வியாழன், ஜூலை 14, 2011

இஸ்லாமும்,அடிமைகளும்!!!...


ராஜா வேலை முடித்து,கம்பெனி பஸ்ஸில் வந்து இறங்கி,எப்போதும் போகும் டீக்கடைக்குள் நுழைகிறார்.அங்கே சற்றுமுன் வந்து சேர்ந்த அவரது நண்பர் அப்துல்லா அப்போதுதான் டீ சொல்லிவிட்டு மாலைமலரை புரட்டிக் கொண்டிருக்க,..பேச்சு ஆரம்பிக்கிறது....


ராஜா:என்ன மாப்ள இன்னக்கி சீக்கிரம் வந்துட்டாப்ள இருக்கு...


அப்துல்லா:அட! வா மாப்ள!..(தம்பி இன்னோரு டீ’ப்பா,..சக்கர ஜாஸ்தி)... உன்னப்பத்திதா நெனச்சுக்கிட்டு இருந்தேன்..என்னடா பயள இன்னும் காணோமே,எப்போவும் நமக்கு முன்னாடியே வந்துருவானேன்னு...சரி போவட்டும்,வேலை எப்டி போச்சு இன்னைக்கு?..

ராஜா:என்ன எப்பவும் போலதே..காலைல ரெண்டு அவர் வேலை இருந்துச்சு மாப்ள... அப்ரோ,மேனேஜர் கெளம்பி எங்கையோ போரதா ரிஷப்ஷன்ல சொல்லிட்டு போயிட்டாரு....


அப்துல்லா:அப்ரோ நீ என்ன பண்ணிருப்பைன்னு நான் சொல்ரேன்....வேலைய அப்டியே மூட்டை கட்டி வச்சுட்டு,ப்ளாக்க ஓப்பன் பண்ணிருப்பையே.....


ராஜா: (பயபுள்ள நம்மள நல்லாவே நோட் பண்ணி வச்சிருக்கு...)வேரென்ன பன்ன ஒவ்வொரு திரட்டியா ஓப்பன் பண்ணி,நல்லது கெட்டது,கழுத குதுர எல்லாத்தையும்,படிச்சு முடிச்சாச்சு மாப்ள...ஆமா நீ என்ன ஒழுங்கா..நீ என்ன  பண்ணுன சொல்லு...


அப்துல்லா:அட நம்ம கத’தே உனக்கு தெரியுமே,..வேலை இருக்கு மாப்ள,ஆனா நம்ம மேனேஜர் டார்கெட் டேட் குடுத்துட்டு,அப்ரம் நம்ம பக்கம் வரவே மாட்டார்...அப்ரம் என்ன,டைம்  இருக்கு...ஸோ நானும் காலைல கொஞ்ச நேரத்துலையே ப்ளாக்ல நொழஞ்சுட்டேன்...
பேசிக்கொண்டே டீ குடித்துவிட்டு,அக்கவுண்ட் புக்கில் எழுதிவிட்டு இருவரும் வெளியே வருகிறார்கள்


அப்துல்லா: சரி இன்னைக்கு என்ன ஹாட் டாப்பிக் படிச்ச,அத மொதல்ல சொல்லு...


ராஜா:ம்ம்ம்ம்...ஆரம்பத்துல வெறும் மொக்கையா படிச்சுட்டு இருந்தே.அப்ரம் ஹிட்ஸ் எதுக்கெல்லா அதிகமா இருக்கோ அதப்பாத்து படிக்க ஆரம்புச்சேன்..ஆனா மாப்ள,ஹிட்ஸ் அதிகமா இருக்கிர பெரும்பாலான பதிவு,உங்க மதத்தப் பத்திதாண்டா.... போட்டு வறுத்தெடுக்குறானுவ....எவன்னே தெரியாது மாப்ள!,அவன் எழுதினதுபூரா மொக்க பதிவுதா, ஒருத்தங்கூட அவன் பளாக் பக்கம் வந்திருக்க மாட்டான்..ஆனா அவன் பதிவுக்கும், ஹிட்ஸ், காரசாரமா விவாதம்,...பாத்தா..பதிவு உங்க மதத்தப்பத்தி....நீ இதல்லா படிப்பியா???.. எப்பா முடியலடா...


அப்துல்லா: தெரியும் மாப்ள!..நானும் படிப்பேன்...படிச்சுட்டு,முடிஞ்ச வரைக்கும் விளக்கம் சொல்லுவேன்...சிலர் கேட்டுப்பாங்க...சிலர் மல்லுக்கு நிக்கிரதுக்கே வருவாங்க.. அவங்கள கண்டுக்காம போயிட்ரது மாப்ள..வேரென்ன செய்ய....


ராஜா:ஆனா மாப்ள,அதை படிக்கும் பொது சில மேட்டர்’ல எனக்கே சில கேள்வியெல்லா வந்துச்சு,சரி அவனுகள்ட்ட பேசி பிரயோசனம் இல்லைன்னு விட்டுட்டேன்...


அப்துல்லா:சரி...என்ன படிச்ச என்ன கேள்வி வந்துச்சு,என்கிட்ட கேளேன்..பதில் தெரிஞ்சா சொல்றேன்...


ராஜா: (தயங்கியவனாக) இல்ல மாப்ள எல்லா மதத்துலையும்,நல்லது கெட்டது இருக்கு... நான் ஒன்ன கேக்க,நீ பதிலுக்கு,உன் மதம் மட்டும் யோக்கியமான்னு கேட்டா,அது நமக்குள்ள நல்லா இருக்காதுலடா...அங்க ஒருத்தன ஒருத்தன் இப்டித்தா கேட்டுக்கிறானுவ. வேணாம் மாப்ள...அத உடு...


அப்துல்லா: மாப்ள!..பதில் தெரியாதவந்தாண்டா இந்த வேலையெல்லா பாக்குறது... என்னப்பத்தி உனக்கு தெரியாதா!!??? இவ்ளோ யோசிக்கிற...கேளு! தப்பா இருந்தாலும் பரவாயில்லை.தெரிஞ்சா சொல்றேன்...இல்லைன்னா கேட்டுட்டு வந்து சொல்றேன்...சும்மா கேள்ரா,,,நீதா ஏடாகூடமா கேக்க போரியா?இல்ல நாந்தா அதெப்டி நீ கேக்கலாம்னு நிக்கெப்போரேனா?.. நாம என்ன அப்டியா பழகிருக்கோம்..சொல்லு மாப்ள...


ராஜா:அதுவந்து...உங்க மதம்,மத்த மதத்துக்காரங்கள அடிமையா வச்சுருக்க சொல்லுதாமே,மத்த மதத்து நாட்டோட சண்ட போட்டு,எதிர்க்குரவங்கள கொல்லவும், இருக்குறவங்கள அடிமையாக்கி கொண்டுவந்து கொடுமைபடுத்தவும் செய்யசொல்லுதாமே... முசுலிம்க எல்லாம் வன்முறை குணம் கொண்டவங்க அது இதுன்னு...சொல்லிருந்தானுக...ஏ மாப்ள இதபத்தி நீ என்ன சொல்ர...உனக்கு எதுனாச்சும் தெரியுமா?


அப்துல்லா: அட இதுதானா?


ராஜா: என்ன மாப்ள இவ்ளோ சாதாரணமா சொல்ர??


அப்துல்லா:இல்லடா..இத கேட்டு கேட்டு,பதில் சொல்லி சொல்லி அளுத்துப் போச்சு மாப்ள...


ராஜா:அப்டியா?அப்போ உனக்கு இதுக்கு பதில் தெரியுமாடா??..அப்பாட எனக்கு மனசு அரிச்சுக்கிட்டே இருந்துச்சு மாப்ள...யார்கிட்ட கேக்குரதுன்னு...யாராச்சும் அசரத்துக்கிட்ட கேட்டா தப்பா நெனச்சுப்பாங்களோன்னு இருந்துச்சு..ஆனா உன்ன கேக்கனும்ன்னு நெனைக்கவே இல்லடா...சரி சொல்லு...


அப்துல்லா:மாப்ள!இஸ்லாத்தில் போர்,ஏன்,என்னங்கிரது இருக்கே அது பெரிய டாப்பிக்.. அதப்பத்தி பின்னால பேசுவோம்..மொதல்ல அதுக்கப்பரம் இருக்கிற அடிமைத்தனம் பத்தி பாப்போம்..அதுல இஸ்லாம் எப்புடி அணுகுதுன்னு தெரிஞ்சா,மத்த மேட்டர்’ல அவங்க சொல்ரது எல்லா எந்த அளவுக்கு உண்மைன்னு நீயே முடிவுபண்ணிக்கலாம்...


ராஜா:அதுவும் சரிதே மாப்ள...மொதல்ல அதப்பத்தி சொல்லு..நானும் கேகனும்ன்னு தா இருந்தே,,,இப்போதா ஒன்னொன்னா நியாவகம் வருது...


அப்துல்லா:மாப்ள ஒன்னொன்னா பொறும்மையா கேளு சொல்றேன்..என்ன...


ராஜா: அதுசரி மாப்ள,முசுலீம்க,அந்த காலத்துல,வேர நாட்டுல இருந்து புடுச்சுட்டு வர்ர வேர மதத்து கைதிகளைலாம்,அடச்சு வச்சு,அவங்களை அடிமைகளாக்கி,ரொம்ப கொடும படுத்துவாங்களாமே..அவங்களை கேக்க ஆளுகலே இல்லாம,பாவம் சொல்ல முடியாத கொடுமைகள் இருந்துச்சாமே!அது நெசமா? அதப்பத்தி தெரிஞ்சா சொல்லேண்டா.


அப்துல்லா:மாப்ள!அக்காலத்துல அடிமைமுறைங்கிறது தவிர்க்க முடியாத ஒன்னு... கைதிகளை அடைத்து வைத்து சோறுபோட,பராமரிக்கவுலா சத்து இல்லை.அதனால, அவங்கள,மக்களுக்கும்,போரில் கலந்துகிட்டவங்களுக்கும் கொடுத்து, அவங்ககிட்ட வேலை வாங்கிக்கவும்,பதிலுக்கு அவங்கலை பராமரிக்கவும் அனுப்பி விடுவார்கள்..ஆனா அவங்கள யாரும் கேக்காமைலாம் இல்லடா...இஸ்லாமே அவங்களுக்கான உரிமைகளை அழகா பாதுகாக்கக்கூடியதாக இருந்துச்சு,அதுமட்டும் இல்லாம இந்த அடிமைமுறை காலப்போக்குல மறைந்து போகவும் இஸ்லாம் வழிவகுத்துச்சு...இந்த மேட்டர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது..


ராஜா:அப்டியா?...என்னடா சொல்ர....!!!


அப்துல்லா:ம்ம்ம் சொல்றேன் கேளு...அதாவது மாப்ள,இஸ்லாம் வர்ரதுக்கு முன்னாடியும் அக்காலத்துலையே அடிமை முறை இருந்துச்சுதான்..அவங்களை யாரும் கேக்க முடியாது... சித்ரவதைன்னா,உங்கூட்டு எங்கூட்டு சித்ரவதை இல்லை...அவங்கள அவங்களோட எஜமான் கொடூரமா கொன்னேபோட்டாலும் கேக்க நாதியில்ல...ஆனா இஸ்லாம் வந்ததுக்கப்பரம், ஒவ்வொன்னுக்குமான சட்டதிட்டங்கள் அல்லாஹ்,அப்ரம் நபி (ஸல்) மூலமா முஸ்லிம்களுக்கு வந்துகிட்டே இருந்துச்சு..அதுல அடிமைகளா இருந்தவங்களும் விதிவிலக்கில்ல...அவங்களோட உரிமைகளையும் இஸ்லாம் கவனத்துல கொள்லாம இல்ல....அடிமைகள் மீதான எஜமானர்களின் எல்லை என்னாங்கிறத தெளிவா நபி (ஸல்) சொல்லிருக்காங்க..அத மீறுறவங்கள கண்டிச்சு இருக்காங்க,அதுமட்டும் இல்லாம.....!!! இரு உனக்கு தெளிவா புரியனும்ன்னா அது சம்பந்தமான தெளிவான ஹதீஸயே உனக்கு சொல்றேன்...
ம்ம்ம்ம்ம்......ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3411வது ஹதீஸை ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
ஒரு முதியவர் அவசரப்பட்டு தம் அடிமைப் பெண்ணின் முகத்தில் அறைந்துவிட்டார். அவரிடம் சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள், "அடிப்பதற்கு அவளது மென்மையான முகம்தான் கிடைத்ததா? பனூ முகர்ரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் ஆவேன். எங்களிடம் ஒரே ஓர் அடிமைப் பெண் மட்டுமே இருந்தாள். அவளை எங்களது குடும்பத்துச் சிறியவர் ஒருவர் அடித்துவிட்டார். அப்போது அவளை விடுதலை செய்துவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அதுமட்டுமில்லாம ஹதீஸ் 3408ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும் என தெளிவாக சொல்லிவிட்டார்கள்,,


ராஜா:என்ன மாப்ள சொல்ர???..அப்போ அடிமை ஈஸியா விடுதலை ஆகிடலாமே...எந்த எஜமான் தா தனக்கு கெடச்ச அடிமைய அடிக்காம இருப்பான்...


அப்துல்லா:ம்ம்ம்..நீ சொல்றது சரிதா மாப்ள,...ஆனா பாரு இவங்களோட வேலைகள செய்றதுக்கு கட்டாயம் ஆள் தேவை...அக்கால,அதுவும் பாலைவன வாழ்க்கைல...எல்லா வேலையும் தானே செய்துக்கிறதுங்கிறது அத்தனை சுலபமான காரியம் இல்லையே....அதும் வயதானவங்க.. பணக்காரங்க... இவங்காளாலைலாம் வேலைக்கு ஆள் இல்லாம முடியாதே....
ஸோ..கட்டாயம் ஒரு அடிமை வேலையாள் வேணும்..ஆனா அவன் மேல கைவச்சுட்டா, அவன விடுதலை செய்தே ஆகனும்...அப்போ யார்தா அடிப்பாங்க சொல்லு....


ராஜா:அதுவுஞ்சரிதா மாப்ள...ஆனா எத்துன பேர்தா இப்டி அடிச்சதையும்,அதனால விடுதலை செய்ரதையும்,செய்யப்போராங்க...அவங்க அடிமைய மெரட்டி வச்சுருக்கலாம்ல... அப்போ அவங்க கஷ்டப்படுரது யாருக்கு தெரியப்போகுது??


அப்துல்லா:மாப்ள! நீ கேக்குறது வாஸ்தவந்தா...ஆனா இந்தக்காலம் மாதிரி இல்ல அந்த கால இஸ்லாமிய ஆட்சி..யாரும் போய் நேரடியாவே ஆட்சியாளர்களை சந்திக்கலாம்...அப்டி இருக்கும் போது இந்த அடிவாங்கிய அடிமைகளுக்கு என்ன தடை இருக்கும் அவங்க விடுதலையாக ஒரு பொன்னான வாய்ப்பான தன் எஜமான் அடித்த சம்பவத்தை முறையிட???..ம்ம்..
அதுமட்டும் இல்லாம,அக்கால மக்கள் தான் ஒரு துரும்பை நகர்த்தினாலும்,அது அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் பொருத்தமான வழியில்தான் செய்ய விரும்புவார்கள்..அவர்களின் முழுவாழ்வுமே, அல்லாஹ்,நபி(ஸல்),மறுமை,சொர்க்கம்,நரகம், அடிப்படையில்தான்... தான் மறைமுகமாக ஒரு காரியத்தை செய்துவிட்டாலும்,அதை யாரும் பாக்காலைனாலும்,அல்லாஹ் பாக்குறான்கிற நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் வழுவாக இருக்கும் அதனால் அவர்கள் அப்படி செய்ய சாத்தியம் இல்லை...
அதுமட்டும் இல்லாம,நபி(ஸல்) தங்கள் மீது ஏதாவது கோபப்பட்டு விட்டாலோ,அல்லது சின்ன தவறை செய்து விட்டாலோ, அதுக்காக நாள்பூரா அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புகேட்கும் அளவுக்கு, பயபக்தியோட இருந்தவங்க அவங்க...
இது சம்பந்தமான இன்னோரு ஹதீஸ உனக்கு சொன்னா புரியும்ன்னு நெனைக்கிறேன்...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3414வது ஹதீஸை அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது'' என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்'' என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்' அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்'' என்று கூறினார்கள்.


ராஜா:மாப்ள சத்தியமா சொல்றேண்டா..நீ சொல்றத என்னால நம்பவே முடியல... எதிரிகளையும் மத்த மதத்துக்காரங்களையும் கொலை செஞ்சா,முசுலிம்களுக்கு  சொர்க்கம் இருக்குன்னுல்ல,நா கேள்விபட்டு இருக்கேன்..அதனால முசுலிம்க எல்லா மத்தவங்கள அநியாயமா கொலை செஞ்சதாவும்ல சொல்ராங்க...ஆனா நீ சொல்ற மேட்டர் அதுக்கு ஆப்போஸிட்டாவுல இருக்கு...
இப்போ நா சொன்னது உண்மையா இருந்தா,அடிமைகள மட்டும் ஏன் இப்டி அடிக்கக்கூட கூடாதுன்னு சொல்லனும்??..அதும் அவங்க மத்த மதத்துக்காரங்கவேர,அல்லா மத்த மதத்துக்காரங்கள கொல்லச்சொல்லிருந்தா??? எப்டி அவங்கள அடிச்சாக்கூட முசுலிம்களுக்கே நரகம்ன்னு சொல்லிருப்பாரு???..


அப்துல்லா:ஹ்ம்ம்...நீ கேக்குறது சரிதா மாப்ள!!!..யாராவது,கொலையே செய்யச் சொல்லிட்டு,அதுக்கு உனக்கு சொர்க்கம்ன்னு சொல்லிட்டு,அப்ரம் அதெ ஆள பராமரி, அடிக்கக்கூட செய்யாத, அடிச்சா மவனே உனக்கு நரகம்ன்னு சொல்லுவாங்களா???.. அதுமட்டும் இல்ல இன்னும் இருக்கு,அதக்கேட்டா நீ இன்னு ஆச்சிரியப்படுவ...


ராஜா:என்னதது??? சொல்ரா!!!...


அப்துல்லா:ம்ம்...அதாவது,இப்ப நம்ம ஊர் பழக்கத்த எடுத்துக்கோ,வீட்டு வேலைக்காரி, வேலை எல்லா செஞ்சு,சமச்சு எல்லா முடிக்கிராங்கன்னு வச்சுக்கோ,அவங்கல எப்டி நம்மூர்ல நடத்துவோ...சொல்லு...


ராஜா:என்ன!!!...நாம டைனிங் டேபிள்ல உக்காந்து சாப்ட்டுட்டு,மிச்சம் இருக்கிறத, அவங்களுக்குன்னே ஒரு தட்டு வச்சிருப்போம்ல,அதுல போட்டு அடுப்பாங்கரைலையோ, இல்ல கொல்லைலயோ ஒக்காந்து சாப்புட சொல்லுவோம்...ஆமா இதை ஏங்கேக்குர....


அப்துல்லா:விஷயம் இருக்கு மாப்ள..அதாவது நமக்கு எந்த உரிமையும் இல்லாத சம்பளத்துக்கு வேலைபாக்குர வேலையாளுக்கு நாம குடுக்குர மரியாதை இப்டின்னா, இன்னும் அடிமைன்னா நாமல்லா என்ன பண்ணுவோம்...ஆனா இஸ்லாம் அடிமைகள அரவணைக்கிர இன்னோரு விஷயத்த சொல்றேன் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3421வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதென்னான்னா!!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.அப்டீன்னு.........


ராஜா:எது???..அடிமைகள சரிக்கு சரியா உக்காரவச்சு சாப்படு போடனுமா???..மாப்ள அப்ரோ என்னடா அடிமை???..அவன அடிமைன்னு சொல்ரதுக்கு வாய்ப்பே இல்லியே!!!


அப்துல்லா:ம்ம்ம்..இன்னும் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3419வது ஹதீஸை மஅரூர் பின் சுவைத் (ரஹ்)  என்பவர் அறிவிக்கிறார்....
நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும் போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள்'' என்று கூறினார்கள்.
இதுதா உள்ளதுலையே ஹைலைட்டு...அடிமைகள் எஜமானர்களுக்கு சகோதரர்களாகவும், அவர்கள் அணிவதையே அடிமைகளுக்கு அணியத்தரவேண்டும் என்றும்,அவர்கள் உண்பதையே அவர்களுக்கும் தரவேண்டும்ன்னு சொன்ன நாம ஒத்துப்போமா??? ம்ம்ஹும்... ஆனா அவங்க அதை நடைமுறைபடுத்துனாங்க...
அதுமட்டுமில்லாம,அளவுக்கு மீறி வேலை கொடுக்கக்கூடாது என்பதும்,அப்படி கொடுத்தால் எஜமானன் அவனுக்கு உதவிபுரியவேண்டும் என்பதும் கட்டளை.
இனோன்னு...நாமெல்லா நெனைக்கிற மாதிரி முஸ்லிம்களுக்கு,பிற மதத்தவங்கதா அடிமையா இருப்பாங்கன்னு...ஆனா அடிமைகள்ல முஸ்லிம்களும் இருந்திருக்காங்க....இதை ஹதீஸ் 3422 மெய்ப்பிக்கிறது..கடைசி கடைசியா அடிமைகளுக்கு இஸ்லாம் வழங்கிய  சிறப்பை சொல்ல ஒரே ஒரு ஹதீஸ மட்டும் சொல்றேன்...
அது என்னான்னா...ஸஹீஹ் முஸ்லிம்’ல 3423 வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்'' என்றார்கள்.
ஒரு சுதந்திரமான முஸ்லிமே அடிமையா இருந்து மரணிக்க ஆசைப்படும் அளவுக்கு அடிமை” என பொருள்பட சொல்லப்பட்டவர்கள் இஸ்லாத்தில் சிறப்புப்பெற்று இருந்துள்ளனர்.
மேலும் இப்படியாக பேணப்பட்ட அடிமை முறையானது,மேலும் சிலர் செய்துவிடும் தவறுகளுக்கு பரிகாரமாகவும்,நன்மையை கருதியும்,அடிமை உரிமை விடப்பட்டு, காலப்போக்கில் அடிமைகள் அருகி...குறுகிய காலத்திலே அடிமை முறை இல்லாமல் போனதற்கும் இஸ்லாம் வகுத்த சட்டங்களே காரணம்...
இப்போ என்ன சொல்ர????


ராஜா:(மலைத்தவனாக)...டே நண்பா! ஒன்னும் சொல்ரதுக்கே இல்லட...நா என்னமோன்னு நெனச்சுட்டு இருந்தேன்....ஒரு அடிமை விஷயத்துல இவ்ளோ சட்டதிட்டங்கள் இருக்கா??? அதும் ஒரு முஸ்லிம் அடிமையா இருக்க விரும்பக்கூடிய அளவுக்கு சிறப்பானதா????...இந்தக்காலத்துலகூட சிந்திக்கமுடியாத அளவுக்கு இஸ்லாம் அடிமைகளை,சே,,இந்த வார்த்தையே தப்பு..வேலையாள்களை நடத்தியவிதம்,என்னை பிரம்மிக்க வெக்கிது மாப்ள.....என்ன சொல்ரதுன்னே தெரியலடா....
இன்னும் நெரைய கேள்விகளும்,குழப்பங்களும் எனக்கு இருக்கு....அடுத்து சந்திக்கும் போது பேசுவோம்டா....இவ வேர மிஸ்கால் அடிக்க ஆரம்பிச்சுட்டா!..இனியும் லேட்டா போனா டின்னு கட்டிடுவா மாப்ள....நேரம் ஆகுது..நா கெளம்புறேன்,,..


அப்துல்லா:ஓக்கே மாப்ள....நீ மொதல்ல கெலம்புரியோ இல்லையோ,நா கெலம்புறேன்... பேசுனதுல நேரம் போனதே தெரியலையப்பா!!!..உன் தங்கச்சிய பத்திதா  உனக்கு நல்லா தெரியுமே!!....ஸேம் ப்ளட்....

அன்புடன்
ரஜின் 

16 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ரஜின்,
  மாஷாஅல்லாஹ்...
  பதிவு அருமை சகோ.
  அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.
  உங்களிடம்தான் பதிவு என்றால், அதை எப்படி எழுத வேண்டும் என்று ட்யூஷன் படிக்க வேண்டும் சகோ.ரஜின்..!

  Excellent lively presentation..! I felt... I were there along with those two (abdullah and raja) drinking a cup of tea on next table to them and 'listening' all..! I don't felt 'reading'..!

  பக்கத்தில் மட்டும் இருந்திருந்தால் ஓடி வந்து கைகுலுக்கி இறுக்கி அணைச்சு பாராட்டி இருப்பேன் சகோ.ரஜின். ப்ச்..! ரொம்ப தூரத்திலே நாம்..! அற்புதமான பதிவிற்கு மிக்க நன்றி சகோ.ரஜின்.

  ------------------------------------------------
  அப்புறம் ஒரே ஓர் உறுத்தல் சகோ.ரஜின்,
  சென்ற பதிவிலேயே சொல்லணும் என்று இருந்தேன். வேலைப்பளு. இப்பதிவிலும் அது ரிபீட் ஆகிறதால்... சொல்லியாக வேண்டும் சகோ.ரஜின்.

  என்னதான் 'வேலைக்கு பாதிப்பு இல்லை' எனினும், அலுவலக நேரத்தில், அலுவலக கணிணியில், அதுவும் மேலாளருக்கு/முதலாளிக்கு தெரியாமல்... பிளாக் படிப்பது எழுதுவது பின்னூட்டம் போடுவது எல்லாம், முறையான அனுமதி பெற்று, ஒப்புதலுடன் நடந்தால் மட்டுமே நல்லது அல்லவா..? இல்லையேல்... தவறுதானே..? நான் கேட்பது சரிதானே சகோ..?

  ///...தான் மறைமுகமாக ஒரு காரியத்தை செய்துவிட்டாலும்,அதை யாரும் பாக்காலைனாலும்,அல்லாஹ் பாக்குறான்கிற நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் வழுவாக இருக்கும். அதனால் அவர்கள் அப்படி செய்ய சாத்தியம் இல்லை...///

  பதிலளிநீக்கு
 2. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக்..
  எனக்குத் தெரிந்ததை,எளிய உரையாடலாக தொகுத்துள்ளேன்..அவ்வளவே...சகோ

  //நான் கேட்பது சரிதானே சகோ..?//
  சரிதான் சகோ...எனது பழைய ஆஃபிஸில்,எனது மேலாளருக்கு தெரிந்துதான் எல்லாம் செய்தேன்,,இன்னும் எனது சக ஊழியர்கள் கேம் கூட விளையாடுவார்கள்...அவர் கண்டுகொள்ள மாட்டார்..அவருக்கு தேவை,குறித்த நேரத்தில் வேலை முடியனும்..அவ்ளோதான்,,,,

  ஆனால் இப்போது இருக்கும் ஆஃபிஸில்,அதற்கான வாய்ப்புகள் முதலில் இல்லை..இரண்டாவது,போதுமான வேலை இருக்கிறது...அதனால் ரூமுக்கு வந்த பின் தான்..எல்லாமே...

  நன்றி சகோ
  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பறக்காத்துஹு,
  ரஜின் bhai....,

  You left me speechless.............!!!!!

  இதை விட அழகா... அருமையா ஒரு சொந்த ஆக்கத்தை, இந்த கருவில் நான் கண்டதேயில்லை... சுப்ஹானல்லாஹ்... உண்மையில் படிக்க படிக்க... இப்படி ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளாரே என்கிற பெருமிதம்தான் மேலோங்குகிறது. அல்ஹம்துலில்லாஹ்... இன்னும் அதிகமாக ராஜா-அப்துல்லாஹ்வின் கருத்துரையாடல்களை வாசிக்க விரும்புகிறேன்.... அல்லாஹ் இந்த அருமையான, அழகிய அமலை பொருந்திக் கொண்டு, பன்மடங்கு கூலியை ஈருலகிலும் தந்தருள்வானாக. ஆமீன்.

  :)))))))))))
  வஸ் ஸலாம்.

  பதிலளிநீக்கு
 4. வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சகோ அன்னு...

  //அல்லாஹ் இந்த அருமையான, அழகிய அமலை பொருந்திக் கொண்டு, பன்மடங்கு கூலியை ஈருலகிலும் தந்தருள்வானாக. ஆமீன். //

  தங்களின் இந்த அருமையான துஆவை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக...ஆமீன்...

  //இப்படி ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளாரே //

  மாஷா அல்லாஹ்,மார்க்கத்தின் நிழலில் எனக்கொரு சகோதரியை கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்..அல்லாஹ் இதன்மூலம் அர்ஷின் நிழலுக்கு நாம் பாத்தியப்பட்டவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக...

  //இன்னும் அதிகமாக ராஜா-அப்துல்லாஹ்வின் கருத்துரையாடல்களை வாசிக்க விரும்புகிறேன்.... //

  இன்ஷா அல்லாஹ்...இது எப்படி இருக்கும் என்ற குழப்பத்துடனே பதிந்தேன்..முதல் அனுபவம் இது போன்ற உரையாடல் பதிவு இடுவது...

  //இந்த கருவில் நான் கண்டதேயில்லை.//

  அல்லாஹ் தான் சொல்ல நாடியதை நமைக்கொண்டு வெளிப்படுத்துகிறான்..நாம் கருவி அவ்வளவே...

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 5. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சகோ. ரஜின்! சிறந்த இடுகை. சிலருக்கு இதுபோல் உரையாடலாக சொன்னால்தான் புரியும். இதுபோல் மேலும் பல ஆக்கங்களைத் தர வாழ்த்தும்

  -சுவனப்பிரியன்.

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும்!
  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சகோ. ரஜின்! சிறந்த மற்றும் எளிமையாக புரிதலை கொடுக்கும் உங்கள் பதிவிற்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

  بارك الله فيك

  பதிலளிநீக்கு
 8. வ அலைக்கும் ஸலாம் சகோ சுவனபிரியன்,
  உண்மைதான்,,இது ஒருவித புரிதலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இப்படி முயற்சித்தேன்,,,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
  -------------------------------------------------------
  சகோ இம்தியாஸ்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,,,.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 9. வ அலைக்கும்ஸலாம் சகோ பாட்..
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  ------------------------------------------------------
  வ அலைக்கும் ஸலாம் சகோ முஜாஹித்,
  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்,துஆவுக்கும் நன்றி சகோ...
  தங்களின் தளம் பார்த்தேன்...மாஷா அல்லாஹ் அருமையாக தொகுத்துள்ளீர்கள்..

  எனது லிஸ்டில் சேர்த்துவிட்டேன்,,,

  இன்ஷா அல்லாஹ் அடிக்கடி வருகிறேன்,,

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா19/7/11 3:50 முற்பகல்

  அடிமைகளை பற்றிய விளக்கங்கள் அருமை. மாற்று மதத்தை சார்ந்த எனக்கும் புரியும் வகையில் எளிய முறையில் விளக்கியிருந்தீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
  -செந்தில்

  பதிலளிநீக்கு
 11. Bro Senthil...
  Thanks for coming and reading this article...

  thanks...

  visit again..

  anbudan
  razin

  பதிலளிநீக்கு
 12. அடிமைகளை பற்றிய விளக்கங்கள் அருமை. மாற்று மதத்தை புரியும் வகையில் எளிய முறையில் விளக்கியிருந்தீர்கள்.
  நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

  சகோ. ரஜின்! சிறந்த மற்றும் எளிமையாக புரிதலை கொடுக்கும் உங்கள் பதிவிற்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

  அருமையான பதிவு ............

  பதிலளிநீக்கு
 13. எழுத்துக்களில் உயிர் இருக்கு... மாஷா அல்லாஹ்

  படிக்க படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு சகோ

  இறைவன் உங்களுக்கு நற்கூலி கொடுக்கட்டும்!!!

  பதிலளிநீக்கு
 14. தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்

  கரேக்ட்டா வந்துடுங்க :)

  http://kuttisuvarkkam.blogspot.com/2011/07/blog-post_22.html

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்