புதன், நவம்பர் 24, 2010

ஃபத்வாவுக்கு கண்டனம்


இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட,பிரபலமாக ஃபத்வாக்களை வழங்கி வரும் தாருல் உலூம் தியோபாண்ட் மதரஸா இன்று ஒரு செய்தியை தனது ஃபத்வா பிரிவில் வெளியிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அந்த மதரஸாவின் தளத்திற்கு சென்று சரிபார்த்தாகிவிட்டது.மூன்று ஃபத்வாக்களில் இரத்ததானம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1166/957=L/1430) - இந்த ஃபத்வாவில்,இரத்ததானம் செய்யக்கூடாது எனவும்,ஆனால் ஒருவர் தனது உறவினரை காப்பாற்ற இரத்ததானம் கட்டாயத்தின் பேரில் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 2145/3580=B/1429) - இரண்டாவதாக இந்த ஃபத்வாவில்,ஒருவர் எதிர்பாரா தேவைக்கும்,கட்டாயத்தேவைக்கும் இரத்ததானம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1496/1496/M=1431) - மூன்றாவதாக, இந்த ஃபத்வாவானது,நோன்பு காலங்களில் இரத்தம் வெளியேறுவது நோன்பை முறிக்குமா என்ற கேள்விக்கு,பதிலாக,அது நோன்பை முறிக்காது என கூறிவிட்டு.இரத்ததானம்,தேவையும் கட்டாயமும் இருக்கும் போது மட்டும் தரலாம் எனக்குறிப்பிடுகிறது.

இம்மூன்று பத்வாக்களும் ஒன்றுடன் ஒன்று சற்றே முரன்படுகிறது.மற்றும் அனுமதித்த ஒன்றை அனுமதிக்கப் படவில்லை என சொல்லிவிட்டு,அவசியத்திற்கு அனுமதி,என்பது அறிவார்ந்த பத்வாவாக இல்லை.


இது போன்ற பத்வாக்கள்,இரத்ததானம் போன்ற உயிர்காக்கும் காரியங்களுக்கு இஸ்லாம் எதிரானது,என்ற தவறான கண்ணோட்டத்தை பிறர் மத்தியில் எழுப்புகிறது.

இது எப்படி இருக்கிறதென்றால் இஸ்லாம் 100 ரூபாய் செலவிட அனுமதிக்கிறதா என்றால்? இஸ்லாம் 100 செலவிடுவதை அனுமதிக்கவில்லை.மாறாக தேவைக்கு மட்டும் செலவிட அனுமதிக்கிறது என சொல்வது போல உள்ளது.எனவே முதலில் இஸ்லாம் 100 ரூபாய் செலவிட அனுமதிக்கவில்லை என சொல்வது முட்டால் தனமே.

இஸ்லாம் எதையும் தேவை இன்றி செலவிட அனுமதிப்பதில்லை.அது 1 ரூபாய் ஆனாலும் சரி,1 கோடி ஆனாலும் சரி.இரத்ததானம் ஆனாலும் சரி.

இரத்ததானம்:

இரத்தம் ஆனது,ஒருவனுக்கு,அவசியத்தேவை எனும் போது மட்டுமே ஏற்றிக் கொள்ளப்படும்.அது ஒன்றும் ஊட்டச்சத்து பானம் அல்ல,அவசியல் இல்லாவிட்டாலும்,ஏற்றிக் கொள்வதற்கு.அது எக்காலமும்,அவசியத்தேவைக்கு மட்டுமே பயன்படும்.


இரத்தத்தை யாரும் பொழுதுபோக்கிற்காக தெருவில் இரைத்துவிடுவதில்லை.இரத்ததானம் தருபவர்கள்,இது ஒருவரின் உயிரை காக்க உதவும் என்ற மேலான நோக்கத்தின் பொருட்டே தானம் வழங்குவார்.அவரது எண்ணப்படியே அது ஒரு உயிரை காக்கவே பயன்படும்.

பின்னர் தனது உறவினர்களை மட்டும் காக்க இரத்ததானம் தர அனுமதி என முதல் ஃபத்வா வெளியிடப்பட்டது எந்த ஆதார அடிப்படையில் என விளங்கவில்லை.இஸ்லாம் உலகின் அனைவருக்குமான மார்க்கம்.அதில் அனைவரும் சமமே.அதில் எனது சகோதரனின் உயிர்,எனது நண்பனின் உயிர் இரண்டும் வேறல்ல.அப்படி ஒரு இடத்திலும் இஸ்லாம் சொல்லவில்லை.

பேதம் பாராமல் அனைவருக்கும் உதவுதவே இஸ்லாத்தின் நெறி.அப்படி இருக்க உறவினருக்கு மட்டும் உதவு,மற்றவனாக இருந்தால் உதவாதே என இஸ்லாம் சொல்வதாக பத்வா வெளியிடுவது,மிகுந்த கண்டனத்திற்கு உரியது.





தனது அண்டைவீட்டாருடன் எந்த அளவிற்கு இணக்கமாக இருக்கவேண்டும் என உன்னதமாக இஸ்லாம் கற்றுத்தருகிறது,அவர் எம்மத்துக்காரர்,எவ்வூர்க்காரர் என பார்க்கச் சொல்லவில்லை.அப்படி இருக்க இப்படி உறவினரை மட்டும் முக்கியத்துவமாக கருதச்சொல்லும் இந்த பத்வாவானது முட்டால் தனமான ஒன்றே.

அப்படி இருக்க இரத்ததானம் என்பதே கட்டாயத்திற்காகத்தான்.அதாவது கட்டாயம் ஒரு உயிரை காக்கத்தான் இரத்ததானம் செய்யப்படுகிறது.இது ஊதாரித்தனமாக யாரும் வெளியேற்றுவதும் இல்லை,ஊதாரித்தனமாக யாரும் இதை பயன்படுத்துவதும் இல்லை.

எனவே இது போன்ற பத்வாவானது,இஸ்லாம் இரத்ததானத்திற்கு எதிரானது என்ற தோற்றத்தை வழங்குவதால்,இந்த ஃபத்வாவை வெளியிட்ட அந்த மதரஸாவுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய மார்க்க தீர்ப்பான ஃபத்வாக்களை வெளியிடும் அந்தஸ்த்து பெற்ற மதரஸாக்கள்,அந்த ஃபத்வாக்களை வெளியிடும் போது மிகுந்த பொருப்புணச்சியோடு செயல்படவேண்டும்.

உலகில் எந்த ஒரு மதரஸாவோ,அல்லது நாடுகளோ இஸ்லாமிய மார்க்கத்திற்கான தலைமை அல்ல.அல்லாஹ் வழங்கிய வேதமும்,நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையுமே இஸ்லாம்.

அப்படிப்பட்ட அழகிய வேதமும்,அதை கொணர்ந்த நபி(ஸல்) அவர்களும் இரத்ததானத்தை தடை செய்யவில்லை.இரத்ததானம் அனுமதிப்பபட்ட ஒன்றே.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் பெருவாரியாக இரத்ததானம் செய்பவர்களாக இருக்கின்றனர்.தமிழக அரசாலும்,பல்வேறு சமூக நல அமைப்புகளாலும் பெரிதும் பாரட்டும் வண்ணம் அவர்களின் இரத்ததானம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இத்னை சிறப்பாக செய்து கொண்டிருக்கும்,பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட பத்வா போல சமீபத்தில் சவூதியில் வெளியான பைத்தியக்காரத்தனமான "கார் டிரைவர்களுக்கு பால் கொடுத்து சகோதரர்களாக்கும்" பத்வாவும் இதைச்சார்ந்ததே.....


எனவே இது போன்ற ஃபத்வாக்களுக்கு இஸ்லாமியனான நானே கண்டனம் தெரிவிக்க தார்மீக முன்னுரிமை பெறுவதால் இப்படிப்பட்ட பத்வாக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.இஸ்லாமிய சகோதரர்களும் இது போன்ற பத்வாக்களை புறக்கணித்து,தங்களது கண்டனங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்
ரஜின்

5 கருத்துகள் :

  1. //இது போன்ற ஃபத்வாக்களுக்கு இஸ்லாமியனான நானே கண்டனம் தெரிவிக்க தார்மீக முன்னுரிமை பெறுவதால் இப்படிப்பட்ட பத்வாக்களை வன்மையாக கண்டிக்கிறேன்//

    DEAR RAZIN, I FULLY SUPPORT YOU FOR THE ABOVE.

    .........

    பதிலளிநீக்கு
  2. சகோ வாஞ்சூர் அவர்களுக்கு,வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
    இஸ்லாமிய வலைஞர்கள் அனைவரும் தங்கள் வலையில் கண்டன பதிவுகளை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்,

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
    இந்த பத்வா மிகவும் கண்டனத்துக்குரியது

    பதிலளிநீக்கு
  4. வ அலைக்கும் சலாம். சகோ.வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    சகோதரர் ரஜின்,
    மிக துணிச்சலான பதிவு.

    தடைசெய்யப்படாத-அனுமதிக்கப்பட்ட ஒன்றை அனுமதிக்கப் படவில்லை என சொல்லிவிட்டு,அவசியத்திற்கு அனுமதி,என்று மற்ற சகோதரர்களுக்கு தம் மனஇச்சைப்படி தடை போடுவது இஸ்லாமிய பத்வாவாக இல்லை.

    இப்படி உறவினரை மட்டும் முக்கியத்துவமாக கருதச்சொல்லும் இந்த பத்வாவானது முட்டாள்த்தனமான ஒன்றே.

    அல்லாஹ்வும்,நபி(ஸல்) அவர்களும் இரத்ததானத்தை தடை செய்யவில்லை.இரத்ததானம் அனுமதிப்பபட்ட ஒன்றே.

    நானும், இந்த ஃபத்வாவை வெளியிட்ட அந்த மதரஸாவுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேவ்பந்த பற்றி தெரியும் அல்லவா? அவ்வப்போது இது போன்ற முட்டாள்த்தனமான பத்வா கொடுத்து பரபரப்பு ஏற்படுத்துவார்கள்.

    மாமனார் மருமகளை கற்பழித்து விட்டால், மருமகள் தன் கணவருக்கு தாயாகி விடுவாராம்...?!?!?

    ஒரு பெண்ணின் கணவர் காணாமல் போனால் என்பது வருடங்கள் காத்திருந்துவிட்டுத்தான் மறுமணம் செய்து கொள்ளலாமாம்...!?!?

    ஆதரவற்ற பெண்கள் ஆயினும் வேலை செய்து சம்பாரிப்பது ஹராமாம்...!?!?

    இதுபோன்ற இன்னும் நிறைய அரைவேக்காட்டு பத்வாக்கள் தேவ்பந்த் வசம உள்ளன.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்