புதன், மார்ச் 17, 2010

தூக்கில் இடப்பட்ட இந்திய அரசியல் சட்டம் - இதுக்கு நாமளும்...

1 கருத்து :
தாய்- மகள் கற்பழிப்பு: போலீஸ், அரசு வக்கீல், மாவட்ட நீதிபதியின்
பொறுப்பின்மையால் குற்றவாளிகள் விடுதலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர். உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர். அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர். பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.
முழு செய்தியும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...
ம்ம்ம்....இந்திய அரசியல் சட்டம்...அதன் தத்துவார்த்தமான சொல்லான "வாய்மையே வெல்லும்" இது ஒவ்வொரு நீதி மன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்,எழுத்தப்பட்டு இருக்கும்..எழுத்தோடு சரி...
அதுவல்லாது இன்னொரு உத்தமமான சொல்லாடலும் உண்டு..
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படக்கூடாது"..அடடா..இத கேட்டாலே...இன்ப தேன்வந்து பாயுது காதுல....இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....
அந்த முதல் லைன்லயே தெரியல பெரிய ஓட்டயவே சட்டமா உருவாக்கி இருக்காங்கன்னு... ஏண்டா?1000 "குற்றவாளி"இங்க இத கவனிக்கனும்...குற்றவாளி என்பவன் யார்...எவனோ ஒரு மனிதனுக்கு அநீதம் இழைப்பவனே குற்றவாளி...இல்லையா? அது திருட்டு,கற்பழிப்பு,கொலை, வழிப்பறி, ஏமாற்றுதல்,என எதுவானாலும்,ஒரு அப்பாவி பாதிக்கப்படுகிறான்...அதனால் அந்த அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு,கிடைக்கும் ஒரே நிவாரணம்.தனக்கு அநீதம் இழைத்தவன், தண்டனைக்குள்ளாக்கப்பட்டான்.என்பதே..அவன் இழந்ததை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.. அப்படிப்பட்ட,இந்த "1000 குற்றவாளிகள்"எளிதாக தப்பிக்கலாம்....அல்லது தப்பிக்கிறார்கள்,என்றால் என்ன அர்த்தம்..அவர்களால் அநீதம் இழைக்கப் பட்ட 1000 நிரபராதிகளும் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதே...
தண்டனை என்பது என்ன? இங்கே சில மதவாதிகளும், அரசியல்வாதிகளும், இன்ன பிற சமூக விரோதிகளும்,செல்போன்,வீட்டு சாப்பாடு,என சகலமுடன் சொகுசாக ஜெயில் வாழ்க்கை அனுபவிக்கிறார்களே,அதுவா...இல்லை..இல்லவே இல்லை....
பாதிக்கப் பட்டவனின் குறைந்த பட்ச நிவாரணமான,குற்றவாளிக்கு தண்டனை என்பதே,அங்கு தவிடு பொடியாக்கப் படும் போது...அந்த மனிதனுக்கு,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து,தனது மீதி வாழ்நாளை, ஒருவித விரக்தியுடன்,வலியுடன் கழிக்கிரானே..அதை விட ஒரு பெரிய தண்டனை யார் தர முடியும்...
பொதுவாக ஒரு சொல்லாடல் உண்டு.."குற்றம் செய்து அதை உணர்ந்தவனை தண்டிப்பதை விட மன்னிப்பதே பெரிய தண்டனையாக அமையும்" என்று.இதன் பொருள் என்ன,உடல் அளவில் தரப்படும் தண்டனையை விட மனதளவில் ஒருவன் துயருறுவது பெரியது என்பதே..
அப்படி இருக்க இந்த முதல் வாசகம் முற்றிலும் பொய்க்கிறது...ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது.என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...
எனவே இங்கு குற்றம் இழைத்த கயவர்கள் 8 பேரும்,மேல் முறையீடு,என கோரி,அங்கு இருந்த ஒரு பைத்தியக்கார - (தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) - நீதிபதி?? ஒருவன் இந்த வழக்கில் அதன் தீர்ப்பை திருத்தி எழுதி,8 குற்றவாளிகளை விடுவித்து,அந்த மொத்த குடுமபத்தையும் தீரா துயரில் தள்ளி,மாறா வடுவாக அவர்கள் வாழும் காலமெல்லாம்,சொல்லி அழ,அருமையான தண்டனையை தந்து,இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.- (வார்த்தை தனிக்கை செய்யப் பட்டுள்ளது) - ங்க...
இபோ அந்த பெண் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக?? இருக்கிறாளாம்...என்பதை அவர் கேள்விப்பட்டாராம்...அந்த (திரும்ப ஒரு முறை தனிக்கை செய்யப்பட்ட வார்த்தை) நீதிபதி...அதனால் இந்த வழக்கில் மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டாராம்...
ஏண்டா கேள்விப்பட்ட,ஒரு செய்தியை கொண்டு...ஒரு முடிவுக்கு வருபவன், நீயெல்லா நீதிபதின்னா?..தெருவோரமா பிச்சை எடுக்கிர பைத்தியக்காரனுக்கு உள்ள குறைந்த பட்ச அறிவுகூட உனகில்லயே...இவன்லா எப்டி நீதிபதி ஆன???..ம்ம் அதுக்கும் இந்திய அரசியல் சட்டத்துல வழி இருக்குமா இருக்கும்...யார் இந்த எழவைலா கண்டது...
ம்ம்..இன்னொரு பக்கம் பாத்தா இந்த பைத்தியக்காரன் சொன்னதுலையும்,ஒரு மேட்டர் கவனிக்கலா,அது என்னானா?
இதுவேர கற்பழிப்பு கேசா பொச்சா?,வாதாடுர வக்கீல் எல்லா சேந்து,நடு கோர்ட்ல வச்சே,,குறுக்கு விசாரணை'ங்ர பேரல இன்னும் பல தடவ அந்த அபலைகள கற்பழிச்சுடுவானுங்க....அது இலலாத வரைக்கும்,கடுகளவு சந்தோஷமே....
இங்கன்னு இல்ல,குற்றம் சாட்டப்படும் எந்த ஒரு வழக்கிலும்,பாதிக்க்ப் பட்டவரும்,சாட்சி சொல்பவருமே...அதிகம் மன உளைச்சலும்,கஷ்டமும்,சந்திக்கிறார்..கேட்டா விசாரண பண்ராங்களாம்..ஏண்டா (வார்த்தை தனிக்கை செய்யப்படுகிறது) தப்பு பண்ணுனவன் எத்துனையோ வழக்குகள்ல,திருவண்ணாமலை தீபம் மாரி தெளிவா தெரிஞ்சாலும்...பாவம்,இந்த அப்பாவிங்கள ஏண்டா சாகடிகிரீங்க...அப்ரோ எவண்டா வந்து கம்ப்ளைண்ட் கொடுப்பான்,எவண்டா வந்து சாட்சி சொல்லுவா?ம்ம்...
இதுனால தானடா,,ஆக்ஸிடண்ட் ஆகி நடு ரோட்ல செத்துகிட்டு இருக்குரவனையும் பாத்துட்டு,ஒருத்தன் அத கடந்து போரான்னா?என்ன காரணம்...என்ன நம்ம நாட்டு மக்களுக்கு ஈவு இறக்கம் இல்லன்ன....ஹ்ம்ம்....இன்னக்கி இவன காப்பாத்தீட்டு,நாளைக்கு நாம சாகனுமேன்னுதா....
அந்த பொண்ணு சந்தோஷமா இருக்காளாம்..சரி,இவ்வளவு பிரச்சனைக்கு பின்னும்,அவ ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ரான்னா,முதல்ல அதுக்கு காரணமான அவளுடைய கணவன்,என்னிடத்தில் பெரும் மதிப்பிற்குறியவனாகிறான்.. அடுத்து அவளது தைரியம் போற்றுதளுக்குறியது..அதை எல்லாம் கடந்து..அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் உள்மனதில் இருக்கவே செய்யும்..அதன் ரணமும் ஆறாமல் இருக்கும்..இவர்களுக்கு தரப்படும் இந்த தண்டனையே அவர்களுக்கு,குறைந்த பட்ச மருந்தாக அமையும்...அதை இந்த காட்டெரும நீதிபதி ஏன் சிந்திக்கல?ம்ம்ம்...
சரி இப்டி காரணம் காட்டி இவன்கள விடுதல பண்ரோமே...நாளைக்கு,,இதுவே இவன்களுக்கு,மேலும் தைரியத்தையும் ஊக்கத்தையும்,தராதுன்னு என்ன நிச்சயம்??.இதென்ன கேள்வி..அது அவர்களுக்கு மிகுதியாகவே செய்யும்..ஐயமின்றி...
இது இன்னும் பல இது போன்ற குற்றவாளிகளையும்,,,ஊக்குவிக்கவே செய்யும்.."எப்புடியும் தப்புச்சிடலாம்"அப்டீங்ர எண்ணம் வளருமே...இது மேலும் பல வழக்குகளில் உதாரணமாக எடுத்து வதாடப்படுமே.... இதுனால...குற்றவாளிகளுக்கே பயன் அன்றி மக்களுக்கல்ல....அது அபாயகரமானதும் கூட....
அது மட்டும் இல்லாம,நம்ம இந்திய சட்டத்துல (மத்த நாட்ல இருக்கான்னு தெரியல)..அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை "மேல் முறையீடு"....இதோட அர்த்தம் புரியவே இல்ல....
பென்ச் நீதிமன்றம்,துணை நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச்ச்ச்ச நீதிமன்றம், (இன்னும் நெரையா இருக்கு,எழவு எனக்குத்தா தெர்ல)என இதனை நீதி மன்றங்கள் ஏன் இருக்குன்னு எனக்கு புரியவே இல்ல.ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்பு,இன்னொரு நீதி மன்றத்தில் உடைக்கப் படுகிறது...
சரி அப்படி அந்த தண்டனை உடைக்கப் படும்போது,ஒன்று,ஒரு நிரபராதி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்,அல்லது ஒரு குற்றவாளி விடுவிக்கவோ, தண்டிக்கவோ படலாம்..இது இரண்டே சாத்தியம்..அப்படி,கீழ் கோர்ட்டில் சொல்லப் பட்ட ஒரு தீர்ப்பு,தகர்க்கப் படுகிறதென்றால்.அங்கு அந்த விசாரணை,முழுமைப் படவில்லை.அங்கு வழங்கப்பட்ட நீதி தவறானது என்பதை செவுட்ட அறஞ்ச மாதிரி,மேல் கோர்ட் தீர்ப்பு,தீர்ப்பு சொல்லுது...இல்லயா?
அப்பரோ என்ன செறக்கிறதுக்கு,இந்த கீழ் கோர்ட்ல ஒரு வழக்கு,ஒரு விசாரணை,வக்க்க்கீலு, நீதி??பதி...சம்பளம்,மயிறு இந்த மட்டை எல்லா?.....எவனா இருந்தாலும்,கீழ் கோர்ட் சொன்ன தீர்ப்ப மேல் முறையீடு பண்ணலாம்னா?அப்ரோ என்ன மசுறுக்கு அதெல்லா இருக்கு....
நானறிந்த நடுநிலை நீதிமன்றம்:
மேல் சொன்ன இந்த முறை முற்றிலும் தவறானது...ஒரே கோர்ட்,(அப்டீன்னா ஒரே ஒரு கோர்ட் இல்ல,சென்னை உயர்நீதிமன்ற கிளை,மதுரையான எங்க ஊர்ல இருக்குல்ல அதுமாரி.தேவையான அளவு.)ஒரே,தெளிவான நடுநிலையான,தாமதம் இல்லாத,முறையான விசாரணை...ஒரே தீர்ப்பு...ஒரே தண்டணை....அது பாரபட்சமில்லாத இறுதியான கடுமையான தண்டணையாக இருக்க வேண்டும்.
மேல் முறையீடு,மறுவிசாரணை என இருப்பின் அதே கோர்ட்டில்,அதே நீதிபதி முன்னிலையில்,மற்றொரு நீதிபதி கொண்டு நடத்தப்பட வேண்டும்...இந்த வழக்கின் முந்தைய தீர்ப்பு தவறெனில்,,,அது தவறாக அமைய காரணமானவர்கள்,(காவல் துறை,சாட்சிகள்,வக்கீல்கள்,)வன்மையாக தண்டிக்கப் படவேண்டும்...நீதிபதியாயின்..மிக கடுமையான தண்டனை...அதை வழங்க,எந்த தலையீடும் இல்லாத தன்னிச்சையாக செயல்படும் குழு ஒன்றும் இருக்க வேண்டும்...
இதில் நான் வலியுருத்தும் ஒரு விஷயம் என்ன வென்றால்
"தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்"என்பதே...இது 100% சரியானது கூட.இதை 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்...இது முக்கியமாக,இஸ்லாமிய சட்டமான கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல்,கற்பழிப்பு,கொலை செய்தவனுக்கு,மரண தண்டனை இன்னும் பல.போன்றவை...
(நான் ஒரு முஸ்லிம் என்பதால் இதை ஆதரிக்கிறேன்,என்பதல்ல.குற்றங்கள் குறைய,குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட இதைவிட முறையான சட்டம் இருந்தால் சொல்லுங்கள்)
இந்த சட்டங்கள் கடுமையாக இருப்பினும்.அது பார்ப்பவனை தவறு செய்வதில் இருந்து தடுக்கிறது...கற்பழித்தால் தலை போய்விடும் என்ற எண்ணம் இருந்தால்..எவனுக்கு அந்த எண்ணம் தோன்றும்???...
இதை வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு,மரண தண்டனை பெரிதாகவே தோன்றும்..நாளை தான் பாதிக்கப் படும் போது அதை உணர தலைப்படும்..
இந்த வழக்கை பொருத்தவரை,இந்த இரு பெண்கள் கற்பழிக்கப் படவில்லை...இந்த வழக்கை கையாண்ட நீதிபதி தலைமையில்,சகலரும் சேர்ந்து,நீதிமன்றத்திலே, பொதுமக்கள் முன்னிலையில் நீதி தேவதையை மாறி மாறி கொடூரமாக வன்புணர்ச்சி செய்துள்ளார்கள் என்பதே....எனது கருத்து.........
நன்றி
அன்புடன்
ரஜின்...
பின் குறிப்பு:
தவிர்க்க முடியாத காரணத்தால் தகாத வார்த்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு தணிக்கை செய்யப் பட்டுள்ளது.

ஞாயிறு, மார்ச் 14, 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவினார்...

5 கருத்துகள் :
நான் மதிக்கும் நன்மக்களில் பேராசிரியர் பெரியார்தாசன் (அப்துல்லாஹ்)அவர்களும் ஒருவர்.
அவரை நேரில் கண்டதில்லை.அவரது பேச்சை,அதிகம் கேட்டதில்லை..அவரது எழுத்தை படித்ததும் இல்லை..அவர் ஒரு கடவுள் நம்பிக்கை அற்ற மனிதர்,அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்தவர்,அனைத்து மதங்களையும் விமர்சித்தவர்.ஆனால் அவரது விமர்சனம் நாகரீகமாகவும்,நடுநிலையோடும் இருக்கும்...அது தவிர சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்.அவ்வளவே அவர் பற்றி நானறிந்தவை.அவரது பேச்சின் கண்ணியமும்,ஆழமும்,சிறந்த சிந்தனையுமே,அவரிடம் என்னை கவரச்செய்ததா என்றால்,இருக்கலாம்.
பொதுவாக மத ரீதியான விமர்சனம் என வரும் போது,பெரும்பாலோர்,தன்னிலையில் இருந்து சற்றே இறங்கி,பிறர் மதத்தை விமர்சிப்பர்...அப்படிப் பட்டவர்கள் மத்தியில்,அவர்களின் வார்த்தையில் ஒரு கண்ணியம் கொண்டு,பிறர் மனம் நோகாமல் பேசும் போது பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.
அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்த போது,இஸ்லாத்தையும் அவர் விமர்சிக்காது விட்டதில்லை..இஸ்லாம் விமர்சன்ங்களுக்கு அப்பார்பட்டதும் இல்லை...
ஆனால் அவர் வெறும் விமர்சனத்திற்காக மதத்தை படிக்க வில்லை.அதன் கருத்தை அறிய,அதன் நெறியை உணர என்பதே,அவரது மாற்றம் நமக்கு சொல்லும் விடயம்....
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.
இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.
இது அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியின் சாரம் :
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்.
Source:

http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுகாரும் அவரை பின்பற்றிய,அவரது கருத்துகளால் ஈர்க்கப் பட்ட,மாற்றுமத ச்கோதரர்கள்,சிந்திக்க வேண்டும்..தன் வாழ்வில் பெரும் பகுதியை கடந்து விட்ட ஒருவருக்கு,இப்போது என்ன தேவை இருக்க முடியும்.அவர் இஸ்லாத்தை தழுவ? எது அவரை இறை நிராகரிப்பில் இருந்து,இறை நம்பிக்கையாளராக மாற்றியது.

பணமா?அவரிடம் இல்லாத பணம் இல்லை.அவர் பணம் தேடும் மனிதராகவும் அறியப்படவில்லை.

புகழா?அவர் ஏற்கனவே..தமிழகம் முதல் இந்தியா கடந்து,மேற்குலகு வரை,மிகவும் அறியப்பட்ட மனிதர்...அதுவல்லாது,வாய்கிழிய நாத்தீகம் பேசிவிட்டு,ஒரு மதத்தில் நுழைபவருக்கு,அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிற புகழும் மங்கவே வாய்ப்புள்ளது..அப்படி இருக்க அதுவும் இருக்க முடியாது..

மிரட்டப் பட்டு இருக்கலாமா?...இது குற்றறிவாளர்களின் சிந்தனை,என்னுடையதல்ல...பொதுவாக கடவுள் நம்பிக்கையற்றவர்கள்.எளிமையாக,நடுநிலையாக,எதுபற்றியும் கவலை கொள்ளாதவர்களாக,கடவுளுக்கே அஞ்சாதவர்களாகவே இருப்பர்.இவரையும் அப்படியே கண்டுள்ளோம்.அப்படி இருக்க..இது தேவை இல்லாத கற்பனையே....

சரி.எது அவரை இந்த அளவு பாதித்து...அவர் பிறந்த மதமான ஹிந்து மதத்தில் இருந்து,(அரேபிய தயாரிப்பான:இஸ்லாமிய எதிரிகளின் வசை இது) தூய்மை மார்க்கமான இஸ்லாதை தழுவச்செய்த்து...அதை அவரே,அவரது பேட்டியில் சொல்லி இருக்கிறார்....

வல்ல அல்லாஹ் அவரது முந்தைய பாவங்களை மன்னித்து,அவருக்கு ஹிதாயத் அருளியது போல்,அவரது குடும்பத்தினருக்கும்,அவரை சார்ந்த மக்களுக்கும்,ஹிதாயத் வழங்கி,ஈருலகிலும் சிறப்பிக்க துஆ செய்வோம்..

அவரது இந்த மாற்றம் குறித்து விரிவாக அவர் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்...அது,இஸ்லாம் பற்றிய அவரது கோணத்தையும்..அவரது சிந்தனையையும்,அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக அமையும்....

அன்புடன்

ரஜின்

சனி, பிப்ரவரி 27, 2010

மர்ஹூம்.ஷேஃக்:அஹமது தீதாத் - இஸ்லாமிய தாவா வரலாற்றில் ஒரு சகாப்தம்..

கருத்துகள் இல்லை :

அஹமது தீதாத்

deedath speech

இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்

பிறப்பு - ஜுலை 1, 1918

பிறந்த ஊர் - குஜராத், (இந்தியா)

1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்

இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்). இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.

1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!

1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை

சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே!இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்). இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் 1956-1986

இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்). இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!

1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.

இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்! இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்! இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!

இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995

1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!

1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.

1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!

இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

deedath award

இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

  • சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)
  • ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)
  • பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்
  • சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)
  • US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)
  • ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)
  • மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)
  • ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை

மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது! (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za கிளிக் it)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம்!

சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது இந்த அன்புச் சகோதரருக்காக இரு சொட்டு கண்ணீர்விட்டு மண்ணரையில் சுவன நித்திரை கிடைக்க நமது ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்தியுங்கள்! இதுதான் நாம் இவருக்கு இவர் செய்த அறும்பணிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியாகும்! (நபி வழியின் முறையை அறிந்து துவா செய்யலாம்!)

ஒரு இணையதளத்தில் படித்த ஹதீஸ் இதோ கீழே

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—

  1. சதக்கத்துல் ஜாரியா
  2. பலன் தரும் கல்வி
  3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்

நன்றி:

http://islamicparadise.wordpress.com/

அன்புடன்

ரஜின்.

சனி, டிசம்பர் 05, 2009

இஸ்லாத்தின் இறுதி அரைகூவல்.....

1 கருத்து :
இறைத்தூதர் நபி முஹம்மது(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!
இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்... அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது. கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189) தொடக்க துதி மொழிகள்:
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893) பிரிவின் முன்னறிவிப்பு:
ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461) பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி) தலைமைக்குக் கீழ்ப்படிவீர்! ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706) பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை. அராஜகம் செய்யாதீர்கள்! அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403) உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742) பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்) மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3) அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565) ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது) இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்) பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880) இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.) எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40) இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402) இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2) அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942) சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456) சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109) குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.) இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3) மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061) இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741) பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்" என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள்... (ஸஹீஹ் முஸ்லிம் 2334) இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்
அன்புடன்
ரஜின்

Counter

பிற பதிவுகள்