புதன், ஜூலை 13, 2011

மும்பை வெடிகுண்டு தாக்குதல் - வன்மையான கண்டனங்கள்!!!

இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டை கூறு போட நடத்தப்பட்ட கொடூரமான மற்றுமொரு தாக்குதல்!...மாலை வேலை முடிந்து வந்ததும்,கேள்விப்பட்டு டீவி முன் அமர்ந்தேன்...அனைத்து சேனல்களும் முக்கியச் செய்தியாக இதை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன..பார்க்க சகியாத காட்சிகள்..உயிரிழந்தவர்கள் 18 பேர் என சொல்லிக்கொண்டிருந்தனர்...

மனதை உறையவைக்கும் இத்தகைய தாக்குதல்களை நடத்திவிட்டு,எங்கோ ஹாயாக இருந்துகொண்டிருக்கும் அந்த கொடூரர்கள் யாராக இருப்பினும்,கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட்டு,அடுத்து இது போன்றதொரு தாக்குதல் நிகழாதவாறு கட்டமைப்புகளை வழுப்படுத்தவேண்டும்...

பொதுமக்கள் மீதான இத்தகைய கொடூரத்தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த மிருகங்களை எதைக்கொண்டு தண்டிப்பது???

உயிருக்கு உயிரான தங்களது குடும்ப உறவுகளை இழந்து வாடும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு,ஆழ்ந்த அனுதாபங்களை சொல்வதை தவிர வேறொன்ரையும் மனம் சிந்திக்கவில்லை...

இது போன்ற தாக்குதல்களை நடத்தத் துணியும் உள்நாட்டு வெளிநாட்டு தீய சக்திகளை,நாம் ஒன்றுபட்டு முறியடிப்போம்,...

பொதுமக்கள் மீதான இத்தகையா தாக்குதல்களுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்....

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32

அன்புடன்
ரஜின்

4 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இதனை செய்த மிருகங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  பதிலளிநீக்கு
 2. உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைதுசெய்யப்படுவார்களா?
  அல்லது
  அப்பாவிகளின் மேல் பலியை சுமத்தி அவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அரக்கர்கள் நேர்மையான முறையில் துரிதமாக விசாரிக்கப்பட்டு, சரியான முறையில் உறுதி செய்யப்பட்டு தாமதிக்காமல் தூக்கிலிடப்படவேண்டும்!

  பதிலளிநீக்கு
 4. நடந்த அத்தனை குண்டுவெடிப்புகளுக்கு(மாலேகான் ,அஜ்மீர் ,சம்ஜோதா எக்ஸ்பிரஸ்) பின்னும் நாங்கள் தான் காரணம் என்று அசிமானந்தா வாக்குமூலம் கொடுத்தபோதும் தீவிரவாத அமைப்பான RSS மற்றும் அதன் கிளை அமைப்புகளை எதுவும் செய்யாமல் அரசு சுதந்திரமாக விட்டது. அசிமானந்தா அடிக்கும் அந்தர் பல்டி வரை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அதன் தொடர்ச்சிதான் இது.

  குற்றவாளியை கண்டுபிடிப்பதில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

  இத்தகைய குற்றம் செய்தவர்களின் உடைமைகள் முடக்கப்பட வேண்டும் அவை அரசுடைமையாக்கப்படவேண்டும். பொதுமக்களின் முன்னிலையில் நாடு ரோட்டில் அல்லது மைதானத்தில் தலையை வெட்டி கொலை செய்யப்படவேண்டும். அதனை நீதிபதிகளே முன்னின்று நடத்த வேண்டும்.

  ஆனால் நடப்பதோ வாயிதா,வாயிதா.....

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்