அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!
இந்தப்பதிவானது அல்குர்ஆன் வசனத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும்
வேலையை செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது பின்போ, இதனுடன் நெருக்கமான
தொடர்புடைய,அல்லது புரிதலை மேலும் எளிமைப் படுத்தக்கூடிய இந்தப்பதிவை படித்துவிடுவது உங்களுக்கு நல்ல முன்னுரையை கொடுக்கவல்லது.
சரி விசயத்துக்கு வருவோம்...
அல்குர்ஆனின்
வசனம் 2:178
ஆனது பழிக்குப் பழி தீர்ப்பது குறித்து
பேசுகிறது.சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் பின்னூட்டத்தில் உரையாடும் போது இந்த
வசனத்தின் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இதே விமர்சனத்தை
சகோதரர் தங்கமணி என்பவரும் சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் வைத்திருந்ததை பார்க்க
முடிந்தது..பரவாயில்ல...விமர்சிக்கவாவது, மக்கள் குர்ஆன் வாசிக்க
ஆரம்பித்திருக்கிறார்கள்...