தமிழ்ஹிந்து பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ஹிந்து பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 24, 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப(மதமாற்றம்) செய்யுங்கள்!!!

37 கருத்துகள் :


முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துத்துவாக்களின் பார்வை...

58 கருத்துகள் :
இந்த பதிவு இந்திய முஸ்லிம்கள் குறித்த ஹிந்துக்களின்,இல்ல ஹிந்துத்துவாக்களின் பார்வையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடித்துண்டாக இருக்கும்..என்னை வந்தடைந்த,முஸ்லிம்கள் குறித்த இந்தக் கண்ணோட்டமே மொத்த ஹிந்துத்துவாக்களுக்கும் கற்பிக்கப் படும் பாடமாக இருக்கிறது,எனபது இவரின் வாதத்தில் இருந்து எனக்கு புலப்படுகிறது...
சரி விஷயத்துக்கு வருவோம்..
எனது முந்தைய பதிவில் தமிழ்ஹிந்து தளத்தின் தரம் பற்றி எழுதியிருந்தேன்...இருப்பினும் அவர்களின் கட்டுரைகளை படித்து,இயன்ற அளவு அவர்களின் தளத்திலே பதில்தர முயல்வேன்..அங்கு எனது கருத்துக்கள் பலவேலைகளில் திரிபு செய்யப்பட்டாலும் பதில் தருவேன்,ஏனென்றால் எனது தரப்பு நியாயங்கள,அங்கு வரும் ஒரு ஹிந்து சகோதரனுக்காவது புரியாத என்ற ஆதங்கத்திலே..ஆனால் அதைவிட எதிர்ப்புகளும்,கண்டங்களும் அதிகம் வரும் அவை இந்த ஹிந்துத்துவாக்களின் செயல் என தெரியும்.இருந்தாலும் அவற்றுக்கும் பதில் அளிப்பேன்..
ஆனால்,கடந்தமார்ச் 29 அன்று தமிழ்ஹிந்து தளம் வெளியிட்ட அங்காடித்தெரு பட விமர்சனம் வெளியிட்டது..அதில் எனது ஆதங்கத்தை பின்னூட்டமாக்கி இருந்தேன்..அது மட்டுறுத்தப்பட்டது வேறுவிடயம்..ஆனால் அதற்கு பதில் வந்தது பாருங்கள்..அப்படியே ஹிந்துத்துவ பிம்பம்..
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி நீங்களே பாருங்கள்...
அவரது அந்த கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..
அவரது கேள்விகள் சிவப்பு வண்ண எழுத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
திரு ரஜின் அவகளுக்கு எனது வேண்டுகோள். தயவு செய்து எந்தச் சார்பும் இன்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவும். ஹிந்துக்களின் தேசமான இங்கு, ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இங்கு, சிறுபான்மை யினர் என்ற தகுதியில் உங்களுக்கு உள்ள, ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகளை எண்ணிப் பாருங்கள்.
ஐயா இந்தியா ஹிந்துக்களின் தேசம் தான்.ஆனால் தாங்கள் கூறுவதுபோல் ஹிந்துத்துவாக்களின் தேசம் அல்ல.முதலில் ஹிந்து என்பதன் அர்த்ததை புரிந்து கொள்ளுங்கள்..இதெல்லா ஒங்களுக்கு சொல்லித்தரவே மாட்டங்க...ஏன் ஹிந்துக்களின் தேசம் என்கிறேன் என்றால்,இந்திய நிலப்பரப்பு சார்ந்து இந்தியகுடிமகனான,ஒரு முஸ்லிமான நானும் ஹிந்துதான்,அதற்கான விளக்கம் "நானும் ஒரு ஹிந்து" எனும் எனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.படித்துவிட்டு தொடருங்கள்...
அப்படி இருக்கும் போது நீங்கள் மதம் சார்ந்து ஹிந்துக்களின் தேசம் எனச் சொல்வீர்களானால்.உங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்ள முடியும்..என்னய பாத்து நீ இந்தியனே இல்லங்ர...(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)இந்தியா, இங்கு பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரபட்சமின்றி உரிமையானது,,
வெறும் மதம் சார்ந்து இருக்கும் ஒரேகாரணத்துக்காக இந்தியாவே ஹிந்துத்துவாக்களோடதா?..என்னடா பைத்தியக்காரத்தனமா இல்ல..(சாரிங்க மரியாத குடுக்க மனசு வரல)
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தா? சிறுபான்மையாக இருக்கிறவன் என்ன அகதியா வாழனும்கிறீர்களா? ஹிந்துக்களுக்கில்லாத உரிமைகள் எதை இந்திய அரசியல் சட்டம் எங்களுக்கு கொடுத்துவிட்டது?..அதையும் சொல்லிருக்கலாமே?..3.5% இட ஒதுகீடுக்கு நாய் மாதிரி போராடி,அதை அப்படி இப்படி குடுத்துவிட்டால் ...அதை வைத்து என்ன இந்தியாவையே வாரி சுருட்டீரப்போரோமா?
வேறு எந்த நாட்டிலாவது பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரை நடத்துகின்றனரா?
ஐயா.. மத்த நாட்ல உள்ள சிருபான்மையினருக்கும்,இந்தியாவில் உள்ள சிருபான்மையினருக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கீங்களே....
உங்களுக்கு புரியும்படியே சொல்றேன்....மலேசியாவில உள்ள ஹிந்துக்கள் சிருபான்மையினர்...அது ஒரு முஸ்லிம் நாடு..அந்த நாட்ல,உள்ள பூர்வீக குடிகளான மலாய் களுக்கு சிலவற்றில் முன்னுரிமை உண்டு..ஆனால் அங்கு வசிக்கும் குடியேரிகளான இந்திய மக்களுக்கு சிலவற்றில் மலாய்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை வழங்குவதில்லை..அதற்காக அங்கு மக்கள் ஒடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,
மலேசியாவின் பூர்வீக குடிகள் அனைவரும் முஸ்லிம்களும் அல்ல...அங்கு குடியேரிய மக்கள் அனைவரும் ஹிந்துக்களும் அல்ல..இந்திய முஸ்லிம்களும் அங்கு குடியேரிகளாக உள்ளனர்.அவர்களுக்கும்,இதே நிலைதான்,,,
ஆனால் அந்த நாட்டின் நிலையுடன்,இந்திய முஸ்லிம்களின் நிலையை ஒப்பிட முடியாது..இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றும் வந்தேரிகள் அல்ல.முதலில் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்..
சில தலை முறைகளுக்கு முன்னர் குப்பனாகவும் சுப்பனாகவும் இருந்த என்னுடைய மூதாதையர்..இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு,தனது மார்க்கமாக அதை தேர்வு செய்து கொண்டவர்கள்.அவ்வளவுதான்.....
எப்படி இப்பொ பேராசிரியர் பெரியார்தாசன்,அப்துல்லாஹ் ஆனாரோ..அதே மாதிரிதான்..என்னோட மூதாதையர்களான முனியாண்டி,முஹம்மதாக மாறினர்.அவ்ளோதா...என்னை பார்த்து இரண்டாம்தர குடிமகனா இருக்க சொல்ரீங்க...
ஹிந்துக்கள் தங்கள் மத சம்பந்தமான ஊர்வலம் செல்லக் கூட ஆயிரம் தடங்கல் செய்கிறீர்கள். மீறிச் சென்றால் பெருங் கலவரத்தில் இறங்கிவிடுகிறீர்கள் (ஹைதராபாத் சமீப உதாரணம்). உங்கள் ஊர்வலம் இவ்வாறு ஹிந்துக்களால் பாதிக்கப்படுவதுண்டா? ஏன் சிறிதளவு சகிப்புத்தன்மையும் இல்லாமல் இருக்கிறீர்கள்?
அடேயப்பா ரெம்ப நல்லவன் மாதிரியே பேசுரீங்களே எப்புடிப்பா?ஐயா நீங்க சொல்லவர்ரது என்ன விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் தான...அது கலவரத்த உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஊர்வலமாச்சே,.....அது தா ஹிந்துக்களின் ஊர்வலம் இல்லயே..ஹிந்துத்துவாக்களின் வெறிவலம் ஆச்சே...
எனக்கு தெரிஞ்சு 1980களுக்கு பிறகுதான தமிழ்நாட்ல விநாயகசதூர்த்தி ஊர்வலங்கள் நடக்குது..அது 1991க்கு அப்பரம் ரொம்ப தீவிரமா வன்முறை கட்டவிழ்த்து விட ஏதுவானமுறையில் நடத்தப்படுகிறது....
முஸ்லிம்களின் ஊர்வலத்துல எதும் காலித்தனம் பன்றதில்லயேப்பா?ம்ம்..ஊர்வலம் போரவர்கள்,மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் சென்றால் யார் என்ன சொல்லப் போகிறோம்.அப்படி தொல்லை நேரும்போது என்னன்னு கேக்காம "சகிப்புத்தன்மையோட" இரண்டாம் தர குடிமகனா இருக்க சொல்ரீங்களா...
சகிப்புத்தன்மை என்பது என்ன?ம்ம்.சகிக்கமுடியாத ஒன்று நிகழும் போது சகித்து பொருத்துக் கொள்வதே சகிப்புத்தன்மை.அப்போ அங்க சகிக்கமுடியாம எதும் நடந்தாலும் கண்டுக்காது சும்மா இருக்க சொல்ரீங்களா?
அமைதியான முறைல நடந்தா யார் என்ன சொல்ல போரான்....
ஹிந்துக்களை பெரிதும் மதிக்கிறோம்.ஹிந்துத்துவாக்களை அல்ல...ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச்சொல்லும் பழக்கமே எங்களுக்கு உண்டு,....
ஜமாத் என்று நீங்களாக ஒன்று கூடிக்கொண்டு போட்டி ராஜாங்கமே நடத்துகிறீர்கள். சிவில் சட்டத்திற்கு ஷரியாவை வற்புறுத்திக் கடைப்பிடிக்கும் நீங்கள், அதன் கிரிமினல் பிரிவை மட்டும் வெகு சாமர்த்தியமாக மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் இஸ்லாமியர் எனவே கிரிமினல் குற்றங்களுக்கு ஷரியாவின் படியே எங்களை நடத்துங்கள் என்று ஏன் கோருவதில்லை?
இந்த ஜமாத்'கள பத்தி எனக்கு சொல்லிதராதீங்க.அதுல உள்ள உள்குத்து எல்ல உங்களுக்கு தெரியாது..எனக்குதா தெரியும்.அப்டியே ஒன்னா இருந்துட்டாலும்...
ஐயா அறிவாளி...எந்த முஸ்லிம்'ங்க கிரிமினல் சட்டத்துக்கு ஷரியா சட்டம் வேணான்னு சொல்லுவான்..அதுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் சிவப்பு கம்பலம் இட்டல்லவா வரவேற்ப்போம்..அது ஏன் இந்தியாவுல கடைப்பிடிக்கிரதில்லன்னு சொல்ரேன்..
ஒரு விஷயத்த தெளிவா புரிஞ்சுக்கனும்...ஷரியத் சட்டம்,அல்லாஹ் உடைய,அல்லாஹ்வை ஏற்ற முஸ்லிம்களுக்கான சட்டம்.மற்றவர்களுக்கல்ல..முஸ்லிம்கள் மீதான ஜகாத் கடமை எப்படி முஸ்லிம்களல்லாதவர்களுக்கு பொருந்தாதோ,அதுபோல சட்டங்களும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பொருந்தாது.
இந்திய முஸ்லிம்கள் தங்களது மத சுதந்திர அடிப்படையில்,திருமணம்,சொத்து, விவாகரத்து,உள்ளிட்ட 12க்கும் குறைவான விவகாரங்களிலே...ஷரியத் சட்டங்களை கோருகின்றனர்...மீதம் உள்ள அத்துனைக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையே பின்பற்றுகிறனர்...
சரி...ஏன் இதுமாதிரியான சிவில் சட்டங்களில் மட்டும் ஷரியத்.கிரிமினல் வழக்குகளில் இந்திய சட்டமென கேட்பது சிந்திக்காமல் கேட்கும் கேள்வியானாலும் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்வி..
முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் சிவில் சம்பந்தமான ஷரியத் சட்டங்கள அனைத்திலும் முஸ்லிம்களே அங்கம் வகிப்பார்கள்..அதாவது வாதியும் முஸ்லிமாக இருப்பான்,பிரதிவாதியும் முஸ்லிமாக இருப்பான்.அப்படி இருக்க அது இங்கே எந்த வித குழப்பத்துக்கும் இடம் இன்றி இருவரும் ஏற்றுக் கொள்ளும் முகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.உதாரணமாக திருமணமோ,அல்லது தலாக் இது போன்றவை....
சரி கிரிமினல் வழக்கு என்றல்ல,இன்னபிற வியாபாரம் போன்ற சிவில் சட்டம் தொடர்பான விடயங்களில் கூட இந்திய முஸ்லிம்கள் ஷரியத்'ஐ பின்பற்றமுடியாது....ஏனென்னில் மேற்சொன்ன சில சிவில் சட்டங்கள்(திருமணம்,சொத்து போன்றவை) போக..இன்னபிற அனைத்திலும்,எனது ஹிந்து சகோதரனும் பிரதிவாதியா இருப்பான்,கிருத்தவனும் இருப்பான்...
இப்போது,ஒருவன் கொலை செய்தால்,ஷ்ரீயத் சட்டப்படி தலை போய்விடும்..சரி ஒரு முஸ்லிம் செய்தால் தலை எடுத்துவிடலாம் .கேட்க முடியாது..அதுவே ஒரு முஸ்லிமை ஹிந்து கொன்று இருந்தால் அப்போ பாதிக்கப்பட்டவன் முஸ்லிமாக இருக்க அவனுக்கு ஷரியத் சட்டத்தின் படி தீர்ப்பு சொல்வதானால் ஹிந்துவின் தலை இருக்காது..முஸ்லிம் திருடினால் கை இருக்காது..முஸ்லிமின் வீட்டில் திருடினால் ஹிந்துவின் கையும் இருக்காது..ஈவ்டீஸிங் பண்ணூனால்லா தாருமாரா தண்டனை இருக்கும் பரவா இல்லயா?
முஸ்லிம்களுக்கு ஓக்கெ.ஏன்னா இந்த மேட்டர்ல..பொதுவா இல்லனாலும் குறிப்பா முஸ்லிம்கள் மேல கை வெக்க மாட்டாங்கள்ல இந்த ஹிந்துதுவாவாதிகள்..
ஷரியத் சட்டத்துனால அதிகம் பாதுகாப்பு அடைவது முஸ்லிம்களானாலும்..பொதுவாக குற்றங்கள் குறைந்து எல்லாருமே நிம்மதியா இருப்போம்.நாளை குற்றங்களுக்கான தண்டனைகளை பார்த்துவிட்டு,ஹிந்துக்களும் வரவேற்கலாம்...
இப்பொ சொல்லுங்க ஷரியத் சட்டத்தை கிரிமினல் வழக்குகளிலும் கேட்கனுமா?கேட்கிறோம்...
அது இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று...
கப்பித்தனமா கேள்வி கேக்க கூடாது,,,சரியா?
அன்பு கூர்ந்து குரானை முழுமையாகப் படியுங்கள். உங்கள் மனச்சாட்சியை சுத்ந்திரமாகப் பேச விடுங்கள். குரானில் வரிக்கு வரி உங்கள் மனச் சாட்சிக்கு உடன்பாடானதாகத்தான் உள்ளதா, காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் பிற சமயங்கள், கலாசாரங்கள் மீது துவேஷத்தினை வளர்ப்பவையாகவும் சில உள்ளனவா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் உரிமையை உங்கள் மனச் சாட்சியிடம் விடுங்கள். அதன் பின் உங்கள் மீது மற்றவர்கள் கண்ணோட்டம் அமைவதன் நியாய அநியாங்களை மதிப்பீடு செய்யுங்கள்.
நான் குர் ஆன்'அ படித்திருக்கேன்.ஐயா நீங்க முதல்ல குரான பாத்து இருக்கீங்களா?என்னமோ படிச்சு முடிச்சமாதிரி பாடம்லா எடுக்குரீரே...ம்ம்..யாரோ ஏதோ சொன்னத வச்சுகிட்டு வந்து இங்க ஜல்லிஅடிக்க கூடாது.
காலத்திற்கு ஒவ்வாமையா இன்னக்கி உலகம் முழுவதும் 120கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.காலத்திற்கு ஒவ்வாததாக இருந்திருந்தால் அதன் வளர்ச்சி சரிந்து,காலப்போக்கில் அழிந்தல்லவா போய் இருக்கும்.
பிற சமய கலாச்சாரங்களை பழிப்பதாக குரானில் எங்கு எந்த வாசகம் இருக்கிறது?தயவு செய்து குறிப்பு தாருங்களேன்.அதுக்கும் பதில் சொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் அனுசரிக்கும் மதம்தான் அரேபியாவிலிருந்து வந்தது, உங்க்ள் கலாசாரம் இங்குள்ளதுதான். ஆனால் அதை மறப்பதும் மறுப்பதும் ஏன் என்று யோசியுங்கள். சில இஸ்லாமியர் இதனை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும்போது அவர்களை என்ன பாடு படுத்துகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
ஐயா இஸ்லாம் அரேபியாவில் இருந்து வந்ததல்ல..அது அரேபியாவில் புதுப்பொலிவு பெற்றது..அவ்வளவே.நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த கலாச்சாரம் அரேபிய கலாச்சாரம் அல்ல.அது இஸ்லாமிய கலாச்சாரம்.இஸ்லாம் ஆன்மீகம்,வாழ்வியல் என இரு தனிப்பாதைகளை கொண்டதல்ல..அது வாழ்வியலுடன் ஆன்மீகத்தை பிணைக்கிறது.இரண்டையும் பிரிக்கவியலாது இரண்டரக்கலந்த ஒன்றுதான் இஸ்லாம்.
சரி இந்திய கலாச்சாரம் என எதை சொல்கிறீர்கள் ஐயா? சிந்து சமவெளி கலாச்சாரத்தையா?ம்ஹும்...அது பார்ப்பனர்களின் கலாச்சாரம்.அது ஹிந்துக்களின் கலாச்சாரம் கூட இல்லை.இந்திய பாரம்பரிய உடைகளை அணிகிறோம்.இந்திய பாரம்பரிய உணவுகளை உண்ணுகிறோம்..இந்திய மொழி பேசுகிறோம்..இந்தியராகவே வாழ்கிறோம்.வெரென்ன பண்ணனும்.இதுல எங்க இந்திய கலாச்சாரத்த விட்டுட்டோம்?..
எங்களது மார்க்கம் சில வரைமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.அதை இந்திய அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு.அதன் முழு அனுமதியுடன் செய்கிறோம்..இதனால் யாருக்கு என்ன பாதிப்பு..?
தாங்கள் குறிப்பிடும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்??களான சல்மான் ருஷ்டி'யும் தஸ்லிமா நஸ்ரினும் தானே?...அவங்கல்லா,ஹிந்து மதத்துல உள்ள குருக்கள் தேவனாதன்,மற்றும் நித்தியை போன்றவர்கள்.அவர்களுக்கு ஹிந்துமக்கள்(ஹிந்துதுவாக்கள் அல்ல.) மத்தியில் இப்போது என்ன அந்தஸ்து இருக்கிறதோ.அதுதான் ருஷ்டிகளுக்கும் இஸ்லாத்தில்....அவ்வளவே...
சிறிதளவாவது சகிப்புத்த்ன்மையுடன் இருக்க நீங்கள் பழகினால் போதும். மேல் விஷாரம் (வேலூர் அருகில் உள்ளது) போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு ஹிந்துக் களின் நிலை என்னவென்பதை நேரில் கண்டறியுங்கள்.
ம்ம்.எவ்வளவுங்க...சகிப்புத்தன்மை வேணும் எங்களுக்கு...குஜராத்'ல,கர்ப்பிணிகளை கற்பழித்து,வயிற்று சிசுவை கிழித்தெடுத்து,தரையில் அடித்தும்,நெருப்பில் இட்டும் கொன்றவன்,எம் பெண்மக்களையும் ஆண்மக்களையும் பாலகன்களையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியவன்.வயதான முன்னால் எம் பி,இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பல்லாயிரம் பேரின் உறுப்புகளை சிதைத்து சித்ரவதை செய்து எரித்து நரகவேட்டை ஆடியவன்,எல்லா வக்கனையா பேட்டி குடுத்துகிட்டு.துளியும் தண்டனையின்றி வெளியில் சுத்துரானே,..அதையும் பாத்துகிட்டு கையாளாகாம இருக்கோமே.....இதைவிடவும் சகிப்புத்தன்மை வேணுமா உங்களுக்கு?
மேல்விஷாரம் அத பத்தி தெரியாதுங்க...ஆனா இந்தியாவுல நீங்க தேடித்தேடி ஒரு மேல் விஷாரத்த கண்டு புடிச்சு.கதைக்கிறீர்கள்...ஆனா இந்தியாவுல முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்கள் மேல்விஷாரமாத்தான் இருக்கு....
குஜராத்,ஒரிஸா,அஸ்ஸாம்(நெல்லி),மும்பை,கோவை,பாஹல்பூர்(பிஹார்),மீரட்...என இந்தியாவின் வடகோடியில் இருந்து தென் கோடிவரை பெரும்பாலான முஸ்லிம்களை திட்டமிட்டே இரண்டாம்தர குடிகளாக்கி வைத்திருகிறீர்களே....இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..
அன்புகூர்ந்து மீண்டும் த்மிழ்ஹிந்துவில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கடைசியா சொன்னீரே ஒன்னு,...அப்பப்பா?நான் நீங்க கேட்ட கேள்விகெல்லா இவ்வளவு டீடைல்ல பதில் சொல்ல வேண்டி இருக்கு..உங்க தளத்துல சும்மா ஹிந்துத்துவம்னாலே அங்க கருத்து காத்துல பறந்துடும்..இவ்வளவும் சொன்னா.....அனுமதிப்பது சந்தேகமே..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரர்களே..மேலே,நான் சொன்ன செய்திகள் அனைத்தும் எந்த ஒரு ஹிந்துவையும் முன்வைத்து பதில் சொல்லப்படவில்லை...ஹிந்துத்துவ சிந்தனை கொண்டு முஸ்லிம்கள் மீது சீற்றம் கொள்பவர்களை நோக்கியே பதில் தரப்பட்டுள்ளது...
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை..
நன்றி
அன்புடன்
ரஜின்

திங்கள், ஏப்ரல் 12, 2010

தமிழ் ஹிந்து தளத்திற்கு எனது வன்மையான கண்டனம்...

13 கருத்துகள் :
தமிழ் ஹிந்து தளம்.
இது பொதுவாக ஹிந்து மதம் பற்றிய செய்திகளை அலசும் ஒரு தளமாக தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாலும்.அவற்றில் அதிகபட்சமாக மற்ற மதங்களின் மீதான,குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் பற்றிய அதீத விமர்சனங்களை காணமுடியும்.அவற்றின் மீதான கோபம்,கண்டனம்,வன்மம்,வெறுப்பு,இவையெ அங்கு விரவி காணப்படுகிறது.
இந்த தளம் எனக்கு அறிமுகமானதுகூட அவ்வாறே.இஸ்லாம் குறித்த சில தவறான கண்ணோட்டம் கொண்ட கட்டுரைகளை நான் கண்ணுர நேர்ந்ததே,என்னை அந்த தளத்தின் தொடர் வாசகனாக்கியது.
சரி..எந்த மதத்தையும் விமர்சனம் செய்யலாம்,தவறான பார்வை இருக்கலாம்.கட்டுரைகள் எழுதலாம்..தவறல்ல..ஆனால் அதில் கண்ணியம் இருக்கவேண்டும்..அது சற்றே அங்கு வற்றி காணப்படுகிறது...
சரி..அது அவரவர் கையிருப்பை காட்டுகிறது.போகட்டும்.நமது தரப்பு நியாயங்களாவது அந்த அரங்கில் வைக்க அனுமதிக்கப் படுகிறதா என்றால்..அனுமதிக்கப் படுகிறது..எதுவரை..நமது கருத்து நியாயமானதாக இருந்தாலும்,அவர்களை சுடாதவரை அனுமதிக்கப் படுகிறது..
இது ஒரு ஹிந்து தளமாக ஹிந்து சமயம் பற்றி விவாதிக்கும் மன்றமாக இருப்பின்,அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்..இல்லை,நாங்கள் அனைத்து விடையங்களையும் விரிவாக விவாதிப்போம் என தாங்கள் சொல்வீர்களானால்...தவறல்ல...முழுவதுமாக வரவேற்கிறோம்..
ஆனால் அறிஞர் அண்ணா சொன்னது போல "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"என்பத்ற்கினங்க எங்களது கருத்துகளையும் எவ்வித திரித்தலும் இன்றி அனுமதிக்க வேண்டும்..ஆனால் அது அங்கு நடப்பதில்லை
சரி..சில மூடர்கள்..இழிவான வார்த்தை பிரயோகம் செய்து வசை பாடுவது வழக்கம்..அவை மட்டுறுத்தப்படுவது நியாயம்.எங்களை போன்ற எழுத்து கண்ணியம் பேன எண்ணுபவர்களையும்,நடுநிலையாக கேள்விகளை முன்வைப்பவர்களையும்.தவிர்த்தால்,எங்கோ தப்பு நடக்கிறது..
ஒன்று ஹிந்து மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் வலிக்கிறது.அதை மனம் ஏற்க மறுக்கிறது.அல்லது அதை அரங்கேற்றாமல் மறைக்கிறது..
இங்கே நடுநிலைமை, காற்றில் பறந்த வேட்டியாக்கி தங்களது மானமே போகிறது..
அப்படி நடுநிலை தவறிய தங்களின் கட்டுரை நடுநிலையுடன் இருக்கும் என்ன எண்ணுவது மூடத்தனமே அன்றி வேறில்லை என எண்ணுகிறேன்..
சில சமயங்களின் எனது கருத்தை அனுமதித்துள்ளீர்கள்.அது ஹிந்து மதத்தை தாக்காமல் இருக்கும் வரை,ஆனால் வேறு சில சமயங்களிலோ வக்கிரமாக எனது கருத்தை திரித்து,பொருள் மாற்றி,அதை எனக்கெதிராக திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்.???
அதை என்னால் பொருத்துக் கொள்ளவே இயலவில்லை.இத்தனை நாளும் ஒரு அயோக்கியர்களின் கூடாரத்திலா,நமது வாத்தை வைத்துக் கொண்டு இருந்தோம் என எனக்கே வெட்கமாக இருந்தது.
ஒரு கருத்து முரணாக,அல்லது தன்னை பாதிப்பதாக இருப்பினும் ஊடக தர்மத்தின் படி அதை அனுமதிக்கவே வேண்டும்..ஒருவேலை அடிக்கொருமுறை அவர்கள் சொல்லும் ஹிந்து தர்மத்தில் அது பற்றிய குறிப்பு இல்லையொ என்னவோ அதை அவர்கள் செய்வதில்லை..
சரி விரசமாக ஆபாசமாக கருத்துகள் வரும்.அவற்றை கேள்விகணக்கின்றி தவிர்த்துவிடலாம்...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால்..ஒருவனது கருத்தை தடுக்க அல்லது அனுமதிக்கவே தளத்தினருக்கு உரிமை உள்ளது.அது தவிர்த்து,அவனது கருத்தில் கைவைத்து,அதை திரித்து விளையாடுவது..என்னை பொருத்தவரை விபச்சாரத்துக்கு ஒப்பானது...
சரிதான் இதுவும் ஒருவித கருத்து விபச்சாரம் தானே.ஒருவனது தனிப்பட்ட கருத்து என்பது அவனுக்குறியது,அதில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை.அப்படி இருக்க அதில் கைவைத்து கபடி ஆடுவது.இழிவிலும் இழிவான செயல்...எனக்கு இதுக்கு மேல கடுமையான வார்த்தை,கண்ணியமா வரமாட்டேங்குது...
சரிடா அப்படி என்னத செஞ்சிடானுக,இந்த பொலம்பு பொலம்புரன்னு கேக்குரீங்களா?எனது கருத்தை பலமுறை இந்த தளத்தில் வைக்கும் போது காக்கா வந்து அகஸ்மாத்தா தூக்கிட்டு போய்டுது...சரி போனாலும் ப்ரவாயில்லன்னா,அந்த கருத்து மேலயே இந்த தமிழ்ஹிந்து தளத்தோட எடிட்டர் காக்கா கக்கா போய் அதை கையில எடுத்து என்னோட பின்னூட்டம்னு போட்டுடுது..அது தா காரணம்..
இங்கே..எனது ஒரிஜினல் பின்னூட்டமும்,ஹிந்து தளத்தில் திரித்து வெளியிடப்பட்ட பின்னூட்டமும் தங்களது பார்வைக்கு....
இது என்னோட பின்னூட்டத்தின் பகுதி:
ஏன் இவ்ளோ வெருப்ப எங்க மேல உமிழ்ரீங்க...நா ரொம்ப நாளா இந்த தளத்தில் வாசிப்பாளனா இருக்கேன்.ஆனா,வந்துட்டு வருத்ததோடதா போவேன்.என்ன காரணத்துக்காக நான் சார்ந்துள்ள மார்க்கத்தின் மீது இங்கு சாணியடிக்கப் படுகிறது.நான் கண்ட வரை அப்படி ஒன்னும் சொல்லவில்லையே.எவனொ ஒருவன்,ஏதொ ஒரு காரணத்துக்காக எனது மார்க்கத்தை முன்னிருத்துகிறானென்றால்,அதை இங்கு இவ்வளவும் படித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?என வருத்தப்படுவேன்....
ஹிந்துக்களால் செய்யப்பட்ட எத்தனையோ அநீதங்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் ஆரா வடுவாக இருப்பினும்,அதை என்னால் ஹிந்து தீவிர வாதம் என முட்டால் தனமாக சொல்ல தோன்றவில்லை.ஏனென்றால்,நான் என் ஹிந்து மக்களை பார்க்கிறேன்.அவர்களோடு உறவாடுகிறேன்.அவர்கள் அப்ப்டி அல்ல என எனக்கு தெரிகிறது.மாறாக இது மதவாத சக்திகள்,மதத்தை கொண்டு,கிளர்ச்சி செய்து,மக்களுக்கு மத்தியில் ஆதாயம் தேட துடிக்கும் கயவர்களின்,அரசியல் பொருக்கிகளின் செய்கை என அறிகிறேன்,செய்பவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக,நான் ஹிந்து மதத்தை பழிக்க எத்தனிக்க அவ்வளவு மூடனும் அல்ல.
குஜராத் சம்பவத்துக்கோ,பாபர் மசூதி இடிப்பு,அப்ரொ வந்த கலவரங்களுக்கோ, இங்க என் பக்கத்துள இருக்ர என் நண்பன நா குத்தம் சொல்ல முடியுமா?அது எவ்ளோ பெரிய பைத்தியகாரத்தனம்...
அப்டி இருக்க... இஸ்லாமிய பயங்கரவாதம் என மதத்தை முன்னிருத்தும் போது,எனது ஹிந்து சகோதரன் இயற்கையாகவே..நீங்கள்லந்தானடா?..அப்டீன்னு என்ன நோக்கி பாக்க வெக்கிரீங்களே,ஏன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தமிழ்ஹிந்து தளத்தில் மேலே நான் பதிந்த பின்னூட்டத்தில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் மட்டும் லாவகமாக நீக்கப் பட்டு,தங்களது தர்மத்தை காக்க நடந்த முயற்சியின் வெளிப்பாடாக அவர்கள் மட்டுறுத்தி பின் வெளியிடப்பட்ட பின்னூட்டம்...
படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..
இதையாவது ஒரு வகைக்கு ஏற்றுக் கொள்ள(முடியாது)லாம் என்றால் அடுத்து வருவது இருக்கே..எப்பா எங்கதா இத தொழில் சுத்தத்த கத்துகிடீங்களோ தெர்ல...
மூச்சுக்கு 300 தடவ சொல்ர ஹிந்து தர்மமா இருக்குமோ...இருக்காது..அப்படி நான் சொன்னா,அது நீங்க செய்ர அதே அவதூரு பிரச்சாரத்த நானும் செய்ரமாறி ஆயிடும்..எனது மார்க்கம் ஒருபோது அதை கற்றுத்தரவில்லை..வன்மையாக கண்டிக்கிறது....
இது தங்களது அயோக்கிய தனத்தின் உச்சமே...எனக்கு தெரிந்த வரை,..இன்னும் இருக்கலாம்..
சரி மேட்டருக்கு வருவோம்...
இது தமிழ்ஹிந்து தளத்தில் காசியை பற்றி சன் டீவீ வெளியிட்ட நிஜம் எனும் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் நான் பதிந்த எனது ஒரிஜினல் பின்னூட்டம்....
- - - - - - - - - - - - - - - - - -
அன்பு சகோதரர்களுக்கு.

காசியில் நடக்கும்,சில விஷயங்களை சுட்டி காட்டி,சன் டீவி,ஒரு நிகழ்ச்சியை தயாரித்து சில வாரங்களாக ஒளிபரப்பியது.இது காசியில் நடக்கும்,அரசுக்கு தெரியாத(தெரிந்த) சில தவறுகளாகும்.அதுவல்லாது அங்கு கடவுளின் பெயரால் நடக்கும் சில மூட பழக்கவழக்கங்களையும்,வேறு சில முட்டால் தனக்களையும் சுட்டி காட்டுவதாய் இருந்தது.

இதை விமர்சித்து சில ஹிந்து தளங்கள் எழுதி இருந்தன.சன் டீவியின் உண்மையான முகம் என.அவர்கள் ஹிந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து,அவர்கள் மததின் மீது சேறு பூசுவதாக.

சரி இருக்கட்டும்,தமிழகத்தின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமாக திகலும் சன் குழுமம்,அடிப்படையில் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படுவது.இந்தியாவில் மட்டுமல்ல,உலகம் முழுவதும்,அதனை பெருவாரியாக பார்க்க கூடியவர்கள்,ஹிந்துக்களே.

இது போன்ற,ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினால்,அதன் மூலம் கிடைக்கும் விழிப்புணர்வை காட்டிலும் எதிப்பலைகள் அதிகம்,என்பது,சராசரி மனிதனுக்கு வெளிச்சம்.அப்படி இருக்க,முதல் நிலை நிறுவனத்தை நடத்திகொண்டு இருக்கும் ஒருவர்,தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றியே,தவறாக நிகழ்ச்சி ஒளிபரப்புவது,எதற்கு?

அவர்கள் ஒன்றும் ஹிந்து எதிப்பாளர்கள் இல்லயே.அப்படியே இருந்தாலும்,அது அவர்களின் தொழிலை பாதிக்கும் என்பதால்,அதை அவர்கள் செய்யாது தவிர்க்கவே செய்வார்கள்.

சரி.எப்போதும் இயல்பாய் வரும் குற்றசாட்டை,எடுத்து கொள்வோம்.பணத்திற்காக??

இது இவர்களை பொருத்தமட்டில் ஒவ்வாத விவாதம்.இந்தியாவின் மிகபெரும் 20 பணக்காரர்கள் பட்டியலில் அம்ர்ந்து இருக்கும் இவர்கள்,இந்தியாவின் ஒரு பெரும் பகுதியான தமிழகத்தை ஆளும் இவர்கள்,தான் எண்ணியதை அந்த மாத்திரத்திலே செய்து முடிக்கும் பலம் பொருந்திய இவர்க்ள்,யாரிடம் போய் பணத்திற்காக நிற்கப்போகிறார்கள்.தெரியவில்லை...

அதுவல்லாது,அவர்கள் அந்த ஒரு நிகழ்ச்சிக்கு செலவிடும் அந்த தொகை அத்தனை பெரியது.அதை அவர்களே,வர்த்தக விளம்பரம் மூலம் எளிதாக பெரும் பட்சத்தில்,ஹிந்துக்களின் நிறுவனங்களே அனைத்து விளம்பரமும் தருகின்றனர்.

அப்படியிருக்க பணத்துக்காக என்ற அந்த வலுவற்ற குற்றசாட்டும் இங்கே வலுவிழக்கிறது.

இன்னொரு முக்கியமான (பைத்திய) குற்றசாட்டை முன்வைப்பர்கள்.சிருபான்மையினரை கவர் பன்ன...

ம்ம்ம் எவனோ எந்த நாட்டிலோ சிலரை கூட்டி தீவிரவாதம் செய்தான் என்பதற்காக இந்தியாவில் உள்ள மதரசாக்களை தாங்கள் ஒட்டுமொத்த,தீவிரவாத பயிற்சி கூடம் போல குற்றம் சாட்டும்,இத்தனை வீடியோ ஆதாரங்களுடன் அவ்ர்கள் காட்டும்போது,அதில் 100% அல்ல,50% மேனும் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது…

இந்திய மதரசாக்களில் என்ன வன்முறை பயிற்சி நடக்கிறது என தாங்கள் சொல்லலாமே?அவர்கள்தான் பீதியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.சரி.உங்களுக்கென்ன.ஒருவேலை,காசியை தாங்கள் நம்பி இருப்பது போல,மதரசாக்களை நாங்கள் நம்பியிருந்தால் அதில் எங்களுக்கு தெளிவு பிறக்குமே.

http://www.tamilhindu.com/2009/12/kasi-nijam-true-face-of-sun-tv/
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்..
இங்கே சிவப்பெழுத்துகளில் உள்ள எனது பின்னூட்டத்திற்கும்,அவர்கள் கைவைத்து வக்கிரம் புரிந்து,வன்புணர்ந்து வெளியிட்ட பின்னூட்டதையும் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு கேடுகெட்ட செயலை செய்து விட்டு..ஹிந்து தர்மம் பற்றி அதே வாயாலே...பேசுகிறார்கள் என்று...
மேலே சொன்ன அத்துனை நியாயமான காரணங்களை விடுக்க தெரிந்தவர்களுக்கு,இதையும் விட்டிருக்கலாம்.ஆனால் இவர்களின் குயுக்தி சும்மா இருக்குமா என்ன?அதனால் தான் வேலையை காட்டிவிட்டார்கள்...
நீ என்ன வேனாலும் சொல்லிட்டு போ..நாங்க இப்படித்தான் என தெளிவாக நிரூபித்து விட்டார்கள்...
ஆனால் எனது பின்னூட்டத்திற்கு பதில் தரும் ஹிந்துக்களின் பதில் எத்துனை வக்கிர சாடலாக இருந்தாலும்,,,அதை மனங்குளிர்ந்து வெளியிடுவார்கள்...
இவர்களது இந்த செயலை மக்கள் அறியவேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்,,,
இவர்களது இந்த செயலை கண்ணுரும் போது...இவர்கள் சுதந்திரம் வாங்கிதந்த காந்திக்கு துப்பாக்கி குண்டை பரிசளித்த ஹிந்துத்துவா கும்பலாக இருக்குமோ என சந்தேகிக்க தோன்றுகிறது...அவர்களே இது போன்ற செய்கைக்கு முழுத்தகுதி பெற்ற கனவான்கள்..என்ன சந்தேகம் அவர்களேதான்....
நன்றி
அன்புடன்
ரஜின்

வியாழன், அக்டோபர் 15, 2009

இஸ்லாம் பெண்களையும்,குழந்தைகளையும்,போரில் கொல்ல அனுமதிக்கிறதா?....

கருத்துகள் இல்லை :
சகோதரர் திருச்சிக்காரன்(சுந்தர்) அவர்களது கேள்வியும்,எனது பதிலும்....

//இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் - புகாரி, 3012).//


//இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//
//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//
எனது பதில்:


சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாணவனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...
போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை....
நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.


இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் யூத கிறிஸ்தவர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்...
இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,


இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்வர்.பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது, இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.


எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்... 


//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//


இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.


அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945 



மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்....


மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்....


மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013.....
ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை....


அவை:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "கண்டித்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3014


 இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "தடைசெய்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3015


தாங்கள் மேற்கோல் காட்டும் அந்த ஹதீஸை அடுத்தே,மேலே நான் குறிப்பிட்டு இருக்கும் 3014,3015 ஆகிய ஹதீஸ்கள்,முக்கியத்துவத்துடனே,பதியப்பட்டுள்ளது.
இது முந்தய ஹதீஸை தவறான உதாரணமாக மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது,என்ற கருத்தை  தாங்கி நிற்கிறது....
சகோதரரே,இந்த நிலை,எல்லா காலகட்டங்களிலும்,வாழும் சமூகத்தினருக்கு விதிவிளக்காக அமைவதே......அதை கருவாக கொள்வது அறியாமையே.....அறிவுடமையாகாது......




சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள்,அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்...


நன்றி


அன்புடன்
ரஜின்

செவ்வாய், அக்டோபர் 13, 2009

செல்லகிளி அவர்களுக்கு பதில்....

கருத்துகள் இல்லை :

அன்புள்ள செல்லகிளி அவர்களுக்கு,
நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு இவ்வளவு மெனக்கட்டு,குர் ஆன் வசனத்தை எல்லாம் மற்றி எழுதி,எனக்கு விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்...தாங்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விக்கு,இதோ பதில்..... 


தாங்கள் சொல்ல வந்தது,
குர் ஆனில்,(மாற்று மதத்தவர்களுடன் போர் புரியும் போது அவர்களை வெட்டுங்கள்,என சொல்வது போல்,பிற மத வேதங்களில்,முஸ்லிம்களை பற்றி சொல்லப் பட்டு இருந்தால்..அதை நீங்கள்(அதாவது என்னை) பாராட்டி வரவேற்பீர்களா?.....இது தானே...


இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்...இஸ்லாமே அத தான் சொல்லுது.....
முதலில் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்....


இஸ்லாத்தில் போர்:


இஸ்லாத்தில் போர் ஆனது,அடிப்படையாக,சில காரணிகளை கொண்டு அமைகிறது...
1. இஸ்லாதிற்கு எதிராக சூழ்ச்சி,செய்து,முஸ்லிம்களை அழிக்க நினைப்பவர்களுடன் போர்.
2. ஒரு சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள்,பெரும்பான்மையினரால்,பாதிக்கப்படும் போது,அவர்களை சகமுஸ்லிம்,எனும் அடிப்படையில் காக்கும் பொருட்டு,அவர்களுடன் போர்.
3.மற்ற சில காரணங்கள்,அக்கால அரசுகள்,கொண்டிருந்த காரணங்களுடன் பொருந்தக் கூடியதாகவே அமையும்.(உதாரணம்.ஒரு நாட்டின் செய்தியை,எடுத்து செல்லும்,தூதுவனை,பிற நாட்டினர்,கொன்றுவிட்டால்,கொன்றவர்கள்,தூதுவனின் நாட்டினறை பகிரங்கமாக போருக்கு அழைப்பதற்கு சமம்.)


(இந்த காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.)


இப்படிப்பட்ட காரணங்களுக்குரியவன்,நிச்சயம் முஸ்லிமாக இருக்க முடியாது...


சரி...
இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு முஸ்லிம், ஒரு சமூகத்தின் மீது போர் தொடுக்க செல்லும் போது,அவர்களிடம் ஒரு நிபந்தனை முன்வைக்கப்படும்.
எதிரிகளை நோக்கி நீங்கள்,அல்லாஹ்வையும்,அவனது தூதரையும்,ஏற்றுக்கொண்டால்,போர் தவிர்க்கப் படும்.ஏற்க மறுத்தால்,முஸ்லிம்கள்,போர் புரிய வந்த காரணத்தின்,அடிப்படையில்,நீங்கள் கீழ்படிந்து,ஜிஸ்யா செலுத்தும் வரையில்,அவர்களுடன் போர் புரிவோம் என்பதாகும்.....


வரி...இஸ்லாத்தில்,இரண்டு வகை மட்டுமே....
ஒன்று,ஸகாத்(ஏழை வரி),இது இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீது கட்டாயக் கடமை....
மற்றது..ஜிஸ்யா(பாதுகாப்பு வரி),இது இஸ்லாத்தை ஏற்காதவர்கள்,இஸ்லாமிய ஆட்சிக்குபட்டு  இருந்தால்,அவர்கள் மீது விதிக்கப் படுவது....


இவர்கள் ஜிஸ்யா தர மறுத்தால்,அவர்களுடன் போர் புரிய இஸ்லாம் சொல்கிறது... 


ஸகாத்.
இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று...
ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.
அப்படி கடமைப்பட்டவர்,அதை தர மறுக்கும் போது,அவர்களுடனும் போர் புரியவேண்டும்,என்பதை கீழே பதியப்பட்ட ஹதீஸ் உறுதி செய்கிறது.


நபி (ஸல்) அவர்கள் மரணித்து,அபூபக்கர் (ரலி) (ஆட்சிக்கு)வந்ததும்,அரபிகளில் சிலர்,(ஸகாத்தை மறுத்ததின் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர்.(அவர்களுடன் போர் தொடுக்க)அபூபக்கர் (ரலி) தயாரானார்.உமர்(ரலி),'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர்,தன்  உயிரையும்,உடமையயையும் என்னிடம் இருந்து காத்துக்கொண்டார்,தண்டனைக்குறிய குற்றம் புரிந்தவரைத்தவிர,அவரின் விசாரணை அல்லஹ்விடமே உள்ளது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது,நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும் என்று கேட்டார்.அபூபக்கர்(ரலி), உமரை(ரலி) நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக,தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன்.ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்,
அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம்,(ஸகாததாக)வழங்கி வந்த  ஓர் ஒட்டக குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட,அதை மறுத்ததற்காக இவர்களுடன் நான் போரிடுவேன்,என்றார்.இது பற்றி உமர் (ரலி) அவர்கள்,அல்லஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கரின் இதயத்தை(தீர்க்கமான தெளிவை பிரும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார்.அவர் கூறியது சரியானது தான் என நான் விளங்கிக் கொண்டேன்.என்றார்.
ஸஹீஹுல் புஹாரி: 2:1399,1400


இதுவல்லாத,இன்ன பிற,கடுமையான ஷரீஅத்,சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு தானே....
அவர்களின் தவறுக்கு,தண்டனை தரும்,உலகின் கடுமையான சட்டங்கள் தானே அவை....


இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.
அதனைக் கொண்டு,அவர்களின் உயிர் உடமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது...
அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது,அவர்களுக்காக போரிடுகிறது.
-----------------


மேற்கண்ட காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.


நன்றி,


அன்புடன்
ரஜின்

சனி, அக்டோபர் 03, 2009

தமில் ஹிந்துவிற்கு பின்னூட்டம்...

கருத்துகள் இல்லை :

புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

எனது பதில்...
"பிற்படுத்தபட்டு கொடுக்கப்படும் நீதீ,மறுக்கப்பட்ட நீதீ"...
இது யாரோ சொல்லி கேட்டுருகிரென்..யார் சொன்னாலும்...உண்மைதான்... ஜெயேந்திரர்,தப்பு செய்து இருந்தால்,தண்டிக்க பட வேண்டும்... அவர் நிரபராதியாக இருந்தால்...இத்தனை காலம் அவர் பட்ட கஷ்டம் ஈடுசெய்ய முடியாதது...
இன்று,ஜெயேந்திரர்,நல்லவர் என்று நீங்கள் மட்டும் தான் சொல்றீங்க..மத்தவங்களுக்கு அவர் குற்றவாளி தான்.ஏன் என் பார்வைக்கும் கூட...அப்போது நடந்த சம்பவம்,ஆதாரங்கள்,அனைத்தையும்,பார்க்கும் பொது..
ஆனால் நம் நாட்டு சட்டத்துல ஓட்டை இல்ல,ஓட்டை எல்லாம் சேர்ந்த்து தான் நம்ம சட்டம்கிற மாதிரி,கேச இலுத்தடிச்சு,நடக்கிர 10 ஆண்டுகளில், சாட்சிகள், கலைக்கப்பட்டு,தீர்ப்பு எந்த பக்கம் வெனும்னாலும்,மாறலாம்...
இதில் பணபலம், ஆள்பலம் வெற பயன்படுகிரது... இதுக்கெல்லாம் அப்புரம் ஒருத்தன், குற்றவாளின்னு,அல்லது நிரபராதின்னு,ஒரு தீர்ப்பு வருது...அது 50% கூட சரியானதா? எனக்கு சந்தெகம் தான்... என்னபொருத்தவரைக்கும், உடனடியான விசாரனை,மற்றும் சரியான தீர்ப்பு,அதில்அவன் ஹிந்து, முசுலிம்,கிரித்தவன் என்ற பாரபட்சம் காட்டாமை,இருந்தால் மட்டுமே... சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்...
இது எனது பொதுவான கருத்து....எந்த சந்தர்பத்திலும் மாற்று கருத்து இல்லை..
இன்னக்கி நீங்க எல்லாம் ஜெயேந்திரர் அப்பாவி,நல்லவர்,அது பொய் கேசுன்னு,சொல்ரீங்க...ஆனா அவர் மத்தவங்க கண்ணுக்கு அவர் குற்றவாளி தான்...இல்லயா?...
அதுபொலதான்,"சில கேசுல"(எல்லாத்திலும் அல்ல),எத்தனையோ முசுலிம் அப்பாவிகள்,கைது செய்யப்படும் போது,நாங்க அவங்கள ஆதரிச்சு பெசுனா.... ஒடனே...முசுலிம்கள்,தீவிரவாத்த ஆதரிக்கிராங்கன்னு பெசவும்,எலுதவும் ஆரம்பிச்சுடுரீங்க...என்ன செய்ய.....
//ஒரு புறம் இஸ்லாமின் பெயரால் கொலை வெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டியது மறுபுறம் வந்து இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று சொல்வது என்று இரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள் முதலில், அதன் பின்னர் யாருமே இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பதத்தையே பிரயோகப் படுத்த மாட்டார்கள்//
மெல் குறிப்பிட்டுள்ளது"அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்"என்ற பதிவில் நான் இட்ட பின்னூட்டதிற்கு என்க்கு கிடைத்த பதில்...
ஏன்.... பிரக்யா சிங்க்கு ஆதரவா ஹிந்துக்கள்,குரல் கொடுக்களயா?..ஏன் அத்வானி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கூட பதரினார்கள்...அப்ப அதெல்லாம் தீவிரவாதம் கெடயாது...ஆதரிக்கிரது தப்பும் இல்ல....
நீங்க ஆதரிச்சு பெசுனா,அது நியாயம்...நாங்க ஆதரிச்சா,அது அநியாயமா?.....
நீங்க சொல்றீங்க..தனிமனித தவறுக்கு ஹிந்து மதம் பாதிக்க படுகிறதுன்னு...சரிதான்... அதேதான்,இஸ்லாம் மதத்துக்கும்...எவனோ செய்ர தப்பு, அத மதத்தோட செர்த்து "இஸ்லாமியப் பயங்கரவாதம்"னுதானே நீங்கள்ளாம் சொல்ரீங்க...
"அப்ப இத அடிப்படையா வச்சு,மடாதிபதியே கொலை செய்ராறு,பிரக்யா சிங் என்ற பெண்துறவியே குண்டு வெக்குராங்க...ராமர் பேர சொல்லிதான்,குஜராத்துல கருவருத்தாங்க..ரத யாத்திரைன்னு சொல்லித்தான்,மசூதிய இடிச்சாங்க....அப்ப ஹிந்து மதம் பயங்கரவாதத்த தான் செய்ய சொல்லுதுன்னு நான் சொன்னா,,,அது சரியா?....."
இது எல்லாம்,ஓட்டு பொருக்கும் அரசியலுக்கும்,தனிமனித லாபத்துக்கும் செய்ற,கொடூரங்கள்....
ஆனா இதுவே இஸ்லாமிய பெயர்தாங்கிகளால், செய்யப்படும்பொது...அது இஸ்லாமிய தீவிரவாதம்ன்னு ம(மா)க்கள் முன்னிலையில் ஊடகங்களால் வைக்க படும்போது....ஆமான்னு சொல்றீங்க.....
ம்ம் பாருங்க....சாத்தியம் இல்லாத ஒன்னு..."இந்தியாவில் தாலிபன் ஆட்சி - ஒரு பயங்கரக் கனவு"(நல்லான் ரெம்ப பீதியாகி,பேதியான செய்தி அவர் பதிவிலேயெ தெரியுது....)
இந்த கட்டுரை சொல்ல வருவது என்ன?........ இது நடக்க போகுதுன்னா?..இல்ல... இது தான் நடக்குமா?....
தாலிபான்ல என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்குது,அது தீவிரவாத ஆட்சி, தாலிபான்கள் அரசியல் காரணங்கலுக்கு உருவாக்கபட்டவர்கள்...இப்போ அரசியல் காரணங்கலுக்காக அழிக்கப்படுகிறார்கள்....
எல்லாமே...எல்லாருக்கும் தெரியும் சார்...எதுவும் நான் வந்து உங்களுக்கு சொல்ல வெண்டியது இல்ல.....
இருந்தாலும்,எதுக்கு இந்த கால்ப்புண்ற்சி....இப்பொ இந்த("இந்தியாவில் தாலிபன் ஆட்சி - ஒரு பயங்கரக் கனவு") கட்டுரைக்கு தேவை என்ன?
ஒன்னே ஒன்னுதான்...ஹிந்துக்கள் மத்தியில,இஸ்லாமியர் பத்தி இருக்குர கொஞ்ச நஞ்ச நல்லெண்ணமும்,சுத்தமா அழிக்கப்படணும்....அத தவிர வேற எந்த நோக்கமும் இருக்க முடியாது...
நட்புடன்
H.ரஜின் அப்துல் ரஹ்மான்.

Counter

பிற பதிவுகள்