ஞாயிறு, ஜூலை 31, 2011

இனிய ரமலான்!!!


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)


இனிய ரமலான்!!!’...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே...இதோ ரமலான் எனும் அருள்வளம் பொருந்தியதொரு மாதம் நம்மை அடைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவருடனும் உரையாடுவதில்,எனது உள்ளக்கிடக்கை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...


மாஷா அல்லாஹ்....இந்த ஆண்டு ரமலானை நான் அதிகம் எதிர்நோக்கியவனாக, மிகுந்த ஆவலுடன் வரவேற்கிறேன்..வல்லோனிடன் அதிகம் தேவையுடையவனாக இருக்கும் எமக்கு,நமது இறைவனை நெருங்கிச்செல்லும் பாக்கியம் கிடைக்கும் போது யார்தான் மகிழமாட்டார்கள்...


ரமலான்:ஹ்ம்ம்..என்ன வெறும் முப்பது நாள் பசித்திருப்பது மட்டும்தானா??. இல்லை..இல்லவே இல்லை...இது ஒருவித ஆன்மீகப் பயிற்சி..எவ்விதமானது இப்பயிற்சி...இஸ்லாமியர்களின் நோன்பு என்பது வயிற்றை காயப்போடும் வெறும் உண்ணாவிரதம் அல்லவே..அது ஒளிவுள்ள வாழ்வை வரமளிக்கக்கூடிய பயிற்சி.. முஸ்லிம்கள் நோன்புகாலத்தில் உணவைமட்டும் நிறுத்திடப் பழகவில்லை, பொய், புறம்,இச்சை,கோபம்,வீண்பேச்சு,சண்டை,சச்சரவு,என வாழ்வில் இருந்து களையப்படவேண்டிய அத்துனை காரணிகளையும் உணவோடு சேர்த்து நிறுத்தி, இறையச்சம்,ஒழுக்கம்,உண்மை,கண்ணியம்,கருணை,அன்பு,போன்ற வாழ்வில் அங்கமாக்கிக்கொள்ளவேண்டிய அத்துனை அம்சங்களையும் தன்னகத்தே பொருத்தி, அந்நாளின் நோன்பொன்றை பூர்த்தி செய்யும்போதுதானே அந்த நோன்பானது அதன் மதிப்பை பெற்றுக்கொள்கிறது...இப்படி முப்பது நாளுமாக முழுமையான வாழ்க்கைக்கலையை கைகொண்டு அதை வாழ்நாளில் பேணி,அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ என்றும் வல்லோனை பிராத்திக்கிறேன்...

ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்கு சொந்தமானதல்ல. அது எனக்கே சொந்தமானது. நானே அதற்கு கூலிக்கொடுக்கிறேன். என்று அல்லாஹ் சொல்வதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல் அஹ்மத், முஸ்லிம், நஸயீ

நோன்பும், குர்ஆனும், மறுமைநாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யகூடியவைகளாகும். நோன்பு கூறும் ' ''இறைவா நான் இந்த அடியானை பகல்நேரத்தில் சாப்பிடவிடாமலும், மனோஇச்சைகளின்படி நடக்கவிடாமலும் தடுத்துவைத்திருந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!'' இன்னும் குர்ஆன் ''இறைவா இரவு நேரங்களில் இந்த அடியானை என்னை ஓதுவதற்காக இவனை தூங்கவிடாது தடுத்துவந்தேன். ஆகவே இவன் விஷயத்தில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக'' என கூறும். அவ்விரண்டின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : அஹ்மத்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து யா ரஸுலல்லாஹ் என்னை சுவர்க்கத்திற்கு கொண்டு சேர்க்ககூடிய ஒரு நல்லறத்தை அறிவித்துத் தாருங்களேன் என வேண்டினேன். அதற்கவர்கள் நீ நோன்பு வைத்துவா ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவுமில்லை. என்றார்கள் பின்னர் இரண்டாம் தடவையாக அவர்களிடம் வந்து மேற்கூறிய கேள்வியையே கேட்டேன். அதற்கவர்கள் நோன்பு வைத்து வா என்றார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ அபூஉமாமா (ரழி) நூல் அஹ்மத் நஸயீ

அல்லாஹ்வுடைய வழியில் ஒரு நாள் நோன்பு வைப்பதினால் இறைவன் நோன்பு வைப்பவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து 70 ஆண்டுகாலம் திருப்பிவிடுவான். அறிவிப்பாளர் அபூஸயீதில் குத்ரீ (ரழி).நூல் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ அஹ்மத் 

சுவர்க்கத்தில் ரய்யான் என்றழைக்கப்படக்கூடிய வாயிலொன்று உள்ளது. மறுமைநாளில் அந்த வாயிலிருந்து நோன்பாளிகள் எங்கே? என கூப்பிடப்படும். நோன்பாளிகளில் இறுதி நோன்பாளி நுழையும் வரை வாயில் திறக்கப்பட்டிருக்கும். அவரும் நுழைந்துவிட்டால் அதன் வாயில் மூடப்படும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் ஸஃது இப்னு ஸஹ்ல் (ரழி) நூல் புகாரி, முஸ்லிம்,

ரமழான் மாதம் வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களிடத்தில் அபிவிருத்திமிக்க மாதம் வந்துள்ளது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகிறது. நரக வாயில்கள் மூடப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இதன் நன்மைகளை அடைய முயற்;சி செய்யாது எவர் உள்ளாரோ அவர் எந்த நன்மையையும் அடைந்துக்கொள்ளமாட்டார். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரழி) நூல் அஹ்மத் நஸயீ பைஹகீ

அர்பஜா என்பவர் கூறுகிறார். நான் உத்பா பின் பர்கதிடம் இருந்தேன் அவர் ரமழானின் சிறப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவர் ரமழானின் சிறப்பம்சங்களை எங்களிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னார் ரமழானில் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். பின்பு சொன்னார்கள் அம்மாதத்தில் ஓர் மலக்கு மக்களிடம் நன்மைகளை தேடக்கூடிய மக்களே இதோ சுபச்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் அதிகமாக நன்மைகளை செய்யுங்கள். தீமை செய்வோரே உங்கள் தீமைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என ரமழான் மாதம் முடியும்வரை சொல்லிக்கொண்டேயிருப்பார். என நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் அறிவிப்பாளர் ஆபூஹுரைரா (ரழி) நூல் அஹ்மத் நஸயீ

யார் ரமழான் மாதத்தில் ஈமானிய சிந்தனையோடும், இன்னும் பிற தேவைகளின் நிமித்தமாகவும் நோன்பு வைக்கிறார்களோ அவர்கள் முன் செய்த பாவமனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.ஆறிவிப்பாளர் ஆபூஹுரைரா (ரழி) நூல் அஹ்மத் 

போர்க்களத்தில் கேடயம் கொண்டு எப்படி உங்களை பாதுகாத்துக்கொள்கிறீர்களோ அது போன்று நோன்பு நரகத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் கேடயமாகும். (அஹ்மத்) 

நோன்பாளிகள் நோன்பு திறக்கும் நேரத்தில் செய்யப்படும் துஆக்கள் உடன் அங்கீகரிக்கப்படும். ( இப்னு மாஜா)

எவர் ரமழான் மாதத்தில் நோன்பு வைத்து, அதன் ஒழுக்கவிழுமங்களை அறிந்து, பேணப்படவேன்டிய விஷயங்களை பேணி நடந்து வருகிறரோ அவர் முன் செய்த பாவமனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) நூல் அஹ்மத், பைஹகீ

ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களை போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களை போக்கக்கூடியதாகும். ஒரு ரமழான் மாத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமழானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களை போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். அதாரம்: முஸ்லிம்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.ஸஹீஹ் முஸ்லிம் : 1975

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஹர் செய்யுங்கள். ஏனெனில்சஹர் செய்வதில் அருள் வளம் (பரக்கத்) உள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2000

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2003

ரமலானின் ஒவ்வொரு நாளையும்,நேரத்தையும்,அதன் மதிப்புணர்ந்து, பிரியத்துடனும், ஆர்வத்துடனும்,முழுமையான ஈமான் எனும் இறையச்சத்துடனும் கடந்து அதன் நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்...இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நமது முயற்சிகளில் வெற்றியை தந்து நம்மை இம்மையிலும் மறுமையிலும் பாக்கியம் பெற்றவர்களாக ஆக்கி அருள் புரிவானாக....ஆமீன்...

அன்புடன்
ரஜின்

7 கருத்துகள் :

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    சகோ ரஜின்
    அருமையான பதிவு.... ஜஸக்கல்லாஹு ஹைர்

    நோன்பு மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

    அல்ஹம்துலில்லாஹ்.

    சகோ இன்று அங்கு முதல் நோன்பா.

    பதிலளிநீக்கு
  3. வ அழைக்கும் சலாம் சகோ ஆமினா,
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
    தங்களுக்கும்,தங்களின்குடும்பத்தாருக்கும்,இனிய ரமளான் வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  4. வ அழைக்கும் சலாம் சகோ ஆயிஷா,

    ஆமா சகோ,இன்னைக்கு தான் இங்க முதல் நோன்பு..அருமையா போயிட்டு இருக்கு..மத்தியானம் லீவு வேற..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ரஜின்,
    நோன்பு பற்றிய நிறைய விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அளித்தமைக்கு நன்றி சகோ.
    இவ்வருட புனித ரமலானின் முதல் நோன்பில் இருக்கும் தங்களுக்கும், இம்மாதம் நோன்பு நோற்கும் அனைத்துலக சகோதரர்களுக்கும்... இந்த அருட்கொடை மாதத்தில் அதிக நற்செயல்கள் செய்து பன்மடங்கு நன்மைகளை இறைவனிடம் டெபாசிட் செய்துகொள்ள எனது
    நல்வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் சகோ.!

    பதிலளிநீக்கு
  7. மிகச்சிறப்பான பதிவு சகோ ரஜின்,
    என் பக்கத்தில் இதை லின்க் கொடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்