சனி, டிசம்பர் 05, 2009

இஸ்லாத்தின் இறுதி அரைகூவல்.....

1 கருத்து :
இறைத்தூதர் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!
இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்... அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது. கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189) தொடக்க துதி மொழிகள்:
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893) பிரிவின் முன்னறிவிப்பு:
ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461) பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி) தலைமைக்குக் கீழ்ப்படிவீர்! ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706) பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை. அராஜகம் செய்யாதீர்கள்! அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403) உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742) பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்) மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3) அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565) ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது) இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்) பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880) இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.) எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40) இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402) இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2) அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942) சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456) சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109) குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.) இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3) மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061) இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741) பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்" என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள்... (ஸஹீஹ் முஸ்லிம் 2334) இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்
அன்புடன்
ரஜின்

வியாழன், நவம்பர் 12, 2009

ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்

கருத்துகள் இல்லை :
நோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அது ஏன் 52 வழிகள்? இந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும். ‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி!’ என்கிறார் பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி. இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே! 1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம். 4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம். 5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள். 6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். 7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். 8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம். 11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம். 12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள். 13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள். 14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம். 15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம். 16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும். 17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள். 18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்? 19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது. 20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும். 21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள். 22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும். 23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். 24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள். 25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது. 26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள். 27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள். 28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும். 29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள். 30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள். 31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள். தேவன், சாவி, சுஜாதா, சோ, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன், விவேக்... ஆஹா! நினைத்தாலே ஹி...ஹி...ஹி! 32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். 33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்! 34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் டான்சிங், ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள். 35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள். 36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள். 37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும். 38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது. 39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள். 40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம். 41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது. 42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள். 43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள். 44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம். 45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள். 46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும். 47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள். 48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும். 49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள். 50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள். 51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள். 52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது படியுங்கள் நன்றி வாஞ்சூரார். அன்புடன் ரஜின்

கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா? முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

1 கருத்து :
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.) ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா? கலாம்: ஆமாம். ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா? கலாம்: (மெளனம்) ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா? கலாம்: ஆம். ஆசிரியர்: சாத்தான் நல்லவனா? கலாம்: இல்லை. ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்? கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா? கலாம்: ஆமாம். ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்? கலாம்: ஆமாம். ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்? கலாம்: (பதிலில்லை) ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே? கலாம்: ஆம் ஐயா. ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது? கலாம்: (பதிலில்லை) — (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) — ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா? கலாம்: இல்லை ஐயா ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா? கலாம்: இல்லை ஐயா ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா? கலாம்: இல்லை ஐயா ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா? கலாம்: ஆம். ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே? கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது. ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது. கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம். கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம். கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை. (மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்) கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே. கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்? கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்க[1] அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே? ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே? கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான். ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்? கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா? ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன். கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா? (ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்) கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா? (வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது) கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா? (வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது) கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது? (வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது) ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே… கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது. (முடிந்தது… நன்றி: வாஞ்சூரார் நட்புடன் ரஜின்

வியாழன், அக்டோபர் 15, 2009

இஸ்லாம் பெண்களையும்,குழந்தைகளையும்,போரில் கொல்ல அனுமதிக்கிறதா?....

கருத்துகள் இல்லை :
சகோதரர் திருச்சிக்காரன்(சுந்தர்) அவர்களது கேள்வியும்,எனது பதிலும்....

//இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் - புகாரி, 3012).//


//இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//
//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//
எனது பதில்:


சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாணவனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...
போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை....
நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.


இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் யூத கிறிஸ்தவர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்...
இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,


இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்வர்.பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது, இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.


எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்... 


//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//


இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.


அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945 மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்....


மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்....


மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013.....
ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை....


அவை:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "கண்டித்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3014


 இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "தடைசெய்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3015


தாங்கள் மேற்கோல் காட்டும் அந்த ஹதீஸை அடுத்தே,மேலே நான் குறிப்பிட்டு இருக்கும் 3014,3015 ஆகிய ஹதீஸ்கள்,முக்கியத்துவத்துடனே,பதியப்பட்டுள்ளது.
இது முந்தய ஹதீஸை தவறான உதாரணமாக மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது,என்ற கருத்தை  தாங்கி நிற்கிறது....
சகோதரரே,இந்த நிலை,எல்லா காலகட்டங்களிலும்,வாழும் சமூகத்தினருக்கு விதிவிளக்காக அமைவதே......அதை கருவாக கொள்வது அறியாமையே.....அறிவுடமையாகாது......
சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள்,அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்...


நன்றி


அன்புடன்
ரஜின்

புதன், அக்டோபர் 14, 2009

சகோதரர் ராம் அவர்களுக்கு எனது பதில்....

கருத்துகள் இல்லை :


////சகோதரர்களே…
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
///லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
இப்படி அவன் முஸ்லீம் அல்ல என்று கூறிவிடுவது சூப்பர் எஸ்கேபிஸம் தவிர வேறில்லை.
அப்படி முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏன் நீங்கள் மதத்தில் வைத்திருக்கிறீர்கள். கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!
இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், அதற்கு அவர் கிறிஸ்து அவனுக்குள் இருந்திருந்தால் அப்படி செய்திருக்கமாட்டான். கிறிஸ்துவாக புஷ் இல்லை என்று சொல்லிவிட்டார்.
உங்களைப் பொறுத்தவரை ஜிகாத் என்ற பெயரில் குண்டுவைப்பவன் முஸ்லீம் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரை கொலைபாதகன் கிறிஸ்துவன் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். உங்களுக்கு இடையில் இந்துக்கள் சாக வேண்டும்.
அதர்மம் செய்பவனுக்கு தர்மப்படியான போர் சரிப்பட்டு வராது என்று துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்த சொல்லிக்குடுத்த கிருஷ்ணனின் வழியே சிறந்தது இந்தக்காலத்திற்கு என்று இந்துவுக்கு படுகிறது. அப்படி செய்துவிட்டால் இந்துத்தீவிரவாதம் என்று சொல்லி இன்னும் எங்களை ஏறி மிதிப்பீர்கள்.
மத்தளமானது இந்து மதம். மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

--------- ----------- ----------- -------------- --------------------- ------------- ------------- ---------- -------------- ----------
எனது பதில்:
சகோதரர் ராம் அவர்களே.
அவன் செய்தானே,அவனை என்ன செய்யப் போகிறீர்கள்,….இந்த கேள்வி நீங்கள் இந்திய அரசை பார்த்து கேட்டால் பொருத்தமாக இருக்கும்,நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..
ஒருவன் தவறு செய்தால்,அவனை ஒட்டுமொத்த சமுதாயத்தின்,தார்மீக பொருப்பு கொண்ட பிரதிநிதியாக பார்க்கும்,தங்களது பார்வை,தவறானது….
// ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன்//
என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?
அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?
தனி ஒருவனின் செயல்பாடு,முழுமதத்தின்,பிரதிபலிப்பும் அல்ல,அவனது செயல்களுக்கு,மதத்தையும் பொருப்பாக்க முடியாது…..
இல்லை.மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
இந்த நியூச படிங்க……
இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?
இதே நிலை இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியர்களான எங்களுக்கும், பொருந்தும்,
ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல….
சகோதரரே,இத்தனை விஷயங்களும்,நான் இங்கு,பதிந்ததற்கான காரணம்,இஸ்லாமிய பெயர்தாங்கிகளால்,செய்யப்படும்,வன்முறையை ஒரு போதும் நியாயப்படுத்த அல்ல…..
குற்றம் யார் செய்தாலும்,தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப் பட வேண்டும்.
இது தான் எனது நிலைப்பாடு,நான் சார்ந்துள்ள மார்க்கமும் ,அதையே சொல்கிறது….
யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…
நாம்,நமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் அவ்வளவே…..
நன்றி..
அன்புடன்
ரஜின்

செவ்வாய், அக்டோபர் 13, 2009

செல்லகிளி அவர்களுக்கு பதில்....

கருத்துகள் இல்லை :

அன்புள்ள செல்லகிளி அவர்களுக்கு,
நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு இவ்வளவு மெனக்கட்டு,குர் ஆன் வசனத்தை எல்லாம் மற்றி எழுதி,எனக்கு விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்...தாங்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விக்கு,இதோ பதில்..... 


தாங்கள் சொல்ல வந்தது,
குர் ஆனில்,(மாற்று மதத்தவர்களுடன் போர் புரியும் போது அவர்களை வெட்டுங்கள்,என சொல்வது போல்,பிற மத வேதங்களில்,முஸ்லிம்களை பற்றி சொல்லப் பட்டு இருந்தால்..அதை நீங்கள்(அதாவது என்னை) பாராட்டி வரவேற்பீர்களா?.....இது தானே...


இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்...இஸ்லாமே அத தான் சொல்லுது.....
முதலில் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்....


இஸ்லாத்தில் போர்:


இஸ்லாத்தில் போர் ஆனது,அடிப்படையாக,சில காரணிகளை கொண்டு அமைகிறது...
1. இஸ்லாதிற்கு எதிராக சூழ்ச்சி,செய்து,முஸ்லிம்களை அழிக்க நினைப்பவர்களுடன் போர்.
2. ஒரு சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள்,பெரும்பான்மையினரால்,பாதிக்கப்படும் போது,அவர்களை சகமுஸ்லிம்,எனும் அடிப்படையில் காக்கும் பொருட்டு,அவர்களுடன் போர்.
3.மற்ற சில காரணங்கள்,அக்கால அரசுகள்,கொண்டிருந்த காரணங்களுடன் பொருந்தக் கூடியதாகவே அமையும்.(உதாரணம்.ஒரு நாட்டின் செய்தியை,எடுத்து செல்லும்,தூதுவனை,பிற நாட்டினர்,கொன்றுவிட்டால்,கொன்றவர்கள்,தூதுவனின் நாட்டினறை பகிரங்கமாக போருக்கு அழைப்பதற்கு சமம்.)


(இந்த காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.)


இப்படிப்பட்ட காரணங்களுக்குரியவன்,நிச்சயம் முஸ்லிமாக இருக்க முடியாது...


சரி...
இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு முஸ்லிம், ஒரு சமூகத்தின் மீது போர் தொடுக்க செல்லும் போது,அவர்களிடம் ஒரு நிபந்தனை முன்வைக்கப்படும்.
எதிரிகளை நோக்கி நீங்கள்,அல்லாஹ்வையும்,அவனது தூதரையும்,ஏற்றுக்கொண்டால்,போர் தவிர்க்கப் படும்.ஏற்க மறுத்தால்,முஸ்லிம்கள்,போர் புரிய வந்த காரணத்தின்,அடிப்படையில்,நீங்கள் கீழ்படிந்து,ஜிஸ்யா செலுத்தும் வரையில்,அவர்களுடன் போர் புரிவோம் என்பதாகும்.....


வரி...இஸ்லாத்தில்,இரண்டு வகை மட்டுமே....
ஒன்று,ஸகாத்(ஏழை வரி),இது இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீது கட்டாயக் கடமை....
மற்றது..ஜிஸ்யா(பாதுகாப்பு வரி),இது இஸ்லாத்தை ஏற்காதவர்கள்,இஸ்லாமிய ஆட்சிக்குபட்டு  இருந்தால்,அவர்கள் மீது விதிக்கப் படுவது....


இவர்கள் ஜிஸ்யா தர மறுத்தால்,அவர்களுடன் போர் புரிய இஸ்லாம் சொல்கிறது... 


ஸகாத்.
இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று...
ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.
அப்படி கடமைப்பட்டவர்,அதை தர மறுக்கும் போது,அவர்களுடனும் போர் புரியவேண்டும்,என்பதை கீழே பதியப்பட்ட ஹதீஸ் உறுதி செய்கிறது.


நபி (ஸல்) அவர்கள் மரணித்து,அபூபக்கர் (ரலி) (ஆட்சிக்கு)வந்ததும்,அரபிகளில் சிலர்,(ஸகாத்தை மறுத்ததின் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர்.(அவர்களுடன் போர் தொடுக்க)அபூபக்கர் (ரலி) தயாரானார்.உமர்(ரலி),'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர்,தன்  உயிரையும்,உடமையயையும் என்னிடம் இருந்து காத்துக்கொண்டார்,தண்டனைக்குறிய குற்றம் புரிந்தவரைத்தவிர,அவரின் விசாரணை அல்லஹ்விடமே உள்ளது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது,நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும் என்று கேட்டார்.அபூபக்கர்(ரலி), உமரை(ரலி) நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக,தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன்.ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்,
அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம்,(ஸகாததாக)வழங்கி வந்த  ஓர் ஒட்டக குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட,அதை மறுத்ததற்காக இவர்களுடன் நான் போரிடுவேன்,என்றார்.இது பற்றி உமர் (ரலி) அவர்கள்,அல்லஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கரின் இதயத்தை(தீர்க்கமான தெளிவை பிரும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார்.அவர் கூறியது சரியானது தான் என நான் விளங்கிக் கொண்டேன்.என்றார்.
ஸஹீஹுல் புஹாரி: 2:1399,1400


இதுவல்லாத,இன்ன பிற,கடுமையான ஷரீஅத்,சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு தானே....
அவர்களின் தவறுக்கு,தண்டனை தரும்,உலகின் கடுமையான சட்டங்கள் தானே அவை....


இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.
அதனைக் கொண்டு,அவர்களின் உயிர் உடமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது...
அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது,அவர்களுக்காக போரிடுகிறது.
-----------------


மேற்கண்ட காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.


நன்றி,


அன்புடன்
ரஜின்

வெள்ளி, அக்டோபர் 09, 2009

ரஹ்மத்துல்லாஹ் - பதில் 03

கருத்துகள் இல்லை :

ரஹ்மத்துல்லா எழுதியது...
8 October 2009 at 7:04 pm 1. //”வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ” (அப்படீன்னா…ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.(”கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29
  இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்.//
  சகோதரர் ரஜின் அவர்களே, எந்த இடத்தில்
  ”இஸ்லாமிய ஆட்சிக்குள் இருக்கும் மாற்றுமதத்தினர்” என்ற வார்த்தை இந்த வசனத்தில் இருக்கிறது? நீங்களாக இட்டுக்கட்ட ஆரம்பித்துவிட்டீர்களா?
  ம்ம் இதில் இட்டுகட்ட என்ன இருக்கிறது....
  //[கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்]//
  ஜிஸ்யா மாற்று மதத்தினர் கட்டாம,முஸ்லிமான?? ??   நீங்களா கட்டுவீங்க?.....
  புரியாதவங்களுக்கு,விளக்கலாம்,புரியாதமாதிரி நடிக்கிரவங்களுக்கு....ம்ம் முடியாத காரியம் தான்....
  ஜிஸ்யாவுக்கு மட்டும் தான் போர்புரிய சொல்லுது...
  (இந்தியாவுல வரி யேய்ப்பு செய்ரவங்கள என்ன செய்வாங்க....தனிமனிதனா இருந்தா கைது,சமூகமா இருந்தா,அடக்கி கட்டவைப்பார்கள்...அது தான்...இஸ்லாமும் சொல்லுது..)
  நீங்கள் சொல்வது போலத்தான் வசனம் இருந்தால், ஏன் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமை ஒப்புக்கொள்ளாத மற்ற நாடுகள் மீது படையெடுத்து இஸ்லாமை ஒப்புக்கொள்ள செய்தார்கள்?
  அடப் பாவிங்களா?....இஸ்லாம்,வாளால்,பரப்பபட்டது,அததானே, சொல்ல வர்ரீங்க?...
  ம்ம்ம் இன்னக்கி இப்படித்தான்,உலகம் முழுவதும் ஊடகங்களாலும்,யூத கிறிஸ்தவர்களாலும்,பரப்ப படுகிறது......
  இந்த மாதிரி, இஸ்லாத்த எடுத்துவைக்க,மார்க்கமும் சொல்லல,அப்படிதான் பரப்பபட்டது,என்பதற்கு, வரலாற்று ஆதாரமும் இல்ல.....சும்மா மார்க்கத்தில் பேரால்,இட்டுக்கட்டாதீங்க....
  அப்படி கட்டாயத்தின் பேரால் வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்பவர்களிடம்,ஈமான் இருக்காது.... 
  ஈமான்கிற நம்பிக்கை இல்லாதவன,இஸ்லாமியன்னு இஸ்லாம் சொல்லல,,இல்லயா..அவனுக்கு பேரு முஸ்லிம் இல்ல,முனாஃபிக்...இதுவாவது தெரியுமா?
  இந்தியாவ எடுத்துகிட்டா.இங்க 200 ஆண்டுகளுக்கு மேலா இஸ்லாமிய?? ஆட்சி இருந்துச்சு,ஆனா அதில் பெருவாரியான அரசர்கள்,நீங்க சொன்னமாதிரி,வாளாலும் சரி,சும்மா கூட இஸ்லாத்தை பரப்பவில்லை...அவர்கள் அனைவரும் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்கள்...
  அக்பர் போன்ற அரசர்கள், ஹிந்துக்களுடன்,நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்...
  அதற்கு சாட்சி.இன்றைய இந்தியா....இங்கு பெரும்பான்மையினர்,ஹிந்துக்கள்....இது ஒன்று போதாதா ஒங்க பிரச்சாரம் பொய்ன்னு நிரூபிக்க....
  //கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்//
  இப்போது உலகத்தின் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் யூதர்களும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? அவர்கள் கட்டும் வரைக்கும் ஜிஹாத் புரியவேண்டியது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.
  ஓ ....நீங்கதான் நம்ம இந்தியாவின் மாமன்னர் ரஹ்மத்துல்லாவா?....எனக்கு தெரியாம போச்சு???
  நா வந்து,இந்தியாவுல காங்கிரஸ் ஆட்சி நடக்குதுன்னு நெனச்சுகிட்டு இருக்கேன்.....
  ஒங்க ஆட்சியில யாருமே ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டலயா???....அடடா////
  ரஹ்மத்துல்லா,சும்மா அரவேக்காட்டு தனமா பேசிகிட்டு இருக்காதீங்க.......
  சகோதரர் ரஜின் அவர்களே கீழே பாருங்கள். இது இஸ்ரேலின் புத்திரர்களுக்கு அதாவது யூதர்களுக்கு அருளியது என்று தெளிவாக அல்குரான் குறிப்பிடுகிறது.
  சூரா - அல் மாயிதா
  அத்தியாயம் – ஐந்து
  வசன எண் - 32

  இதன் காரணமாகவே, ”*நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப்பதிலாக அல்லது புமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காக) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்*. மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார்.என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களினடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். இதன்பின்னரும் அவர்களின் பெரும்பாலோர் புமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
  நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.
  சகோதரரே??...
  இது சம்பந்தமா நான் எனது முந்தய பின்னூட்டத்தில் கொடுத்த பதில் போதுமானது....


  {அடப்பாவிங்களா…குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?…நல்ல கதையா இருக்கு..
  சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே…அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே….
  தாங்கள் எப்படி?????}
  குர் ஆன்ல உள்ள ஒரு வசனம் யூதர்களுக்கு,என்று,உங்களின் மேதாவித்தனத்தின்?? மூலம் முதல்முறை அறிகிறேன்...........  நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.
  ம்ம்ம் அப்படிப்பார்த்தால்,அல்லாஹ் பெருவாரியான வசனங்களை,நபியே!(ஸல்) என்று,நபியை பார்த்து,தான் சொல்கிறான்,
  மக்காவாசிகளே,நபியின் மனைவியரே,என பல இடங்களில்,அல்லாஹ்,குறிப்பிட்டு சொல்கிறான்,
  அப்ப இத எல்லாம் பிரிச்சுட்டு பாத்தா?............


  முதல் மற்றும் கடைசி அட்டைதான் குர் ஆனில் மிஞ்சும்????
  இதல்லாம்...யாரு ஒங்களுக்கு பாடம் எடுக்குரா???? 


  “உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” இது எப்போது அருளப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? முஸ்லீம்களின் பிள்ளைகளை மற்ற மததினராக்கக்கூடாது என்பதற்காக இறக்கப்பட்ட வசனம் அது. சற்றே ஹதீஸ் படித்துப் பாருங்கள்.


 2. ஏங்க...ஹதீஸ்ல இருக்கா?....நீங்க படிச்சுருக்கீங்களா?....அப்டீன்னா......அத அப்ப்டி இங்க பதிஞ்சுருக்கலாமே????
...........................................................................................................................................................................................................................
உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். இந்த மாதிரி ஆட்களிடமிருந்து நீங்கள்தாம் உங்கள் மார்க்கத்தை மீட்பிக்க வேண்டும். ஒன்று தெரிகிறது.. உங்கள் இறைவன் இறக்கியதாக நீங்கள் சொல்லும் புத்தகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது போல. ரொம்பவும் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம் என்று சொல்லப்பட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த வஹீ வந்திருக்கப்படாதா!


நன்றி,ஜெயராமன்...


இவங்களுக்கே..இன்னும் நிறையா விளக்கவேண்டி இருக்கு....
வஹீ பத்தி சொன்னீங்க.....ஒரு சாதாரண பாட புத்தகத்த ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள்,ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் விதம் வேறு...இல்லயா....இது இறைவேதம்...அல்லாஹ் இது குறித்து ஆராய்ந்து பார்க்க தான் சொல்ரான்...அதுவல்லாது....அதன்படி,வாழ்ந்துகாட்டிய நபியவர்களின் வாழ்க்கை அதை புரிந்துகொள்ள போதுமானது.... 


அன்பரசனின் விளக்கம் சொல் மண்டி இரா அவர்களுக்கு போதுமானது...

இங்கே எழுதியிருக்கும் இஸ்லாமிய நண்பர்களது பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேறு நிறைய இடங்கள் இருக்கின்றன.
அன்பரசன் அவர்களே......இஸ்லாத்தை பத்தி தாங்கள் பதிவு வெளியிடும் போது,அதற்கு,பின்னூட்டம் இடும் உரிமையைக் கூட எனக்கு தர மறுக்கிரீர்களே?....
இஸ்லாம் பற்றி,தங்களது புரிதலை,பதிவாக வெளியிடுகிறீர்கள்..(சரியோ தவறோ) நான் வரவேற்கிறேன்.....
ஆனால் அது சரியெனில்,வாழ்த்தவும்,அது தவறெனில்,சுட்டிக்காட்டவும்,விளக்கவும்,தேவையான குறைந்த பட்ச உரிமையை எனக்கு தாருங்கள்............


நன்றி
அன்புடன்
ரஜின்Counter

பிற பதிவுகள்