திங்கள், ஏப்ரல் 23, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 03 (இருக்கு ஆனா இல்ல)

பாகம் 01 , பாகம் 02

ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல..என தன்னை அந்தக் கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முயன்றாள்...(பாகம் 02)

ரொம்ப சரியா சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ நாம தேர்வு செய்ய முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர, நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர் பணி புனிதமானது, அவக இந்த வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...


என்னப்பா இப்டி சொல்ற..ஒரு தொழிலுக்கு இருக்கிற மரியாதை,புனிதம்... மனிதனுக்கும், அவனது மானத்துக்கும் இல்லயா?? அப்டீன்னா ஒருத்தரோட ப்ரொஃபஷன் தான் அவங்களோட ஆடையை, தீர்மானிக்குதா? அப்டிப்பாத்தா, நீ சொன்னமாதிரி அவங்கவங்க தன் ஆடையை தீர்மானிக்கலாம்கிறா  உன்னோட வாதமும் அடிபடுதே...தொடர்ந்து,அப்போ அவங்கவங்க தன் ஆடைய தன் இஷ்ட்டப்படி தீர்மானிக்கிறதும் சரிப்பட்டுவராது இல்லையா என்றாள் ஹதிஜா.....

ஹதிஜா தன்னை கார்னர் செய்வதில் இருந்து தப்பிக்க...ம்ம்ம் நான் அப்டி சொல்ல்வரல.... அவங்கவங்க தன் ஆடைய தேர்வுசெய்யலாம், அதுக்காக ஒரு வரைமுற இல்லயா?...என ராதிகா பேச்சை இழுத்தாள்..

ம்ம்..அப்போ ஆடைல வரைமுறை வேணும்கிற..என்றதும்.. ம்ம்..எல்லாரும் நல்லா ட்ரெஸ் பண்ணுனா ஓக்கே....இப்டி ஆளாலுக்கு முடிவெடுத்தா?... வரைமுறைவேண்டும்தான்...என ராதிகா ஒப்புக்கொண்டாள்... சரி. நீயே அந்த வரைமுற என்னான்னு சொல்லு.. என ஹதிஜா கேட்க...என்ன பெருசா?... நான் நல்லாத்தான உடுத்துறேன்..என்னமாதிரி போதும், என்றாள் குழந்தைத்தனமாக...

இதை கேட்டதும் ஹதிஜா சிரித்துவிட்டு,என்னடி இது? உன் வரைமுறை மாதிரி, நாட்ல ஒவ்வொருத்தியும் ஒரு வரைமுறை வச்சுருந்தா, யாரு யாரோடத ஃபாலோப் பண்றதாம்... இங்க நீ இப்டி சொல்ற, நார்த்திண்டியாக்காரி வந்து எனக்கு ஸ்லீவ்லெஸ்ம்பா, அரபுநாட்டுக்காரி மொகத்த மூடனும்பா, அமேரிக்காகாரிவந்து மொத்தமும் துறக்கனும்பா... உன்னோட வரைமுறை தப்புன்னு இவங்க சொல்லுவாங்க. அப்ரம் நீ சொல்ரமாதிரி யாரு கேப்பா? சொல்லு...

தனிப்பட்ட மனிதனின் கருத்து ஒருவருக்கொருவர் வேறுபட, அனைவருக்கும் பொருந்துமாறு எல்லாக் காலத்திற்கும்,குறிப்பாக அணிபவருக்கு, ஆடை அதன் கடமையை முழுமையாக செய்யும் வண்ணம் தெரிவு செய்வதே அறிவுப்பூர்வமாது இல்லயா?.. இஸ்லாம் வலியுறுத்தும் ஆடை வரைமுறை அதைச் செய்வதால்... என ஹதிஜா பேசிக்கொண்டே போக... ராதிகா இடைமறித்து...

அதுக்காக இந்த கருப்புத்துணிதான் எல்லாத்தையும் சரி செய்யுமா?..இது நீ சொன்னமாதிரி, எல்லாரும் யூனிபார்ம் மாறில்ல போடுரீங்க.. என தனக்கு ஒரு பேச ஒரு பாயிண்ட் கிடைத்ததாக ஆர்வம் காட்டிக்கொண்டாள்.

ஹதிஜாவோ!.. ட்ரெஸ் கலர் ஒரு பொருட்டே இல்லப்பா...எந்த கலர் வேண்ணாலும் போடலாம்... எங்க மதத்துல ஆடைன்னா இன்னின்ன வரைமுறைகளைக் கொண்டிருக்கனும்ன்னு இருக்கு, அந்த வரைமுறைய எந்த ஆடை பூர்த்தி செய்தாலும் ஓக்கேதான்..அது என்னான்னா..

முகம், கை தவிர முழு உடலும் மறைந்து இருக்கனும்,

கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையாக அது இருக்கக்கூடாது.

அப்ரம் உடலோடு ஒட்டி,உடல் அங்கங்களை காட்டும் ஆடையாக இருக்கக் கூடாது..

எதிர்பாலினத்தை தன்வசம் கவரும் வகையான ஆடையாக இருக்கக்கூடாது...

இது உடலை மறைப்பது தொடர்பாக ஆடை விஷயத்தில் சொல்லப்படும் எங்க மதகோட்பாடுகள்.. நான் சொன்னவைகள பூர்த்தி செய்யும் எந்த ஆடையும் பர்தாதான் ராதி...இந்த கோட்பாடுகள்ல எதாவது உனக்கு கருத்து வேறுபாடு இருக்கா?..என ஹதிஜா கேட்க....இரு ஒன்னொன்னா வர்ரேன், என அவற்றை புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்வது போல, ஏதாவது தவறு கண்டுபிடிக்கலாம் என ராதிகா அதை அலசத்துவங்கினாள்...

முகம்,கை தவிர மற்ற இடங்கள் திறந்து இருப்பது தேவையற்ற ஒன்றுதான்.. இதப்பத்தி நீ சொன்னதுக்கப்பரம்தா, என்னையறியாமயே நானுமே அப்டி உடம்ப மறைக்கிறத, விரும்புறத தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னவள்... போச்சா..நாமளே மொத பாயிண்டுக்கு பாராட்டு பத்திரம் குடுத்துட்டோமேன்னு தனக்குள் விளையாட்டாக நொந்துகொண்டு... அதுக்காக பர்தாதா சரின்னு சொல்லவரல..என சமாளித்துக்கொண்டாள்...

ஹதிஜாவோ தனது பாயிண்டை ராதிகா ஏற்றுக்கொண்ட உற்சாகத்தில் ம்ம் அடுத்து..என ஆர்வம் காட்டினாள்..

அடுத்து,ட்ரான்ஸ்பரண்ட் ட்ரெஸ்ல எனக்கும் சுத்தமா உடன்பாடில்லப்பா.. அதேமாதிரி பாடி ஃபிட் ட்ரெஸ்ஸும் எனக்கு சுத்தமா புடிக்காது,ஒனக்கே தெரியும்..ஸோ ரெண்டும் ஏத்துகக்கூடியதுதான்..

அப்ரம்...என ஹதிஜா தன் மனதுக்குள் குதூகலிப்பதை வெளிக்காட்டாமல்... ம்ம் கடைசி என்ன? என்றாள்...

ராதிகாவோ,கடைசிக் கோட்ப்பாட்டில் முற்றாக முரண்படவும்,அதோடு ஹதிஜாவின் மனதை அறிந்தவளாய், அவளது குதூகலிப்பை நிறுத்தவும்,.. ஹதி..அந்த கடைசி கோட்பாடுல எனக்கு சுத்தமா உடன்பாடே இல்லப்பா..என சொல்லிவிட்டு, ஹதிஜாவின் முகத்தில் எதிர்வினையை எதிர்பார்த்தாள்.. 

ஹதிஜாவோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்..ஏனாம் மகாராணிக்கு அதுல என்ன சந்தேகமாம்.. என கிண்டலாக கேட்க...

பின்ன..நம்ம ட்ரெஸ் எல்லாம் கண்ணை கவரக்கூடியதாத்தான இருக்கு.அப்டி உள்ளதத்தான நாமளே பாத்து எடுக்குறோம்.ஆக நாம போடுர ட்ரெஸ் பிறர கவரத்தான் செய்யும்.அதுனால என்ன? மதத்தவங்க முன்னாடி நாம அழகா தெரிஞ்சா என்ன பிரச்சன ஹதி...இபடி ஒரு கோட்பாடு இருந்தா..நாம நமக்கு பிடிச்சத வாங்கவோ,வாங்கினா உடுத்தவோ முடியவே முடியாதே... அப்ரம்??? என ஹதிஜாவின் பதிலை வாங்க... நிறுத்தினாள்…

ஹ்ம்..நீ சொல்றது ஒரு வகைக்கு சரிதான்..நம்ம ட்ரெஸ் எல்லாமே பிறரது கண்ணைக் கவரக்கூடியதுதான் ராதி... ஆனா அதுக்காக அதெல்லாம் போடவே முடியாதுன்னு இல்ல.இந்த ஆடை வரையறை எல்லாமே அன்னிய ஆண்களுக்கு மத்திலதானே...அவங்க முன்னாடி நாம அவங்களுக்கு அழகா தெரியனும்ன்னு அவசியமா? இல்லையே.. ட்ரெஸ் நாம நமக்கு புடிச்சுதான எடுக்குறோம்??...இல்ல பிறர் பாராட்டனும்ன்னு எடுக்குறோமா? அப்படியான ட்ரெஸையும், அதுனால மிளிரும் அழகையும், நாமும் நமை சார்ந்தவங்களும் பாத்து சந்தோஷப்பட்ட போதாதா?அத கட்டிக்கிட்டு தெருவுல நடந்து,நாலுபேரு ஜொள்ளுவிட்டா உனக்கு ஓக்கேவா?எனக் கேட்க... ராதிகாவோ.. அது நமக்கு கெத்து தானே... நாலுபசங்க நம்ம பின்னாடி சுத்துனா?ன்னு சொல்லி சிரிக்க...ஹதிஜாவின் முகம் மாறியது...ராதிகா சுதாரித்தவளாக...அம்மா தாயே டென்ஷாயிடாத,என்னப் பத்தி தெரியாதா...எனக்கும் இதெல்லா பிடிக்காது தானே!! சும்மாதா சொன்னேன்... நீ சொல்லு.. என்றாள்...


ம்ம்ம்ம்....அந்த பயம் இருக்கட்டும்...மவளே எதாவது பேசிருந்த இன்னைக்கி உனக்கு தீவாளி கொண்டாடிருப்பேன்..என விளையாட்டாய் மிரட்டிவிட்டு... தொடர்ந்தாள்...

ஆக நாம பிறர் நம்மல வாய்பிளந்து காட்சிப்பொருளா ரசிக்கிறத விரும்பாதவங்களா இருக்கும்போது,அன்னியர் முன்னாடி நாம அழகுப் பதுமையா வலம் வரனும்ன்னு தேவையா??

ராதிகா,..ஆமோதித்துக்கொண்டிருந்தாள்...

சரி இவ்வளவையும் பூர்த்திசெய்யும் படியான ஆடை எதாவது இருக்கா ராதி..என அவளிடம் ஹதிஜா கேள்வி வைக்க...

ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல... என்றாள்...


தொடரும்


அன்புடன்
ரஜின்


இன்ஷா அல்லாஹ் இறுதிப்பாகம் விரைவில்...

16 கருத்துகள் :

 1. சலாம் சகோ ரஜின்,

  அழகா அருமையா கொண்டு போறீங்க கதைய. ரொம்ப நல்லா இருக்கு...அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்...
  Logical கேள்விகள் அருமை...

  பதிலளிநீக்கு
 2. வ அலைக்கும் ஸலாம் சகோ சிராஜ்..
  தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

  இன்ஷா அல்லாஹ் இறுதிப்பாகம்...விரைவில்

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. ஸலாம் சகோ ஜாஃபர் கான்..
  தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.
  ரொம்ப அருமை ..என்ன முழுசாவே போட மாட்டிங்களா?. "ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல... என்றாள்..." ஏன் இது என்ன சொன்னாங்க ஹதிஜா ??? அடுத்த பதிவு எப்போ. ஆவலுடன்

  உங்கள் சகோதரி
  பஸ்மின் கபிர்

  பதிலளிநீக்கு
 5. வ அலைக்கும் ஸலாம் சகோ பஸ்மின்...

  இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் முழுமை அடையும் சகோ..உங்களது ஆர்வம் எனக்கு மேலும் ஊக்கமளிக்க வல்லது..

  வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..அருமையான உவமைகளோடு எழுதி உள்ளீர்கள் சகோ..

  அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்...:-))

  பதிலளிநீக்கு
 7. வ அலைக்கும் ஸலாம் சகோ ஸபிதா..

  உங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

  இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகம்..27 அன்று...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா24/4/12 3:08 பிற்பகல்

  ACCORDING TO THE PRESENT GENERATION, THIS DRESS IS SUITABLE TO COVER AND ROAM WITH LOVER BEFORE MARRIAGE AND MARRY SOMEONE. AND ROAM WITH SOME WITH SOME GENTS WITHOUT KNOWING TO THEIR HUSBANDS.. ITS TRUE... 100%... HAVE SEEN SO MANY FEMALES WHO IS DOING LIKE THIS... THE ONLY DIFFERENCE B/W OTHER RELIGIOUS FEMALE IS THIS FEMALES WILL COVER EVERYTHING N DO.. THATS IT..

  பதிலளிநீக்கு
 9. சகோ அனானி அவர்களே..
  பர்தா எப்படி துஷ்ப்ரயோகம் செய்யப்படுகிறது என்பதை எடுத்தியம்பியதற்கு நன்றி..பர்தாவை பொருளறிந்து அணியாத மாக்களை கண்டுவிட்டு according to present generation என நன்மக்களையும், அவர்களின் கூட்டத்தில் சேர்க்கும் உங்களின் கணிப்பு 100% தவறு...

  மற்றபடி உங்கள் கருத்திற்கு நன்றி.

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா24/4/12 10:50 பிற்பகல்

  அஸ்ஸலாமு அலைக்கும்

  மாஷா அல்லாஹ் . மிக அருமையான பதிவு. அடுத்த பாகத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன்.உங்கள் அனுமதியோடு இதை பிரிண்ட் எடுத்து சகோதரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறேன். இதே போன்று மாற்றுமத நண்பர்களின், இஸ்லாத்தின் பெண்களின் நிலை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதே போன்று உரையாடல் பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.உங்கள் தாஹ்வா பணிசிறக்க அல்லாஹ் உதவி புரிவானாக
  kalam

  பதிலளிநீக்கு
 11. வ அலைக்கும் ஸலாம் சகோ கலாம்.
  தங்களின் தொடர் வருகைக்கும்,வாசிப்புக்கும்,ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி சகோ,
  தாராளமாக இதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

  இதே போன்று உரையாடல் பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.//

  இன்ஷா அல்லாஹ்...நேரம் வாய்ப்பின் செய்கிறேன் சகோ...

  உங்களது துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள போதுமானவன்....

  மேலும் இந்த விவாதப் பதிவின் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைத்து மின்னூலாக இன்ஷா அல்லாஹ் இறுதிப்பாகத்துடன் தருகிறேன் சகோ..அது அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்....

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 12. மாஷா அல்லாஹ்..கட கடன்னு நிறைய பதிவுகள் வந்துட்டுதே... இரு தோழிகள் பேசுவதாக கூறியிருக்கும் வார்த்தை பிரயோகிப்புகள் சூப்பர்... கதை நல்ல விற்விறுப்பா போயிட்டிருக்கு.... வாழ்த்துக்கள்.

  /இதை கேட்டதும் ஹதிஜா சிரித்துவிட்டு,என்னடி இது? உன் வரைமுறை மாதிரி, நாட்ல ஒவ்வொருத்தியும் ஒரு வரைமுறை வச்சுருந்தா, யாரு யாரோடத ஃபாலோப் பண்றதாம்... இங்க நீ இப்டி சொல்ற, நார்த்திண்டியாக்காரி வந்து எனக்கு ஸ்லீவ்லெஸ்’ம்பா, அரபுநாட்டுக்காரி மொகத்த மூடனும்பா, அமேரிக்காகாரிவந்து மொத்தமும் துறக்கனும்பா... உன்னோட வரைமுறை தப்புன்னு இவங்க சொல்லுவாங்க. அப்ரம் நீ சொல்ரமாதிரி யாரு கேப்பா? சொல்லு.../ அட ஆமா .... அதானே....

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா25/4/12 12:44 பிற்பகல்

  வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் மதத்திலும் சன்மார்க்கத்திலும் தீர்வு தேடுவது மாதிரி கேணத்தனம் எதுவும் இருக்க முடியாது.

  உடல் வேகும் படி முழுக்க அதுவும் கருப்பு நிறத்தில் மூடிக்கொண்டு வெயிலில் அலைபவர்கள் பைத்தியக்காரர்கள்..

  பதிலளிநீக்கு
 14. அனானி அவர்களே..
  வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் சன்மார்க்கத்தில் தீர்வு இருக்கப்போய் நாங்கள் தேடுகிறோம்.அதை தர்க்க ரீதியாக எளிமையாக உங்களுக்கு புரியும் வண்ணம் முன்வைக்கிறோம்.அது எதையும் பார்க்காமல் உங்களது முன்முடிவுகளை பகிர்ந்து கொண்டு உங்களின் நிலையைத் தெளிவு படுத்தியமைக்கு நன்றி..

  உங்களது இந்த ஆதங்கம்,இப்பதிவில் உங்களால் எந்தக்கேள்வியும் கேட்க முடியாத இயலாமையை வெளிப்படுத்துகிறது..கோபத்தில் உங்களது விரல்களை கடித்துக்கொள்ளாதீர்கள்..

  நீங்கள் இந்தப்பதிவை படிக்கவில்லை,என்பதற்கு உங்களது பின்னூட்டமே சாட்சி..
  //அதுவும் கருப்பு நிறத்தில் மூடிக்கொண்டு //
  இந்தக்கட்டுரை கருப்பு நிற ஆடைகுறித்தும் பேசுகிறது...அதற்கு என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பதை கொஞ்சம் கண் திறந்து படித்தால் நலம்,,,

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 15. @ enrenrum16 ; ஸலாம் சகோ பானு...தங்களின் மீள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ....

  இன்ஷா அலலாஹ் தொடர்ந்து வாங்க..இனி தொடர்ந்து பதிவுகள் இருக்கும்...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்