ஞாயிறு, ஜூலை 31, 2011

இனிய ரமலான்!!!

7 கருத்துகள் :

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)


இனிய ரமலான்!!!’...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச் சகோதர சகோதரிகளே...இதோ ரமலான் எனும் அருள்வளம் பொருந்தியதொரு மாதம் நம்மை அடைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவருடனும் உரையாடுவதில்,எனது உள்ளக்கிடக்கை பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்...

வியாழன், ஜூலை 14, 2011

இஸ்லாமும்,அடிமைகளும்!!!...

16 கருத்துகள் :

ராஜா வேலை முடித்து,கம்பெனி பஸ்ஸில் வந்து இறங்கி,எப்போதும் போகும் டீக்கடைக்குள் நுழைகிறார்.அங்கே சற்றுமுன் வந்து சேர்ந்த அவரது நண்பர் அப்துல்லா அப்போதுதான் டீ சொல்லிவிட்டு மாலைமலரை புரட்டிக் கொண்டிருக்க,..பேச்சு ஆரம்பிக்கிறது....


ராஜா:என்ன மாப்ள இன்னக்கி சீக்கிரம் வந்துட்டாப்ள இருக்கு...


அப்துல்லா:அட! வா மாப்ள!..(தம்பி இன்னோரு டீ’ப்பா,..சக்கர ஜாஸ்தி)... உன்னப்பத்திதா நெனச்சுக்கிட்டு இருந்தேன்..என்னடா பயள இன்னும் காணோமே,எப்போவும் நமக்கு முன்னாடியே வந்துருவானேன்னு...சரி போவட்டும்,வேலை எப்டி போச்சு இன்னைக்கு?..

புதன், ஜூலை 13, 2011

மும்பை வெடிகுண்டு தாக்குதல் - வன்மையான கண்டனங்கள்!!!

4 கருத்துகள் :
இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.







இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டை கூறு போட நடத்தப்பட்ட கொடூரமான மற்றுமொரு தாக்குதல்!...மாலை வேலை முடிந்து வந்ததும்,கேள்விப்பட்டு டீவி முன் அமர்ந்தேன்...அனைத்து சேனல்களும் முக்கியச் செய்தியாக இதை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன..பார்க்க சகியாத காட்சிகள்..உயிரிழந்தவர்கள் 18 பேர் என சொல்லிக்கொண்டிருந்தனர்...

மனதை உறையவைக்கும் இத்தகைய தாக்குதல்களை நடத்திவிட்டு,எங்கோ ஹாயாக இருந்துகொண்டிருக்கும் அந்த கொடூரர்கள் யாராக இருப்பினும்,கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட்டு,அடுத்து இது போன்றதொரு தாக்குதல் நிகழாதவாறு கட்டமைப்புகளை வழுப்படுத்தவேண்டும்...

பொதுமக்கள் மீதான இத்தகைய கொடூரத்தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த மிருகங்களை எதைக்கொண்டு தண்டிப்பது???

உயிருக்கு உயிரான தங்களது குடும்ப உறவுகளை இழந்து வாடும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு,ஆழ்ந்த அனுதாபங்களை சொல்வதை தவிர வேறொன்ரையும் மனம் சிந்திக்கவில்லை...

இது போன்ற தாக்குதல்களை நடத்தத் துணியும் உள்நாட்டு வெளிநாட்டு தீய சக்திகளை,நாம் ஒன்றுபட்டு முறியடிப்போம்,...

பொதுமக்கள் மீதான இத்தகையா தாக்குதல்களுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்....

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32

அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்