திங்கள், நவம்பர் 29, 2010

இஸ்லாமிய பெண்ணியம்

தீன் கூறும் பெண்மணியே...

தடைகள் பல மலைகளாய்...

மார்க்கத்தின் பேர் சொல்லி
உனை படிதாண்டா பதுமையாக்க
உடல்கூறு தனை சொல்லி
உன் உள்ளமதின் பலம் நீக்க
குடும்பத்தின் நிலை சொல்லி
உனை வீட்டோடு முடமாக்க
கயவர்களின் கதை சொல்லி
உன் விழியிரண்டை குளமாக்க


அத்துனையும் தகர்த்தெரிந்து
உன் பாதம் முன் வைத்து
புத்துலகு சமைத்திடவே
பொன்மங்கை நீ வாராய்...

புது உலகை நீ காண
கருவறையை கடந்த போது,
கல்லுள்ளம் கொண்டவனோ
உனை மண்ணுக்குள் புதைத்திட்டான்

ஈரேழு அகவை தின்று
பருவ மங்கை நீயாக...
உன்னுரிமை,உடையுரித்து
பருகிடவே எத்தனித்தான்..
உரம் கொண்டு, உன்னுரிமை கோர..
ஊர்கூடி,குரல் கூட்டி
இழிபிறவி எனப் பழித்தான்

வல்லோனின் அருள் பெற்று
வாஞ்சை நபி புவி நின்று,
கயவர்களை இனம் கண்டு,
இஸ்லாத்தின் நெறி சுழற்றி
சாட்டையடி தந்துவிட...

கல்வி,முதல் கணவன் வரை
விவாகம் முதல் ரத்து வரை
சொத்து முதல் நித்தமென
அத்துனையும் கை கொண்டாய்

எத்துரையும் கால் பதிக்க
ஏகனவன் தாழ்திறக்க
இஸ்லாத்தில் உயிர்கொண்டு
இறை தூதின் நெறி நின்று,
ஈருளகின் பொருள் கொண்டு
நற்சமூகம் தான் படைக்க
இனியவளே நீ வாராய்..

கண்ணியமாம் ஹிஜாப் அணிந்து
கயவர்களின் கனவெரித்து
இஸ்லாத்தின் வழி கண்டு
ஈமானின் ஒளி கொண்டு...
புதியதோர் சமுதாயம்
கட்டி எழுப்ப நீ வாராய்...

உனக்குரிமை எனக்கோரி,
உன்னாடை களைந்துவிட
கள்வர்களின் கூட்டமொன்று
வெறிகொண்டு அலையுது பார்...

உடல் மறைத்து நீ சென்றால்
அடிமைத்தளை எனச் சொல்லி
தன்னடிமைத்தனம் மறைத்து
தானிழந்த சுகம் மறந்து
கூச்சலிடும் மாந்தர் முகம்
கருஞ்சாயம் பூசிவிட
கன்னியவள் நீ வாராய்...

உனதாடைதனை யுரித்து
ஊரெல்லாம் கடைவிரித்து
விழியாலே உனை மேய
ஓலமிடும் ஓனாயின்
பசுத்தோலை அறிந்திடுவாய்...

கல்வியிலே தலைசிறந்து
அறிவினிலே நிலையுயர்ந்து
ஒழுக்கமதில் ஒப்பற்று
உன் சமூக மா'க்களுக்கு
உதாரணமாய் தலைப்படுவாய்...
தீன் கூரும் பெண்மணியே...

அன்புடன்
ரஜின்

11 கருத்துகள் :

 1. முஹம்மது ஷஃபி29/11/10 1:35 பிற்பகல்

  சும்மா நச்சுனு சொன்னீங்க

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும்!!

  பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கும் அழகிய கவி வரிகள்!!

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. சகோ.ஷஃபி அவர்களே
  வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.
  ------------------------------------------
  சகோ ஆமினா அவர்களே.
  வ அலைக்கும் சலாம்
  இஸ்லாம் பெண்ணினத்தை பெருமைகொள்ளச்செய்யும்,கண்ணியத்தை கொடுத்துள்ளதால்,இஸ்லாமிய பெண்ணியமே உலகில் தலைசிறந்து,என்பதை இவ்வரிகள் எடுத்தியம்புகின்றன.

  நன்றி..

  பதிலளிநீக்கு
 4. //உனதாடைதனை யுரித்து
  ஊரெல்லாம் கடைவிரித்து
  விழியாலே உனை மேய
  ஓலமிடும் ஓனாயின்
  பசுத்தோலை அறிந்திடுவாய்...//

  ஆண்களை காமாந்தகர்கள் என்று வர்ணிக்கும் உமது எண்ணப்போக்கு, வருத்தமளிக்கவல்லது!

  இனி எத்தனை காலம், பிற்போக்கு எண்ணங்களோடு?

  விடிவில்லை பெண்ணே, உனக்கு!

  பதிலளிநீக்கு
 5. சகோ ரம்மி அவர்களே,வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  //விடிவில்லை பெண்ணே, உனக்கு!//

  பெண்ணின் ஆடைக்குறைப்பில் தான் அவளுக்கு விடிவு என நம்பிக்கொண்டிருக்கும்,தங்களை என்ன சொல்வது.

  //ஆண்களை காமாந்தகர்கள் என்று வர்ணிக்கும் உமது எண்ணப்போக்கு, வருத்தமளிக்கவல்லது!//

  ஐயா.ஆண்கள் அனைவரையும் உத்தமர்கள் என தாங்கள் சொல்வது சரியல்ல.அதை பெண்கள் தான் சொல்லவேண்டும்.ஒரு பெண்ணுடன் பேசும்போதும் சரி,அவளை பார்க்கும் போதும் சரி,அவள்முகத்தை தவிர ஒரு ஆணின் பார்வை அவளை முழுமையாக மேய்ந்துவிடவே எத்தனிக்கும்.இதில் 1000 பேருக்கு 10 அல்லது 20 பேர் அப்படிப்பட்டவர்களாக இல்லாமல் இருக்கலாம்.இந்த 20தில் தாங்கள் ஒருவராகக்கூட இருக்கலாம்..

  ஆண்களின் பார்வை எங்கெல்லாம் பாயும் என ஒரு பெண்ணுக்கு தெளிவாகவே தெரியும். அப்படிப்பட்டவர்கள் காமாந்தர்கள் தான்.

  முழுமையான ஆடை ஒரு பெண்ணுக்கு கண்ணியம் தருகிறது என்பதை ஏற்க மறுக்கிறீர்களா?

  ஜெயலலிதா-தனது வாழ்வில் முக்கியமாக இருவேறு பரிமாணங்களில் மக்களை கவர்ந்தவர்.முதலில் நடிகையாக.அவரது ஆடை குறைப்பும், கவர்ச்சியும், அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது.மக்கள் அவரை பிரியப்பட காரணமாக இருந்தது அவரது கவர்ச்சி.இல்லை இல்லை நடிப்பு என்பதெல்லாம் 2ஆம் பட்சம் தான்.

  மற்றொன்று.அரசியல்.இப்போது அவரை மக்கள் விரும்பக்காரணம் அவரது கவர்ச்சி அல்ல.அவரது திறமை.அவரது கவர்ச்சி,சினிமாவை விட பலமடங்கு வளர்ச்சி கொடுத்த அரசியலுக்கு,பயன்படவில்லை. மாறாக அதற்கு அவர் தேர்வு செய்து கொண்ட ஆடை கண்ணியமான முழு உடலையும் மறைக்கும் ஆடையை.அவருக்கு ஏதேனும் தடை இருக்கமுடியுமா,கவர்ச்சி ஆடை அணிய?இல்லையே..கண்ணியத்திற்க்கான அவரின் தேர்வு.இப்படிப்பட்ட ஆடையாக இருக்கிறது.

  இஸ்லாம் இப்படிப்பட்ட கண்ணியத்தை அனைவரும் பெறவேண்டும் என சொல்கிறது.கண்ணியமான ஆடை அணிந்து பெண் வெளிசெல்ல,கல்விகற்க, தொழில் செய்ய எத்தடையும் இஸ்லாத்தில் இல்லை.அதைத்தான் இக்கவி சொல்கிறது.

  ஆனால் அனைத்தையும் விட்டு.ஆடையில் வந்து நிற்கும் உங்கள் சுதந்திர வேட்கை,வெறும் ஆடைச்சுதந்திரத்தை மட்டுமே பொருளாக கொண்டது என்பது வருத்தமளிக்கிறது.

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சகோதரர் ரஜின்,
  உங்கள் கவிதை அருமை.
  முத்தான சத்தான வரிகள்.
  இனி நீங்கள் கவிஞர் ரஜின்.

  //உனக்குரிமை எனக்கோரி,
  உன்னாடை களைந்துவிட
  கள்வர்களின் கூட்டமொன்று
  வெறிகொண்டு அலையுது பார்...//

  வாவ.. செம காரம்...

  //கல்வியிலே தலைசிறந்து
  அறிவினிலே நிலையுயர்ந்து
  ஒழுக்கமதில் ஒப்பற்று
  உன் சமூக மா'க்களுக்கு
  உதாரணமாய் தலைப்படுவாய்...
  தீன் கூரும் பெண்மணியே...//--ஆரம்பித்து விட்டார்கள்... சென்றவருடமே!

  மேலப்பாளையம் முஸ்லிம் சகோதரி ஒருவர் சென்ற ஆண்டு மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்.

  பதிலளிநீக்கு
 7. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்.
  கவிஞன் அதெல்லாம் ஒன்னும் இல்லை.
  "எண்ணச்சிதறல்கள் எழுத்தாய்"
  அவ்வளவே,

  உங்கள் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி....

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //புது உலகை நீ காண
  கருவறையை கடந்த போது,
  கல்லுள்ளம் கொண்டவனோ
  உனை மண்ணுக்குள் புதைத்திட்டான்//

  அருமையான வரிகள்
  இப்போதுதான் முதன்முறையாக உங்கள் தளம் பார்த்தேன் உங்கள் பனி சிறக்க இறைவனை உதவி புரிவானாக

  பதிலளிநீக்கு
 9. வ அலைக்கும் சலாம் சகோ...

  வருகைக்கு,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

  உங்களின் துஆவிற்கு ஆமீன்,,,

  தங்களின் தளமும் நன்றாக இருக்கிறது,,,தொடருங்கள்...

  வஸ்ஸலாம்

  பதிலளிநீக்கு
 10. சகோ ஆசியா உமர்,,வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்