கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்
காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...
வினாடி முள் விரைவாய் ஓடி
புறப்பட உனை வலியுருத்த
கனநேரம் பொருக்காது
எந்திரத்தை சுழலவிட்டு,
விசை முறுக்கி முன்சென்றாய்
எனை நானே கட்டிக்கொண்டு
இருக்கை'யிலே கைதியாக,
வழிநின்று வகுப்பெடுத்தாய்
வாய் மூடி குறிப்பெடுத்தேன்...
திறன் கூட்டி தளம் ஓடி
தரை நீங்கும் அந்நேரம்
கழுகது கைப்பற்ற.,
காப்பாற்ற கதறியழும்
இளங்கோழிக் குஞ்சினது
உளம் ஒத்து உறைந்து போனேன்.
விரும்பியதை கேள் என்று
பட்டியலை முன்வைத்தாய்..
அதை விரிக்க மனமின்றி
அப்படியே நான் கொடுக்க..
கொண்டதை கை தந்து
விருந்தோம்பல் கடன்கழித்தாய்
துயர்மறந்து துயில்கொள்ள ஒளிகுறைத்து நீ உதவ,
முகம்சிவக்க கதறிவிட்டு,கண்ணயரும் பாலகனாய்
சிறுதுயிலில் மெய் மறக்க...
பயணிகளின் கவனத்திற்கு...
பயணதூரம் குறைகிறது
இறங்கு தளம் தெரிகிறது
இடுப்புப் பட்டை தனை இருக்கி,
இயல்பாய் அமரக என
ஒலி பெருக்கி எனை பணித்தாய்...
பசுமைகண்ட உள்ளமது
பாலைகாண மறுக்கயிலே,
இல்லமதின் வறட்சி நீங்க
எண்ணமதை மாற்றிக்கொண்டேன்
இறகு மடித்து தரை இறங்கி,
அனல் பறக்கும் பாலை காட்டி
இறங்கி நட என்றுறைத்தாய்
அரபு நாட்டை தரம் உயர்த்த
தாய் நாட்டைப் பிரிந்த என்னை,
வருகவென வரவேற்றான்
ஆங்கோர்
வெண்ணிற ஆடை மூர்த்தி...
தொலைவில்
ரஜின்
Very good depictions of our feelings.
பதிலளிநீக்குசகோ மாணிக்கம் அவர்களே,
பதிலளிநீக்குவருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துகளுக்கும் நன்றி.
இவ்விடயத்தில் நம் அனைவரின் உள்ளகிடக்கையும் ஒன்றே.
அன்புடன்
ரஜின்
நல்லாயிருக்கு... நானும் இது பற்றி 4 வரி எழுதியிருக்கிறேன்... முடிந்தால் வந்து பாருங்கள்.. http://faaique.blogspot.com/
பதிலளிநீக்குமிக அருமையான விவரிப்பு. உணர்வுகளை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு( போன வாரம்தான் நானும் சவுதி திரும்பினேன் சேம் ஃபீலிங்) :(
சகோ முஹம்மது,அவர்களே,வருகைக்கும்,வாசிப்புக்கும் நன்றி...தங்களது கவிதை பார்த்தேன்.மிகச்சில வரிகளிலே நச்...அருமை
பதிலளிநீக்கு---------------------------
சகோ அக்பர் அவர்களே..வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..உணர்வுகளின் உறைவிடம் சில நேரங்களில் வெம்பும்போது வந்து விழும் வார்த்தைகளே கவிதைகளாக.....
நன்றி....
//பசுமைகண்ட உள்ளமது
பதிலளிநீக்குபாலைகாண மறுக்கயிலே,
இல்லமதின் வறட்சி நீங்க
எண்ணமதை மாற்றிக்கொண்டேன்//
ரொம்ப உணர்வு பூர்வமான வரிகள்
சகோ ஆமினா அவர்களே.
பதிலளிநீக்குவருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
"உள்ளக் குமுறள்களை
உதடுகள் உளர
உதிர்வதே கவிதை"
உள்ளக்குமுறளின் வெளிப்பாடே உணர்வுப்பூர்வமான அந்த வரிகள்....
நன்றி
play nayagan sad music.............
பதிலளிநீக்குமுபாரக்..வருகைக்கும்,வாசிப்புக்கும் நன்றி,
பதிலளிநீக்குமியூசிக் தான போட்டுட்டா போச்சு...
நன்றி..
RAZIN BAI NALLA IRUKKU
பதிலளிநீக்குஉணர்ச்சியூட்டும் கவிதை. இது எல்லோரது வாழ்வினையும் ஒரு முறை சீர்தூக்கி நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நினைவுறுத்தும். உவமைகள் எல்லாமே சுப்பர் அண்ணே. வாழ்த்துக்கள். இதை நீங்கள் பத்திரைக்கியிலும் பிரசுரிக்க முயற்சி செய்யலாமே
பதிலளிநீக்கு