செவ்வாய், மார்ச் 30, 2010

நானும் ஒரு ஹிந்து.......

6 கருத்துகள் :
ஏனிந்த பதிவு:
தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும்,ஹிந்துத்துவ வளைதளங்களும்,ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள்.
எனவே ஹிந்து என்றால் என்ன,அதில் சாரும் மக்கள் யாவர்.என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு...
யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...
************************************************************************************
தோற்றம்:
ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில் அறியப்பட்டது.அது பின்னர் சமஸ்கிருததில் அந்த வார்த்தைக்கு உச்சரிப்பில் ஒப்பான சிந்து,எனும் வார்த்தையை கொண்டு,அப்பகுதி மக்களை குறிக்க ஹிந்து எனும் சொல்லாடலாக உருவானது.சிந்து என்பது இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்கெ பாயும் பழமை வாய்ந்த சிந்து நதியை குறிக்கிறது.
பாரசீக இலக்கியங்களில் "ஹிந்து ஈ ஃபலக்" எனும் வார்த்தை காணப்பட்டது.பின்னர் ஹிந்து எனும் வார்த்தை பயன் பாடு பிரபலமானது சிந்து நதியின் அருகில் வாழும் மக்களை குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்ட "அல்ஹிந்த்" எனும் வார்த்தை கொண்டே.
13 ஆம் நூற்றாண்டில் தான் ஹிந்துஸ்தான் எனும் வார்த்தை இந்திய துணைக்கண்டத்தினை குறிக்க பிரபலமான மாற்று பெயராக பயன்படுத்த பட்டது.சிந்து சமவெளியை சூழ வாழ்ந்த மக்களின் நிலம் என பொருள்பட அது சொல்லப்பட்டது.
ஹிந்து எனும் வார்த்தை முக்கியமாக புவியியல் ரீதியாக ஒரு பகுதியில் வாழும் மக்களை குறிக்க சொல்லப்பட்டதே அன்றி,ஒரு மதம் சார்ந்த சொல்லாடலாக உருவாக்கப் படவில்லை.
அது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் காலனியாதிக்க குழுக்களால் இந்தியாவில் வேத தர்மத்தை பின்பற்றும் மக்களை,குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியில் வாழும் மக்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த துவங்கப்பட்டது,
இது மேலும் குறிப்பாக மத அடையாளம் கொண்டு,மக்களை அதாவது இஸ்லாம்,கிருத்தவம், ஜைனமதம்,புத்தமதம்,சீக்கிய மதம் என இவை சாராத மக்களை குறிக்க ஹிந்து எனும் வார்த்தை முதன்முதலாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப் பட்டது.
ஹிந்து எனும் வார்த்தை சமஸ்கிருதமோ,அல்லது திராவிட மொழியிலோ,என எந்த இந்திய மொழியையும் சார்ந்து உருவானதல்ல.பாரதம் என்பதே,இந்திய மொழியில் இந்திய துணைக்கண்டத்தை குறிக்க சொல்லப் பட்ட வார்த்தை.
17ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்று நூல்களிலோ,அல்லது இந்திய குறிப்புகளிலோ,ஹிந்து எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை.ஹிந்து எனும் வார்த்தை பொதுப்படையாக இந்தியாவில் வாழும் மக்களை குறிக்கவே பயன்படுத்தப் பட்டாலும்,குறிப்பாக மதம் குலம் சார்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டது ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் தான்.
ஹிந்து எனும் சொல்லாடல் வேதத்தை பின்பற்றும் உயர்சாதி பிராமணர்களை குறிப்பாக உணர்த்த 1830களில் ஹிந்துயிஸம் என திரிபு பெற்றது.
ஆதாரம்:
1. The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. ISBN 1-4051-3251-5.
2. Radhakrishnan, S.;Moore, CA (1967). A Sourcebook in Indian Philosophy. Princeton. ISBN 0-691-01958-4.
3. Tattwananda, Swami (1984). Vaisnava Sects, Saiva Sects, Mother Worship. Calcutta: Firma KLM Private Ltd.. First revised edition.
*****************************************************************************************************************
சரி விஷயத்துக்கு வருவோம்.எனவே ஹிந்து எனும் வார்த்தைக்கான மூலத்தை தெளிவாக பார்க்கும் போது,ஹிந்து என்பது மதம் சார்ந்த சொல்லல்ல.அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை இனம் காண பயன்படுத்தப் பட்டது.அது தற்காலங்களில்,அதாவது ஆங்கிலேய ஆட்சியில், அவர்களின் பிரதான கொள்கையான பிரித்தாலும் சூழ்ச்சியின், தலைப்பிள்ளையே இந்த ஹிந்து எனும் மதம் சார்ந்த வார்த்தை.
இந்தியர்களை பற்றி அறிந்து அவர்களை அடிமைபடுத்த,போதுமான காரணிகளை ஆராய ஆங்கிலேய குழு ஒன்று முதலில் இந்தியா வந்தது,பல ஆண்டுகள் இந்தியாவில் இருந்து பல பகுதிகளுக்கும் சென்று,மக்களின் வாழ்க்கை முறை,பழக்கவழக்கம்,கலாச்சாரம்,என பலவற்றையும் கண்டு,அவர்களது பல,பலகீனம் என்ன என்பதை ஒரு ஆய்வரிக்கையாக ஆட்சியாளர்களிடம் சமர்பித்தது.
அதில் இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள்,பல மதம் சார்ந்த மக்கள்,பல மொழி பேசும் மக்கள்,பல இன மக்கள் வாழ்ந்தாலும்,அவர்கள் அனைவரும் இனக்கமாக,ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அவர்களது,மதம் சார்ந்த கொள்கைகள் எதுவாயினும்,அவர்களிடையே, புரிந்துணர்வும்,மரியாதையும்,அன்பும்,அவர்களை ஒற்றுமையாக வாழச்செய்கிறது...
அந்த மத ஒற்றுமையை குலைத்து,அவர்களிடையே பிரிவினையை தூண்டுவதின் மூலம் அவர்களை பிரித்து,நாம் எளிதாக உள்ளே நுழையலாம்,என அதில் முன்மொழியப்பட்டது... அதனடிப்படையிலேயே,ஹிந்து எனும் மத ரீதியான பிரிவு ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது....
இது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்,ஆங்கிலேயர்கள் மேலும் இதற்கு எரியூட்டி,நமது போராட்டத்தை திசைதிருப்ப,மதக்கலவரங்களையும்,மோதல்களையும் உண்டாக்கி,அவற்றில் குளிர்காய முனைந்தனர்..ஆனால் அதையும் தாண்டி,சுதந்திரம் கிட்டியது...ஆனால் அவன் விட்டுச்சென்ற எச்சங்களாக இந்த மதக்கலவரங்கள் தொடர்ந்து,இந்திய திருநாட்டை கூறு போடுகிறது.
******************************************************************************************************************
எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் ஹிந்து என்பது வெகு காலமாக,அத்துனை சாரம் கொண்ட வார்த்தையாக இல்லை.அன்றைய காலகட்டத்தில் ஒரு சில மதவாதகுழுக்களே அதை தூக்கி பிடித்து நின்றனர்.பின்னர் இந்தியாவின் அரசியல் பிரிவுகள் உண்டாகி ஆட்சி பீடத்தின் மீதான மோதல் துவங்கிய போதே...ஒவ்வொருவரும் தனது பலத்தை தான் சார்ந்துள்ள மதத்தை முன்னிருத்தி மக்களை கவரதுவங்கினர்...
அன்றைய காலகட்டம் கொடுமையான தீண்டாமை போன்ற மூட வழக்கங்களால் இருண்டு,ஒருவரை ஒருவர் இழிவு படுத்தி உயர்வு தாழ்வு கற்பித்து.வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருந்த காலகட்டம்.அக்காலத்தில் உயர்சாதியனராக கருதப்பட்ட,ஹிந்துக்கள்,தாழ்சாதியில் உள்ளவர்களின் தோல் மேல் கைபோட மறுத்தனர்.
காலப்போக்கில தீண்டாமை எனும் கைவிலங்குகள் ஒவ்வொரு பகுதியிலும்,வன்மையான ஆயுதம் கொண்டு தகர்த்தெரியப்பட,அவர்கள் தங்களின் உயர்சாதி தரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப் பட்டனர்.அல்ல அல்ல,அனைத்து(பெருவாரியான) மக்களும் சமமான கண்ணியம் பெற்றனர்.இங்கு நான் குறிப்பிடும் வன்மையான ஆயுதம் தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களை....
ஆனால் பல்வேறுபட்ட சமயம் கொண்ட இங்கே.சைவ தெய்வங்களை வணங்குபவர்கள்,அசைவ தெய்வங்களை நாடுவதில்லை.அவரவரது பழக்கம் அவரவருக்குறியதென, வாழ்ந்தார்கள்... வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் சில விஷயங்களில் ஒற்றுமையிருப்பினும்,ஒரு சைவ ஹிந்து,ஒரு முஸ்லிமிடம் எங்ஞனம் பழகுவானோ,அதே போல்தான் அசைவ ஹிந்துவிடம் பழகும் வழக்கம்.
இது இந்திய மக்களிடையெ,பிற ஹிந்துக்களுக்கும்,பிற மதத்தவருக்கும் எந்த வேறுபாட்டையும்,காட்டவில்லை.எனவே தன்னிச்சையாக சகோதரனாக பழகிய எந்த மனிதனையும் மதம் தாண்டி நோக்கும் கண்ணோட்டம் இந்தியர்களிடையே இருந்தது,இது,பிற்கால அரசியலுக்கு உகந்ததாக இல்லை.எனவே.
முன்பு ஆங்கிலேயன் சொன்ன அதே,கொள்கையை கையில் எடுத்து,அதுவல்லாது,மத அடிப்படையிலான,கொள்கைகளை முன்னிருத்தி,அவர்களை,ஒன்றினைப்பதை விட பிற மதத்தவருக்கு எதிராக திருப்பி.அதன் மூலம் தங்களது அரசியல் காய்களை நகர்த்தினார்கள்.
அதனடிப்படையிலே,பல்லாயிரம் தெய்வ வழிபாட்டில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி வந்தவர்களை நீ ஹிந்து,அவன் முஸ்லிம்,அவன் கிருத்தவன்,என இனம் காட்டி,அவன் காணாத வேதத்தையும்,தெய்வங்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி,இதுவும் உன் தெய்வம்,இதை அவன் அவமதிக்கிறான்,என பழித்து,மத கலவரங்களை உண்டாக்கி,அதன் வழியே ஆட்சிபீடத்தை சுவைத்தனர்,
எனவே "ஹிந்து" என்ற மதப்பொருள் கொண்ட வார்த்தை,ஆட்சி மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டு,பின்னர் அதே காரணங்களுக்காக இன்று மேலும் கூர் படுத்தப்பட்டது,கூர் படுத்தப்படுகிறது.என்பதே உண்மை...
ஹிந்து மதம் பற்றி விவேகானந்தர்:
விவேகானந்தர் கூற்றுப்படி,ஹிந்துமதம் என்பது சரியான பொருள்தரும் சொல்லே அல்ல.
அது வேதங்களை அடிப்படையாக கொண்ட மதமாதலால்.அது சனாதனதர்மம்,அல்லது வேதாந்தம் என்றே சொல்வது சரியாகும்.மேலும் அதை பின்பற்றுபவனை ஹிந்து என்றல்ல வேதாந்தி என சொல்வதே சரியானது.
ஹிந்து வேதங்கள்,சில வழிமுறைகளையும் வாழ்க்கைமுறைகளையும்,வணக்க நெறிகளையும், கடவுள் கொள்கைகளையும் உள்ளடக்கியது.அதை பின்பற்றுபவனே அந்த மதத்தை சார்ந்தவனாவான்.
கம்யூனிச கொள்கையை பின்பற்றாதவன் கம்யூனிஸ்ட் அல்ல
இஸ்லாத்தை பின்பற்றதவன் இஸ்லாமியன் அல்ல.
ஏசுவை பின்பற்றதவன் கிருத்தவன் அல்ல.
புத்தரை பின்பற்றாதவன் புத்தமதத்தவன் அல்ல
எனவே வேதங்களை அடிப்படையாக கொண்ட ஒரு மதத்தில்
அந்த வேதத்தை பின்பற்றாதவனும்,ஹிந்து,
அந்த வேதங்களை அறியாதவனும் ஹிந்து,
அந்த வேதத்தின் படி வாழாதவனும் ஹிந்து,
அந்த வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனும் ஹிந்து,
அந்த வேதத்தை பொய் எனசொல்பவனும் ஹிந்து,
அந்த வேதங்களை மறுப்பவனும் ஹிந்து,
அந்த வேதத்தை விமர்சிப்பவனும் ஹிந்து,
என்பது முற்றிலும் உகந்ததாகவே இல்லை.அது அறிவுக்கு ஏற்ப்புடையாதாகவும் இல்லை.சுயநலவாதிகளின் நலத்திற்காக மக்களிடையே பின்னப்பட்ட சூழ்ச்சி வலையே...
எனவே"ஹிந்து" என்பது மதம் சாராத சொல்லேயாகும்..அது,ஒரு நிலம் சார்ந்த மக்களை குறித்து சொல்லப்படும் சொல்லாகவே தன்னை முன்னிருத்துகிறது...
எனவே....
ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,
ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,
இந்திய மண்ணில் பிறந்த யாரும் ஹிந்துவே...
மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,என அனைத்தையும் தாண்டி இந்திய குடிமக்கள் யாவரும் ஹிந்துக்களே...
மொழி,இனம்,மதம் தாண்டி இன்னபிற நாட்டு மக்களான
அரேபியாவில் பிறந்தவன்,தன்னை அரேபியன் எனவும்,
ஆப்ரிக்காவில் பிறந்தவன் தன்னை ஆப்பிரிக்கன் எனவும்,
ஐரோப்பாவில் பிறந்தவன் தன்னை ஐரோப்பியன் எனவும்
குறிப்பிடும் போது இந்தியாவில் பிறந்த மக்களை குறிக்கும் சொல்லான
"ஹிந்து என்பது இந்தியர் அனைவரையும் குறிக்கும் சொல்லேயாகும்...."
"ஒரு நாத்திகனுக்கு,உள்ள கடவுள் மறுப்பை தவிர,
ஹிந்து வேதத்தை பின்பற்றாமை
ஹிந்து வேதங்களை அறியாமை,
ஹிந்து வேதத்தின் படி வாழாமை,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காமை,
"என ஒரு நாத்திகனுக்கு பொருந்தகூடிய மெற்சொன்ன அம்சங்கள் ஹிந்து மதத்தை பொருத்தவரை எனக்கும் பொருந்துவதால்,ஓரிரை கொள்கையை ஏற்று வாழும் ஒரு முஸ்லிமான நானும் ஒரு ஹிந்துவே"...
"புவியியல் அமைப்பின் படி இந்தியா மண்ணில் பிறந்து,இஸ்லாம் எனும் மார்க்கத்தை எனது வாழ்வியல் நெறியாக ஏற்று,அதன்படி வாழும் நானும் ஒரு ஹிந்துவே"....
நன்றி
"நேரம் ஆகிவிட்டது,எனது அஸர் எனும் மாலை நேர தொழுகைக்கு செல்கிறேன்"
அன்புடன்
ரஜின்

வியாழன், மார்ச் 18, 2010

ஓவியர் M.F.Hussain - ஒரு முஸ்லிமின் பார்வை...

14 கருத்துகள் :
M.F.Hussain:
மஃபூல் ஃபிதா ஹுஸைன்.இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள பந்தர்பூரில் 1915களில் பிறந்து,M.F.Hussain என ப்ரபலமாக அறியப்பட்ட ஓவியர்..
ஃபோர்ப்ஸ் இதழின் படி இவர் இந்தியாவின் பிக்காஸோ என போற்றப் பட்டவர்.
M.F.Hussain முஸ்லிம் என சொல்ல தகுதியுடையவரா?
எனது பார்வையில் இந்த ஓவியர் பெயரளவிலே முஸ்லிமாகிறார்.இஸ்லாம் உருவங்கள் படைப்பதையும் அதை வரைவதையும் வன்மையாக தடை செய்கிறது.அது இணைவைப்பு எனும் பெரும் பாவத்திற்கு ஒப்பாகிறது.
அப்படி இருக்க ஒரு முஸ்லிமான இவர் ஒரு சாதாரண மனிதனையோ,அல்லது விலங்குகளையோ கூட வரைவதை தவிர்த்து இருக்க வேண்டும்..ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் தாண்டி,இதை தனது ஆத்ம திருப்தி தரும் செயலாக கொண்டார்...
அதுவல்லாது,இஸ்லாம் ஆபாசமான,மானக்கேடான காரியங்களை செய்வதில் இருந்து மனிதனை வன்மையாக தடுக்கிறது.அப்படி இருக்க ஒருவன் பெண்களை வக்கிரமாக நிர்வாணமாக வரைவதை,என்னவென்று சொல்ல.
நமது நாட்டில் நிர்வாணம் கலையாக பார்க்கப் படுகிறது(வெகு சிலரால்).இன்ன பிற நாடுகளும்.பெரும்பாலும் ஓவியர்கள்,நிர்வாணத்தை கலையெனவே வாதிடுகிறார்கள்.
இது எனக்கு கொஞ்சமும் புலப்படாத விடையமாகவே உள்ளது.ஒரு பெண்ணை நிர்வாணமாக எப்படி கலைக் கண்ணோடு நோக்குவது.தெரியவில்லை.அது முற்றிலும் முடியாத காரியமாகவே எனக்கு தெரிகிறது.ஆயிரம் தான் நான் கலை கண்ணோடு நோக்குவேன் என்றாலும்...நான் பருவ வயதை அடைந்த இளைஞன் ஆயிறே..என்னுள் உள்ள ஹார்மோன்கள் அதன் இயக்கத்தை துவங்கி பொருப்புடன் அதன் வேலையை செய்ய ஆரம்பித்து பல வருடம் ஆகிறதே...
என்னை பொருத்தவரை,உறவினர் அல்லாத மற்ற பெண்களின் உடல் அங்கங்களோ, அல்லது நிர்வாணமோ,என்னை கவரவே செய்யும்..மாற்றுகருத்து இல்லை.இந்த தொழில் நுட்பத்துடனே ஒரு ஆண் படைக்கப் பட்டுள்ளான்.
அதென்ன உறவினர் அல்லாத,அப்டின்னு கேப்பீங்க....ம்ம்,அததா சொல்ல வர்ரே..
இப்படி ஒரு வாதத்தை வைக்கும் போது..நேர்மையின் சின்னமாக தன்னை வெளிப்படுத்தும்,சில முகமூடிகள்,இப்படி ஒரு வக்கிரமான கேள்வியை முன்வைப்பார்கள்..
அது பெற்ற தாய்,சகொதரியுடன் தொடர்பு படுத்தியதாக அது இருக்கும்..
அப்படிப்பட்ட ஒரு நிர்வாணம்,வக்கிரமாகவும்,கேவலமாகவும்,ஆபாசமாகவும் தெரியுமே தவிர...ஒரு காலும் அது கண்ணியமானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்காது...அதை உடனே மறைக்கவே தோன்றுமே தவிர,அதை மரியாதை நிமிர்த்தமாக,பக்தியுடன் காண சகிக்காது...இதுவே எனது நிலைப்பாடு..நடுநிலை எண்ணம் கொண்ட அனைவரின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்...இது முதல் விஷயம்..
ஓவியத்தில் நிர்வாணம் என்பது,அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி.ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.அது ஒருவரின் அந்தரங்கம்..அதை வெளிப்படுத்துவது. வக்கிரம்,ஆபாசம்.இதுவே எனது நிலைப்பாடு.
எனவே ஹுஸைன் வரைந்த ஓவியம் அது ஹிந்துக்களின் பெண் கடவுளின் உருவம் அல்ல,அது எந்த பெண்ணாக இருப்பினும்,நிர்வாணமாக இருப்பின்,அதை வன்மையாக கண்டித்து,எனது எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.
சர்ச்சை:
சரி அடுத்தது...ஹுஸைன்,ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை (ஒரு காலத்தில்)நிர்வாணமாக வரைந்து, அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டு...
நான் அந்த ஓவியத்தை நோக்கும் போது..நிர்வாணத்தை தாண்டி ஒருவித வக்கிரமே தெரிகிறது.எனவே,இது ஹிந்து மக்களின் (மலிவான அரசியல் பிழைப்புவாத பொருக்கிகள் அல்ல) மனதை புண்படுத்தவே செய்யும்..நான் ஓவியத்தை கலை கண்ணோடு அல்ல,வெறும் கண் கொண்டு நோக்கியதில் எனக்கு தெரிந்தது..அவ்வளவெ...
ஆனால்.அதை வக்கிரமாக என்பதை தாண்டி,அவர் நிர்வாணப் படுத்திவிட்டார்,என்பதே குற்றசாட்டு.ஒருவேலை வக்கிரம் அல்லாத அழகு பதுமையாக வரைந்து இருந்தாலும் இதே எதிர்ப்பு கிளம்பி இருக்கும்.ஆக நிர்வாணமே,இங்கு பிரதான பொருளாகிறது.எனவே அது அழகா வக்கிரமா என்பதல்ல இங்கு மைய கரு.அப்படியாயின்...
நிர்வாணப்படுத்தாத ஒன்றை நிர்வாணப் படுத்திவிட்டார் என்றால்...அதை விட ஒரு பெருங்குற்றம் இருக்க முடியாது..மானம் உயிரை விட முக்கியமானது..
ஆனால் ஹிந்துக்களின் கடவுள்களோ,காலம்காலமாக நிர்வாணமாகவே காட்சி தந்து வருகின்றன.அதற்கு உதாரணமாக இன்றும் பல கோவில்கள்,அதற்கு வாழும் சாட்சியாக நிலைத்து நிற்கின்றன..அதையே காலம் காலமாக ஹிந்துக்களும் வழிபட்டு வருகின்றனர்..
இன்று ஹுஸைன் வரைந்தது குற்றமாக பார்க்கப் படுகிறதென்றால்,அப்போ அன்றைய சிலைகள் எப்படி கலையாக பார்க்கப் பட்டது.இப்போதும் பார்க்கப் படுகிறது.ஒரு வேலை அதை வடித்தது,அக்கால அரசர்கள் என்பதாலா? இல்லை உள்ளத்தில் உள்ள குமுறல்களை அப்போது வெளிப்படுத்தினால் தலை போய் விடுமென்றா?
அப்படியானால்.இப்போது அதற்கு எத்தடையும் இல்லையே..வெறிகொண்டு அந்த வயோதிகனை(இந்த கரிசனம் அவர் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி என்பதால் அல்ல, மனிதாபிமானத்தால்) கொல்ல அலையும் கூட்டம்.முதலில்,இருக்கும் நிர்வாண சிலைகளை அகற்றிவிட்டு, பிற்கல்லவா,ஹுஸைன் மீதும்,அவரது படங்கள் மீது கை வைத்து இருக்க வேண்டும்..ஆனால் அவ்வாறு செய்யவில்லை...ஏன் இந்த இரட்டை நிலை...??
ஒருவேலை எங்களது தெய்வங்களை நாங்கள் தான் நிர்வாணப்படுத்த த்குதியுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்ற எண்ணமா?
வலைஞர் கிரி அவர்கள்,ஒரு நல்ல கருத்தை தனது வளைபூவில், ஹுஸைனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது சொல்லி இருப்பார்.நிர்வாணம் என்ற விஷயத்தில் எனது கருத்தோடு,முற்றும் ஒன்றி நிற்கிறார்...
அவர் சொன்னது:
//எல்லோருக்கும் நல்லவனாக என்னால் இருக்க முடியாதுங்க! என்னோட எதிர்ப்பை இதன் மூலம் நான் பதிவு செய்கிறேன். ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது காமாலைக் கண்ணோடும் பார்க்க முடியாது. சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும். நான் சாதாரணமானவன் என்னுடைய எதிர்ப்புகள் இந்த அளவிலே தான் இருக்கும். இதை எல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இவர்களைப் போல எனக்கு பரந்த மனசு எனக்கில்லை.//
இது ஒரு சராசரி மனிதனின் கருத்து.முழுமையாக ஏற்க கூடியது..ஆனால் அவர் ஏனோ அதை தனது
கோவில்களில் உள்ள நிர்வாண சிலைகளை வடித்தவர்களை நோக்கி எழுப்பவில்லை.
இங்கே அவர் குறிப்பிடும் "அதை" என்பது நிர்வாணத்தை எனில் சரி..இல்லை இல்லை.ஹுஸைன் வரைந்த நிர்வாணம் மட்டும் என சொல்வாரானால்.அது உள்நோக்கம் உள்ள ஒரு சார்பு சாடலே...
இதுவல்லாது,இன்னொரு குழந்தைதனமான கேள்வியும்,பரவலாக பதிவுலக ஹிந்து நண்பர்களிடையே இருக்கிறது...
அது என்னவென்றால்...அன்னை தெரசா,முஹம்மது (ஸல்) நபியவர்களின் மகளார்,அன்னை ஃபாத்திமா (ரலி),ஹுஸைன் அவர்களின் மகள்,உள்பட பல பேரின் உருவங்களை ஹுஸைன் நல்ல ஆடையுடன் வரைந்துள்ளாரே,ஏன் அவர்களை மட்டும் ஆடைகளைந்து வரையவில்லை,என ஒரு குறையறிவு கேள்வியை கேட்கிறார்கள்....
எனதறிவுக்கு எட்டிய எளிமையான பதில்...
அவர் ஆடையுடன் கண்டவர்களை ஆடையுடன் வரைந்துள்ளார்,ஆடையின்றி கண்டவர்களை ஆடையின்றி வரைந்துள்ளார்,அவ்வளவே...
Dr.ருத்ரன் அவரது பதிவில் இவ்வாறு சொல்கிறார்..
//கடவுளை நீங்கள் தினம் பார்க்கும் மங்கையரைப்போல் உடுத்திக் காட்ட முடியாது என்று தான் சோழ காலச் சிற்பிகள், தெய்வங்களைத் திறந்த மார்போடு படைத்தார்கள். (கச்சை கட்டியதெல்லாம் பின்னர் கும்பகோணத்து நவீன சிற்பிகள் கைங்கரியம்).//
ஆது போல..தற்கால சிற்பிகளின் கைகளே,அவர்களின் மார்புகளுக்கு மாராப்பு இடுகிறதே தவிர..இன்னும் இருக்கும் அக்கால சிலைகள் அப்படியே இருகிறது...ஒருவேலை இனி வரும் வளரும் ஓவியர்கள்,இக்கால சிலைகளை பார்த்து,ஹிந்து கடவுள்களுக்கு ஆடையிடலாம்...
நண்பர் கிரி சொல்வது போல்,என்னாலும் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முடியவில்லை.என் உள்ளத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக எழுந்த கேள்விகளையும் அனைத்தையும் தாண்டி எனது மனஓட்டத்தை பதிவி செய்கிறேன்,அவ்வளவே...இதில் எந்த உள்நோக்க கருத்தும் இல்லை
மற்றபடி,ஹிந்து வெகுஜன மக்களின் (கழிசடை அரசியல் பிழைப்புவாதிகளை குறிப்பிட வில்லை) மனம் புண்படும்படி இந்த ஓவியம் இருப்பின் (இருக்கிறது) கலை தாண்டி..இது எரிக்கப் படவேண்டியதே....
இங்கு,அவர் வரைந்த ஓவியம் முதல்,பல ஹிந்து தெய்வங்களின் சிற்ப புகைபடங்களை,சேர்த்து மேற்கோள் காட்டவேண்டும் என எண்ணினேன்.ஆனால்..நிர்வாணத்தை கொண்டு எனது வளைபூவை அலங்கரிக்க விரும்பவில்லை....
பார்க்க விரும்புவோர்,தொடுப்புகளை சொடுக்கலாம்...
சில ஹிந்து கடவுள்களின் சிலைகள்.
ஹுஸைனின் சில ஓவியங்கள்.
நன்றி
நட்புடன்
ரஜின்

புதன், மார்ச் 17, 2010

தூக்கில் இடப்பட்ட இந்திய அரசியல் சட்டம் - இதுக்கு நாமளும்...

1 கருத்து :
தாய்- மகள் கற்பழிப்பு: போலீஸ், அரசு வக்கீல், மாவட்ட நீதிபதியின்
பொறுப்பின்மையால் குற்றவாளிகள் விடுதலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர். உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர். அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர். பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.
முழு செய்தியும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
ம்ம்ம்....இந்திய அரசியல் சட்டம்...அதன் தத்துவார்த்தமான சொல்லான "வாய்மையே வெல்லும்" இது ஒவ்வொரு நீதி மன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்,எழுத்தப்பட்டு இருக்கும்..எழுத்தோடு சரி...
அதுவல்லாது இன்னொரு உத்தமமான சொல்லாடலும் உண்டு..
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படக்கூடாது"..அடடா..இத கேட்டாலே...இன்ப தேன்வந்து பாயுது காதுல....இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....
அந்த முதல் லைன்லயே தெரியல பெரிய ஓட்டயவே சட்டமா உருவாக்கி இருக்காங்கன்னு... ஏண்டா?1000 "குற்றவாளி"இங்க இத கவனிக்கனும்...குற்றவாளி என்பவன் யார்...எவனோ ஒரு மனிதனுக்கு அநீதம் இழைப்பவனே குற்றவாளி...இல்லையா? அது திருட்டு,கற்பழிப்பு,கொலை, வழிப்பறி, ஏமாற்றுதல்,என எதுவானாலும்,ஒரு அப்பாவி பாதிக்கப்படுகிறான்...அதனால் அந்த அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு,கிடைக்கும் ஒரே நிவாரணம்.தனக்கு அநீதம் இழைத்தவன், தண்டனைக்குள்ளாக்கப்பட்டான்.என்பதே..அவன் இழந்ததை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.. அப்படிப்பட்ட,இந்த "1000 குற்றவாளிகள்"எளிதாக தப்பிக்கலாம்....அல்லது தப்பிக்கிறார்கள்,என்றால் என்ன அர்த்தம்..அவர்களால் அநீதம் இழைக்கப் பட்ட 1000 நிரபராதிகளும் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதே...
தண்டனை என்பது என்ன? இங்கே சில மதவாதிகளும், அரசியல்வாதிகளும், இன்ன பிற சமூக விரோதிகளும்,செல்போன்,வீட்டு சாப்பாடு,என சகலமுடன் சொகுசாக ஜெயில் வாழ்க்கை அனுபவிக்கிறார்களே,அதுவா...இல்லை..இல்லவே இல்லை....
பாதிக்கப் பட்டவனின் குறைந்த பட்ச நிவாரணமான,குற்றவாளிக்கு தண்டனை என்பதே,அங்கு தவிடு பொடியாக்கப் படும் போது...அந்த மனிதனுக்கு,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து,தனது மீதி வாழ்நாளை, ஒருவித விரக்தியுடன்,வலியுடன் கழிக்கிரானே..அதை விட ஒரு பெரிய தண்டனை யார் தர முடியும்...
பொதுவாக ஒரு சொல்லாடல் உண்டு.."குற்றம் செய்து அதை உணர்ந்தவனை தண்டிப்பதை விட மன்னிப்பதே பெரிய தண்டனையாக அமையும்" என்று.இதன் பொருள் என்ன,உடல் அளவில் தரப்படும் தண்டனையை விட மனதளவில் ஒருவன் துயருறுவது பெரியது என்பதே..
அப்படி இருக்க இந்த முதல் வாசகம் முற்றிலும் பொய்க்கிறது...ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது.என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...
எனவே இங்கு குற்றம் இழைத்த கயவர்கள் 8 பேரும்,மேல் முறையீடு,என கோரி,அங்கு இருந்த ஒரு பைத்தியக்கார - (தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) - நீதிபதி?? ஒருவன் இந்த வழக்கில் அதன் தீர்ப்பை திருத்தி எழுதி,8 குற்றவாளிகளை விடுவித்து,அந்த மொத்த குடுமபத்தையும் தீரா துயரில் தள்ளி,மாறா வடுவாக அவர்கள் வாழும் காலமெல்லாம்,சொல்லி அழ,அருமையான தண்டனையை தந்து,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.- (வார்த்தை தனிக்கை செய்யப் பட்டுள்ளது) - ங்க...
இபோ அந்த பெண் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக?? இருக்கிறாளாம்...என்பதை அவர் கேள்விப்பட்டாராம்...அந்த (திரும்ப ஒரு முறை தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) நீதிபதி...அதனால் இந்த வழக்கில் மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டாராம்...
ஏண்டா கேள்விப்பட்ட,ஒரு செய்தியை கொண்டு...ஒரு முடிவுக்கு வருபவன், நீயெல்லா நீதிபதின்னா?..தெருவோரமா பிச்சை எடுக்கிர பைத்தியக்காரனுக்கு உள்ள குறைந்த பட்ச அறிவுகூட உனகில்லயே...இவன்லா எப்டி நீதிபதி ஆன???..ம்ம் அதுக்கும் இந்திய அரசியல் சட்டத்துல வழி இருக்குமா இருக்கும்...யார் இந்த எழவைலா கண்டது...
ம்ம்..இன்னொரு பக்கம் பாத்தா இந்த பைத்தியக்காரன் சொன்னதுலையும்,ஒரு மேட்டர் கவனிக்கலா,அது என்னானா?
இதுவேர கற்பழிப்பு கேசா பொச்சா?,வாதாடுர வக்கீல் எல்லா சேந்து,நடு கோர்ட்ல வச்சே,,குறுக்கு விசாரணை'ங்ர பேரல இன்னும் பல தடவ அந்த அபலைகள கற்பழிச்சுடுவானுங்க....அது இலலாத வரைக்கும்,கடுகளவு சந்தோஷமே....
இங்கன்னு இல்ல,குற்றம் சாட்டப்படும் எந்த ஒரு வழக்கிலும்,பாதிக்க்ப் பட்டவரும்,சாட்சி சொல்பவருமே...அதிகம் மன உளைச்சலும்,கஷ்டமும்,சந்திக்கிறார்..கேட்டா விசாரண பண்ராங்களாம்..ஏண்டா (வார்த்தை தனிக்கை செய்யப்படுகிறது) தப்பு பண்ணுனவன் எத்துனையோ வழக்குகள்ல,திருவண்ணாமலை தீபம் மாரி தெளிவா தெரிஞ்சாலும்...பாவம்,இந்த அப்பாவிங்கள ஏண்டா சாகடிகிரீங்க...அப்ரோ எவண்டா வந்து கம்ப்ளைண்ட் கொடுப்பான்,எவண்டா வந்து சாட்சி சொல்லுவா?ம்ம்...
இதுனால தானடா,,ஆக்ஸிடண்ட் ஆகி நடு ரோட்ல செத்துகிட்டு இருக்குரவனையும் பாத்துட்டு,ஒருத்தன் அத கடந்து போரான்னா?என்ன காரணம்...என்ன நம்ம நாட்டு மக்களுக்கு ஈவு இறக்கம் இல்லன்ன....ஹ்ம்ம்....இன்னக்கி இவன காப்பாத்தீட்டு,நாளைக்கு நாம சாகனுமேன்னுதா....
அந்த பொண்ணு சந்தோஷமா இருக்காளாம்..சரி,இவ்வளவு பிரச்சனைக்கு பின்னும்,அவ ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ரான்னா,முதல்ல அதுக்கு காரணமான அவளுடைய கணவன்,என்னிடத்தில் பெரும் மதிப்பிற்குறியவனாகிறான்.. அடுத்து அவளது தைரியம் போற்றுதளுக்குறியது..அதை எல்லாம் கடந்து..அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் உள்மனதில் இருக்கவே செய்யும்..அதன் ரணமும் ஆறாமல் இருக்கும்..இவர்களுக்கு தரப்படும் இந்த தண்டனையே அவர்களுக்கு,குறைந்த பட்ச மருந்தாக அமையும்...அதை இந்த காட்டெரும நீதிபதி ஏன் சிந்திக்கல?ம்ம்ம்...
சரி இப்டி காரணம் காட்டி இவன்கள விடுதல பண்ரோமே...நாளைக்கு,,இதுவே இவன்களுக்கு,மேலும் தைரியத்தையும் ஊக்கத்தையும்,தராதுன்னு என்ன நிச்சயம்??.இதென்ன கேள்வி..அது அவர்களுக்கு மிகுதியாகவே செய்யும்..ஐயமின்றி...
இது இன்னும் பல இது போன்ற குற்றவாளிகளையும்,,,ஊக்குவிக்கவே செய்யும்.."எப்புடியும் தப்புச்சிடலாம்"அப்டீங்ர எண்ணம் வளருமே...இது மேலும் பல வழக்குகளில் உதாரணமாக எடுத்து வதாடப்படுமே.... இதுனால...குற்றவாளிகளுக்கே பயன் அன்றி மக்களுக்கல்ல....அது அபாயகரமானதும் கூட....
அது மட்டும் இல்லாம,நம்ம இந்திய சட்டத்துல (மத்த நாட்ல இருக்கான்னு தெரியல)..அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை "மேல் முறையீடு"....இதோட அர்த்தம் புரியவே இல்ல....
பென்ச் நீதிமன்றம்,துணை நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச்ச்ச்ச நீதிமன்றம், (இன்னும் நெரையா இருக்கு,எழவு எனக்குத்தா தெர்ல)என இதனை நீதி மன்றங்கள் ஏன் இருக்குன்னு எனக்கு புரியவே இல்ல.ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்பு,இன்னொரு நீதி மன்றத்தில் உடைக்கப் படுகிறது...
சரி அப்படி அந்த தண்டனை உடைக்கப் படும்போது,ஒன்று,ஒரு நிரபராதி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்,அல்லது ஒரு குற்றவாளி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்..இது இரண்டே சாத்தியம்..அப்படி,கீழ் கோர்ட்டில் சொல்லப் பட்ட ஒரு தீர்ப்பு,தகர்க்கப் படுகிறதென்றால்.அங்கு அந்த விசாரணை,முழுமைப் படவில்லை.அங்கு வழங்கப்பட்ட நீதி தவறானது என்பதை செவுட்ட அறஞ்ச மாதிரி,மேல் கோர்ட் தீர்ப்பு,தீர்ப்பு சொல்லுது...இல்லயா?
அப்பரோ என்ன செறக்கிறதுக்கு,இந்த கீழ் கோர்ட்ல ஒரு வழக்கு,ஒரு விசாரணை,வக்க்க்கீலு, நீதி??பதி...சம்பளம்,மயிறு இந்த மட்டை எல்லா?.....எவனா இருந்தாலும்,கீழ் கோர்ட் சொன்ன தீர்ப்ப மேல் முறையீடு பண்ணலாம்னா?அப்ரோ என்ன மசுறுக்கு அதெல்லா இருக்கு....
நானறிந்த நடுநிலை நீதிமன்றம்:
மேல் சொன்ன இந்த முறை முற்றிலும் தவறானது...ஒரே கோர்ட்,(அப்டீன்னா ஒரே ஒரு கோர்ட் இல்ல,சென்னை உயர்நீதிமன்ற கிளை,மதுரையான எங்க ஊர்ல இருக்குல்ல அதுமாரி.தேவையான அளவு.)ஒரே,தெளிவான நடுநிலையான,தாமதம் இல்லாத,முறையான விசாரணை...ஒரே தீர்ப்பு...ஒரே தண்டணை....அது பாரபட்சமில்லாத இறுதியான கடுமையான தண்டணையாக இருக்க வேண்டும்.
மேல் முறையீடு,மறுவிசாரணை என இருப்பின் அதே கோர்ட்டில்,அதே நீதிபதி முன்னிலையில்,மற்றொரு நீதிபதி கொண்டு நடத்தப்பட வேண்டும்...இந்த வழக்கின் முந்தைய தீர்ப்பு தவறெனில்,,,அது தவறாக அமைய காரணமானவர்கள்,(காவல் துறை,சாட்சிகள்,வக்கீல்கள்,)வன்மையாக தண்டிக்கப் படவேண்டும்...நீதிபதியாயின்..மிக கடுமையான தண்டனை...அதை வழங்க,எந்த தலையீடும் இல்லாத தன்னிச்சையாக செயல்படும் குழு ஒன்றும் இருக்க வேண்டும்...
இதில் நான் வலியுருத்தும் ஒரு விஷயம் என்ன வென்றால்
"தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்"என்பதே...இது 100% சரியானது கூட.இதை 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்...இது முக்கியமாக,இஸ்லாமிய சட்டமான கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,கற்பழிப்பு,கொலை செய்தவனுக்கு,மரண தண்டனை இன்னும் பல.போன்றவை...
(நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதை ஆதரிக்கிறேன்,என்பதல்ல.குற்றங்கள் குறைய,குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட இதைவிட முறையான சட்டம் இருந்தால் சொல்லுங்கள்)
இந்த சட்டங்கள் கடுமையாக இருப்பினும்.அது பார்ப்பவனை தவறு செய்வதில் இருந்து தடுக்கிறது...கற்பழித்தால் தலை போய்விடும் என்ற எண்ணம் இருந்தால்..எவனுக்கு அந்த எண்ணம் தோன்றும்???...
இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு,மரண தண்டனை பெரிதாகவே தோன்றும்..நாளை தான் பாதிக்கப் படும் போது அதை உணர தலைப்படும்..
இந்த வழக்கை பொருத்தவரை,இந்த இரு பெண்கள் கற்பழிக்கப் படவில்லை...இந்த வழக்கை கையாண்ட நீதிபதி தலைமையில்,சகலரும் சேர்ந்து,நீதிமன்றத்திலே, பொதுமக்கள் முன்னிலையில் நீதி தேவதையை மாறி மாறி கொடூரமாக வன்புணர்ச்சி செய்துள்ளார்கள் என்பதே....எனது கருத்து.........
நன்றி
அன்புடன்
ரஜின்...
பின் குறிப்பு:
தவிர்க்க முடியாத காரணத்தால் தகாத வார்த்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு தணிக்கை செய்யப் பட்டுள்ளது.

ஞாயிறு, மார்ச் 14, 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவினார்...

5 கருத்துகள் :
நான் மதிக்கும் நன்மக்களில் பேராசிரியர் பெரியார்தாசன் (அப்துல்லாஹ்)அவர்களும் ஒருவர்.
அவரை நேரில் கண்டதில்லை.அவரது பேச்சை,அதிகம் கேட்டதில்லை..அவரது எழுத்தை படித்ததும் இல்லை..அவர் ஒரு கடவுள் நம்பிக்கை அற்ற மனிதர்,அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்தவர்,அனைத்து மதங்களையும் விமர்சித்தவர்.ஆனால் அவரது விமர்சனம் நாகரீகமாகவும்,நடுநிலையோடும் இருக்கும்...அது தவிர சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்.அவ்வளவே அவர் பற்றி நானறிந்தவை.அவரது பேச்சின் கண்ணியமும்,ஆழமும்,சிறந்த சிந்தனையுமே,அவரிடம் என்னை கவரச்செய்ததா என்றால்,இருக்கலாம்.
பொதுவாக மத ரீதியான விமர்சனம் என வரும் போது,பெரும்பாலோர்,தன்னிலையில் இருந்து சற்றே இறங்கி,பிறர் மதத்தை விமர்சிப்பர்...அப்படிப் பட்டவர்கள் மத்தியில்,அவர்களின் வார்த்தையில் ஒரு கண்ணியம் கொண்டு,பிறர் மனம் நோகாமல் பேசும் போது பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.
அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த போது,இஸ்லாத்தையும் அவர் விமர்சிக்காது விட்டதில்லை..இஸ்லாம் விமர்சன்ங்களுக்கு அப்பார்பட்டதும் இல்லை...
ஆனால் அவர் வெறும் விமர்சனத்திற்காக மதத்தை படிக்க வில்லை.அதன் கருத்தை அறிய,அதன் நெறியை உணர என்பதே,அவரது மாற்றம் நமக்கு சொல்லும் விடயம்....
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.
இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.
இது அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியின் சாரம் :
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்.
Source:

http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுகாரும் அவரை பின்பற்றிய,அவரது கருத்துகளால் ஈர்க்கப் பட்ட,மாற்றுமத ச்கோதரர்கள்,சிந்திக்க வேண்டும்..தன் வாழ்வில் பெரும் பகுதியை கடந்து விட்ட ஒருவருக்கு,இப்போது என்ன தேவை இருக்க முடியும்.அவர் இஸ்லாத்தை தழுவ? எது அவரை இறை நிராகரிப்பில் இருந்து,இறை நம்பிக்கையாளராக மாற்றியது.

பணமா?அவரிடம் இல்லாத பணம் இல்லை.அவர் பணம் தேடும் மனிதராகவும் அறியப்படவில்லை.

புகழா?அவர் ஏற்கனவே..தமிழகம் முதல் இந்தியா கடந்து,மேற்குலகு வரை,மிகவும் அறியப்பட்ட மனிதர்...அதுவல்லாது,வாய்கிழிய நாத்தீகம் பேசிவிட்டு,ஒரு மதத்தில் நுழைபவருக்கு,அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிற புகழும் மங்கவே வாய்ப்புள்ளது..அப்படி இருக்க அதுவும் இருக்க முடியாது..

மிரட்டப் பட்டு இருக்கலாமா?...இது குற்றறிவாளர்களின் சிந்தனை,என்னுடையதல்ல...பொதுவாக கடவுள் நம்பிக்கையற்றவர்கள்.எளிமையாக,நடுநிலையாக,எதுபற்றியும் கவலை கொள்ளாதவர்களாக,கடவுளுக்கே அஞ்சாதவர்களாகவே இருப்பர்.இவரையும் அப்படியே கண்டுள்ளோம்.அப்படி இருக்க..இது தேவை இல்லாத கற்பனையே....

சரி.எது அவரை இந்த அளவு பாதித்து...அவர் பிறந்த மதமான ஹிந்து மதத்தில் இருந்து,(அரேபிய தயாரிப்பான:இஸ்லாமிய எதிரிகளின் வசை இது) தூய்மை மார்க்கமான இஸ்லாதை தழுவச்செய்த்து...அதை அவரே,அவரது பேட்டியில் சொல்லி இருக்கிறார்....

வல்ல அல்லாஹ் அவரது முந்தைய பாவங்களை மன்னித்து,அவருக்கு ஹிதாயத் அருளியது போல்,அவரது குடும்பத்தினருக்கும்,அவரை சார்ந்த மக்களுக்கும்,ஹிதாயத் வழங்கி,ஈருலகிலும் சிறப்பிக்க துஆ செய்வோம்..

அவரது இந்த மாற்றம் குறித்து விரிவாக அவர் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்...அது,இஸ்லாம் பற்றிய அவரது கோணத்தையும்..அவரது சிந்தனையையும்,அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக அமையும்....

அன்புடன்

ரஜின்

Counter

பிற பதிவுகள்