சனி, நவம்பர் 20, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 2


இன்று உலகில் இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் முன்னிருத்தப்படும் அத்துனை வன்முறைகளும் ஜிஹாத்,என்ற டைட்டில் இல்லாமல் செய்யப்படுவதில்லை.இதுவல்லாது இஸ்லாமியர்களால் செய்யப்படும்,வேறுசில வன்முறைகளுக்கும்,தாராளமாக ஊடகங்கள் ஜிஹாத் என்ற லேபிள் ஒட்டியே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

ஜிஹாத் குறித்து பிறமத சகோதரர்களின் தெளிவு எப்படிப்பட்டதெனில்......
ஜிஹாத் என்றால் என்ன?புனிதப்போர்...யார் செய்வது? இஸ்லாமியர்கள்.., கொல்லப்படுவது? அப்பாவி மக்கள்.....so இஸ்லாமிய புனிதப்போர்கள் அனைத்தும் அப்பாவி மக்களை கொல்லவதே. 
இது மட்டுமே ஜிஹாத் குறித்து பிற மக்கள் கொண்டுள்ள அபிப்ராயம்.அவர்களுக்கு இது போதுமானது.மேலும் இது குறித்த உண்மை நிலையை யாரும்,அவர்களிடம் கொண்டு சேர்க்காதிருக்க,இஸ்லாமிய எதிரிகளின் பிரச்சாரத்தை மட்டுமே எதிர்கொண்ட மக்களின் மனநிலை அதுவாக இருப்பதை குற்றப்படுத்த இயலாது.

சரி: ஜிஹாத் என்றால் என்ன? 


இஸ்லாமிய அரசாங்கம்,இஸ்லாம்,மற்றும் "இஸ்லாமியர்களின் உயிர்,உடைமை,மானம் "மீதான அநீதிகளை எதிர்த்து எடுக்கும் போர் நடவடிக்கைகள் ஜிஹாத்.

இங்கே ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.இந்தியாவின் மீதான முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பை நாம் வரலாறுகளில் படித்தும்,அவர்களால் தான் இந்தியாவில் இஸ்லாம் பரவியது என்ற பிரச்சாரத்தையும் காலம் காலமாக நமது காதுகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால்,இந்தியாவின் மீது படையெடுத்த,பாபர்,கஜினி,எனத்தொட்டு,அத்துனை முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பையும்,நாம் ஒரு தடவை கூட ஜிஹாத் என வரலாற்றில் படித்ததில்லை. ஏன் அத்துனை படையெடுப்புகளும் தற்போது ஃபேமஸ் ஆகி இருக்கும் ஜிஹாத் என்ற வார்த்தை கொண்டு வழங்கப் படவில்லை???ஏனென்றால் அவை யாவும் ஜிஹாத் அல்ல.வரலாறுகளில் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புகள் கூட ஜிஹாத் என பதிவு செய்ய்ப்படவில்லை. ஏனெனில் அவை இஸ்லாமிய குறிக்கோள் இன்றி வெறும் செல்வத்திற்காகவும்,நாட்டிற்காகவும் செய்யப்பட்ட போர்கள் ஆகும்.

நபி (ஸல் ) அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்த போர்கள் அனைத்தும் இடத்திற்காகவோ,செல்வத்திற்காகவோ நடந்தவை அல்ல.அவை இஸ்லாமிய மார்க்கத்திற்கும்,முஸ்லீம்களின்,உயிர்,உடைமை,மானம்,இவற்றின் பாதுகாப்பிற்காகவும் முன்னெடுக்கப்பட்டவை என்பதை வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும்.

இஸ்லாத்தில்,புனிதப்போர் கடமையாக்கப் பட்டது,மதீனாவில் இஸ்லாமிய அரசு நிலைபெற்றதற்கு பின்னரே.அதற்கு முன்பு மக்காவில் முஸ்லீம்களில் சிலர் செல்வந்தர்களாகவும்,வீரர்களாகவும்,இருந்தபோதும்,அங்கு ஜிஹாத் கடமையாக்கபடவில்லை.

மாறாக "ஹிஜ்ரத்" எனும் நாடு,உடமைகளை துறந்து,பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகவே அல்லாஹ் முஸ்லீம்களுக்கு கட்டளை இடுகிறான்,

மதீனாவை விட மக்காவில் தான் முஸ்லீம்கள் சொல்லனாத் துயரம் கண்டார்கள்.இருப்பினும்,
அவர்களுக்கு,அங்கிருந்து வெளியேரவே அல்லாஹ் அனுமதி அளித்தானே தவிர போரிட அல்ல.

இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.

நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது (அல்குர்ஆன் 5:32).

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.

குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்துவாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி.

முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான். உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.

தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது.

எனவே உலகில் பலபகுதிகளில் ஜிஹாத் எனும் பெயரில் நிகழ்த்தப்படும் மனிதக்கொலைகளும்,பொதுச்சொத்து சேதாரங்களும் ஒரு போதும் ஜிஹாத் ஆகாது.அவை அனைத்தும் பஸாத் வரையறையில் வரும் பயங்கரவாதங்களே.

ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப் எனப்படும்.


மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர்.

நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

அதன் படி இஸ்லாமியர்கள்,திருமணம்,சொத்து,விவாகரத்து உள்ளிட்ட சிவில் சார்ந்த விவகாரங்களை இஸ்லாமிய முறைப்படி நிறைவேற்றிக் கொள்ள பூரண அனுமதி இருக்கிறது.மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் போராட்டங்களால், சிலவற்றை வெல்ல முடிகிறது.சில உரிமைகள மறுக்கப்படுவதால் நம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக ஒருபோதும் கருத முடியாது.

இந்தியா உலக நாடுகளிலெல்லாம் வேறுபட்டு,தனிச்சிறப்புடன் விளங்கும் நாடு.இங்கு மட்டுமே,மொழியாலும்,இனத்தாலும்,மதத்தாலும்,நாடுமுழுவதும் மக்கள் வேறுபட்டு காணப்படுகிறார்கள்.ஆனால் அனைவரும் ஒற்றுமை எனும் கயிற்றால் பிணைக்கப் பட்டு இருக்கிறார்கள்.

 இந்தியா இஸ்லாமிய நாடல்ல,நம் உரிமைகள் அனைத்தும் முழுமைப்பட,இந்திய ஹிந்து நாடும் அல்ல,நாம் உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட.

எனவே நம்மோடு பிணைந்து வாழும் பிறமத சகோதரர்களுடன் நல்லிணக்கத்தை பேண,ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி,இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியை அனைவருக்கும் எடுத்துரைப்போம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி அப்டீன்னா இஸ்லாமிய போர் முறைகள் எப்படி இருந்தது???  ஜிஸ்யா எனப்படும் வரி பிரத்தியேகமாக மாற்றுமதத்தவருக்கு மட்டுமே விதிக்கப்பட்டதே....அப்படியானால் இதில் என்ன நடுநிலை இருக்கிறது??? - என்பன பல கேள்விகளை அடுத்து வரும் பகுதிகளில் விவாதிப்போம்


குறிப்பு: இக்கட்டுரையின் சில பத்திகள் சகோதரர் சுல்தான் அவர்களின் ஜிஹாதி எனும் பதிவில் இருந்து பெறப்பட்டவை.ஜிஹாத் எனும் தலைப்புக்கு சரியான விளக்கமாக் அவை இருந்ததால்,அப்பதிவு இங்கு மீள்பதிவாகவும்,அத்துடன் ஜிஹாத் குறித்த எனது கருத்துக்களையும் இங்கே பதிக்கிறேன்.


நன்றி

அன்புடன்
ரஜின்

11 கருத்துகள் :

 1. இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்...

  www.ellameytamil.com

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  நல்ல விளக்கங்கள். தொடருங்கள் உங்கள் பணியை. அல்லாஹ் நல்ல கூலியை வழங்குவானாக ஆமீன்.

  பதிலளிநீக்கு
 3. வ அலைக்கும் சலாம்.சகோ ஆமினா.வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.உங்களது துஆவுக்கு "ஆமீன்"

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 4. சகோ ஆமினா அவர்கள்,சொன்ன கருத்துரை,இங்கே வெளியிடப்படுகிறது.அவர் படித்த கட்டுரை,இக்கட்டுரையால் supersede செய்யப்பட்டுவிட்டதால்.அது நீக்கப்பட்டுவிட்டது.

  ஆமினா: said-
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  நல்லா சொல்லியிருகீங்க சகோ!!

  வாழ்த்துக்கள்
  -------------------------------------
  வ அலைக்கும் சலாம்.சகோ.ஆமினா:
  கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. செம்மையான விளக்கம், பாராட்டுக்கள். இஸ்லாம் செய்தால் ஜிஹாத் ஹிந்துக்கள் செய்தால் அது ஹிந்து தீவிரவாதம் அல்லது காவி தீவிரவாதம். நண்பரே நீங்கள் சொல்லும் //ஹிந்துத்துவாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.// இந்த வேற்றுமை கூடவா புரியவில்லை? நீங்கள் சொல்லும் "ஜிஹாத்" தான் ஹிந்து மதத்தில் நடப்பது. பஸாத்(Fasaad) தான் இஸ்லாமில் நடப்பது.ஒரு உதாரணம் உங்களுக்காக இஸ்லாம் புனித மாதத்தில் நோன்பு இருப்பது உங்கள் நம்பிக்கை அதர்க்காக நாங்களும் உண்ணகூடாது என்பது ஏற்புடையதா?நீர் குடிததுக்காக அடிப்பது முறையோ ?
  நெற்றியில் குங்குமமொமோ திருநீறோ வைத்துகொண்டு இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் செல்லகூடாது.
  இன்னும் பலபல நண்பரே நான் அனுபவித்தது இதை எல்லாம் நாங்கள் கேட்ககூடாது. கேட்டால் நாங்களும் ஹிந்துதுவக்கள். நாங்கள் உங்கள் மார்கத்திற்கு எதிரானவர்கள். நல்லது நண்பரே தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. சகோ பிரபு அவர்களே.
  வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..

  //இஸ்லாம் செய்தால் ஜிஹாத் ஹிந்துக்கள் செய்தால் அது ஹிந்து தீவிரவாதம் அல்லது காவி தீவிரவாதம்.//

  இஸ்லாத்தின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளை நாம் இக்கட்டுரையில் ஒரு போதும் ஆதரிக்கவில்லை.அதை இஸ்லாமிய ஜிகாத் என ஒரு இடத்திலும் நாம் சொல்லவில்லை.அப்படி இருக்க தங்களின் பதில் இக்கட்டுரை குறித்த தங்களின் தெளிவற்ற புரிதலை காட்டுகிறது.

  //நீங்கள் சொல்லும் "ஜிஹாத்" தான் ஹிந்து மதத்தில் நடப்பது. பஸாத்(Fasaad) தான் இஸ்லாமில் நடப்பது.//

  இஸ்லாத்தின் பெயர் சொல்லி செய்யப்படும் பயங்கரவாதங்களை நாமே பஸாத் என ஒப்புக் கொண்டாகிவிட்டது.அதற்காக ஹிந்து தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் போக்கு தவறானது.

  //நோன்பு இருப்பது உங்கள் நம்பிக்கை அதர்க்காக நாங்களும் உண்ணகூடாது என்பது ஏற்புடையதா?நீர் குடிததுக்காக அடிப்பது முறையோ ?//

  தவறுதான்.இஸ்லாமிய நாடுகள் இது போன்ற முட்டால்தனமான சட்டங்களை அமல்படுத்துவது வேதனை அளிக்கும் விடயம்.

  இஸ்லாமும்,அதன் சட்டங்களும்,அதை பரிபூரணமாக ஏற்றவர்களுக்கே உரித்தானது.அதை ஏற்காதவர்களுக்கு,அதில் எப்பங்கும் இல்லை.அது தண்டனை சட்டம்,வரி,சிவில் சட்டம் எதுவானாலும்.மாற்றுமதத்தவரை இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் அணுகுவதில்லை.

  //நெற்றியில் குங்குமமொமோ திருநீறோ வைத்துகொண்டு இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் செல்லகூடாது.//

  இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.இப்படி ஒரு முஸ்லீம் தங்களிடம் நடந்து இருந்தால் அவன் இஸ்லாத்தை அறியாதவனாகவே இருப்பான்.அவனுக்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  இதை எல்லாம் கேளுங்கள்.தவறே இல்லை.அதற்காக எம்மக்களை கருவருக்கும் செயலை செய்யும் ஹிந்துத்துவாக்களை நியாயப்படுத்தாதீர்கள்.இல்லை எங்களது கேள்வியே குற்றரிவாள் கொண்டு எங்களின் வயிறுகளை கிழிக்கும் செயலாக இருக்குமானால்,நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்பது இரண்டாம் பட்சம்.முதலில் நீங்கள் சனாதன தர்மத்திற்கே(தற்கால ஹிந்துமதம்) எதிரானவர்கள்.

  நன்றி
  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 7. //அதற்காக எம்மக்களை கருவருக்கும் செயலை செய்யும் ஹிந்துத்துவாக்களை நியாயப்படுத்தாதீர்கள்.இல்லை எங்களது கேள்வியே குற்றரிவாள் கொண்டு எங்களின் வயிறுகளை கிழிக்கும் செயலாக இருக்குமானால்,நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்பது இரண்டாம் பட்சம்.முதலில் நீங்கள் சனாதன தர்மத்திற்கே(தற்கால ஹிந்துமதம்) எதிரானவர்கள்.//

  நண்பரே, யாரோ சிலர் செய்த, செய்யும் தவறுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்டதற்கு உங்களை மனதார வாழ்த்துகிறேன். அதே வேலையில் வன்முறை யார் செயினும் குற்றமே.
  அதற்கு பெயர் வைத்து நியாயபடுத்துவது முறையன்று. நீங்கள் குறிப்பிட்ட " எம்மக்கள்" கொஞ்சம் மனம் கனக்கிறது.அது யாரை இருப்பினும். ஏன் உங்கள் மனம் வரவில்லையோ?. இல்லை அதே நீங்கள் கூறிய செயலை (கருவருக்கும் - மன்னிக்கவும் அதை சொல்வதற்கு கூட நா வரவில்லை ) "எம்மக்கள்" செய்வது இல்லை என்று நம்பிக்கையோ இல்லை முடிவோ? அவர்கள் செயதால் அவர்கள் மார்க்கம் தெரியதவர்கள் அவர்கள் எங்களை சார்ந்தவர்கள் அல்ல "எம்மக்கள்" அல்ல. என்ற எண்ணமோ? நண்பரே! ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன், உங்களால் இன்னொரு ரஜின் காட்டமுடியுமா இவ்வுலகில்? கண்முன் இருக்கும் மனிதனை நேசிக்க தெரியாத ஒருவன் கண்களுக்கு புலப்படாத கடவுளை நேசிக்கிறேன் அவன் சொன்னதை தான் செய்கிறேன்.கடவுளே ஆனாலும் மன்னிக்க மாட்டான். மனிதம், மனிதநேயம்,மனித உணர்வுகள் புரியாதவர்க்கு,உணராதவருக்கு மதம் புரிந்து விடுமோ? மனிதம் மனித நேயத்திற்கு எதிரான எதுவாய் இருந்தாலும் அது தவறான புரிதல் மட்டுமே.

  நன்றி

  என்றும் அன்புடன்
  பிரபு

  பதிலளிநீக்கு
 8. //"எம்மக்கள்" கொஞ்சம் மனம் கனக்கிறது.//

  சகோ பிரபு அவர்களே.இவ்வார்த்தையை கேட்கும் போது,ஒரு இயல்பான இந்திய குடிமகனுடைய எண்ணஓட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும் என என்னால் உணர முடிகிறது.

  யாரொ செய்த தவறுக்காகவோ, அல்லது,திட்டமிட்டோ,இஸ்லாமியர்களாகிய நாங்கள் இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களாக தள்ளப்படும் சூழலின் வெளிப்பாடே அப்படிப்பட்ட வார்த்தை.

  என்ன குறை இருந்துவிட்டது,இந்தியாவில் தங்களுக்கு என விபரம் அறியாதவர்கள் கேட்கலாம்.இந்தியாவில் சரிநிகர் குடிமக்களாகவே இஸ்லாமியர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

  ஆனால் அவர்களின் கல்வி,பொருளாதாரம்,வளர்ச்சி,உரிமை,பாதுகாப்பு, போன்றவை,தீவிரவாதம் என்ற சில காரணிகளை முன்வைத்து நசுக்கப்படுகிறது.

  இதற்கு உதாரணமாக,முஸ்லீம்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் கலவரங்களும்,சமீபதிய பாபர் மசூதி தீர்ப்பும்,உள்ளது.இத்தீர்ப்பு,என்னை இந்தியாவின் இரண்டாம் தரகுடிமகனாகவே என்னை உணரவைத்தது.

  இத்தீர்ப்பை தாங்கள் ஆதரிப்பவராக இருந்தால்,இதை தொடர்ந்து வரும் காசி,மதுரா,மற்றும் இந்தியா முழுவதும்,ஹிந்துத்துவாக்கள் குறிப்பிட்டு இருக்கும் 3500க்கும் அதிகமான் மசூதிகள் நாளை இடிக்கப்பட்டு,அதற்கும் ஏதாவது (அ)நியாயம் கற்பிக்கப்படும்.அதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  மனிதநேயமும்,நல்லிணக்கமும்,முஸ்லீம்களிடம் நிறைவாகவே உள்ளது.பலகாலங்களாக பாதிக்கப்பட்டும்,ஏமாற்றப்பட்டும்,வந்ததன் விளைவாக,வெகுசில முஸ்லீம்கள்,தங்களின் பாதுகாப்புணர்வை கொண்டு தனித்து நிற்க்கிறார்கள்.

  அவ்வளவே...

  நன்றி

  பதிலளிநீக்கு
 9. பின்னுட்டம் உங்களுக்கா இந்த இணைப்பில்

  http://joyfulgp.blogspot.com/

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. http://sunmarkam.blogspot.com/2010/04/blog-post_13.html

  சகோ பிரபு அவர்களின் பின்னூட்டத்துக்கான பதில் இந்த பதிவில்....

  நன்றி

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்