ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

ஒரு கடவுளின்??? மரணம்...

12 கருத்துகள் :

பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது:
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 . கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

திங்கள், ஏப்ரல் 11, 2011

தேர்தல் 2011 - முஸ்லீம்கள் செய்யவேண்டியதென்ன??

30 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...அமீரகத்துல இருந்தாலும்,நம்ம தமிழக தேர்தல் வாடை நம்மை தாக்காமல் இல்லை.இந்தா அந்தான்னு கருணாநிதி ஆட்சிக்கு வந்து,நல்லது கெட்டது,ஊழல்,அது இதுன்னு ஐந்து ஆண்டு முடிஞ்சு அடுத்த தேர்தலுக்கு தயாராகி,கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்காங்க எல்லாம்...அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடித்தளத்தை எல்லாக் கட்சிகளுமே வழுவாக முதலீடு செய்து கொண்டிருக்கும் நேரம் இது.

Counter

பிற பதிவுகள்