சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த
பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி
நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல்
மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று
தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து
அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப்
பணியாளர்களுக்குரியதா? அல்லது
பயணிகளுக்குரியதா? என்று கூட
எனக்கு தெரியாது.
எதுவாக இருக்கட்டும்!
எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு
நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது
ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,
நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின்
சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று
என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது
கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை
விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய
அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :
'நான் விமானம் எண் 546ல் சென்னை செல்லும் பயணி' என்றேன்,
அதற்கு அந்த அதிகாரி : போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு என்றார், ப்ளீஸ் ப்ளீஸ்!! இன்று இரவு ஒரு
நிகழ்ச்சியில் அவசியம் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் மன்றாடினேன்
அதற்கவர் : ரொம்ப பேசாதே! போர்டிங்
குளோஸ் ஆயிடிச்சு, யாராலும்
உன்னை அனுமதிக்க முடியாது என்றார்.
நான் : உன் விஷயத்தில் அல்லாஹ்
போதுமானவன் என்றேன்
அதிகாரி: ஆச்சரியத்தோடு நான் என்ன
செய்வது என்றார்.
எப்படியோ அங்கிருந்து நான்
வெளியாயிட்டேன் வேறு ஏதாவது விமானம் கிடைக்குமா? என்று பார்த்தேன், அல்லாஹ்வுடைய வழியைத்தவிர வேறு எதற்கும்
வழியில்லை, பிரயாணத்தை
கேன்சல் பண்ணிருவோமா? என்
காரிலேயே போயிருவோமா ? இல்ல.. தனி
கார் புடிச்சு போயிருவோமா? ஏன்றெல்லாம்
எனது தலையில் சிந்தனைகள் வேகமாக சுழல ஆரம்பித்தன,
என் சிந்தனைகள் ஒருவிதமா கன்ட்ரோல்-லெ வந்துடிச்சு, தனி கார் புடிச்சே போயிடுவோம்னு
முடிவுக்கு வந்து அவசரமாக கார் பார்க்கிங்கு வந்தேன்
அங்கெ பார்த்தால்: பள பள என்று ஒரு
புதிய இன்னோவா காரோட ஒருத்தர் நின்றிருந்தார், சென்னைக்கு போரதுக்கு எவ்வளவு என்று
அவர்கிட்ட கேட்டேன்.
டிரைவர்: 5000 ரூபாய் என்று சொன்னார், ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனால் அதைவிட 500 ரூபாய்தான் குறைக்க முடிஞ்சுது!!!
எப்படியோ!! நான் தனியா ஏறி
உட்கார்ந்துகொண்டு டிரைவரிடம் சொன்னேன் : வேகமா போவனும் ப்பா!! இன்னைக்கு
ராத்திரிக்கே அங்கு இருக்கனும் ஆனால் சில மணிநேரங்களுக்கு பின்னர் என் கதை
முடியப்போவுதுன்னு எனக்கு தெரியல!!
டிரைவர் : கவலைப்படாதீங்க! ஃப்ளைட்டு
போரது மாதிரி போயிடுறேன் என்றார், சொன்னது போல கடுமையான வேகமாகத்தான் போனார் ஏனெனில், இஷாவுக்கு முன்னாடி போயிட்டால் 1000 ரூபாய் சேர்த்துத் தருவேன் என்று
சொல்லியிருந்தேன்!!
நாங்கள் சுவாரஷ்யமாக பேசிப்பேசி ரொம்ப
நெருங்கிட்டோம், என்
வேலையைப்பற்றி, என்
குடும்ப நிலையைப்பற்றி டிரைவர் என்கிட்ட விசாரிச்சாரு, நானும் அதே மாதிரி டைம் பாஸ் பண்ண
விசாரிச்சுக்கிட்டே போனேன்.
திடீரென என் உம்மாவுக்கு டெலிபோன்
பண்ணலாம் என்று என் மனசிலெ பட்டிச்சு, என் மொபைலை எடுத்து தொடர்பு கொண்டேன்
என் உம்மா டெலிபோனை எடுத்து ''அபூசாரா எங்க இருக்க' என்று கேட்டாங்க, நான் விமானத்தை மிஸ் பண்ணின எல்லாக் கதையையும் சொல்லி முடிச்சு..
நான் இப்ப வாடகைக்காரிலே வந்திக்கிட்டு இருக்கிறேன் என்பது வரை சொன்னேன்
திடீரென ஒரு நிமிடம் நிசப்தம்
ஆயிட்டாங்க திரும்ப: மகனே!! கவனமா ப்பாத்து வா! அல்லாஹ் நமக்குத் தெரியாத
கெடுதிகளை விட்டு காப்பாத்தட்டும்! என்று சொன்னாங்க.
நான் : வந்து சேர்ந்த உடனே இன்ஷா
அல்லாஹ் டெலிபோன் பண்றேன் என்று சொல்லிவிட்டு வேற ஏதாவது சொல்ரீங்களா என்று கேட்டேன் உம்மா : நீ நல்ல
படியா வந்து சேரனும் அதான் என்றார்கள்
அதோடு பேச்சு முடிந்தது
ஆனால் என் உள்ளத்திலே ஏதோ ஒரு கவலை சூழ்ந்து
விட்டதாக உணர்ந்தேன், ஏதோ
ஆச்சரியமான விஷயம் என்னை எதிர்பார்த்து இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன்
இதன் பின் என் சம்சாரத்திற்கு டெலிபோன்
பண்ணினேன்
என் மனைவி : என் உயிரு!! எத்தனை கி.மீ
போய்ட்டீங்க? எனக்
கேட்டாள்
நான் : 150 கி.மி தாண்டிட்டோம் என்றேன்
என் மனைவி : அல்லாஹ் மேல் சத்தியமா!
நீங்கள் இல்லாத வீடு வீடாவே இல்லை என்றாள்
நான் : அல்லாஹ் உனக்கு பரகத்
செய்யட்டும், இன்ஷா
அல்லாஹ் சீக்கிரமா வந்து..ட்ரேன், மத்தியானமே திரும்பி வந்துட்ரேன், பிள்ளைகளை முக்கியமா நல்லா பாத்துக்கே, எனக்காக புள்ளை சூசுவிற்;கு முத்தம் கொடுத்துக்க அல்லாஹ் நல்ல
புள்ளையா அவளை வளர்க்கனும் என்றேன்.
என் மனைவி : கவலைப்படாதீங்கள்!! நீங்கள்
போனதிலிருந்து என் வாப்பா எங்க எங்க..ன்னு கேட்கிறா,
நான் : பிள்ளையிடம் கொஞ்சம் கொடு
என்றேன்
சூசு (என் புள்ளை) : வாப்பா எங்க
இருங்கீங்க! என்றாள்
நான்: கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன்
இன்ஷா அல்லாஹ் என்று சொன்னது ஏதோ புரிந்தது
சூசு : வழக்கம்போல வாப்பா! சாக்லட்
என்றாள்
நான்: சிரிச்சிக்கிட்டு உம்மாட்டே கொடு என்றேன்
உம்மா (என் மனைவி) டெலிபோனை வாங்கிpட்டாள்; ஏதாவது சொல்ல விரும்பிறியா என்று நான்
அவளிடம் கேட்டேன் என் மனைவி: நீங்கள் நலமாத் திரும்பி வரணும் என்றாள்
கவலை ஏன் ரொம்ப கூடிக்கிட்டே போவுதுன்னு எனக்கு ஒன்றும்
புரியலை, சிந்தனை
வேகமாக சுழன்று கொண்டே போவுது, டிரைவர் கேட்ட கேள்விதான் என்னை திசை திருப்பியது டிரைவர்:
என்னிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்றார்
நான் : இரண்டு ஆணும் இரண்டு பொண்ணும் ஆக
நாளு என்று சொன்னேன்
டிரைவர் : அல்லாஹ் எல்லோரையும்
நல்லவங்களாக ஆக்கட்டும்! என்றார்
நான் : ஆமீன் மேலும் உன்
புள்ளைகளுக்கும் அவ்வாறே ஆகட்டும்! என்று சொன்னேன்
ரோட்டையும் பார்த்தேன் வானத்தையும்
தலையை உயர்த்தி பார்த்தேன், சூரியனையும்
பார்த்தேன் அது மறைய ஒரு மணிநேரம்தான் பாக்கி இருந்தது!!
நான் பெருமூச்சு விட்டுக்கிட்டே
சொன்னேன் : யா அல்லாஹ் உன் கிருபை (ரொம்ப பெரிசு) யா ரஹ்மான் யா ரஹீம்!!
திடீர்னு டிரைவர் : ப்ளீஸ் நான் ஒரு
சிகரெட் பத்திக்கிறவா? என்ற
அமைதியான குரல்
நான் : தம்பி நீ ரொம்ப நல்ல ஆள், பாத்தால் நல்ல மனிசனாத் தெரியுது, உன்னையே எரிச்சுக்கிற விரும்புரியே அது
எப்படி? இந்த
சிகரட்..டினாலே உன் மார்க்கம் கம்மியாகிக் கிட்டே போவுது, இதிலே எந்த இலாபமும் இல்லை, உனக்கு கெடுதி-தானே? என்றேன்
டிரைவர் : இப்னுல் ஹலால் !! (நல்ல உம்மாவிற்கும்
வாப்பாவிற்கும் பிறந்த மகனுக்கு அரபியர்கள் சொல்லும் வார்த்தை) எனக்காக துஆ
செய்யுங்கள், சத்தியமா!
போன ரம்ஜான் மற்றும் அதுக்கு முந்திய ரமஜான்லேயும் இதை விடுவதற்கு முயற்சி
பன்னினேன் என்னாலே முடியலை!! என்றார் டிரைவர்
நான் : அல்லாஹ் உனக்கு சக்தியை கொடுத்திருக்கிறான், நீ ஒரு ஆண், ஒரு சிகரட்டை விடுகிற சக்தியில்லை!!
என்றேன் அவரிடம், தொடர்ந்து
அவரிடம் விவாதம் செய்துக்கிட்டே வந்தேன் அவர் வாய்பேசாமலே வந்தார் இறுதியாக தன்
தப்பை ஏத்துக்கிட்டு இனிமேல்
இன்ஷா அல்லாஹ் (சிகரெட்) குடிக்கவே மாட்டேன் என்று சொன்னார்
நான் : அவர்ட்ட லாயிலாஹ இல்லல்லாஹு
என்று சொல்லிக்கிட்டே : அல்லாஹ் எங்களையும் உங்களையும் மார்க்கத்தின் மேலே
நிலைத்திருக்கச் செய்வானாக! என்று சொன்னேன்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது : காரின்
கதவில் தலையை வைத்து ஏன் ஒரு விதமான பீதி என்னைப்பிடித்திருச்சு என சிந்தித்தவாரே
இருந்தேன், காரணம்
ஒன்றும் புரியலை ஆனால் இதற்கிடையிலே பயங்கரமான பயத்தை உணர்ந்தேன், திடீரென காரில் கடுமையான ஒரு அடி
விழுந்த சப்தத்தைக் கேட்டேன், எனக்கும் டிரைவருக்கும் ஒரு வித மன உளைச்சல் ஏற்பட்டது
டயர் வெடிச்சிருச்சு என்று
தெரிஞ்சுகிட்டேன்
நான் : வேகத்தைக் குறைச்சிக்கே! காரை
பாத்து ஓட்டு! என்று டிரைவரிடம் சொன்னேன், அவர் (டிரைவர்) எதுவுமே பேசலை, ஸ்டேரிங்கை பிடிச்சமாதிரியே இருந்தார், அவர் மூஞ்சில் ஒரு பயம் தெரிந்தது.
அதன்பின்னர் : கார் வலது புறமாக வேகமாக
புரண்டுகொண்டே போனது, அல்லாஹுதஆலா
أشهد إن
لا إله إلا الله وأن محمداً رسول الله (அஷ்ஹது
அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்ஹ) என்ற கலிமாவைச்
சொல்வதற்கு என் மனசில் போட்டான், சப்தத்தை நன்றாக உயர்த்தி சொல்கிறமாதிரி தெரியுது, அதன் பின் என் தலையில் நல்ல அடி
விழுந்துள்ளதும்; அந்த இடம்
நெருப்பு பட்டமாதிரி எரிவதும் தெரிந்தது. கார் பல தடவை பல்டிகள் அடிச்சு வெளியே
ஒரு இடத்திலே போய் நின்றது, எழுந்திருக்கலாம்
என்று முயற்சிப் பண்ணினேன் ஆனால் என் உடம்பிலிருந்து எந்த பகுதியையும் அசைக்க
முடியவில்லை.
அது மாதிரி என் வாழ்க்கையிலே
நடக்கவேயில்லை, பேச நினைக்கிறேன்
ஆனால் பேச முடியலை, கண்கள்; திறந்து இருக்கு ஆனால் பார்க்க முடியலை, பார்வை மங்கி இருளாகிக் கொண்டே போவுது, ரொம்ப பேர் பக்கத்திலே வர்றது போறது
காதிலே கேட்குது, அவர் தலையை
அசைக்காதீங்க, ரத்தம்
ஓடுது மேலும் அவருடைய இரண்டு காலும் உடைந்திருச்சு என்று அவங்க பேசுறதெல்லாம்
கேட்குது, நான்
கஸ்டப்பட்டு மூச்சு விட்ரது புரியுது, உடம்பில் ஒரு வித பயங்கரமான உஷ்ணம் என்
கால்களிலிருந்து தலையை
நோக்கி வர ஆரம்பமாயிடுச்சு.
டிரைவருக்கு என்ன ஆயிடுச்சு? என்று அவங்க பேசிக்கிறது என் காதிலே
கேட்குது (தூரத்திலிருந்து ஒரு சப்தம்) மௌத்தாயிட்டார்-அசைவேயில்லை, அடுத்து என்ன செய்யனும் என்று
சொல்லுங்கள் என்று ஒரு மனிதர் கேட்டார்
இரண்டாவது பகுதி:
உயிர் வாங்குமுன் ஷைத்தானோடு
ஏற்படுகின்ற சந்திப்பு மற்றும் உயிர் வெளியேறுகிற அமைப்பு:
கடுமையான வலியை எனக்குள் உணர்ந்தேன்
மேலும் ஏதோ ஒரு விதமான பயங்கரத்தையும் அறிந்தேன் ஏதோ நடக்கப்போகிறது என்பது எனக்கு
பட்டது, இதுதான்
எனது முடிவா? எனது
மனதில் கூறியவாறு சிந்திக்க ஆரம்பித்தேன்.
சுப்ஹானல்லாஹ்!!
இதன் பின் கைசேதப்பட ஆரம்பித்தேன் என் வாழ்நாளில்
வீனாகக் கழிந்த ஒவ்வொரு வினாடிகளும் என்மூலம் ஏற்பட்ட ஒவ்வொரு குறைபாடுகளும் என்னை
வெட்கிக்க வைத்தது !!
இப்பொழுது தப்பிக்க முடியாத ஒரு
உண்மையிற்கு முன்னிலையில் நான் இருக்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ள சப்தங்களெல்லாம்
மறைய ஆரம்பித்தது, என்
கண்களுக்கு முன்னிலையில் இருள் சூழ ஆரம்பித்து, கத்தியை வைத்து வெட்டுகிற மாதிரி
உடம்பிலே வலி, ஏதோ ஒன்று
கழுத்தை நெறிக்கிற மாதிரி உணர்வு, என் கிட்னிக்கு ஆக்ஸிஜன் போகவில்லை, தலையிலே ஒரு வலி குறிப்பாக அடி விழுந்த இடத்திலே நெருப்பு எரிகிற
மாதிரி வேதனை,
எனக்கு முன் உள்ள இருளில் ஒரு வெண்ணிற
தாடியுடைய மனிதர் தோன்றி என்னிடம் சொன்னார் : மகனே! இது உனது கடைசி வினாடிகள், உன் ரப்பை சந்திப்பதற்கு முன் உனக்கு
உபதேசம் செய்ய வந்துள்ளேன், நீ நல்லதை
விரும்புகின்ற புத்திசாலி என எனக்கு நன்கு தெரியும், அல்லாஹ் என்னை அனுப்பியிருக்கிறான் எனவே
உனக்கு ஒரு உபதேசம் செய்கிறேன்,
நான் : உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன்
?
அவர் : சிலுவை வாழ்க! என சொல், சத்தியமாக! அதுவே உனக்கு ஜெயம்!! என்றான், இதை நீ ஈமான் கொண்டால் உன்னை உனது
குடும்பத்தினரிடமும் உன் குழந்தைகளிடமும் திருப்பி அனுப்பி, உன் உயிரையும் உனக்கே திருப்பி கொடுத்து
விடுவேன். சீக்கிரம் சொல்லு! சந்தேகப்படுறதுக்கோ, தாமதப்படுத்துறதுக்கோ இது நேரமில்லை
என்றான்
நான் : அவன்தான் ஷைத்தான் என்று
தெரிந்து கொண்டேன்.
நான் எவ்வளவுதான் வலி (வேதனையிலே)
கஷ்டப்பட்டாலும் என் ரப்பு இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்; மீது ரொம்பவே நம்பிக்கை இருந்தது,
நான் : ச்சீ அல்லாஹ்வின் விரோதியே! நான்
முஸ்லிமாகவே வாழ்ந்தேன், அல்லாஹ்வின்
அனுமதி கொண்டு அதன் மீதே இறப்பேன் என்று அவனிடம் சொன்னேன்,
அவனது (ஷைத்தானது) முகம் மாறிவிட்டது
அதோடு சொன்னான் : நல்லா
கேட்டுக்கே! நீ கிரிஸ்தவனாகவோ யூதனாகவோ மரணித்தால்தான் உனக்கு நிச்சயம் ஜெயம், இல்லையெனில் வலி (வேதனை)யை கூட்டிடுவேன், உயிரையும் வாங்கிடுவேன் என்றான்,
நான் : மௌத்து, ஹயாத்து எல்லாம் அல்லாஹ் கையிலே இருக்கு, உன் கையிலே இல்லை, நான் முஸ்லிமாகவே மரணிப்பேன் என்றேன்,
அவன் மூஞ்சு (கோபத்திலே) சிவந்துடுச்சி,
அவன் : இதுக்கு முன்னாடி பல பேரை வழி
கெடுத்து அவங்கலெல்லாம் வழி கெட்டுப்போவலையா? சரி.. எப்படியோ உன்னை அல்லாஹ்வுக்கு
மாறு செய்ய வைச்சு, அதுவும்
தைரியமா அந்த பாவத்தை செய்ய வைக்க என்னாலே முடிஞ்சுது, அதுவே எனக்கு போதும் என்றான் திடீரென
ஏதோ பயப்படுகிறமாதிரி ஒன்றை மேலே பார்த்தான், அதோடு வேகமா ஓடிட்டான், வேகமாக திரும்பி ஓடிப்போனது எனக்கு
ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, அவன் ஓடி
விடுவதற்கு அப்படி என்ன வந்தது என்று விடை தெரியாமல் இருந்தேன், திடீரென அறிமுகமற்ற மற்றும் மிகப்பெரிய
உடல்களைக் கொண்ட சில
முகங்களை அங்கே கண்டேன், அவர்கள்
இறங்கி:
அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்
நான்: வஅலைக்குமுஸ்ஸலாம் என்றேன்
அவர்கள் : அமைதி காத்தனர், ஒரு வார்த்தைகூட பேசவில்லை, அவர்களிடம் கஃபன் துணிகள் இருந்தன,
நான் : இறுதியாக: நிச்சயம் அவர்கள்
மிகப்பெரிய மலக்குகள்தான் இறங்கியிருக்கிறார்கள் என நான் தெரிந்து கொண்டேன்
அவர்களில் ஒருவர் : அமைதியடைந்த ஆத்மாவே! இறைவனது மன்னிப்பு மற்றும்
திருப்பொருத்தத்தை நோக்கி வெளியேறி வா என சொன்னார், இவ்வார்த்தைகளை செவியுற்றபின் வர்ணிக்க
முடியாத நற்பாக்கியத்தை உணர்ந்தேன் மேலும் அவரிடம் : அல்லாஹ்வின் மலக்கே! மிக
சிறந்த நற்செய்தி என்றேன்.
அவர் என் உயிரை உருவிக் கொண்டார்
தற்பொழுது நினைவிற்கும் கனவிற்கும்
இடையில் இருப்பது போன்று உணர்ந்தேன், மேலும் என் உடலுடன்
எழுந்திருப்பதுபோலும் கீழே திரும்பிப்பார்த்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வது
போன்றும் எனக்குத் தெரிந்தது, இந்நிலையில் என் உடலைக்கண்டேன் பலர் (மனிதர்கள்) என் அருகில் கூடி
என் உடலை முழுமையாக மூடி விட்டாhர்கள் அவர்களில் சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று
சொல்வதையும் செவியுற்றேன்.
இரு வானவர்களைக் கண்டேன், என் உடலை பெற்றுக்கொண்டு தான்
கொண்டுவந்த கஃபனில் அவசரம் அவசரமாக வைத்து என்னை வான்(மேல்) நோக்கி கொண்டு செல்வதுபோல தெரிந்தது, அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன், மிகத் தொலைவில் உள்ள ஆகாயத்தைப்
பார்த்தேன், என் உயரம்
அதிகரித்துக் கொண்டே சென்றது, மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்கிறேன், நான் விமானத்தில் செல்வது போல எனக்கு
கீழே உள்ளவை யாவும் மிகச் சிறியதாக தென்படுகிறது, இன்னும் உயரம் மிக வேகமாக அதிகரித்துக்
கொண்டே சென்றது, என் கீழே
பூமியைப் பார்த்தேன் ஒரு சிறிய பந்து போன்று காட்சியளித்தது.
நான்: பின்னர் அவ்விரண்டு
வானவர்களிடமும் : அல்லாஹ் என்னை சுவர்க்கத்தில் நுழையவிடுவானா? என்றேன்
வானவர்கள் : இதைப்பற்றி அல்லாஹ்விற்கு மட்டும்
தான் தெரியும், நாங்கள்
உயிர்களை பெற்றுவருவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளோம், நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே
நியமிக்கப்பட்டவர்கள் என்றனர்.
என் பேச்சை நிறுத்திக்கொள்ள:
இந்நேரத்தில் சில வானவர்கள் எங்களை
கடந்து மிக வேகமாக சென்றனர், அவர்களோடு ஆச்சரியமான
ஓர் உயிர் இருந்தது அதன் நறுமணம் என்றுமே நுகர்ந்திராத ஒரு கஸ்தூரி போன்று
கமழ்ந்தது,
நான் :ஆச்சரியப்பட்டு அந்த வானவர்களிடம்
இது யார்? நபி முஹம்;மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்கள்தான் இறுதி நபி என எனக்கு தெரியாமல் இருந்திருந்தால் இது எனது நபியவர்களின் உயிர் என
சொல்லியிருப்பேன் என நான் அவர்களிடம் சொன்னேன்.
அவர்கள் : அதற்கு அவ்விருவரும் : இல்லை
(மாறாக) இது பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஒரு தியாகி (ஷஹீத்) வுடைய உயிர், யூதன் ஒருவன் சற்று முன் கொன்று
விட்டான், தன்
நாட்டிற்காகவும் தன் மார்க்கத்திற்காகவும் எதிர்த்துப் போராடியவர், அவரது பெயர் அபுல் அப்த் எனப்படுகிறது, அல்லாஹ் அவரிடம் (ஜிஹாத்) தியாகப்
போரையும் வணக்க வழிபாட்டையும் சேர்த்தே கொடுத்திருந்தான் என்றனர், நான் : நானும் ஒரு ஷஹீத் ஆக
மரணித்திருக்கலாமே! என்றேன் பின்னர் அதே வேளையில் திடீரென மற்றும் சில வானவர்களைப்
பார்த்தேன், அவர்களிடம்
ஒரு உயிர் இருந்தது அதிலிருந்து கடுமையான துருவாடை வந்து கொண்டிருந்தது இது யார்
என நான் கேட்டேன்? அதற்கவர்கள்
: இது மாடு வணங்கியின் உயிர், சற்று நேரத்திற்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட புயல் காரணமாக
மரணித்தவர் என்றனர். உடனே அல்லாஹ் எனக்கு வழங்கிய இஸ்லாமிய அருட்கொடையின் மீது
அல்ஹம்து லில்லாஹ் என சொன்னேன்
நான் : என்ன நடக்கும் என எவ்வளவுதான்; நிறையவே படித்திருந்தாலும்; இந்த அளவுக்கு நடக்கும் என நான்
எதிர்பார்க்கவேயில்லை.
அவ்விருவர்: நற்செய்தி பெறு இருந்தாலும்
உனக்கு முன் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்
என்றனர்.
நான்: ஆச்சரியத்தோடு அப்படி என்ன ? என கேட்டேன்
அவ்விருவர் : விரைவில் அந்த அனைத்தையும்
பார்ப்பாய் ஆனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அல்லாஹ் விஷயத்தில் நம்பு
என்றனர் நாங்கள் மலக்குகளின் கூட்டத்தைக் கடந்து சென்றோம் அவர்களுக்கு சலாமும்
சொன்னோம்
அவர்கள்: இது யார் என (என்னைப்பற்றி
என்னைக்கொண்டு சென்ற வானவர்களிடம்) விசாரித்தனர்
அவ்விருவர்; : முஸ்லிமான மனிதர், சற்று முன் ஒரு விபத்து ஏற்பட்டு
விட்டது, அவரது
உயிரை மலக்குல் மௌத்திடமிருந்து வாங்கி வருமாறு இறைவன் எங்களுக்கு ஆணை
பிரப்பித்திருந்தான் என்றனர்
அவர்கள் : அவன் (அல்லாஹ்)
முஸ்லிம்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் வழங்கியுள்ளான் அது அவர்களுக்கு நல்லது
மற்றும் அவர்கள் என்றும் நல்லவற்றிலே இருப்பார்கள் என்றனர்.
நான்: இவ்விரு மலக்குகளிடம் இவர்கள்
யார் என கேட்டேன்
அவ்விருவர் : இவர்கள் தான்
வான்-காவலர்கள், ஷைத்தானின்
மீது நெருப்புக் கங்குகளை வீசுகின்றனர் என்றனர்.
நான்: இவர்கள்தான் படைப்பால் மிகப்
பெரியவர்களா!! என்றேன்
அவ்விருவர்;: இவர்களைவிட மிகப்பெரிய மலக்குகள்
இருக்கிறார்கள் என்றனர்
நான் : யார் அது என்றேன்
அவ்விருவர்;: ஜிப்ரயீல் மற்றும் அர்ஷை சுமப்பவர்கள், அவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒருவர், அவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மாறு
செய்யவே மாட்டார்கள், அவர்களுக்கு
ஆனை பிறப்பிக்கப்பட்;டதை
அப்படியே செய்வார்கள் என்றனர்
நான் : சுப்ஹானக் ரப்பே! எந்த அளவுக்கு வணங்கவேண்டுமோ
அந்த அளவுக்கு உன்னை நான் வணங்கவில்லையே! என்றேன். பின்னர் : உலக வானம் வரை போய்ச் சேர்ந்தோம்
நான் : ஆச்சர்யம் மற்றும் ஆர்வத்துடன்
எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ அதையும், எது இனிமேல் நடக்க இருக்கிறதோ
அதைப்பற்றி எனக்குள்ள அச்சத்தையும் பீதியையும் உங்களிடம் நான் மறைக்கவில்லை. உலக வானத்தை மிகப்பெரியதாக பார்த்தேன், அதன் வாயில்கள் பூட்டப்பட்டிருந்தன, ஒவ்வொரு வாயலிலும்; மிகப்பெரிய வானவர்கள் நின்றிருந்தனர்.
இவ்விருவர் : இவ்விரு வானவர்களும் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர், நானும் அவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு
சலாம் சொன்னேன்.
அந்த வானவர்கள் : வஅலைக்குமுஸ்ஸலாம்
வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு என்று சொல்லியவாறு, ரஹ்மத்தின் மலக்குகளே! வாருங்கள், என்றவாறு அவர்கள் சற்று கூர்ந்து
பார்த்துவிட்டு இவர்
ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் ? என்றனர்
அவ்விருவர் : ஆம் என்றனர்
அந்த வானவர்கள் : வருக! வருக! ஏனெனில்
இவ்வானம் முஸ்லிம்களுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன ஏனெனில் அல்லாஹ் :
இறைநிராகரிப்பாளர்களின் விஷயத்தில் : لاَتُفْتَحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاءِ (லா-துஃப்தஹு
லஹும் அப்வாபுஸ் ஸமாயி) அவர்களுக்காக வானின் கதவுகள் திறக்கப்பட மாட்டாது (அல்
குர்ஆன் 7:40) என
கூறியுள்ளான் என்றனர். நாங்கள் நுழைந்தோம்
அங்கு கண்ட பல ஆச்சரியங்களில் ஒன்று :
கஃபா போன்று மிகப்பெரிய ஒன்றை பார்த்தேன் அதை ஏராளமான வானவர்கள் வலம் வந்து
கொண்டிருக்கின்றனர், இது
நிச்சயம் ''பைத்துல்
மஃமூர்' தான் என
உடனே சொன்னேன்,
இருவானவர்கள் : இருவரும்
புன்முறுவலிட்டனர் மேலும் சொன்னார்கள் : அல்ஹம்து லில்லாஹ், இங்கு நாங்கள் கொண்டுவருகின்ற
முஸ்லிம்களில் பலர் இது பற்றி அறிந்திருக்கின்றனர், இது அல்லாஹ்வின் அருள் மற்றும் அந்த
நல்ல மனிதர் உங்களது திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களில்
சிறப்பின் காரணமாகத்தான் ஏற்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் எதையும் உங்களுக்கு
சொல்லிக் கொடுக்காமல் விடவில்லை என்றனர்.
நான் : அவர்களிடம் எத்தனை வானவர்கள்
இதில் நாள்தோறும் நுழைகின்றனர் என்றேன்
அவ்விருவர்: 70 ஆயிரம் ஆனால் அவர்கள் வலமிட்டு
வெளியேறிவிட்டால் வலமிட திரும்ப வரமாட்டார்கள் என்றனர்
பின்னர் வேகமாக உயர்ந்து இரண்டாவது வானத்தை
சென்றடைந்தோம் இவ்வாறாக ஏழாவது வானத்தை சென்றடைந்தோம், அது மிகப்பெரிய வானமாக இருந்தது, அங்கே மிகப்பெரிய கடல் போன்று கண்டேன், வானவர்கள் அனைவரும் தன் சிரங்களைப்
பணித்தனர் மேலும் அவ்விரு வானவர்களும் : اللّهُمَّ اَنْتَ السّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ وَ تَبَارَكْتَ ياَذاَ
الْجَلاَلِ وَ الْاِكْرَامِ (அல்லாஹும்ம
அன்தஸ்ஸலாம் வ மின்கஸ்ஸலாம் வ தபாரக்த்த யா-தல்ஜலாலி வல்இக்ராம்) இறைவா! நீயே
அமைதி தருபவன் மேலும் உன்னிடமிருந்தே அமைதி உருவாகின்றது மேலும் கம்பீரமும்
மகிமையும் உரியவனே! நீயே அபிவிருத்தி நிறைந்தவன் என்றனர்
நான் : ஒரு வித மரியாதை கலந்த பயத்தை
உணர்ந்தேன் மேலும் நானும் என் சிரத்தை பணித்தேன் என் கண்கள் கண்ணீர் விட்டன
அல்லாஹு: (ரப்புல் இஜ்ஜத்- அல்-அஜீஜ்
அல்-ஜப்பார்) சொன்னான் எனது அடியானுடைய பதிவேட்டை இல்லிய்யீனிலே எழுதுங்கள் மேலும்
அவனை பூமியின் பக்கம் திரும்ப கொண்டு செல்லுங்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அவர்களை அதிலிருந்தே
படைத்தேன் மேலும் அதிலேயே அவர்களை திருப்பி அனுப்புவேன் மேலும் அதிலிருந்தே
அவர்களை அடுத்த முறையும் வெளியாக்குவேன் (அல் குர்ஆன் 20:55) என்றான்.
கடுமையான அச்சம் மற்றும் பயம் கலந்த
மகிழ்ச்சியின் காரணமாக என்னால் பேச முடியவில்லை மாறாக : சுப்ஹானக (நீ
பரிசுத்தமானவன்) எந்த அளவுக்கு வணங்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே!
என நான் சொன்னேன்.
என்னை அவ்விரண்டு வானவர்களும் உடனே கீழே
இறக்கினார்கள், பல
வானவர்களைக் கடந்து வந்தோம், பார்க்கும்
யாவருக்கும் சலாம் கூறியவாறு வந்து கொண்டிருந்தோம்
நான்: அவ்விரண்டு மலக்குகளிடமும் என்
உடல் மற்றும் குடும்பத்தினர் பற்றி விசாரித்தேன்
அவ்விருவர்: இதோ நீ பார்ப்பது தான் உன்
உடல், உன்
குடும்பத்தினர்களில் உனக்காக செய்து அனுப்பி வைக்கக்கூடிய செயல்கள் வந்து சேரும்
ஆனால் நிச்சயமாக அவர்களை நீ பார்க்க முடியாது என்றனர், என்னை தரையில் இறக்கி விட்டு
அவ்விருவரும் சொன்னார்கள்:
உன் உடலுடன் நீ இருப்பாய், எங்களது பணி முடிந்து விட்டது, மற்ற வானவர்கள் கப்ரில் உன்னிடம்
வருவார்கள்.
நான் : அவர்களிடம் بَارَكَ اللهُ بِكُمَا وَ جَزَاكُمَا خَيْرَ
الْجَزَاءِ (பாரகல்லாஹு பி(க்)குமா வ ஜஸாக்குமா கைரல்
ஜஸாயி); அல்லாஹ்
உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்யட்டும் மேலும் உங்கள் இருவருக்கும் நல்ல அழகிய
கூலியை தரட்டும் என்றேன்
மேலும் அவர்களிடம் : திரும்ப உங்களை
சந்திக்க முடியுமா? என்றேன்.
அதற்கவர்கள் : கியாம நாளில் கூடவே
நாங்களும் நிற்போம், அது
அனைத்தையும் கண் முன் கொண்டுவரும் நாள் என்றனர், கியாம நாள் என்றவுடன் அவர்கள் சப்தங்கள்
பயத்தால் தடுமாறிவிட்டது
தொடரும் . .
சுப்ஹானக..! (நீ பரிசுத்தமானவன்) எந்த அளவுக்கு வணங்க வேண்டுமோ அந்த அளவுக்கு நான் உன்னை வணங்கவில்லையே.........!
பதிலளிநீக்கு