செவ்வாய், ஜனவரி 11, 2011

அரசு எந்திரம் - காவல்துறை


அமீரக வாழ் அயல்நாட்டவர்களுக்கு,குறிப்பாக கல்யாணமாகமல் தனியாக இருப்பவர்களுக்கும்,கல்யாணம் ஆகி தனியாக இருப்பவர்களுக்கும்,அவர்களின் இயல்பு வாழ்க்கையானது ஏறக்குறைய SAME SCHEDULE ஆக இருப்பதை பார்க்கமுடியும்.

காலையில் எழுந்து ரெடியாகி ஆபிஸ் அல்லது ஸைட்...இடையில் வேலை,உணவு,ப்ளாக்,என பலவாராக நேரம் ஓடிவிட,மாலை திரும்பவும் ரூம்,இரவு உணவு,டீவி,அல்லது லேப்டாப்,பின்பு உறக்கம்,திரும்பவும் காலை....

இப்படியான வெளிநாடு வாழ் இந்தியனுக்கான ஒரு எந்திர வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.....சரி மேட்டருக்கு வருவோம்...

இதுபோல கடந்த வாரத்தில் ஒரு நாள்,காலை எழுவது சற்றே தாமதமாக  ஆபிஸ்க்கு கிளம்பினேன்...அரக்கபரக்க...வெளியே வந்தால் ரோடு நல்ல ட்ராபிக்கா இருந்துச்சு....

சரி ட்ராஃபிக் கொஞ்சம் ஃபிரீ ஆகும்,ரோட்ட க்ராஸ் பண்ணிரலாம்னு பாத்தா ம்ம்ஹும் கொரஞ்ச பாடில்ல...சரி இங்க வெயிட் பண்ரதுக்கு,பக்கத்துல இருக்குர பெடஸ்ட்ரியன் க்ராஸ் போனோம்னா சீக்கிரம் போயிரலாம்ன்னு,அங்க போய் கிராஸ் பண்ணிட்டேன்..

வண்டி வர்ர எடத்த நோக்கி போயிட்டு இருக்கும் போதே,ஒரு 14 ஸீட்டர் வாகனம் ப்ளாட்ஃபாம்ல ஏரியும் ஏராம,எடக்குமடக்கா நின்னுகிட்டு இருந்துச்சு...அதுல ட்ராபிக் ரூல்ஸ் அட்வர்டைஸ்மெண்ட் வேர...சரிதான்..இப்டி ஊருக்கு உபதேசம் பண்ணீட்டு,பக்கி வண்டிய கொண்டுவந்து எப்புடி நிறுத்தீருக்கு பாருன்னு நெனச்சுக்கிட்டு,போய் நின்னுட்டேன்...

கொஞ்ச நேரத்துல வண்டி நகந்து வந்து எங்க பக்கத்துல நின்னுச்சு..ஆகா நம்ம மைண்ட் வாய்ஸ் இப்ப வெளியவ்ளா கேக்க ஆரம்பிச்சுருச்சா..அய்யயோ,நாம திட்டுனது தெரிஞ்சுருக்குமோன்னு நெனச்சுட்டே இருக்க.....

(இதுதான் அந்த வண்டி)


அந்த வண்டியில இருந்து எரங்குனவன பாத்தா போலீஸ்காரன்...என்னடா இது இவன் இந்த வண்டிக்குள்ள இருந்து வர்ரானே,ஏதாச்சும் என்கவுண்டரா இருக்குமோ,தப்பான எடத்துல வந்து நின்னுட்டோம் போலயேன்னு மண்டைக்குள்ள ஏதேதோ ஓட ஆரம்பிச்சுருச்சு....

(இதுமாதிரி வண்டிகள்லதா பொதுவா போலீஸ் UNCLE வருவாங்க..)



அதுக்கும் மேல பத்தாக்கா (வொர்க் பெர்மிட்) காலாவதியாகி,அத புதுப்பிக்க வேர குடுத்துட்டு அண்ணன் இப்போ கல்லிவல்லி'ன்னு  துபாய்ல கௌருதையா சொல்லுவாங்க(தெரிஞ்சவங்க மூச்..ம்ம்ஹும்)..அப்டி சுத்திட்டு இருக்க, பயம் ஜாஸ்தியாகி போச்சு...நாமலே உணமைய சொல்லி சரண்டராயிடலாமா..எப்டி சரண்டர் ஆகுரது,தமிழ்சினிமா ஸ்டைல்லையா??ரெண்டு கையையும் முன்னாடி நீட்டி INSPECTOR!..... ARREST ME! என்னய அரஸ்ட் பண்ணுங்கன்னு...ஹை பிச்'ல மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொல்லலாமா???ம்ம் எப்புடி தெரிஞ்சுச்சு...உளவுத்துறை தகவல் சொல்லி இருக்குமோ - உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லையே அப்டீன்னு நெனச்சுகிட்டே நின்னுட்டு இருந்தேன்.

வெளிய வந்தவன் அப்டீ ஒரு லுக்கு விட்டான்...அப்ரம் ரோட்டுக்கு அந்த பக்கமா நின்னவன் கிட்ட ஏதோ சைகைல வேர பேசிட்டு இருந்தான்..சரி,ஏதோ பிரச்சன போலன்னு பாத்தா, அந்தப்பக்கம் நின்னவன் கேஷுவலா ஜாக்கிங் போரவன் மாதிரி இருந்தான்...

கொஞ்ச நேரத்துல,அவன் சிலபேர இந்த போலீஸ்கிட்ட அனுப்பீட்டு சைகைல இவன்கள பாத்துக்கோங்கன்னு வேர சொன்னான்...என்ன நடக்குது,ஒன்னும் புரியலையே,புடிக்கவேண்டிய ஆள் நம்ம இங்க இருக்கோம் நம்மல விட்டுட்டு யார் யாரையோ புடிக்கிறானுவலேன்னு நெனச்சுட்டு இருந்தா....

அப்ரம்தா தெரியுது...வசூல் வேட்டை நடக்குதுன்னு...எதுக்கு...ரோட்ட அங்கங்க கிராஸ் பண்ரவங்கள புடிச்சு....ஃபைன் போட்டுகிட்டு இருக்கானுக....ஆள் சேந்த ஒடன,தலைவரு வண்டில இருந்து லெட்ஜர எடுத்துட்டு வந்து எழுத ஆரம்பிச்சுட்டாரு...

அட பிக்காலிப்பயலுகலா...இதுக்காடா இவ்ளோ பில்டப்புன்னு நெனச்சுகிட்டு,நம்ம கைல இருக்குர கேமிராவ கிளிக்'க ஆரம்பிச்சுட்டேன்..

இவருவந்து வண்டியவுட்டு நகலவே மாட்டாரு..அந்தா ஒருத்தன் கிளிப்பச்ச கலர்ல சட்ட போட்டுக்கிட்டு சாவகாசமா நடக்குறான் பாத்தீங்களா...அவந்தா ஓடி ஓடி....எல்லாத்தையும் புடிக்கிறது...மஃப்டி போலிஸ் போல....இதுல என்ன கொடுமைனா...அவன் கிட்டக்க நின்ன ரெண்டு பேரு,இறங்கி ரோட கிராஸ் பண்ர வரைக்கும் பயபுள்ள பாத்துகிட்டே இருந்துட்டு...ரோட்ட முழுஸ்ஸா கிராஸ் பண்ணுன ஒடன இங்க இருந்து ஓடிப்போய் அவன்கள இழுத்துட்டு வந்தான்,...

(அந்த கிளிபச்ச சட்டையும்,அக்யூஸ்ட்களும்)


மக்கள் நெருக்கம் அதிகமாவும்,ரோடு,கொஞ்சம் ட்ராஃபிக்காவும்,ஃப்ரீயாவும் இருக்குர இடத்துலைலாம் இவன்க பட்ரைய போட்ருவானுக போல...

(ரோடு இப்டி ஃப்ரீயா இருந்தா சும்மான்னாலும் க்ராஸ் பண்ண தோனுமா தோனாதா???)

மக்கள்லாம் வந்த ஒடன இவர் மெதுவா வண்டில இருந்து வந்து பில் போட ஆரம்பிச்சுட்டார்...

(பில்லிங் இன் ப்ராக்ரஸ்)


ஊர் பூரா கேமிரா வச்சு போலீஸ் காரனுக,எல்லாத்தையும் போட்டொ எடுக்குறானுக..ஆனா நாம அவனையே போட்டோ எடுப்போம்ல...நாம யாரு...(ஆமாண்டா ஒன்னையும் இங்க வான்ன்னு கூப்டு இருந்தான்னா தெரிஞ்சுருக்கும்..நெஜமாவே நீ யாருன்னு.....தைரியம்தான் கைல பேப்பர் எதும் இல்லாம போலிஸ்காரனையே போட்டோ எடுக்குர...)ஓக்கே..ஓக்கே..விடு...

நல்ல வேல நான் நல்லவனா இருக்கப்போயி,ஒழுங்க சட்டத்துக்கு கட்டுப்பட்டு,ரோட பெடஸ்ட்ரியன் க்ராஸ்ல கிராஸ் பண்ணூனேன்..

(டேய் ஓவரா பேசாத நீ ரோடு கிராஸ் பண்ண நெனச்சப்ப கொஞ்சம் ட்ராஃபிக்க இருக்கப்போயி, வேர வழி இல்லாம ஒழுங்கா கிராஸ் பண்ணுன..இல்ல மவனே அன்னைக்கு மொதல் போனியே நீயாத்தான் இருந்துருப்ப..அது மட்டும் இல்லாம எல்லாத்துக்கும் ஒரு கேஸுன்னா, ஒனக்கு மட்டும் ரெண்டு...)

ஆமாமா....அது என்னவோ உண்மைதான்...ஆள புடிச்ச ஒடன,மொதல்ல கேக்குரது பத்தாக்கா'வத்தான்...அத வாங்கி வச்சுகிட்டு,ஃபைன் பேப்பர கைல குடுத்து அனுப்பீர்வானுக..ஃபைன கட்டீட்டு வாங்கிக்கோன்னு...

நம்மகிட்ட அப்ப அதுவேர இல்லையா(இப்போ மட்டும் இருக்காக்கும்)....நாம சிக்கிருந்தா...எல்லாத்தையும் பத்தாக்கா வாங்கிட்டு அனுப்பீர்ப்பனுக..பட் என்னை தூக்கி வண்டிக்குள்ள போட்டு அரசு மரியாதையோட கூட்டீட்டு போயிருப்பானுவ....எப்பா ஜஸ்டு மிஸ்ஸு...இன்னக்கி இப்டி உக்காந்து சாவகாசமா பதிவு எழுதீர்க்கவும் முடியாது... (ம்ம்..தெரியுதுள்ள அப்போ ரொம்ப வாய் பேசாத.....) ரைட்டு விடு......


(ம்ம்..இந்த மாதிரி நடு ரோட்ல ஓடிப்புடிச்சு விளையாடுனா கொஞ்சுவானுகளா - ஸ்டில்ஸ் - நம்ம பட்டான்ஸ்)

அமீரகத்தில் நடக்கும் விபத்துக்களில் 20 சதவிகிதமானது, பாதசாரிகள் அவர்களுக்கான சாலையை கடக்கும் இடங்களில் கடக்காமல் கண்ட இடங்களில் கடப்பதே காரணமாகிறதாம்.கடந்த ஆண்டில் மட்டும் 4010 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவிக்கிறது. 

சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 200 திர்ஹம் அபராதமாக வசூலிக்கப் படுகிறது.அதுமட்டுமில்லாமல் அந்த ஃபைனுக்கான ப்ராஸஸிங்,இதர கட்டணங்களாக 10 திர்ஹம் சேர்த்து 210 ஆக வசூலிக்கப்படுகிறது...இது எல்லாவித ஃபைன்களிலும் இருப்பதாக கேள்வி...(குடும்பத்தோட க்ராஸ் பண்ணுனா விழாக்கால சலுகைகள் உண்டாம்...அமீரக குடும்பஸ்தர்கள் ட்ரை பண்ணி பாக்கலாம்)

முறையாக கடக்கும் பாதசாரிகளுக்கு(என்னய மாதிரி),வண்டியை நிறுத்தி வழி கொடுக்காத ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம் அபராதம்,மற்றும் 6 கருப்பு புள்ளிகள் அவர்களது ஓட்டுனர் உரிமத்தில் கொடுக்கப் படுகிறது.

சரி இப்போ கருத்து : என்னை பொருத்தவரை இது போன்ற சட்டங்கள் மிகச்சரியான ஒன்றே.மேலும் வெறும் சட்டம் போடுவதோடு நில்லாமல் அதை முறையாக நிறைவேற்றுவது இன்னும் சிறப்பு..அரசாங்கத்திற்கு ஒருவனால் கிடைக்கும் 200 திர்ஹம் முக்கியம் அல்ல.அதனைக் கொண்டு,அங்கு வாழும் மக்கள் அனைவரையும் அந்த சட்டத்திற்கு பழக்கிவிடுவதே பயன்.

இதை அனுபவித்த மக்கள்,அங்கிருந்து பார்த்தவர்கள் நான் உட்பட,இதை பார்ப்பவர்களிடம் தெரிவிக்காமல் இருக்கப்போவதில்லை.மேலும் என் போன்ற ஊடகத்துறையை (blog தான்)சார்ந்த நல்லவர்கள் எல்லாம் இந்த செய்தியை உலகம் முழுக்க உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதால் .மக்களிடம் முதலில் பயஉணர்வு,பின் விழிப்புணர்வு காரணமாக காலப்போக்கில் அவர்கள் அந்த சட்டத்தையே தன் வழக்கமாக கொள்வதே இதன் வெற்றி எனலாம்....

ஆக இந்த பதிவின் சாராம்ஸம் என்னவெனில்

  "தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்".

இத வெறும் பேச்சுக்காக சொல்லலை.அதற்கு பிறகு அங்கு சகஜமாக இருந்த ரோட் கிராஸிங் இல்லாமல் போய் இருந்தது.(சிலர் க்ராஸ் பண்ணத்தா செய்ராங்க.அவங்கல்லாம் பட்டு திருந்துர கேஸுகள் ). இங்க இதை கண்கூடாக பார்க்க முடிகிறது.பெண்கள் பாதுகாப்பா எந்த நேரத்துல வேண்னாலும் வெளியே போக முடிவது போன்றவை பெண்களுக்கு சட்டமுக்கியத்துவம் கொடுத்ததன் வெளிப்பாடே.ஒரு பெண் கம்ப்ளைண்ட் பண்ணீட்டா பேச்சே கெடையாது தூக்கிருவானுக.சமீபத்தில் ஒரு பேக்கரியில் இதையும் பார்க்கமுடிந்தது.

இன்னக்கி இது போல கிராஸ் பண்ணி எத்துனையோ பேர் விபத்துக்கள்'ல சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள்.இன்று 200 திர்ஹம் கட்டுவதை தண்டமாக நினைப்பவர்கள்,நாளை இந்த சட்டத்தால்,சாலையை முறையாக கடந்து,விபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படலாம்.அது உண்மையும் கூட.

தண்டனைகளையும்,சட்டங்களையும் போடுவதோடல்லாமல்,அதை முறையாக செயல்படுத்தி,அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே அந்த அரசின் வெற்றி என்பது இருக்கிறது.அதை சரியாக செய்வதில் அரபு நாடுகள் முன்னிற்கின்றன.

நல்ல அரசாங்கம் எங்கிருந்தாலும்,அதன் திட்டங்களை அரசு ஊழியர்கள் சரியாக செயல் படுத்தினால் மட்டுமே,அது பயனைத்தரும்..இதே போலிஸ், 50 திர்ஹம்களை வாங்கிக்கொண்டு அவர்களை விட்டிருந்தால்,அவர்களை யாரும் கேட்க முடியாது.அத்தோடு அந்த சட்டமும் காற்றில் பறந்திருக்கும்..

நம் நாட்டை பொருத்தவரை ஊழலானது அரசியல்வாதிகள் தொட்டு,அதிகாரிகள்,பியூன் வரைக்கும் வியாபித்து,பெரு வியாதியாக இருக்கும் வரையில் இப்படியான நல்ல விஷயங்களை படிக்கவும்,கேட்கவும் மட்டுமே நாம் கொடுத்துவைத்தவர்கள்.

முதலில் நல்ல குடிமகன்களாக நாம் மாறி,படைத்தவனுக்கும்,ஆள்பவனுக்கும்,கட்டுப்பட்டு நடக்க,நம் சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுக்க,நாளைய அரசாங்க அதிகாரிகளான இன்றைய சந்ததி இந்தநிலையை நாளை மாற்றும்.....காத்திருப்போம்...

அன்புடன்
ரஜின்

15 கருத்துகள் :

  1. மிகவும் பயனுள்ள இடுகை. அபராதம் கட்டும் போது கோபமாக தான் இருக்கும், ஆனால் அதனால ஏற்படும் நன்மைகளை நினைத்தால் கோபம் போய்விடும். (ஹி ஹி, அனுபவம் பேசுது)

    முடிந்தால் http://hajaashraf.blogspot.com/2010/08/blog-post_22.html இங்கும் சென்று பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  2. சகோ அபுநிஹான் அவர்களே,
    வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

    அனுபவமெல்லாம் ஒன்னும் இல்லை சகோ..உண்மை அதுதானே..
    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  3. நானெல்லாம் மொதல்ல சப்வே, பிரிட்ஜ் இருக்கான்னு பாத்துட்டு தான் அடுத்த வழி பத்தி யோசிப்பேன்
    ;)

    கடைசி வரைக்கும் ரஜின் என்ற தமிழ் ஆள் மாட்டவே இல்லையா?

    அடச்சே... வட போச்சே :(

    பதிலளிநீக்கு
  4. தம்பி துபாய் போலிசுக்கே டிமிக்கியா?நல்ல விழிப்புணர்வுள்ள இடுகை.அருமை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அன்பு சகோதரர் அவர்களுக்கு

    இயல்பான நடையில் சமூக சிந்தனையோடு உள்ள பதிவு
    ஒரு விஷயத்தை ஜனரஞ்சமாக ஜாலியாக அதே சமயத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக ரொம்ப யோசித்து மேனக்கேட்டு சொல்லியிருக்கிறீர்கள் நான் சொன்னது சரிதானே
    (ஆமா இவரு பெரிய துப்பறியும் புலி கண்டுபுடிச்சு கிளிச்சுட்டாருன்னு திட்ட வேண்டாம்)

    அப்புறம் ஒங்களுக்கு ஒட்டு போட்டாச்சு
    (பார்க்க தமிழ்மணம்)

    சகோதரன்
    ஹைதர் அலி

    பதிலளிநீக்கு
  6. சகோ ஆமினா,
    வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..


    /கடைசி வரைக்கும் ரஜின் என்ற தமிழ் ஆள் மாட்டவே இல்லையா?/

    ம்ம்..உங்களுடைய ஆதங்கம் புரியுது சகோ...அந்தப்பயபுள்ள மாட்டவே மாட்டான்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  7. ஆசியாக்கா:
    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..
    /துபாய் போலிசுக்கே டிமிக்கியா?/

    அய்யயோ..அதெல்லா ஒன்னுமில்லக்கா,நா ஏதோ நா உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்..

    அப்ரோ ஏண்டா இதெல்லா பண்ணுனன்னெல்லா கேக்ககூடாது...:)

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  8. சகோ ஹைதர் அவர்களே,
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

    /ரொம்ப யோசித்து மேனக்கேட்டு சொல்லியிருக்கிறீர்கள் நான் சொன்னது சரிதானே/
    ம்..அ.ஆ..ஏரக்குறைய அப்டித்தான்..(யெய்யாடி..நாங்கூட இப்டி யோசிக்கலையே..இந்தப்புள்ளைக்குள்ள என்னவோ இருக்கு...)
    just kidding
    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  9. நல்ல விழிப்புணர்வு பதிவு. ஆரம்பத்தில் சொல்லி இருக்கும் குடும்பம் குழந்தைகளை விட்டு தனி வாழ்க்கை வாழும் ஆண்களை நினைத்தால் பரிதாபம்தான் பணம் சம்பாதிக்க எதை எல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கு?

    பதிலளிநீக்கு
  10. சகோ லக்ஷ்மி அவர்களே,தங்களின் முதல் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அன்பு சகோ.ரஜின்,

    இந்தியாவில் நாம் ஒவ்வொரு மாதக்கடைசிகளிலும் பார்த்து புளித்துப்போன ஒரு நிகழ்வை, ஏதோ அதிரடி ஆக்ஷன் மசாலா லைவ் வீடியோ ஷோ போல... ரன்னிங் கமெண்டரி... அதற்கு இன்னொரு 'உள்ளுணர்'வின்(ஒரிஜினல் வாய்ஸ்?) கவுண்ட்டர் கமெண்டரி... என்றெல்லாம் சேர்த்து புதிய விஷயம்போல விறுவிறுப்பாக எழுதி கலக்கி விட்டீர்கள்.

    நல்லவேளை. சவூதியில் இப்படியெல்லாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இங்கே கார் காரர்கள்தான் போலீசின் மெயின் டார்கெட். பாதசாரிகள் எல்லாம் அப்புறம்தான். அவர்கள் நடைபாதையில் போனாலே அவர்கள் உயிர் அவர்கள் கையில் இல்லை என்ற நிலை..!

    ஏனெனில், இங்கே சவூதி இளைஞர்கள்... இல்லை.. இல்லை... சிறுவர்கள் 'காரோட்டுகிறேன் பேர்வழி' என்று பண்ணும் அட்டூழியம் உள்ளதே... கண்டிப்பாய் சொல்லியாக வேண்டும்... இதேபோல... இன்ஷாஅல்லாஹ் அதைப்பற்றி ஒரு அதிரடி லைவ் ஆக்ஷன் ஒன்று போடுகிறேன்... பார்த்து விட்டு சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்

    தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.

    http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  13. இங்குள்ள போலீஸ பார்த்தா கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது... எல்லாரும் எப்டியெல்லாமொ தப்பு பண்ணிட்டு தப்பிக்கிறாங்க... ஆனா நமக்கு கொஞ்சம் ஸ்பீடா போனாக் கூட சாதாரண ஃப்ளாஷ் கூட
    ரேடார் ஃப்ளாஷா இருக்குமோன்னு பயமாயிருக்கும்... இதுவரைக்கும் பைன் ஒண்ணும் அழுததில்ல...

    பைன் அமௌன்ட்டுக்கு பயப்படறவங்க தப்பு பண்ணமாட்டாங்க... தப்பு பண்றவங்களுக்கு இந்த அமௌன்ட்டெல்லாம் தூசு.

    பதிலளிநீக்கு
  14. விழிப்புணர்வை ஊட்டும் இடுகை அருமை.

    பதிலளிநீக்கு
  15. நகைச் சுவை நடையுடன் அவசியமான பதிவு சகோ. பாராட்டுக்கள்! தண்டனை கடுமையானால் அதன் நற்பலனை மக்கள்தான் அனுபவிப்பார்கள். நாட்டுக்கும் நல்லது. இப்படிதான் இருக்கணும்! வொர்க் பர்மிட்டை ரெனுவல் பண்ணிடுங்களேன், ஏன் வம்பு சகோ? நீங்க சொல்லிதான் நான் கேட்கணுமான்னு சொல்லிடாதீங்க, எல்லாம் சகோதரியின் அக்கறைதான் :)

    http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
    அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க‌ சகோ!

    பதிலளிநீக்கு

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்