வியாழன், ஏப்ரல் 19, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 01


அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி.... என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய், கவரை பிரித்து புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.

மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..


நேரமாச்சே! என மனதுக்குள் புலம்பியவளாய், மூச்சுவாங்க கல்லூரிக்குள் நுழைந்ததும்,ராதி எங்க என பிறரிடம் விசாரித்துக்கொண்டே வகுப்பறைக்கு சென்றாள்.ராதிகா படு பிஸியாக அன்றைய கல்லூரி விழாவுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஹே ராதி..என உற்சாகக் குரலுடன் அவளை ஹதீஜா நெருங்க...ஹாய் ஹத்.....திஜா என பேச்சை நிறுத்தியவளாய் மேலும் கீழும் பார்த்துவிட்டு, முகத்தை திருப்பி வேலையை செய்பவளாய் கோபம் காட்டினாள் ராதிகா.

ஹதீஜா காரணம் புரிந்தும் மழுப்பலாய்,ராதி எவ்ளொ வேலடி முடிஞ்சுருக்கு என பேச்சை குடுக்க.. ஹேய் நா யார்க்கிட்டையும் பேசவிரும்பல, என்னய தொந்தரவு பண்ணவேணாம்ன்னு சொல்லிடு, என ஹதிஜாவை முறைத்து கொண்டே அருகிலிருந்தவளிடம் சொல்லிவிட்டு ராதிகா நகர்ந்தாள். அதன்பின் அன்று மாலை வரை ஹதிஜாவை பலமுறை பார்த்தும் பேசாது ராதிகா விலக... காரணம் புரிந்ததால் ஹதிஜாவும் பார்க்கும்போதெல்லாம் சிரித்துவைத்துவிட்டு, வீட்டுக்கு போகும் நேரத்திற்காக காத்திருந்தவளாய், விழாவில் அதே சிந்தனையுடன் சுற்றிவந்தாள்...

விழாவும் முடிந்து கிளம்பும் நேரம் வந்ததும், ராதிகா எல்லாரிடமும் விடைபெற்றுவிட்டு, யாரையோ தேடியவாறு, வேகவேகமாக சைக்கிளை நோக்கி ஓடினாள்... ஹதிஜா, ராதிகாவின் சைக்கிளில் அமர்ந்தவாறு,.. வாம்மா மகாராணி என கேளிபேசி பேச்சை ஆரம்பித்தாள், ராதிகாவும் அதற்குமேலும் பேசாமலிருக்க முடியாதவளாய்...ஒரு கனம் தாமதித்து... உன்கிட்ட எவ்ளோ தடவடி சொன்னேன்.. மெனக்கெட்டு ஃபோன் பண்ணிவேர சொன்னேனேடி..இப்டி பண்ணிட்டியே! என முகத்தில் கடுகுவெடிக்க... எதும் அறியாதவள் போல்,என்னடி ஆச்சு..என விஷயத்தை அவள் வாயிலிருந்து துவங்கும் முகமாக கேள்வி கேட்டாள் ஹதிஜா...


போடி..எவ்ளோ ஆசையா நம்ம ரெண்டு பேரும் சேந்து பொடவ எடுத்தோம்.நீ இப்டி பண்ணுவன்னு தெரிஞ்சுதான ஃபோன்பண்ணி அவ்ளோ சொன்னேன்..சொல்லியும் இப்டி பர்தா போட்டுட்டு வந்து நிக்கிறியே ஹதி...ஒரு நாள்தான... பாத்துட்டு புடவ சூப்பரா இருக்குன்னு சொல்லாதவங்களே இல்ல தெரியுமா... நீனும் இதே மாதிரி வந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்...அப்டி என்னதாண்டி இதுல இருக்கு... நாங்கல்லா சாதாரணமா இல்லையா... ஒடம்ப காட்டிகிட்டா திரியுறோம்... இப்டி முழுச மறைச்சாத்தான் ஆச்சா?... என பொறிந்து,பின் ஏதோ தவறாய் பேசியதாய் உணர்ந்து பேச்சை முடக்கினாள் ராதிகா..

ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவம் தணிந்து வருத்தம் மேலிட.. ஸாரிடி... இருந்தாலும் நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா.. இந்த சமயத்துக்காய் காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்... 

தொடரும்...

பாகம் 02


அன்புடன்
ரஜின்

13 கருத்துகள் :

  1. சலாம் சகோ. அருமையா தொடங்கி இருக்கீங்க. அடுத்த பாகம் படிக்க வெயிட்டிங் :)

    பதிலளிநீக்கு
  2. வ அலைக்கும் ஸலாம் சகோ அஸ்மா..
    தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

    இன்ஷா அல்லாஹ் நாளை அடுத்த பாகம்....

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    அருமையான ஆரம்பம்...

    ராதிகாக்கு என்ன பதில் சொல்ல போறான்னு கேட்க ஆவலா இருக்கு

    அப்பறம்.........
    அது வந்து....அது.......அதாவது...

    அந்த போட்டோ நல்லா இருக்கு. டிசைன்னும் கலரும் பக்காவா இருக்கு! அட அட அட ஜலீலாக்கா கிட்ட இந்த போட்டோவ காமிச்சு இதே மாதிரி இதே டிசைன்ல வாங்கணும் ஹி..ஹி..ஹி.. (உங்களையெல்லாம் திருத்தவே முடியாது, பதிவுக்கு ஒருவரி கமென்ட், படத்துக்கு 10வரியான்னு நீங்க சொல்றது கேக்குது ஹி..ஹி..ஹி..)

    பதிலளிநீக்கு
  4. சலாம் சகோ ரஜின்,

    உங்க பக்கம் வர்றது இதான் முதல் தடவை...ரொம்ப நல்லா இருக்கு இந்த ப்ளாக்.. தொடர்ந்து எழுதுங்க சகோ...

    அப்புறம் இந்த பதிவு பத்தி..... ஹி..ஹி..ஹி..
    அடுத்த பாகம் பாத்துட்டு மொத்தமா சொல்றேன்....

    பதிலளிநீக்கு
  5. வ அலைக்கும் ஸ்லாம் சகோ ஆமினா..

    இன்ஷா அல்லாஹ் அந்த பதிலை நாளை அறிந்துகொள்வீர்கள்...சகோ...

    போட்டோ...கூகுளில் இருந்து தரவிறக்கியது...

    //பதிவுக்கு ஒருவரி கமென்ட், படத்துக்கு 10வரியான்னு நீங்க சொல்றது கேக்குது ஹி..ஹி..ஹி..)//
    உங்களயெல்லா திருத்துரது கொஞ்சம் கஷ்டம்தான்.... :)

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  6. வ அலைக்கும் ஸலாம் சகோ சிராஜ்..
    உங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

    இன்ஷா அல்லாஹ் விரைவில் அடுத்த பாகம்...தொடர்ந்து படியுங்கள்..
    கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    பர்தா குறித்த சிறப்பான துவக்கம்.,

    இன்ஷா அல்லாஹ் ஹதிஜா என்ன சொல்கிறார் என பொறுத்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  8. வ அலைக்கும் ஸலாம் சகோ

    இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவு நாளை....

    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி சகோ..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா20/4/12 6:41 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    மிக அருமையான பதிவு.அதன் தொடர்ச்சிக்கு waiting

    kalam.

    பதிலளிநீக்கு
  10. வ அலைக்கும் ஸலாம் சகோ அனானி..

    உங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகம் நாளை....

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  11. அட.... அடுத்த பார்ட் போடலியா? ஏன் பாய் இப்படி? சீக்கிரம் போடுங்க... வெயிட்டிங் :)

    பதிலளிநீக்கு
  12. ஏன் பாய் இப்படி... அடுத்த பாகமும் சீக்கிரமே போடுங்க :)

    பதிலளிநீக்கு
  13. ஸலாம் சகோ அன்னு...
    உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும், கருத்திற்கும் நன்றி..

    அடுத்த பாகம் இதோ இன்னும் சில நிமிடங்களில்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்