புதன், ஏப்ரல் 07, 2010

ஹிந்து பயங்கரவாதிகளின் சட்டீஸ்கர் படுகொலை...ஹிந்துக்களே பதில் சொல்லுங்கள்...

செய்திக்குறிப்பு:
நேற்று சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா வனப்பகுதியில் ஹிந்து பயங்கர வாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 75 சிஆர்பிஎப் ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து பயங்கர வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை படித்த உடனேயே பதிவு போட வேண்டும் என தோன்றியது..இந்தியாவில் ஹிந்து பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது....
இது தவிர கடந்த சில ஆண்டுகளில் ஹிந்து பயங்கரவாதிகளால் நாடுமுழுவதும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பணவிரையம் குறித்த செய்தி இதோ....
ஹிந்து பயங்கரவாத தாக்குதல்கள்: 2600 பேர் பலி

ஹிந்து பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2600 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவைகள் சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்டு, ஒரிசா ஆகிய மாநிலங்கள் தான்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஹிந்து பயங்கரவாதிகள் தாக்குதலால் சுமார் 2212 பேர் உயிரிழந்துள்ளனர்.

2006ம் ஆண்டு சட்டீஸ்கரில் ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய 715 தாக்குதல்களில் சுமார் 388 பேர் பலியாகி உள்ளனர். இதே போன்று 2007ம் ஆண்டு 369 பேரும், 2008ம் ஆண்டு 242 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 180 பேர் பலியாகி உள்ளனர். இதேபோன்று ஜார்கண்டில் ஹிந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2006ம் ஆண்டு 124 பேரும், 2007ம் ஆண்டு 157 பேரும், 2008ம் ஆண்டு ‌207 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஹிந்து பயங்கரவாதிகளால் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க சுமார் 40 ஆயிரம் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பணியை மேம்படுத்துவதற்காக ரூ.7,300 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது

ஆதாரம்:

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343

என இவ்வாறாக ஹிந்து பயங்கரவாதிகளால் மக்களுக்கும்,நமது நாட்டுக்கும் பாதுகாப்பின்மை உண்டாகியுள்ளது..ஹிந்து பயங்கரவாதிகளின் செயல்களால் நமது மக்களின் விலை மதிப்பில்லாத உயிர்கள் போவதோடல்லாம,அவர்களது செல்வங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன..

ஹிந்து பயங்கரவாதிகளின் இந்த செயல் இந்திய அரசை எச்சரிப்பது போலவும்,எதிர்காலத்தில் அவர்கள் இந்த நாட்டையே ஆயுதம் கொண்டு ஆக்கிரமிக்கும் திட்டமும் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது..

ஹிந்து பயங்கரவாதிகளின் ஆயுதம் அனைத்தும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பெறப்படுகிறது..இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலில் இராணுவ மையத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்களாம்..

ஹிந்து பயங்கரவாதிகளுக்கெதிரான இந்தியாவின் போர் வலுப்பெறும்போது.அவர்கள்,இஸ்ரேலிடம் தஞ்சம் புகுந்து,இந்தியாவின் மீது முழு ஆயுத பலத்துடம் போர் மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது...

இது மேலும் இந்திய அரசை அச்சம் கொள்ள செய்துள்ளது.இது குறித்து பா.சிதம்பரம் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.....

இந்த ஹிந்து பயங்கரவாதிகளின் ஆயுதம் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப் பட்டவை..அவை மேலும் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படாத அதிநவீன ஆயுதங்கள் என தெரிய வந்துள்ளது....

நேற்றைய தினம் 6/04/2010 அன்று நடந்த தாக்குதல் கூட ஆந்திராவை சேர்ந்த 50 முதிய ஹிந்து தீவிரவாதியான சுதர்சன் என்பவனே தலைமை தாங்கி நடத்தியுள்ளான். இவன் ஆந்திராவில் உள்ள ஹிந்து தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான்..

மேற்சொன்ன இந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஹிந்து மத்தை சேர்ந்தவர்கள்.ஹிந்து வேதங்களின் படி ஹிந்து ராஜ்யம் அமைப்பதே அவர்களின் குறிக்கோள் என அவர்கள் பிரகடன படுத்தியுள்ளார்கள்..அவர்களின் போர் முறை அனைத்தும் கீதையில் சொல்லப்பட்ட போர் சம்பந்தமான கீதாஉபச்சாரங்களாகும்..

அவர்கள் அனைவரும் தீவிர ஆயுத பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.இது போன்ற இந்தியாவுக்கு எதிரான சக்திகளை வேரருக்க அனைவரும் ஒன்றுகூடி போராட வேண்டும்..

என்னங்க...எல்லாத்தையும் படிக்க படிக்க...இவன் யாருடா லூசுமாரி எதையோ எதோடையோ சேத்து எழுதுரானேனு தோனுதுங்களா?ம்ம்..

வரிக்கு வாரி ஹிந்து பயங்கரவாதின்னு படிக்கிறது சுருக்கு சுருக்குன்னு குத்துதா?....

இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்,மற்றும் நக்சலைட்டு எனும் இயக்கத்தை சேர்ந்த ஹிந்து பயங்கரவாதிகளாம்.

(ஓ...அப்பாட நக்சலைட்களா? அப்டீன்னு பெருமூச்சு விடுரீங்களா..சரி, தொடர்ந்து படிங்க....)

என்னடா சம்பந்தமே இல்லாம ஹிந்து பயங்கரவாதின்னு சொல்ரானேன்னு....

கையில கெடச்சா நல்லா சாத்தனும் போல இருக்குங்களா?...

இந்த மாறி ஒரு செய்திய படிச்சதுக்கெ ஒங்களுக்கு ரத்தம் சூடாகி,என்ன அடிக்க தோணுதே...

சுத்த பைத்தியகாரதனம்,அவதூறு,அப்டீன்னு சொல்ல தோணூதுல்ல..ம்ம்.சரிதான்.நான் மேல் சொன்ன அத்துனை செய்திகளும் உண்மை..ஆனால் செய்தவர்கள் நக்சலைட்கள்.என்னுடைய பார்வை என்னனா....இஸ்லாத்தை பொருத்தவரை பெரும்பான்மை,மற்றும் மதவாத சக்திகளின் பார்வை.. உதாரணத்துக்கு,ஒரு ஹிந்து முஸ்லிம்க்குள்ள எதோ ஒரு தனிப்பட்ட பகை இருந்து,ரெண்டு பேரும் சண்டை போட்டு,அதுல ஹிந்து முஸ்லிம கொன்னுட்டான்ன,வேற பிரச்சனை.பட் அந்த எடத்துல ஹிந்து மட்டும் செத்துட்டான்னு வெச்சுகங்களே..முடிஞ்சது ஜோலி.. முஸ்லிம் பயங்கரவாதியால் முனியாண்டி கொடூரமாக கொல்லப் பட்டார்...அவ்ளோதா..ஹெட்லைன் நியூஸ்....

இப்படிதாங்க.தினமும் நான் சூடு போடப்படுகிறேன் இந்த பெரும்பான்மை ஊடகங்களால்...

இது மாறி இந்தியா முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அதில் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி செய்யாவிட்டாலும்,இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருக்கலாம்.என்பார்கள்.இல்ல அதுல எவனாச்சு முஸ்லிம் பேர் உள்ளவன் இருந்துட்டான்னா போச்சு...

அப்பட்டமாக இஸ்லாமிய பயங்கரவாதி கைது..இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சதி...

எங்க பாத்தாலும் "இஸ்லாமிய" இல்லாம இல்ல...

இதெல்லா என்ன இந்தியாவுல உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களோட ஏகோபித்த ஆதரவோடைய நடக்குது...ஹ்ம்ம்...எவ்வளவோ வலி மனசுல..அதா....இஸ்டத்துக்கு எழுதீட்டேன்...

எவனோ ஒரு முஸ்லிம் பேருள்ள ஒருத்தன் செஞ்சுட்டான்.செய்ரான்...சரி..அவனுக்குன்னு ஒரு இயக்கம் இருக்குள்ள அத சொல்லவேண்டிதேணய்யா?....

எங்கோ எவனோ செய்ரான்..அதுக்கு இங்க இருக்குர ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மேல சாணி அடிக்கிரீங்களே ஏன்?..

என்னுடைய மததின் பேர் நீங்கள் முன்னிருத்தி,அவன் செஞ்ச தப்புல பாதி என்னை சார்ந்ததா ஆக்குரீங்களே...ஏன்?...

எவனோ செய்ர தப்புக்கெள்ளா..தோ...இவன்கள சேந்தவந்தாண்டா நேத்து குண்டு வெச்சது..அப்டீன்னு,என்ன பாத்து மத்தவங்கள கைநீட்ட வக்கிரீங்களே ஏன்?

இவன்கள்ளா என்ன இந்திய முஸ்லிம்களுக்காக பாடுபடுரான்களா?...த்தூ...இல்லயே..இந்த நாட்ல நாங்க நல்லதான இருக்கோம்..இது எங்க நாடாச்சே...இந்த நாட்டுக்கு எதிரா நடக்குர கிளர்ச்சி,என் நாட்டோட வளர்ச்சிய பாதிக்குமே..அவன் கொல்ரவங்க எல்லா என்னோட சகோதர சகோதரிகள் ஆச்சே...

அப்படி இருக்கும் போது என்ன செறக்கிரதுக்கு இவன் எனக்காக பாடுபட போறான்.இல்ல என்ன மயித்துக்கு நா அவனுக்கு ஆதரவா இருக்க போரேன்..ஹ்ம்ம்..ரெண்டுமே இல்ல...அப்டி இருக்கும் போது ஏய்யா அவனோட என்ன சேக்குரீங்க.

ஏதோ.ஒரு அரசியல் காரணத்துக்காக,தீவிரவாதிகள் இறையூட்டி வளர்க்கப் படுகிறார்கள்...

அந்த அரசியல் காரணம் வெற்றியோ தோல்வியோ தழுவும் போது அவர்கள் அப்படியே விடப்படுகிறார்கள்.ரஷ்யாவுக்கு எதிராக தாலிபான்கள் அமேரிக்காவால் உருவாக்கப்பட்டது போல்....

அவன் ஹிந்து ஆனாலும் முஸ்லிம் ஆனாலும்,அநியாயமாக கொலை புரியும் பாதகனேயாவான்,அவனுக்கு மத அடையாளம் கொடுப்பது தவறு.

ஆனால் இங்கு நடப்பதோ..முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஒருவிதமான மனரீதியான போர் என்றே சொல்லலாம்..இதை பெரும்பாலான அந்நிய சக்திகளும்,இந்தியாவில் உள்ள மதவாத சக்திகளும் திட்டமிட்டே செய்கின்றன..

உளவியல் ரீதியாக முஸ்லிம்களை பலகீனமாக்கி அவர்களை குற்ற உணர்வுள்ளவர்களாக,இரண்டாம் தர குடிமக்களாகவே வைத்து,அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து,வாழ வழியின்றி செய்ய நடக்கும் அப்பட்டமான சதியே இது.....

இல்லை இல்லை..ஊடகங்களான நாங்கள் இப்படித்தான் செய்வோம் என்றால்..நோக்கம் எதுவானாலும் அவன் ஹிந்து பெயர் தாங்கி என்றால் அவனை ஹிந்து பயங்கரவாதி என்று சொல்லத் துணியுமா இந்த கையாளாகாத ஊடகங்கள்....

எனது ஹிந்து சகோதரர்கள் மத்தியிலும்,மற்றவர்கள் மத்தியிலும்,,,தவறிழைக்காத என்னை குற்றவாளிக்கூண்டில் நிற்க்வைக்கும் இந்த சூட்சமம் ஏன்?

எங்களை இந்த நாட்டுமக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும் சதி ஏன் செய்யப்படுகிறது..

இன்று பிறக்கும்.இஸ்லாமிய குழந்தைகள் ஏன் என்றே தெரியாமல் இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற குடையின் கீழ் வலுக்கட்டாயமாக நிற்கவைக்கப்படுகிறதே...ஏன்? சரி இவ்ளோ நல்லவனாட்டம் பேசுரியே....அப்போ முஸ்லிம்கள்ல பயங்கரவாதிகளே இல்லயா? நீங்க என்ன பாத்தி கேக்கலாம்...நியாயமான கேள்வி....அதுக்கு பதில் இருக்காங்க.....ஒத்துகிறேன்...ஆனால் உலகின் எல்லா நாடுகளிலும்,இருக்கும் அரசை,ஆட்சியை எதிர்த்து,கிளர்ச்சியும்,போராட்டங்களும்,போராட்டக் குழுக்களும் இருக்கதான் செய்கிறது..அவற்றில் பெரும்பான்மை,ஏதோ ஒரு சமயம் அடிபட்டு,அநீதம் இழைக்கப் பட்டு,அதன் உரிமையை பெற போராடும் இயக்கமாக இருக்கும்.வெகுசில,வீண்கிளர்ச்சி செய்து,அரசியல் ஆதாயத்திற்காக செய்யப் படும்.இவ்வாறாக நியாயமான காரணங்களுக்காக உருவாக்கப் பட்ட இயக்கங்களும்,வரம்பு மீறி,கொலை,கொள்ளைகளின் ஈடுபட்டு,அப்பாவிகளை கொல்ல துணியும்போது.அவர்கள் யாராக இருப்பினும் பயங்கரவாதிகளே.அவன் முஸ்லிமானாலும் சரி..ஹிந்து ஆனாலும் சரி..எனது பார்வையில் பயங்கரவாதிகள்....சிலர்.... ஜார்ஜ் புஷ் - ஏரியல் ஷெரோன் - ராஜபக்சே - ஒஸாமா பின் லேடன் - விடுதலை புலிகள் - காஷ்மீர் ஆக்கிரமிப்பாளர்கள் - தாவூத் இப்ராஹிம் - பால் தாக்ரே - ஆர் எஸ் எஸ் - வி ஹெச் பி - பா ஜா க - சிலவேலை இந்திய ராணுவம் - தாலிபான்கள் - நக்சலைட்டுகள்......இன்னும் போய்கிட்டே இருக்கு....

இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட பதிவல்ல..இது என்னையும் நான் சார்ந்துள்ள மார்க்கம் பற்றியதுமான தன்னிலை விளக்க பதிவு...மற்றும் மதநல்லிணக்கம் ஏற்படுத்தும் சிறு முயற்சி....அவ்வளவே.....

எனது ஹிந்து சகோதரர்களே சிந்தியுங்கள்...பதில் சொல்லுங்கள்....

நன்றி

அன்புடன்

ரஜின்

23 கருத்துகள் :

 1. பெயரில்லா7/4/10 8:05 பிற்பகல்

  all okay..i dont think any one in tamil nadu saying all muslims are terrorist..but i jsut want to say naxal didnt say we are doing in the name of GOD..or Ram or holy war ! u cant relate to hindu..but pak terrotirs say name of god..all for alla..this is called religion terrorist..why dont we remove jihad from guran..??

  பதிலளிநீக்கு
 2. ரஜின் இது என்ன கிறுக்குத்தனம், நகசல்களுக்கு ஏது மதம், இன்று நாட்டில் இந்து மத பயங்கரவாதிகளான் ஆர்.எஸ்.எஸ் கும்பலை எதிரக்க்கஃகூடிய ஒரே சக்தியான புரட்சிகர கம்யூனிஸ்டுகளை இது போன்ற அர்த்தமில்லா பதிவுகளால் அவமானப்படுத்த வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையான பதிவு... ஆனால் இதை செய்யும் கழிசடைகளோ ஊடகங்களோ இதை படிப்பதுமில்லை .. என்னை போன்ற பொதுசனம் அந்த மாதிரி நினைப்பதும் இல்லை

  ஒரு சென்மமாவது இப்பதிவை உணர்ந்து கொண்டால் வடக்கே இருக்கும் இந்தியா என்ற நாட்டுக்கு நல்லது

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா7/4/10 9:49 பிற்பகல்

  நண்பரே! ஏன்?ஏன்? என்று கேள்விகள் எழுப்பியிருக்கும் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு ச்முதாயத்தை பொது சமுதாய உலகில் இருந்து பிரிப்பதன் மூலமே அதனை ஒழிக்க முடியும்.முதலில் அந்த சமுதாய மக்களின் தன்னம்பிக்கையைத் தகர்க்க வேண்டும்.அவர்களை பொது உலகியல் வாழ்விலிருந்து பிரிக்க வேண்டும்.பின் தன்னம்பிக்கை இழந்த அவர்கள் முன் வன்முறை என்ற ஒரு ஆயுதத்தை மட்டுமே முன்வைக்க வேண்டும்.வேறு வழியில்லாமல் வன்முறைப் பாதைக்கு தள்ளப்படுவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியும்.இதன் மூலம் அவர்களுக்கு உழைக்காமல் உண்ண வாய்ப்புகள் அதிகரிக்கும். இதைச் செய்துதானே இன்று தலித்துகளாக இருப்பவர்களின் முன்னேற்றத்தை தடுத்து அடிமைகளாக வைக்க முடிகிறது.அவர்களை மலத்தைக் கூட உண்ண வைக்கமுடிகிறது, அதுவும் காவலர்கள் கண் முன்னால்.பீகார் பகுதியில் இருந்த "பாலா" இன அரசர்களின் சிறப்பான ஆட்சி இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் அந்த இனத்தையே அழித்து விட்டனர்.சமத்துவ வாழ்க்கையை முன் மொழிந்த காரணத்தால் புத்த மதத்தை அழித்தனர்.எப்படியோ , அவர்கள் எதிர்பார்த்த படி நீங்களும் சுய புலம்பலை ஆரம்பித்து விட்டீர்கள்.உயிர்களைக் கொல்லுபவனுக்காவது தீவிரவாதி என்று கூறி அடயாளம் காட்ட முடியும். ஆனால் மனிதனின் தன்னம்பிக்கையை,அவனது தன்மானத்தை கொலை செய்பவர்களை அடயாளம் காண்பது சிரமம்.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா8/4/10 1:19 முற்பகல்

  Razin Abdul,

  Congrats.. atleast you made me read your blog.. I was going to blast you.. but your last para change my mind.. I am not going to defend these Killers.. they got to be caught and hanged in public. (just like what your Quran says)

  But my question to you.. you are upset with many diff news services for obvious reasons.. don't you have any Hindu friends? do you live in a predominant Muslim country or what? Since you are writing in Tamil, I assume you live in TN, India.. which is a predominant Hindu country.. whether you come to accept it or not, but that's the truth. If you don't accept that, then you better don't live in India.. go somewhere else and live there.

  Next, don't you read World news? even last week Islamic Terrorists killed so many in Moscow!!! So it's not just in India Sir.. you go anywhere in World.. Muslims are blood thirsty.. and they always want to kill others.. they don't even trust their own brothers, forget others.

  Islam might preach peace.. but today's Muslims, are they practicing it? are they following it? you tell me!!! Until that change happens, Muslims are going to be broadly looked with suspicious eyes only... you got to live with it.

  பதிலளிநீக்கு
 6. ஒரு முஸ்லிம் எண்ண ஒட்டங்களை சொல்ல கூடிய அளவில் தன்னிலை விளக்கமாக இருக்கிறது.முஸ்லிகளை பொதுவான சமுதாயத்தில் பிரிக்க,அவர்களை மன ரீதியாக முஸ்லிம்களை தனிமைப்படுத்த வேண்டும்.அதை அவர்கள் வெற்றிகரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.இதை முஸ்லிம் சமுதாயம் எப்படி எதிர்கொள்ள் போகிறது என்று தெரியவில்லை. முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடம் நிதர்சன நிலையை உணர உங்களை போன்றவர்களின் முயற்சி என்றும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா 01:-
  வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துரைக்கும் முதலில் என நன்றிகள்.தமிழ்நாட்ல உள்ளவங்க யாரும் முஸ்லிம்கள பாத்து,தீவிரவாதிகள்னு சொல்ரதில்லங்க.ஆனா ஹிந்துமதவாதிகள தவிர.அவங்களோட இந்த செயல் வருங்கால ஹிந்து குழந்தைகளின் மனசுல,முஸ்லிம்கள்னாலே பயங்கரவாதிகள்தான்.அப்டீனு பதியவக்க்ப்படுதே..அது அடுத்ததலைமுறை முஸ்லிம்கள அப்டிதான பாக்க வைக்கும்.இபொ மட்டு என்ன வாழுதாம்..உங்களுக்கு தெரியல சார்..இன்னகி வெளியான பத்திரிக்கைய எடுத்து பாருங்க..பெரும்பாலும் தலைப்பு செய்தி,அல்லது,எங்காவது,இஸ்லாமிய பயங்கரவாதம்னு இல்லாம செய்தி இருக்கான்னு.ம்ம்ஹும்.பாகிஸ்தான்ல உள்ளவன் பன்றது,அவன் அல்லாவின் பேர் சொல்லிதான கொலை பண்றான்..அது இஸ்லாமிய தீவிரவாதம் தான..உங்க வாதம் சரிதான்.ஆனா,இவங்க செய்ரதெல்லா ஜிகாதோ,இல்ல இஸ்லாமிய போரோ இல்லங்க.
  இஸ்லாம்,அநியாயமா,ஒருத்தன் ஒரு மனிதனை கொலை செய்தால்,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமமாக குற்றப்படுத்துகிறது.அதுவல்லாது..போரே ஆனாலும்,இஸ்லாம் பெண்களையும்,குழந்தைகளையும்,வயோதிகர்களையும்,கொல்வதை தடைசெய்கிறது.எதிரிகளின் வீடுகள்,வழிபாடுதளங்கள்,விளைநிலங்கள்,விவசாய பொருள்கள்,கால்நடைகள்,என் இவற்றை அழிப்பதை தடுக்கிறது.அப்படிப்பட்ட போர்தான் இஸ்லாம் கூறும் ஜிகாத்.இவன்க பண்றது..தீவிரவாதம்தா.அதுக்கு அல்லாஹ் பேரசொன்னா?அல்லாஹ் இத சொல்லிருக்கானா பாருங்க..இல்லனா இல்லசார்..அவன் சொன்ன அல்லாஹ் சொன்னதாயிடுமா?நாளைக்கே ராமன் பேரசொல்லி ஒருத்தன் குண்டு வச்ச,என்ன சொல்வீங்க?சேசே ராமன் எவ்ளோ அமைதியாவர்,அவர்பேர,வலிந்து,பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறான் என்றல்லவா சொல்வீர்கள்?

  ஜிகாத் அப்டீங்ர வார்த்தைய குர் ஆன்ல இருந்து எடுத்ரலாமே.அப்டீனு சொல்ரீங்க.இங்க இந்த உலகத்லயே குரானுக்கான ஆத்தாரிடி யாரும் இல்லயெங்க.நானோ வேர யாரோ.எழுதீர்ந்தா,சரி சொல்லலாம்.அது அல்லாஹ்வுடைய வேதமாச்சே..முடியாத காரியம்.2வது,அத எடுக்க வேண்டிய அவசியம் இல்லவெ இல்ல.ஜிகாத் பத்தி விரைவில் விரிவான ஒரு பதிவி வரும்.இன்ஷா அல்லாஹ்..

  பெயரில்லா 02:-
  லூசாடா நீ..அப்டீன்னு கேட்டுடு போய்ருக்கார்..
  பாவம்.ஏ சார்,அவ்ளொ அவசரம்.எந்த லூசு சார்,இவ்ளோ அழகா ப்ளாக் ரெடி பண்ணி,இப்டி ஒரு லூசுத்தனமான கட்டுரைய எழுதுவா..முழுசா படிக்காம நுனிப்புல் மேயும் பழக்கம் நல்லதல்ல.எதுவானாலும்,முழுதாக படிக்க கற்றுக்கொள்ளுங்கள்..

  பேரோட வரலாமே..நா ஒன்னும் சொல்லமாடேன்.பயப்டவேண்டாம்..

  பதிலளிநீக்கு
 8. வாங்க ஏழர:-
  இங்க நா யாரையும் குற்றம் சொல்ல,இந்த பதிவை இடவில்லை.எங்களின் மனதில் உள்ள வழியின் பகுதியேனும்,என் ஹிந்து சகோதரர்கள் அறிய மாட்டார்களா என்ற ஒரு ஆதங்கத்தில் தான் இப்படி போட்டு வாரிவிட்டேன்,,மற்றபடி கட்டுரையின் பிற்பகுதி சொல்லும்,இது நக்சலைட்களை குறிவைத்தோ,அல்லது ஹிந்துக்களை தாக்கியோ எழுதப்பட்டதல்ல என்று.
  நக்சலைட்டுகள் மட்டுமல்ல,உண்மையான ஹிந்துக்களும் ஆர் எஸ் எஸ் ஐ எதிர்க்ககூடியவர்களே..
  எனக்கு கம்யூனிசம் பத்தி அவ்வளவா தெரியாதுங்க.நக்சலைட்டுகள பத்தியும் தெரியாது.ஆன அவங்க பன்றத என்னால ஏதுக்க முடியாது..
  மேலே நான் தந்த நக்கீரன் செய்தி தொடுப்பை சென்று பாருங்கள்..தெரியும்.அவர்களின் வெரியாட்டம் என்னவென்று..

  நன்றி...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா 03:-
  நீங்க யாருன்னு தெரிலங்க..ஆன என்ன பாத்து உங்களனு சொல்ரதுல இருந்து நீங்க என் மாற்றுமத சகோதரர்னு தெரியுது.இந்த விஷயத்ல என்னவிட தெளிவான கருத்த முன்வச்சிருக்கீங்க..நன்றி.
  இது எனது சுய புலம்பல்தான்.ஆனால் அது எனது நடுநிலையான ஹிந்து சகோதரர்கள்,என் வலியை புரிந்து கொள்ள,எங்களை மேலும் காயப்படுத்தாமல் இருக்கவே புலம்புகிறேன்.அவர்கள் உணர்ந்தால் போதுமே..மற்றப்டியான மதவாதிகள்,தானாக அடங்கிவிடுவார்களே...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா 04:-
  வருகைக்கு நன்றி சகா:
  தெரியும் கட்டுரையின் முதல் பத்திய படிச்ச நீங்க என்ன அடிக்கதா வருவீங்கன்னு.குரானுடைய தண்டனைகள கொடுக்க ஆரம்பிச்சாதா தப்புகள் தானா குறைஞ்சுருமே,என்ன பன்ரது,தண்டனை கொஞ்சம் கடுமையானதுதா..ஆனா அது அடுத்தவன தப்பு பண்ரதுல இருந்து தடுக்குதே..ம்ம்..
  என்ன இப்டி கேட்டுடீங்க..சுத்த தமிழன்க நான்.தெந்தமிழகத்தில் தேவர் பிறந்த ஊருக்கு பக்கத்துல பிறந்தவன் நான்,ஹிந்து நண்பர்கள் இருகாங்கலானு கேக்குரீங்க..என்ன சார்.எனக்கு அதிகமான ஹிந்து நண்பர்கள் இருகாங்க.
  ஆனா,நா நம்ம தமிழகத்த குறிச்சு சொல்லலங்க.முழு இந்தியாவையும் ஏன முழு உலகம் சார்ந்த பார்வை இது.
  இந்தியா பெரும்பான்மை ஹிந்துக்கள் உள்ள நாடு..இத எப்டி ஒத்துக்காம இருக்க முடியும்.ம்ம்.ஆனா நாங்களும் அதே ஹிந்துக்கள்தான,என்னுடைய "நானும் ஹிந்து"கட்டுரைய படிச்ச தெரியும் எப்டின்னு.ஆனா நாங்க பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம்,அவ்வளவே..இந்தியா பெரும்பான்மை ஹிந்து நாடுதா,நாங்களும் இங்க இருகோம்லசார்.எங்கள ஏன் விதியாசமா பாகுரீங்க?ம்ம்.இதுதா ஊடகத்தோட வெற்றியே..நடுநிலையா நீங்க பேச வந்தாலும்,எங்கள தனிய நிக்கவச்சி பாக்குரீங்க பாத்தீங்களா..இங்க அவன் ஜெயிச்சுட்டான்..
  உலக் செய்தியும் பாக்கதான் செய்ரேன் சார்,உலகத்ல எல்ல நாட்லையும் அந்த நாட்டுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்கள் இருக்கதான் செய்யும்.இருக்கிறது.அது பல்வேறு கோரிக்கைகளை கொண்டு ,தன்னுரிமை பெற போராடுகிறது.இதில் நல்லவர்களும் உண்டு,கெட்டவர்களும் உண்டு.

  பாருங்க.மாஸ்கோ கொலைக்கு இஸ்லாம் பேர வச்சுடீங்க..
  //Muslims are blood thirsty.. and they always want to kill others.. they don't even trust their own brothers, forget others.//

  எவ்வளவு கொடூரமா சொல்ரீங்க பாருங்க..ம்ம்.உலகத்ல இன்னக்கி 100 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிகள் இருக்காங்க.ஒரே வார்த்தைல எல்லத்தையும் திவிரவாதியாக்கிடீங்க..ஏன் எங்களைலா உங்க கண்ணுக்கு தெரியலையா?ம்ம்...இது உங்களோட கருத்தல்ல..ஊடகம் உங்களுக்கு அந்த மாரியான முகத்தை இஸ்லாம் என உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது..அதுதான்,அவனது சூழ்ச்சி,அதில் இப்போது உங்களை பொருத்தவரை அவன் வெற்றி பெற்றுவிட்டான்...
  நன்றி..

  பதிலளிநீக்கு
 11. வாங்க சேகர்,...
  சரியா சொன்னீங்க...

  உங்களை போன்ற ஹிந்து சகோதரர்களின் இந்த ஆருதல்தால் வலிமேவிய எங்களின் மனதுக்கு மருந்து..

  இந்தியாவின் நலனுக்கு எதிரான தீய சக்திகளை மதம் தாண்டி எதிர்ப்போம்..ஒன்றுகூடி...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 12. வாங்க mkr:-
  ம்ம்..நம்மால முடிஞ்சது..இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்,

  இது மத நல்லிணக்கத்துகாகவும்,இஸ்லாம் குறித்த தவறான எண்ண ஓட்டத்தை தெளிவுபடுத்தும் முயற்சியே...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 13. வருக பராரி...

  வருகைக்கும்,வாசிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 14. அன்பு சகோதரர் ரஜின்,
  வெகுஜன ஊடகங்களால் பாதிக்கப்பட்ட உங்களின் உணர்வுகளை இந்த கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். அத்தகைய காயங்கள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு என்றாலும் தங்களின் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "ஹிந்து தீவிரவாதி" என்ற சொல்லுக்கு என்னுடைய வன்மையான கண்டங்கள். "முஸ்லிம் தீவிரவாதி" என்று சங்பரிவார குழுக்களும் வெகுஜன ஊடகங்களும் செய்கின்ற பொய் பரப்புரைகளுக்கு பதிலாக தாங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கின்றீர்கள் என்றெண்ணுகின்றேன்.

  "முஸ்லிம் தீவிரவாதி" என்ற சொல்லாடல் வெகுஜன ஊடகங்களிலும் சில தனிப்பட்ட உரையாடல்களிலும் பயன்படுத்தப்படும் போது அடைகின்ற மன வேதனை வார்த்தைகளால் வடிக்கவியலாது. அத்தகைய மன வேதனையை என்னுடைய ஹிந்து மத சகோதரனும் அடையக் கூடாது. எனவே "ஹிந்து தீவிரவாதி" என்ற சொல்லை இனிமேல் பயன்படுத்தாதீர்கள் ரஜின். இந்துத்துவா தீவிரவாதிகள் என்றோ அல்லது சங்கப்பரிவார தீவிரவாதிகள் என்றோ அழைப்பதில் தவறில்லை.

  பதிலளிநீக்கு
 15. வாங்க சகோ ஷேக் தாவூத்.
  நீங்க சொல்ரது சரிதான்.உங்களுடைய இந்த கனிப்பு சரிதான்,என் மனசுல இல்லாம இல்ல சகோதரரே.இத சொன்னா,ஹிந்துதுவா'க்களுக்கு,ச்சுருக்குன்னு இருக்கும்,எனது மற்ற ஹிந்து சகோதரர்களுக்கு,வலிக்கும்.தெரியும்.இருந்தாலும்,கொஞ்சம் கனத்த மனதோடுதான்,இந்த வார்த்தையை பிரயோகித்தேன்.
  இந்த வார்த்தையினால் ஒரு ஹிந்து சகோதரன் வேதனைபடகூடாது என நம் உள்ளத்தில் ப்டுவதுபோல.நமது ஹிந்து சகோதரர்களுக்கும் தோன்றவேண்டும் என்ற ஆதங்கமே தவிர..யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை சகோதரரே....

  மதநல்லிணக்கம் நாடியே இந்த பதிவு..

  ஸலாம்...

  பதிலளிநீக்கு
 16. //இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து பயங்கர வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.//

  அன்புள்ள ரஜின், நீங்கள் ஒரு சமத்துவ சிந்தனை உடையவர் என்ற நினைப்பிலேயே நான் கூட ஏமாந்து போய் ஒரு அன்பான பின்னூட்டம் உங்களது முந்தைய கட்டுரையில் வெளியிட்டேன். அது தவறோ என்று என்னவைத்து விட்டீர்கள். எழுத்துக்கு எழுத்து இந்து பயங்கரவாதி என்று எழுதி அதை சிகப்பு மையிட்டு பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலம் நீங்களும் அரசியல் முஸ்லீம் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை. புரிந்துகொள்ள உங்கள் மத வெறி உங்களை விடவும் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. மாவோயிஸ்டுகளும் சக்ஸலைட்டுகளும் எப்போதோ கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளாகிவிட்டார்கள். அவர்கள் இந்து விசுவாசிகள் கிடையாது. மேலும் நீங்கள் குறிப்பிடும் அந்த பயங்கரவாதிகள் நான் இந்த கொலைகளை கிருஷ்னருக்காக செய்கிறேன், மாரியம்மனுக்காக செய்கிறேன் என்று கூறி கொலைபுரியவில்லை. அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் முஸ்லீம் தீவிரவாதிகள் தங்கள் உயிர் தியாகத்தை அல்லாவுக்காக செய்வதாகக் கூறியே கொலையும் செய்து தற்கொலையும் செய்துகொள்கிறார்கள் என்பதை ஏன் மறக்கிறீர்கள் நண்பரே!. ஒவ்வொரு முஸ்லீம் தீவிரவாதியும் தங்கள் அடையாளங்களோடு சாவதை பெருமையாக நினைக்கிறான். அதனாலேயே அவன் முஸ்லீம் தீவிரவாதி என்றும் அடையாளப்படுத்தப் படுகிறான். அது போகட்டும். மாவோயிஸ்டுகளையும்
  நக்சலைட்டுகளையும் ஒடுக்க வேண்டும் என்று சாதாரண இந்துவும் விரும்புவான். ஆனால் அமெரிக்கா காரன் உங்களைப் போன்ற
  முஸ்லீம்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக அழித்தேதீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போர் அறிவிக்கும் வரை உலகின் எந்த
  முஸ்லீம் தலைவர்களும் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லவே இல்லை. ஆப்பு வைத்த பிறகு தான் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள்
  ஐயோ இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று வாய் பிளந்தார்கள். தமிழக முஸ்லீம்கள் கூட உலக முஸ்லீம்களுக்கு ஆப்பு வந்த உடன்
  தான் இஸ்லாம் அன்பை தான் போதிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றார்கள்.

  அதுவரை கோயமுத்தூரிலோ, காஷ்மீரிலோ மும்பையிலோ, கல்கத்தாவிலோ எங்கேயெல்லாம் முஸ்லீம்களால் இந்துக்கள் படுகொலை
  செய்யப்பட்டாலும் அதை உங்கள் ஆட்கள் ரசித்துக் கொண்டு தான் இருந்தார்கள் என்பதை மறக்காதீர்கள். உங்கள் இமாம்களின் மதவெறியால்
  கீழ்விசாரத்தில் அரபுநாட்டு அரசாங்கம் தான் நடக்கிறது. அதை ஏன் உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.

  ஏகத்துவம் என்ற பெயரில் உங்கள் இமாம்கள் நாட்டைகூறு போட நினைப்பது பற்றி நீங்கள் எல்லாம் பேசப்போவதில்லை.
  மேலும் சன் டிவிக்காரன் பற்றி வேறு எழுதி இருக்கிறீர்கள். சன் டிவி குடும்பத்தினரே இந்துக்களை அவமதிக்கும் நாத்திகப்போக்கு
  கொண்ட குடும்பம் தான். அதனால் அவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயற்கையான விஷயங்களையே கண்பிக்கிறார்கள் என்பது ஒரு
  முஸ்லீமான உங்களுக்குப் புரியாது. சன் டிவியை ஆதரிக்கும் நீங்கள் விஜய் டிவியில் பர்தா பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது
  என்று கொலைமிரட்டல் விடுத்து தடுத்தீர்களே ஏன்? விஜய் டிவி காரர் மட்டும் என்ன முஸ்லீகளுக்கு எதிரியா? உங்களுக்கு ஒரு நியாயம்
  இந்துக்களுக்கு ஒரு நியாயமா?

  தயவு செய்து மதவெறியராக இருந்து எழுதாதீர்கள். ஹிந்துத்தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துக்களில் எழுதி உங்கள் ஆழ்மன வக்கிரத்ததை
  வெளிப்படுத்த வேண்டாம்.

  என்றும் அன்புடன்
  ராம்
  www.hayyram.blogspot.com

  பதிலளிநீக்கு
 17. //அப்படி இருக்கும் போது என்ன செறக்கிரதுக்கு இவன் எனக்காக பாடுபட போறான்.இல்ல என்ன மயித்துக்கு நா அவனுக்கு ஆதரவா இருக்க போரேன்..ஹ்ம்ம்..ரெண்டுமே இல்ல...அப்டி இருக்கும் போது ஏய்யா அவனோட என்ன சேக்குரீங்க.//

  இது நியாயமான குமுறல் நண்பரே! இது போன்ற உணர்வும் குமுறலும் கொண்ட ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களுக்கும் என் போன்ற சாதாரண இந்துவின் ஆதரவு உண்டு. தன் குடும்பத்தைக் காப்பதும் பிள்ளைகுட்டிகளை படிக்கவைப்பதும் அவர்களை வாழ வைத்து நிம்மதியாய் வாழ வேண்டும் என்ற சாதாரண முஸ்லீம்கள் யாரையும் தீவிரவாதிகளுடன் சம்பத்தப்படுத்தி பேச யாருக்கும் உரிமை இல்லை. அப்படிப் பேசுவதும் கூடாது. ஆனால் நண்பரே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். அப்படி சம்பந்தப்படுத்தி பேச வைப்பதும் முஸ்லீம்களே. ஒரு விஷயத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
  அமெரிக்காவின் ரெட்டை கோபுறம் தகர்க்கப் பட்ட போது நான் வேலை பார்த்த அலுவலகத்தின் அருகே டிராவல்ஸ் நடத்தும் முஸ்லீம் முதலாளிகள்
  பேசிக்கொண்டது என்ன தெரியுமா? "எப்படி அடிச்சான் பாத்தியா எங்க ஆளு" என்றார்கள். இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் செய்யும்
  கொட்டத்தை தமது வெற்றியாகவே நினைத்து அதை வெளிப்படையாகவே பேசும் முஸ்லீம்கள் தான், தீவிரவாதிகளை முஸ்லீம்கள் எல்லாரும்
  ஆதரிக்கத்தானே செய்கிறார்கள் என்று பேச வைக்கிறது. அது ஹிந்துக்களின் குற்றமல்லவே! இன்னும் பாகிஸ்தான் ஜெயித்தால் விசிலடிக்கும்
  முஸ்லீகள் இருக்கிறார்களே! கொயம்புத்தூரில் கார்கில் போரில் இறந்து போன தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்திய முஸ்லீமை என்ன
  சொல்வீர்கள்! இந்து நாட்டிலேயே வாழ்ந்து இந்து விவசாயியின் வேர்வையில் நனைந்த அரிசியையே தின்றுவிட்டு
  இந்திய ராணுவத்தின் வெற்றியை கொண்டாடாமல் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நாட்டுப்பற்று அற்ற முஸ்லீம்கள்
  இருந்தால் உங்களை ஏன் தீவிரவாதிகளோடு சேர்க்க மாட்டார்கள்! எனவே தவறு எங்கே என்று இன்னும் நீங்கள் ஆராய வேண்டி
  இருக்கிறது. இப்போது கூட சானியா பாகிஸ்தானியரை தான் திருமணம் செய்கிறாள். இந்தியாவில் நல்ல முஸ்லீம் ஆம்பளைகளே இல்லையா
  என்ன? ஒரு விஷயம் மட்டும் நிஜம். முஸ்லீம்கள் எங்கே வாழ்ந்தாலும் முஸ்லீம்களாகத்தான் வாழ்வீர்கள். இந்தியராகவோ, தமிழராகவோ உங்களை
  உங்கள் இமாம்கள் வாழ விடமாட்டார்கள் என்பது நிஜம்.
  என்றும் அன்புடன்
  ராம்
  www.hayyram.blogspot.com

  பதிலளிநீக்கு
 18. //ஹிந்து பயங்கரவாதிகளின் ஆயுதம் அனைத்தும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பெறப்படுகிறது..இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்ரேலில் இராணுவ மையத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்களாம்..//

  ithu enna pudu kathaiya iruku....
  ithu varai NAXALAITESku chinavil irunthudaan aayutham varuthu endru nan ninaithirunden(Indian govt told this several times)...

  பதிலளிநீக்கு
 19. //இப்படிதாங்க.தினமும் நான் சூடு போடப்படுகிறேன் இந்த பெரும்பான்மை ஊடகங்களால்...//
  "பெரும்பான்மை ஊடகங்களால்"

  Let us see the ownership of different media agencies.
  SOURCE:http://rajee.sulekha.com/blog/post/2007/12/who-controls-indian-media.htm

  NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain that supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan. Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of Communist party of India.His wife and Brinda Karat are sisters.

  India Today which used to be the only national weekly which supported BJP is now bought by NDTV!! Since then the tone has changed drastically and turned into Hindu bashing.

  CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its
  branches in all over the world with HQ in US. The Church annually allocates
  $800 million for promotion of its channel. Its Indian head is Rajdeep
  Sardesai and his wife Sagarika Ghosh.

  Times group list: Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust , Femina, Vijaya Times,Vijaya Karnataka, Times now (24- hour news channel) and many more. Times Group is owned by Bennet & Coleman. 'World Christian Council' does 80 percent of the Funding, and an Englishman and an Italian equally share balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of Sonia Gandhi.

  Star TV: It is run by an Australian, Robert Murdoch, who is supported by St. Peters Pontificial Church Melbourne.

  Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration with Times Group.

  The Hindu: English daily, started over 125 years has been recently taken over by Joshua Society, Berne, Switzerland. N.Ram's wife is a Swiss national.

  Indian Express: Divided into two groups. The Indian Express and new Indian Express (southern edition) .ACTS Christian Ministries have major stake in the Indian Express and latter is still with the Indian counterpart.

  Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao. Ramoji Rao is connected with film industry and owns a huge studio in Andhra Pradesh.

  Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a
  Congress Minister has purchased this Telugu daily very recently.

  The Statesman: It is controlled by Communist Party of India. Kairali TV: It
  is controlled by Communist party of India (Marxist)

  Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have major investment.

  Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company with its chief Editor M.J. Akbar.

  The ownership explains the control of media in India by foreigners. The result is obvious.

  one suggestion:Pls remove word verification.it makes commenting a tedious process.

  பதிலளிநீக்கு
 20. my previous comments were not published....
  why?
  is there anything wrong i mentioned?

  பதிலளிநீக்கு
 21. ரஜின் அவர்களே!
  மிகவும் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது மிகச்சரி. இஸ்லாமிய பயங்கரவாதம் என்று இங்கே பெரும்பான்மை ஊடகங்கள் தவறாக எடுத்துரைக்கின்றன. நிச்சயமாக அது குழந்தைகளின் மனதில் இஸ்லாமிய சமயத்தைப் பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.சிறுவயதில் எனக்கே கூட இஸ்லாம் மீது வெறுப்பு இருந்தது. ஆனால் எனக்குள் இஸ்லாமிய சமயம் பற்றிய நற்சிந்தனைகளை விதைத்தது, ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் எழுத்துகள் தான். அதற்கு அடுத்தபடியாக உங்களுடைய இந்த பதிவு. நன்றி. ஆனால் என்னுடைய சொந்தக்கருத்து ஒன்றை இங்கே கூறுகிறேன். மதங்கள், இறைவனை அடைத்து வைக்க தங்கத்தினால் செய்யப்பட்ட கூண்டாகும். அதனால் மதங்கள் கூறும் நல்ல கருத்துக்களை மட்டும், மனதில் கொண்டு செயல்படுவோம்.இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாலே, மதம் என்பது மனிதமாக மாறிவிடும். மனிதமே சிறந்த மதமாகும். இந்த இடுகையில் உங்களைப் போன்ற ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரின் மன வேதனையும் இழையோடுகிறது. அதற்கு, என் அனுதாபங்கள். என் வார்த்தைகளில் ஏதேனும் பிழையிருந்தால் மனதிற்கொள்ள வேண்டா.

  நன்றி,
  JS4Animals

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்