சனி, நவம்பர் 13, 2010

அரவிந்தன் நீலகண்டன்களுக்கு சில கேள்விகள்!

சமீபத்தில் ஹிந்து(த்துவா)க்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் உண்மையான கரசேவை என்ற "கட்டு"ரையை படிக்க நேர்ந்தது.

தீர்ப்புக்கு முன்னரே அவர்களது சேவைகளை சரியெனச் சொல்லிவந்தாலும்,அதுவரை யாரும் பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக நியாயப்படுத்தவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு,அவர்களுக்கு சாதகமானதை தொடர்ந்து,அவர்களது வன்ம வார்த்தைகள் அந்த கருமம் பிடித்த சேவையால் இந்திய தேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட மாபெறும் அவமானத்தை நியாயப்படுத்த துவங்கி விட்டார்கள்.

இதோ.இந்திய தேச இஸ்லாமியர்களின் இரத்தத்தில் துவைத்து வண்ணமேற்றிய காவிக்கொடியுடன் நாடெங்கும் ர(த்)த யாத்திரை கொண்டு,மாபெறும் இன அழிப்பை நிகழ்த்திய அத்வானி,இத்தீர்ப்பிற்கு பிறகு "தனது யாத்திரை சரியாது தான்"என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

இதே தான் அரவிந்தனின் நிலைப்பாடும்.அத்வானி ஆயிரம் தலைவாங்கிய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறார்.அரவிந்தன்,அதன் பின் நடந்த தேச அவமானமான மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்துகிறார்.

இவர்களிடம் இஸ்லாமியர்களின் எந்த நியாயத்தையும் நாம் இப்போது முன் வைத்து கேள்விகள் கேட்கப்போவது இல்லை.அது செவிடன் காதில் ஊதிய சங்குக்கு ஒப்பானது.

ஆனால் அவரது பதிவில் சில இடங்களில் அவரது கருத்து எதை சுட்டுகிறது என்பதை விளக்க,மற்றவர்களும் விளங்கவே இந்தப்பதிவு.

//கரசேவகர்களால் உடைக்கப்பட்ட கும்மட்டத்தின் மையப்பகுதி //

அது பாபரால்(அல்லது மீர்பாகி - ஆக மொத்தத்தில் பாபர் ஆட்சி காலம்) கட்டப்பட்ட மசூதி என வரலாறு கூறிக்கொண்டிருக்க.முதலில் அதை மறுப்பது இந்திய வரலாற்றை புறக்கணிப்பதாகும்.ம்ம் அவர்களுக்கு ஆட்சிப்பீடம் கிடைத்தால் இந்திய வரலாற்றையே திருத்துபவர்களாயிற்றே...(ஏய்..ஷ்ஷ்ஷ்ஷ்..அதெல்லா பேசக்கூடாது..)

யாருடைய கருத்தும் இந்திய வரலாற்றையோ,அல்லது ஒரு வரலாற்று சின்னத்தையோ மாற்றிவிடாது.முஸ்லீம்கள்,ஹிந்துக்களின் கோவில்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் தான்.அதற்காக கோவில்களை நாம் விகாரமாக வர்ணிப்பதில்லை.கோவிலை கோவில் என்றுதான் சொல்கிறோம்.

அப்படி இருக்க.வரலாற்றில் பதிவு செய்ய்ப்பட்ட இந்திய தேசத்தின் பழமை வாய்ந்த, இந்தியாவை ஆண்ட ஒரு மன்னரால் கட்டப்பட்ட ஒரு மஸ்ஜித் ஆனாது,இவர்களை பொருத்தவரை,வெறும் கட்டிடமாக கூட தெரியவில்லை.அது ஒரு "கும்மட்டம்"என்ற வார்த்தை கொண்டு வர்ணிக்கிறார்கள்.

கேட்டால் அது இஸ்லாமிய நெறிமுறைப்படி கட்டப்படவில்லை என,இஸ்லாமியம் பேசுவார்கள்.இஸ்லாத்தில் பள்ளிகள் நிர்மானிக்க ஆகமவிதிகள் ஒன்றும் இல்லை ஐயா..

பள்ளியின் கட்டுமானம் ஆனது இஸ்லாமிய கட்டிடக்கலையின் வெளிப்பாடாக அவ்வாறு கட்டப்படுகிறது.அப்படி பட்ட வடிவத்தில் பள்ளிகள் மட்டுமே கட்டப்படுகிறதே தவிற,வீடுகளோ,சமூக கூடங்களோ,இன்ன பிற கட்டிடங்களோ,அவ்வாறு கட்டப்படுவதில்லை.அவ்வாறிருக்க,அதை பள்ளி அல்ல,வெறும்,கட்டிடம்,அல்லது அதைவிட அதைஒரு குமட்டம் என வர்ணிப்பது,கேவலமான ஒன்று.

இஸ்லாமியர்களை பொருத்தவரை அது ஒரு மசூதி,இறை இல்லம்.அதை இவர்கள் இத்தகு வார்த்தை பிரயோகத்தின் மூலம் சொல்லவருவது என்னவோ??.ஹிந்துமதம் சகிப்புத்தன்மையை இவர்களுக்கு கற்றுக்கொடுத்து சகிப்புத்தன்மையின் மறு உருவாக இவர்களை வார்த்தெடுத்துவிட்டது என இவர்கள் விடும் கதைகளை பார்க்கும் போது,இதுதான் ஹிந்துமதம் கற்றுத்தரும் சகிப்புத்தன்மையோ என எண்ணத்தோன்றுகிறது.

இத்தகு வார்த்தைகளால் இவர்களின் உள்ளத்தில் உள்ள வெறுப்புணர்ச்சி எத்தகையது என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.இதில் இவர்கள் அத்வேஷ்டா: அதாவது மனதில் வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக இருக்கிறார்களாம்??? (சிரிக்கத்தான் தோன்றுகிறது)


இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கும்,நம்பிக்கைக்கும்,இந்திய இறையாண்மைக்கும் மதிப்பளிக்க தவறிய மறுக்கும் இவர்கள்,ஹிந்துக்களின் நம்பிக்கைக்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கோருவது வேடிக்கைதான்.

//பாபர் மசூதி, பாபர் மசூதி என மீண்டும் மீண்டும் ஏதோ தினசரி தொழுகை நடக்கும் ஒரு மசூதியை ஹிந்து வெறியர்கள் உடைத்தெறிந்துவிட்டது போலக் கூக்குரலிட்டார்கள்.//

1949 டிசம்பர் 22ன் இரவுத்தொழுகை வரை அங்கு தொழுகை நடந்துள்ளதை,உ.பி மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளது, இரவுத்தொழுகைக்கு பிறகு,சமூக விரோதிகளால் ராமர் சிலைகள் வைத்து கலவரப்படுத்தி,பள்ளியை மூடும் வரை அங்கு தொழுகை நடத்தப்பட்டது என்பது உண்மை.

அதற்கு பின் கோர்ட் உத்தரவுப்படி பள்ளி மூடப்பட்டு தொழுகை நடத்தப்படுவது தடுக்கப்பட்டது.அது தொடர்பான வழக்க நீதிமன்றத்தில் இருப்பதால்,தீர்ப்பை எதிர்நோக்கி முஸ்லீம்கள் ந்ம்பிக்கை கொண்டு இருந்தோம்.

 நடைபெற்றுவந்த தொழுகையை,தடுத்து நிறுத்தியவர்கள் இவர்களே.....

என்னவோ,அது கட்டப்பட்டதில் இருந்து தொழுகை நடத்தப்படாதது போல் கதை கட்ட முயல்வது முட்டால் தனமே.அதை ஹிந்துத்துவாக்கள் வேண்டுமென்றால் ஏற்கலாம்...

//ஸ்ரீ ராம ஜென்மபூமியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்துக்கள் வழிபடும் இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள். எங்கள் தலைகளில் செங்கல்கள் சுமந்து இதே சரயு நதிக் கரையில் பிரம்மாண்டமான மசூதியை நாங்கள் கட்டித்தருகிறோம்.”//

ஆஹா ஆஹா!!... ஆடு நனையுதேன்னு, ஓநாய்,குப்பரப்படுத்து குமுறி அழுத பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறேன்.இப்போதுதான் நேரில் அதை காணமுடிகிறது.

ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மாட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது.

இதுதான் அவர்களது உண்மையான உள்ளக்கிடக்கை.அதை அவர்கள் இப்படி தேனில் குழைத்த தேளின் விஷமாக நமக்கு தருவதுதான் உண்மை

இந்திய முஸ்லீம்களை இந்தியாவில் இருந்து கருவருப்பதையே தன் தொழிலாக்கி கொண்ட ஹிந்துத்துவாக்கள்,முஸ்லீம்களுக்காக,தலையில் கல்சுமந்து??? எப்பப்பா...எப்புடித்தா,இப்டி சிரிக்காம காமெடி பண்ரீங்களோ தெரியல...உங்களுடைய அற்பமான நாடக யுக்தியில் இதுவும் ஒன்றென முஸ்லீம்கள் மட்டுமல்ல,ஹிந்துக்களும் அறிவர்..

//உடைக்கப்பட்டது மசூதி அல்ல; ஒரு கும்மட்டம்தான்.//

இஸ்லாமியர்களின் இறை இல்லம் இவர்களுக்கு,கும்மட்டம்.இவர்களின் இத்தகைய யோக்கிதையை சொல்லி அழும் சிலர்,எம்மிடம் வந்து இஸ்லாம் வெறுப்புணர்ச்சி இல்லாத மார்க்கம் என வாக்குமூலம் கொடு என வேண்டுவது வேடிக்கை.அவர்களின் தலையாய பணி,முதலில் வேதாந்திகளுக்கும்,அரவிந்தர்களுக்கு,சகிப்புத்தன்மையை பாடமெடுக்கவேண்டியதே...

//அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரும் பிபரே ராமரசம் என்ற காவேரிக்கரை தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன்.//

இங்கு அரவிந்தர் எதை நிறுவ முயல்கிறார் என விளங்க வில்லை.ஹிந்து கடவுளான ராமனை தேசிய நாயகனாக சித்தரிப்பது,இந்தியாவை ஹிந்து நாடாக முன்னிறுத்தும் முயற்சி. இந்தியாவின் அஸ்திவாரமான மதச்சார்பற்ற கொள்கைக்கும்,வேற்றுமையில் ஒற்றுமை எனற கொள்கைக்கும் வேட்டுவைக்கும் செயல்.

பன்முக தன்மை கொண்ட இந்தியா,எப்படி ஒரு சமூகத்தின் கடவுளை இந்திய தேசியத்தின் நாயகனாக ஏற்றுக் கொள்ளும்.

இது அவர்களின் ஹிந்து ராஷ்டிரம் என்ற குரூர கொள்கையின் வெளிப்பாடு.

// அவனுக்கு ஆலயம் அமைக்கவே ஓர் அன்னிய அடிமைத்தளையின் சின்னம் அகற்றப்பட்டது. அதைத்தான் அலகாபாத் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.//

எப்புடி??? இந்தியா முழுவது அடிமைதளை சின்னங்கள் பரவி காணப்படுகிறது.எனவே நாடுமுழுவது கரசேவை நடத்த சொல்லி இருக்கிறதா?

அப்டீன்னா! குதுப்மினார்,செங்கோட்டை,சார்மினார்,தாஜ்மஹால்,இந்தியா கேட், பார்ளிமெண்ட்.ராஷ்ட்ரபதி பவன்,இன்னும் நம்ம ஊரில் உள்ள,ரிப்பன் பில்டிங் தொட்டு,நாள் தோறும் மக்கள் சொன்று வரும் சென்னை சென்ட்ரல்,வரை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் சுவடுகள் தான் இந்தியாவில் மிஞ்சிக்கிடக்கின்றன.என்ன செய்யலாம் அரவிந்தரே.... கரசேவைகளை நிகழ்த்திவிடலாமா?

ஆ ஆ...இல்லை இல்லை...இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வெற்றி கொண்டால்,அங்கே ஒரு மசூதி எழுப்பிவிடுவார்கள்.அது அவர்களது வெற்றியின் சின்னம்..அதைத்தான்....என்னடா இது இந்தியாவின் ஹிந்து மன்னர்கள் கூடத்தான்,சென்றவிடமெல்லாம்,வென்றவிடமெல்லாம் கோவிலை கட்டினார்கள்.அதுக்கு பேர் என்னவாம்..இல்லை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது அதிக சர்ச்சுகள் கட்டப்பட்டு இருக்கும்.அப்போ அதுக்கு பேரும் அடிமை சின்னங்களா?

இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் மஸ்ஜித் வேண்டும்,ஹிந்துக்கள் வாழும் பகுதியில் கோவில் வேண்டும்,கிருத்தவர்கள் வாழும் பகுதியில் சர்ச்சுகள் வேண்டும்.அதனால் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அவரவருக்கு தேவையானதை கட்டிக்கொண்டார்கள்.அவர்களின் காலத்திற்கு பின்னர் அவை புராதான சின்னங்களாக நிலைத்து,முந்தைய வரலாற்றை மெய்பித்துக் கொண்டு இருக்கின்றன.

இவைகளை அழிப்பதன் மூலம் இந்தியாவின் வரலாற்றை அழித்துவிட முடியுமா?.. 


"அன்னிய அடிமைத்தளை"இதை காலம் காலமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் தெளிவுபடுத்துவதில்லை.

இவர்கள்,இந்தியாவை ஆண்டவர்களையும், அடிமைப்படுத்தியவர்களையும் இனம் காண்பதில்லை. ஆங்கிலேயர்கள,போத்துகீசியர்கள்,ஃபிரஞ்சுகாரர்கள்,டச்சுகாரர்கள்,என அனைவரும் இந்தியாவை ஆண்டவர்கள்தான்.ஆனால் அவர்களின் சிந்தனைவேட்கையும், ஆளுமையும்,இந்தியாவை குறித்ததல்ல.இந்தியாவை வெறும் வியாபார சந்தையாகவே அவர்களால் பார்க்கப்பட்டது.இந்தியாவின் செல்வமும்,இந்தியர்களின் உழைப்பும்,அவர்கள் தத்தமது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய,இந்திய முன்னேற்றத்திற்காக அல்ல.இவை தான் அடிமைத்தளை.

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களோ,இந்தியாவை ஆண்டு,இந்தியாவிலே வாழ்ந்து,இந்தியாவிலே மடிந்தவர்கள்.அவர்களில் சிலரின் செயல்பாடுகள்,மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் நமக்கும் கருத்துவேறுபாடுகள் உண்டு...ஆனால் இவர்களை இந்தியாவை அடிமைப்படுத்தியவர்கள் என சொல்ல முடியாது.சுதந்திர போராட்ட காலங்களில் இந்தியாவிற்காக போராட்டம் கண்டவர்களும்,இந்தியாவுக்காக உயிர் நீத்தவர்களும் இஸ்லாமிய மன்னர்கள் என்பதை மறுக்கமுடியாது.

இவர்களில் எவரும்,''மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து''ஆங்கிலேயரின் கால்களை நக்கி அவர்களின் விசுவாசத்தை காட்டவும் இல்லை.ஆங்கிலேயர்களை எதிர்க்காது ஓடிப்போய் ஆஃப்கானில் தஞ்சம் புகுந்துவிடவும் இல்லை.மாறாக அவர்களை எதிர்த்து போரிட்டு மரணித்தவர்கள்.


இந்தியாவில் செல்வங்களை மட்டும் தனதாக்கி இந்தியாவை சுரண்டிக் கொழுத்த ஆங்கிலேயர்களால் இந்தியாவில் விட்டுச்செல்லப்பட்டவையே உண்மையான அடிமைத்தளை சின்னங்கள்."அடிமைச்சின்னங்களை அப்புறப்படுத்துவது நோக்கமானால்,அதையே அலகாபாத் நீதிமன்றமும் சொல்கிறது,என இவர்கள் சொல்வார்களானால்"முதலில் நாம் மேலே குறிப்பிட்ட,நாடெங்கிலும் விரவி காணப்படும் அனைத்து வரலாற்று சின்னங்களிலும் இந்த அரவிந்தர்கள் கரசேவை நடத்தட்டும்.

அது இல்லை என்றால்....இவர்கள் செய்த இச்சேவை வெறும் இஸ்லாமிய வெறுப்பும்,துவேஷமும்,கொண்ட அர்ப்ப சேவையே...

நன்றி

அன்புடன்
ரஜின்

4 கருத்துகள் :

  1. பெயரில்லா18/11/10 8:05 PM

    Ungal padhivukal arumai tamilmanam,indli yil padhivukalai inaikkavum

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா19/11/10 2:53 PM

    /ஹிந்துத்துவாக்கள்//

    அரைவிந்தன் ஒரு பயங்கரவாதி அல்லவா?

    பதிலளிநீக்கு
  3. Those who doesnt believe their own birth only need some one from out of their family. Applicable to religion also.

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்