ஞாயிறு, அக்டோபர் 31, 2010

ஹிந்து மதம் - சில கேள்விகள்

28 கருத்துகள் :
ஒரு சகோதரரின் தளத்தில் நடந்த பின்னூட்ட கலந்துரையாடலில்,இஸ்லாம் மற்றும் ஹிந்துமதத்தின் வரையறைகளை பற்றி விவாதித்தோம்.அப்போது எனக்கு ஹிந்துமதத்தின் வரையறை பற்றி எழும்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்..பதில் இல்லை.எனவே அந்த கேள்விகளை பொதுவில் வைத்தால்,விருப்பம் உள்ள ஹிந்து சகோதரர்கள் பதில் தர ஏதுவாகுமே என அவற்றை இங்கே பதிக்கிறேன்...


உலகில் உள்ள எந்த மதமாகட்டும்,அல்லது இஸங்கள் ஆகட்டும்,சில கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது,அந்த கொளகையில் பிடிப்பு உள்ளவர் அந்த குறிப்பிட்ட மதத்தையோ,அல்லது அந்தந்த இஸங்களையோ சார்ந்தவராவார்.

வியாழன், அக்டோபர் 28, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 01

4 கருத்துகள் :

இஸ்லாம் - உலக வரலாற்றை பொருத்தவரை சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிஉலகம் முழுவதிலும் வியாபித்து,இன்று அனைத்து மக்களாலும்,கவனிக்கப்படும் மார்க்கம் என்றால் அது இஸ்லாமே.இன்னும் உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் அதிகம் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் மார்க்கமும் இஸ்லாம் தான்.

கடந்த நூற்றாண்டு வரை இஸ்லாம் குறித்த உள்விவகார விமர்சனங்கள் பிறரிடம் இருந்தும்,அது தன்னை பாதிக்காது இருந்த காரணத்தால்பெரிய அபிப்ராயம் இல்லாதிருந்த உலகு இன்று,இஸ்லாத்தின் மீது தனது பார்வையை திருப்ப மிக முக்கிய காரணமாவதுஇஸ்லாத்தை முன்னிறுத்தி,செய்யப்படும் தீவிரவாதங்கள் என்றால் மிகையாகாது.

தீவிரவாதங்கள் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது,இஸ்லாத்தின் பெயரால் நியாயப் படுத்தப்படுவதால்,இன்று பிறமத சகோதரர்களின் உள்ளத்தில்,இஸ்லாம் பிறமதத்தினரை எப்படி அணுகுகிறது,அது பிற மக்களின் மீது வெறுப்புணர்ச்சியையும்,துவேஷத்தையும் முஸ்லீம்களிடம் வளர்க்கிறதாஎன்ற கேள்வி எழுகின்றது.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சாதக பாதகம் ஒரு பகிர்வு

16 கருத்துகள் :

(முன்னால்) பாபர் மஸ்ஜித்" தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள்,சமூகநல ஆர்வலர்கள்,மத தலைவர்கள்,பத்திரிக்கைகள் என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.இதில் சிலர் தீர்ப்பானது,கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எனவும்,சிலர் சரியானது எனவும் மதிப்பிடுகின்றனர்.

பொதுவாக சில விடயங்களில் அனைவருக்குமே இருவேறு கருத்து இருக்கும்.முழுவதுமாக இது சரி,இல்லை தவறு என சொல்ல இயலாத சூழல் உண்டாகும்.இத்தீர்ப்பை பொருத்தமட்டில் பெரும்பகுதி ஏமாற்றம் மற்றும்,அற்ப ஆறுதல்என இருவேறு கருத்தோட்டம் என்னில உண்டு.

Counter

பிற பதிவுகள்