சனி, டிசம்பர் 18, 2010

அரசு எந்திரம்


அரசு எந்திரம் - ஒரு நாட்டு மக்கள்,தங்களை நிர்வகிக்க,தங்களை பராமரிக்க,பாதுகாக்க, எனவாரான தங்களது எண்ணற்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தாங்களே ஏற்படுத்தி ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை அரசாங்கம்,அல்லது அரசு எந்திரம் என எளிமையாக விவரிக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அரசு எந்திரம் எத்தனை பொருப்புடன் இருக்கவேண்டும்,என அதை உருவாக்கிய ஒவ்வொரு குடிமகனுக்கும்,கனவு ஆசை இருக்கத்தான் செய்யும்.தன் தேவைகளை அரசே கையேற்று நிவர்த்தி செய்யவேண்டும்.தனக்கான பிரச்சனைகளை,கோரிக்கைகளாக வைக்கும் போது,அதை சிரமேற்கொண்டு,எனக்கான முக்கியத்துவமும் கொடுத்து செய்யவேண்டும்,என்பன பல...

அவ்வாறான ஆசையானது,வேறு சிலநாடுகளின் அரசு எந்திர செயல்பாட்டை பார்க்கும்போது, சே..எவ்ளோ சிறப்பான செயல்பாடு.நம் நாட்டிலும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என எண்ணச்செய்யும்.

அப்படியாக நான் சமீபத்தில் கண்ட காட்சி என்னை இப்படிப்பட்ட அரசு எந்திரம் நம் நாட்டில் இருந்தால்,எத்துனை சிறப்பாக இருக்கும் என எண்ணச்செய்தது.


இங்கே துபாயில்,நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு வழக்கம் போல் காலையில் சென்றாகிவிட்டது.பிறகு 10.00 மணியளவில்,காலை சாப்பாடு சாப்பிடலாம் என வெளியே வந்தேன்.அப்போது எனது ஆஃபிஸ் பார்க்கிங் ஏரியாவுக்கு எதிரில் உள்ள நடைபாதையில், நிலத்தடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறிக்கொண்டிருந்தது.


வழக்கம்போல்,நாம் உண்டு நம் வேலையுண்டு,என,சாப்பிட்டு விட்டு,அதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாகிவிட்டு,யாராச்சும் போன் பண்ணி சொல்லிருப்பாங்கண்ணு நெனச்சுகிட்டு,ஆஃபிஸ்க்கு ஓடிட்டேன்.பதிவுகள் அதிகம் படிக்கவேண்டி இருந்ததால்,சீக்கிரம் உள்ளே போகவேண்டிய கட்டாயம்.

பிறகு மதிய உணவிற்காக வெளியேறியபோது பார்த்தால்,அந்த ஏரியாவே வெள்ளக்காடாக காட்சி அளித்தது...நான் வந்த புதிதில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் அப்படி ஒரு மழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளித்தது நினைவு.அதற்கப்புரம் அந்தக்காட்சி இப்போ..


சரி நமக்கே உரிய பாணியில்,பார்க்க நல்லாத்தான் இருக்குன்னு ரெண்டு போட்டோ எடுத்துட்டு,பசி வயிற்றை கிள்ளி விளையாண்டதால்,ஹோட்டலை நொக்கி ஓடிவிட்டேன்.திரும்பி வந்து பார்க்க,தண்ணீர் வரத்து அதிகரித்தவண்ணம் இருந்தது.தண்ணீர் விரையாமாவதை பார்க்க கஷ்டமாகவும் இருந்தது...சுத்திலும் எனது சக ஊளியர்களும்,பொது மக்களும் கூடிவிட்டனர்....எல்லாம் வேடிக்கையும்,வெட்டி நியாயமும் பேசிக்கொண்டு இருக்க,

சரி யாரும் போன் பண்ணல போல,நாமலாச்சும் துபாய் முனிசிப்பாலிட்டிக்கு போன் பண்ணி சொல்லலாம்னு பாத்தா...நம்பர் தெரியல....சரின்னு ஓடிப்போய்,கணினிய தட்டி நம்பர் எடுத்தாச்சு..

வெளியவந்து போன் பண்ணுனா...ஒரு அரபி எடுத்துகிட்டு,லொக்கேஷன் கரெக்ட்டா சொல்லுன்னு சொல்லி என்ன படுத்தி எடுத்துட்டான்..ஏண்டா போன் பண்ணுனோம்னு ஆக்கிட்டான்.இங்க எல்லாம், மெயின் ரோடுக்குத்தான் பேரு இருக்கு..சின்ன சின்ன ரோடுக்கெல்லாம் நம்பர்தான்...ஒருவழியா நம்பர பாத்து சொன்னவுடன,ஓக்கே நாங்க பாத்துக்கிறோம்னு சொன்னான்...அப்பா ஒருவழியா நம்ம சமுதாய கடமையா ஆத்தியாச்சுன்னு சந்தோசத்தோட திரும்பவும் வேடிக்கை பாக்க வந்துட்டேன்..

கொஞ்ச நேரத்துல DEWA(துபாய் எலக்ட்ரிசிட்டி,& வாட்டர் அத்தாரிட்டி)ல இருந்து ஒரு வண்டி வந்துச்சு,..நெலமை ரொம்ப மோசமானதால,அவங்க DCD (துபாய் சிவில் டிஃபென்ஸ்)க்கு கால் பண்ணிட்டாங்க..அப்ரோ ட்ராஃபிக்கும் ஜாஸ்தியாயிட்டதால துபாய் போலிஸ்க்கும் தகவல் குடுத்துட்டாங்க...

போலிஸ் ஒடனே ஸ்பாட்டுக்கு வந்தாங்க..ட்ராபிக்கை டைவர்ட் பண்ணி கிளியர் பண்ணிட்டாங்க.. சிவில் டெஃபென்ஸ் வந்து ரோட்ல இருந்த தண்ணி எல்லாத்தையும்,பம்ப் வச்சு லாரிகள்ல அள்ளி அந்த ஏரியாவ கிளியர் பண்ணுனாங்க..

மீன் டைம்'ல லன்ச் ஹவர் முடிஞ்சு,1.00 மணிநேரம் ஆகப்போகுது,ஆஃபிஸ்ல தேடுவானுகன்னு, கண்ணும் கருத்துமா வேலைபாக்க போய்ட்டேன்...



ஈவினிங் ஆஃபிஸ் விட்டு கிளம்பும்போதெல்லாம், தண்ணீர் ஓடிகிடந்ததற்கான அறிகுறிகளே இல்லாத அளவிற்கு அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது...வேலையும் படு வேகமாக நடந்துகொண்டு இருந்தது ..

அடுத்த நாள் வந்து பார்த்தால்,அந்த வேலை முடிந்திருக்க, இடத்தை மூடி மண்ணை சமப்படுத்திக் கொண்டிருந்தார்கள்..முந்தைய நாள் இரவு முழுவதும் வேலை நடந்திருக்க வேண்டும்...தண்ணீர் வெளியேறிய வேகத்தை பார்க்கும் போது,அது மிகப்பெரிய குழாயில் ஏற்பட்ட உடைப்பாகத்தான் இருக்கவேண்டும்..ஆனால் அதை ஒரே இரவில் சரி செய்து முடித்து இருந்தது சற்றே ஆச்சர்யத்தை கொடுத்தது...


அன்று மதியத்திற்கு மேலாக அந்த இடம் அப்படியேதான் இருந்தது,ஒருத்தரும் இல்லை...தண்ணீர் திறந்துவிட்டு,கசிவு இருக்கிறதா என பரிசோதித்துவிட்டு ஃபினிஷிங் செய்வார்கள் என என் ஆஃபிஸ் செக்யூரிட்டி சொன்னார்...



திரும்பவும் மாலை ஆஃபிஸில் இருந்து கிளம்பும்போது பார்க்க சில பாகிஸ்தானி லேபர்கள், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த இண்டர்லாக்கிங் கற்களை,இடத்தை சமப்படுத்தி அடுக்க ஆரம்பித்து இருந்தனர்.


மறுநாள் காலை ஆஃபிஸ்க்கு வரும்போது பார்த்தா,... ஏதோ அப்படி ஒரு சம்பவமே நடக்காத இடம்போல அந்த இடம் காட்சி அளித்தது...வியப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது... முந்தானாள் பார்த்த காட்சிக்கு பிறகு,இயல்புவாழ்க்கை இவ்வளவு வேகத்தில் திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதை எண்ணி துபாய் அரசாங்கத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கத்தான் தோன்றியது...(ஆனா அடிக்கலை)

இத்துனை சிறிய நாட்டின் அரசு எந்திரம் இவ்வளவு வேகமாக செயல்படுவதில்,பெருத்த ஆச்சர்யம் இல்லைதான்.இருந்தாலும்,நம் நாட்டில்,கிடைக்க ஏங்கும் ஒரு அரசாங்க சேவையை பிற நாட்டில் பார்க்கும் போது,நம் நாட்டிலும் இப்படி இருந்தால் நல்லா இருக்குமேன்னு எண்ணாமல் இருக்க முடியவில்லை.


இந்தியாவானது ,உலகின் வேறு எந்த நாட்டுடனும் ஒப்பீடு செய்திட முடியாத ஒரு பன்முகத்தன்மை கொண்டது.அப்படிப்பட்ட மக்களை வழிநடத்தும் ஒரு அரசிற்கு,தான் எண்ணியதை நிறைவேற்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

அதையும் தாண்டி,இந்திய அரசு எந்திரத்தில் ஊழல் எனும் பெருச்சாளி சிக்கி எந்திரமே சின்னாபின்னமாகி இருக்க...இது எட்டாக்கனியாகவே நமக்கு இருக்கிறது..ஆனால் அப்படிப்பட்ட பழுதுக்கு,அரசியல்வாதிகளையும்,அரசாங்கத்தையும் குற்றப்படுத்தும் நேரத்தில்,குடிமக்களாகிய நாமும்,அதன் பழுதுக்கு முக்கியக்காரணம் என்பதை மறந்துதான் போகின்றோம்...

கண்ட இடங்களில்,குப்பைகளை வீசி எறிவது,எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது துவங்கி,கலவரம் என்று வந்தால் முதலில் அரசாங்க சொத்துக்கும்,பொது சொத்துக்கும் சேதம் விளைவிப்பது,போக்கு வரத்து விதிகளை மதிக்காமல் செல்வது தொட்டு,ஓட்டுக்காக பணம் கொடுத்தால் கூசாமல் கைநீட்டி வாங்கிப்பழகும் காலம் வரை இந்த நிலை தொடரவே செய்யும்... 

அரசாங்கமும்,அரசு எந்திரமும் ஸ்திரமாக செயல்பட வேண்டும் என்ற என்ற எண்ணம் செயல்வடிவம் பெருவது,குடிமக்களான நம் வீட்டின் வாசலில் இருந்து துவங்கியாகவேண்டும்..

ஏனெனில் பல நேரங்களில் அரசாங்கம் கொண்டுவரும் பல நல்ல திட்டங்கள் கூட பொதுமக்களின், அலட்சியமான பயன்பாட்டால் பயனற்று அழிந்து போவதை கண்டு வரவே முடிகிறது...

எனவே ஒரு நாடு மாற்றம் காணவேண்டும் எனில்,முதலில் நாம் மாறவேண்டும்.நம்முடைய அந்த மாற்றமே சிறுதுளி பெருவெள்ளமென நம் சமுதாயத்தை மாற்றும்..மாற்றம் ஏற்பட்ட சமுதாயத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதியே ஊழலில் உளண்டு கொண்டிருக்கும் அரசு எந்திரத்தை சரிசெய்வான்.மாற்றம் ஏற்பட்ட சமுதாயத்தில் இருந்துவெளியேறும் அரசு ஊழியனே தனது பணியை பொருப்புடன் செய்து, சிக்கலின்றி அரசு எந்திரத்தை இயங்கச் செய்வான்.

அப்படிப்பட்ட ஓர் நற்சமூகமாக நாம் மாற்றம் கொண்டு,நம் நாட்டையும் மாற்றி புதியதோர் உலகினை படைத்திட அனைவரும் ஒன்றினைவோம்.....


நன்றி

அன்புடன்
ரஜின்

25 கருத்துகள் :

  1. என்ன சொல்லி உங்கள பாராட்டுறதுன்னே தெரியல ரஜின்.

    நீங்க சும்மா ஏதோ சொல்லியிருந்தா கூட அந்த தாக்கம் என்னால உணர்ந்துருக்க முடியாது. ஸ்டெப் பை ஸ்டெப்பா சம்பவம் நடக்கும் போது இருந்த இடத்தையும் எல்லாம் முடிந்த பிறகு காட்டிய போட்டோவையும் பார்த்து உண்மையில் மெய் சிலிர்த்துப்போனேன். அதன் பின் தான் அதிகமாவே எனக்கு ஆசை வந்துருக்கு!!!!

    சூப்பர் சகோ

    பதிலளிநீக்கு
  2. அது சரி நீங்க எப்பவும் காமிரா கையுமா தான் இருப்பீங்களா????

    அழகான போட்டோ!! பி.சி. ஸ்ரீராம் ரொம்ப நாளா ஆள் தேடுறாராம். ஒரு எட்டு பாத்துட்டு வாங்க :) போட்டோஸ் சூப்பர்!!!

    பதிலளிநீக்கு
  3. சிறந்ததொரு கண்ணோட்டம் . சிறப்பான அலசல் அருமை . சிந்திக்கத் தூண்டும் பதிவுதான் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. சகோ ஆமினா. வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.எனது அலுவலகத்துக்கு அருகில் நடந்ததால் என்னால் தினசரி செயல்பாட்டை காணமுடிந்தது.

    அது அத்துனை சீக்கிரம் செய்து முடிக்கப்பட்டவிதம், அந்த perfection,எல்லாமே சூப்பர்தான்..

    கேமிரா எல்லாம் ஒன்னும் இல்லை.மொபைல்'ல உள்ள கேமிரா'ல க்ளிக்கியதுதான்... ஃபோட்டோகிராஃபி புடிக்கும்தான்,,ஆனா பி.சி ஸ்ரீராம்'லா,நேத்து வந்த பையன்...நீங்க என்னை ஹாலிவுட் லெவல்'ல திங் பண்ணலாம்...

    (just kidding)

    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சகோ சங்கர் அவர்களே,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  6. நம் அரசாங்கத்தைக் குறை சொல்லும் நாம், நம் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனபதைச் சரியாகச் சொல்லிருக்கீங்க. எனினும், அப்படிச் செய்ய முனைந்தாலும், அதற்கு நம்மக்களிடையே கூட ஆதரவு இருக்காது பல சமயங்களில். எ.கா.: க்யூவில் நிற்பது!! எனினும் மனம் தளராமல் நம் முயற்சியைத் தொடரத்தான் வேண்டும் இல்லையா?! நல்ல பதிவு ரஜின்.

    பதிலளிநீக்கு
  7. சகோ ஹுஸைனம்மா,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    //எ.கா.: க்யூவில் நிற்பது!!//
    சரிதான் தாங்கள் சொல்வது.ஆனால் அப்படிப்பட்ட சூழல்களில் நாம் நாகரீகத்தை மேற்கொள்ளும் போது,அதை பார்த்து சிலர் திருந்த வாய்ப்புண்டு.

    நம்மை போல் பத்து பேர் யோசிக்க,அது 20,50,100 ஆக,இன்ஷா அல்லாஹ் காலம் மாறும்..காட்சிகளும் மாறும்...காத்திருப்போம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  8. ரஜின் பாய் ETA SET ஆபீசுக்கு வெளிய நடந்ததை வச்சு நல்லா சொல்லி இருக்கீங்க ம்ம் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோதரர் ரஜின்,

    துபாய் பலதியா (முனிசிபாலிட்டி) விரைவாக செயல்பட்டது இந்தியாவில் மட்டுமே இருப்பவர்களுக்கு ஆச்சர்யமானதுதான். சவுதியிலும் இதே ஸ்பீடு என்றாலும் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டிருந்தால், குடிமகன்களே நேரடியாக பலதியா வாசலில் போய் நின்றிருப்பார்கள்.

    அத்துணை பெரிய ஊரில், பொறுப்பான ஒரே ஒரு மனிதன் நம் ரஜின் மட்டும்தான் என்று நினைக்கையில் பெருமை கொள்வதா, அல்லது அவ்வளவு நேரம் 'என்னகென்ன' என்று சென்று கொண்டிருந்த மற்ற குடிமக்கள் அல்லது குடியேறிய மக்கள் பற்றி நொந்து கொள்வதா..?

    படங்களுடன் கூடிய உங்களின் இந்த 'ஸ்டெப் பை ஸ்டெப் ரிப்போர்டிங் அழகு' என்னை துபாய்க்கு இலவசமாய், பாஸ்போர்ட், எக்சிட்-ரிஎன்ட்ரி இன்றி தூக்கிப்போய் விட்டது.

    மாஷாஅல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  10. @sahuban/

    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துகளுக்கும் நன்றி சகுபான்..

    நன்றி...
    ---------------------------------------------
    சகோ ஆஷிக் அவர்களே..
    என்னோட பொருப்ப பத்தி,நான் தா மொதல்ல சொன்னேனெ..
    //நாம் உண்டு நம் வேலையுண்டு,என,சாப்பிட்டு விட்டு,அதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாகிவிட்டு,யாராச்சும் போன் பண்ணி சொல்லிருப்பாங்கண்ணு நெனச்சுகிட்டு,ஆஃபிஸ்க்கு ஓடிட்டேன்.//
    that is me...
    அப்ரமா ஏதோ ஞான் உதயம் வந்துதா,போன் பண்ணினது...

    நா என் கடமையை தான செஞ்சேன்,,(தமிழ் சினிமா டயலாக்...)

    நன்றி..

    பதிலளிநீக்கு
  11. அருமையான அலசல் அழகிய படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. யு.ஏ.இ யை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது, காரணம் இந்தியா பெரியது, யு.ஏ.இ சின்னது, இந்தியா பெரியது என்பதல்ல.

    யு.ஏ.இ - மன்னர் ஆட்சி, இந்தியா - ஜனநாயக நாடு, இதனால் பல சிக்கல்கள், அரசாங்க தொழிலாளர்களை ஒழுங்காக வேலை செய், இல்லயேல் தூக்கி விடுவே என்று சொன்னால் யு.ஏ.இ ல் பயப்படுவான், ஆனால் இந்தியாவில் போராட்டம் என்று அறிவித்து பத்திரிக்கை முதல் தொலைக்காட்சி வரை பேட்டி கொடுப்பான்.

    எதற்கெடுத்தாலும் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர் குழைவு, இன்னுமொறு முக்கியமான விஷயம், நம் நாடு பெரும்பாலும் கிராமங்களை கொண்டது, இங்கு ஒரு விஷயத்தை நகரத்திலோ, அல்லது மாநகரத்திலோ நாம் பார்த்துவிட்டு அதைப் போல் நம்முடைய கிராமத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினால் நடக்காது. நாம் டெல்லியில் இருந்தால் கொண்டு அல்லது மும்பையில் அல்லது குறைந்தபட்சம் சென்னையில் இருந்தால் எப்படி வேலை நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் நீங்கள் எழுதியது போல் இவ்வளவு வேகமாக வேலை நடக்கும் என்று நான் கூறவில்லை.

    நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி எழுத நினைத்தேன், இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சகோ அபு நிஹான் அவர்களே.வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    //இந்தியாவானது ,உலகின் வேறு எந்த நாட்டுடனும் ஒப்பீடு செய்திட முடியாத ஒரு பன்முகத்தன்மை கொண்டது//

    இந்தியாவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது என்று நானே குறிப்பிட்டு இருப்பேன்..

    இது போன்ற ஒரு சடுதியான செயல்பாடு நம் நாட்டில் இல்லாது போனாதற்கான காரணங்களாக,ஊழலையும்,மக்களின் மாறாத்தன்மையையும்,குறிப்பிட்டிருப்பேன்,,

    இப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருந்தால் நல்லா இருக்குமே என்ற அங்கலாய்ப்பை வெளிப்படுத்தி,அதற்கு முழுமையாக அரசாங்கத்தை குற்றப்படுத்தாமல் குடிகளாகிய நமது கடமை என்ன என்பதை அலசி இருக்கிறேன்....

    நன்றி...

    பதிலளிநீக்கு
  14. சகோ மலிக்கா,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  15. ஹ்..ம்...நம்ம நாடும் இதே வேகத்தில் இருந்திருந்தால் நம்ம நாடு எங்கேயோ போயிருக்குமே... மக்கள் அரசைக் குறை கூறினால் அரசு மக்களைப் பழி சொல்கிறது. ஆனா என்னிக்காவது ஒரு நாள் நம் இந்தியாவும் முன்னேறிய நாடாகும்னு நம்பிக்கை...

    //நா என் கடமையை தான செஞ்சேன்// பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  16. சகோ என்றென்றும் 16 அவர்களே,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    தங்களது,எனது,என நம்மை போன்ற இந்தியர்களின் நம்பிக்கையும் அதுவே.

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  17. சகோ ரஜின் அழகாய் படம் பிடித்து தெளிவாக விளக்கி இருந்த விதம் சுவாரஸ்யம்.இப்படி மாதிரி நம்ம ஊரிலும் இருந்தால் எப்படி இருகும்.(ஹ்ம்ம்..ரிப்பேர்க்கு என்ரு குழியை தோண்டி போட்டு விட்டு அடைக்காமல் போய் விபத்துகக்ளைப்பார்த்து உச் கொட்ட மட்டும் செய்யும் ஊர் இது.)

    பதிலளிநீக்கு
  18. சகோ ஸாதிகா அவர்களே.
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

    தலைமுறை மாறினால் நாட்டின் தலைஎழுத்தும் மாறும்..

    நம்புவோம்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  19. அட நிஜமாலுமே நீங்க சூப்பர் ஹீரோ தான்.நிலைமையை போன் செய்து சொல்லி அதனை படிப்படியாக பின்பற்றி படப்பிடிப்பும் செய்து பதிவிட்டது சிறப்பு,பாராட்டுக்கள்.சூப்பர் பதிவு.

    பதிலளிநீக்கு
  20. ஸலாம்.சகோ ஆசியா அவர்களே,வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும்நன்றி.

    சகோ நாந்தா சொன்னேனே..நா அவ்ளோ பெரிய ஆத்மி'யெல்லா இல்ல...ஆபிஸ் பக்கத்துல நடந்ததால ஒரு எண்டர்டெயின்மெண்ட்'ஆ பண்ணுன மேட்டர் தா...இதுக்கு இவ்ளோ பாராட்டுக்களா....

    நன்றி..நன்றி...நன்றி...

    பதிலளிநீக்கு
  21. ஒரு பத்திரிகை நிருபர்கூட இந்த அளவிற்கு செய்திகள் சேகரித்து இருக்க முடியாது சகோ..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. சகோ அந்நியன் அவர்களே..
    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  23. //கண்ட இடங்களில்,குப்பைகளை வீசி எறிவது,எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது துவங்கி,கலவரம் என்று வந்தால் முதலில் அரசாங்க சொத்துக்கும்,பொது சொத்துக்கும் சேதம் விளைவிப்பது,போக்கு வரத்து விதிகளை மதிக்காமல் செல்வது தொட்டு,ஓட்டுக்காக பணம் கொடுத்தால் கூசாமல் கைநீட்டி வாங்கிப்பழகும் காலம் வரை இந்த நிலை தொடரவே செய்யும்...//

    மிகச் சரியாக அழுத்தந்திருத்தமாகச் சொல்லி இருக்கிர்றீகள். ஓட்டுப் போட ஒருத்தர்கிட்ட பணம் வாங்கற காலமெல்லாம் இப்ப மலையெறிப் போயிடுச்சு. எல்லார்கிட்டயும் பணம் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.. இனிமேல் எங்கே திருந்த?

    நல்ல பதிவு.. பயனடைந்தால் நல்லது..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..ரஜின்.

    பதிலளிநீக்கு
  24. சொல்ல மறந்துட்டேன்.. உங்கள் வலைப்பதிவின் தலைப்பு ‘சன்மார்க்கம்’ ரொம்ப நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  25. சகோ ஆதிரா,
    வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
    ஓட்டுக்கு பணம் என்பது,வரும் தலைமுறை மக்களிடம் எடுபடாது என்றே எண்ணுகிறேன்.

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்