ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஒரு பயணமும் பரிணாமமும் - ??????களும்

7 கருத்துகள் :


காலைல எழுந்ததே லேட்.. வேகவேகமா குளிச்சு ரெடியாகி ஆஃபிஸ் போனாலும் கொரஞ்சது ஒன் ஹவர் லேட்டாகாம ரீச் பண்ண முடியாது. கம்பெனி பஸ்ஸவிட்டா அப்ரம் மெட்ரோ தான்.கெளம்பினா 15 நிமிஷம் வாக்குக்கு பெறகு மெட்ரோ ஸ்டேஷன். போர வழியிலயே காலை,மதிய உணவுகளை திரட்டிக்கொண்டு,ஸ்டேஷனை அடைய 20 நிமிஷம் ஆகிவிட்டது. கார்ட் ஸவைப் பண்ணி உள்ள போனா.. செம கூட்டம்.. என்னப் போலத்தா போல எல்லாரும்ன்னு நெனச்சுட்டு இருக்கும் போதே அறிவிப்பு..

(அர்ரஜா அல்இத்திபாஹ் அல் கிதாமுல் முத்தஜத் இலா மதீனத்துல் லுபையித் துஃகிய்யா ஸயெசித் இலா ரசீதுல் ஹூர் : The train to Dubai health care city will arrive at Creek Platform) இந்த அறிவிப்பை கேட்டதுமே இயல்பாய் மக்கள் கூட்டம் வாசலை நெருங்கியது. அறிவித்து முடிக்க, சரியாக ட்ரெயினும் வந்தடைந்தது.

மக்கள் கூட்டம் ட்ரெயினிலும் ததும்பி வழிந்தது! வேரவழி இல்ல போயித்தான் ஆகனும்.. ஒரு வழியா எனக்கு 1x1ft அளவுக்கு நிக்கிறதுக்கு மட்டும் இடம் கெடச்சது. ஸ்ஸபா.... இதாவது கெடச்சதேன்னு நிம்மதி...

(அல் அபுவாபுத் துஃஹ்லாத் : doors closing)ஆட்டோமேடிக் வாய்ஸ் கெய்ட் சொல்ல, அத்தோடு கதவும் அடைக்கப்பட்டு வண்டி கிளம்பியது.அடுத்த ஸ்டேஷன் அண்டர் க்ரவுண்டில் இருப்பதால், ரயிலானது மண்புழு போல லாவகமாய் பூமிக்குள் நுழைய, வெளிப்புற வேடிக்கைகள் மறைந்து,சன்னல் கண்ணாடிகள் என்னையே பிரதிபலிக்க..., ரயிலின் உட்புறம் பார்வை விரிந்தது.

புதன், டிசம்பர் 14, 2011

YOUSUF (PBUH) HISTORY - COMPLETE pdf

6 கருத்துகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாறு..... முழுமையான பாகம்...pdf

தர்ஜுமா டாட் காம் வெளியிட்ட 65 பாகங்கள்,மூன்று மொழிகளில் உள்ளதை.. தமிழில் மட்டும் ஒரே தொகுப்பாக்கி மின்னூல் ஆக்கப்பட்டுள்ளது...

முழுமையான குர் ஆன் ஆதாரத்துடன் சிறப்பாக இருந்ததால் அனைவருக்கும் அறியச்செய்ய சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது....

இந்த ஆதாரப்பூர்வ வரலாறானது அல்குர் ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டது.நபி (ஸல்) அவர்களை பொய்ப்பிக்க யூதர்கள், நபி யூஸுஃப் (அலை) அவர்கள் குறித்துகேட்டபோது, அல்லாஹ் நபி (ஸல்)அவர்களுக்கு அத்தியாயம் பன்னிரண்டு யூஸுஃப் ஐ வஹி மூலம் அறிவித்து,யூஸுஃப் நபி அவர்களின் முழுமையான வரலாற்றை குர் ஆன் மூலம் வெளிப்படுத்தி,அவர்களை உண்மைப்படுத்தினான்..

நபிமார்களின் வரலாறு பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கே தெரியாத நிலை இருக்க,இதை மேலும் எளிமைப்படுத்தி,முழுமையாக வெளியிடும் வாய்ப்பை வழங்கிய வல்லோன் அல்லாஹ்வுக்கும்,தொகுக்க உதவிய தர்ஜுமா டாட் காம் தளத்தாருக்கும் எனது நன்றியை நவின்றவனாக,இதை பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

இதன் மூலம் குர் ஆனில் உள்ள அத்தியாயம் யூசுஃப் குறித்த தெளிவான விளக்கத்தையும் இதை படிக்கும் போது பெற்றுக்கொள்ளலாம்...ஒரு நபியுடைய வரலாறு தெரிந்ததாகவும் ஆச்சு...

பதிவிறக்க சுட்டி : YOUSUF (PBUH) HISTORY - COMPLETE pdf

பதிவிறக்க பக்கத்தில் நீல நிறத்தில் இருக்கும் DOWNLOAD பட்டனை க்ளிக் செய்யுங்கள்

இன்ஷா அல்லாஹ் படித்து, பகிர்ந்து கொள்ளுங்கள்....

அன்புடன்
ரஜின்

செவ்வாய், டிசம்பர் 06, 2011

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

14 கருத்துகள் :
கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகளும், அந்த போதையின் விளைவும்.


அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

அழகு..இன்று இதுதான் பிரதானமாக பெண்களின் மீது ஆளுமை செழுத்தும் வார்த்தை. முன்னெல்லாம் கொஞ்ச நேரம் கண்ணாடி முன்னாடி நிற்க முடியாது,அம்மாகிட்ட இருந்து கடுகுவெடிக்கும் வார்த்தைகள் வந்து விழும். பதில் சொல்லமுடியாது.ஆனால் இன்று அவர்களுக்கு பதில் தயாராகி வந்துவிட்டது. ஆம் “கான்ஃபிடண்ட்”. அதாவது தன்னம்பிக்கை. அழகைக்கூட்டி, தன்னை பிறர்க்கு எழிலாய்க் காட்டி தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறார்களாம் இந்த அப்பாவி பெண்கள்.

எங்கிருந்து வந்தது இந்த வார்த்தை? சுயமாக சிந்தித்து பெண்கள் கையிலெடுத்துக் கொண்டார்களா? இல்லவே இல்லை. இது மேட்இன் மேலைநாடு இல்லயா?.இந்த வார்த்தை வந்து விழுந்ததே வர்த்தக விளம்பரங்கள் வாயிலாகத்தானே.இன்னும் நாம் அனைவருமே, வாயில் எச்சில் சொட்ட ரசித்து ரசித்து அவர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும், உணவுகளையும், ஆடைமுறையையும்,என கேவலம் கழிவறைக்காகிதம் வரை  அணுஅணுவாய் கடைப்பிடிக்க, அதன்மீதான நமது மோகத்தை தவிர ஒரு மண்ணும் இல்லை அதிலே...

மேலைநாட்டு நாகரீகக்(?) கவர்ச்சியும், கலை(?) என்கிற பெயரில் கேடுகெட்ட சினிமாக் கூத்தாடிகள் காட்டிக்கொடுக்கும் வக்கிரங்களும் இன்று நமக்கு பிரதானமாகிப்போக, ஊணும் உடையும், நடையும் பாவனையும் அவர்களின் கைகளில் விதையாகி நம்மில் வளர்கிறது விஷச்செடிகளாய்.

சனி, டிசம்பர் 03, 2011

SAHEEH MUSLIM TAMIL FULL PART - DOWNLOAD

30 கருத்துகள் :

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே....

ஸஹீஹ் முஸ்லிம் - மின்நூல் முழுமையான பாகம் தமிழில்..


இஸ்லாமிய அடிப்படைகளான குர் ஆன் ஹதீஸ் கிரந்தங்களில், இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நம் கையை எட்டிவிட்ட சூழலில்,மிக முக்கிய அடிப்படையான ஸஹீஹ் முஸ்லிமானது முழுமையாக கிடைக்கவில்லை...

அதிகபட்சம் 500 ஹதீஸ்கள் pdf  தொகுப்பாக வெளிவந்து வலையில் கிடைக்க காணலாம்...ஆனால் அவ்வளவு தானா???

மொத்தமாக 5700 க்கும் மேற்பட்ட ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை உள்ளடக்கியதல்லவா ஸஹீஹ் முஸ்லிம்....

இன்னும் இவை சில தளங்களில் ஆன்லைன் எடிஷனாக இருக்கிறது. இருப்பினும் எவ்வித தங்குதடையின்றி நினைத்த நொடியில் திறந்து பயன்படுத்த, pdf தொகுப்பே உகந்த ஒன்று.

இதை அனுபவ ரீதியில் நான் உணர்ந்ததும்,வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையுமே இந்த தொகுப்பு உருவாக காரணமாக அமைந்தது...இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற தொகுப்புகளை மின்னூல் கோப்புகளாக மாற்றி அனைவரின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ் தொடர்ந்து வழங்க பிரார்த்தித்தவனாக இம்மாபெரும் ஹதீஸ் களஞ்சியத்தை மின்நூல் கோப்பாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக்கி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நான்கு பாகங்களாக வெளியிட்டது.இம்மின்நூலானது ஆன்லைன் பிஜெ தளத்தில் உள்ள,ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பை மூல ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த களஞ்சியத்தை மூலத்துடன் சரிபார்த்தும்,மேலதிக ஆலோசனை வழங்கியும்,முழுமையான ஆதரவளித்து உதவிய உம்மத் வலை குழும சகோதர சகோதரிகளை இந்நேரத்தில் நினைவுகூறி நன்றி நவிழ கடமைப்பட்டுள்ளேன்..

பதிவிறக்க சுட்டி : 


2Shared.com Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to Download

Google Site Link : ஸஹீஹ் முஸ்லிம் to view and Download

பதிவிறக்கிக்கொள்ள இயலாதவர்கள் என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
askabt.islam@gmail.com

இவ்வாக்கத்தை பயன்படுத்த துவங்கும் முன்,கவனிக்க வேண்டிய சில


முகப்பை அடுத்த,முன்னுரையை முழுமையாக படித்துவிட்டு தொடருங்கள்..


அத்தியாய அட்டவணை,தலைப்பை க்ளிக் செய்தால்,அந்தந்த அத்தியாயத்தை அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது...


மேலும் அட்டவணை தலைப்பின் அருகில் உள்ள இந்த ஆரோவை க்ளிக் செய்து,அந்தந்த அத்தியாயத்தில் உள்ள துணைத் தலைப்புகளையும், அதன் பக்க எண்களையும் எளிதில் அறிந்து,குறிப்பிட்ட ஹதீஸ்களை எளிதாக அடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இன்ஷா அல்லாஹ் பயன்படுத்தி பயனடையுங்கள்,அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்