திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

18 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதர சகோதரிகளே!

சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! என்பதான பொருள் கொண்ட மேற்சொன்ன இந்த முகமன் இஸ்லாமியர்கள்,இன்று நேற்றல்ல இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே பயன்படுத்தி வருவது பாமரரும் அறிந்த ஒன்று.தமிழ்மண திரட்டியின் நிர்வாகிகளுல் ஒருவரான ரமணிதரன்,இந்த முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய முகமனை தனது சுதந்திர பேச்சுரிமையால்,மிக மிக அற்பமாக,கேவலமாக விமர்சித்து இருக்கிறார்.

டெரர்கும்மி எனும் தளத்தில் வெளியிடப்பட்ட தமிழ்மணத்தின் சுயரூப டேட்டாவை மறுதலிக்க வந்த இந்த பெயரிலி நிர்வாகி,போகிர போக்கில் புளியமரத்தில் கல்லெறிந்த கதையாக இஸ்லாமியர்கள் மீது ஒரு கல்வீசி விட்டு போய் இருக்கிறார்..எவ்வித முகாந்திரமும் இல்லாமல்,..இவ்வாராக...

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

ரமணிதரனின் இந்தக்கருத்து இஸ்லாமிய முகமனை கேலிசெய்வதாக மட்டும் இல்லாமல் அது வக்கிரமான விமர்சனமாகவும் இருக்கிறது. பொதுவாகவே பெயரிலியாக வரும் இவரது போக்கு எல்லாரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒரு அசூசையான இவரது சாடல் இஸ்லாமியர்களை மட்டுமல்ல பொதுவாக எல்லோர் மனதிலும் ஒருவித விகல்ப்ப உணர்வை தமிழ்மணத்தின் மீது கொடுத்திருக்கிறது.

சீ...பெரியமனுஷனாயா  நீயெல்லா,..இது பதிவு தோஷமா இல்ல பழக்க தோஷமா??? முதலில் இது எனது மார்க்கம் சார்ந்த சொல்லை பழித்தாய் என பார்த்தால், அதன் ஊடாக சாந்தி என்றால் அமைதி என பொருள்படும் வார்த்தையை பெண்ணாக கற்பனை செய்து..அதற்கு வக்கிர முலாம் பூசி..இதை விட கேவலமாக ஒருவனால் பேசிவிட முடியாது.. சீ
 
இது ஒருபுறமென்றால்.அதற்கு உரியமுறையில் விளக்கம் கேட்க..அது தனது பேச்சு சுதந்திரம் எனவும்.இன்னும்

//சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு தவிர;  //

என அனைவரும் அவரவர் பயன்பாட்டு சொற்களுக்கு உரிமம் வைத்துதான் கண்டனம் தெரிவிப்பது போலவும் உளறி இருப்பது திமிரில் விளைந்த தடித்த வார்த்தையே அன்றி வேரல்ல...இது இவர்களது பேச்சு சுதந்திரமோ.!!!!.. ஒருவனது சுதந்திரம் அடுத்தவனது மூக்கின் நுனிவரை என்பதை இவர்கள் அறியவில்லை போலும்..இப்படிப்பட்ட இவர்களது பேச்சு சுதந்திரம்சாமி சரணத்தில் வந்து பார்க்கட்டுமே...! அதுகூட யாருடைய தனியுரிமை வார்த்தையல்ல.. அப்போது எழும் நியாயமான கேள்விகள்,அதற்கு தெனவெடுத்த இதுமாதிரியான பதில்கள்.. இவர்களின் பருப்பை வேகவைக்குமா என பார்ப்போம்?

வலைஞர்கள் மத்தியில் மிகபிரபல்யமான ஒன்றாக கருதப்படும் தமிழ்மணம் திரட்டி, தடம்மாறுவது உணரப்படுகிறது. சமீபகால செயல்பாடுகள் ஒரு சார்புடையதாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.மதரீதியான தளங்களை தணிக்கை செய்வதாக எண்ணிக் கொண்டு அதை கட்டணபதிவுகளின் கீழ் கொண்டுவந்து, பொதுவான பதிவுகளுக்கு மத்தியில் மதரீதியான பதிவுகளை கொடுப்பவர்களையும் அந்த வரிசையின் கீழ் கொண்டுவது அவர்களின் பதிவுகளை திரட்ட மறுக்கிறது.அதே நேரம் மதங்களை திட்டி தீர்ப்பதையே முழுநேர ஊழியமாக செய்யும் தளங்களையும் அவர்களது பதிவுகளையும் தாராளமாக வரவேற்பது முழுமையான முரண்பாடாக இருக்கிறது.இதில் குறிப்பாக இஸ்லாமிய பதிவுகள் திரட்டப்படாமல் புறக்கணிக்கப் பட்டதில் இருந்து இது குறிப்பிட்ட மதத்தினரையும்,அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கும் செய்யப்பட்ட சூத்திரமாகப் படுகிறது.
தமிழ்மணம் மட்டுமே திரட்டி போலவும்,அது இல்லாவிட்டால் பதிவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதான குருட்டுக்கனவின் வெளிப்பாடே இத்தகைய செயல்பாடுகள்.

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி என பஞ்ச் டயலாக் விடுபவர்கள், முதலில் பிறரை புரிந்துணர்ந்து ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா???

இறுதியாக,இஸ்லாமிய முகமனை கேலிக்கூத்தாக்கி வக்கிரமாக விமர்சித்த தமிழ்மண நிர்வாகி ரமணிதரன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

இன்னும் இவரது பேச்சு முஸ்லிம்களை இப்போது தீண்டி இருக்கிறது.. ஆனால் சமீபமாகவே பல மாற்றுமத சகோதரர்களை தீண்டி அவர்கள் கண்டித்து.அதற்கு இவர் வசைபாடிவருவது நடந்து கொண்டுதான் இருக்கிறது..எனது அருமை சகோதரர்களின் சார்பாகவும் இவருக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தமிழ்மணம்பார்க்க
தமிழ்மணம்ன்னா என்ன? என்று கேட்பவர்கள் - பார்க்க
டெரர்கும்மி தளம் - பார்க்க




இவ்வளவையும் பார்க்கும்போது தமிழ்மணம் மணக்கவில்லை..நெடியாகி குமட்டத்தான் செய்கிறது...


அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்