வியாழன், அக்டோபர் 25, 2012

தியாகத்திருநாளும், சிந்திக்க சில வசனங்களும்...

3 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவரையும் சிறிய இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..மறுமை குறித்து சிந்திக்க சில குர்ஆன் வசனங்கள்:

விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோர்களை பூமியில் குழப்பம் செய்கின்றவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையோர்களை குற்றம் புரியும் பாவிகளைப்போல் ஆக்கிவிடுவோமா? - 38:28

தீமையை சம்பாதித்துக்கொண்டார்களே அத்தகையோர்-விசுவாசங்கொண்டு நற்கருமங்களை செய்தார்களே அத்தகையோரைப்போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும் மரணித்து விடுவதும் சமமே.அவர்கள் (இதற்கு மாறாக) தீர்ப்பு செய்துகொண்டது மிகக்கெட்டதாகிவிட்டது.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக்கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்.இன்னும் ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள். 45-21 22

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப்படைத்து இன்னும் அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே, அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். 46:33

அவன் எத்தகையவனென்றால் படைப்பை முன்மாதிரியின்றியே ஆரம்பமாக அவன் தொடங்குகின்றான்,பின்னர் அதை அவன் மீளவைக்கிறான்.இது அவனுக்கு மிக எளிமையானதாகும்.வானங்களிலும் பூமியிலும் மிக்க மேலான வர்ணனைப்பண்பு அவனுக்குரியதே. மேலும் அவன் யாவற்றையும் மிகைத்தவன் தீர்க்கமான அறிவுடையவன்.30- 27

நபியே! எழுதப்பட்ட (பெரும்) ஏடுகள் சுருட்டப்படுவதைப்போல நாம் வானத்தை சுருட்டிவிடும் நாளை (நினைவுகூறுவீறாக) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும் ) மீளவைப்போம்.(இது) நம்மீது கட்டாயமான வாக்குறுதியாகும்.நிச்சயமாக நாம் இதைச் செய்வோராக இருக்கிறோம். 21: 104

(படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகிவிட்டோமா? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர்கொடுத்து நாம்) புதிதாக படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கினர். 50:15

மூலம் : அல்குர்ஆன்

அன்புடன்
ரஜின்
புதன், ஜூன் 06, 2012

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!! - 03

7 கருத்துகள் :


என் தந்தையின் சந்திப்பு எனக்கு மிக ஆதரவாக இருந்தது, என் உறவினார்களும், என் நன்பர்களும்  இவ்வாறு எனது கப்ருக்கு (வந்து எனக்காக பிரார்த்தித்து) செல்வதை ஆசைப்பட்டேன்.
மேலும் '' என் தந்தையே என் பொறுப்பில் உள்ள என் கடனை செலுத்துவீர்களா! எனக்காக அந்த கடன் தொகையை தருமம் செய்து விடுவீர்களா! எனக்காக பிரார்த்தனை செய்வீர்களா! என நான் குமுருகின்ற குரலை என் தந்தை செவியுறமாட்டார்களா! என ஆசித்தேன் இருப்பினும் என் குரலை செவியுற எவ்வித வழியும் இல்லை என்பதைக் குறிக்கின்ற இறை வசனம்  وَحِيْلَ بَيْنَهٌمْ  وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ அவர்களுக்கும் அவர்களால் விரும்பப்படுகின்றவைகளுக்கு மத்தியில் திரையிடப்படும் ( அல் குர்ஆன் 34:54) என்ற அல்லாஹ்வின் வசனம் நினைவிற்கு வந்து விட்டது.
என் உடல் உஷ்ணம் சற்று குறைவதாகவும் சற்று கூடுவதாகவும் உணர்ந்தேன் , இதற்கும் எனது தந்தையின் சந்திப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்று கூட எண்ணினேன் ஆனால் அதுவல்ல, விஷயம் வேறாக இருந்தது

அது : திடீரென அறிமுகமான வெளிச்சம் ஒன்று வந்தது அதுதான் சூரா அல் முல்க்
அது (சூரா அல் முல்க்) என்னிடம் உனக்காக இரு நற்செய்திகள் உள்ளன என்றது
நான் : அதுவென்ன ? சீக்கிரம்; சொல் என்றேன்
சூரா அல் முல்க் : முதலாவது : உனது 10000 ரூபாய்க்குரியவருக்கு நீ தரவேண்டிய கடன் ஞாபகம் வந்துவிட்டது இருப்பினும் அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தவராக நான் அவரிடமிருந்து பெற வேண்டிய கடனை விட்டுக் கொடுத்து விட்டேன், உன் குடும்பத்தினரிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 02

கருத்துகள் இல்லை :


பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 01

1 கருத்து :


சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு  கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!

எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து  சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல்  சென்னை செல்லும் பயணி' என்றேன்,

செவ்வாய், மே 08, 2012

ஆல்கஹால் கலந்த வாசனைத்திரவியம் ஆகுமானதா???

6 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின்  சகோதர சகோதரிகளே!
வாசனைத்திரவியம் (PERFUME) - இதை நம்மில் விரும்பாதோர் யாரும் இருக்கமுடியாது.சிலருக்கு சில மணம் பிடிக்கலாம்,அல்லது பிடிக்காது போகலாம்,ஆனால் ஏதாவது ஒரு மணத்தில் மனங்கொள்ளாத மனிதன் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட வாசனையை அள்ளிக்கொடுக்கும் திரவியத்தில், முஸ்லிம்களில் சிலருக்கு சில சங்கடங்கள் இருப்பதை உணரமுடிகிறது. அதாவது ஆல்கஹால். இது போதைப்பொருளாயிற்றே... அது கலந்திருக்கும் இந்த திரவியத்தை பயன்படுத்தலாமா? என்று.. என்னப்பா இதெல்லா ஒரு விஷயமா? என்ன அத ஒடச்சு வாயிலயா ஊத்துரீங்க.. போதை வர்ரதுக்கு எனும் கேள்வியோடு, படிப்பவர்கள் எம்மை எதிர்நோக்கலாம்... ம்ம்..


இந்தக் கேள்வியின் ஆதி இஸ்லாத்துடன் இழைகிறது... ஒரு பொருள் குறித்து, ஒரு தடையோ, சட்டமோ இருக்க...அப்பொருள் சார்ந்த பிற பொருட்களும் தடைசெய்யப்பட்டவையா அல்லது அனுமதிக்கப்பட்டவையா? என கேள்வி எழுப்புவதும்,அதை தெளிவுபடுத்திக்கொள்வதும் முஸ்லிம்களுக்கு அவசியமான ஒன்றுதான். இந்தக் கேள்வியும், பயன்படுத்தலாமா? என்ற அச்ச நிலையும் யாரைக்குறித்தும் வருவதில்லை..நம்மைப் படைத்த இறைவன்  இது தொடர்பான ஒன்றை தடைவிதித்திருக்க நாம் அறியாமல் அதைப் பயன்படுத்தி அவனுக்கு மாறு செய்துவிடக்கூடாதே என்பதால்தான்... இறை பக்தி, இறை அச்சத்தால்தான்...


சரி விஷயத்துக்கு வருவோம்!

வியாழன், மே 03, 2012

நித்தியாநந்தர்களை மக்கல் விரும்புகிறார்களா !?!

5 கருத்துகள் :
இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும்பதிவு அல்ல...சமீப வலையுலக அவதானிப்புக்களின் வெளிப்பாடு..அவ்வளவே!!!

என ஆரம்பித்த இந்தப்பதிவு..வலையில் வரம்பு மீறி முஸ்லிம்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும் விமர்சிக்கும் சில பதிவர்களை விமர்சித்து எழுதியதே...

சமீபமாக இஸ்லாமும்,முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். எங்களின் பெருமதிப்பிற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதான விமர்சனங்களும், அவதூருகளும், ஆபாச பேச்சுக்களும் ஏச்சுக்களும் எக்கச்சக்கம்...

அதன் வெளிப்பாடாகவே அப்படி வரம்பு மீறி,விமர்சித்தவர்களை, விமர்சிக்கும் வண்ணம் எழுதப்பட்டது இந்தப்பதிவு..

இது நித்தியாநந்தர் எனும் தனிமனிதரையோ,அல்லது அவர்களது நம்பிக்கையையோ கிண்டல் செய்து எழுதப்படவில்லை....

இதுவரையும் இப்படி கேளிசெய்யும் விமர்சனப்பதிவுகள் இந்தத்தளத்தில் வெளிவந்ததில்லை...அதில் நமக்கு உடன்பாடும் இல்லை...இருந்தாலும் சிலவேலைகளில் ந்ம்மையும், அவர்களின் தரங்கெட்ட விமர்சனங்கள் உரசிப்பார்ப்பதை தவிர்க்கமுடிவதில்லை...

அதன்விளைவாக வெளியிடப்பட்ட இக்கட்டுரை..சகோதர முஸ்லிம்களின் அறிவுறுத்தல் காரணமாகவும்,இஸ்லாம் வலியுறுத்தும் மாண்பை காக்கும் பொருட்டும் நீக்கப்படுகிறது...

பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள்..6:108

முஃமீன்களே ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம்.ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்).ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள்.இன்னும் (உங்களில்) ஒருவரை ஒருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய ) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்.எவர்கள் அவற்றிலிருந்து மீளவில்லையோ,அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவர். 49:11

இப்படியான வேதவரிகளையும்,எங்கள் தூதர் மொழிகளையும், நினைவிற்கொண்டவர்களாக,இவற்றை தனதாக்கிக் கொண்ட நாங்கள் உண்மை முஸ்லிம்களாகவும்,இஸ்லாத்தின் மாண்பை காப்பவர்களாகவும், விமர்சனங்களுக்கு கடைசிவரையிலும் அழகிய முறையில் விளக்கம் அளிப்பவர்களாகவும் இருந்துவிட்டுப் போகிறோம்...

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்..தீர்க்கமான அறிவுடையவன்...


அன்புடன்
ரஜின்

புதன், மே 02, 2012

அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??

3 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

இந்தப்பதிவானது அல்குர்ஆன் வசனத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வேலையை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது பின்போ, இதனுடன் நெருக்கமான தொடர்புடைய,அல்லது புரிதலை மேலும் எளிமைப் படுத்தக்கூடிய  இந்தப்பதிவை படித்துவிடுவது உங்களுக்கு நல்ல முன்னுரையை கொடுக்கவல்லது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அல்குர்ஆனின் வசனம் 2:178 ஆனது பழிக்குப் பழி தீர்ப்பது குறித்து பேசுகிறது.சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் உரையாடும் போது இந்த வசனத்தின் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இதே விமர்சனத்தை சகோதரர் தங்கமணி என்பவரும் சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது..பரவாயில்ல...விமர்சிக்கவாவது, மக்கள் குர்ஆன் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்...

சனி, ஏப்ரல் 28, 2012

பர்தா என்ன சாதித்துவிட்டது??? – 04 (அதில்லம்மா)

9 கருத்துகள் :


ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல என்றாள்...(பாகம் 03)

இதென்ன...சினிமா டயலாக்லாம் விட்டுட்டு இருக்க... சொல்லு.. இருக்கா? இல்லையா? என விளையாட்டாய் கடிந்துகொண்டாள்...

ப்ச்...ஹதி...நான் சொல்லவந்தது..இன்னும் அப்படியான சில உடைகள் இருக்கு,ஆனா அவை தற்கால உபயோகத்திற்கு தக்கவாறு பொலிவு பெறாததால,அவை ஓல்ட் ஃபேஷன் கேட்டகிரிக்கு போயிடுச்சு...அதத்தா புத்திசாலித்தனமா சொன்னேன்..உனக்கு புரியல...என ராதிகா  கிண்டலாய் சீண்டினாள்..

ஹதிஜா..சிரிப்பை பாவனையில் காட்டிவிட்டு,அங்கலாய்ப்புடன்...ஹ்ம்ம், ஆமாப்பா நீ சொல்றது சரிதான்....சில சுடிதார் வகைகள்,அப்ரம் பாட்டியாலா போன்ற ட்ரெஸ்லாம் ஓரளவு இந்த வரைமுறைக்குள்ள வரும்...ஆனால் அதுகள்ளையும் ஃபேஷன் புகுந்து இப்போ முறையான சுடிதார்கள் கூட கெடக்கிறதில்ல...அப்டி ஒரு முழுமையான ட்ரெஸ்ஸ் இல்லாததாலதான இது என தன் பர்தாவை காட்டினாள்...

திங்கள், ஏப்ரல் 23, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 03 (இருக்கு ஆனா இல்ல)

16 கருத்துகள் :
பாகம் 01 , பாகம் 02

ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல..என தன்னை அந்தக் கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முயன்றாள்...(பாகம் 02)

ரொம்ப சரியா சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ நாம தேர்வு செய்ய முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர, நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர் பணி புனிதமானது, அவக இந்த வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...

சனி, ஏப்ரல் 21, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 02 (10% வேறுபாடு?)

28 கருத்துகள் :
முந்தைய பாகத்தை படிக்க: க்ளிக் செய்யுங்கள் பாகம் 01 


ஹதீஜா - ராதிகா 

ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவம் தணிந்து வருத்தம் மேலிட..ஸாரிடி...இருந்தாலும் நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா..இந்த சமயத்துக்காய் காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்... (முதல் பாகம்)

ராதிகாவை இயல்புநிலைக்கு கொண்டுவர,.. ஹதிஜா, பொய்சிரிப்போடு... ராதி...ஏய், ப்ச், இங்க பார்டி... இன்னக்கி ஒருநாள் போடாம இருந்தா என்னான்னு கேக்குற... இது நாங்க போடுர யூனிஃபார்ம்ன்னு நெனச்சிக்கிட்டியா என்ன? இன்னைக்கி லீவுதானே, வேர போட்டா என்னான்னு கேக்க??...என்றதும்,... இல்லப்பா அப்டில்லா நெனைக்கல,என ராதிகா சிறு தவிப்புடன் பதிலளித்தாள்... தொடர்ந்து ஹதிஜா....அப்படியா? சரி! அப்போ பர்தா எதுக்காக நாங்க போடுறோம்? சொல்லேன்...என விளையாட்டுத் தனமாக கேள்விகளை தொடர்ச்சியாக கோர்க்க...

ராதிகா, யோசித்தவளாய்!!!,.. என்ன? உங்க மத்துல பொம்பளைங்க மட்டும், இப்டித்தா இருக்கனும்ன்னு சொல்லிவச்சுருக்கு,அத கட்டாயம் ஃபாலோப் பண்ணனும்ன்னு செய்யிரீங்க... இதுனால என்ன பெனிஃபிட்? பாரு நாங்கள்லா எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்...நீங்க அப்டி இல்ல.. அப்டி நீங்க இருக்க உங்க மதமும் அனுமதிக்கல,... விதியேன்னு போட்டுட்டு இருக்கீங்க... இல்லயா? என பொடிவைத்து புன்முறுவலுடன் பதிலளித்தாள்...

வியாழன், ஏப்ரல் 19, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 01

13 கருத்துகள் :

அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி.... என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய், கவரை பிரித்து புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.

மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..

சனி, ஏப்ரல் 14, 2012

அல்குர்ஆனை அறிவோம்...(என் ஹிந்து சகோதரர்களே)

3 கருத்துகள் :அல்குர்ஆன் - தற்போது அனைவருக்கும் இதை அறிந்துகொள்ள,மற்றும் இதனைப்பற்றி விவாதிக்க துவங்கியிருக்கும் நிலையில்,இந்த இடுகையானது குர் ஆனைப் புரிதல் பற்றிய சில அடிப்படை செய்திகளை,முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, இறைவன் வஹி எனும் இறைச் செய்தி மூலம் வழங்கியதே அல் குர்ஆன்.


குர்ஆன் என்பது ஒரே நாளில் அல்லது ஒரு மனிதர் சில காலம் செலவிட்டு ஒட்டுமொத்தமாக,எழுதி வெளியிட்ட புத்தகம் அல்ல.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??

10 கருத்துகள் :

ஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலாவி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல..அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும்,பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும்,அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.

முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது.ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.

சனி, மார்ச் 17, 2012

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்!

6 கருத்துகள் :

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.
மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்! 


2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!
மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!
இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள். 


4. பொறாமை கொள்ளாதீர்!
வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது! நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்! 


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!
உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள். 


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!
இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும். 


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!
இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள் முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும். 


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்
தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும். 


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!
வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!
"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள். முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


இதில் பலவிசயங்களை நான் என் வாழ்வில் கொண்டுவர முயலும் அதே சமயம், இதை படிப்பவர்களும் வாழ்வில் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் - அதனால் பகிர்கிறேன்.

அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்