திங்கள், ஜனவரி 03, 2011

நானும் - இரண்டாயிரத்து பத்தும்

பயப்புடாதீங்க click - read more

வலையுலகில் கால் பதித்து
சமீபத்தே,நட்பு வட்டாரம் சற்றே விரிகிறது.

நான் கடந்த இரண்டாயிரத்து பத்து குறித்த குறிப்புகளை,
தொடராக தொடர்ந்திட அன்பான அழைப்பு...

சகோதரிகளை உடன்பிறப்பாக பெறவில்லை,
அழைத்ததோ உடன்பிறவா சகோதரி

மறுத்துப்பேசிடும் சுபாவத்தை பழகிடவில்லை நான்,
மறுக்காமல் அழைப்பை ஏற்றுவிட்டேன்.

ஓராண்டின் குறிப்புகளாக ஏதும் இல்லை கையில்,
நியாபகங்களை நம்பி அமர, ஏமாற்றமே மிச்சம்.


முறையாக காட்சிகளை ஓடவிட்டால்,
அது மின்சார ஓட்டம் போல் மேல் கீழாக...

வளைவின் மேல்முகட்டை மகிழ்வாகக் கொண்டால்
அதன் கீழ்முகட்டை சொல்லவேண்டியதில்லை..

நான் கொண்ட இரண்டாயிரத்து பத்தின்
முன்னாறு மாதங்கள் மேல் முகட்டில் பயணிக்க
பின்னாறு மாதங்களோ,லாவகமாக கீழ் முகட்டில்

வருடத்தில் முந்திவிட்ட மாதங்களோ
மகிழ்ச்சியின் எல்லையை காட்டிவிட,
பிந்திவிட்ட மாதங்களை,என்னவென்று சொல்ல...

இரண்டையும் சமமாக காண பக்குவமில்லை,
கசந்தாலும் கடந்துவிட்டேன்,கடந்துபட்டேன்

தூயோன் மட்டுமே துணையாக
தனிமை மட்டுமே இணையாக...

வலைமலர் பலநேரம் மனதாற்ற,
காதடைக்கு கானங்கள்
சிந்தனைகளை தின்று மனம் மாற்ற

இரண்டாயிரத்து பத்து இனிதே விடைபெற்றது... (good bye)

காலமாக வல்லோன் இருக்க,
கடந்த காலம் சரியில்லையென
பழித்திட வில்லை.

பின்னாறு மாதங்களை, எனக்கான
அரை'யாண்டு தேர்வாக கொள்கிறேன்..

தேர்வின் பலாபலனோ,
வாழ்வின் எதிர்மறையான நாட்களை
நேர்மறையாக எதிர்கொள்ள பழக்கப்பட்டது...

ஆக,இரண்டாயிரத்து பத்து
பாகலாய் இருந்தாலும்,பயனுள்ள ஆண்டே எனக்கு.

பிறந்துவிட்ட புத்தாண்டோ
என் வயதில் ஒன்றை முழுதாய் விழுங்கிவிட்டு
வழக்கம்போல் சிரிக்கிறது.

அடுத்தநொடி மறைத்து வைத்த ரகசியத்தை,
எடுத்து வைக்கும் காலடியில் திறந்துவிட,
வழக்கம் போல் தொடர்கிறது பயணம்...

பழைய வலிகளுக்கு மருந்தாகவும்,
புதிய களிகள் விருந்தாகவும்

நாம் கொண்ட (அல்ல) நமைக்கொண்ட
இவ்வாண்டு நற்தளமாகிட
நாயன் அல்லாஹ்வை நாளும் வேண்டி,

ஓய்வொன்று எட்டும்வரை
ஓய்வில்லா பயணம் தன்னை

ஏற்று பயணிக்கும் சகபயணியாக...

அன்புடன்
ரஜின்


குறிப்பு:
        -தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரி ஆமினாவுக்கு நன்றிகள் பல...
       - என்னடா எல்லாம் blank'ஆ இருக்கேன்னு பாக்குரீங்களா?வலையில் ஏதாவது புதுமை புகுத்தலாம்னு பாத்தேன்....
        திரையில் கமல் போல...(கொஞ்சம் ஓவரா இல்ல)
      -படிக்க விரும்புவோர் ctrl+A அழுத்தினால் எழுத்துக்கள் கவியாய் விரியும்..
      -எல்லோரும் ஒரே மாதிரி எழுதிவிட்டாலும் போர் அடிக்குமில்லையா? அதான் கொஞ்சம் வித்யாசமாக...

21 கருத்துகள் :

  1. நான் கூட என் டைரி ப்லாங்கா இருக்கும். சோ இதுவும் அப்படி தான்னு சொல்லுவீங்களோன்னு நெனச்சேன்.....

    பதிலளிநீக்கு
  2. அழைப்பை ஏற்று பதிவிட்டதுக்கு மிக்க நன்றி சகோ!!!

    கவிதை கலக்கல்

    பதிலளிநீக்கு
  3. //
    நான் கொண்ட இரண்டாயிரத்து பத்தின்
    முன்னாறு மாதங்கள் மேல் முகட்டில் பயணிக்க
    பின்னாறு மாதங்களோ,லாவகமாக கீழ் முகட்டில்//

    நீங்களுமா??? வெறும் சந்தோஷங்கள் மட்டுமே வாழ்க்கை இல்ல இல்லையா? ஒன்னொரு சறுக்கிலும் புது பாடங்களை பெற நினைத்தால் கண்டிப்பாக வாழ்வு இனிதாகும்... உங்க கவி வரிகள் இதை அழகா சொல்கிறது!!!!!!!

    அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ!!!

    பதிலளிநீக்கு
  4. CTRL A கிளிக் செய்தால் அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.சகோ.புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சகோ ஆமினா,
    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    //நான் கூட என் டைரி ப்லாங்கா இருக்கும். சோ இதுவும் அப்படி தான்னு சொல்லுவீங்களோன்னு நெனச்சேன்...//

    ம்ம்..நல்லா இருக்குல்ல..இதுமாதிரி வித்யாசமா யோசிங்கப்பா..

    பதிலளிநீக்கு
  6. //அழைப்பை ஏற்று பதிவிட்டதுக்கு மிக்க நன்றி சகோ!!!//

    சகோ நான் தா உங்களுக்கு நன்றி சொல்லனும்.இப்படி ஒரு கவிதை,நீங்க என்ன தொடர்பதிவுக்கு அழைக்காம இருந்திருந்தா எழுதீருக்க முடியாதே..

    படிக்கிறவங்களுக்கு கவிதை பிடிக்குதோ இல்லையோ,எனக்கு ரொம்பவே புடிச்சுருக்கு...

    அதுனால நன்றிகள் பல உங்களுக்கு...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. சகோ ஆசியா அவர்களே,
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி,..

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  8. கவிதை டைரி அருமை.

    நினைவுகளை மீட்டுக்கொண்டு வருவதை நினைவு படுத்தும் விதமாக. மறைத்து வைத்த எழுத்துக்கள் நல்ல ஐடியா.

    பதிலளிநீக்கு
  9. சகோ அக்பர் அவர்களே,,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    /நினைவுகளை மீட்டுக்கொண்டு வருவதை நினைவு படுத்தும் விதமாக/
    அப்டீல்லா நா யோசிக்கல..ஆனா அதுகூட நல்லாத்தா இருக்கு...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  10. // அதான் கொஞ்சம் வித்யாசமாக...
    // அட புருவத்தை உயர்வைத்து விட்டீர்கள்.சபாஷ்.

    பதிலளிநீக்கு
  11. சகோ ஸாதிகா அவர்களே,
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை..அதை ஓபன் பண்ணுகிறது ctrl+A
    புதுமையாக இருக்கு.வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  13. // என்னடா எல்லாம் blank'ஆ இருக்கேன்னு பாக்குரீங்களா?வலையில் ஏதாவது புதுமை புகுத்தலாம்னு பாத்தேன்.... திரையில் கமல் போல...(கொஞ்சம் ஓவரா இல்ல)//

    அடப்பாவமே... ஆனாலும் புதுமை தான் சகோ... மறுக்க முடியாது... ஹா ஹா ஹா ... சூப்பர்... எப்படி இப்படி எல்லாம்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ? சூப்பர்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. சகோ ஆயிஷா அவர்களே,
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  15. சகோ புவனா அவர்களே,
    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  16. அட இது நல்லாருக்கே...நாமளும் இதே மாதிரி ஒண்ணும் எழுதாம ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்னு பார்த்தா .. வாவ்வ்வ்...அழகானதொரு கவிதை விரிகிறது... சரிதான்..நான் ரூம் போட்டு போன வருஷ டைரிய இந்த வருஷம் யோசிச்சு எழுதுறத வேற வழியில்லை..

    எந்த வரியைச் சொல்ல..எல்லா வரிகளும் அருமை....நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  17. @என்றென்றும் 16:
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி சகோ.கவிதைக்கான பாராட்டுக்களுக்கும் நன்றிகள்.

    ஏதாச்சும் வித்யாசமா பண்ணலாம்னு,எழுத்து கலர்,அது இத மாத்தீட்டு இருக்கும்போதுதான் இந்த பல்பு எரிஞ்சது..அதா புதுமைய புகுத்திட்டேன்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  18. அட, இப்புடியும் சமாளிக்கலாமா? கடிதத்தைக் கவிதையாச் சொன்ன மாதிரி, டைரியையும் கவிதையாவா.. நல்லாருக்கே..

    பதிலளிநீக்கு
  19. சகோ ஹுஸைனம்மா,
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

    சொல்லவந்த விஷயத்த மேம்போக்கா சொல்ரத்க்கு,கவதை தான் ஏற்றது..அதான் அப்டி..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்