திங்கள், ஏப்ரல் 12, 2010

தமிழ் ஹிந்து தளத்திற்கு எனது வன்மையான கண்டனம்...

தமிழ் ஹிந்து தளம்.
இது பொதுவாக ஹிந்து மதம் பற்றிய செய்திகளை அலசும் ஒரு தளமாக தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாலும்.அவற்றில் அதிகபட்சமாக மற்ற மதங்களின் மீதான,குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் பற்றிய அதீத விமர்சனங்களை காணமுடியும்.அவற்றின் மீதான கோபம்,கண்டனம்,வன்மம்,வெறுப்பு,இவையெ அங்கு விரவி காணப்படுகிறது.
இந்த தளம் எனக்கு அறிமுகமானதுகூட அவ்வாறே.இஸ்லாம் குறித்த சில தவறான கண்ணோட்டம் கொண்ட கட்டுரைகளை நான் கண்ணுர நேர்ந்ததே,என்னை அந்த தளத்தின் தொடர் வாசகனாக்கியது.
சரி..எந்த மதத்தையும் விமர்சனம் செய்யலாம்,தவறான பார்வை இருக்கலாம்.கட்டுரைகள் எழுதலாம்..தவறல்ல..ஆனால் அதில் கண்ணியம் இருக்கவேண்டும்..அது சற்றே அங்கு வற்றி காணப்படுகிறது...
சரி..அது அவரவர் கையிருப்பை காட்டுகிறது.போகட்டும்.நமது தரப்பு நியாயங்களாவது அந்த அரங்கில் வைக்க அனுமதிக்கப் படுகிறதா என்றால்..அனுமதிக்கப் படுகிறது..எதுவரை..நமது கருத்து நியாயமானதாக இருந்தாலும்,அவர்களை சுடாதவரை அனுமதிக்கப் படுகிறது..
இது ஒரு ஹிந்து தளமாக ஹிந்து சமயம் பற்றி விவாதிக்கும் மன்றமாக இருப்பின்,அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்..இல்லை,நாங்கள் அனைத்து விடையங்களையும் விரிவாக விவாதிப்போம் என தாங்கள் சொல்வீர்களானால்...தவறல்ல...முழுவதுமாக வரவேற்கிறோம்..
ஆனால் அறிஞர் அண்ணா சொன்னது போல "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்பத்ற்கினங்க எங்களது கருத்துகளையும் எவ்வித திரித்தலும் இன்றி அனுமதிக்க வேண்டும்..ஆனால் அது அங்கு நடப்பதில்லை
சரி..சில மூடர்கள்..இழிவான வார்த்தை பிரயோகம் செய்து வசை பாடுவது வழக்கம்..அவை மட்டுறுத்தப்படுவது நியாயம்.எங்களை போன்ற எழுத்து கண்ணியம் பேன எண்ணுபவர்களையும்,நடுநிலையாக கேள்விகளை முன்வைப்பவர்களையும்.தவிர்த்தால்,எங்கோ தப்பு நடக்கிறது..
ஒன்று ஹிந்து மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் வலிக்கிறது.அதை மனம் ஏற்க மறுக்கிறது.அல்லது அதை அரங்கேற்றாமல் மறைக்கிறது..
இங்கே நடுநிலைமை, காற்றில் பறந்த வேட்டியாக்கி தங்களது மானமே போகிறது..
அப்படி நடுநிலை தவறிய தங்களின் கட்டுரை நடுநிலையுடன் இருக்கும் என்ன எண்ணுவது மூடத்தனமே அன்றி வேறில்லை என எண்ணுகிறேன்..
சில சமயங்களின் எனது கருத்தை அனுமதித்துள்ளீர்கள்.அது ஹிந்து மதத்தை தாக்காமல் இருக்கும் வரை,ஆனால் வேறு சில சமயங்களிலோ வக்கிரமாக எனது கருத்தை திரித்து,பொருள் மாற்றி,அதை எனக்கெதிராக திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.???
அதை என்னால் பொருத்துக் கொள்ளவே இயலவில்லை.இத்தனை நாளும் ஒரு அயோக்கியர்களின் கூடாரத்திலா,நமது வாத்தை வைத்துக் கொண்டு இருந்தோம் என எனக்கே வெட்கமாக இருந்தது.
ஒரு கருத்து முரணாக,அல்லது தன்னை பாதிப்பதாக இருப்பினும் ஊடக தர்மத்தின் படி அதை அனுமதிக்கவே வேண்டும்..ஒருவேலை அடிக்கொருமுறை அவர்கள் சொல்லும் ஹிந்து தர்மத்தில் அது பற்றிய குறிப்பு இல்லையொ என்னவோ அதை அவர்கள் செய்வதில்லை..
சரி விரசமாக ஆபாசமாக கருத்துகள் வரும்.அவற்றை கேள்விகணக்கின்றி தவிர்த்துவிடலாம்...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்..ஒருவனது கருத்தை தடுக்க அல்லது அனுமதிக்கவே தளத்தினருக்கு உரிமை உள்ளது.அது தவிர்த்து,அவனது கருத்தில் கைவைத்து,அதை திரித்து விளையாடுவது..என்னை பொருத்தவரை விபச்சாரத்துக்கு ஒப்பானது...
சரிதான் இதுவும் ஒருவித கருத்து விபச்சாரம் தானே.ஒருவனது தனிப்பட்ட கருத்து என்பது அவனுக்குறியது,அதில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை.அப்படி இருக்க அதில் கைவைத்து கபடி ஆடுவது.இழிவிலும் இழிவான செயல்...எனக்கு இதுக்கு மேல கடுமையான வார்த்தை,கண்ணியமா வரமாட்டேங்குது...
சரிடா அப்படி என்னத செஞ்சிடானுக,இந்த பொலம்பு பொலம்புரன்னு கேக்குரீங்களா?எனது கருத்தை பலமுறை இந்த தளத்தில் வைக்கும் போது காக்கா வந்து அகஸ்மாத்தா தூக்கிட்டு போய்டுது...சரி போனாலும் ப்ரவாயில்லன்னா,அந்த கருத்து மேலயே இந்த தமிழ்ஹிந்து தளத்தோட எடிட்டர் காக்கா கக்கா போய் அதை கையில எடுத்து என்னோட பின்னூட்டம்னு போட்டுடுது..அது தா காரணம்..
இங்கே..எனது ஒரிஜினல் பின்னூட்டமும்,ஹிந்து தளத்தில் திரித்து வெளியிடப்பட்ட பின்னூட்டமும் தங்களது பார்வைக்கு....
இது என்னோட பின்னூட்டத்தின் பகுதி:
ஏன் இவ்ளோ வெருப்ப எங்க மேல உமிழ்ரீங்க...நா ரொம்ப நாளா இந்த தளத்தில் வாசிப்பாளனா இருக்கேன்.ஆனா,வந்துட்டு வருத்ததோடதா போவேன்.என்ன காரணத்துக்காக நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் மீது இங்கு சாணியடிக்கப் படுகிறது.நான் கண்ட வரை அப்படி ஒன்னும் சொல்லவில்லையே.எவனொ ஒருவன்,ஏதொ ஒரு காரணத்துக்காக எனது மார்க்கத்தை முன்னிருத்துகிறானென்றால்,அதை இங்கு இவ்வளவும் படித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?என வருத்தப்படுவேன்....
ஹிந்துக்களால் செய்யப்பட்ட எத்தனையோ அநீதங்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் ஆரா வடுவாக இருப்பினும்,அதை என்னால் ஹிந்து தீவிர வாதம் என முட்டால் தனமாக சொல்ல தோன்றவில்லை.ஏனென்றால்,நான் என் ஹிந்து மக்களை பார்க்கிறேன்.அவர்களோடு உறவாடுகிறேன்.அவர்கள் அப்ப்டி அல்ல என எனக்கு தெரிகிறது.மாறாக இது மதவாத சக்திகள்,மதத்தை கொண்டு,கிளர்ச்சி செய்து,மக்களுக்கு மத்தியில் ஆதாயம் தேட துடிக்கும் கயவர்களின்,அரசியல் பொருக்கிகளின் செய்கை என அறிகிறேன்,செய்பவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக,நான் ஹிந்து மதத்தை பழிக்க எத்தனிக்க அவ்வளவு மூடனும் அல்ல.
குஜராத் சம்பவத்துக்கோ,பாபர் மசூதி இடிப்பு,அப்ரொ வந்த கலவரங்களுக்கோ, இங்க என் பக்கத்துள இருக்ர என் நண்பன நா குத்தம் சொல்ல முடியுமா?அது எவ்ளோ பெரிய பைத்தியகாரத்தனம்...
அப்டி இருக்க... இஸ்லாமிய பயங்கரவாதம் என மதத்தை முன்னிருத்தும் போது,எனது ஹிந்து சகோதரன் இயற்கையாகவே..நீங்கள்லந்தானடா?..அப்டீன்னு என்ன நோக்கி பாக்க வெக்கிரீங்களே,ஏன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தமிழ்ஹிந்து தளத்தில் மேலே நான் பதிந்த பின்னூட்டத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மட்டும் லாவகமாக நீக்கப் பட்டு,தங்களது தர்மத்தை காக்க நடந்த முயற்சியின் வெளிப்பாடாக அவர்கள் மட்டுறுத்தி பின் வெளியிடப்பட்ட பின்னூட்டம்...
படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..
இதையாவது ஒரு வகைக்கு ஏற்றுக் கொள்ள(முடியாது)லாம் என்றால் அடுத்து வருவது இருக்கே..எப்பா எங்கதா இத தொழில் சுத்தத்த கத்துகிடீங்களோ தெர்ல...
மூச்சுக்கு 300 தடவ சொல்ர ஹிந்து தர்மமா இருக்குமோ...இருக்காது..அப்படி நான் சொன்னா,அது நீங்க செய்ர அதே அவதூரு பிரச்சாரத்த நானும் செய்ரமாறி ஆயிடும்..எனது மார்க்கம் ஒருபோது அதை கற்றுத்தரவில்லை..வன்மையாக கண்டிக்கிறது....
இது தங்களது அயோக்கிய தனத்தின் உச்சமே...எனக்கு தெரிந்த வரை,..இன்னும் இருக்கலாம்..
சரி மேட்டருக்கு வருவோம்...
இது தமிழ்ஹிந்து தளத்தில் காசியை பற்றி சன் டீவீ வெளியிட்ட நிஜம் எனும் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் நான் பதிந்த எனது ஒரிஜினல் பின்னூட்டம்....
- - - - - - - - - - - - - - - - - -
அன்பு சகோதரர்களுக்கு.

காசியில் நடக்கும்,சில விஷயங்களை சுட்டி காட்டி,சன் டீவி,ஒரு நிகழ்ச்சியை தயாரித்து சில வாரங்களாக ஒளிபரப்பியது.இது காசியில் நடக்கும்,அரசுக்கு தெரியாத(தெரிந்த) சில தவறுகளாகும்.அதுவல்லாது அங்கு கடவுளின் பெயரால் நடக்கும் சில மூட பழக்கவழக்கங்களையும்,வேறு சில முட்டால் தனக்களையும் சுட்டி காட்டுவதாய் இருந்தது.

இதை விமர்சித்து சில ஹிந்து தளங்கள் எழுதி இருந்தன.சன் டீவியின் உண்மையான முகம் என.அவர்கள் ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து,அவர்கள் மததின் மீது சேறு பூசுவதாக.

சரி இருக்கட்டும்,தமிழகத்தின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமாக திகலும் சன் குழுமம்,அடிப்படையில் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படுவது.இந்தியாவில் மட்டுமல்ல,உலகம் முழுவதும்,அதனை பெருவாரியாக பார்க்க கூடியவர்கள்,ஹிந்துக்களே.

இது போன்ற,ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினால்,அதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வை காட்டிலும் எதிப்பலைகள் அதிகம்,என்பது,சராசரி மனிதனுக்கு வெளிச்சம்.அப்படி இருக்க,முதல் நிலை நிறுவனத்தை நடத்திகொண்டு இருக்கும் ஒருவர்,தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றியே,தவறாக நிகழ்ச்சி ஒளிபரப்புவது,எதற்கு?

அவர்கள் ஒன்றும் ஹிந்து எதிப்பாளர்கள் இல்லயே.அப்படியே இருந்தாலும்,அது அவர்களின் தொழிலை பாதிக்கும் என்பதால்,அதை அவர்கள் செய்யாது தவிர்க்கவே செய்வார்கள்.

சரி.எப்போதும் இயல்பாய் வரும் குற்றசாட்டை,எடுத்து கொள்வோம்.பணத்திற்காக??

இது இவர்களை பொருத்தமட்டில் ஒவ்வாத விவாதம்.இந்தியாவின் மிகபெரும் 20 பணக்காரர்கள் பட்டியலில் அம்ர்ந்து இருக்கும் இவர்கள்,இந்தியாவின் ஒரு பெரும் பகுதியான தமிழகத்தை ஆளும் இவர்கள்,தான் எண்ணியதை அந்த மாத்திரத்திலே செய்து முடிக்கும் பலம் பொருந்திய இவர்க்ள்,யாரிடம் போய் பணத்திற்காக நிற்கப்போகிறார்கள்.தெரியவில்லை...

அதுவல்லாது,அவர்கள் அந்த ஒரு நிகழ்ச்சிக்கு செலவிடும் அந்த தொகை அத்தனை பெரியது.அதை அவர்களே,வர்த்தக விளம்பரம் மூலம் எளிதாக பெரும் பட்சத்தில்,ஹிந்துக்களின் நிறுவனங்களே அனைத்து விளம்பரமும் தருகின்றனர்.

அப்படியிருக்க பணத்துக்காக என்ற அந்த வலுவற்ற குற்றசாட்டும் இங்கே வலுவிழக்கிறது.

இன்னொரு முக்கியமான (பைத்திய) குற்றசாட்டை முன்வைப்பர்கள்.சிருபான்மையினரை கவர் பன்ன...

ம்ம்ம் எவனோ எந்த நாட்டிலோ சிலரை கூட்டி தீவிரவாதம் செய்தான் என்பதற்காக இந்தியாவில் உள்ள மதரசாக்களை தாங்கள் ஒட்டுமொத்த,தீவிரவாத பயிற்சி கூடம் போல குற்றம் சாட்டும்,இத்தனை வீடியோ ஆதாரங்களுடன் அவ்ர்கள் காட்டும்போது,அதில் 100% அல்ல,50% மேனும் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது…

இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?அவர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.சரி.உங்களுக்கென்ன.ஒருவேலை,காசியை தாங்கள் நம்பி இருப்பது போல,மதரசாக்களை நாங்கள் நம்பியிருந்தால் அதில் எங்களுக்கு தெளிவு பிறக்குமே.

http://www.tamilhindu.com/2009/12/kasi-nijam-true-face-of-sun-tv/
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்..
இங்கே சிவப்பெழுத்துகளில் உள்ள எனது பின்னூட்டத்திற்கும்,அவர்கள் கைவைத்து வக்கிரம் புரிந்து,வன்புணர்ந்து வெளியிட்ட பின்னூட்டதையும் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு கேடுகெட்ட செயலை செய்து விட்டு..ஹிந்து தர்மம் பற்றி அதே வாயாலே...பேசுகிறார்கள் என்று...
மேலே சொன்ன அத்துனை நியாயமான காரணங்களை விடுக்க தெரிந்தவர்களுக்கு,இதையும் விட்டிருக்கலாம்.ஆனால் இவர்களின் குயுக்தி சும்மா இருக்குமா என்ன?அதனால் தான் வேலையை காட்டிவிட்டார்கள்...
நீ என்ன வேனாலும் சொல்லிட்டு போ..நாங்க இப்படித்தான் என தெளிவாக நிரூபித்து விட்டார்கள்...
ஆனால் எனது பின்னூட்டத்திற்கு பதில் தரும் ஹிந்துக்களின் பதில் எத்துனை வக்கிர சாடலாக இருந்தாலும்,,,அதை மனங்குளிர்ந்து வெளியிடுவார்கள்...
இவர்களது இந்த செயலை மக்கள் அறியவேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்,,,
இவர்களது இந்த செயலை கண்ணுரும் போது...இவர்கள் சுதந்திரம் வாங்கிதந்த காந்திக்கு துப்பாக்கி குண்டை பரிசளித்த ஹிந்துத்துவா கும்பலாக இருக்குமோ என சந்தேகிக்க தோன்றுகிறது...அவர்களே இது போன்ற செய்கைக்கு முழுத்தகுதி பெற்ற கனவான்கள்..என்ன சந்தேகம் அவர்களேதான்....
நன்றி
அன்புடன்
ரஜின்

13 கருத்துகள் :

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே !நான் தற்செயலாக தங்களின் தளத்தை கண்டேன். நீங்கள் மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.(நான் மேலகொடுமலுரை சார்ந்தவன். இப்போது சென்னையில் இருக்கிறேன் .)

  பதிலளிநீக்கு
 2. அன்பு சகோதரர் ரஜின் அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்துலில்லாஹ், தாங்கள் இந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி.

  ஒருமுறை தாலி பற்றிய விஜய் டிவியின் நிகழ்ச்சியைப் பற்றி எழுதியவர்கள் ஹிஜாப் பற்றியும் அந்த பதிவில் எழுதினார்கள். எழுதியதாவது உண்மையாக இருந்ததா என்றால், இல்லை. அவர்களின் அறியாமையே தெரிந்தது.

  தங்களுடைய கருத்துக்கள் தவறு என்று விளக்கி எழுதினால் அதை அவர்கள் வெளியிடவே இல்லை. வேண்டுமென்றே மறுக்கப்பட்டதா அல்லது வேறு எதாவது கோளாறா, இறைவனே அறிவான்.

  இறைவன் அவர்களுக்கு நல்அறிவை வழங்கட்டும்...ஆமின்

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ
  http://ethirkkural.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா12/4/10 7:07 பிற்பகல்

  Irainesan maadhiriyaana unga aalungalukku mothalla solli kuduppaa. Appuram oor niyaayam pesalaam.

  பதிலளிநீக்கு
 4. ஸலாம்..வாங்க ஷாநவாஸ்..
  ம்ம்.ரொம்ப கிட்ட வந்துட்டீங்க..இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வாங்க கட்டுரைகளை படித்து,கருத்துகளை தெரிவியுங்கள்.. நன்றி


  வாங்க ஆஷிக்..
  உண்மைதான்.அந்த விஷயத்ல நானும் கவனிச்சேன்,பொதுவா முஸ்லிம்கள் யாரும் அந்த தளத்தில் பதில் சொல்வது இல்லை.அவர்கள் நம்மை சாடுவார்கள்,நாம் அவர்களின் குறைகளை கூட சுட்டிகாட்ட கூடாது.ஏற்க மனம் இருக்காது,.அது பரவலாக ஹிந்து மக்களால் படிக்கப் படும் தளம் அல்ல.ஹிந்துத்துவாக்களால் படிக்கப்படும் தளம்..
  அப்டிதா இருப்பாங்க..

  உங்களது துஆ'வுக்கு ஆமீன்..
  நன்றி

  பெயரில்லா பித்தன்..அவர்களே..
  முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..அப்ரொ இறை நேசன் யாரு அவர் என்ன பண்ராருன்னு சொல்லுங்க..நீங்க சொன்னத வச்சு,இறைநேசன் பேர்ல,ஏதும் ப்ளாக் இருக்கான்னு பாத்தே.இருந்துச்சு.2006 ஓட ந்க்கிது,அவ்ளோதா,அவரு உங்க நேசகுமாருக்கு,பதில் சொல்லிருக்காரு அவ்ளொதானே.வேரொன்னும் பண்ணலியே தம்பி அவரு.ம்ம்.இன்னும் இவர சேத்து,மலர்மன்னன்,புதுவை சரவணன்,ஜடாயு,இப்படி பலபேர் இருக்காங்க..அவங்கள நிருத்த சொல்லுப்பா..அப்ரொ இவங்கள சொல்லலா,
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. வருகை தந்த அனைவருக்கும் நன்றி,,,

  பதிலளிநீக்கு
 6. Asalaamu Alaikkum Brother,

  I started reading your blog couple of weeks back from one of our fellow brother's site.
  Alhamdulillah. you are doing excellent work. Please keep up the good work. I expect more from you insha allah.

  பதிலளிநீக்கு
 7. வ அலைக்கும் சலாம் சகோ ஆரிஃப்

  வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..
  தொடர்ந்து வாங்க.இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறப்பாக எழுத துஆ செய்யுங்கள்

  நன்றி

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா18/4/10 6:58 பிற்பகல்

  நண்பா, அந்த இணைய தளத்தின் கட்டுரைகளை படித்தாலே புரிய வேண்டாமா, அது எதற்காக நடத்தப்படுகிறது என்று. சிலரின் மன அழுக்குகள் அங்கே கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நியாயமான பதில்கள் மறைக்கப்படுவது அவர்களது கொள்கையாகவே வைத்திருக்கும்போது வேறு எதை எதிர்பார்க்க முடியும். அந்த இணைய தளத்தை பார்ப்பதே தவறு என்பது என் கருத்து. வேடிக்கையான ஒரு விஷயம் என்ன தெரியுமா. அந்த இணைய தளத்தில் அடிக்கடி சினிமா விமர்சனங்கள் வரும், அப்படி அவர்கள் விமர்சனம் எழுதும் திரைப்படங்களில் வில்லனாக ஒரு கிறிஸ்தவனோ அல்லது இஸ்லாமியரோ இருக்கும்படியான திரைப்படங்களின் விமர்சனங்கள் தான் எழுதுவார்கள். அப்படி இருந்துவிட்டால் அந்த விமர்சனம் முடிவு எப்படி தெரியுமா இருக்கும் 'இந்துக்களே பார்த்தீர்களா இந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இப்படித்தான் இந்தியாவில் அட்டுழியம் செய்கிறார்கள், நாம் கவனமாக இருக்க வேண்டும் நம்மை அழிக்க பார்க்கிறார்கள், அய்யோ, அம்மா' என்று கூப்பாடு போடுவார்கள். அதே நேரம் 'இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் 99 சதவீத திரைப்படங்களில் இந்துக்கள் தான் வில்லன்களாக காட்டப்படுகிறார்கள், அவர்கள் சினிமாவில் கொலையும் கற்பழிப்பும் செய்கிறார்கள், அப்படிஎன்றால் எல்லா இந்துக்களும் அப்படிதான் இருப்பார்களா' என்று நாம் கேட்டால் அங்கே அது வெளியிடப்படாது. சினிமாவில் நடைபெறும் செயல்களை வைத்து ஒட்டு மொத்த மக்களையும் எடை போடும் இவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
  ஒரு விஷயத்தை 'நான் சொல்வது தான் சரி' என்று தாங்களாகவே முடிவு செய்து வைத்திருப்பவர்களிடம் விவாதம் செய்வதால் எந்த பயனும் இல்லை.
  அங்கே உங்கள் பதில்களை இட்டு நேரத்தை வீணடிப்பதற்கு பதில் உங்கள் பதிவில் எதாவது எழுதுங்கள்.

  http://www.tamilhindu.com/2009/10/achchanurangatha_veedu_review/
  http://www.tamilhindu.com/2009/12/avatar_review/
  http://www.tamilhindu.com/2009/03/review-a-wednesday/
  http://www.tamilhindu.com/2009/09/unnai_pol_oruvan_review/
  http://www.tamilhindu.com/2010/02/taken_movie_review/
  http://www.tamilhindu.com/2009/08/monjai-assamese-movie/
  http://www.tamilhindu.com/2009/09/unnai_pol_oruvan_review/
  http://www.tamilhindu.com/2009/06/mizhigal-sakshi-movie-review/

  P. GEORGE THOMAS

  பதிலளிநீக்கு
 9. வாங்க சகோ தாமஸ்.
  நா ஏன் அங்க போயி பின்னூட்டம் இட்டு,எடுத்து சொல்ரேன்னா?எல்லா ஹிந்துக்களும் கெட்டவ்ர்களல்ல.சில மதவாதிகளே,காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.அவர்களை நான் கண்டு கொள்வதில்லை.நான் இருக்கும் ஒருசில நடுநிலை ஹிந்துவுடனே பேசுகிறேன்.அவன் புரிந்து கொள்வான்,நமது நிலைப்பாட்டை.எனக்கு அது போதும்..கிருத்தவர் முஸ்லிம் என்றல்ல,பாரபட்சம் பாக்கம் தூற்றுவார்கள்.இந்த விஷயத்ல,அதிகம் திட்டுவாங்கி உங்களைவிட முன்னிர்ப்பது முஸ்லிம்களான நாங்களே..

  நன்றி

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா30/9/10 2:59 பிற்பகல்

  உங்க ஆட்கள் எவனாவது ஒருவன் நியாயமாக பதிவுகள் போடுகிறானா, எழுதுகிறானா என்று காட்டு பார்க்கலாம். முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சுரண்டவும். பிறகு அடுத்தவனிடம் வரலாம்.

  பதிலளிநீக்கு
 11. பெயரோடு வாங்க அனானி.இந்த குல்லநரி வேலை எதுக்கு.ஆணின் பெண்மைத்தன அடையாளம் அல்லவா?நீங்க பேரோட வந்து இத சொன்னீங்கன்னா,உங்க மேல இருக்குர மதிப்பு கூடும்.கேட்ட கேள்விக்கு பதிலும் வரும்.ம்ம்.

  தமிழ் ஹிந்து தளத்தினர் அவர்களின் முதுகை பார்க்காமல்,முஸ்லீமகளை குற்றப்படுத்துவதை தான் கண்டிக்கிறேன்.இது நீங்க அவங்களுக்கு சொல்லவேண்டிய பின்னூட்டம்.அட்ரஸ் மாறி போச்சு.உங்க தரத்துக்கு ஒரு பின்னூட்டத்த அனுமதிச்சதே போதும்..மற்றது எனது குப்பைதொட்டிக்கு நகர்த்தப்பட்டுவிட்டது..

  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. இழி பிறவியோ நீ இழிவான வார்த்தை புழங்க
  முகத்தை சேலையால் மூடி,
  கொல்லைப்புரம் நின்று கொக்கரித்துவிட்டு
  கெண்டைக்கால் தலையிலடிக்க ஓட்டமெடுக்கும்
  குருநரியே.முதுகெழும்பற்ற வீணனே,
  உனக்கான தளம் இதுவல்ல


  அனானியின் அநாகரீக பின்னூட்டம் அவர் முகத்திலே கிழித்து எரியப்பட்டுவிட்டது.
  பெயர் சொல்லி விவாதிக்க திரானியற்ற,ஆண் என சொல்ல தகுதியும் அற்ற அனானியிடம் ஆண்மை பற்றி பேசுவது தவறுதான்....

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா13/2/12 4:35 முற்பகல்

  இந்த மண்ணுலகில் மனிதன் மனிதனாக வாழ மதம் என்கிற மதம்(மிருகம்) ஒரு மார்க்கமே தேவை இல்லை
  மனித நேயமே போதுமானது.இதை எல்லா மதத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும்.மக்களை மதம் மற்றம் செய்வதால் நாளைய உலகின் அழிவையும் ஆக்கத்தையும் யாராலும் மாற்ற முடியாது. இப்படி இருக்கும்போது மக்கள் அனைவரும் ஏன் மதம் மதம் என்று அலைகிரார்களோ.

  பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்