புதன், மே 02, 2012

அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

இந்தப்பதிவானது அல்குர்ஆன் வசனத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வேலையை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது பின்போ, இதனுடன் நெருக்கமான தொடர்புடைய,அல்லது புரிதலை மேலும் எளிமைப் படுத்தக்கூடிய  இந்தப்பதிவை படித்துவிடுவது உங்களுக்கு நல்ல முன்னுரையை கொடுக்கவல்லது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அல்குர்ஆனின் வசனம் 2:178 ஆனது பழிக்குப் பழி தீர்ப்பது குறித்து பேசுகிறது.சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் உரையாடும் போது இந்த வசனத்தின் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இதே விமர்சனத்தை சகோதரர் தங்கமணி என்பவரும் சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது..பரவாயில்ல...விமர்சிக்கவாவது, மக்கள் குர்ஆன் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்...


இதோ அந்த வசனம்:

2:178: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப் பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண், இருப்பினும், (கொலை செய்த) அவனுக்கு, அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறைவனிடம் இருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும். ஆகவே இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

2:179: நல்லறிவாளர்களே! கொலைக்காக பழிதீர்க்கும் இவ்விதியின் மூலம் உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை (த் தீமைகள் இன்று) காத்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த வசனத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்.
அதாவது சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன்,அடிமைக்கு அடிமை, பெண்ணுக்கு பெண், என இவ்வசனம் பழிவாங்கல் குறித்துப் பேசுகிறது.இது பற்றிய இவர்களது புரிதலாகப்பட்டது சுருக்கமாக....

ஒருவன் இன்னொருவனின் மனைவியை கொலை செய்துவிட்டால்,(அதாவது பெண்ணை) அதற்கு பகரமாக எதிர் தரப்பில் உள்ள பெண்ணை பழிவாங்கச் சொல்கிறது இஸ்லாம்,என விமர்சிக்கின்றனர்..

ஓக்கே.. இவர்களின் நேரடிப் புரிதல் எல்லை அவ்வளவுதான் என்றாலும்.இந்த இடத்தில் இஸ்லாம் நீதி குறித்து பேசுகிறது...இல்லையா..ஆனால் வசனக்கருத்து மாற்றமாக wamaநமக்குத் தெரிகிறதேன்னு கொஞ்சமாவது இவங்க யோசிக்கலாம்... அடுத்து...இவர்களின் சிந்தனைப்படி இப்படிப்பட்ட (அதாவது கொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு, பகரமாக எதிர்தரப்பு பெண் என்று....) பழிவாங்கல் சட்டம் இருந்தால்.. இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் வசனம் இவ்விதியால் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது எனச் சொல்கிறதே... முஸ்லிம்களுக்கான இந்தச் சட்டத்தில் இப்படி (இவர்கள் கூற்றுப்படியான) ஒரு விதி இருந்தால், எப்படி வாழ்வு இருக்கமுடியும்? ஒருவரை ஒருவர் அநீதியாக கொலை செய்து கொண்டு மாண்டல்லவா போவர் என்றாவது யோசித்திருக்கலாம்..இல்லை...

இந்த வசனத்திற்கு, இவர்களுக்கு உதித்த விளக்கம் சொல்லி இது அநீதி இல்லையா என சகோதரர்கள் முழங்குகிறார்கள்.

ஆம் இவர்கள் அதற்கு உதாரணப்படுத்தி சொல்லி இருக்கும் விடயம் அநீதிதான் அதாவது அந்த வசனம் குறித்து அவர்களது புரிதலின்படி - (பெண்ணுக்கு பெண் - இதில் முந்தியதை ஒரு தரப்பாகவும்,பிந்தியதை எதிர்தரப்பாகவும் சித்தரித்து கருத்துக்கூறியது) தூறும் தெரியாமல் தலைப்பும் தெரியாமல் அலசியதன் விளைவுதான் இவர்களது இப்படியான புரிதலும்,அதைத் தொடர்ந்த விமர்சனங்களும்....

சரி...அந்த வசனத்தை பார்ப்போம்.முதலில் –
//கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது//
பழி தீர்ப்பது குறித்து ஆரம்பிக்கும் இந்த வசனம் கொலை செய்தவன் குறித்து பேசுகிறது. முதல் தரப்பு கொலை செய்யப்பட்டவர். கொல்லப்பட்டுவிட்டார்.இனி அவர் வரப்போவதில்லை. தண்டிக்கவோ மன்னிக்கவோ அவரால் முடியாது.ஆனால் கொலை செய்தவர்? தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது நியதி.

அதனால்தான் இந்த வசனம் இரண்டாம் தரப்பை பழிதீர்ப்பது குறித்து கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது என ஆரம்பிக்கிறது.

சரி எப்படி பழிதீர்ப்பது? பாரபட்சம் இன்றி,யார் கொலை செய்தாரோ அவரே கொல்லப்பட வேண்டும். இல்லையா? இதுதானே நீதி.

ஆம்!!!
ஆனால் இஸ்லாத்திற்கு முந்தைய அக்காலத்தில் நடந்தது அதுவல்ல. பெண்களின் மற்றும் அடிமைகளின் உயிரானது மதிப்பற்றதாக கருத்தப்பட்டது. ஒரு எஜமான் ஒருவனை கொலை செய்துவிட்டால்,பழிதீர்க்க அவன் தனது அடிமையை முன்னிருத்துவதும். பெண்களை ஆண் கொலை செய்தால் அவனை கொல்லாமல் விடுவதும். சுதந்திரமானவன் அடிமையை கொன்றால் அதற்கு பகரமாக நஷ்டஈடு தருவதும் பெண்ணை பெண் கொன்றால் கொன்றவளது உயிர் அத்தனை மதிப்பில்லாதது என அவர்கள் கருதியதால் கொன்றவள் ஈட்டுத்தொகையுடன் விடுதலை பெருவதுமான பாரபட்ச அநீதிகளை உடைக்கவே மேற்கண்ட வசனம் இறங்கியது.

முன்னமே சொன்னது போல் இரண்டாம் தரப்பான, அதாவது கொலை செய்தவன் குறித்து இவ்வசனங்கள் பேசுகிறது. கொலை செய்த சுதந்திரமானவனுக்கு பகரமாக அடிமையை பழிகொடுக்கும் வழக்கம் உடைக்கப்பட்டு அதே சுதந்திரமானவன் எவனாக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்.அவன் அடிமையையோ, பெண்ணையோ கொன்றால் ஈட்டுத்தொகை கொடுத்து தப்பிக்கும் வழக்கம் ஆகாது.ஆக சுதந்திரமான அந்த கொலையாளிக்கு எதுவும் ஈடாகாமல் அந்த சுதந்திரமானவனே பழிதீர்க்கப்படவேண்டும் என்றும்

அடிமைக்கு அடிமை - அதாவது அடிமை இன்னொரு அடிமையை கொன்றால் ஈட்டுத்தொகை, ஏனெனில் கொல்லப்பட்டவனும் அடிமை.அவனது உயிர் மதிப்பில்லாது கருதப்பட்டதால். ஆனால் இனி அது நடக்காது.கொலைசெய்த அடிமைக்கு பகரமாக ஈட்டுத் தொகை இல்லை,அதே அடிமையே பழிதீர்க்கப்பட வேண்டும்.

இதே போல் பெண்ணுக்கு பெண் என்பது, கொலை செய்த பெண்ணுக்கு ஈட்டுத்தொகை பகரம் இன்றி அவளே பழிதீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்த வசனத்தின் சாராம்சம்.

ஆக! இறுதியாக, கொலை செய்த யாராக இருந்தாலும் அவரவருக்கு தக்க பகரங்களை கொடுத்து தப்பித்துக்கொள்வது ஆகாது.யாராக இருந்தாலும் அதாவது சுதந்திரமானவனுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)சுதந்திரமானவனும்,அடிமைக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)அடிமையும், பெண்ணுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)பெண்ணும் பழிவாங்கப்படவேண்டும்.எனும் நீதியை இந்த வசனம் எடுத்துரைக்கிறது.

சரி சரி..என்னப்பா ஒரே கொலை கொலைன்னே பேசிட்டு இருக்கீங்க... முஸ்லிம்கள்னாலே இப்டித்தான.. என சமீப மதஅரசியலின் பாதிப்பில் பேசினீர்களானால்.. இப்படியான சட்டத்தின் முக்கியத்துவத்தை அறியத்தவறிவிட்டீர்கள் என்றே பொருள்...

கொலைக்கு கொலை தீர்வாகுமா? உலகம் முழுவதிலும் எத்துனை நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது என குமுறுவீர்களானால்.. நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.. இப்படி நீங்கள் பேசும் வியாக்கியானம், பறிபோன உயிருக்கும்,பறிதவிக்கும் உறவுக்கும் செய்யும் அநீதி..இன்னும் மனித உயிரை துச்சமாக எண்ணி கொலைசெய்த ஒரு குற்றவாளிக்கு, நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம். கொலை சம்பவங்களை பத்திரிக்கையில் கண்டுவிட்டு..இவனை நடுரோட்டில் கொல்லவேண்டும்.இவன தூக்குல போடுங்க.இவன கல்லெரிந்து கொல்லுங்க,...அப்டீன்னு உணர்ச்சி வசனம் பேசும் நாக்குதான், குற்றத்தின் உச்சமான கொலைக்கு,.. அதைச் செய்தவனுக்கு தண்டனையாக, தண்டனையின் உச்சத்தையே தீர்வாக, இஸ்லாம் சொல்லும்போது புறண்டுவிடுகிறது.

சரி கொலை செய்தவன் மன்னிப்புக்கேட்டு,மனம்திருந்தினால் ஒரு வாய்ப்பு இல்லையா? என்றால்.... கொடுக்கும் இந்த வாய்ப்புதான்,அடுத்த ஒருவனுக்கு தைரியத்தை அளிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை...

ஆனால்! நிச்சியம் மன்னிப்பு உண்டு.ஆனால் அதை கொடுக்கும் அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனின் கையில் வைக்கிறது இஸ்லாம்.அவன் விரும்பினால் மன்னிக்கலாம்...

அது இல்லாமல்,பாதிக்கப்பட்டவனை வாக்குமூலம் மட்டும் கொடுக்க வாய்திறக்க அனுமதிப்பதும், அதைத்தாண்டி அவன் அவ்விசாரணையில் பார்வையாளராக நிறுத்தி வைக்கப்பட்டு,  கொலை செய்தவனின் தண்டனையை பரிசீலனைக்குள்ளாக்கும் போது, அங்கு விவாதம், வியாக்கியானம்,சாட்சி, ஒத்திவைப்பு,வாயிதா,என காலங்கள் ஓடி... பாதிக்கப்பட்டவன், மண்ணுக்குள் புதையும்மட்டும் அவனுக்கு நீதி என்பதை காற்றில் மட்டும் படம்வரைந்து காட்டிக்கொண்டிருக்கும் சட்டம் என்ன சாதித்து கிழிக்கும்???

குற்றவாளியின் தண்டனை, அல்லது மன்னிப்பு, பாதிக்கப்பட்டவனை திருப்திப்படுத்தி நீதி செழுத்தக்கூடியதாக இருக்கவேண்டுமே தவிர... நீதிபதியின் விருப்பத்திற்கு விடையாக, அல்லது வக்கீலின் வாததிறமைக்கு பரிசாக இருக்கக்கூடாது...

அதனால்தான்..இஸ்லாம் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை ஏற்கும், மறுக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனின் கையில் கொடுக்கிறது..குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவன் விரும்பினால் தண்டனையை கொடுக்கச் சொல்லலாம்... அல்லது அவன் விரும்பினால் தண்டனையை ரத்துசெய்து மன்னிக்கலாம்...

அதைத்தொடர்ந்து என்ன மாதிரியான நஷ்ட ஈடு வழங்கு பழக்கம் பின்பற்றப்படுகிறதோ,அதை நீதமான முறையில் கொலை செய்தவன் பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கிவிடுவது சிறப்பிற்குரியதாகும்,என இணக்கத்தை இஸ்லாம் ஊக்குவிக்கிறது....

இதுதானே அவனுக்கு செய்யும் நீதி? இதைத்தாண்டி பாதிக்கப்பட்டவனுக்கு சட்டம் என்ன சிறப்பாக செய்திடமுடியும்???

இப்படி தண்டனையிலிருந்து மீளும் ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் கொலை செய்த எவனும், அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க..நான் வருந்திவிட்டேன், திருந்திவிட்டேன்.. என பேசலாம்... ஆனால் போன உயிர்..ஒரு போதும் மீளாது..

மேலும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில்..கொல்லலாம்..நாம் கண்டிப்பாக கொல்லப்படமாட்டோம்..உயிர் போகாது...எப்படியும் வெளியே வரலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியாது...அது சமூகக் குற்றங்கள் அதிகரிக்க மட்டுமே வாய்ப்பளிக்கும்...

அடுத்து இப்படியான பழிதீர்ப்புகளால் உங்களுக்கு வாழ்வு இருக்கிறதென அடுத்த வசனம் சொல்கிறதே! என்றால்..

நிச்சியமாக வாழ்வு இருக்கிறதுதான்..இப்படி பாரபட்சம் இன்றி,எவ்வித பகரமும் இல்லாமல் பழிதீர்க்கப்பட்டால் அடுத்து யாரும் கொலை செய்வது குறித்து சிந்திப்பார்களா?, இந்த தண்டனை அமளில் இருப்பின்,கொலைத்தொழில் இருக்குமா? கொலை செய்த ஒருவன் மரணிப்பது உறுதி என இருப்பின் அநியாயமாக கொலைகள் நடக்குமா? கொலை செய்யும் துணிவுதான் பிறக்குமா?.. இவனக்கொன்னுட்டா..எப்டியும் நாம செத்துப்போவோம்ன்னு உறைக்கனும்..அது மட்டும்,அது மட்டுமே கொலை பாதகர்களை அதனின்று தடுக்கமுடியும்...

(தோ....இன்னக்கி நியூஸ்

இந்த நாய்களெல்லா வாழ்ந்து என்ன கிழிக்கப்போவுது...இவனுகளுக்கும் சேத்துதான கோஷம்போடுரீங்க,.. மரணதண்டன வேணாம்ன்னு...இந்த நியூஸ் படிச்ச நொடில நீங்க இவனுகளுக்கு தண்டனையாக எதைத் தீர்மானிக்கிறீர்கள்..என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.)

இன்னும் பணபலம், ஆள்பலம், அதிகாரம் உள்ளவனும் கூட கொலை செய்ய அச்சப்படுவானே,...  அதனால், அடுத்த வசனம்

//நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். 2:179// சொல்வது போல...

வாழ்வு உண்டு.. அத்தோடு சமுதாயத்தீங்குகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்... என்ற நிலையும் உண்டாகும் என்பது நிதர்சனம்.

மேற்சொன்ன இவை அனைத்தையும் செயல்படுத்தும் உரிமையை,இஸ்லாம்  அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறது. அவர்களே இருதரப்பாரையும் விசாரிக்க, மற்றும் அதன் அடிப்படையில், தண்டனைகளை பாதிக்கப்பட்டவனிடம் ஒப்படைக்க பொருத்தமானவர்கள். அது இல்லாமல் தானாக பழிதீர்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

ஏனென்றால் அக்கால பழிவாங்கலானது தமிழ் சினிமா ரேஞ்சுக்கு,என் மகன நீ கொன்றாயா... நான் படும் வேதனை நீ அனுபவிக்க உன் மகனை கொல்வேன்,என்பது போலத்தான்.. இது முழுக்க முழுக்க முட்டாள்தான்ம் இல்லயா? கொன்றவனின் பிள்ளை என்ன செய்தது? இதன் மூலம் காலகாலமா தலைமுறை தலைமுறையாக பழி தீர்க்கும் படலங்கள் அழிக்கப்பட்டு நீதி செலுத்தப்பட்டது...

இப்படியான எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனம் ஒரு பானைச் சோற்றுப் பதம் என்றால் மிகையல்ல.

அன்புடன்
ரஜின்

3 கருத்துகள் :

 1. /////கொலைக்கு கொலை தீர்வாகுமா? உலகம் முழுவதிலும் எத்துனை நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது என குமுறுவீர்களானால்.. நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.. இப்படி நீங்கள் பேசும் வியாக்கியானம், பறிபோன உயிருக்கும்,பறிதவிக்கும் உறவுக்கும் செய்யும் அநீதி..இன்னும் மனித உயிரை துச்சமாக எண்ணி கொலைசெய்த ஒரு குற்றவாளிக்கு, நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம்./////
  சரியான கருத்து. பறிகொடுத்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் பாதிப்பு.
  ஜஸாக்கல்லாஹ் சகோ .ரஜின்

  பதிலளிநீக்கு
 2. இந்த நாய்களெல்லா வாழ்ந்து என்ன கிழிக்கப்போவுது.//கேட்டீங்க பாருங்க...நாக்க புடுங்கறாப்ல ஒரு கேள்வி....
  மாஷா அல்லாஹ்...உங்கள் எழுத்துக்கள் இன்னும் இந்த சமுதாயத்திற்கு தேவை சகோ.ரஜின் :)

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்