சனி, ஏப்ரல் 21, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 02 (10% வேறுபாடு?)

முந்தைய பாகத்தை படிக்க: க்ளிக் செய்யுங்கள் பாகம் 01 


ஹதீஜா - ராதிகா 

ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவம் தணிந்து வருத்தம் மேலிட..ஸாரிடி...இருந்தாலும் நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா..இந்த சமயத்துக்காய் காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்... (முதல் பாகம்)

ராதிகாவை இயல்புநிலைக்கு கொண்டுவர,.. ஹதிஜா, பொய்சிரிப்போடு... ராதி...ஏய், ப்ச், இங்க பார்டி... இன்னக்கி ஒருநாள் போடாம இருந்தா என்னான்னு கேக்குற... இது நாங்க போடுர யூனிஃபார்ம்ன்னு நெனச்சிக்கிட்டியா என்ன? இன்னைக்கி லீவுதானே, வேர போட்டா என்னான்னு கேக்க??...என்றதும்,... இல்லப்பா அப்டில்லா நெனைக்கல,என ராதிகா சிறு தவிப்புடன் பதிலளித்தாள்... தொடர்ந்து ஹதிஜா....அப்படியா? சரி! அப்போ பர்தா எதுக்காக நாங்க போடுறோம்? சொல்லேன்...என விளையாட்டுத் தனமாக கேள்விகளை தொடர்ச்சியாக கோர்க்க...

ராதிகா, யோசித்தவளாய்!!!,.. என்ன? உங்க மத்துல பொம்பளைங்க மட்டும், இப்டித்தா இருக்கனும்ன்னு சொல்லிவச்சுருக்கு,அத கட்டாயம் ஃபாலோப் பண்ணனும்ன்னு செய்யிரீங்க... இதுனால என்ன பெனிஃபிட்? பாரு நாங்கள்லா எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்...நீங்க அப்டி இல்ல.. அப்டி நீங்க இருக்க உங்க மதமும் அனுமதிக்கல,... விதியேன்னு போட்டுட்டு இருக்கீங்க... இல்லயா? என பொடிவைத்து புன்முறுவலுடன் பதிலளித்தாள்...


ராதிகாவின் இந்த கிண்டல்,அவள் இயல்புநிலைக்குத் திரும்பியதை உணர்த்த,..ஹதிஜாவும் தன்னை விவாதத்திற்கு தயார்படுத்தியவாளாக.. ஹ்ம்..சரி நான் ஒன்னு கேக்குறேன்,சொல்லு..எனத் தொடர்ந்தாள்... சொல்லப்படும் ஒரு விஷயம்,அதை செய்யிறோம், செய்யல.. மொதல்ல அது அறிவுக்கு பொருந்தக் கூடியதா? இல்லையாங்கிறத வச்சுத்தானப்பா அது கட்டாயமா? இல்லையான்னு முடிவுக்கு வரமுடியும்... அறிவுக்கு பொருந்தாத ஒன்னு, மதத்துல சொல்லியிருந்து, எங்க பெரியவங்க அதத் தெரிஞ்சும் செய்ய சொல்றதுக்கு பேரு கட்டாயம். இல்லையா?... எனக்கேட்க, வழிமொழிவது போல் தலையசைத்த வண்ணம், ராதிகா ஹதிஜாவை, தொடர்ந்து பேச அனுமதித்தாள்.. ஒருவேல அதுவே அறிவுக்கு பொருந்துவதாக இருந்தால்? யாரும் செய்ய மறுப்போமா?..இல்ல அப்டி செய்யிரவங்களுக்கு, கட்டாயம் இத செய்யின்னு யாரும் சொல்லனுமா?..

பர்தாவ நாங்க அப்படித்தான் போடுறோம் ராதி.. அதுனாலதா இந்த கருப்புத்துணிய எவ்வித சலனமும் இல்லாம காலம் முழுசுக்கும் போட்டுக்கிறதுக்கு மனசு வருது...சரி கட்டாயம்ன்னு ஒனக்கு யாரு சொன்னா? சொல்லு? என ஹதிஜா கேட்க....

யாரும் சொல்ல்லப்பா..என் மனசுல பட்டத சொன்னேன்..என ராதிகா சொல்லிமுடிக்கத்தாமதியாது..,ஏன்?... என கேள்வியை கொடுத்து, தொடர்ந்து ராதிகாவை பேசவிட்டாள் ஹதிஜா...

ஏன்னா...என்ன சொல்றது?. என்னயவே எடுத்துக்க..எல்லாரும் மாதிரித்தா நானும் ட்ரஸ் பண்றேன்.. நீ பர்தா போட்டுட்டு வர்ர.. நீ என்ன சாதிச்சுட்ட,நான் என்ன சாதிக்காம போயிட்டேன்.. உன்னப் போல பர்தா போடாத்தால,எனக்கு ஒழுக்கம் இல்லாம போச்சா? இல்ல வேரெதாவது பாதிப்பு வந்ததா? அப்டி இருக்கும் போது அதிகப்படியான உடை அவசியமில்லாது, அதை செய்வது கட்டாயத்தின் காரணமாகத்தான்னு நான் நெனக்கிறேன் என்றாள்...

ரொம்ப சரியான பாயிண்ட் ...சரி நா ஒன்னு கேக்குறேன்,இப்போ நீ உடுத்திருக்கிற இந்த சேலை.., சரியான, போதுமான உடைன்னு நீ சொல்றியா? என ஹதிஜா சொல்லிமுடிக்கும் முன்னமே,... கொஞ்சமும் யோசிக்காதவளாய், ஆமா அதுக்கேன கொரச்சல்... இது போதுமானதா இல்லையா? என, தன் சேலையை தன்னை அறியாமலே சரிசெய்த வண்ணம் ராதிகா கேட்குபோதே...ஹதிஜா இடைமறித்து... ஹே ஹே, இரு இரு.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத.. இப்போ ஏ சரி செஞ்சுக்கிட்ட? என்றாள்...

ராதிகா,ஏதும் புரியாதவளாய்!!! ஹதீ...... இதென்னடி கேள்வி, மறைக்கிர எட்த்துல இருந்து ட்ரெஸ் வெலகுனா, சரிசெய்யாம என்ன செய்வாங்களாம்ன்னு சொல்லும்போதே..ஏதோ புரிந்தவளாய் சுருதியை குறைத்தாள்...

ராதி, முதல் விசயம்.. ஏன் சரி செய்யிறோம்? நம்ம உடம்ப மத்தவங்க பார்க்கிறத நாம விரும்பல அப்டித்தான...ராதிகா தலையசைக்கத் தாமதித்து,.. தொடர்ந்தாள் ஹதிஜா... இதுல குறிப்பாக ஆண்கள்,பொதுவாக அன்னியர்கள் எல்லோருமே பார்க்க, நாம் விரும்பாதோர்தான் இல்லையா? என்ற கேள்விக்கும் இயல்பாக ஆமா போட்டுக்கொண்டிருந்தாள் ராதிகா...

இந்த உணர்வு நம்ம எல்லாருக்குமே கூடவே பொறந்தது,இதுல எதாவது தப்பு இருக்கா? இல்லன்னு ராதிகா வாயெடுக்க, முந்தியவளாய் ஹதிஜா, இல்லல்ல... இப்போ நான் பர்தா போட்டுருக்கேன்,நீ சேல கட்டிருக்க... சேலை உன்னோட 80 சதவிகித உடம்ப மறைக்கிது. மீதமுள்ள 20 சதத்துல,  5 முதல் 10 சதவிகித அங்கங்களை மறைக்க வேண்டியே ஒன்னோட கை ஓய்வில்லாம வேலபாக்குது.ஆக மொத்தம் 90 சதவிகித உடல மறைக்கனும்கிறது தான் உன்னோட எண்ணமும்..இப்போ என்னோட பர்தாவ பாத்தின்னா, முகம், கை என அவசியம் வெளியே தெரியவேண்டிய உறுப்பை தவிர, மொத்த ஒடம்பையும் 100 சதவிகிதம் மறைக்கிது, இல்லயா?

பர்தாவ தப்புன்னு சொல்ற உனக்கும், சரின்னு சொல்ற எனக்கும் இந்த 10 சதவிகித கருத்துவேறுபாடுதாம்பா இருக்கு.

அட ஆமா! என மனம் சொன்னாலும், மௌனமாக ஹதிஜா பேசுவதை கவனித்துக்கொண்டு, கண்களால் மட்டும் வழிமொழிந்து கொண்டிருந்தாள் ராதிகா...

இப்போ இந்த பத்து ப்ளஸ் பத்து சதவிகித வேற்பாடுல...முதல்பத்து சதவிகிதம் மறைக்கனும்னு உனக்கு தெரிஞ்சதால அத சரிசெய்யிர..மீதம் இருக்கும் பத்து சதவிகிதத்த நீ இயல்பா கண்டுக்காம விட்டுடுர... நான் அதையும் மறைக்கிறேன்.

உதாரணமா..நீ சரியா சேல கட்டி இருந்தாலும்,அவசியமில்லாம முதுகுப்பகுதியும், இடுப்பும், கழுத்துப்பகுதியும்,கைகளில் பெரும்பகுதியும் திறந்து இருக்கு...இதுக்கு எதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கா? என ராதிகாவின் மௌனம் கலைக்க, தனது பேச்சை கேள்விக்குறியில் நிறுத்தினாள் ஹதிஜா..ராதிகாவோ அது, அதுவந்து...என காரணம் அறியாதவளாய் அப்போதுதான் ஏன் என தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க... ப்ச்... தேவயில்லதா... ஆனா எல்லாரும் அப்டித்தான கட்றோம்.. என சமாளித்தாள்...

ராதி...ஒன்னு கவனிச்சியா! அவசியம் ஏற்பட்டா, பொதுவுல மேல்சட்டைகூட இல்லாம வேலை செய்யும் ஆண்கள்கூட தங்களுடைய சாதாரண ஆடைல இப்படி இடங்களை வெளிக்காட்டுவதில்லை... உயிரே போனாலும் ட்ரெஸ்ல சமரசம் செஞ்சுக்காத நாம ஏன் இந்த இடங்கள தேவையில்லாம வெளிக்காட்டுறோம்? இப்டி திறவையா இருக்கும் இடங்கள் 10 சதவிகிதம்ன்னா, இந்த பத்து சதவிகிதத்தாலதான் மீதமுள்ள 10 சதவிகித அங்கங்கள் அதிகப்படியா விலகி வெளித்தெரியுது...

ஆக, நீ உட்பட நம்ம மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆடைல இருக்கிற திறப்புகள் அவசியமில்லைன்னும், அதுதான் அதிகப்படியான திறப்புக்கும் காரணம்ன்னு புரியுதா?... இப்படி ஆடை உடுத்தப்பழகியதாலயே, நம்ம மக்களுக்கு ஆடைய சரி செய்யிரது அனிச்சை செயலாவே மாறிடுச்சு.இந்த சரிசெய்யும் வேலையே நம்ம ஆடை முழுமையா இல்லைங்கிரதத்தானே காட்டுது...முழுமையா உடம்ப மறச்சு இருந்தா,இந்த வேலையே தேவையில்லதேன??.. எனவும்... ராதிகா ம்ம் என்ற வார்த்தையோடு நிறுத்திக்கொண்டாள்..

இப்போ நீ ஏதோ ஒரு வேலய மும்மரமா பாத்துட்டு இருக்க.. உன்ன சுத்தி பத்து பசங்க இருக்காங்கன்னு வச்சுக்கயே,உன்னோட பாதி கவனம், எங்க நம்ம ட்ரெஸ் எங்கயும் வெலகி இருக்குமோங்கிறதுலயே இருக்கும்.வேலைல முழுமையா இயங்க முடியாது. ஒருவேல நீ வேலைல கவனமா இருந்தா போச்சு...உன் ட்ரெஸ் வெலகி இருக்கிறத உன்னத்தவிர எல்லாரும் கவனிச்சிருப்பாங்க..ராதிகா முன்னொரு முறை தனக்கு இப்படி நடந்ததை மனதில் கொண்டு பேச வார்த்தையில்லாமல் உதட்டை சுழித்தாள். ஹதிஜா தொடர்ந்து.. இதுவே முழுமையா உடம்ப மறச்சு இருந்தா..சுத்தி யார் இருந்தாலும் நாம நம்ம வேலைய பாக்கலாம்..இல்லையா? என்றாள்.

ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல...எனச் சொல்லி தன்னை இக்கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முய்னறாள்......

தொடரும்...

இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகம் 23-4-2012 அன்று....

அன்புடன்
ரஜின்

28 கருத்துகள் :

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஷா அல்லாஹ்...

    கதிஜா சொன்ன ஒவ்வொரு பாய்ன்ட்டும் செம செம!

    வேகமாக ரோட்டில் ஓடும் போதும், பஸ்ஸில் நிற்கும் போதும், நெரிசலில் நிற்கும் போதும் என எங்கும் சுதந்திரமாக என்னால் நிற்க முடிவது ஹிஜாப்பால் தான். ஒவ்வொரு முறையும் ஆடை விலகிவிட்டதா, யாராச்சும் பாத்திடுவாங்களான்னு பயம் கொள்ள தேவை இல்லை. மற்ற பெண்களை போல் அசவுகரியமும் இருந்ததில்லை.

    அருமையா இருக்கு சகோ

    தொடருங்க

    பதிலளிநீக்கு
  2. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆமினா,
    நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி :)

    நிதர்சனத்தில் ஆடையில் இருக்கும் சிக்கல்களை பார்த்தாலே,முழுமையான ஆடை அல்லது ஹிஜாப் பேணுவது எவ்வளவு அவசியம் என அனைவரும் புரிந்து கொள்ள முடியும் சகோ..

    தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  3. கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

    http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அல்ஹம்துலில்லாஹ். மிகவூம் நிதர்சனமான உண்மை. ஹிஜாப் அணிந்த ஒவ்வொருவரும் இதனை உள்ளார்ந்த ரீதியாக உணர்ந்தே இருப்பர்.

    பதிலளிநீக்கு
  5. சலாம்! அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  6. @ஃபீனிக்ஸ்- வ அலைக்கும் ஸ்லாம் சகோ ஃபஸ்மின்...

    உங்களது முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

    உங்களது கருத்துக்களையே இந்தக் கலந்துரையாடல் உணர்த்த முயல்கிறது...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. வ அலைக்கும் ஸலாம் சகோ சுவனப்பிரியன்

    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமுஅலைக்கும்...

    அருமையான, மறுக்கமுடியாத பதிவு..

    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஷா அல்லாஹ்..ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து சொல்வது போலவே இருக்கிறது..நல்ல பதிவுக்கு நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  10. வ அலைக்கும் ஸலாம் சகோ டெர்மா.
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  11. வ அலைக்கும் ஸலாம் சகோ ஆயிஷா..

    தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ... சில விமர்சனங்களை, அதை எதிர்கொள்வோர் இடத்தில் இருந்து விளக்குவதே..சரியாக இருக்கும்...

    அதையே செய்ய முயல்கிறேன் சகோ..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  12. அனானி:
    //partha pota ellam yokkiyam illa, podadhavanga ellam kettavanga illa..//

    சகோ அனானி அவர்களே,,இங்கு அலசப்படுவது யோக்கியாம இல்லையா என்பதை அல்ல...பர்தா மீதான விமர்சனங்களுக்கு விடையளிக்கப்படுகிறது.. அவ்வளவுதான்...தவிர உங்களது எழுத்துக்களுக்கு?? பொருத்தமான தளம் இதுவல்ல..எனவே...

    நன்றி..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  13. பர்தா மீதான இந்தக் கதை வசனத்தில், கதாபாத்திரமான ராதிகாவை மாற்றி பாத்திமா என்று வைத்துக் கொண்டால் சிறப்பு. பர்தாவின் சிறப்பை மட்டும் சொல்லுங்க சகோ. மாற்று சமய / சிந்தனை கொண்ட பெண்களின் உடைகளைப் பற்றி குறை சொல்ற வேலை உங்களுக்கு வேணாமே !

    இது எனது அன்பான வேண்டுகோள் சகோ !

    பதிலளிநீக்கு
  14. சகோ கபிலன்,
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பர்தாவை விமர்சிப்பது பிறமத சகோதரர்கள் என்பதால் அவர்களை ஒரு பாத்திரமாக இணைத்துக்கொண்டேன்...

    மாற்று சமய பெண்களின் உடை என எதும் இருக்கிறதா? இங்கு பேசப்படும் உடையான சேலை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த ஆடையா? அனைவரும்தான் அணிகிறார்கள்...

    இன்னும் அதில் உள்ள குறைகளை கண்ணியமாக சுட்டிக்காட்டவே செய்கிறது இந்தப்பதிவு...அதையும் அனுமதிக்க நீங்கள் மறுக்கிறீர்களே சகோ...

    கண்டபடி விமர்சிக்கப்படும் ஒரு சமயம் சார்ந்த ஆடையான பர்தாவுக்கு நாங்கள் அழகிய முறையில்தான் விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்..யாரையும் விமர்சிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டதில்லை...இருந்தாலும் உங்களது அணுகுமுறை பாராட்டத்தக்கது...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  15. மாஷா அல்லாஹ் ரஜின் பாய்,

    உங்கள் கட்டுரை உடல் முழுதும் மறைப்பது போல ஒரு துணி கிடைக்குமா நமக்கு என எண்ணுகின்ற பல மாற்று மத சகோதரிகளை ஆதரிக்கிறது. இங்கே அமெரிக்காவிலும் அப்படிப்பட்ட துணிகளை விரும்பி அணிவோர், பிரத்தியேகமாக அவற்றை விற்பனை செய்வோர் என எல்லா பெண்களும் இப்படியானவற்றை விரும்பவே செய்கின்றனர். ஆண்கள்தான் பூசி மெழுகி தங்களின் இச்சையை தீர்த்துக்கொள்ள பெண்களை கட்டாயப்படுத்தி அரை குறை உடையில் திரிய சொல்கின்றனர் என்பேன். இதோ... சில நாட்களுக்கு முன்னாடி கூட உலக அளவிலான போட்டிகளில் பெண்களின் உடை அளவு இன்னும் குறைக்கப்பட்டிருக்கிறது. கேட்டால் அப்பொழுதுதான் அந்த விளையாட்டு கவர்ச்சியாக உள்ளது, ஸ்பான்ஸர்களும் மகிழ்கின்றனர் என்று பதில் தந்திருக்கிறார்கள். அப்ப இதிலிருந்து என்ன தெரிகிறது....? பெண் முன்னேற்றத்தைப் பற்றி பேசுபவர்கள் முதலில் பெண்களை போகப்பொருளாக்குவதை விட்டும் பாதுகாக்க முன் வர வேண்டும். அஃதன்றி, தன் கணவனும் சேர்ந்து ஜொள்ளு விடுவது போன்ற ஆடைக் குறைப்பில் பெண்களை இட்டுச் செல்லக்கூடாது. அத்தாட்சிகள் எல்லோருக்கும் எல்லா நிலையிலும் கிட்டுகிறது. புரிதல் மட்டுமே தேவை.

    உங்களின் ஆக்கம் அது போன்றதொரு புரிதலை தரட்டும் இன்ஷா அல்லாஹ்.

    வஸ்ஸலாம் பாய்.

    பதிலளிநீக்கு
  16. அஸ்ஸலாமு அலைக்கும்..
    ஆமினா சொன்ன அனைத்து நிகழ்வுகளும் புர்கா அணிந்த எல்லோருமே உணரக்கூடியவை ... மாற்று மத சகோதரிகள் எங்களிடம் சொல்லும் வார்த்தை .. " புர்கா இருக்கிறதுனால உங்களுக்கு ரொம்ப சேப்ட்டி யா இருக்குப்பா " .... நல்ல கருத்துள்ள கதை.. இன்றைய கால கட்டத்திற்கு தேவையானதும் கூட... தொடர வாழ்த்துக்கள் சகோ!!!

    பதிலளிநீக்கு
  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சகோ ரஜின் நடைமுறை எதார்த்தங்களை உள்வாங்கி எழுதி இருக்கிறீர்கள். எனினும் முன்முடிவுகளோடு குறை சொல்ல முற்படும் மக்கள் இந்த பதிவையாவது கொஞ்சம் பொறுமையாக படித்தால் நலம்.

    பர்தா என்பதற்கான வரைவிலக்கணமே இவர்களை பொறுத்தவரை தவறான அர்த்தத்தில் தான் கையாளப்படுகிறது சகோ

    ஆட்டோக்களில் பின்புறம் இருகண்கள் மட்டும் தெரியும் வண்ணம் ஒட்டப்ப்ட்டிருக்கும் ஸ்டீக்கரில் பதிந்திருக்கும் பெண்முகங்கள் தான் இவர்களை பொறுத்தவரை பர்தா என்பதற்காக அளவீடாக வைத்து பார்க்கப்படுகிறது.

    இங்கே நான் பணிபுரியும் இடத்தில் அனேக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே டிரஸ்ஸை (இவர்கள் வழக்கில் பர்தாவை) தான் முஸ்லிமல்லாத அனேக பெண்களும் அணிந்து வருகிறார்கள்.

    இங்கு எவரும் அதை இஸ்லாம் சார்ந்த ஆடையாக பார்பதில்லை. பிற பெண்கள் அணிவதற்காக ஆட்சபனை செய்வதும் இல்லை. ஏனெனில் பிற ஆடவர்களுக்கு மத்தியில் வேலைக்கு வரும் பெண்களுக்கு இது கண்ணியமான ஆடை என்பதை இயல்பாகவே ஏற்றுக்கொண்டிருப்பதால்...

    நல்லதொரு பதிவிற்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா21/4/12 7:22 PM

    Good try. No comments. :)

    பதிலளிநீக்கு
  19. வ அலைக்கும் ஸ்லாம் சகோ அன்னு....
    இந்த உரையாடலை சரியாக உள்வாங்கி இருக்கிரீர்கள்...ஆமா சகோ முஸ்லிம்கள் மட்டும் முழுமையான ஆடைக்கு ஆசைப்படல...பெரும்பாலோர் அப்டித்தான்...ஆனா அப்டி இருக்கிறவங்களுக்கும் பர்தா அலர்ஜி....

    பெண்களை போகப்பொருளாக முன்னிருத்தும் சமூகம் இருந்தாலும்,அதற்கு பெண்களே உடன்பட்டு பலியாவது தான் கொடுமை...

    உங்களின் கருத்துக்கள் அனைத்திலும் உடன்படுகிறேன் சகோ....

    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  20. வ அலைக்கும் ஸலாம் சகோ மும்தாஜ்.
    தங்களின் முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

    நீங்கள் சொல்வது போல் மாற்றுமத சகோதரிகள் சொல்வது எனக்குத்தெரிந்து சொற்பமே...ஆனால் பலரது உள்ளத்திலும் எழும் எண்ணம்தான் இது..ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  21. ஸலாம் சகோ குலாம்...அதேதான்....எப்படி எப்டியோ சொல்லிப்பாத்தாச்சு...யாரும் காதுல வாங்கிகிராப்ல தெரியல..இன்ஷா அல்லாஹ் இது சிலரது மனங்களிம் மாற்றம் ஏற்படுத்தினாலும் போதுமானது....

    நீங்கள் சொல்வதுபோல் பர்தா என்பது முழுமையாக மூடி கண் மட்டும் திறந்த ஆடையாகத்தான் பார்க்கப்படுகிறது சகோ....

    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  22. ஸலாம் சகோ அனானி..

    பாராட்டியதற்கு நன்றி ச்கோ...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா21/4/12 9:25 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    இன்ஷா அல்லாஹ் இந்த பதிவு மாற்றுமத சகோதரிகளின் மனதில் மாற்றத்தை உண்டாக்கும்.இவ்வளவு மென்மையாக, எளிமையாக பதிவு இட்டாலும் சில நண்பர்களுக்கு மனதை உறுத்துகிறது என நினைக்கிறேன்
    kalam.

    பதிலளிநீக்கு
  24. வ அலைக்கும் ஸ்லாம் சகோ கலாம்..

    சில நண்பர்களுக்கு மனதை உறுத்துகிறது என நினைக்கிறேன்// ஹா ஹா ஹா...

    அது இயல்புதான் சகோ...அவர்கள் திறந்த மனதுடன் அழகிய முறையில் கேள்விகளோடு நம்மை அணுகினால் இன்ஷா அல்லாஹ் பதில் உண்டு...

    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  25. மாற்று மத சகோதரிகளின் மனதில் எலக்கூடிய கேள்விகளை அருமையாக சொல்லியுள்ளீர்

    நம்ம சகோதரிகள் மற்றுமதத்தினர் இடத்தில் பணிபுரிய போது அவர்களுடைய பண்டிகைகளின் போது கருப்பை பர்தா அணிவது தவிர்த்து வேறு நிறம்யுள்ள பர்தா அணிவதை மற்றுமதத்தினர் விரும்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஸலாம் சகோ நிஜாம்..

    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி...

    நம்ம சகோதரிகள் மற்றுமதத்தினர் இடத்தில் பணிபுரிய போது அவர்களுடைய பண்டிகைகளின் போது கருப்பை பர்தா அணிவது தவிர்த்து வேறு நிறம்யுள்ள பர்தா அணிவதை மற்றுமதத்தினர் விரும்கிறார்கள்.//
    உங்களது இந்தக்கருத்து ஏற்புடையதுதான்..சகோ வேறு நிறங்களிலும் பர்தா அணியலாம்தானே...ஆனா நம்ம மக்கள் கருப்புக்கே அதிகம் பழக்கப்பட்டுப்போய்விட்டார்கள்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  27. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரஜின்,
    பொதுவாக ஒருத்தர் மீது ஒரு குறை சொன்னால், அதற்கான விளக்கத்தை அவர் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும். அதையே நீங்கள் கையாள்வதுடன் எதிரணியையும் சிறப்பாக புரிந்துகொள்ள வைக்கும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  28. ஸலாம் சகோ ஜபருல்லாஹ்...
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி சகோ...

    உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சகோ///

    அல்லாஹ் பெரியவன்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்