வியாழன், மே 03, 2012

நித்தியாநந்தர்களை மக்கல் விரும்புகிறார்களா !?!

இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும்பதிவு அல்ல...சமீப வலையுலக அவதானிப்புக்களின் வெளிப்பாடு..அவ்வளவே!!!

என ஆரம்பித்த இந்தப்பதிவு..வலையில் வரம்பு மீறி முஸ்லிம்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும் விமர்சிக்கும் சில பதிவர்களை விமர்சித்து எழுதியதே...

சமீபமாக இஸ்லாமும்,முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். எங்களின் பெருமதிப்பிற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதான விமர்சனங்களும், அவதூருகளும், ஆபாச பேச்சுக்களும் ஏச்சுக்களும் எக்கச்சக்கம்...

அதன் வெளிப்பாடாகவே அப்படி வரம்பு மீறி,விமர்சித்தவர்களை, விமர்சிக்கும் வண்ணம் எழுதப்பட்டது இந்தப்பதிவு..

இது நித்தியாநந்தர் எனும் தனிமனிதரையோ,அல்லது அவர்களது நம்பிக்கையையோ கிண்டல் செய்து எழுதப்படவில்லை....

இதுவரையும் இப்படி கேளிசெய்யும் விமர்சனப்பதிவுகள் இந்தத்தளத்தில் வெளிவந்ததில்லை...அதில் நமக்கு உடன்பாடும் இல்லை...இருந்தாலும் சிலவேலைகளில் ந்ம்மையும், அவர்களின் தரங்கெட்ட விமர்சனங்கள் உரசிப்பார்ப்பதை தவிர்க்கமுடிவதில்லை...

அதன்விளைவாக வெளியிடப்பட்ட இக்கட்டுரை..சகோதர முஸ்லிம்களின் அறிவுறுத்தல் காரணமாகவும்,இஸ்லாம் வலியுறுத்தும் மாண்பை காக்கும் பொருட்டும் நீக்கப்படுகிறது...

பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள்..6:108

முஃமீன்களே ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம்.ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்).ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள்.இன்னும் (உங்களில்) ஒருவரை ஒருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய ) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்.எவர்கள் அவற்றிலிருந்து மீளவில்லையோ,அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவர். 49:11

இப்படியான வேதவரிகளையும்,எங்கள் தூதர் மொழிகளையும், நினைவிற்கொண்டவர்களாக,இவற்றை தனதாக்கிக் கொண்ட நாங்கள் உண்மை முஸ்லிம்களாகவும்,இஸ்லாத்தின் மாண்பை காப்பவர்களாகவும், விமர்சனங்களுக்கு கடைசிவரையிலும் அழகிய முறையில் விளக்கம் அளிப்பவர்களாகவும் இருந்துவிட்டுப் போகிறோம்...

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்..தீர்க்கமான அறிவுடையவன்...


அன்புடன்
ரஜின்

5 கருத்துகள் :

 1. பெயரில்லா3/5/12 11:33 முற்பகல்

  yenakku nagaichuvai virunthu padaithu vitteer.

  பதிலளிநீக்கு
 2. //அதனால நான் எதும் வாயத் தொரக்கலப்பா... மக்களே நித்தியாநந்தர் பத்தி நீங்களும் வாய் தொரக்காதீங்க....//

  நானும் இனி நித்தியானந்தாவை தொடலீங்கோ!

  பதிலளிநீக்கு
 3. Hello sir muslim la oruthar thappu pannalum ella muslim ahyum thappa than nenaipanga. Oru hindhu thappu pannalum ella hindhuvayum thappa than nenaipanga. Thppa therichu panna thandana aanubavika vendiyadhu than theriyama thappu pannavea mudiyadhu aathanaala aavagalum thappu pannavagala vida aathegam thandana aanubavikanum.

  பதிலளிநீக்கு
 4. ///////அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்..தீர்க்கமான அறிவுடையவன்.../////

  ஆமாம்..உங்கள் அல்லாவே நித்தியானந்தாவைப் படைத்தான். அந்தக் குல்லாவே அவரை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கப் பணித்தான். அந்தக்குல்லாவே இப்போது மதுரை ஆதீனம் என்ற குல்லாவை அவர் தலையில் மாட்டிச் சென்றுள்ளது.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா4/5/12 3:37 முற்பகல்

  தயவு செய்து எழுத்து பிழைகளை தவிருங்கள்.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்