அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?

21 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

பிழையான எண்ணம் கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கும் கமல்ஹாசன் மனம் திருந்த மனதார பிரார்த்திக்கிறோம்.
விஸ்வரூபம் எடுத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சனை, அடிப்படையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை பின்னனியாகக் கொண்டு இன்றைய நாளைக் கடந்தவண்ணம் இருக்கிறது. 

இந்த பிரச்சனை இப்போது எந்த அளவில் பேசப்படுகிறது? அல்லது பேசப்பட வைக்கப்படுகிறது என பார்த்தால்? இந்தப் படம் கொண்டிருக்கும் கருத்துக்களையோ, அல்லது அது உண்டாக்கவிருக்கும் தாக்கம் குறித்தோ சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ யாரும் பேசத் தயாராக இல்லை. இதை எதிர்த்து நிற்கும் முஸ்லிம்களை, அவர்களது எதிர்ப்பு கோஷங்களை, போராட்டங்களை மட்டுமே முன்னிருத்தி இந்த விசயம் பார்க்கப்படுகிற்து.

ஏன் இந்த போராட்டம்? எதற்கு இத்தனை கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், இதன் பின்னனியாக முஸ்லிம்கள் எதைக் கையில் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவாக இல்லாவிடினும் குறைவாகவாவது அலசிப்பார்க்கவேண்டியது அவசியம்.

ஒரு பிரச்சனையை அணுகும் போது இருதரப்பு வாதங்களையும் கணக்கில் கொண்டு பார்வையை அதன்மீது சீராக்குவதே குறைந்த பட்ச நியாயமாக இருக்கும்.

முதல் தரப்பாக கமல்ஹாசன் குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவு, பெரிய முயற்சி, புதிய தொழில் நுட்பம், என பல காரணிகள் அவரது தரப்பில் நியாயங்களாக முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தரப்பான முஸ்லிம்களின் நிலையை பார்வைக்கு கொண்டுவரும்முன்,  மையப்பொருளான சினிமா என்ற ஒன்று எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது, அல்லது ஒரு கனம் மனதில் இறுத்திக்கொள்வது, பிரச்சனையின் தீவிரத்திற்கான காரணத்தை அறிந்திட உதவும்.

சினிமா: இது  ஊடகங்களுக்கெல்லாம் தலை. ஒரு செய்தியை உச்சபட்சமாக  மக்கள் மத்தியில் எத்தனை தூரம் எடுத்துச்செல்ல முடியுமோ அந்த எல்லையை தொட்டு, ஒரு கருத்தை மனதில் பதியவைக்கும் காத்திரமான கருவி. 

இதன் வீரியம் அலாதியானது. சாதாரணமான ஒரு நிகழ்வை தக்க கோணத்தில் காட்சிப்படுத்தி, அதற்கு பின்னனியில் பொருத்தமான வசனம், இசையுடன் கூடிய நிகழ்வாக உருவகப்படுத்தி அசாதாரணமாக்கும் வல்லமை பொருந்தியது. அப்படிப்பட்ட காட்சி ஊடகத்தில் உருவாகும் ஒரு கருத்து, மக்களை சென்றடைந்தால், அது சரியோ, தவறோ, அதன் பொருண்மை வீரியம் இழப்பதற்கு காலங்கள் ஆகும்..

என்ன இப்டி சொல்ரீங்க இந்தக்காலத்துல யாரு சினிமா பாத்து விசயத்த மனசுல வாங்கிறா.. இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம். எந்திர வாழ்க்கைல சில மணிநேரம் மனஓய்வுக்கான கருவி அவ்ளோதான். அப்டி சொன்னீங்கன்னா... உண்மைதான்..

இந்தகாலம் இல்ல, எந்தக்காலத்துலையும் யாரும் சினிமாவை பார்த்து நடைமுறை வாழ்க்கையை வடிவமைப்பதில்லை. ஆனால் அதன் தாக்கம் எதார்த்த வாழ்வின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

சரி! அப்படிப்பட்ட சினிமாவிற்கு சமூகத்தில் எத்தகைய பொருப்புகள் உண்டு.அது  தன் பொருப்புணர்ந்து செயல்படுதான்னு கேட்ட? மறுப்பதற்கு இல்லை என்பதைக் காட்டிலும் ஆழமான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்றே சொல்வேன். 

சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனதில் அசாதராண விசயங்களை பதிந்து பதிந்து, அதுகுறித்த தாக்கத்தை மழுங்கச்செய்வதை ஒரு கனம் யோசித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

முன்னொரு காலத்தில் அரைகுறை ஆடைகளும், ஆபாசசினிமாக்களும் கடும் எதிர்ப்புக்குள்ளாகின... பொதுவாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை முன்வைத்தாலும், குறிப்பாக பெண்களின் போராட்டம் பேசப்படும்படியாக இருந்திருக்கிறது.
இன்று? அப்படியான எண்ணம் ஆபாசம் அரைகுறை ஆடைகளுக்கு எதிரான சிந்தனை மொத்தமாக மழுங்கிப்போய் இருப்பதை உணர முடியும்.

இதுபோன்று வன்முறையையும் சொல்லலாம்.. முன்பு வன்முறையும், கொலை போன்ற பாதகங்களும் தீயவர்களுக்கே உரித்தான ஒன்றாக சினிமா படம்பிடித்தது. இப்போது ஆன்டி ஹீரோ எனும் கதாப்பாத்திரத்தின் மூலம் கொலைகளையும்,வன்முறைகளையும், அடிதடிகளையும் சர்வசாதாரண ஒன்றாக்கிவிட்டது. நிதர்சனத்தில் இன்றைய பிள்ளைகளிடம் இதன் விளைவைக் காணமுடியும்.

இப்படி தாக்கத்தை உண்டாக்கும் சினிமா, முஸ்லிம்கள் குறித்து என்னமாதிரியாக கருத்தை பதிவு செய்தது? செய்கிறது? என்பது மற்ற சமூகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதை கவனத்தில் கொள்வதை தவிர்க்க இயலாது.

இந்த கவனஈர்ப்பு பொதுவாக எல்லா சமூகத்தாருக்கும் பொருந்தும். தன் சமூகம் குறித்து என்னமாதிரியான கருத்துருவாக்கம் வைக்கப்படுகிறது என்பதை எல்லா சமூகத்தினரும் கவனித்தே வருகின்றனர்.

பிராமணர்களை கேலிக்குள்ளாக்கும் படம் அவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் அதை பார்க்கும் மற்றவர்களுக்கோ அது வெற்று கிண்டலாகவும், மிகப்பெரிய நகைச்சுவையாகவும் இருப்பதை பார்க்கமுடியும். 

முஸ்லிம்களை இந்த சினிமா உலகு எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது. மிகச்சமீபகாலம் வரை அட்டைக்குல்லாவுடன், அருவருப்பான தமிழ் பேசும் மூன்றாம்தர மக்களாகவே புரிந்து காட்சிப்படுத்தி வந்தது.

இந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்களின் முகவரி உலக அளவில் என்பதைக்காட்டிலும், குறிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று முஸ்லிம்களுக்கு அடைமொழியாகவே மாறிவரும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய மதஅரசியலும், ஊடகங்களும், முஸ்லிம்களை தீவிரவாதம் என்ற நிறக்கண்ணாடி இன்றி முன்னிருத்துவதே இல்லை. 

இதன் நீட்சியாக முழுக்க முழுக்க இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாத சக்திகளாக சித்தரித்து முழுநீள திரைப்படம் அதிக பொருட்செலவில் அழகிய பேனரில் வெளிவருவது இஸ்லாமியர்களுக்கு என்ன இனிப்பான செய்தியா?

இந்த கருத்துப் பதிவு மக்களை சென்றடைந்தபின், தயாரித்தவருக்கு லாபம் கிடைக்கிறது. பார்ப்பவர்களுக்கு, பொழுதுபோக்கும், கூடவே காட்சிப்படுத்தப்பட்டவர்கள் குறித்து ஒரு மனத்தோற்றம் உண்டாகிறது. 

காட்சிப்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு? அந்த மனத்தோற்றத்தின் விளைவல்லவா பரிசாகிறது? 

இதை குறித்து யார் சிந்திப்பது? எடுப்பவர்களோ, பார்ப்பவர்களோ சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கமுடியாது. அதன் பாதிப்பை உள்வாங்கும் சமூகம், உள்வாங்கிக் கொண்டிருக்கும் சமூகம் மட்டுமே சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது.

இன்றை இந்தப் போராட்டமும் இந்தச் சிந்தனையின் விளைவே! இந்த போராட்டம் இரண்டு முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒன்று இஸ்லாம் இன்னொன்று முஸ்லிம்கள்.

அதென்ன இஸ்லாம் முஸ்லிம்கள்? என்றால் இப்படி பிரித்தறிவிக்க போதிய காரணங்கள் உண்டு.

முதலில் இந்த திரைப்படம் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரவாதத்திற்கு ஆதரவான ஒன்றாக புனைகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலக அளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சதிகளின் நீட்சியாக இதைப் பார்க்கலாம், அல்லது இஸ்லாம் என்ற ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாததன் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

ஆக எதுவாயினும், பெரும்பான்மையோ சிறுபான்மையோ பரவலாக மக்கள் மத்தியில் பின்பற்றப்படும் ஒரு நெறியை, ஒரு மார்க்கத்தை தவறாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்ற கொள்கைகளை பின்பற்றும் மக்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதில் பல்வேறு படித்தரங்கள் இருக்கலாம். ஆனால் எந்த மக்களைக்காட்டிலும் முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு அதன் கொள்கைக்கும் தனிச்சிறப்புமிக்க உண்ணதமான தரத்தைக்கொடுக்கிறார்கள். இதை வெறுமனே கொள்கை என்ற அளவில் பார்ப்பதைக்காட்டிலும் தங்களைப் படைத்த இறைவன், தங்கள் வாழ்வை நெறிசெய்து கொள்ள கொடுத்திருக்கும் ஒப்பற்ற வழிமுறையாக பார்ப்பதை பலரும் அறீந்திருப்பர். அப்படியான கொள்ளை எதிர்மறை கருத்துத்தோய்ந்து மக்களுக்கு காட்டப்படும் போது அதை பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்தது முஸ்லிம்கள். முஸ்லிம்கள் என இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை இஸ்லாத்தில் இருந்து இந்த இடத்தில் தனிப்பட்டு பேசக்காரணம் உண்டு. இஸ்லாம் தோன்றிய இத்தனை காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம் இல்லாமல் இல்லை. எந்த மதத்திற்கும் இல்லாத அளவில் எல்லா காலத்திலும் இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் இருந்தே வந்திருக்கிறது. அது சமகாலங்களில் சரியாக எதிர்கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. அதுவே இன்றளவும் இஸ்லாம் புதுப்பொழிவுடன் இருக்க காரணமும் கூட..

ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களை பெரிய அளவில் பாதித்ததில்லை. ஆனால் இன்றைய முஸ்லிம்களில் நிலை அவ்வாறில்லை. 

முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து திட்டமிட்டு அப்புறப்படுத்தும் பணி நூற்றாண்டுத் திட்டங்களாக, இந்தியத்திருநாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் முதல் இரண்டாவது கட்டங்களாகவே இன்றைய காலம் இருந்துவருகிறது.முழுக்க முழுக்க முஸ்லிம்களை மற்ற சமூக மக்களிடம் இருந்து தனிமைப்ப்படுத்துவதும், மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து விகல்ப்ப எண்ணங்களை விதைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி அதன்மூலம் முஸ்லிம்களை வேரருக்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் ஆபத்தான காலகட்டத்தை முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருப்பதே இன்றைய முஸ்லிம்களுக்கான பெரும் பிரச்சனை.

இத்தகைய காலகட்டத்தில் இப்படியான படம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகிவிடாமல் இருக்கவே இந்த மாபெரும் எதிர்ப்பும் கண்டனங்களும் போராட்டங்களும்...

இந்த போராட்டங்களை மேலோட்டமாக பார்த்து முஸ்லிம்கள் என்றாலே வெறும் போராட்டக்காரர்கள் தானா என எண்ணம் கொள்ளாமல் அவர்களது மனநிலையையும் புரிந்து  அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் சகோதரர்களே!

சரியான காரணம் இன்றி இப்படியான போராட்டங்களை முஸ்லிம்கள் கையில் எடுக்க மாட்டார்கள். மாற்றுமத சகோதரர்கள், கமல்ஹாசனை பெரும் கலைஞனாக பார்க்கக்கூடியவர்கள், பெரும் முயற்சிக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக எண்ணி வேற்றுமை கொள்ளவேண்டாம்.

எந்தக்காரணம் DAM 999 திரைப்படம் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்கப்பட்டதோ, அதே அளவுகோலை இந்த திரைப்படத்திற்கும் கொடுத்து ஒரு சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
ரஜின்

புதன், ஆகஸ்ட் 24, 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப(மதமாற்றம்) செய்யுங்கள்!!!

37 கருத்துகள் :


முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//

சனி, நவம்பர் 13, 2010

அரவிந்தன் நீலகண்டன்களுக்கு சில கேள்விகள்!

4 கருத்துகள் :
சமீபத்தில் ஹிந்து(த்துவா)க்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் உண்மையான கரசேவை என்ற "கட்டு"ரையை படிக்க நேர்ந்தது.

தீர்ப்புக்கு முன்னரே அவர்களது சேவைகளை சரியெனச் சொல்லிவந்தாலும்,அதுவரை யாரும் பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக நியாயப்படுத்தவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு,அவர்களுக்கு சாதகமானதை தொடர்ந்து,அவர்களது வன்ம வார்த்தைகள் அந்த கருமம் பிடித்த சேவையால் இந்திய தேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட மாபெறும் அவமானத்தை நியாயப்படுத்த துவங்கி விட்டார்கள்.

இதோ.இந்திய தேச இஸ்லாமியர்களின் இரத்தத்தில் துவைத்து வண்ணமேற்றிய காவிக்கொடியுடன் நாடெங்கும் ர(த்)த யாத்திரை கொண்டு,மாபெறும் இன அழிப்பை நிகழ்த்திய அத்வானி,இத்தீர்ப்பிற்கு பிறகு "தனது யாத்திரை சரியாது தான்"என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

இதே தான் அரவிந்தனின் நிலைப்பாடும்.அத்வானி ஆயிரம் தலைவாங்கிய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறார்.அரவிந்தன்,அதன் பின் நடந்த தேச அவமானமான மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்துகிறார்.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சாதக பாதகம் ஒரு பகிர்வு

16 கருத்துகள் :

(முன்னால்) பாபர் மஸ்ஜித்" தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள்,சமூகநல ஆர்வலர்கள்,மத தலைவர்கள்,பத்திரிக்கைகள் என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர்.இதில் சிலர் தீர்ப்பானது,கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு எனவும்,சிலர் சரியானது எனவும் மதிப்பிடுகின்றனர்.

பொதுவாக சில விடயங்களில் அனைவருக்குமே இருவேறு கருத்து இருக்கும்.முழுவதுமாக இது சரி,இல்லை தவறு என சொல்ல இயலாத சூழல் உண்டாகும்.இத்தீர்ப்பை பொருத்தமட்டில் பெரும்பகுதி ஏமாற்றம் மற்றும்,அற்ப ஆறுதல்என இருவேறு கருத்தோட்டம் என்னில உண்டு.

திங்கள், ஏப்ரல் 12, 2010

தமிழ் ஹிந்து தளத்திற்கு எனது வன்மையான கண்டனம்...

13 கருத்துகள் :
தமிழ் ஹிந்து தளம்.
இது பொதுவாக ஹிந்து மதம் பற்றிய செய்திகளை அலசும் ஒரு தளமாக தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாலும்.அவற்றில் அதிகபட்சமாக மற்ற மதங்களின் மீதான,குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் பற்றிய அதீத விமர்சனங்களை காணமுடியும்.அவற்றின் மீதான கோபம்,கண்டனம்,வன்மம்,வெறுப்பு,இவையெ அங்கு விரவி காணப்படுகிறது.
இந்த தளம் எனக்கு அறிமுகமானதுகூட அவ்வாறே.இஸ்லாம் குறித்த சில தவறான கண்ணோட்டம் கொண்ட கட்டுரைகளை நான் கண்ணுர நேர்ந்ததே,என்னை அந்த தளத்தின் தொடர் வாசகனாக்கியது.
சரி..எந்த மதத்தையும் விமர்சனம் செய்யலாம்,தவறான பார்வை இருக்கலாம்.கட்டுரைகள் எழுதலாம்..தவறல்ல..ஆனால் அதில் கண்ணியம் இருக்கவேண்டும்..அது சற்றே அங்கு வற்றி காணப்படுகிறது...
சரி..அது அவரவர் கையிருப்பை காட்டுகிறது.போகட்டும்.நமது தரப்பு நியாயங்களாவது அந்த அரங்கில் வைக்க அனுமதிக்கப் படுகிறதா என்றால்..அனுமதிக்கப் படுகிறது..எதுவரை..நமது கருத்து நியாயமானதாக இருந்தாலும்,அவர்களை சுடாதவரை அனுமதிக்கப் படுகிறது..
இது ஒரு ஹிந்து தளமாக ஹிந்து சமயம் பற்றி விவாதிக்கும் மன்றமாக இருப்பின்,அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்..இல்லை,நாங்கள் அனைத்து விடையங்களையும் விரிவாக விவாதிப்போம் என தாங்கள் சொல்வீர்களானால்...தவறல்ல...முழுவதுமாக வரவேற்கிறோம்..
ஆனால் அறிஞர் அண்ணா சொன்னது போல "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்பத்ற்கினங்க எங்களது கருத்துகளையும் எவ்வித திரித்தலும் இன்றி அனுமதிக்க வேண்டும்..ஆனால் அது அங்கு நடப்பதில்லை
சரி..சில மூடர்கள்..இழிவான வார்த்தை பிரயோகம் செய்து வசை பாடுவது வழக்கம்..அவை மட்டுறுத்தப்படுவது நியாயம்.எங்களை போன்ற எழுத்து கண்ணியம் பேன எண்ணுபவர்களையும்,நடுநிலையாக கேள்விகளை முன்வைப்பவர்களையும்.தவிர்த்தால்,எங்கோ தப்பு நடக்கிறது..
ஒன்று ஹிந்து மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் வலிக்கிறது.அதை மனம் ஏற்க மறுக்கிறது.அல்லது அதை அரங்கேற்றாமல் மறைக்கிறது..
இங்கே நடுநிலைமை, காற்றில் பறந்த வேட்டியாக்கி தங்களது மானமே போகிறது..
அப்படி நடுநிலை தவறிய தங்களின் கட்டுரை நடுநிலையுடன் இருக்கும் என்ன எண்ணுவது மூடத்தனமே அன்றி வேறில்லை என எண்ணுகிறேன்..
சில சமயங்களின் எனது கருத்தை அனுமதித்துள்ளீர்கள்.அது ஹிந்து மதத்தை தாக்காமல் இருக்கும் வரை,ஆனால் வேறு சில சமயங்களிலோ வக்கிரமாக எனது கருத்தை திரித்து,பொருள் மாற்றி,அதை எனக்கெதிராக திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.???
அதை என்னால் பொருத்துக் கொள்ளவே இயலவில்லை.இத்தனை நாளும் ஒரு அயோக்கியர்களின் கூடாரத்திலா,நமது வாத்தை வைத்துக் கொண்டு இருந்தோம் என எனக்கே வெட்கமாக இருந்தது.
ஒரு கருத்து முரணாக,அல்லது தன்னை பாதிப்பதாக இருப்பினும் ஊடக தர்மத்தின் படி அதை அனுமதிக்கவே வேண்டும்..ஒருவேலை அடிக்கொருமுறை அவர்கள் சொல்லும் ஹிந்து தர்மத்தில் அது பற்றிய குறிப்பு இல்லையொ என்னவோ அதை அவர்கள் செய்வதில்லை..
சரி விரசமாக ஆபாசமாக கருத்துகள் வரும்.அவற்றை கேள்விகணக்கின்றி தவிர்த்துவிடலாம்...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்..ஒருவனது கருத்தை தடுக்க அல்லது அனுமதிக்கவே தளத்தினருக்கு உரிமை உள்ளது.அது தவிர்த்து,அவனது கருத்தில் கைவைத்து,அதை திரித்து விளையாடுவது..என்னை பொருத்தவரை விபச்சாரத்துக்கு ஒப்பானது...
சரிதான் இதுவும் ஒருவித கருத்து விபச்சாரம் தானே.ஒருவனது தனிப்பட்ட கருத்து என்பது அவனுக்குறியது,அதில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை.அப்படி இருக்க அதில் கைவைத்து கபடி ஆடுவது.இழிவிலும் இழிவான செயல்...எனக்கு இதுக்கு மேல கடுமையான வார்த்தை,கண்ணியமா வரமாட்டேங்குது...
சரிடா அப்படி என்னத செஞ்சிடானுக,இந்த பொலம்பு பொலம்புரன்னு கேக்குரீங்களா?எனது கருத்தை பலமுறை இந்த தளத்தில் வைக்கும் போது காக்கா வந்து அகஸ்மாத்தா தூக்கிட்டு போய்டுது...சரி போனாலும் ப்ரவாயில்லன்னா,அந்த கருத்து மேலயே இந்த தமிழ்ஹிந்து தளத்தோட எடிட்டர் காக்கா கக்கா போய் அதை கையில எடுத்து என்னோட பின்னூட்டம்னு போட்டுடுது..அது தா காரணம்..
இங்கே..எனது ஒரிஜினல் பின்னூட்டமும்,ஹிந்து தளத்தில் திரித்து வெளியிடப்பட்ட பின்னூட்டமும் தங்களது பார்வைக்கு....
இது என்னோட பின்னூட்டத்தின் பகுதி:
ஏன் இவ்ளோ வெருப்ப எங்க மேல உமிழ்ரீங்க...நா ரொம்ப நாளா இந்த தளத்தில் வாசிப்பாளனா இருக்கேன்.ஆனா,வந்துட்டு வருத்ததோடதா போவேன்.என்ன காரணத்துக்காக நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் மீது இங்கு சாணியடிக்கப் படுகிறது.நான் கண்ட வரை அப்படி ஒன்னும் சொல்லவில்லையே.எவனொ ஒருவன்,ஏதொ ஒரு காரணத்துக்காக எனது மார்க்கத்தை முன்னிருத்துகிறானென்றால்,அதை இங்கு இவ்வளவும் படித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?என வருத்தப்படுவேன்....
ஹிந்துக்களால் செய்யப்பட்ட எத்தனையோ அநீதங்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் ஆரா வடுவாக இருப்பினும்,அதை என்னால் ஹிந்து தீவிர வாதம் என முட்டால் தனமாக சொல்ல தோன்றவில்லை.ஏனென்றால்,நான் என் ஹிந்து மக்களை பார்க்கிறேன்.அவர்களோடு உறவாடுகிறேன்.அவர்கள் அப்ப்டி அல்ல என எனக்கு தெரிகிறது.மாறாக இது மதவாத சக்திகள்,மதத்தை கொண்டு,கிளர்ச்சி செய்து,மக்களுக்கு மத்தியில் ஆதாயம் தேட துடிக்கும் கயவர்களின்,அரசியல் பொருக்கிகளின் செய்கை என அறிகிறேன்,செய்பவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக,நான் ஹிந்து மதத்தை பழிக்க எத்தனிக்க அவ்வளவு மூடனும் அல்ல.
குஜராத் சம்பவத்துக்கோ,பாபர் மசூதி இடிப்பு,அப்ரொ வந்த கலவரங்களுக்கோ, இங்க என் பக்கத்துள இருக்ர என் நண்பன நா குத்தம் சொல்ல முடியுமா?அது எவ்ளோ பெரிய பைத்தியகாரத்தனம்...
அப்டி இருக்க... இஸ்லாமிய பயங்கரவாதம் என மதத்தை முன்னிருத்தும் போது,எனது ஹிந்து சகோதரன் இயற்கையாகவே..நீங்கள்லந்தானடா?..அப்டீன்னு என்ன நோக்கி பாக்க வெக்கிரீங்களே,ஏன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தமிழ்ஹிந்து தளத்தில் மேலே நான் பதிந்த பின்னூட்டத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மட்டும் லாவகமாக நீக்கப் பட்டு,தங்களது தர்மத்தை காக்க நடந்த முயற்சியின் வெளிப்பாடாக அவர்கள் மட்டுறுத்தி பின் வெளியிடப்பட்ட பின்னூட்டம்...
படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..
இதையாவது ஒரு வகைக்கு ஏற்றுக் கொள்ள(முடியாது)லாம் என்றால் அடுத்து வருவது இருக்கே..எப்பா எங்கதா இத தொழில் சுத்தத்த கத்துகிடீங்களோ தெர்ல...
மூச்சுக்கு 300 தடவ சொல்ர ஹிந்து தர்மமா இருக்குமோ...இருக்காது..அப்படி நான் சொன்னா,அது நீங்க செய்ர அதே அவதூரு பிரச்சாரத்த நானும் செய்ரமாறி ஆயிடும்..எனது மார்க்கம் ஒருபோது அதை கற்றுத்தரவில்லை..வன்மையாக கண்டிக்கிறது....
இது தங்களது அயோக்கிய தனத்தின் உச்சமே...எனக்கு தெரிந்த வரை,..இன்னும் இருக்கலாம்..
சரி மேட்டருக்கு வருவோம்...
இது தமிழ்ஹிந்து தளத்தில் காசியை பற்றி சன் டீவீ வெளியிட்ட நிஜம் எனும் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் நான் பதிந்த எனது ஒரிஜினல் பின்னூட்டம்....
- - - - - - - - - - - - - - - - - -
அன்பு சகோதரர்களுக்கு.

காசியில் நடக்கும்,சில விஷயங்களை சுட்டி காட்டி,சன் டீவி,ஒரு நிகழ்ச்சியை தயாரித்து சில வாரங்களாக ஒளிபரப்பியது.இது காசியில் நடக்கும்,அரசுக்கு தெரியாத(தெரிந்த) சில தவறுகளாகும்.அதுவல்லாது அங்கு கடவுளின் பெயரால் நடக்கும் சில மூட பழக்கவழக்கங்களையும்,வேறு சில முட்டால் தனக்களையும் சுட்டி காட்டுவதாய் இருந்தது.

இதை விமர்சித்து சில ஹிந்து தளங்கள் எழுதி இருந்தன.சன் டீவியின் உண்மையான முகம் என.அவர்கள் ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து,அவர்கள் மததின் மீது சேறு பூசுவதாக.

சரி இருக்கட்டும்,தமிழகத்தின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமாக திகலும் சன் குழுமம்,அடிப்படையில் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படுவது.இந்தியாவில் மட்டுமல்ல,உலகம் முழுவதும்,அதனை பெருவாரியாக பார்க்க கூடியவர்கள்,ஹிந்துக்களே.

இது போன்ற,ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினால்,அதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வை காட்டிலும் எதிப்பலைகள் அதிகம்,என்பது,சராசரி மனிதனுக்கு வெளிச்சம்.அப்படி இருக்க,முதல் நிலை நிறுவனத்தை நடத்திகொண்டு இருக்கும் ஒருவர்,தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றியே,தவறாக நிகழ்ச்சி ஒளிபரப்புவது,எதற்கு?

அவர்கள் ஒன்றும் ஹிந்து எதிப்பாளர்கள் இல்லயே.அப்படியே இருந்தாலும்,அது அவர்களின் தொழிலை பாதிக்கும் என்பதால்,அதை அவர்கள் செய்யாது தவிர்க்கவே செய்வார்கள்.

சரி.எப்போதும் இயல்பாய் வரும் குற்றசாட்டை,எடுத்து கொள்வோம்.பணத்திற்காக??

இது இவர்களை பொருத்தமட்டில் ஒவ்வாத விவாதம்.இந்தியாவின் மிகபெரும் 20 பணக்காரர்கள் பட்டியலில் அம்ர்ந்து இருக்கும் இவர்கள்,இந்தியாவின் ஒரு பெரும் பகுதியான தமிழகத்தை ஆளும் இவர்கள்,தான் எண்ணியதை அந்த மாத்திரத்திலே செய்து முடிக்கும் பலம் பொருந்திய இவர்க்ள்,யாரிடம் போய் பணத்திற்காக நிற்கப்போகிறார்கள்.தெரியவில்லை...

அதுவல்லாது,அவர்கள் அந்த ஒரு நிகழ்ச்சிக்கு செலவிடும் அந்த தொகை அத்தனை பெரியது.அதை அவர்களே,வர்த்தக விளம்பரம் மூலம் எளிதாக பெரும் பட்சத்தில்,ஹிந்துக்களின் நிறுவனங்களே அனைத்து விளம்பரமும் தருகின்றனர்.

அப்படியிருக்க பணத்துக்காக என்ற அந்த வலுவற்ற குற்றசாட்டும் இங்கே வலுவிழக்கிறது.

இன்னொரு முக்கியமான (பைத்திய) குற்றசாட்டை முன்வைப்பர்கள்.சிருபான்மையினரை கவர் பன்ன...

ம்ம்ம் எவனோ எந்த நாட்டிலோ சிலரை கூட்டி தீவிரவாதம் செய்தான் என்பதற்காக இந்தியாவில் உள்ள மதரசாக்களை தாங்கள் ஒட்டுமொத்த,தீவிரவாத பயிற்சி கூடம் போல குற்றம் சாட்டும்,இத்தனை வீடியோ ஆதாரங்களுடன் அவ்ர்கள் காட்டும்போது,அதில் 100% அல்ல,50% மேனும் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது…

இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?அவர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.சரி.உங்களுக்கென்ன.ஒருவேலை,காசியை தாங்கள் நம்பி இருப்பது போல,மதரசாக்களை நாங்கள் நம்பியிருந்தால் அதில் எங்களுக்கு தெளிவு பிறக்குமே.

http://www.tamilhindu.com/2009/12/kasi-nijam-true-face-of-sun-tv/
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்..
இங்கே சிவப்பெழுத்துகளில் உள்ள எனது பின்னூட்டத்திற்கும்,அவர்கள் கைவைத்து வக்கிரம் புரிந்து,வன்புணர்ந்து வெளியிட்ட பின்னூட்டதையும் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு கேடுகெட்ட செயலை செய்து விட்டு..ஹிந்து தர்மம் பற்றி அதே வாயாலே...பேசுகிறார்கள் என்று...
மேலே சொன்ன அத்துனை நியாயமான காரணங்களை விடுக்க தெரிந்தவர்களுக்கு,இதையும் விட்டிருக்கலாம்.ஆனால் இவர்களின் குயுக்தி சும்மா இருக்குமா என்ன?அதனால் தான் வேலையை காட்டிவிட்டார்கள்...
நீ என்ன வேனாலும் சொல்லிட்டு போ..நாங்க இப்படித்தான் என தெளிவாக நிரூபித்து விட்டார்கள்...
ஆனால் எனது பின்னூட்டத்திற்கு பதில் தரும் ஹிந்துக்களின் பதில் எத்துனை வக்கிர சாடலாக இருந்தாலும்,,,அதை மனங்குளிர்ந்து வெளியிடுவார்கள்...
இவர்களது இந்த செயலை மக்கள் அறியவேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்,,,
இவர்களது இந்த செயலை கண்ணுரும் போது...இவர்கள் சுதந்திரம் வாங்கிதந்த காந்திக்கு துப்பாக்கி குண்டை பரிசளித்த ஹிந்துத்துவா கும்பலாக இருக்குமோ என சந்தேகிக்க தோன்றுகிறது...அவர்களே இது போன்ற செய்கைக்கு முழுத்தகுதி பெற்ற கனவான்கள்..என்ன சந்தேகம் அவர்களேதான்....
நன்றி
அன்புடன்
ரஜின்

புதன், மார்ச் 17, 2010

தூக்கில் இடப்பட்ட இந்திய அரசியல் சட்டம் - இதுக்கு நாமளும்...

1 கருத்து :
தாய்- மகள் கற்பழிப்பு: போலீஸ், அரசு வக்கீல், மாவட்ட நீதிபதியின்
பொறுப்பின்மையால் குற்றவாளிகள் விடுதலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர். உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர். அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர். பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.
முழு செய்தியும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
ம்ம்ம்....இந்திய அரசியல் சட்டம்...அதன் தத்துவார்த்தமான சொல்லான "வாய்மையே வெல்லும்" இது ஒவ்வொரு நீதி மன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்,எழுத்தப்பட்டு இருக்கும்..எழுத்தோடு சரி...
அதுவல்லாது இன்னொரு உத்தமமான சொல்லாடலும் உண்டு..
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படக்கூடாது"..அடடா..இத கேட்டாலே...இன்ப தேன்வந்து பாயுது காதுல....இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....
அந்த முதல் லைன்லயே தெரியல பெரிய ஓட்டயவே சட்டமா உருவாக்கி இருக்காங்கன்னு... ஏண்டா?1000 "குற்றவாளி"இங்க இத கவனிக்கனும்...குற்றவாளி என்பவன் யார்...எவனோ ஒரு மனிதனுக்கு அநீதம் இழைப்பவனே குற்றவாளி...இல்லையா? அது திருட்டு,கற்பழிப்பு,கொலை, வழிப்பறி, ஏமாற்றுதல்,என எதுவானாலும்,ஒரு அப்பாவி பாதிக்கப்படுகிறான்...அதனால் அந்த அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு,கிடைக்கும் ஒரே நிவாரணம்.தனக்கு அநீதம் இழைத்தவன், தண்டனைக்குள்ளாக்கப்பட்டான்.என்பதே..அவன் இழந்ததை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.. அப்படிப்பட்ட,இந்த "1000 குற்றவாளிகள்"எளிதாக தப்பிக்கலாம்....அல்லது தப்பிக்கிறார்கள்,என்றால் என்ன அர்த்தம்..அவர்களால் அநீதம் இழைக்கப் பட்ட 1000 நிரபராதிகளும் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதே...
தண்டனை என்பது என்ன? இங்கே சில மதவாதிகளும், அரசியல்வாதிகளும், இன்ன பிற சமூக விரோதிகளும்,செல்போன்,வீட்டு சாப்பாடு,என சகலமுடன் சொகுசாக ஜெயில் வாழ்க்கை அனுபவிக்கிறார்களே,அதுவா...இல்லை..இல்லவே இல்லை....
பாதிக்கப் பட்டவனின் குறைந்த பட்ச நிவாரணமான,குற்றவாளிக்கு தண்டனை என்பதே,அங்கு தவிடு பொடியாக்கப் படும் போது...அந்த மனிதனுக்கு,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து,தனது மீதி வாழ்நாளை, ஒருவித விரக்தியுடன்,வலியுடன் கழிக்கிரானே..அதை விட ஒரு பெரிய தண்டனை யார் தர முடியும்...
பொதுவாக ஒரு சொல்லாடல் உண்டு.."குற்றம் செய்து அதை உணர்ந்தவனை தண்டிப்பதை விட மன்னிப்பதே பெரிய தண்டனையாக அமையும்" என்று.இதன் பொருள் என்ன,உடல் அளவில் தரப்படும் தண்டனையை விட மனதளவில் ஒருவன் துயருறுவது பெரியது என்பதே..
அப்படி இருக்க இந்த முதல் வாசகம் முற்றிலும் பொய்க்கிறது...ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது.என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...
எனவே இங்கு குற்றம் இழைத்த கயவர்கள் 8 பேரும்,மேல் முறையீடு,என கோரி,அங்கு இருந்த ஒரு பைத்தியக்கார - (தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) - நீதிபதி?? ஒருவன் இந்த வழக்கில் அதன் தீர்ப்பை திருத்தி எழுதி,8 குற்றவாளிகளை விடுவித்து,அந்த மொத்த குடுமபத்தையும் தீரா துயரில் தள்ளி,மாறா வடுவாக அவர்கள் வாழும் காலமெல்லாம்,சொல்லி அழ,அருமையான தண்டனையை தந்து,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.- (வார்த்தை தனிக்கை செய்யப் பட்டுள்ளது) - ங்க...
இபோ அந்த பெண் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக?? இருக்கிறாளாம்...என்பதை அவர் கேள்விப்பட்டாராம்...அந்த (திரும்ப ஒரு முறை தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) நீதிபதி...அதனால் இந்த வழக்கில் மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டாராம்...
ஏண்டா கேள்விப்பட்ட,ஒரு செய்தியை கொண்டு...ஒரு முடிவுக்கு வருபவன், நீயெல்லா நீதிபதின்னா?..தெருவோரமா பிச்சை எடுக்கிர பைத்தியக்காரனுக்கு உள்ள குறைந்த பட்ச அறிவுகூட உனகில்லயே...இவன்லா எப்டி நீதிபதி ஆன???..ம்ம் அதுக்கும் இந்திய அரசியல் சட்டத்துல வழி இருக்குமா இருக்கும்...யார் இந்த எழவைலா கண்டது...
ம்ம்..இன்னொரு பக்கம் பாத்தா இந்த பைத்தியக்காரன் சொன்னதுலையும்,ஒரு மேட்டர் கவனிக்கலா,அது என்னானா?
இதுவேர கற்பழிப்பு கேசா பொச்சா?,வாதாடுர வக்கீல் எல்லா சேந்து,நடு கோர்ட்ல வச்சே,,குறுக்கு விசாரணை'ங்ர பேரல இன்னும் பல தடவ அந்த அபலைகள கற்பழிச்சுடுவானுங்க....அது இலலாத வரைக்கும்,கடுகளவு சந்தோஷமே....
இங்கன்னு இல்ல,குற்றம் சாட்டப்படும் எந்த ஒரு வழக்கிலும்,பாதிக்க்ப் பட்டவரும்,சாட்சி சொல்பவருமே...அதிகம் மன உளைச்சலும்,கஷ்டமும்,சந்திக்கிறார்..கேட்டா விசாரண பண்ராங்களாம்..ஏண்டா (வார்த்தை தனிக்கை செய்யப்படுகிறது) தப்பு பண்ணுனவன் எத்துனையோ வழக்குகள்ல,திருவண்ணாமலை தீபம் மாரி தெளிவா தெரிஞ்சாலும்...பாவம்,இந்த அப்பாவிங்கள ஏண்டா சாகடிகிரீங்க...அப்ரோ எவண்டா வந்து கம்ப்ளைண்ட் கொடுப்பான்,எவண்டா வந்து சாட்சி சொல்லுவா?ம்ம்...
இதுனால தானடா,,ஆக்ஸிடண்ட் ஆகி நடு ரோட்ல செத்துகிட்டு இருக்குரவனையும் பாத்துட்டு,ஒருத்தன் அத கடந்து போரான்னா?என்ன காரணம்...என்ன நம்ம நாட்டு மக்களுக்கு ஈவு இறக்கம் இல்லன்ன....ஹ்ம்ம்....இன்னக்கி இவன காப்பாத்தீட்டு,நாளைக்கு நாம சாகனுமேன்னுதா....
அந்த பொண்ணு சந்தோஷமா இருக்காளாம்..சரி,இவ்வளவு பிரச்சனைக்கு பின்னும்,அவ ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ரான்னா,முதல்ல அதுக்கு காரணமான அவளுடைய கணவன்,என்னிடத்தில் பெரும் மதிப்பிற்குறியவனாகிறான்.. அடுத்து அவளது தைரியம் போற்றுதளுக்குறியது..அதை எல்லாம் கடந்து..அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் உள்மனதில் இருக்கவே செய்யும்..அதன் ரணமும் ஆறாமல் இருக்கும்..இவர்களுக்கு தரப்படும் இந்த தண்டனையே அவர்களுக்கு,குறைந்த பட்ச மருந்தாக அமையும்...அதை இந்த காட்டெரும நீதிபதி ஏன் சிந்திக்கல?ம்ம்ம்...
சரி இப்டி காரணம் காட்டி இவன்கள விடுதல பண்ரோமே...நாளைக்கு,,இதுவே இவன்களுக்கு,மேலும் தைரியத்தையும் ஊக்கத்தையும்,தராதுன்னு என்ன நிச்சயம்??.இதென்ன கேள்வி..அது அவர்களுக்கு மிகுதியாகவே செய்யும்..ஐயமின்றி...
இது இன்னும் பல இது போன்ற குற்றவாளிகளையும்,,,ஊக்குவிக்கவே செய்யும்.."எப்புடியும் தப்புச்சிடலாம்"அப்டீங்ர எண்ணம் வளருமே...இது மேலும் பல வழக்குகளில் உதாரணமாக எடுத்து வதாடப்படுமே.... இதுனால...குற்றவாளிகளுக்கே பயன் அன்றி மக்களுக்கல்ல....அது அபாயகரமானதும் கூட....
அது மட்டும் இல்லாம,நம்ம இந்திய சட்டத்துல (மத்த நாட்ல இருக்கான்னு தெரியல)..அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை "மேல் முறையீடு"....இதோட அர்த்தம் புரியவே இல்ல....
பென்ச் நீதிமன்றம்,துணை நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச்ச்ச்ச நீதிமன்றம், (இன்னும் நெரையா இருக்கு,எழவு எனக்குத்தா தெர்ல)என இதனை நீதி மன்றங்கள் ஏன் இருக்குன்னு எனக்கு புரியவே இல்ல.ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்பு,இன்னொரு நீதி மன்றத்தில் உடைக்கப் படுகிறது...
சரி அப்படி அந்த தண்டனை உடைக்கப் படும்போது,ஒன்று,ஒரு நிரபராதி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்,அல்லது ஒரு குற்றவாளி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்..இது இரண்டே சாத்தியம்..அப்படி,கீழ் கோர்ட்டில் சொல்லப் பட்ட ஒரு தீர்ப்பு,தகர்க்கப் படுகிறதென்றால்.அங்கு அந்த விசாரணை,முழுமைப் படவில்லை.அங்கு வழங்கப்பட்ட நீதி தவறானது என்பதை செவுட்ட அறஞ்ச மாதிரி,மேல் கோர்ட் தீர்ப்பு,தீர்ப்பு சொல்லுது...இல்லயா?
அப்பரோ என்ன செறக்கிறதுக்கு,இந்த கீழ் கோர்ட்ல ஒரு வழக்கு,ஒரு விசாரணை,வக்க்க்கீலு, நீதி??பதி...சம்பளம்,மயிறு இந்த மட்டை எல்லா?.....எவனா இருந்தாலும்,கீழ் கோர்ட் சொன்ன தீர்ப்ப மேல் முறையீடு பண்ணலாம்னா?அப்ரோ என்ன மசுறுக்கு அதெல்லா இருக்கு....
நானறிந்த நடுநிலை நீதிமன்றம்:
மேல் சொன்ன இந்த முறை முற்றிலும் தவறானது...ஒரே கோர்ட்,(அப்டீன்னா ஒரே ஒரு கோர்ட் இல்ல,சென்னை உயர்நீதிமன்ற கிளை,மதுரையான எங்க ஊர்ல இருக்குல்ல அதுமாரி.தேவையான அளவு.)ஒரே,தெளிவான நடுநிலையான,தாமதம் இல்லாத,முறையான விசாரணை...ஒரே தீர்ப்பு...ஒரே தண்டணை....அது பாரபட்சமில்லாத இறுதியான கடுமையான தண்டணையாக இருக்க வேண்டும்.
மேல் முறையீடு,மறுவிசாரணை என இருப்பின் அதே கோர்ட்டில்,அதே நீதிபதி முன்னிலையில்,மற்றொரு நீதிபதி கொண்டு நடத்தப்பட வேண்டும்...இந்த வழக்கின் முந்தைய தீர்ப்பு தவறெனில்,,,அது தவறாக அமைய காரணமானவர்கள்,(காவல் துறை,சாட்சிகள்,வக்கீல்கள்,)வன்மையாக தண்டிக்கப் படவேண்டும்...நீதிபதியாயின்..மிக கடுமையான தண்டனை...அதை வழங்க,எந்த தலையீடும் இல்லாத தன்னிச்சையாக செயல்படும் குழு ஒன்றும் இருக்க வேண்டும்...
இதில் நான் வலியுருத்தும் ஒரு விஷயம் என்ன வென்றால்
"தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்"என்பதே...இது 100% சரியானது கூட.இதை 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்...இது முக்கியமாக,இஸ்லாமிய சட்டமான கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,கற்பழிப்பு,கொலை செய்தவனுக்கு,மரண தண்டனை இன்னும் பல.போன்றவை...
(நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதை ஆதரிக்கிறேன்,என்பதல்ல.குற்றங்கள் குறைய,குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட இதைவிட முறையான சட்டம் இருந்தால் சொல்லுங்கள்)
இந்த சட்டங்கள் கடுமையாக இருப்பினும்.அது பார்ப்பவனை தவறு செய்வதில் இருந்து தடுக்கிறது...கற்பழித்தால் தலை போய்விடும் என்ற எண்ணம் இருந்தால்..எவனுக்கு அந்த எண்ணம் தோன்றும்???...
இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு,மரண தண்டனை பெரிதாகவே தோன்றும்..நாளை தான் பாதிக்கப் படும் போது அதை உணர தலைப்படும்..
இந்த வழக்கை பொருத்தவரை,இந்த இரு பெண்கள் கற்பழிக்கப் படவில்லை...இந்த வழக்கை கையாண்ட நீதிபதி தலைமையில்,சகலரும் சேர்ந்து,நீதிமன்றத்திலே, பொதுமக்கள் முன்னிலையில் நீதி தேவதையை மாறி மாறி கொடூரமாக வன்புணர்ச்சி செய்துள்ளார்கள் என்பதே....எனது கருத்து.........
நன்றி
அன்புடன்
ரஜின்...
பின் குறிப்பு:
தவிர்க்க முடியாத காரணத்தால் தகாத வார்த்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு தணிக்கை செய்யப் பட்டுள்ளது.

வியாழன், செப்டம்பர் 03, 2009

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

1 கருத்து :

நீதிமன்றில்....

நீதிபதிகள் பார்த்திருக்க... அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்... ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....? இது ஒன்றும் கற்காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக ஜூலை 01 - 2009 அன்று, ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "கொடுமை''தான் இது. "மர்வா அல் ஷெர்பினி' எனும் 31 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் (மதவெறியன்) ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ (சுமார் 55000 ருபாய்)பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை..அந்த கொடூரன் பதினெட்டு முறை ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொல்லும் வரை,அத்துனை பாதுகாப்பு மிக்க நீதி மன்ற வளாகத்தில்,அங்கு இருந்த காவலர்களும், மற்றவர்களும்,என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான்.

ஒருவேளை அவர்களும் தமிழ்நாடு போலிஸ் போலத்தானோ என்னவோ,எல்லாம் முடிந்த பின்பு "யு ஆர் அண்டர் அரஸ்ட்" என்று வருவார்களே,அது போல...

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது."தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினி"யின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன.

இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் பைத்தியகாரத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்ற கொடூரர்களை உருவாக்குகின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா? ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன? ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

உலகம் இருக்கட்டும்,உள்ளுரில் இருக்கும்,நமது பத்திரிக்கைகளும்,வாய் திறக்கவில்லை..

அது தவிர ,எது எடுத்தாலும் ,இஸ்லாத்தை குறை கூற,ஹிஜாபை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும்,நமது நாட்டின் (இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்) நடுநிலையாளர்களும்,ஏனோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை ...கேட்டால் இந்த செய்தி தங்களுக்கு தெரியவே தெரியாது என்பார்கள் ...

இஸ்லாமியர்களை தவிர உலகில் உள்ள அனைவரும்,அந்த பெண்களின் ஆடையை (கண்ணியத்தை) களைந்து விடலாம் என்றே முயற்ச்சிக்கிறார்கள்.....

ம்ம் .... அந்த ஒரு அற்ப முயற்சிக்கு கிடைத்த தோல்வியே,இந்த பெண்ணின் மரணம்...இதுவே, மேற்குலகில்,பிற மத பெண்களுக்கு நடந்து இருந்தால்.....

அந்த அர்ப்பனுக்கு ஊடகங்களே அல்லவா தண்டனை பெற்று கொடுத்து இருக்கும்,அந்த பெண்ணையும்,மானம் காக்க உயிர் துறந்த உத்தமி ,என பலவாறாக ஏற்றி போற்றி இருக்கும்,,,

என்னசெய்வது .....பாவம் அவர்களை இஸ்லாமோபோபியா அல்லவா தொற்றிக்கொண்டுள்ளது .....அவர்களால் வாய் திறக்க முடியாது தானே....

வேண்டுமென்றால் அவர்கள் இப்படி சொல்லுவார்கள்..."பார்த்தீர்களா? இஸ்லாமியர்களின் இந்த ஹிஜாப் முறை ஒரு பெண்ணின் உயிரை குடித்துவிட்டது",என்று கூறி,மேலும் அதற்கு எதிரான கோஷங்களை எழுப்புவார்கள்...

இன்னும் தமிழர்களால் ,நடத்தப்படும் ,வலைபூகளில் கூட இஸ்லாத்தை விட்டு வைக்க மாட்டார்கள்..அதுவும்,ஒரு செய்தியை பற்றி விவாதிக்கும் போது,அது இஸ்லாம் சம்பந்தமற்றதாக இருந்தாலும்,இஸ்லாத்தை இழுத்து,இழிவு செய்வார்கள்....நான் கண்டவை...அதில் அவர்கள் தங்களை நடுநிலையாளராக காட்டிக்கொள்வார்கள் ..

இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது ,என்றெல்லாம் கதைப்பார்கள் ....அப்படி அடிமைபடுத்தினால்,.....கட்டாயத்தில் ஹிஜாப் அணியும் பெண்கள் யாரும்,இப்படி உயிரை தர மாட்டார்கள் ...

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களை ஷகீதுகளுடன் நாளை மறுமையில் ஆக்கிவைப்பானாக...

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த போதுமானவன்....

இஸ்லாமிய பெண்கள் அனைவரும் இறை கட்டளையை ஏற்று,அதன் மஹத்துவம் அறிந்தே அணிகிறார்கள் ...

இஸ்லாத்தில் எதுவும்,கட்டாயம் கிடையாது.....இது இஸ்லாத்தில் உள்ளவர்களைவிட மாற்று மதத்தவருக்கு,நன்றாகவே தெரியும்...

இதற்கு சாட்சி ,இஸ்லாத்தில் இருக்கும் பல பெண்களும் இன்று ஹிஜாப் அணியாமல் வெளிவருவதே.....

அவர்களுக்கான,வரவு செலவை,இன்ஷா அல்லாஹ், வல்ல இறைவன் பார்த்து கொள்வான்...

மேற்குலகு,முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த ஒரு சார்பு நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் போர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

பிரார்த்தனைகளுடன்......

ரஜின் அப்துல் ரஹ்மான்.

Counter

பிற பதிவுகள்