செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துத்துவாக்களின் பார்வை...

இந்த பதிவு இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துக்களின்,இல்ல ஹிந்துத்துவாக்களின் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடித்துண்டாக இருக்கும்..என்னை வந்தடைந்த,முஸ்லிம்கள் குறித்த இந்தக் கண்ணோட்டமே மொத்த ஹிந்துத்துவாக்களுக்கும் கற்பிக்கப் படும் பாடமாக இருக்கிறது,எனபது இவரின் வாதத்தில் இருந்து எனக்கு புலப்படுகிறது...
சரி விஷயத்துக்கு வருவோம்..
எனது முந்தைய பதிவில் தமிழ்ஹிந்து தளத்தின் தரம் பற்றி எழுதியிருந்தேன்...இருப்பினும் அவர்களின் கட்டுரைகளை படித்து,இயன்ற அளவு அவர்களின் தளத்திலே பதில்தர முயல்வேன்..அங்கு எனது கருத்துக்கள் பலவேலைகளில் திரிபு செய்யப்பட்டாலும் பதில் தருவேன்,ஏனென்றால் எனது தரப்பு நியாயங்கள,அங்கு வரும் ஒரு ஹிந்து சகோதரனுக்காவது புரியாத என்ற ஆதங்கத்திலே..ஆனால் அதைவிட எதிர்ப்புகளும்,கண்டங்களும் அதிகம் வரும் அவை இந்த ஹிந்துத்துவாக்களின் செயல் என தெரியும்.இருந்தாலும் அவற்றுக்கும் பதில் அளிப்பேன்..
ஆனால்,கடந்தமார்ச் 29 அன்று தமிழ்ஹிந்து தளம் வெளியிட்ட அங்காடித்தெரு பட விமர்சனம் வெளியிட்டது..அதில் எனது ஆதங்கத்தை பின்னூட்டமாக்கி இருந்தேன்..அது மட்டுறுத்தப்பட்டது வேறுவிடயம்..ஆனால் அதற்கு பதில் வந்தது பாருங்கள்..அப்படியே ஹிந்துத்துவ பிம்பம்..
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி நீங்களே பாருங்கள்...
அவரது அந்த கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..
அவரது கேள்விகள் சிவப்பு வண்ண எழுத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
திரு ரஜின் அவகளுக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து எந்தச் சார்பும் இன்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவும். ஹிந்துக்களின் தேசமான இங்கு, ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இங்கு, சிறுபான்மை யினர் என்ற தகுதியில் உங்களுக்கு உள்ள, ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகளை எண்ணிப் பாருங்கள்.
ஐயா இந்தியா ஹிந்துக்களின் தேசம் தான்.ஆனால் தாங்கள் கூறுவதுபோல் ஹிந்துத்துவாக்களின் தேசம் அல்ல.முதலில் ஹிந்து என்பதன் அர்த்ததை புரிந்து கொள்ளுங்கள்..இதெல்லா ஒங்களுக்கு சொல்லித்தரவே மாட்டங்க...ஏன் ஹிந்துக்களின் தேசம் என்கிறேன் என்றால்,இந்திய நிலப்பரப்பு சார்ந்து இந்தியகுடிமகனான,ஒரு முஸ்லிமான நானும் ஹிந்துதான்,அதற்கான விளக்கம் "நானும் ஒரு ஹிந்து" எனும் எனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.படித்துவிட்டு தொடருங்கள்...
அப்படி இருக்கும் போது நீங்கள் மதம் சார்ந்து ஹிந்துக்களின் தேசம் எனச் சொல்வீர்களானால்.உங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்ள முடியும்..என்னய பாத்து நீ இந்தியனே இல்லங்ர...(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)இந்தியா, இங்கு பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரபட்சமின்றி உரிமையானது,,
வெறும் மதம் சார்ந்து இருக்கும் ஒரேகாரணத்துக்காக இந்தியாவே ஹிந்துத்துவாக்களோடதா?..என்னடா பைத்தியக்காரத்தனமா இல்ல..(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தா? சிறுபான்மையாக இருக்கிறவன் என்ன அகதியா வாழனும்கிறீர்களா? ஹிந்துக்களுக்கில்லாத உரிமைகள் எதை இந்திய அரசியல் சட்டம் எங்களுக்கு கொடுத்துவிட்டது?..அதையும் சொல்லிருக்கலாமே?..3.5% இட ஒதுகீடுக்கு நாய் மாதிரி போராடி,அதை அப்படி இப்படி குடுத்துவிட்டால் ...அதை வைத்து என்ன இந்தியாவையே வாரி சுருட்டீரப்போரோமா?
வேறு எந்த நாட்டிலாவது பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரை நடத்துகின்றனரா?
ஐயா.. மத்த நாட்ல உள்ள சிருபான்மையினருக்கும்,இந்தியாவில் உள்ள சிருபான்மையினருக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கீங்களே....
உங்களுக்கு புரியும்படியே சொல்றேன்....மலேசியாவில உள்ள ஹிந்துக்கள் சிருபான்மையினர்...அது ஒரு முஸ்லிம் நாடு..அந்த நாட்ல,உள்ள பூர்வீக குடிகளான மலாய் களுக்கு சிலவற்றில் முன்னுரிமை உண்டு..ஆனால் அங்கு வசிக்கும் குடியேரிகளான இந்திய மக்களுக்கு சிலவற்றில் மலாய்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை வழங்குவதில்லை..அதற்காக அங்கு மக்கள் ஒடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,
மலேசியாவின் பூர்வீக குடிகள் அனைவரும் முஸ்லிம்களும் அல்ல...அங்கு குடியேரிய மக்கள் அனைவரும் ஹிந்துக்களும் அல்ல..இந்திய முஸ்லிம்களும் அங்கு குடியேரிகளாக உள்ளனர்.அவர்களுக்கும்,இதே நிலைதான்,,,
ஆனால் அந்த நாட்டின் நிலையுடன்,இந்திய முஸ்லிம்களின் நிலையை ஒப்பிட முடியாது..இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றும் வந்தேரிகள் அல்ல.முதலில் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்..
சில தலை முறைகளுக்கு முன்னர் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த என்னுடைய மூதாதையர்..இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு,தனது மார்க்கமாக அதை தேர்வு செய்து கொண்டவர்கள்.அவ்வளவுதான்.....
எப்படி இப்பொ பேராசிரியர் பெரியார்தாசன்,அப்துல்லாஹ் ஆனாரோ..அதே மாதிரிதான்..என்னோட மூதாதையர்களான முனியாண்டி,முஹம்மதாக மாறினர்.அவ்ளோதா...என்னை பார்த்து இரண்டாம்தர குடிமகனா இருக்க சொல்ரீங்க...
ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
அடேயப்பா ரெம்ப நல்லவன் மாதிரியே பேசுரீங்களே எப்புடிப்பா?ஐயா நீங்க சொல்லவர்ரது என்ன விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தான...அது கலவரத்த உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஊர்வலமாச்சே,.....அது தா ஹிந்துக்களின் ஊர்வலம் இல்லயே..ஹிந்துத்துவாக்களின் வெறிவலம் ஆச்சே...
எனக்கு தெரிஞ்சு 1980களுக்கு பிறகுதான தமிழ்நாட்ல விநாயகசதூர்த்தி ஊர்வலங்கள் நடக்குது..அது 1991க்கு அப்பரம் ரொம்ப தீவிரமா வன்முறை கட்டவிழ்த்து விட ஏதுவானமுறையில் நடத்தப்படுகிறது....
முஸ்லிம்களின் ஊர்வலத்துல எதும் காலித்தனம் பன்றதில்லயேப்பா?ம்ம்..ஊர்வலம் போரவர்கள்,மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் சென்றால் யார் என்ன சொல்லப் போகிறோம்.அப்படி தொல்லை நேரும்போது என்னன்னு கேக்காம "சகிப்புத்தன்மையோட" இரண்டாம் தர குடிமகனா இருக்க சொல்ரீங்களா...
சகிப்புத்தன்மை என்பது என்ன?ம்ம்.சகிக்கமுடியாத ஒன்று நிகழும் போது சகித்து பொருத்துக் கொள்வதே சகிப்புத்தன்மை.அப்போ அங்க சகிக்கமுடியாம எதும் நடந்தாலும் கண்டுக்காது சும்மா இருக்க சொல்ரீங்களா?
அமைதியான முறைல நடந்தா யார் என்ன சொல்ல போரான்....
ஹிந்துக்களை பெரிதும் மதிக்கிறோம்.ஹிந்துத்துவாக்களை அல்ல...ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச்சொல்லும் பழக்கமே எங்களுக்கு உண்டு,....
ஜமாத் என்று நீங்களாக ஒன்று கூடிக்கொண்டு போட்டி ராஜாங்கமே நடத்துகிறீர்கள். சிவில் சட்டத்திற்கு ஷரியாவை வற்புறுத்திக் கடைப்பிடிக்கும் நீங்கள், அதன் கிரிமினல் பிரிவை மட்டும் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் இஸ்லாமியர் எனவே கிரிமினல் குற்றங்களுக்கு ஷரியாவின் படியே எங்களை நடத்துங்கள் என்று ஏன் கோருவதில்லை?
இந்த ஜமாத்'கள பத்தி எனக்கு சொல்லிதராதீங்க.அதுல உள்ள உள்குத்து எல்ல உங்களுக்கு தெரியாது..எனக்குதா தெரியும்.அப்டியே ஒன்னா இருந்துட்டாலும்...
ஐயா அறிவாளி...எந்த முஸ்லிம்'ங்க கிரிமினல் சட்டத்துக்கு ஷரியா சட்டம் வேணான்னு சொல்லுவான்..அதுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் சிவப்பு கம்பலம் இட்டல்லவா வரவேற்ப்போம்..அது ஏன் இந்தியாவுல கடைப்பிடிக்கிரதில்லன்னு சொல்ரேன்..
ஒரு விஷயத்த தெளிவா புரிஞ்சுக்கனும்...ஷரியத் சட்டம்,அல்லாஹ் உடைய,அல்லாஹ்வை ஏற்ற முஸ்லிம்களுக்கான சட்டம்.மற்றவர்களுக்கல்ல..முஸ்லிம்கள் மீதான ஜகாத் கடமை எப்படி முஸ்லிம்களல்லாதவர்களுக்கு பொருந்தாதோ,அதுபோல சட்டங்களும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொருந்தாது.
இந்திய முஸ்லிம்கள் தங்களது மத சுதந்திர அடிப்படையில்,திருமணம்,சொத்து, விவாகரத்து,உள்ளிட்ட 12க்கும் குறைவான விவகாரங்களிலே...ஷரியத் சட்டங்களை கோருகின்றனர்...மீதம் உள்ள அத்துனைக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையே பின்பற்றுகிறனர்...
சரி...ஏன் இதுமாதிரியான சிவில் சட்டங்களில் மட்டும் ஷரியத்.கிரிமினல் வழக்குகளில் இந்திய சட்டமென கேட்பது சிந்திக்காமல் கேட்கும் கேள்வியானாலும் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி..
முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் சிவில் சம்பந்தமான ஷரியத் சட்டங்கள அனைத்திலும் முஸ்லிம்களே அங்கம் வகிப்பார்கள்..அதாவது வாதியும் முஸ்லிமாக இருப்பான்,பிரதிவாதியும் முஸ்லிமாக இருப்பான்.அப்படி இருக்க அது இங்கே எந்த வித குழப்பத்துக்கும் இடம் இன்றி இருவரும் ஏற்றுக் கொள்ளும் முகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.உதாரணமாக திருமணமோ,அல்லது தலாக் இது போன்றவை....
சரி கிரிமினல் வழக்கு என்றல்ல,இன்னபிற வியாபாரம் போன்ற சிவில் சட்டம் தொடர்பான விடயங்களில் கூட இந்திய முஸ்லிம்கள் ஷரியத்'ஐ பின்பற்றமுடியாது....ஏனென்னில் மேற்சொன்ன சில சிவில் சட்டங்கள்(திருமணம்,சொத்து போன்றவை) போக..இன்னபிற அனைத்திலும்,எனது ஹிந்து சகோதரனும் பிரதிவாதியா இருப்பான்,கிருத்தவனும் இருப்பான்...
இப்போது,ஒருவன் கொலை செய்தால்,ஷ்ரீயத் சட்டப்படி தலை போய்விடும்..சரி ஒரு முஸ்லிம் செய்தால் தலை எடுத்துவிடலாம் .கேட்க முடியாது..அதுவே ஒரு முஸ்லிமை ஹிந்து கொன்று இருந்தால் அப்போ பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக இருக்க அவனுக்கு ஷரியத் சட்டத்தின் படி தீர்ப்பு சொல்வதானால் ஹிந்துவின் தலை இருக்காது..முஸ்லிம் திருடினால் கை இருக்காது..முஸ்லிமின் வீட்டில் திருடினால் ஹிந்துவின் கையும் இருக்காது..ஈவ்டீஸிங் பண்ணூனால்லா தாருமாரா தண்டனை இருக்கும் பரவா இல்லயா?
முஸ்லிம்களுக்கு ஓக்கெ.ஏன்னா இந்த மேட்டர்ல..பொதுவா இல்லனாலும் குறிப்பா முஸ்லிம்கள் மேல கை வெக்க மாட்டாங்கள்ல இந்த ஹிந்துதுவாவாதிகள்..
ஷரியத் சட்டத்துனால அதிகம் பாதுகாப்பு அடைவது முஸ்லிம்களானாலும்..பொதுவாக குற்றங்கள் குறைந்து எல்லாருமே நிம்மதியா இருப்போம்.நாளை குற்றங்களுக்கான தண்டனைகளை பார்த்துவிட்டு,ஹிந்துக்களும் வரவேற்கலாம்...
இப்பொ சொல்லுங்க ஷரியத் சட்டத்தை கிரிமினல் வழக்குகளிலும் கேட்கனுமா?கேட்கிறோம்...
அது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று...
கப்பித்தனமா கேள்வி கேக்க கூடாது,,,சரியா?
அன்பு கூர்ந்து குரானை முழுமையாகப் படியுங்கள். உங்கள் மனச்சாட்சியை சுத்ந்திரமாகப் பேச விடுங்கள். குரானில் வரிக்கு வரி உங்கள் மனச் சாட்சிக்கு உடன்பாடானதாகத்தான் உள்ளதா, காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற சமயங்கள், கலாசாரங்கள் மீது துவேஷத்தினை வளர்ப்பவையாகவும் சில உள்ளனவா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் உரிமையை உங்கள் மனச் சாட்சியிடம் விடுங்கள். அதன் பின் உங்கள் மீது மற்றவர்கள் கண்ணோட்டம் அமைவதன் நியாய அநியாங்களை மதிப்பீடு செய்யுங்கள்.
நான் குர் ஆன்'அ படித்திருக்கேன்.ஐயா நீங்க முதல்ல குரான பாத்து இருக்கீங்களா?என்னமோ படிச்சு முடிச்சமாதிரி பாடம்லா எடுக்குரீரே...ம்ம்..யாரோ ஏதோ சொன்னத வச்சுகிட்டு வந்து இங்க ஜல்லிஅடிக்க கூடாது.
காலத்திற்கு ஒவ்வாமையா இன்னக்கி உலகம் முழுவதும் 120கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.காலத்திற்கு ஒவ்வாததாக இருந்திருந்தால் அதன் வளர்ச்சி சரிந்து,காலப்போக்கில் அழிந்தல்லவா போய் இருக்கும்.
பிற சமய கலாச்சாரங்களை பழிப்பதாக குரானில் எங்கு எந்த வாசகம் இருக்கிறது?தயவு செய்து குறிப்பு தாருங்களேன்.அதுக்கும் பதில் சொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் அனுசரிக்கும் மதம்தான் அரேபியாவிலிருந்து வந்தது, உங்க்ள் கலாசாரம் இங்குள்ளதுதான். ஆனால் அதை மறப்பதும் மறுப்பதும் ஏன் என்று யோசியுங்கள். சில இஸ்லாமியர் இதனை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும்போது அவர்களை என்ன பாடு படுத்துகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
ஐயா இஸ்லாம் அரேபியாவில் இருந்து வந்ததல்ல..அது அரேபியாவில் புதுப்பொலிவு பெற்றது..அவ்வளவே.நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் அல்ல.அது இஸ்லாமிய கலாச்சாரம்.இஸ்லாம் ஆன்மீகம்,வாழ்வியல் என இரு தனிப்பாதைகளை கொண்டதல்ல..அது வாழ்வியலுடன் ஆன்மீகத்தை பிணைக்கிறது.இரண்டையும் பிரிக்கவியலாது இரண்டரக்கலந்த ஒன்றுதான் இஸ்லாம்.
சரி இந்திய கலாச்சாரம் என எதை சொல்கிறீர்கள் ஐயா? சிந்து சமவெளி கலாச்சாரத்தையா?ம்ஹும்...அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை.இந்திய பாரம்பரிய உடைகளை அணிகிறோம்.இந்திய பாரம்பரிய உணவுகளை உண்ணுகிறோம்..இந்திய மொழி பேசுகிறோம்..இந்தியராகவே வாழ்கிறோம்.வெரென்ன பண்ணனும்.இதுல எங்க இந்திய கலாச்சாரத்த விட்டுட்டோம்?..
எங்களது மார்க்கம் சில வரைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.அதை இந்திய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு.அதன் முழு அனுமதியுடன் செய்கிறோம்..இதனால் யாருக்கு என்ன பாதிப்பு..?
தாங்கள் குறிப்பிடும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்??களான சல்மான் ருஷ்டி'யும் தஸ்லிமா நஸ்ரினும் தானே?...அவங்கல்லா,ஹிந்து மதத்துல உள்ள குருக்கள் தேவனாதன்,மற்றும் நித்தியை போன்றவர்கள்.அவர்களுக்கு ஹிந்துமக்கள்(ஹிந்துதுவாக்கள் அல்ல.) மத்தியில் இப்போது என்ன அந்தஸ்து இருக்கிறதோ.அதுதான் ருஷ்டிகளுக்கும் இஸ்லாத்தில்....அவ்வளவே...
சிறிதளவாவது சகிப்புத்த்ன்மையுடன் இருக்க நீங்கள் பழகினால் போதும். மேல் விஷாரம் (வேலூர் அருகில் உள்ளது) போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு ஹிந்துக் களின் நிலை என்னவென்பதை நேரில் கண்டறியுங்கள்.
ம்ம்.எவ்வளவுங்க...சகிப்புத்தன்மை வேணும் எங்களுக்கு...குஜராத்'ல,கர்ப்பிணிகளை கற்பழித்து,வயிற்று சிசுவை கிழித்தெடுத்து,தரையில் அடித்தும்,நெருப்பில் இட்டும் கொன்றவன்,எம் பெண்மக்களையும் ஆண்மக்களையும் பாலகன்களையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியவன்.வயதான முன்னால் எம் பி,இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பல்லாயிரம் பேரின் உறுப்புகளை சிதைத்து சித்ரவதை செய்து எரித்து நரகவேட்டை ஆடியவன்,எல்லா வக்கனையா பேட்டி குடுத்துகிட்டு.துளியும் தண்டனையின்றி வெளியில் சுத்துரானே,..அதையும் பாத்துகிட்டு கையாளாகாம இருக்கோமே.....இதைவிடவும் சகிப்புத்தன்மை வேணுமா உங்களுக்கு?
மேல்விஷாரம் அத பத்தி தெரியாதுங்க...ஆனா இந்தியாவுல நீங்க தேடித்தேடி ஒரு மேல் விஷாரத்த கண்டு புடிச்சு.கதைக்கிறீர்கள்...ஆனா இந்தியாவுல முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்கள் மேல்விஷாரமாத்தான் இருக்கு....
குஜராத்,ஒரிஸா,அஸ்ஸாம்(நெல்லி),மும்பை,கோவை,பாஹல்பூர்(பிஹார்),மீரட்...என இந்தியாவின் வடகோடியில் இருந்து தென் கோடிவரை பெரும்பாலான முஸ்லிம்களை திட்டமிட்டே இரண்டாம்தர குடிகளாக்கி வைத்திருகிறீர்களே....இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..
அன்புகூர்ந்து மீண்டும் த்மிழ்ஹிந்துவில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கடைசியா சொன்னீரே ஒன்னு,...அப்பப்பா?நான் நீங்க கேட்ட கேள்விகெல்லா இவ்வளவு டீடைல்ல பதில் சொல்ல வேண்டி இருக்கு..உங்க தளத்துல சும்மா ஹிந்துத்துவம்னாலே அங்க கருத்து காத்துல பறந்துடும்..இவ்வளவும் சொன்னா.....அனுமதிப்பது சந்தேகமே..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரர்களே..மேலே,நான் சொன்ன செய்திகள் அனைத்தும் எந்த ஒரு ஹிந்துவையும் முன்வைத்து பதில் சொல்லப்படவில்லை...ஹிந்துத்துவ சிந்தனை கொண்டு முஸ்லிம்கள் மீது சீற்றம் கொள்பவர்களை நோக்கியே பதில் தரப்பட்டுள்ளது...
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை..
நன்றி
அன்புடன்
ரஜின்

58 கருத்துகள் :

 1. Stupid Answers. I dont behave as Hindu. I trust all Religions. But Your Answer is very stupidity.

  Regards,
  Murugan

  பதிலளிநீக்கு
 2. நான் ஒரு சாதாரண இந்து.
  மூன்று கேள்விகள்
  இந்தியர்கள் தான் நாங்கள் என்று நீங்கள் சொல்லுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்தியனான நீங்கள் ஏன் சில சட்டங்களை தனியாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று இருக்க வேண்டாமா?

  //அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை//
  பார்ப்பனர்கள் ???? இந்தியர்கள் இல்லை என்று சொல்லும் முயற்சியா?

  //இந்திய பாரம்பரிய உடைகளை அணிகிறோம்.இந்திய பாரம்பரிய உணவுகளை உண்ணுகிறோம்..இந்திய மொழி பேசுகிறோம்.//
  போன தலைமுறை முஸ்லிம்கள் இதை தமிழ்நாட்டில் பெருமளவு பின்பற்றினார்கள்.
  இந்த தலைமுறை பின்பற்றவில்லை என்ற ஒரு சந்தேகம்.
  வீட்டில் பேசுவது உருது, பிரார்த்தனை அராபிய மொழியில், உடை பெண்களுக்கு வெளியில் செல்லும் போது பர்தா, ஆண்கள் உடை குல்லா, மற்றும் நீள பைஜாமா குர்தா ( தமிழ் நாட்டில் இந்த உடை வித்தியாசம் தானே )
  போன தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்குமான மாற்றங்களில் ஒரு கட்டயமாக்கல் இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் சந்தோஷமே கொள்வேன்

  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 3. அன்பு சகோதரர் ரஜின்,
  தமிழ்ஹிந்து தளம் ஹிந்துத்துவாக்களால் நடத்தப்படுகின்ற ஒரு இணையதளம். பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் வண்ணமே அங்கே கட்டுரைகள் வெளியிடப்படும். அத்தகைய கட்டுரைகளுக்கு ஹிந்து ஆன்மீக மரபு அல்லது ஞான மரபு என்று ஏதாவது ஒரு பெயரை ஜெயமோகனிடம் கடன் வாங்கி சூட்டிக் கொள்வர் தமிழ்ஹிந்து தளத்தினர். அந்த தளத்தினில் சென்று அவர்கள் சொல்லுவது பச்சை பொய் என்று நீங்களும் நெல்லை சிராஜ் அவர்களும் பின்னூட்டங்களினூடாக ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது. (ஆஷிக் அஹமத் மிக நீண்ட பின்னூட்டம் போட்டும் அதை அவர்கள் பிரசுரிக்கவில்லை என்பது வேறு விடயம்). தொடரட்டும் தங்கள் எழுத்து பணி.

  /* ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்? */

  எத்தனையோ நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஹிந்து பெருங்குடி மக்கள் உண்மையான பக்திப் பெருக்கோடு நடத்துகின்ற ஊர்வலங்கள் எந்த ஒரு பிரச்சனையோ அல்லது கலவரங்களோ இல்லாமல் பள்ளிவாசலை கடந்து சென்று முடிகின்றன. அவை ஹிந்து மதத்தின் உண்மையான பக்திமான்களால் நடத்தப்படும் ஊர்வலங்களாகும். ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் ஹிந்துத்துவா கும்பல்களினால் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தபடுபவையாகும். அவற்றில் பிரச்சனைகளும் கலவரங்களும் வராமல் இருந்தால் தான் ஆச்சரியமாகும்.

  பதிலளிநீக்கு
 4. வாங்க சகோ முருகன்..என்ன சும்மா ஸ்டுப்பிட் ஆன்ஸர்ன்னு சொல்லிட்டு கெளம்பிடீங்க..எது அப்டி இருக்கு,என்ன பிரச்சனைனு சொன்ன?அது சரியா இருந்தா மாத்திக்குவேன்,இல்லனா விளக்கி சொல்வேன்ல..ம்ம்

  தவறுகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டலாம்.

  நன்றி..

  பதிலளிநீக்கு
 5. இப்ப தெரியுதா நான் ஏன் நாத்திகனா இருக்கேன்னு!

  பதிலளிநீக்கு
 6. வாங்க சகோ விருச்சம்...
  முதல்ல நீங்க ஒரு சாதாரண ஹிந்துவானால்,இது உங்களுக்கு பொருத்தமான கட்டுரை அல்ல.அது ஒரு ஹிந்துதுவவாதியின் உளரல்.அதுக்குதான் அந்த பதில்கள்...

  //அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை//
  பார்ப்பனர்கள் ???? இந்தியர்கள் இல்லை என்று சொல்லும் முயற்சியா?

  இல்ல..பார்ப்பனர்களும் இந்தியர்கள்,மாற்றுக்கருத்து இல்லை.எப்படி இஸ்லாமியர்களுக்கு தனிப்பட்ட சில ஆடைமுறை,பேச்சு,மொழி உள்ளதோ அதே போல் அவர்களுக்கும் சில மாறுபட்ட பழக்கம் உண்டு.அதை மற்ற ஹிந்துக்கள் செய்வதில்லையே.அப்போ அது அவர்களின் கலாச்சாரம் தானே..எல்லா ஹிந்துக்களும் மடிசார் கட்டலையே..

  இன்னும் ஹிந்து இந்தியர்கள் மத்தியிலேயெ பல்வேறுபட்ட ஆடை முறைகளும் உணவுமுறைகளும்,மொழிவேறுபாடும் கடவுள் வேற்பாடு என பல வேற்றுமைகள் உண்டு.
  ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஒரேமாதிரி மொழி,வழி,உணவு,பழக்கம்,கடவுள்,என கொண்டிருக்க வேண்டும் என சொல்ல முடியாது.

  //வீட்டில் பேசுவது உருது, பிரார்த்தனை அராபிய மொழியில், உடை பெண்களுக்கு வெளியில் செல்லும் போது பர்தா, ஆண்கள் உடை குல்லா, மற்றும் நீள பைஜாமா குர்தா ( தமிழ் நாட்டில் இந்த உடை வித்தியாசம் தானே )//

  இந்தியனாக இருந்தால்,எப்படி இருக்கவேனும் சொல்லுங்கலேன்..முன்னர் சொன்னது போலவே பிராமணர்களின்,மேலாடை இல்லாத ஆண்களின் ஆடை,மடிசார் எனும் பெண்களின் ஆடை,குடும்பி,சமஸ்கிருதம்,பிராமண பேச்சு முறை,என அனைத்தும் அவர்களையும்தான் தனித்து காட்டுகிறது.ஏன் சீக்கியனுக்கும் இது போல சில பழக்கங்கள் உண்டு,பஞ்சாபிக்கும் சில நடைமுறை உண்டு.அஸ்ஸாம் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் நடைமுறைவேறு..இப்படி இருக்க எந்த முறை இந்தியாவிற்கு உரியது அதில் எதை நாங்கள் பின்பற்றனும் சொல்லுங்கள...

  சகோதரரே..உருது ஒன்றும் இஸ்லாமிய மொழி அல்ல.எனக்கு சுத்தமா உருது தெரியாது,தமிழ் மட்டும்தா தெரியும்.நானும் முஸ்லிம்தான். அரபி,வணக்கவழிபாடுகளில் பயன்படுத்தப்படுவதற்கு காரணம்,வணக்கத்தை உலகெங்கிலும் பொதுமைபடுத்தும் பொருட்டே தவிர.வேரில்லை..
  உருது என்பது இந்தியாவில் தோன்றிய மொழியே.அது பாரசீகமும் ஹிந்தியும் கலந்து உருவானது.அதுவும் ஒரு இந்திய மொழியே.இது வேரெந்த நாட்டின் மொழியல்ல..

  எல்லாத்துக்கும் மேலாக,இந்தியாவை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது.அது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு,இந்தியர்களான நமது சிறப்பு..

  நன்றி...
  ---------------------------------------------
  வாங்க சகோ ஷேக்..
  நன்றி..இன்ஷா அல்லாஹ்,இன்னும் சிறப்பாக எழுத துஆ செய்யுங்கள்.
  உண்மைதான்.கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள்,அவர்களின் பக்தியை காட்டுமே தவிர வெறியை காட்டது,இவர்கள் கூரும் ஊர்வலங்கள்.வேறுவிதம்..

  நன்றி....

  பதிலளிநீக்கு
 7. நீங்க சொல்லி இருக்க ஒவ்வொரு விஷயத்துக்கும் கிழி கிழி என பதில் உரைக்க முடியும். சாதாரண இந்து, சொறி பிடித்த இந்து என்று எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு சமயத்தைச் சார்ந்தவர், இன்னொரு சமயத்தை ஒப்பிட்டு நாங்க தான் பெட்டர்னு சொல்றது ரொம்ப சின்னப் புள்ளத் தனமா இருக்கு. நாங்க அப்படி அல்ல என்பதை மட்டும் சொல்வதை விடுத்து அடுத்தவர் மூக்கை சொறியும் வேலையை முதலில் கைவிடுங்கள். அதை விடுத்து சும்மா இருக்கவங்கள எதுக்கு உசுப்பி விடுறீங்க....!

  முஹம்மதுவாக மாறிய முனியாண்டிக்கு, இஸ்லாம் என்கின்ற போர்வையில் 3.5% இட ஒதுக்கீடு எதற்கு ? மத அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வது ஓட்டுப் பொறுக்கிகளின் வேலை(மன்னிச்சிடுங்க..மரியாதை கொடுக்க மனசு வரல). அதில் விழுந்து உணர்ச்சிவசப் படாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. வாங்க சகோ வால்பையன்,உங்க தளம் வந்துருக்கென்..படிச்சுருகேன்.ம்ம்.நாத்தீகனா இருந்தா இந்த கேள்விகள்,அவமதிப்பு இல்லங்ரீங்க..சரிதா..நாத்தீகம் பற்றி பின்னர் விவாதிப்போம்...

  நன்றி
  .............
  வாங்க கபிலன்
  உங்கள தமிழ்ஹிந்து தளத்துல சந்திச்சதா நியாபகம்..ஏ இவ்ளோ கொவப்படுரீங்க..ம்ம்.இங்க,நா என்ன சொல்லிட்டேன்..ஹிந்துத்துவவாதியின் கேள்விக்கு எனது தரப்பு பதிலை தான சொன்னேன்.நாந்தா ஒசத்தின்னு எங்க சார் சொன்னே.ம்ம்.அடுத்தவங்க மூக்க சொறிய வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.என் முக்க சொறிபவர்களை,அப்படி செய்யவேண்டாம் என்கிறேன்.அவ்ளோதா,

  கிழி கிழின்னு பதில் சொல்ரதா இருந்தா சொல்லிருக்கலாமெ..சொல்லுங்க விவாதிப்போம்.ம்ம்

  இட ஒதுக்கீடு பிரச்சன வந்ததுக்கு காரணமே.வரணாசிரமம்'னு நெனைக்கிறேன்.உங்க பக்கம் தா ஒசத்தி,தாழ்வு எல்லா இருக்கு சார்,அத பாருங்க.நாங்க யாரையும் அப்டி நெனைக்கிறதும் இல்ல.நடத்துனதும் இல்ல.நடத்துரதும் இல்ல...

  இடஒதுக்கீடு,ஓட்டுபொறுக்கும் அரசியல் பணனாயகம்,இது பத்தி தனிப்பதிவு விரைவில்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
 9. "உங்கள தமிழ்ஹிந்து தளத்துல சந்திச்சதா நியாபகம்.."

  ஹி ஹி....Brandingஆ..சும்மா கிலுகிலுப்பை காட்டாதீங்க...நீங்க எதுல வேணும்னாலும் பார்த்துக்கோங்க....அந்த தளத்தில் நான் கமெண்ட் பண்ணதே இல்லை...

  "ஆனால் அந்த நாட்டின் நிலையுடன்,இந்திய முஸ்லிம்களின் நிலையை ஒப்பிட முடியாது..இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றும் வந்தேரிகள் அல்ல.முதலில் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்..என்ன புரியுதா? வந்தேரிகள் அல்ல,..."
  நீங்க ஏன் சார் மலேஷியாவை மட்டும் எடுத்துக்குறீங்க...பாகிஸ்தானை ஏன் எடுக்கலை ?
  அதுவுமில்லாமல், மலேஷியாவில் இந்துக்கள் கேட்பது இட ஒதுக்கீடு அல்ல, ஸ்பெஷல் உரிமை அல்ல, சம உரிமை. மலாய் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு பல பணியிடங்களில் அனுமதியே கிடையாது என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இங்கு அப்படி அல்ல. இஸ்லாமியர்களுக்கு ஸ்பெஷல் உரிமைகள் கேட்கப் படுவது தான் பிரச்சினை. சைக்கிள் பந்தயத்தில் எனக்கு மட்டும் ஸ்கூட்டரில் வர அனுமதி வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
  "சில தலை முறைகளுக்கு முன்னர் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த என்னுடைய மூதாதையர்..இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு,தனது மார்க்கமாக அதை தேர்வு செய்து கொண்டவர்கள்.அவ்ளோதா....."
  அவரவர் சொந்த விருப்பம். எந்த சமயத்தை வேண்டுமானால் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
  சரி. கபிலன் என்கின்ற என் பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டால் எனக்கு 3.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் சொல்வது வடிவேலு ஸ்டைல்ல நன்னாரித்தனமா இருக்கே....இதைப் பற்றி ஏன் கேட்க மாட்றீங்க... : )
  "ஐயா நீங்க சொல்லவர்ரது என்ன விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தான...அது கலவரத்த உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஊர்வலமாச்சே,....."
  விநாயகரை தூக்கிட்டுப் போய் குலத்துல போடட்டும், ரோட்டுல போடட்டும் கடல்ல போடட்டும். உங்களுக்கு என்ன ? அதுக்கு ஏன் இந்த வழியா போகக்கூடாது, அந்த வழியாப் போகக் கூடாது, சத்தம் போடாம போகணும் அப்படின்னு ஏன் சொல்ல்ணும் ? இது தான் சகிப்புத் தன்மையா ?
  ஹஹா...விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கலவரத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட ஊர்வலமாக உங்களுக்கு தெரியுது. கொஞ்சம் வரலாற்றை ஒரு ரிவைஸ் பண்ணிட்டு வாங்க. வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை ஒன்று திரட்ட வேண்டும். எந்த வழியில் மிக சுலபமாக ஒன்று திரட்டலாம் என்று எண்ணி சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் உருவாக்கியது தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். உங்களுக்கு கலவர ஊர்வலமாக தெரிகிறது போலும்.

  "மேல்விஷாரம் அத பத்தி தெரியாதுங்க...ஆனா இந்தியாவுல நீங்க தேடித்தேடி ஒரு மேல் விஷாரத்த கண்டு புடிச்சு.கதைக்கிறீர்கள்...ஆனா இந்தியாவுல முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்கள் மேல்விஷாரமாத்தான் இருக்கு...."
  வேலூர்க்காரன் என்பதால் அந்த நிலை நமக்கு நன்றாக தெரியும். உங்கள் வீட்டி இட்லி பொடி தீர்ந்துவிட்டால் கூட குஜராத் தான் காரணம் என்று சொல்கிற மனப்பாங்கு எப்ப போகுமோ தெரியல...
  "இட ஒதுக்கீடு பிரச்சன வந்ததுக்கு காரணமே.வரணாசிரமம்'னு நெனைக்கிறேன்."
  அதான் முனியாண்டி அப்துல்லாவா மாறியாச்சே. வர்ணாசிரமம் போயிடுச்சே. அப்புறம் அப்துல்லாவுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ?

  "சகோதரர்களே..மேலே,நான் சொன்ன செய்திகள் அனைத்தும் எந்த ஒரு ஹிந்துவையும் முன்வைத்து பதில் சொல்லப்படவில்லை...ஹிந்துத்துவ சிந்தனை கொண்டு முஸ்லிம்கள் மீது சீற்றம் கொள்பவர்களை நோக்கியே பதில் தரப்பட்டுள்ளது..."
  ஹிந்துத்வா என்றால் என்ன என்பதை விஎச்பியோ, பிஜேபியோ இது வரை சொல்ல வில்லை. இந்துத்வா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லலாம். அதென்ன இந்துத்வ சிந்தனைன்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் தெளிவா இருக்கும்ங்க... இந்து எப்படி பார்ப்பான்...இந்துத்வாக்காரன் எப்படி பார்ப்பான்னு சொல்லுங்க...நான் எதுல வரேன்னு தெரிஞ்சிக்கத்தான் : )

  பதிலளிநீக்கு
 10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு
 11. நண்பர் கபிலன் அவர்கள் இஸ்லாமியர் பற்றி எந்த செய்தியானாலும் அவர்களை கடித்து துப்புவதில் முன்னணியில் இருப்பவர்.ஆனால் தான் ஒரு இந்து முன்னணிக்ாரன் அல்ல என்று சொல்லி தன்னுடைய அடையாளத்தை மறைத்து விடுவார்.எல்லா தளத்திலும் இவருடைய இஸ்லாமிய எதிர்ப்பை காணலாம்.அதனால் இவரை அவாளோடே சேர்த்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 12. உங்களது தனி சட்டம் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை.

  பிராமணர்கள், இந்துக்கள் உடையை நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் ஏதாவது இந்தியர் அல்லாதவர் உடுத்தும் உடை என்று சொல்லி விட முடியுமா?
  உங்களுக்கு உருது தெரியாமல் இருக்கலாம். உங்களை மட்டும் வைத்து சொல்லாதீர்கள். உருது இந்திய மொழியென்று எனக்கும் தெரியும். அனைத்து இந்திய முஸ்லிமும் ஒரே மொழி பேசும் முயற்சியாக இன்று அதை ஒரு கட்டயமாக்கல் ஆகி வருவதை நான் காண்கிறேன். இந்தியர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த மாநில மொழியை தாய் மொழியாக பேசுகிறார்கள். இந்தி தேசிய மொழியாக (தமிழ் நாடு தவிர) ஏற்கப்பட்டுள்ளது .

  இந்தியாவை தாய் என்று ஏற்று வணக்கம் தெரிவிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு உங்கள் மதம் அனுமதிக்கவில்லை என்று தனி சட்டம்.
  குஜராத் கலவரம் எங்களுக்கும் வேதனை தரும் விஷயம் தான். அதை சொல்லியே மற்றதை மறைக்க முயலுதல் என்ன ஞாயம்?

  உலகளாவிய தீவிரவாத செயல்களை மதத்தின் பெயரால் செய்யும் சில இயக்கங்களோடு இந்துத்வா என்ற ஒன்றை சொல்லி ஒப்பிட்டு கொண்டிருப்பது என்ன ஞாயம்? அவர்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? யார் ஆரம்பித்தது?
  எந்த தீவேரவாதமும் நியமாகாது. ஆனால் ஒன்றை நியாயப் படுத்த மறைக்க இன்னொன்றை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது

  மதத்தின் பெயரால் உலகம் மொத்தத்தையும் கலங்க அடிக்கும் ஒரு மதத்தை சார்ந்து இருக்கும் நீங்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு உதவ என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் மதக் காரணங்கள் சொல்லி தனி சட்டம் தனி ஒதுக்கீடு தனி மொழி, தனி உடை என்று இருந்தால் எங்கோ இடறுவது போல் இல்லை?
  முஸ்லிம் தீவிரவாத நிகழ்வுகள் இந்தியாவில் எங்கு ஏற்பட்டாலும் ஒரு கண்ட ஊர்வலம் ஒரு மத நல்லிணக்க முயற்சி ஏதாவது செய்ய வேண்டாமா?
  எங்கோ இருக்கும் சதாம் உசேனுக்கு இங்கே ஆர்ப்பாட்டம் நிகழ்த்த முடிகிறதே

  யாரையும் திருப்தி செய்ய முயற்சி செய்ய வேண்டாம். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் எத்தனை வேறுபாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.


  உங்கள் இடுகைகள் இந்து தீவிர வாதம் என்ற ஒன்றை குறி வைப்பதான போர்வையில் ஒரு சாதாரண இந்துவை நோக்கியே வைக்கப் படுகிறது
  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 13. ஐயா,
  விவரமான பதிவு. கலைஞர் மாதிரி கேள்வியும் நானே பதிலும் நானே என்று எழுதுங்கள். ஒரு தொடர்ச்சி வரும்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் பதில்கள் தெளிவாக இருந்தன. குறிப்பாக கிரிமினல் பிரச்சினைகளில் எப்படி ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்பது குறித்து.

  நண்பர் கபிலனுக்கு..

  /. வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை ஒன்று திரட்ட வேண்டும். எந்த வழியில் மிக சுலபமாக ஒன்று திரட்டலாம் என்று எண்ணி சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் உருவாக்கியது தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்/

  சூப்பர் சார். இப்படியே சிந்திச்சீங்கன்னா சாக்ரடீஸ் ஆயிடுவீங்க. வல்லபாய் படேலுக்கும் திலகருக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் எல்லாம் அரசியல் விவாதம் செய்கிறீர்கள். காலக்கொடுமை! வெள்ளைக்காரனை எதிர்க்க ஏன் வினாயகர் ஊர்வலத்தை நடத்தணும், திலகர் அதை ஏன் தேர்ந்தெடுத்தாருங்கிறதாவது தெரியுமா, மிஸ்டர் நன்னாரித்தன கபிலன்?

  பதிலளிநீக்கு
 15. வாங்க சகோ முருகேசன்:
  வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.கேள்வி நானல்ல.கேள்வி பிறருடையது.பதிலே என்னுடையது..
  நன்றி.
  ----------------
  வாங்க சுகுணா திவாகர்
  நன்றி..
  இந்த சதூர்த்தி ஊர்வலம் திலகரோடதா.இந்த கபிலன் ஜல்லிஅடிக்கிறாரோ..எனக்கு தெரியாததால எதுவேணாலும் சொல்லலாம்னு நெனச்சுட்டார் போல மனுஷன்..தகவலுக்கும் நன்றி..
  தொடர்ந்து வாங்க..எனது பதிவில் உள்ள குறைகளை தயங்காது சுட்டி காட்டுங்கள்..கர்வமின்றி திருத்திக் கொள்வேன்
  நன்றி...

  பதிலளிநீக்கு
 16. வாங்க சகோ பராரி..
  கபிலன் பத்தி சொன்னீங்க.சரி முடிஞ்ச வரைக்கும்,அவர் கேக்குர கேள்விக்கு பதில் சொல்லலாம்.அவர் நாகரீகமானவர்னு நெனைக்கிறேன்...பாக்கலாம்

  நன்றி..

  பதிலளிநீக்கு
 17. சுகுணா திவாகர் சொன்னது போல், அது படேல் அல்ல திலகர் தான் ! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ! எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மட்டும் தான் அரசியல் விவாதம் நடத்தணும்னா, நாட்டுல 4 பேர் கூட விவாதம் பண்ண இருக்க மாட்டாங்க திவாகர்.

  ஹாஹா....ரஜின். நீங்க தான் விவாதத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டீங்க......சரின்னு ஸ்டார்ட் பண்ணேன். ஓகே....இப்போ என்னான்னா...நாகரிகமானவர் அது இதுன்னு தனி மனித தாக்குதல்கள். ஓபன் விவாதங்களுக்கு உங்கள் தளம் சரியானதல்ல என்பது இதைப் படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. "Barari said..
  நண்பர் கபிலன் அவர்கள் இஸ்லாமியர் பற்றி எந்த செய்தியானாலும் அவர்களை கடித்து துப்புவதில் முன்னணியில் இருப்பவர்.ஆனால் தான் ஒரு இந்து முன்னணிக்ாரன் அல்ல என்று சொல்லி தன்னுடைய அடையாளத்தை மறைத்து விடுவார்.எல்லா தளத்திலும் இவருடைய இஸ்லாமிய எதிர்ப்பை காணலாம்.அதனால் இவரை அவாளோடே சேர்த்து கொள்ளலாம். "

  பராரி அண்ணே....
  கொஞ்சம் தப்பா சொல்லி இருக்கீங்க. இந்துக்களைப் பற்றி தவறாக சித்தரிக்கும் Pseudo-Secular பதிவுகளில் என்னுடைய கமெண்ட்ஸ் இருக்கும். இஸ்லாமியரை தாக்கியோ, இஸ்லாமை தாக்கியோ என்னுடைய கமெண்ட்ஸ் இருக்காது. ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்காதுங்கண்ணே....ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஒபினியன்...

  இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். விஎச்பி பஜ்ரங்க் தள் போன்ற எந்த அமைப்போடு தொடர்பு படுத்தி பேசினாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை.

  கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலே சொல்ல மாட்றீங்க...அது ஏன்னு புரியல?

  பதிலளிநீக்கு
 19. சகோ கபிலன்..நாம பேசலாம்..என்னால பதில் பதிய முடியல ப்ளாக்கர்'ல எதோ பிரச்சனை..

  பதிலளிநீக்கு
 20. சகோ விருச்சம் அவர்களுக்கு,

  //உங்அளது தனி சட்டம் மற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே//

  அதா சொன்னேனே...
  இந்திய முஸ்லிம்கள் தங்களது மத சுதந்திர அடிப்படையில்,திருமணம்,சொத்து, விவாகரத்து,உள்ளிட்ட 12க்கும் குறைவான விவகாரங்களிலே...ஷரியத் சட்டங்களை கோருகின்றனர்...மீதம் உள்ள அத்துனைக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையே பின்பற்றுகிறனர்...

  இது தவிர வேரெதும் இருக்கான்னு தெரியல,,

  //பிராமணர்கள், இந்துக்கள் உடையை நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் ஏதாவது இந்தியர் அல்லாதவர் உடுத்தும் உடை என்று சொல்லி விட முடியுமா?//

  ஏன் எனக்கு தெரிந்து மலேசிய ஹிந்துக்கள்,இந்திய கலாச்சார ஆடைதான் அணிகிறார்கள்.முஸ்லிம்கள் அனைவரும் உலக அளவில் ஒரேமதிரியான ஆடை அணிவதில்லை.பர்தா வேண்டுமென்றால் சொல்லலாம்.அதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.பர்தா என்னும் கருப்பு அங்கி இஸ்லாமிய உடை அல்ல.இஸ்லாம் ஆடை குறித்து சில வரைமுறைகளை தருகிறது,அதை பூர்த்திசெய்யும் எந்த ஆடையும் பர்தாவே.இந்த வரையரையை சேலை பூர்த்தி செய்தால்,நிச்சயம் அந்த கருப்பு அங்கி தேவையே இல்லை.பர்தா என்பது திரை என பொருள் படும்.அதாவது உடலை மறைக்கும் திரை.

  பதிலளிநீக்கு
 21. //உங்களுக்கு உருது தெரியாமல் இருக்கலாம். உங்களை மட்டும் வைத்து சொல்லாதீர்கள். உருது இந்திய மொழியென்று எனக்கும் தெரியும். அனைத்து இந்திய முஸ்லிமும் ஒரே மொழி பேசும் முயற்சியாக இன்று அதை ஒரு கட்டயமாக்கல் ஆகி வருவதை நான் காண்கிறேன்.//

  ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.இஸ்லாத்தில்,ஆடைமுறை,உணவு,நிறம்,மொழி,என இவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் உருது பேசவேண்டுமா?அதை சொல்ல,முதலில்,முஸ்லிம்களுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமை இந்தியாவில் எங்கு உள்ளது.அதுவே இல்லை.அப்படி ஒன்று இருந்தால் அது சுத்த பைத்தியகாரத்தனம்.இன்னும் சொல்லனும்னா.இது மதவாத அடக்குமுறை.இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.அப்படி சொல்வார்களேயானால் முதலில் அதை எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களே..

  // இந்தியர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த மாநில மொழியை தாய் மொழியாக பேசுகிறார்கள். இந்தி தேசிய மொழியாக (தமிழ் நாடு தவிர) ஏற்கப்பட்டுள்ளது//

  அப்படி இல்லங்க..இந்தியாவ்ல மொத்தம் 28மாநிலங்களும்,7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.அப்படி பார்த்தால் மொத்தமாகவே 35 மொழிகள்தான் இருக்கனும் இல்லயா?ஆனால் இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகள் பேசப்படுகிறது.
  ஹிந்தியை இந்தியாவின் தேசியமொழியாக தமிழகமும் ஏற்றுக்கொண்டது.அதை கற்க மறுக்கிறது,அவ்வளவே..

  //இந்தியாவை தாய் என்று ஏற்று வணக்கம் தெரிவிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு உங்கள் மதம் அனுமதிக்கவில்லை என்று தனி சட்டம்.//

  இந்தியாவை தாய் என வணங்குவது,மட்டுமல்ல.இஸ்லாத்தை பொருத்தவரை ஏக இறைவனை தவிர யாரையும் வணங்கக் கூடாது.அது இஸ்லாத்தின் அடிப்படையல்லவா.அதுவல்லாது வந்தே மாதரம் பாடலில் முஸ்லிம்கள் மீதான துவேஷம் அதிகம் உண்டு.அதை கருதியே.இந்திய அரசாங்கமே,ஜன கன மன பாடலை தேசிய கீதம் ஆக்கியது,அதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்.இது ஜனநாயக நாடல்லவா.எனக்கு எனதுரிமை,மதம் குறித்து கேட்க உரிமையுண்டல்லவா..

  குஜராத்.அத ஏன் திரும்ப திரும்ப சொல்ரீங்கன்னு கேக்ரீங்க.அது எங்க மனசுல ஆராத காயத்தை உண்டாக்கி,பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கவைத்துவிட்டதே..
  அதுக்காக குஜராத்த சொல்லி இன்ன பிற தீவிரவாதங்கள ஒருபோதும் நான் நியாயப் படுத்தவில்லை.படுத்தவும் முடியாது,
  ஹிந்துக்கள் செஞ்சா கசக்கும்.முஸ்லிம் செஞ்சா இனிக்குமா என்ன?எல்லாருமே எனது சகோதரர்கள் தான்.கொல்லப்படும் எந்த பெண்ணும்,எனக்கும் தாய்மார்தான்.பாரபட்சம் இல்லை.
  கண்டனமும்,அனைவருக்கும் ஒன்றுதான்..

  பதிலளிநீக்கு
 22. விருச்சம் அவர்களே..

  //மதத்தின் பெயரால் உலகம் மொத்தத்தையும் கலங்க அடிக்கும் ஒரு மதத்தை சார்ந்து இருக்கும் நீங்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு உதவ என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் மதக் காரணங்கள் சொல்லி தனி சட்டம் தனி ஒதுக்கீடு தனி மொழி, தனி உடை என்று இருந்தால் எங்கோ இடறுவது போல் இல்லை?//

  பாத்தீங்களா?தீவிரவாதம்கிரது எல்லா மதத்துலையும் உள்ளதுதான்.அது முஸ்லிம்கள் மத்தியிலும் உள்ளது,மறுக்கமுடியாது.ஆனால் உலகில் ஏதொ சில தீவிரவாதகுழு செய்யும் தவறுக்கு,அந்த மதத்தை குற்றம் சொல்வது தவறு,சகோதரரே.நானும் முஸ்லிம்தான்.இஸ்லாம் தான் தீவிரவாதத்துக்கு காரணம்னா,நானும் அதையே தான செய்யனும்.ஏ எழுதீட்டு இருக்கேன்.அவர்களை நான் ஒருபோதும் நியாய்ப்படுத்தவில்லை.
  தனிச்சட்டம் என்பதுபற்றி மேலே தெளிவாக குறிப்பிட்டுவிட்டேன்.தனி மொழி என்ரெல்லாம் இல்லை.அப்படியானால் அரபிதான எல்லாதையும் பேச சொல்லனும்..அதுவும் இல்லங்க.உடையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.அது இஸ்லாமியர்களுக்கு,உடையில் சில வரைமுறைஇருப்பதால் அதை பின்பற்றியாகவேண்டியுள்ளது.அதனால்தான்.அந்த உடை..இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே..

  //முஸ்லிம் தீவிரவாத நிகழ்வுகள் இந்தியாவில் எங்கு ஏற்பட்டாலும் ஒரு கண்ட ஊர்வலம் ஒரு மத நல்லிணக்க முயற்சி ஏதாவது செய்ய வேண்டாமா?
  எங்கோ இருக்கும் சதாம் உசேனுக்கு இங்கே ஆர்ப்பாட்டம் நிகழ்த்த முடிகிறதே//

  நீங்க சொன்னது 100த்ல ஒரு வார்த்தை.முழுவதுமாக வழிப்படுகிறேன்.முஸ்லிம்களின் போராட்டம்.தீவிரவாதத்தை எதிர்த்தெனில் முதலில்,முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதியால் நடக்கும் தீவிரவாதத்துகே,எதிர்குரல் எழுப்பவேண்டும்.எனது அவாவும் அதுவே.நாங்கள்லா வந்துடோம்லா.விரைவில் கலமிறங்குவோம்.
  இஸ்லாத்தை முன்னிறுத்தி,நடக்கும் தீவிரவாதங்கள்,நான் எழுத ஆரம்பித்ததற்கு அப்புரம்,ஏதும் நடக்கவில்லையா,எனதெரியவில்லை.இனி ஒன்று நடக்கும்போது,அதற்கு ஒரு முஸ்லிமாக பகிரங்க கண்டன குரல் எழுப்பி இன்ஷா அல்லாஹ் நானே ஆரம்பம் செய்கிறேன்.

  //யாரையும் திருப்தி செய்ய முயற்சி செய்ய வேண்டாம். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் எத்தனை வேறுபாட்டை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.//

  சகோதரரே,இது யாரையும் திருப்தி படுத்த அல்ல.இன்னும் சொல்லப்போனால் எனது எழுத்து சில முஸ்லிம்களுக்கு வருத்ததை தரலாம்.ஆனால் என் மனதில்லுள்ளதை அப்படியே பதிக்கிறேன்.அவ்வளவே.

  //உங்கள் இடுகைகள் இந்து தீவிர வாதம் என்ற ஒன்றை குறி வைப்பதான போர்வையில் ஒரு சாதாரண இந்துவை நோக்கியே வைக்கப் படுகிறது//

  இது எனது ஹிந்து சகோதரர்களை நோக்கியே வைக்கப்படுகிறது.உண்மைதான்.எந்த ஹிந்துத்துவவாதியும்,முஸ்லிமின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான்.இங்கே பின்னூட்டம் இடுபவர்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள்,தங்களையும் சேர்த்து.ஆனால் இது தங்களின் மனதை புண்படுத்தாது.ஏனெனில்,உங்களது சிந்தனை நடுநிலையுடையதாய் இருக்கும்.அப்படிப்பட்ட யாரையும் என எழுத்து பாதிக்காது...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 23. சகோ கபிலன் அவர்களே.

  branding'லா இல்லங்க.அவர் நீங்களா வேண்ணா இல்லாம இருக்கலாம்.நீங்க என்ன குழந்தையா கிலுகிலுப்பை காட்றதுக்கு.

  //நீங்க ஏன் சார் மலேஷியாவை மட்டும் எடுத்துக்குறீங்க...பாகிஸ்தானை ஏன் எடுக்கலை ?
  அதுவுமில்லாமல், மலேஷியாவில் இந்துக்கள் கேட்பது இட ஒதுக்கீடு அல்ல, ஸ்பெஷல் உரிமை அல்ல, சம உரிமை. மலாய் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு பல பணியிடங்களில் அனுமதியே கிடையாது என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இங்கு அப்படி அல்ல. //

  ஏன் பாகிஸ்தான நான் உதாரணப்படுத்தவில்லை?ஏன்னா?பாகிஸ்தான் உதாரணப்பொருளாகும் அளவுக்கு இன்னும் சிறக்கவில்லை.அது ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்,குருட்டுத்தனமாக நான் அதுக்கு வக்காலத்தெல்லாம் வாங்க மாட்டேன்.அங்கு ஹிந்துக்கள் நசுக்கப் படுகிறார்களா?ஒத்துக்கிறேன்.தவறுதான்.அது முஸ்லிம்கள் வாழும் நாடு அவ்ளோதானே தவிர.அவர்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி அல்ல.அவர்கள் பல விடயங்களில் தரமற்று இருக்கிறார்கள்.சிறந்ததை உதாரணப் பொருளாக்கவெ நான் விரும்புகிறேன்.நீங்களோ தகுதியற்ற ஒன்றை கொண்டு தீர்ப்பளிக்க சொல்கிரீர்கள்?

  //இஸ்லாமியர்களுக்கு ஸ்பெஷல் உரிமைகள் கேட்கப் படுவது தான் பிரச்சினை. சைக்கிள் பந்தயத்தில் எனக்கு மட்டும் ஸ்கூட்டரில் வர அனுமதி வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.//

  இஸ்லாமியர்கள் என்ன ஸ்பெஷல் உரிமைகளை கேட்டு அது தங்களை பாதித்துவிட்டது?தெரியவில்லை.முன்னர் சொன்னது போலவே 12க்கும் குறைவான மதரீதியான விஷயங்களில் நாங்கள் ஷரீஅத்'ஐ பின்பற்ற உரிமை கோருகிறோம்.அது இந்திய இரையாண்மைக்குட்பட்டது தானே சகோ..

  அதுதவிர சைக்கிள் பந்தையத்துல,எங்கள ஓடவிற்றாதீங்க.சைக்கிளாவது குடுங்கன்னுதா கேக்குறோம்.உங்களது உரிமையை பறித்து,எனக்கு அளிக்க கோரி கேட்கவில்லை.அப்படி ஒரு சமூகம் பாதிப்படைந்து,பலன் பெற விரும்பவில்லை சகோ.என்னா அந்த வலியை உணர்ந்தவர்கள் நாங்கள்.

  //கபிலன் என்கின்ற என் பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டால் எனக்கு 3.5% இட ஒதுக்கீடு கிடைக்கும் சொல்வது வடிவேலு ஸ்டைல்ல நன்னாரித்தனமா இருக்கே....இதைப் பற்றி ஏன் கேட்க மாட்றீங்க//

  இங்க கபிலன் அப்துல்லா வா மாறுனா 3.5% ஆ,என்பதல்ல.கபிலனுக்கு கிடைக்கும் அந்த பயன் அப்துல்லாவும் பெறவேண்டும் எனபதற்கே இடஒதுக்கீடு.

  திலகர்,விநாயகர முன்னிருத்தி ஏங்க ஹிந்துக்கள தனித்து போராட வச்சாரு?ஒன்றுபட்ட இந்தியாவுல எல்லாத்தையும்ல போரட தூண்டி இருக்கனும்.ஆனா அது இன்னாகி நிறம் மாறிடுச்சே..பதட்டமான சூழல உருவாக்ககூடிய ஒரு ஊர்வலமாக்கிடீங்களே.இந்தியாவுல எவ்வளவோ ஹிந்து பண்டிகைகள்,கிராமங்கள்ல,எவ்வளவோ ஊர்வலங்கள் அமைதியாத்தான நடக்குது..எங்களுக்கு,அப்டி ஒன்னும் விநாயகரோட தனிப்பட்ட விரோதம்லா இல்லங்க..

  தொடரும்..

  பதிலளிநீக்கு
 24. //ஏன் பாகிஸ்தான நான் உதாரணப்படுத்தவில்லை?ஏன்னா?பாகிஸ்தான் உதாரணப்பொருளாகும் அளவுக்கு இன்னும் சிறக்கவில்லை.அது ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்,குருட்டுத்தனமாக நான் அதுக்கு வக்காலத்தெல்லாம் வாங்க மாட்டேன்.அங்கு ஹிந்துக்கள் நசுக்கப் படுகிறார்களா?ஒத்துக்கிறேன்.தவறுதான்.அது முஸ்லிம்கள் வாழும் நாடு அவ்ளோதானே தவிர.அவர்களின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி அல்ல.// உலகத்தில் எந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. //உங்கள் வீட்டி இட்லி பொடி தீர்ந்துவிட்டால் கூட குஜராத் தான் காரணம் என்று சொல்கிற மனப்பாங்கு எப்ப போகுமோ தெரியல...//

  ஐயா,குஜராத் சம்பவம் தங்களுக்கு இட்லிப்பொடி தீர்ந்து போற விஷயத்துக்கு ஒப்புன்னா?எனக்கு அப்டி இல்லங்க.ஒவ்வொரு சம்பவமும்,இப்பொ நெனச்சாலும்,மனசு தாங்க மாட்டேங்குது..ஒட்டுமொத்தமா இஸ்லாமியர்கள அங்கு கருவருத்து,அதனால் முழு இந்தியாவிலும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பின்மையை உறுதிசெய்த கொடூரம் அது.அதன் வலி இன்னும் மாறவில்லை.அதுக்காக முஸ்லிம்கள் வன்மம் வளர்க்கிறார்கள் என்றல்ல.இன்றைக்கு,நான் வன்மம் கொண்டவனாக இருந்திருந்தால் இப்படி பொருமை காத்து எழுதிக் கொண்டிருக்கமுடியாதல்லவா?
  அந்த கோரத்தை மறக்கமுயல்கிறோம் முடியவில்லை.இது எனது ஹிந்து சகோதரனுக்கு நிகழ்ந்தாலும் எனது நிலை இதேதான்.இட்லிபொடி விஷயமல்ல எனக்கிது..

  தொடரும்...

  பதிலளிநீக்கு
 26. //அதான் முனியாண்டி அப்துல்லாவா மாறியாச்சே. வர்ணாசிரமம் போயிடுச்சே. அப்புறம் அப்துல்லாவுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ?//

  சகோ,முனியாண்டி அப்துல்லாவா மாறுனா இடஒதுக்கீடா?இல்லங்க.ஏற்கனவே இருக்கிற அப்துல் ரஹமான்களுக்கு,அவர்களின் கல்வி,வேலைவாய்ப்பில் கபிலனுக்கு கிடைக்கும் அந்த பலன் அவனுக்கும் கிடைக்கவே கேட்கிறோம்.

  ஹிந்துத்துவா பற்றி கேக்குரீங்க.அதுக்கு ஒரு தளம் இருக்கு அதன் சுட்டிதர்ரே,,அங்க போய் பாருங்க.டீடைல சொல்வாங்க.

  http://thamizhoviya.blogspot.com/
  அப்ரோ அதவச்சு நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்..
  இஸ்லாம் பத்தி என்னிடம் கேளுங்கள்.பதில் சொல்ரேன்..எதப்பத்தி வேண்ணாலும்..பதில் சொல்கிறேன்..இன்ஷா அல்லாஹ்

  நன்றி...

  பதிலளிநீக்கு
 27. சகோ கபிலன்,நா உங்கள நாகரீகமானவர்ன்னுதா சொன்னேன்.ஆனா நீங்க என்னன கேள்வி கேட்டு கிழிப்பேன்.'சொறிப்புடிச்ச' அப்டீங்ர ஏகவசனங்கள்ளா பேசுனீங்களே.அது சபை அழகாபடலங்க.எவ்வித கண்டனங்களையும் சொல்லும் விதம் இருக்கு.

  நீங்க தாராளமா விவாதிக்கலாம்..நான் சொன்னது பிழைஎனப்பட்டால் மன்னிக்கவும்..

  சொல்லனும்னு தோனுச்சு.அவ்ளோதா.

  நன்றி

  பதிலளிநீக்கு
 28. வாங்க சகோ ராபின்.

  //உலகத்தில் எந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.//

  தெரியலங்க..சவுதி போன்ற நாடுகளில் இஸ்லாமிய சட்டங்களை நிரைவேற்றுகிறார்கள்,அவ்வளவே.ஆனால் பலவிஷயங்களில் இஸ்லாம் சொல்லும் வரைமுறைகளை அவர்கள் கடைபிடிப்பதில்லை.எங்கும் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சி இல்லை.என்பதே நிதர்சனம்..

  நன்றி..

  பதிலளிநீக்கு
 29. ஒரு முஸ்லிம் இன்னொரு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய சட்டமா?

  மற்ற மதங்களை பற்றி பிரச்சாரம் செய்தால் தண்டனை என்பது இஸ்லாமிய சட்டமா?

  பதிலளிநீக்கு
 30. நண்பரே...இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு மூலக் காரணமே partiality பார்ப்பது தான். ஒரு தாய் தன்னுடைய அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் நடத்துவாங்க. ஒரு கிண்ணத்தில் இருக்கும் சோற்றை அனைவருக்கும் சமமாக கொடுப்பாங்க. இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் அதிகமா, இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் குறைவான்னு வித்தியாசம் பார்க்க மாட்டாங்க. அந்த மாதிரி தான் இதையும் பார்க்கணும்.

  "இஸ்லாமியர்கள் என்ன ஸ்பெஷல் உரிமைகளை கேட்டு அது தங்களை பாதித்துவிட்டது?"
  "அதுதவிர சைக்கிள் பந்தையத்துல,எங்கள ஓடவிற்றாதீங்க.சைக்கிளாவது குடுங்கன்னுதா கேக்குறோம்.உங்களது உரிமையை பறித்து,எனக்கு அளிக்க கோரி கேட்கவில்லை."
  3.5% இட ஒதுக்கீடு என்ன வானத்தில் இருந்து குதித்ததா ? மற்றவர்களின் ஒதுக்கீடுகளில் இருந்து பிடுங்கி கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு தான் இது. இதனால் திறமை படைத்த கிட்ட தட்ட 7000 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் கிடைக்கவிருந்த அட்மிஷன் போச்சு....இது சமுதாயத்திற்கு பாதிப்பில்லையா ? இதே நிலை என் குழந்தைக்கும் வரலாம் இல்லையா ?
  என்னையும் பாதிக்குமே ! இப்படி எத்தனையோ பேரை பாதிக்கும் !
  "இங்க கபிலன் அப்துல்லா வா மாறுனா 3.5% ஆ,என்பதல்ல.கபிலனுக்கு கிடைக்கும் அந்த பயன் அப்துல்லாவும் பெறவேண்டும் எனபதற்கே இடஒதுக்கீடு."
  அப்துல்லாவாக இருந்தாலும் சரி, முனியாண்டியாக இருந்தாலும் சரி, ஜேம்ஸ் ஆக இருந்தாலும் சரி, கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சலுகைகள் அளிக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும். ஆனால்,அப்துல்லா என்ற பெயர் வைத்திருந்தால் சலுகை, அதே சலுகை முருகனுக்கு இல்லை என்று சொல்வது தான் பிரச்சினை.
  மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு, மத நல்லிணக்கத்தை சாவடிக்கும் என்பது என் கருத்து !
  மற்றபடி, இப்போ விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பெரிய கிராண்டா ஒரு ஊர்வலம் தேவையா இல்லையா,அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்குதா இல்லையா என்பது ஒருபக்கம். ஆனால், அந்த ஊர்வலம் போகக் கூடாது என்று சொல்வது, அடுத்தவன் பெண்டாட்டி பச்சை கலர் சேலை உடுத்தக் கூடாது என்று நாம் சொல்வது போலத்தான் இருக்கும்.

  "சகோ கபிலன்,நா உங்கள நாகரீகமானவர்ன்னுதா சொன்னேன்.ஆனா நீங்க என்னன கேள்வி கேட்டு கிழிப்பேன்.'சொறிப்புடிச்ச' அப்டீங்ர ஏகவசனங்கள்ளா பேசுனீங்களே.அது சபை அழகாபடலங்க.எவ்வித கண்டனங்களையும் சொல்லும் விதம் இருக்கு."
  "வாங்க சகோ விருச்சம்...
  முதல்ல நீங்க ஒரு சாதாரண ஹிந்துவானால்,இது உங்களுக்கு பொருத்தமான கட்டுரை அல்ல.அது ஒரு ஹிந்துதுவவாதியின் உளரல்.அதுக்குதான் அந்த பதில்கள்..."
  நண்பரே..."கபிலன் நாகரீகமானவர்னு நினைக்கிறேன்னு" சொல்லி இருக்கீங்க நீங்க. உங்களுடைய விடைகளை வாதங்கள் மூலமாக கிழிப்பதாக சொன்னேன். அது தப்பான்னு எனக்கு தெரியல..நீங்க தான் விருச்சம்க்கு பதிலளிக்கும் போது, நீங்க ஒரு சாதாரண ஹிந்துவானால்...அப்படின்னு சொன்னீங்க...அதான் நான், சாதாரண ஹிந்துவா, சொறி பிடிச்ச ஹிந்துவான்னு சொன்னேன்...இதுவும் தப்பான்னு தெரியல...

  "ஹிந்துத்துவா பற்றி கேக்குரீங்க.அதுக்கு ஒரு தளம் இருக்கு அதன் சுட்டிதர்ரே,,அங்க போய் பாருங்க.டீடைல சொல்வாங்க.

  http://thamizhoviya.blogspot.com/
  அப்ரோ அதவச்சு நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.."

  என்னங்க...சீரியசா பேசிட்டு இருந்தா, காமெடி பண்றீங்க.....இது போன்ற Pseudo Secular பதிவுகள், வலையில் நிறைய காணலாம். அப்படியே இதையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க...
  http://localtamilan.blogspot.com/2009/07/blog-post_06.html

  நன்றி.

  பதிலளிநீக்கு
 31. சகோ ராபின் அவர்களுக்கு,
  //ஒரு முஸ்லிம் இன்னொரு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய சட்டமா?//

  இஸ்லாமிய சட்டப்படி,ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேரினால் மரண தண்டனை.இது இஸ்லாமிய சட்டமே.மாற்றுக்கருத்து இல்லை.

  இஸ்லாம்,குழப்பம் விளைவிப்பதை கொலையை விட பெரும் பாவமாக சொல்கிறது,உண்மையும் கூட.ஒருவன் ஒருவனை கொலை செய்வதை காட்டிலும்,குழப்பம் விளைவித்துவிட்டால்,அது பலர் மாண்டுபோக காரணமாக அமையும்,கலவரங்கள் ஏற்பட்டு,நாட்டின் அமைதி குலையும்.எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேரியதற்காக அல்ல,அதன் மூலம் குழப்பம் விழைவித்தல் போன்ற காரணங்களுக்காக மரணதண்டனை அளிக்கிறது.

  புகாரி ஹதீஸ்:6922ல்
  இஸ்லாத்தைவிட்டு வெளியேறி,இஸ்லாத்திற்கும்,அரசுக்கும் விரோதமாக செயல்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பு சொல்லியது,பதியப்பட்டுள்ளது.

  //மற்ற மதங்களை பற்றி பிரச்சாரம் செய்தால் தண்டனை என்பது இஸ்லாமிய சட்டமா?//

  அது எப்படிங்க.இஸ்லாம் முஸ்லிம்களை,மதபிரச்சாரம் செய்யவும்,இஸ்லாத்தை பரப்பவும் சொல்கிறது.அப்படி இருக்க.மற்ற மதங்களை பிரச்சாரம் செய்வது குற்றமாகாது.ஏற்பது ஏற்காதிருப்பதும்,அவரவர் விருப்பம்..

  அவ்வளவே...

  பதிலளிநீக்கு
 32. //இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு மூலக் காரணமே partiality பார்ப்பது தான். ஒரு தாய் தன்னுடைய அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் நடத்துவாங்க. ஒரு கிண்ணத்தில் இருக்கும் சோற்றை அனைவருக்கும் சமமாக கொடுப்பாங்க. இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் அதிகமா, இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் குறைவான்னு வித்தியாசம் பார்க்க மாட்டாங்க. அந்த மாதிரி தான் இதையும் பார்க்கணும்.//

  மிகச் சரியா சொன்னீங்க கபிலன்.இந்த அரசாங்கம்,மக்களை பொருத்தவரை ஒரு தாய் மாதிரித்தான்.அவளது எல்லா குழந்தைகளும் சரியான ஆரோக்கியம் பெற்று இருந்தால்,தங்களது கருத்தே சரியானது.
  ஆனால் இருக்கும் இரு குழந்தைகளில் ஒன்று ஆரோக்கிய குறைவாக,பலகீனமாக இருக்கும்போது,அதன்மீது சிறப்பு கவனம் செலுத்துவது அந்த தாயின் தலையாய கடமையல்ல்வா?இல்லை பிள்ளை எல்லாம் ஒன்றென சொல்லி பராமரிக்க மறுத்தால்,அது அக்குழந்தைக்கு செய்யும் அநீதம் அல்லவா?...

  //3.5% இட ஒதுக்கீடு என்ன வானத்தில் இருந்து குதித்ததா ? மற்றவர்களின் ஒதுக்கீடுகளில் இருந்து பிடுங்கி கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு தான் இது. இதனால் திறமை படைத்த கிட்ட தட்ட 7000 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் கிடைக்கவிருந்த அட்மிஷன் போச்சு....இது சமுதாயத்திற்கு பாதிப்பில்லையா ? இதே நிலை என் குழந்தைக்கும் வரலாம் இல்லையா ?
  என்னையும் பாதிக்குமே ! இப்படி எத்தனையோ பேரை பாதிக்கும் !//

  ஐயா.27% இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கு,வழங்கப்படுகிறது.அதில் 20% bc எனும் பின் தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது.இதற்குள்தான் முஸ்லிம்கள் வருகிறார்கள்.இந்த 20%ல் உள்ள 3.5% தானே முஸ்லிம்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது..மீதம் உள்ள 96.5%தில் முஸ்லிம்களை விட குறைந்த மக்கள் தொகையினரான கிருத்தவ்ர்களுக்கு 2.5% எனக்கொண்டாலும்.மீதம் 94%மும் முழுக்க ஹிந்துக்களையே அடைகிரதே..இதுல ஒரு சிக்கலும் இருக்கு.ஒருவேலை முஸ்லிம் மாணவர்கள்,அதிக எண்ணிக்கையில் இருந்தாலும்,அவர்கள் இந்த 3.5%திற்குள் அடைக்கப்படுவதால் மீதமுள்ளோர் எந்த பிரிவிலும் உள் நுழைவது சாத்தியமற்றதாகிறது.உங்களுக்கே 100%த்தையும் குடுத்துட்டா சந்தோஷப்படுவீங்களா என்ன.?

  //அப்துல்லா என்ற பெயர் வைத்திருந்தால் சலுகை, அதே சலுகை முருகனுக்கு இல்லை என்று சொல்வது தான் பிரச்சினை.மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு, மத நல்லிணக்கத்தை சாவடிக்கும் என்பது என் கருத்து!//
  அப்டி அப்துல்லாஹ்வுக்கு என்ன சலுகை குடுத்து,அத முருகனுக்கு இல்லனுட்டாங்க.சொல்லுங்களேன்.பெருவாரியான ஹிந்துமக்கள் மத்தியில் இருந்த ஏற்றதாழ்வின் காரணமாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற பெயர் ஒரு சாராருக்கு வந்தது.அதை மறுக்க முடியாது.எனவே அவ்ர்களின் முன்னேற்றத்தில் கவனம் கொண்ட அரசு.அவர்களின் நிலையிலேயெ,அவர்களை விடவும் பின் தங்கி இருக்கும் மற்ற மதத்தினரையும்,கண்டுகொண்டு, இடம் ஒதுக்கி,நீயும் மேலே வா எனச் சொல்வது சரியே எனப்படுகிறது.இது என் கருத்து,

  //அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்குதா இல்லையா என்பது ஒருபக்கம். ஆனால், அந்த ஊர்வலம் போகக் கூடாது என்று சொல்வது, அடுத்தவன் பெண்டாட்டி பச்சை கலர் சேலை உடுத்தக் கூடாது என்று நாம் சொல்வது போலத்தான் இருக்கும்.//

  அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்குதா இல்லாயாங்ரத ஏ ஒருபக்கம் விட்ர்ரிங்க?ம்ம்.தொந்தரவா இருந்தா பரவா இல்லங்குரீங்கலா?
  அடுத்தவன் பொண்டாட்டி சேலை கட்டிட்டு போனா பரவாயில்லங்க..அவ அலங்கோலமா போனான்னா.சேலை கட்ட சொல்லத்தானே வேணும் இல்லயா?

  அப்பரம்.எனது தனிப்பட்ட கருத்து,தங்களது சொல்லாடல்,உங்களுக்கு,தவறாக தெரியவில்லை என்றாலும்,அதன் கடுமை எதிர்கொள்பவர்களுக்கே, தெரியும்.உங்க வார்த்தைல கொஞ்சம் கடுமை தெரியுது,அத கொஞம் கொரச்சுகிட்ட,உங்களது உரையாடல் இன்னும் சிறப்பாக இருக்கும்.அப்ரோ உங்க விருப்பம்.என்னடா பின்னூட்டம் போட வந்தா advise பன்ரானென்னு நினைக்கவேண்டாம்.

  சொல்ரவன் secular person'அ,இல்ல ஆன்மீகவாதியாங்கரதில்ல.என்ன சொல்ரான்.சொல்ரது நியாயமா,இல்லையா?அவ்ளோதா பாக்கனும்.நா அப்டிதா பாக்றேன்,அவன் secular.அவன் சொல்ரத ஏதுக்க முடியாதுன்னு சொல்லாதீங்க.சொல்ரத மொதல்ல கேளுங்க..அப்ரம் முடிவு பன்னுங்க..

  நன்றி

  பதிலளிநீக்கு
 33. Dear Brother Razin,

  Assalaamu Alaikum,

  While I deeply appreciate your work, I have few problems in accepting your comment regarding death penalty for those leaving Islam. Let me justify that by two points.

  1. As far as I know, There is no statement in Qur'an to justify this point. Even though Qur'an talks about people who leave Islam it doesn't talks about what is the punishment for those in this world. So even though there is a need, Qur'an does not talks about the punishment for those leaving Islam.

  2. In many hadiths, yes we do find death penalties for those leaving Islam. But most of those hadiths point to one hadith in which prophet(saw) talk about death penalty.

  Muslims should understand that there is no death penalty for those who leave Islam and live a peaceful life. But if somebody leaves Islam and creates confusions in the community then there is death penalty for those apostates. Because Qur'an talks about death penalty for those creating confusions in the state.

  So those people who left Islam are punished for the offense of creating confusions and not because they left Islam.

  This is what I understood from my research and most of our scholars do agree with this point.

  you can look into this article for more clarification,

  http://www.loonwatch.com/2009/09/apostasy/


  So I want you to pay attention to this and correct me if I am wrong, after all Allah(swt) knows best.

  If I said something wrong forgive me for Allah(swt)'s sake.

  Thanks and take care...

  Jazakkallaahu Khair for your efforts.

  Your Brother,
  Aashiq Ahamed A
  http://ethirkkural.blogspot.com/

  பதிலளிநீக்கு
 34. என்ன என்ன தனி சட்டங்கள் என்று நான் கேட்கவில்லை. ஏன் என்று தான் கேட்கிறேன். எல்லோரும் இந்தியர் என்றால் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் சட்டத்தில் ஏன் வித்யாசம் இருக்க வேண்டும்?

  பதிலளிநீக்கு
 35. Dear Brother Razin,

  Assalaamu Alaikum,

  this is the continuation of my last post......

  Also I sincerely request you to study the context of those hadiths which talks about death penalties for apostates...

  Thanks,

  Your brother,
  Aashiq Ahamed A
  aashiq.ahamed.14@gmail.com

  பதிலளிநீக்கு
 36. மலேசிய இந்துக்கள் இங்கிருந்து அங்கு குடி ஏறியவர்களா அல்லது அங்குள்ள குடிமக்கள் பிற்காலத்தில் இந்து மதத்தை ஏற்றவர்களா?

  உங்கள் பதில்கள் எல்லாமே பொதுவாக பலரும் சொல்லும் ஒன்று தான். வித்தியாசங்களை நியாயப் படுத்த நீங்கள் திரும்ப திரும்ப அதை சொல்லுவதால் பழகிப் போகுமே அல்லாமல் நியாயமாகாது. முஸ்லிம் சமுதாயத்துக்கு என்று ஒருமித்த அரசியல் தலைமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மத அமைப்பு வழி ஒருங்கிணைப்பு நடக்கத் தான் செய்கிறது. உங்கள் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்குமான வித்யாசம் தெளிவாக தெரிகிறது. அது மத நல்லிணக்கத்துக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தால்நல்லது.

  வெளியில் இருக்கும் மத தீவிரவாத அமைப்புகளுக்கு உள்ளூர் புல்லுருவிகள் உதவாமல் இருக்க இந்த உள்ளூர் மத அமைப்பு கட்டுபாடுகள் விதிக்கலாம் இல்லையா? ஷோயப்புக்கும், தச்லீமாவுக்கும் தான் கட்டுப்பாடா?
  தஸ்லீமாவின் எழுத்துக்களை எதிர்க்க இந்திய தெருக்களில் உயிரும் உடைமையும் இழத்தல் போன்ற அவலங்கள் ஏன் நடைபெறுகிறது ?
  தீவிரவாத செயல்களுக்கு துணைபோகும் முஸ்லிம் மக்களுக்கு பாத்வா என்று ஏன் மத அமைப்பு சொல்லுவதில்லை? திருமண மறுப்பு போன்ற குடும்பத்தினரே சமாளிக்கக் கூடிய விஷயங்களுக்குசொல்லுகிறார்களே.
  மத அமைப்பு முஸ்லிம்களை ஒருங்கிணைக்க செய்யும் முயற்சியில் எத்தனை பங்கு இந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் செய்கிறது?

  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 37. //என்ன என்ன தனி சட்டங்கள் என்று நான் கேட்கவில்லை. ஏன் என்று தான் கேட்கிறேன். எல்லோரும் இந்தியர் என்றால் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் சட்டத்தில் ஏன் வித்யாசம் இருக்க வேண்டும்?//

  சரிதான் சகோ விருச்சம்.
  இஸ்லாமியர்களின் மார்க்கம்,இந்திய மதங்களுடன் சற்றே மாறுபடுகிறது.அல்லவா?எல்லா மதங்களிலும்,ஆன்மீகம் வேறு,உலக வாழ்வு வேறு.ஆனால் இஸ்லாம்,வாழ்க்கையையே ஆன்மீகமாக்கி,ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவியலாத கொள்கையை தருகிறது.எனவே முஸ்லிம்களின் வாழ்வியலில் அனைத்து காரியங்களிலும் ஆன்மீகம் கலந்துள்ளது.இந்திய திருமண சட்டமோ,சொத்து,மற்றும் இதர சட்டங்களையோ ஏற்பதில் எக்குழப்பமும் இல்லை.ஆனால் அவை இஸ்லாத்தின் கொள்கைகளை பூர்த்தி செய்வதாக இல்லை.அதன் பொருட்டு.இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள மத உரிமைகளுக்குட்பட்டு,குறைந்தபட்ச சட்டதிருத்ததை கேட்கிறோம்.அது மற்ற மததவரை பாதிக்காத வண்ணம்.அதை மதநல்லிணக்கத்தின் பொருட்டு,எனது பிறமத ச்கோதரர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என விரும்புகிறோம்...

  இது இன்னபிற கிரிமினல் சம்பந்தமான வழக்குகளில் இந்தியா போன்ற பலமதமக்கள் வாழும் நாட்டில் ஷரிஅத் சட்டங்களை பின்பற்றுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது.எனவே அவைகளை கைவிட்டு,இந்திய ச்ட்டங்களுக்கு முழுவதுமாக வழிப்படுகிறோம்...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 38. //இஸ்லாமிய சட்டப்படி,ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேரினால் மரண தண்டனை.இது இஸ்லாமிய சட்டமே.மாற்றுக்கருத்து இல்லை.//
  //அது எப்படிங்க.இஸ்லாம் முஸ்லிம்களை,மதபிரச்சாரம் செய்யவும்,இஸ்லாத்தை பரப்பவும் சொல்கிறது.அப்படி இருக்க.மற்ற மதங்களை பிரச்சாரம் செய்வது குற்றமாகாது.ஏற்பது ஏற்காதிருப்பதும்,அவரவர் விருப்பம்..// எந்த அரபு நாட்டிலும் அனுமதிக்கப்படுவதில்லை!

  இப்படிப்பட்ட காட்டுமிராண்டி சட்டங்கள் அமலில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களின் நிலையை நினைத்து பாருங்கள். அவர்களால் தங்கள் மதக் கருத்துக்களை சுதந்திரமாக பிரச்சாரம் செய்யமுடியாது, அப்படியே ஒரு முஸ்லிம் மதம் மாறினாலும் குழப்பம் விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டி கொன்று விடலாம். ஆனால் நீங்கள் மட்டும் மற்ற நாடுகளில் இஸ்லாத்தை பற்றி பிரச்சாரம் செய்வீர்கள், மதம் மாற்றுவீர்கள், அப்படி மதம் மாறினவர்களை வைத்து குழப்பம் விளைவிப்பீர்கள். நல்லா இருக்கு உங்கள் நியாயம்! இதையே இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் இந்துக்கள் முஸ்லிம்கள் மீது பிரயோகித்தால் உங்கள் நிலை என்ன? உங்கள் மதத்தை பற்றி பேசமுடியாது, வீட்டுக்குள் ஒளித்து ஒளித்துத்தான் தொழ முடியும். ஒரு நிமிடம் மன சாட்சியோடு சிந்தித்து பாருங்கள்!

  இங்கு மைனாரிட்டியினருக்கு எதிராக ஒரு சில சம்பவங்கள் நடை பெற்றது உண்மைதான். அப்படிப்பட்ட சம்பவங்கள் நடை பெற்றபோதேல்லாம் இங்குள்ள இந்துக்களே எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் மற்ற மதத்தினர் இஸ்லாமியர்களால் கொடுமை படுத்தப்படும்போது எத்தனைக் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன? இப்போதுகூட உங்கள் பெருமானார் சொன்னார் என்பதற்காக நியாயப்படுத்தத்தானே செய்கிறீர்கள்? அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் துயர நிலையைப் பார்க்கும்போது இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலைமை எவ்வளவோ மேல்.

  பதிலளிநீக்கு
 39. இட ஒதுக்கீடு விஷயத்தில் தங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. நலிந்த , கஷ்டப்படும் நபர் யாராக இருந்தாலும் சலுகை அளிக்க வேண்டும், மதம் ஒரு அளவுகோளாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து.

  விடை பெறுகிறேன். நன்றி !

  பதிலளிநீக்கு
 40. இங்க ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேனே, காணவில்லையே, வழியில் ஏதாவது காக்க தூக்கிற்று போயிடிச்சா?

  பதிலளிநீக்கு
 41. சகோ கபிலன்.
  இடஒதுக்கீடு விஷயத்தில்,எனது கருத்தில் எது ஏற்புடையாதாக இல்லை.சொல்லுங்கள்.எனது உவமை விளக்கமா?அல்லது நான் சொன்ன இடஒதுக்கீடு சத்விகித குறிப்பா?என்னவென்று சொன்னாலதானே,புரியும்.ஒட்டுமொத்தமாக ஏற்ப்ய்டையதாக இல்லை எனசொல்வது,பதிலறியாது வெளியேற்வது போல்லுள்ளது.இல்லை தாங்கள் அனைத்து மக்களும் மேன்மை பெற சாலச்சிறந்த ஆலோசனையை முன்வையுங்கள்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 42. சாதி பேதங்களால் பொதுமக்கள் பலர் பின் தங்கியிருந்தனர் என்பதால் தான் இட ஒதுக்கீடு என்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது . பின்தங்கியவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக. சாதிகளை கணக்கெடுத்து அதற்கேற்றார் போல இட ஒதுக்கீடு செய்தனர். அத்தனை சாதிகளை ஒருங்கினைத்து FC,BC,MBC,SC,ST என்ற பகுப்புக்குள் கொண்டு வந்தனர். ஆக, இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் வகுக்கப்பட்டது. சாதி தான் அளவுகோல். இப்பொழுது திடீரென்று அதே விஷயத்துக்கு ம்ற்றுமொரு அளவுகோல் எடுத்துக்கொண்டு வருவது அபத்தம். ஏதாவது ஒரு அளவுகோலை வைத்து தான் இட ஒதுக்கீடு அமைய வேண்டும். அப்போது தான் அது அனைத்து சமுதாயத்தினருக்கும் சமமாகப் போய்ச் சேரும்.

  மத அடிப்படையில் இடஒதுக்கீடு மதநல்லிணக்கதிற்கு ஊறு விளைவிக்கும். வீட்டில் இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்றிற்கு மட்டும் சாக்லேட் கொடுப்பது எவ்வளவு தவறோ...அதே மாதிரி தான் இதுவும்.

  என்னுடைய கருத்தை நான் ஏற்கனவே பின்னூட்டங்களில் தெளிவாகச் சொல்லிவிட்டேன். பதிலறியாமல் போயிட்டேனா, இல்லை சரியா சொல்லிட்டு தான் போனேனா என்பதை இந்தப் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 43. சகோ ராபின்..மதம் மாறினால் மரணதண்டனை..இது பற்றி தனிப்பதிவு ஒன்றை விரைவில் இடுகிறேன்.நானும் அது தொடர்பான குரான்,ஹதீஸ்களை திரட்டி வருகிறேன்,இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவாக விவாதிப்போம்..இதற்கு தனிப்பதிவு அவசியமென உணர்கிறேன்,
  அப்பரோ.சகோ..உங்களோட பின்னூட்டம் என்னை தாக்குவதாக இருந்தாலும் கண்ணியம் பேணும்வரை அது மட்டுறுத்தப்படாது.என்னை நோக்கி வரும் விமர்சனங்களை ஒருபோதும் நான் ஒதுக்கியதில்லை.எனது தரப்பில் தவறு இருந்தால் தயங்காமல் ஒப்புக் கொள்வேன்.
  தங்களது பின்னூட்டம் வார இறுதியில்(இங்கே அமீரகத்தில்) வந்ததாலும்,விடுப்பில் செல்ல இருக்கும் நான்,கொஞ்சம் purchase செய்ய போனதாலும்.தாமதம்.அவ்வளவே...
  நாகரீகம் பேணும் வரை எக்கருத்தும் மட்டுறுத்தப்படாது..

  நன்றி...
  ------------
  சகோ கபிலன்...
  இது சாக்லேட் குடுக்கும் விஷயம் அல்ல.மருந்து தரும் விஷயம்.இது என்னை பொருத்தவரை முஸ்லிம்களுக்கு எத்துனை பயன் அளிக்கும் என தெரியவில்லை.ஏனெனில் 20% உள்ள bc கோட்டாவில் முஸ்லிம்கள் அடங்கும் போது,சற்றே கூடுதல் எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருந்தால்,அதில் 10% கூட பயன் படுத்திக் கொள்ளமுடியும்.
  இத சென்ற ஆண்டு எனது சகோதரனுக்கு பொறியியல் படிப்பு கவுன்சிலிங்'ல நான் அனுபவித்தேன்.இந்த இட ஒதுக்கீட்டால் ஒரு கல்லூரிக்கு,2 சீட்களே முஸ்லிம்கள் பெரும் நிலை வந்துவிட்டது.இது என்னை பொருத்தவரை அவலமே..
  ஆனால்.அதிலும் பின்தங்கி இருக்கும் வகுப்பினராக இருப்பதால்,கல்வி தவிர பிற வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்ச இடத்தை கூட முஸ்லிம்களால் நிரப்பமுடிவதில்லை.எனவேதான்.3.5%ஆவது ரிசெர்வ் செய்தால்,சற்றேனும் முன்வரலாமே என்றுதான் கேட்கிறோம்.
  நல்லா தெரிஞ்சுகங்க.தமிழகத்தில் 5.5% இருக்கும் முஸ்லிம்களுக்கு,வெறும் 3.5 சதம்தான் ஒதுக்கீடு பெற்றுள்ளோம்.மீதம் உள்ள 96.5% நாங்களே எண்ணினாலும் வரமுடியாது,எங்களுக்கு நாங்களே கேட் போட்டுக் கொண்டோம்...

  தமிழகத்தில் 6% இருக்கும் கிருத்தவர்கள் தவிர,அவர்களுக்கு 4% இடம் ஒதுக்கினாலும் மீதம் இருக்கும் 92.5%மும்,இருக்ககூடிய 88.5% ஹிந்துக்களுக்கே.0.5%க்கும் குறைவாகவே பிற மதங்கள் தமிழகத்தில் உள்ளன..
  மத அடிப்படையானாலும் பெரும்பான்மையான, ஹிந்துக்கள் நீங்களே,அதிகம் பயனடைகிறீர்கள்.

  இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியலங்க.
  நாங்க தனித்து நிற்க நினைக்கவில்லை.அப்படி நிற்கவும் விரும்பவில்லை.எங்கள் நிலைய கருதி,இதை எனது ஹிந்து சகோதரர்களும் ஆதரிக்கவேண்டும் என்பதே எங்களின் அவா..

  நன்றி...

  பதிலளிநீக்கு
 44. அன்பு சகோதரர் ரஜின்,

  சில பணிசுமை காரணமாக இந்த விவாதத்தினில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சகோதரர் கபிலன் இறுதியாக இட ஒதுக்கீட்டைப் பற்றி சொல்லி விட்டு சென்றதற்கு மட்டும் எனது மறுப்பை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

  பின்தங்கியவர்களை முன்னேற்ற மட்டும் தான் இட ஒதுக்கீடு என்ற கபிலனின் கருத்தை நான் முழுவதும் ஆமோதிக்கிறேன். ஆனால் அப்படி பின்தங்கியவர்களில் ஹிந்து மதத்தினில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ஹிந்து மதவெறி கபிலனின் வாதத்தில் ஒளிந்து நிற்கின்றது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் கபிலன் அந்த சாதியே மதத்தை சார்ந்து தான் இருக்கின்றது என்பதை எப்படி மறைக்க போகின்றார்?

  சாதி என்பதே மதத்தை சார்ந்து தான் இருக்கின்றது. சாதிகள் மதத்தை சார்ந்தில்லை என்று கபிலன் விளக்குவாறேயானால் அடியேனும் புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். பின்தங்கியவர்கள் ஹிந்து மதத்தினில் மட்டும் தான் இருக்கின்றார்கள் என்று கபிலன் சொல்ல வருகிறாரா? ஒருவேளை கபிலன் அப்படி சில ஆர் .எஸ். எஸ் கட்டுகதைகளை சொல்ல வந்தால் ராஜிந்தர் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வெளியிட்ட தகவல்களோடு கபிலனிடம் கலந்துரையாட சமூக நீதி மீது நம்பிக்கை கொண்டவர்கள் தயாராகவே இருக்கின்றோம். இப்போதைக்கு கபிலனுக்கு இது போதுமென்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 45. ஐயா ஷேக் தாவூத்,

  இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று எங்குமே சொல்லவில்லை. கஷ்டப்படுபவன் அப்துல்லாவாக இருந்தாலும் சரி, முனியாண்டியாக இருந்தாலும் சரி இருவருக்குமே உதவ வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அப்துல்லா என்ற பெயருக்கு மட்டும் இட ஒதுக்கீடு, முனியாண்டி என்ற பெயருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எவ்வகையில் நியாயம். ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு முறையில் அனைவரைப் போல, இஸ்லாமியரும் பயனடைந்திருக்க வேண்டும். பயனடையவில்லை என்று சொல்கிறீர்களா ?

  இப்பொழுது எதற்கு மத அடிப்படையில் ஒரு இட ஒதுக்கீடு என்பதே என் கேள்வி ? எந்தெந்த நாடுகளில் இவ்வாறான இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன ?

  நீங்க இஸ்லாமியர் தரப்பு வாதங்களைப் பேசினால், அது சமூக நீதி...அதையே நான் இந்து தரப்பு வாதங்களைப் பேசினால் இந்து மத வெறியனா...? நல்லா ஞாயம் பேசுறீங்க... : ) இந்த மாதிரி பேசினீங்கன்னா எப்படிங்க விவாதம் பண்றது...

  பதிலளிநீக்கு
 46. சகோதரர் கபிலன்,
  மதம் சார்ந்திராத சாதி எங்கிருக்கின்றது என்ற என்னுடைய கேள்விக்கு இன்னும் நீங்கள் பதிலளிக்கவில்லை. ஆகவே சாதி அடிப்படையில் மட்டும் தான் இட ஒதுக்கீடு என்ற நிலையிலிருந்து நீங்கள் இறங்கி வந்திருக்கின்றீர்கள் என்று நான் கருதிக் கொள்கின்றேன்.

  /* அப்துல்லா என்ற பெயருக்கு மட்டும் இட ஒதுக்கீடு, முனியாண்டி என்ற பெயருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எவ்வகையில் நியாயம். */
  முனியாண்டிக்கு இட ஒதுக்கீடு இல்லை இப்போது என்று சொல்ல வருகின்றீர்களா? அய்யா கபிலன் அவர்களே இன்னும் சொல்ல போனால் முனியாண்டியும் மூக்கையாக்களும் அவர்களின் என்னிக்கைகளுக்கேற்ப இட ஒதுக்கீட்டை பெற வேண்டும் என்பதற்காக விகிதாச்சார பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டை நாங்கள் கோருகின்றோம். ஆனால் முனியாண்டிக்கு இட ஒதுக்கீட்டை கொடுக்காதே என்று மறைமுகமாக உயர்சாதியினரை வைத்து கலவரத்தை தூண்டியது நீங்கள் கொண்டாடும் சங்பரிவார்கள் தான் என்ற உண்மை அறியாதவர்களல்ல நாங்கள். மண்டல் ஆணைய வரலாற்றை கபிலன் நன்றாக ஒரு தடவை படித்து விட்டு வரவும்.

  /* ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீடு முறையில் அனைவரைப் போல, இஸ்லாமியரும் பயனடைந்திருக்க வேண்டும். பயனடையவில்லை என்று சொல்கிறீர்களா ? */
  சரியாக பயனடையவில்லை என்றே நாங்கள் சொல்லுகின்றோம். நீங்கள் சொல்லுவது போல இட ஒதுக்கீட்டால் முஸ்லிம்கள் பயனடைந்திருந்தால் இன்று ராஜிந்தர் சச்சார் ஆணையமும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் வெளிக்கொணர்ந்த இந்திய முஸ்லிம்களின் நிலை இவ்வளவு கீழ்நிலையில் இருந்திருக்காது. பழங்குடி மக்களின் அடிப்படை வாழ்வை விட மிகவும் மோசமாக இந்திய முஸ்லிம்களின் வாழ்வு இருக்கின்றது என்று இவ்விரண்டு ஆணையங்களும் இந்தியா முழுவதும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் கோடிட்டு காட்டுகின்றது.

  /* இப்பொழுது எதற்கு மத அடிப்படையில் ஒரு இட ஒதுக்கீடு என்பதே என் கேள்வி ? */
  இப்போது கொடுக்கபடுகின்ற இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்த ஒரு பயனையும் பெற முடியாமல் தொடர்ந்து கீழ்மட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்திய முஸ்லிமகளின் நிலையை உயர்த்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் ராஜிந்தர் சச்சார் போன்றவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கோருகின்றோம். எந்த ஒரு இன குழு மிகவும் அடிமட்டத்தில் இருக்கின்றதோ அந்த இனத்தை முன்னேற்ற அரசியல் அமைப்பு சட்டம் 16(4) ன் அடிப்படையில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம். எனவே மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது இல்லை.

  /* நீங்க இஸ்லாமியர் தரப்பு வாதங்களைப் பேசினால், அது சமூக நீதி...அதையே நான் இந்து தரப்பு வாதங்களைப் பேசினால் இந்து மத வெறியனா...? நல்லா ஞாயம் பேசுறீங்க... : ) இந்த மாதிரி பேசினீங்கன்னா எப்படிங்க விவாதம் பண்றது... */
  நான் சமூக நீதியை பற்றி பேசுகிறேன். நீங்கள் இந்து தரப்பு வாதங்களை பேசவில்லை கபிலன். நீங்கள் பேசுவதெல்லாம் IIT, IIM போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு 27 % கொடுக்க கூடாது என்ற உயர் சாதிய குரலாகவே இருக்கின்றது. உங்களுடைய வாதங்களுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் ன் அரசியல் பார்வையை அப்பட்டமாக தரிசிக்க முடிகின்றது.

  மிகவும் பின்தங்கியிருக்கின்ற அப்துல்லாஹ்வுக்கு (எம்முடைய சகோதர தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்களை விட மிகவும் அடிமட்டத்தில்) மதத்தின் அடிப்படையில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள IPC 16(4) - ன் சலுகை மறுப்பது எவ்வகையில் நியாயம் கபிலன்? அப்துல்லாஹ்வும் முனியாண்டியும் தங்களுடைய அரசியல் (இதை ஆர்.எஸ்.எஸ் ன் அரசியல் பார்வை என்று எடுத்துக் கொண்டாலும் தவறில்லை) பார்வையை மிக தெளிவாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். இத்தகைய அரசியல் அறிவை முனியாண்டி பெற்றதற்கு ஈரோட்டு தாடிக்கார கிழவனின் சேவை முக்கியமானது என்பதை மட்டும் தங்களுக்கு நினைவுறுத்த கடமைப் பட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 47. சகோ ஷேக் தாவூது,அவர்களே,தங்களது கருத்து மிக பயனுள்ளதாக,இடஒதுகீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
  இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கு,இந்த தளம் எப்போதுமே சரியான மேடையாக இருக்கும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 48. You haven't answered my questions, brother.
  one more :
  Some people from downtrodden community adopted muslim community to get out of the caste related illtreatment. This should help them give a proud position in soceity. But now you ask for religion related quota. How do you think this would help people the purpose of adopting another religion? Now they are falling in the total muslim community and the quota is for the whole community. How do you think these low caste-religion converted people will benefit out of it?

  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 49. சகோ விருச்சம்,இடஒதுக்கீடும்,மதமாற்றமும்,ஒன்றுகொன்று,பொருந்தும் விடயம் அல்ல.மதம்மாறுபவர் இட ஒதுக்கீட்டை முன்னிருத்தி மாறுவதில்லை.அப்படி இடஒதுக்கீட்டை முன்னிருத்தி மாறுவதானால்,நிச்சயம் யாரும் முஸ்லிமாக மாட்டார்கள்.ஏனெனில் இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கே இந்த 3.5% போதாத ஒன்று.

  இந்த இடஒதுக்கீடு என்பது,கூட்ட நெரிசல் உள்ள பேருந்தில் இடம்பிடிப்பது போன்றது.அதில் உடல் நலியுற்ற ஒருவனால் இடம் பெற முடியாது.அவன் தனது பயணத்தை கால்நடையாக்கி கொள்கிறான்.
  இதை தவிர்க்க,டேய்.உனக்கு ஒரு சீட் புடிச்சு வச்சுருக்கேன்,வந்து நீயும் பஸ்ல ஏறி பயணம் பண்ணு என சொல்வதே இட ஒதுக்கீடு.தாழ்த்தப்பட்டவர்களிலேயே,முஸ்லிம்கள் மிகவும் பிந்தங்கி நலிவுற்று இருப்பது நிதர்சனம்.இதை அரசின்,ரங்நாத் மிஸ்ரா அறிக்கையும்,சச்சார் கமிட்டி அறிக்கையும் உறுதிசெய்கிறது...இது பற்றி அதிகம் விவாதித்துவிட்டோம்.விளக்கம் வேண்டின்,மீண்டும் ஒருமுறை முந்தைய பதில்களை படித்துவிட்டு தொடரவும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 50. உங்கள் பதிவுகள் நடுநிலை பதிவுகள் என்று ஏன் சொல்லிக் கொள்கின்றன என்று புரியவில்லை? இந்துக்களை குறிவைத்து நடுநிலை இல்லாமல் எழுதி விட்டு விவாதத்துக்கு தயார் என்று சொல்லி விட்டு நடு நிலை இல்லாமல், மத நல்லிணக்க முறையில் இல்லாமல் ஒரு சார்பின்மையோடு எழுதப்படும் பதிவுகளுக்கு நல்லிணக்க பதிவு என்று பெயர் வேறு வைத்துக் கொள்கிறீர்கள்.
  இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய பக்கத்திற்கு கொடுத்து என்று நக்கல் அடித்து விட்டு நடு நிலை என்று சொல்லுகிறீர்கள்.
  வந்தேறி மதத்தை பின்பற்றிக் கொண்டு வந்தேறிகள் என்று சில இந்துக்களை சொல்லுகிறீர்கள்.
  நான் இப்போதும் மதத்தை எதிர்க்க வில்லை. ஆனால் மதக் கொள்கைகள் என்று பின்பற்றுபவர்கள் செய்யும் பிரச்சனைகளே எனக்கு சங்கடம் தருவதாக இருக்கிறது
  ஒதுக்கீடு குறித்த உங்கள் பதில்களில் தெளிவு இல்லை. பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு என்ற நிலை வராமல் இப்படி ஆளாளுக்கு ஒதுக்கீடு என்று இன்னும் கேட்டுக் கொண்டிருப்பது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவும்.

  பதிலளிநீக்கு
 51. I missed the points in the prev comment. the updated line -
  இந்துக் கடவுள்களின் படங்கள் அடங்கிய பக்கத்திற்கு link கொடுத்து adults only என்று நக்கல் அடித்து விட்டு நடு நிலை என்று சொல்லுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 52. சகோ விருச்சம்.
  எனது நடுநிலை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.இது என் மேல் தவறு இருப்பின் திருத்திக் கொள்ள உதவும்.நான் எனது பதிவுகளை திரும்ப ஒருமுறை பரிசீலிக்கிறேன்.எழுத்துக்கும் பதிவுலகுக்கும் புதியவன் தானே.
  எனது பதிவுகள் அனைத்தும்,ஹிந்துக்களுக்கான கண்டனக்களோ,அவர்களை சாடவேண்டும் என்ற எண்ணத்திலோ எழுதப்பட்டவை அல்ல.
  நான் இந்த வளைப்பூ ஆரம்பித்ததன் நோக்கமே,இஸ்லாம் குறித்த மாற்று மதத்தவரின் தவறான புரிதலை விளக்கும் நோக்கில்தான்.எனது பழைய பதிவுகளை பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.இஸ்லாம் குறித்த சில தளங்களின் வரம்பு மீரல்களாலும்,தொடர்ச்சியான சாடல்களாலும்,நான் அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம்,இது போன்ற பதிவுகளை எழுத நேரிட்டது.இதில் நான் அவர்கள் செய்த அதே தவறை செய்துவிடக் கூடாது என கவனமுடனே இருந்தேன்.இருக்கிறேன்.

  சும்மா நடுநிலையாளனின் அரிதாரம் பூசி விருச்சத்திடம் காட்டி எனகென்ன ஆகப்போகிறது. இல்லை நேரடியாகவே ஹிந்துக்களை பலித்தால் யார் என்ன செய்யமுடியும்.அதுவல்ல பொருள்.எனது உள்ளகிடக்கையே இந்தப் பதிவுகள்.
  இப்போதும்,எனதுள்ளத்தில் உறுத்தல் இருந்திருந்தால்,நான் தங்களின் பின்னூட்டத்தை மறுத்து,பதில் சொல்லாது இருந்திருக்கவியலும், இருப்பினும் நான் தங்களுக்கு விளக்கம் தரவே முயல்கிறேன்.
  எனது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் நடுநிலையாளர்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.

  நிர்வாணம் பற்றிய எனது கருத்து ஆபாசமே.இதை எனது ஹிந்து சகோதரன் தெய்வீகமாக,கலை உணர்வோடு பார்க்கிறான் என்றால்,அதே பார்வையையும் என்கண்களில் கொண்டுவர இயலவில்லை சகோ.ஆனால் அதற்காக அவனை இழித்துப்பலிப்பதும் இல்லை.எனவே என்பார்வையில் ஆபாசத்தை வெளிப்படுத்த அவ்வாறு குறிப்பிட்டேன்.
  அது ஒரு நடுநிலை ஹிந்துவின் பார்வையில் சற்றே உருத்தலானது தான்,
  அறிவுருத்தியதற்கு நன்றி.நான் அதை திருப்பப் பெற்றுக்கொள்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 53. முதலில் என் கருத்தை ஏற்று என்றே வரியை திரும்ப பெற்றதற்கு நன்றி.

  உங்களிடம் நான் கூற விரும்புவது இது தான்
  ஒரு பாப்ரி மஸ்ஜித் சில இந்துத்துவ வன்முறைகள் இதுவே உங்களை இவ்வளவு பாதித்து இருக்கிறது. இந்தியாவிற்குள் படை எடுத்த நாள் முதல் அழிக்கப் பட்ட இந்திய செல்வங்களும், கோவில்களும், சூறையாடப் பட்ட செல்வமும் மக்களும் என்று இந்தியாவின் பாதிப்புகள் என்ன என்ன என்று இந்தியரான உங்களுக்கு தெரிந்து தான் இருக்க வேண்டும். ஒரு தனி மனிதன் தனக்கு பிரதமர் பதவி கிடைக்க வில்லை என்று நாடையே தன கட்சியின் துணை கொண்டு உடைத்து சென்றான்.
  இன்று வரை இந்தியாவின் அழிவையே பெரிதும் விரும்பும் நாடாக அது இருக்கிறது.

  அப்போதைய இழப்புகளின் வலியில் ஒருவன் ( அந்தணனையே வன்முறையில் ஈடுபடுத்த தூண்டிய வன்முறை அரங்கேறி இருக்கிறது ) அஹிம்சையை போதித்த காந்தியையே வன்முறை கொண்டு வீழ்த்தினான்.

  இந்துக்களின் வலி மட்டும் வலியில் சேர்த்தி இல்லையா? இந்துக்களின் தீவிரவாதம் தற்காப்பின் அடிப்படையில் ஆரம்பித்து இப்போது திசை மாறி அரசியல் புகுந்து என்று போய்க் கொண்டு இருக்கிறது என்பது எங்களுக்கும் வேதனை அளிக்கும் விஷயமே.

  ஒரு சராசரி இந்து அக்கம்பக்கம் மத வித்யாசம் இல்லாமல் தான் வாழ்கிறான். அவனைக் கூட வேறுவிதமாக தூண்டி விடுமாறு எழுதுவதை விடுத்தது உங்கள் மக்களுக்கு மத நல்லிக்கான ஒரு விளையாட்டில் கூட இந்தியா பாகிஸ்தானுடன் தோற்பதை ஆதரிக்கும் மக்கள் என்றே பொது கருத்தை (நானும் கண் கூடாக கண்டிருக்கிறேன்) உடைக்கும் விதம் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்.
  இந்தியாவுக்கு வெளியில் இருந்து வரும் தீவிர வாத அமைப்புகளுக்கு உடந்தையாக இருக்கும் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு உங்கள் மதவாதிகள் கடுமையாக நடந்து கொள்ளச் சொல்லி கேட்டுக்கொள்ளுங்கள்.
  இந்து எதிர்ப்பு என்பதை விட இது கொஞ்சம் பயன் தரும் என்று நினைக்கிறேன்.

  This is only a request.

  http://www.virutcham.com

  பதிலளிநீக்கு
 54. சகோ விருச்சம் அவர்களுக்கு.
  வேலைப்பளுவினால் பதில் தர சற்றே தாமதம்.

  //ஒரு பாப்ரி மஸ்ஜித் சில இந்துத்துவ வன்முறைகள் இதுவே உங்களை இவ்வளவு பாதித்து இருக்கிறது.//

  பரவாயில்லங்க,ஒரே வரியில,இஸ்லாமியர்களுக்கெதிரான அநீதிகளை அடக்கிட்டீங்க.உங்களுக்கு,முஸ்லிம்கள அடைந்த இழப்புகள் அவ்வளவு சாதாரணம் என்றால்,நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
  குறிப்பாக சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் இருந்து எடுத்தாலே,பாகல்பூர்,ஒரிசா,அஸ்ஸாம்,குஜராத்,தமிழகம்,அயோத்தி,பாம்பே,கோவை,என கலவரங்களாலும்,அரசினாலே நடத்தப்படும் போலி என்கவுண்டர்களாலும் இந்தியாவின் அத்துனை பகுதிகளிலும்,இரத்தம் படியாத முஸ்லிம்களின் வரலாறு இருக்கமுடியாது.இதை தாங்கள் சொல்வது போல்,ஒரு போதும்,சில வன்முறை என்ற வரையரைக்குள் அடக்கிட முடியாது சகோ.இதெல்லாம்,முஸ்லீம்களுகெதிரான திட்டமிட்ட சதி.அவர்களின்,செல்வங்களை எரித்து,சூரையாடி,பெண்களையும் குழந்தைகளையும் கிழித்தெரிந்து,ஆண்களை வெட்டி எரித்து,என எங்களின் மீதான அடி ஒவ்வொன்றும் மரண அடியாகவே திட்டமிட்டு ஹிந்துதுவாக்களால் நடத்தப்பட்டது.
  பெஸ்ட் பேக்கரி போல தனது குடும்பத்தினர்,தன்கண்முன்னே,குழந்தைகள் உட்பட எரித்துக் கொல்லப்படுபோதும்,செய்தவன் தண்டனையின்றி,நடமாட,தனக்கு அநீதம் இழைக்கப் படும்போதும்.அவன் சட்டத்தை கையில் எடுக்கவே செய்வான்.அவனை நான் ஆதரிக்கவும் இல்லை.அவனை,குறை சொல்லவும் இல்லை.இது அனைவருக்கும் பொருந்தும்.அப்படிபட்டவனை,ஒன்று போனால் என்ன இன்னொருத்தி இருக்காள்ல,என வஞ்சக சொல்கொண்டு,காழ்ப்புணர்வு கொள்ள,நான் ஒன்றும் கமல்ஹாசன் போல காமன்மேன் அல்ல.
  தாமதமான நீதி மறுக்கப் பட்ட நீதி என்பது போல்,இந்தியாவின் அத்துனை பகுதிகளிலும்,கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள்,குறைந்தது 15ஆண்டுகளுக்கு பிறகு,குற்றமற்றவர் என விடுவிக்கப் படுவதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும்.இப்படி குற்றம் இன்றி தண்டிக்கபடுபவனின் மன நிலை என்னவாக இருக்கும்.அவன் இளமையை யார் மீட்டுத்தருவது?உங்களுக்கெல்லாம்,இது சில வன்முறைசம்பவங்களாகவே தெரியும்.
  -----------
  அடுத்தது,இந்தியாவில் முஸ்லிம்களின் படையிடுப்பு.ஹ்ம்ம்.இத சொல்லி சொல்லியே புளித்து போய் விட்டது.ஏதோ முஸ்லிம்மன்னன்கள் மட்டும்தான் சூரையாடியதாகவும்,கோவில்களை இடித்ததாகவும்,சொல்வீர்கள்.ஒருவேலை,அவர்களது,கோவில் இடிப்பு,மத காழ்ப்புணர்வு காரணமாக சற்றே கூட இருக்கலாமே தவிர,வரலாற்றின் பக்கங்களில்,ஹிந்து மன்னர்களும்,இவர்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை நமக்கு விட்டுச்சென்றே உள்ளனர்.இப்படிப்பட்ட முஸ்லிம் மன்னன்களை ஒருபோது நான் ஆதரிப்பதில்லை.அவர்களை முஸ்லிம்களான நாங்களே குற்றப்படுத்துகிறோம்.இஸ்லாம் கூறும் நல்லாட்சியை அவர்கள் நிலைநிறுத்தவில்லை.அவர்கள் மீது உங்களை விட எனக்கு கோபம் அதிகமே.
  --------
  தொடரும்.......

  பதிலளிநீக்கு
 55. //ஒரு தனி மனிதன் தனக்கு பிரதமர் பதவி கிடைக்க வில்லை என்று நாடையே தன கட்சியின் துணை கொண்டு உடைத்து சென்றான்.
  இன்று வரை இந்தியாவின் அழிவையே பெரிதும் விரும்பும் நாடாக அது இருக்கிறது.//
  ம்ம்.ஜின்னா.இவரப்பத்தி ஒரு பதிவே போடலாம்,அவ்ளோ இருக்கு,இவரபத்தி சமீபத்ல,ஜஸ்வந்த் சிங் சொன்னத சொன்னா,ஏத்துப்பீங்கன்னு நினைக்கிறேன்.அத முழுசா தனிப்பதிவாவே போடுறேன்.விரைவில்.
  அப்ரோ பாக்கிஸ்தான் இந்தியாவின் அழிவை விரும்பும் நாடாக இருக்கிறது என்ற கருத்தில் நான் மாறுபட வில்லை.

  //அப்போதைய இழப்புகளின் வலியில் ஒருவன் ( அந்தணனையே வன்முறையில் ஈடுபடுத்த தூண்டிய வன்முறை அரங்கேறி இருக்கிறது ) அஹிம்சையை போதித்த காந்தியையே வன்முறை கொண்டு வீழ்த்தினான்.//

  அடேயப்பா.என்ன அழக காந்தியின் கொலையை நியாயப்படுத்துரீங்க சார்.உங்க உள்ளக்கிடக்கை,திருவண்ணாமலை தீபம் மாறி இப்போ தெளிவா தெரியுதுங்க..

  காந்தியை கொன்றது நாதுராம் விநாயக் கோட்சே.தெரியும்தான.பூனாவில் பிறந்த இவன்,1930களில் ரத்னகிரி எனும் ஓரில் முதன்முதலில் சாவர்க்கரை சந்தித்தான்,பின்னர் தனது மேல்நிலை பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு,ஹிந்து மஹாசபா,மற்றும் ஆர் எஸ் எஸ்'ல் செயல்வீரனாக இருந்தான்.சுதந்திரத்திற்கு பிறகு ஜின்னா,இந்திய ஆட்சியில் முஸ்லிகளுக்கும் பங்கு வேண்டும் எனக்கோரினார்,33% கொடுக்க ஒப்புதல் தரப்பட்டு,25% தரப்பட்டது.இது காந்தியின் முயற்சியால் நேருவின் விருப்பமில்லாது தரப்பட்டது.இது இந்த ஹிந்துதுவாக்களுக்கு பிடிக்கவில்லை.இரண்டாவது,காந்தி,ராமராஜ்யம் அமைப்பேன் என சொன்னதால் ஏற்றி போற்றீயவ்ர்கள்,ஒரு காலகட்டத்தில்,நான் கண்ட ராமன்,ராமாயண கதாபத்திர நாயகன் ராமன் அல்ல,என காந்தியே சொல்ல.அவரின் மீதான வெறுப்பு பன்மடங்காக கூடி.அவரை கொல்லவும்,அந்த பழி முஸ்லிம்கள் மீது விழவும்,இந்த இயக்கங்களில் இருந்து விலகி.கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு,அவருக்கு பெரிட்டா எனும் இத்தாலிய துப்பாக்கி கொண்டு 3 குண்டுகளை பரிசளித்தான்.
  இது வரலாறு,எப்பா?எவ்வளவு லேசா,அந்தணன்,அது இதுன்னு,விட்டா அவனுக்கு சிலை வச்சுடுவீங்க போலயே..ம்ம்..வரலாறு தெரியலன்னா,தெரிஞ்சுட்டு பேசுங்க..

  தொடரும்....

  பதிலளிநீக்கு
 56. //இந்துக்களின் வலி மட்டும் வலியில் சேர்த்தி இல்லையா? இந்துக்களின் தீவிரவாதம் தற்காப்பின் அடிப்படையில் ஆரம்பித்து இப்போது திசை மாறி அரசியல் புகுந்து என்று போய்க் கொண்டு இருக்கிறது என்பது எங்களுக்கும் வேதனை அளிக்கும் விஷயமே.//
  ம்ம்..தற்காப்பில் துவங்கியது ஹிந்து தீவிரவாதம் என்றால்,அநீதம் இழைக்கப் படும்போது தோன்றியதுதான் முஸ்லீம்களால் முன்னெடுக்கப் படும் தீவிரவாதம்.இவை இரண்டும் ஏற்றுகொள்ள முடியாததெனிலும்,இரண்டிற்கும் பாரிய வேறுபாட்டை உணரமுடியும்.
  அப்படி வளர்ந்த ஹிந்துதுவ தீவிரவாதம்,இப்போது அரசியல் அதிகாரத்தோடு,முஸ்லிம்களை கருவருக்க துவங்கியுள்ளது.ப்ரவீன் தொக்காடியா,திருச்சியில்,திரிசூலம் காட்டி,முஸ்லிம்களுக்கு 3ல் ஒன்று,எனவும்,நேருவின் பேரன்,முஸ்லிம்களின் கைகளையும் தலையையும் வெட்டுவேன் என்பன தொட்டு வெளிப்படையாக பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளது..

  ஐயா,சராசரி ஹிந்து மட்டுமல்ல.அனைத்து முஸ்லிம்களுமே மத வித்யாசம் இல்லாதுதான் இருக்கிறான்.என்ன இதில் நடந்த சம்பவங்கள்,முஸ்லிம்களின் மனதில் வடுவாகவும்,ஒருவித பய உணர்வையும் ஏற்படுத்திவிட்டதென்பது மறுக்கவியலாத உண்மை.அது காவிகளை கண்டாலே,ஒருவித வெறுப்புமனப்பான்மையை கொண்டுவந்துவிட்டது.அதை மாற்ற இருசாராரும் முயலவேண்டும்..நாங்கள் அப்படி அல்லஎன ஹிந்துக்கள் சொல்லவேண்டும் நீங்கள் அப்படி அல்லஎன முஸ்லிம்கள் உணரவேண்டும்.
  -----
  கிரிக்கெட்..இது பற்றி,எனகொன்றும் பெருத்த அபிப்ராயம் இல்லை,அதை நான் விரும்புவதும் இல்லை.அதில் முஸ்லிம் பாகிஸ்தானுக்கு சப்போட் பன்றான்னா?மொதல்ல,அத பாக்ரவனையே,பைத்தியகாரனாத்தா நான் பாப்பேன்,.இப்டி சொல்ரவன,பெரிய பைத்தியகாரன்ன்னு சொல்லலாம்.இவன்களால,நாட்டுக்கு ஒருபைசா நன்மை விளையாது.அவன் வீட்டுக்கும் கூட...
  -----
  இந்த கடைசி பாயின் சொல்லலாம்.இந்தியாவில் முஸ்லிம்களால் நிகழ்த்தப்படும் தீவிரவாதங்களுக்கு,முஸ்லிம்கள் முதலில் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.அதுவே எனது எண்ணமும் கூட..இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறை அதை செய்யும்...
  நன்றி....

  பதிலளிநீக்கு
 57. sila santhengangal,

  oru muslim innoru muslimin nilathai abagarithaal entha sattathin kil nadavedikkai edukkalam, oru muslim innoru muslimai kondru vittal (thiruvidacheri sambavam pol)endha sattam sirappaga irukkum sharia sattama allathu IPC ah,
  irandu muslimgal sambantha patta valakkugal anaithum sharia sattam pinpattrapada vendum yendru neengal ninaikeerirgala,
  2)
  neengalum intha naatin purvakudigalthaan oppukolgiren aanal islam endru oru maargam uruvavutharkku munnare engalukku ulla oru palakkam melam adithu urvalam selvathu aanal muslimgal perumbanmayaga ulla idangalil masoodhi ulla idangalil itharkku ethirppu thervippathu yen, koombu speaker vaithu neengal mattum tholalama,

  பதிலளிநீக்கு
 58. சகோ விஜய் அவர்களுக்கு,
  தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
  இந்தியாவைப் பொருத்தவரை,இஸ்லாமியர்கள்,12க்கும் குறைவான சிவில் சட்டங்களில் மட்டுமே,இஸ்லாமிய ஷரிஆ வை பின்பற்ற கோருகிறோம்.இந்திய அரசும் அங்கீகரித்துள்ளது.
  சரி நிலத்தகராறு,கொலை போன்றவற்றில்,இந்தியாவில் முஸ்லீம்களுக்குள் இருந்தாலும்,வேறு மதத்தினரின் தலயீடு இருந்தாலும்,,அது IPCஐ பின்பற்றி தான் தீர்க்கப்படுகிறது.

  முஸ்லீம்களை பொருத்தவரை,அத்துனை விடயங்களிலும்,ஷரிஆ வை பின்பற்றுவதில் எவ்வித தடையும் இல்லை.அதை நாம் வரவேற்க்கிறோம்.ஆனால் இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில்,இதை நடைமுறைப்படுத்துவதில் பல சட்ட சிக்கல்கள் வரும்.குறிப்பாக,ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமை கொன்றால்,ஷரிஆ படி அவனை கொல்வோம் என வைத்துக்கொண்டால்,அதுவே ஒரு முஸ்லீம் ஒரு மாற்றுமத சகோதரனை கொன்றால்,அவனுக்கு ipc படி,சில கால தண்டனையுடன் வெளிவர நேரும்,இது அனைத்து முஸ்லீம்களிடமும் நடுநிலையான நீதியாக இருக்காது.இன்னும் உள்ளே சென்றால் அது சாத்தியம் அற்றது என்பது விளங்கும்..அதனால் முஸ்லீம்கள் அதை விரும்பினாலும்,இந்தியாவில் அதை கடைப்பிடிக்க முடியாது.

  ஹிந்துக்களின் விழாக்களில்,இந்தியாவை பொருத்தவரை முஸ்லீம்கள் பங்கு பெருவதும்,வாழ்த்துச்சொல்வதுமே வழமை.தாங்கள் மேற்கோளிட்ட பிரச்சனை குறிப்பாக 1990களுக்கு பின்னர் தோன்றியவை.அதன் பின்னனி நீண்டது.இரு சாராரிடமும் தவறு இருக்கு.அதை கலைய இந்த தலைமுறையான நாம் முயற்சிப்போம்..

  நன்றி..

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்