்று பணம் பண்ணுவதை இந்த சிற்பங்களோடு ஒப்பிடுவதை தவிர்த்து வேறு காரணங்களை முயற்சிக்கலாம்.



    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  6. பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?
    http://www.virutcham.com/?p=1004
    என்ற எனது பதிவு இது மாதிரி பலரும் ஏதோ இந்துக் கோவில்கள் முழுக்க ஆபாசச் சிலைகள் நிறைந்திருப்பதான ஒரு பிம்பத்தை உண்டு பண்ணும் முயற்சி செய்வதற்கு எதிர் வினையாக வைக்கப் பட்டது.
    இந்து கடவுளைக் கூட குடும்பம் உடையவனாக, உணர்வுகள் நிறைந்தவனாக காண்கிறான். அதில் எது சிற்றின்பம் எது பேரின்பம் என்று புரிய வைக்கவே சில சிலைகள் சில விதமாக இருக்கும். புரியாதவர்கள் தயவு செய்துகேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  7. நண்பர் விருச்சம் அவர்களை வரவேற்கிறேன்.
    தங்களின் தளத்தில் சிற்பம் தொடர்பான கட்டுரை,விரிவாக இருந்தது.எல்லாம் சரி..என்னை பொருத்தவரை,நிர்வாணம் ஆபாசம்..அவ்வளவெ, அது ஹுஸைன் வரைந்தாலும்,சரி சிற்பி செதுகினாலும்,சரி.ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி.ஒரே நிலைதான்.

    தாங்கள் சொல்வது போல பென்சில் கோடுகளாக உள்ள வரைபடம் கூட ஏதோ,கிருக்கியதாகவே இருக்கிறது.அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால்,ஹுஸைனின் படத்தை விட சிற்பங்கள்,இன்னும் அங்கக்களையும்,அதன் திரட்சிகளையும் துல்லியமாக காட்டி,ஹுஸைனை மிகைத்து,ஆபாசத்தை அதிகரிக்கிறது.

    தாங்கள் சொல்வது போல் சிற்பம் என்பது அக்கால கட்டடகலை,வாழ்க்கை,பழக்கவழக்கம்,என அவற்றை தொற்றி நிற்கிறது..சரி.ஒப்புக் கொள்ளவேண்டியதே.. அவை ஏன் நிர்வாணமாக நிற்கின்றன,அவற்றிற்கு என்ன தேவை இருக்கிறது,அவை எதை விளக்க அந்த கோலம் தரித்துள்ளது.அல்லது அக்கால மக்கள் நிர்வாண கோலம் கொண்டு இருந்தார்கள் எனசொல்ல வருகிறதா?.இல்லை கடவுள் நிர்வாணமானவர் என சொல்கிறதா?கடவுளின் சிற்பத்தை வடிக்கும் சிற்பி,அவன் கடவுளை பற்றி கேட்ட செய்திகளை கொண்டு,அதை வடிக்க அவனுக்கு,ஒரு மாடல் தேவையாகிறது.ஒரு பெண் அந்த கோலத்தில்,அந்த வடிவத்தில் அந்த நளினத்தில் அவன் முன்நிற்க வேண்டும்..அப்போது தான்,அவனால் அதை செதுக்க முடியும்.அப்படி ஒரு சிற்பியின் கற்பனையே கடவுள்சிலை,எந்த கடவுளும் வந்து சொல்லவில்லை தன் வடிவை.

    ஆடை க்ண்ணியத்தை தருவது.ஆடையின்றி கடவுளை மட்டும் நிற்க வைத்து,நாம் ஆடை அணிந்து கொள்வது,கடவுளை இழிவு படுத்துவதாகவே படுகிறது.எனது வெளிப்படையான கருத்து...

    நன்றி
    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் நேரடியாக விஷயத்துக்கு வந்து எனது வேலையை சுலபமா ஆக்கிட்டீங்க.
    இந்தப் பார்வை உங்கள் மதம் சார்ந்தது. அதனாலேயே ஹுசைனின் பார்வையில் அதுவும் ஒருவரை அவமானப் படுத்த அவரை எப்படி வரைந்தால் அது அவருக்கு மிகுந்த அவமானத்தை தரும் என்று தன வாயாலேயே சொல்லி விட்ட ஒருவர் அவர் மதம் சார்ந்த பார்வையில் வரைந்தது அது என்று இங்கே எதிர்க்கப் படுகிறார்.


    கோவிலில் சென்று காலம் காலமாய் பக்தியோடு வழிபடும் யாரும் இதுவரை இதை நீங்கள் கூறும் பார்வையில் பார்த்திருக்க முடியாது. பின் வந்த காலங்களில் உள்ளே வந்த மற்றவர்கள் பார்வை மாறுவது புரிந்தே சிற்பிகள் பின் நாளில் சில மாற்றங்கள் கொண்டு வந்தனர்.

    இதை நீங்களே சொல்லி விட்டீர்கள்.


    எங்களின் புரிதல் வேறு. இந்து மதம் சார்ந்த பல நிலைகள் இருக்கிறது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு முன்னே முதலிலேயே கொச்சைப் படுத்தி விட்டு இது தான் சரி என்று வாதிடுவதைத் தான் இங்கு பலரும்செய்தார்கள். நீங்களும் தான்.

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கு அவைகள் கொச்சையான மனித அல்லது மிருக உருவங்கள்.
    இந்துக்களுக்கு கற்பக விருட்சம் (மரம்), கால பைரவர் ( நாய்) , ஆதிசேஷன் ( நாகம்), வீரமான ஆஞ்சநேயர் ( குரங்கு), ஐஸ்வர்யமான லக்ஷ்மி (துளசி), காமதேனு ( பசு), சாந்த ஸ்வரூபியான பார்வதி, உக்கிரமான காளி, மொனமான சிவன், நடனத்தின் பிரதிநிதியான நடராஜர், ரௌத்ரமான ருத்ரன், விக்னங்கள் தீர்க்கும் விநாயகன், கலைகளின் அதிபதியான சரஸ்வதி,படைத்தல், காத்தல், அழித்தலின் மூர்த்திகள், இன்னும், இன்னும் இன்னும்.
    சொன்னால் உங்களுக்கு புரியாது.

    இதெல்லாம் உருவ வழிபாட்டு நிலையை கடைபிடிப்பவர்களுக்கு. இந்த நிலையே பெரும்பான்மை இந்துக்களின் இன்றைய நிலை. இதற்கு அடுத்த நிலைகள் இருக்கிறது ஆனால் அதற்கான களம் இது இல்லை. பெரும்பான்மை எதுவோ அதை மதித்தல் கற்றவர்செய்வது.

    பதிலளிநீக்கு
  10. இங்கே நடுநிளையாரராக காட்டிக் கொள்ள முயன்ற இந்து பெயர்களோடுள்ள சிலர் ஹுசைன் ஓவியக் கோடுகளை கலை என்றும் சிற்பங்களில் இல்லாததையா வரைந்தார் ? என்று சிற்பங்களை கொச்சைப் படுத்தி இருந்தார்கள். இன்னும் சில நடு நிலை வாதிகள் இரெண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும்படி கூறினார்கள்.

    நீங்கள் ஒரு படி கீழே போய் இரெண்டுமே வக்கிரம் என்று ஒரு புதிய வட்டத்துக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
    ஹுசைன் தாத்தாவே தேவலை. நான் யார் மனசையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றாவது கேட்டிருக்கிறார்.

    ஆச்சு கதை முடிஞ்சு கத்திரிக்காய் பூத்தது. ஆளை விடுங்க.

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  11. சகோதரர் விருட்ஷம் அவர்களுக்கு,

    //இந்தப் பார்வை உங்கள் மதம் சார்ந்தது//

    இருக்கலாம்,ஆனால் இது என் மனம் சார்ந்ததும் கூட.நான் கோவில் சிற்பங்களில் உள்ள நிர்வாணத்தை ஆபாசம் என்கிறேன்.அல்லது,அது கோடு வடிவிலானாலும் சரி,ஆபாசமே.இது சரி என சொல்லவில்லை,எனக்கு சரி எனப் பட்டது.அவ்வளவே...

    //ஹுசைனின் பார்வையில் அதுவும் ஒருவரை அவமானப் படுத்த அவரை எப்படி வரைந்தால் அது அவருக்கு மிகுந்த அவமானத்தை தரும் என்று தன வாயாலேயே சொல்லி விட்ட ஒருவர் அவர் மதம் சார்ந்த பார்வையில் வரைந்தது அது என்று இங்கே எதிர்க்கப் படுகிறார்.//
    ஹுஸைனின் மத சார்பு எவ்வளவு என முதலிலெயே சொல்லிவிட்டேன்.நான் ஏதோ ஹுஸைனுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணிக் கொண்டால்,தயவு செய்து,அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.இது போன்றதொரு படத்தை ஹிந்து தெய்வங்கள் அல்ல,எதை பற்றி வரைந்தாலும்,அவருக்கு என்னிடத்தில் மதிப்பில்லை.அதை புரிந்து கொள்ளுங்கள்.

    //பின் வந்த காலங்களில் உள்ளே வந்த மற்றவர்கள்//
    இஸ்லாமியர்களை குறிப்பிடுகிறீர்கள்.

    //எங்களின் புரிதல் வேறு. இந்து மதம் சார்ந்த பல நிலைகள் இருக்கிறது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு முன்னே முதலிலேயே கொச்சைப் படுத்தி விட்டு இது தான் சரி என்று வாதிடுவதைத் தான் இங்கு பலரும்செய்தார்கள். நீங்களும் தான்.//

    நிச்சயமாக ஹிந்துக்களின் புரிதல் வேறு.ஆனால் அதை என் மதம் தாண்டி மதிக்கிறேன்.ஹிந்துக்களின் பல புரிதல்களை,நான் சார்ந்து இருக்கும் இஸ்லாம் தடை செய்கிறது.அதை நான் கடைப்பிடித்து,எனது மதம் தாண்டி,ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் நான்.இஸ்லாம் பிற மதத்தவர்களை,அவர்களது தெய்வங்களை, இழித்துரைப்பதை,இடித்துரைப்பதை தடை செய்கிறது."உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எஙகளுக்கு"என்ற அழகிய நல்லிணக்கத்தௌ இஸ்லாம் எங்களுக்கு சொல்லிதருகிறது.

    நான் இங்கு இதுதான் சரி,என சொல்லவில்லை.எனகு எது சரி எனப்படுகிறதோ,அதை சொல்லி இருக்கிறேன்.அவ்வளவே.அது யார் மனதையும் புண்படுத்த கூடாது எப்பதில் மிகுந்த சிரத்தையுடன் இருக்கிறேன்.மத நல்லிணக்கத்தை அதிகம் விரும்புபவன் நான்.

    தாங்கள் சொன்ன அத்துனை தெய்வங்களும்,ஹிந்துமத நம்பிக்கையில் உள்ளனவே.அவைகளையோ,அவற்றின் உருவத்தையோ,சிலைகளையோ,ஏதும் சொல்லவில்லை.அவற்றின் நிர்வாண கோலமே,கேள்விக்குறியாகிறது என்னிடத்தில்.

    //பெரும்பான்மை எதுவோ அதை மதித்தல் கற்றவர்செய்வது//

    எனக்கு இதில் உடன்பாடு இல்லை,சகோதரரே.இது உங்களின் நிலைப்பாடு எனில்.ஹிந்துக்கள் பெரும்பானமை இந்திய நாட்டில் சிருபான்மை முஸ்லிம்கள்,கிருத்தவர்களை ஹிந்துக்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிறீர்களா?

    கற்றவர் செய்வது ஆய்ந்து உணர்ந்து,ஒருபொருளுக்கு மதிப்பளிப்பது.ஆனால் மத விஷயம் மனம் சார்ந்தது.எனவே,பெரும்பான்மை,சிருபான்மை என்பதல்ல விஷ்யம். ஒருவரது,நம்பிக்கைகும்,உணர்வுகளுக்கும்,மதிப்பளிக்க வேண்டும்..அதற்கு கல்வியோ,பெரும்பான்மை நிலையோ அவசியம் இல்லை.என்பதே என் நிலைப்பாடு..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  12. நடு நிலைமையான, மதக் கண்ணோட்டம் இல்லாத பதிவு. நீங்கள் நல்ல சிந்தனையாளர்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வருக பரிதிநிலவன்
    தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி...
    ------------------------------
    விருச்ஷம் அவர்களுக்கு.
    நடுநிலை பத்தி சொல்லீர்ந்தீங்க.சரிதான்.பல நேரங்கள்ல,நாம மத்தவங்க முன்னாடி,நடுநிலையா இருகொம்னு காட்ட,நடிக்கவே செய்வோம்.நானுமே,ஆனால் அது போலித்தனத்தின் வெளிப்பாடல்ல.பிறர் மனம் நம் சொல்கொண்டு நோக கூடாது என்ற எண்ணமே.அந்த இடத்தில் எனது வெளிப்படையான கருத்தை பதிவதால்,எனக்கொன்றும் பாதிப்பல்ல.இருந்தும் நான் மேற்சொன்ன காரணம் கொண்டு,தவித்துவிடுவேன் பல நேரங்களில்..
    100ல் ஒருவரே,உடைத்து பேசுவார்..அவர் பிறர் மனம் பற்றி சிந்திக்க மாட்டார்.அதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை.அவர் உடைத்து பேசுவது பிறர் மனதையே.

    இந்த இடத்தில் நிர்வாணம் குறித்து எனது உள்ளக்கிடக்கை,வக்கிரமே...அதை எவ்வாறு புனிதப் படுத்துவாது,தெரியவில்லை.அதற்கு பழக்கப் படவும் இல்லை.அதையே பதிவு செய்துள்ளேன்.மற்றபடி,ஹிந்து தெய்வங்கள்,அவற்றின் சிலைகள்,அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை,உடன்பாடு இல்லை.அதற்காக அவற்றை கொச்சைபடுத்தவும் இல்லை,அந்த எண்ணமோ,தேவையோ எனக்கெப்போதும் இல்லை.நான் அப்படி கொச்சை படுத்தினால்,அது எனது ஹிந்து சகோதரர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்துவதாகவே அர்த்தம்.அப்படி செய்ய நான் மதம் சார்ந்து,என் மனம் சார்ந்து பழக்கப்பட வில்லை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  14. சிறு வயதில் இருந்து கோவில் சார்ந்த சூழலில் வளர்ந்த ஒரு இந்து இதை எல்லாம் நிர்வாணம் என்று நினைத்திருக்கக் கூட மாட்டான்
    பிறர் கூறுவதை கேட்டோ, அல்லது என்னை மாதிரி ஒருவருக்கு இதெல்லாம் இந்த இணைய தளங்களே சொல்லியன, அது வரை சிலைகள் பற்றிய வேறு எந்த கண்ணோட்டமும் இருந்ததில்லை. இனியும் இருக்காது. இதற்கு மேல் சொல்லி உங்களுக்கு புரிய வைக்க இயலும் என்று எனக்கு தோன்றவில்லை. நீங்கள் ஹுசைன் மறுப்பு என்பதோடு நிறுத்தி இருந்தால் அல்லது அதற்கு வேறு காரணங்கள் கூறி இருந்தால் இதை பற்றி நான் பேச வந்திருக்க மாட்டேன். நீங்கள் என் வலை தளத்திற்கு வந்து தெய்வங்கள் நிலை பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை கூறிய பின்பும் நான் பொறுமையாக எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம் நான் தெளிவாக இருப்பதால் தான்.
    உங்களுக்கு அவை தெய்வம் இல்லை எனும் போது அவை ஏன் அப்படி இருக்கின்றன என்ற கவலையும் அவசியமற்றது.

    ஹுசைன் போட்ட கோடுகளோடு இதை ஒப்பிட்டு நியாய அநியாயங்கள் பார்க்க எதுவும் இல்லை. அவ்வளவு தான்.

    இங்கே பெரும்பான்மையின் நம்பிக்கைகளை மதிக்குமாறு நான் கூறியது இந்த தெய்வ நிலை பற்றித் தான். வேறு எதுவும் இல்லை.

    நான் 'மற்றவர்' என்பது எல்லா படையெடுப்புகளையும் தான்.

    'இந்த பழக்கப் படாத மதம் சார்ந்த' என்பது புரிந்தவர்கள் தான் ஹுசைனை எதரிர்த்து இருக்கிறார்கள்.

    'இந்த பழக்கப் படாத மதம் சார்ந்த' என்பதற்கு நீங்கள் சாட்சி கையழுத்து அல்ல , அறிக்கை இட்டு நிருபித்து இருப்பது தான் இங்கு நடந்திருக்கிறது.

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்